Thursday, May 03, 2012

மாடு ரோஸ் மில்க் கறக்க அட்டகாசமான ஐடியா..ஹி ஹி ( ஜோக்ஸ்)

To open the door - just pull the trigger!
 
1.சிவனே என்று சாந்தமாக இருப்பவர்களிடம் கூட வம்பு வளர்ப்பது எப்படி? எ கத்துக்குட்டி கத்துக்கிட்டிங்க்


------------------


2. பந்திக்கு முந்து படைக்கு பிந்து -ன்னு சொல்றாங்களே.. அந்த பிந்து யாரு? நடிகை பிந்து மாதவியா?


-----------------------

3. ஜூனியர் NTR -ன் சூப்பர் ஹிட்டான பிருந்தாவனம் படம் இப்போது தமிழில் சண்முகப்பாண்டியன் ( கேப்டன் மகன்) # நொந்தகுமாரன் யாரு? நாங்களா?


-------------------------

4. புது வேலைக்கான அப்பாயிண்ர்மெண்ட் ஆர்டர் இந்தக்கைல வாங்கிட்டு பழைய வேலைக்கான ரிசைன் லெட்டரை அந்தக்கைல சைன் பண்றதே சேஃப்டி


-------------------------------

5. தனியார் துறையில் பணி ஆற்றுபவர்கள் திடீர் என வேலையை விட வேண்டி வந்தால் எதிர்காலம் பற்றிய பயம் வந்து விடும்


-----------------------



6. ஜாப் சேட்டிஸ்ஃபேக்சன் இல்லை என பணியை உதறினால் மட்டும் திருப்தி வந்து விடுகிறதா? நிம்மதிதான் கிடைக்குமா?


-------------------------

7. புருஷனைக்கரிச்சுக்கொட்டாத பொண்டாட்டியும், தனக்குக்கீழ் பணிபுரிபவர்களைத்திட்டாத மேனேஜரும் உலகில் இல்லை


---------------------

8. இந்தியர்கள் ஒரு நாளைக்கு 5முறை கூட சிரிப்பதில்லையாம் -சர்வே #  மணிபர்சில பொண்டாட்டி ஃபோட்டோ வெச்சிருந்தா எப்படி சிரிப்பு வரும்?


---------------------

9.மிஸ்.. ஒரு டி எம் அனுப்பிச்சேன்.. இன்னும் ரிப்ளை வர்லை..


. டேய் லூசு. இந்தா ட்டோக்கன் நெம்பர் 145.. வெயிட் பண்ணு

--------------------

10.  எல்லோர் நினைவிலும் நம் புன்னகை முகமே இருக்கவேண்டும், எனவே புன்னகைப்பீர்


--------------------------------
ஒரு கிளாமர் பீஸ்  ஐஸ் சாப்பிடுதே அடடே!
 

11. சிறந்த நிர்வாகி என்பவன் எல்லா வேலைகளையும் செய்பவன் அல்ல, செய்ய வைப்பவன்,அரவணைத்து வேலை வாங்குபவன்


---------------------------

12. தன் தந்தையை உயிராக மதிக்கும் பெண் தன் கணவனை ஹேரே போச்சு என மதிப்பதே இல்லை


----------------------------

13. ஃபிகருக்கு ஜடை பின்னிட்டு இருக்கற மாதிரி ஃபோட்டோவை டிபி ல வெச்சா எல்லாரும் டிபி ல நீங்க பின்றீங்கன்னு சொல்லித்தானே ஆகனும்?வைக்கறேன்யா..


--------------------------

14. பெண்களுக்கு சமைக்கத்தெரியாததுக்கு ஒரு காரணம் மட்டும் தான் இருக்க முடியும் ,அவங்கம்மாவுக்கும் சரியா சமைக்க தெரியாதோ? # எ கீ


-------------------------

15. அப்துல்கலாம் இலக்கியப்பத்திரிக்கை ஆரம்பிச்சா என்ன பேர் வைப்பாரு?

 ஏவு”கணையாழி”






எத்தனை இந்தியர்கள் இப்படி சாப்பிடுவார்களோ தெரியல.....
16. பெண்களை சமாளிக்க  ஏதாவது சொல்லி நீ மட்டும் விதி விலக்குன்னு சொல்றதுக்குப்பதிலா நீ மட்டும் வீதி விளக்குன்னு சொல்லிடாதீங்க :) # தர்ம அடி
---------------------------
17.  உங்க வீட்டு மாட்டுக்கு சாப்பிட புண்ணாக்குக்குப்பதிலா ரோஜாப்பூ கொடுத்தா ரோஸ் மில்க்காவே கறந்துடலாம்னு நினச்சா நீயும் மாக்கானே!


--------------------------

18. சேராமாரி என்றால் பாறையில் விழுந்த மழைத்துளி என அர்த்தம் , ஆனா மக்கள் யார் கூடவும் சேராதவன்னு நினைக்கறாங்க 


------------------------

19. முருகனுக்கு ஓரவஞ்சனை ஜாஸ்தி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கு, சர்க்கரை தெய்வானை கிழங்கு ஏன் இல்லை? # நீதி - 2 வது சம்சாரம் தான் டாப்


--------------------------

20. ஏழு மணிக்கு இந்த பஸ் ஸ்டாப்  வர்ற ஏழரை ஃபிகர் ஏன் இன்னும் வர்லை?ன்னு 10 மணி வரை ஆஃபீஸ்க்கு போகாத நாட்ல தான் நாம் வாழறோம்


-----------------------------

டிஸ்கி -1
இன்று - எழுத்தாளர் சுஜாதா பிறந்த நாள்!
  நண்பரின் ஃபேஸ்புக்கில் இருந்து -

அனைவர் மனங்களிலும், எழுத்துகளிலும் ,தேடல்களிலும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சுஜாதா அவர்கள் பிறந்த நாள்.

சுஜாதாவுக்குத் தன் அபார மேதைமையைக் காட்ட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ‘வாசகருடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், மீதியை அவராகவே தேடிப் படித்துக்கொள்வார்’ என்பது அவர் கொள்கை. - ஈழத்து எழுத்தாளர் அ முத்துலிங்கம்

சுஜாதா பலர் தயக்கங்களை விலக்கி சில ஆதாரமான வழிமுறைகளைச் சொல்லி உற்சாகப்படுத்துவதிலும் சளைக்காதவர்.

* தினம் பத்து நிமிஷமாவது படியுங்கள். தினம் படிக்க வேண்டியது முக்கியம்

* மனசுக்குள் படியுங்கள்

* ஒரே சமயத்தில் நான்கைந்து புத்தகம் வைத்துக் கொண்டு படிக்கலாம்

* எல்லோருடைய முதல் புத்தகங்களை படியுங்கள். இருபது விழுக்காடு ·Fiction, எண்பது Non-Fiction

* படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை வைத்திருங்கள்

* வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் க்யூ வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்

* நூலகங்களுக்கு குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.

(கணையாழி 1994)



டிஸ்கி2-உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Wednesday, May 02, 2012

ஆஃபீஸ் ரூமிலேயே கில்மா.. அலப்பறை அபிசேக் மாட்டினாரு - சி டி ரிலீஸ். ஜூ வி கட்டுரை

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் இருந்த அபிஷேக் சிங்வி, இப்போது தலைப்புச் செய்தி ஆகிவிட்டார். அதுவும் கிளுகிளு செய்தி​யாக!         


சி.பி - அப்போ அவர் பேரு இனிமே ஜிஞ்சனுக்கு சிங்க்வீ?

உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்​திலும்  முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் என்கிற முறையில் தினமும் மீடியாக்களில் இவரது முகத்தைப் பார்க்கலாம். மாநிலங்கள் அவையின் உறுப்பினர் என்கிற வகையில் சட்டம் மற்றும் நீதித்துறையின் நாடா​ளுமன்ற நிலைக் குழுவின் தலைவர். 



முதன்முதலில், ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பேசியதோடு, 'லோக்பால்’ என்ற வார்த்தையைக் கொடுத்தவர் இவருடைய அப்பா. அதனால்தான், லோக்பால் மசோதாவைத் தயாரிக்கும் குழுவில் இவர் இடம் பிடித்தார். இவரைத்தான் சீண்டிப் பார்த்துள்ளது ஒரு சி.டி.


அபிஷேக் சிங்விக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு சேம்பர் உள்ளது. இங்கு ஒரு மொபைல் (போன்) கேமராவைப் பொருத்தி சிங்வியின் நடவடிக்​கைகளைப் படம் பிடித்து இருக்கிறார், அவரது டிரைவர் முகேஷ்குமார். சிலரது உதவியுடன் கம்ப்யூட்டரில் அந்தக் காட்சிகளைப் பதிவிறக்​கம் செய்து சி.டி-யாக​வும் தயாரித்து உள்ளார். அதைக் காட்டி சிங்வியை மிரட்டவும் செய்திருக்கிறார்.



சிங்வி ஒரு பெண்ணோடு உரையாடுவது மட்டுமின்றி உற​வாடும் காட்சிகளும் பதிவாகி இருக்கிறது. அந்தக் காட்சிகள் மிகத்தெளிவாக இல்லை என்​றாலும், சில அங்க அசைவுகளும் ஆடையைக் களையும் காட்சிகளும் இருக்கிறது. 


இந்த வீடியோ தன்னிடம் இருப்பது குறித்து, கடந்த மார்ச் மாதமே எஸ்.எம்.எஸ். மூலம் முகேஷ்குமார் தகவல் கொடுத்திருக்கிறார். தனக்குக் குறைவான ஊதியம் கொடுத்தது மட்டுமின்றி, தன்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட ஊனத்துக்கு சிங்வியின் நாய்தான் காரணம் என்ற கோபத்தில் இருந்துள்ளார் முகேஷ். அதனாலேயே, கேமராவைப் பொருத்தி அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து சி.டி-யாக தயாரித்து உள்ளார்.


அபிஷேக் சிங்வி இந்த விவகாரத்தில் போலீ​ஸுக்குப் போகவே, பத்திரிகைகளுக்கும் சில அரசியல்வாதிகள் கைக்கும் சி.டி. போய்ச் சேர்ந்தது. உடனே, சிங்வி டெல்லி உயர் நீதிமன்றத்தில், 'இந்த சி.டி. காட்சிகளை பத்திரிகைகள் வெளியிடவோ... ஒளிபரப்பு செய்யவோ கூடாது’ என்று வழக்கு தொடர்ந்தார். கூடுதலாக, தன்னுடைய டிரைவர் பிளாக்மெயில் செய்ததையும், இது சம்பந்தமாக டெல்லி போலீஸில் புகார் கொடுத்து இருப்பதையும் மனுவில் குறிப்பிட்டார்.


 இதையட்டி, இந்த சி.டி-யை ஒளிப்பரப்பத் தடை விதித்ததோடு, சி.டி-க்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் பத்திரிகை நிறுவனங்களுக்கு கோர்ட் உத்தரவு போட்டது. இந்த சி.டி குறித்து புலன் விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி ஒருசில பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


அதன்படி, பத்திரிகை நிறுவனங்கள் ஏப்ரல் 17-ம் தேதி சி.டி-யை நீதிமன்றத்தில் ஒப்படைத்தன. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த சி.டி-யில் இருந்த காட் சிகள் யுடியூப் மூலமாக ஒளி பரப்பானது. இதனை சிங்வி தரப்பு எத்தனையோ முயற்சி செய்து ரிமூவ் செய்தாலும், மீண்டும் மீண்டும் அப்லோடு செய்யப்பட்டது. 


அதனால், உலகம் முழுவதும் லட்சக்​கணக்​கான பார்வை​யாளர்கள் இந்த ஆபாசத்தைக் கண்டு களித்தனர். ஆனாலும், இந்த விவகாரத்தை எந்த பத்திரி​கையும், தொலைக்காட்சியும் தொடவே இல்லை. ஏனென்றால், நீதிமன்றத் தடை இருந்தது​தான்.


நிலைமை அளவுக்கு மீறிப்போகவே, அபிஷேக் சிங்வி தனது நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, சி.டி குறித்து அவரே அறிக்கையும் கொடுத்தார். இதன்பிறகுதான் இந்த சி.டி விவகாரம் அச்சுக்கு வந்தது. மறுநாள் தொடங்க இருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் வெடிக்கலாம் என்று கருதியே, சிங்வி முன்னெச்சரிக்கையாக ராஜினாமா செய்தார் என்று சொல்லப்பட்டது.



''இந்த வீடியோ என்னுடைய தனிப்பட்ட விவகாரம். இதில் உள்ள காட்சிகள் ஜோடிக்கப்பட் டுள்ளது. எனது  டிரைவர் பிளாக்மெயில் செய்தது குறித்து காவல்துறையில் ஏற்கெனவே புகார் கொடுத்து இருக்கிறேன்'' என்று விளக்கம் சொல்கிறார் சிங்வி.


''மத்தியத் தடய அறிவியல் துறைக்கு இந்த சி.டி.யை அனுப்பி, உண்மையைக் கண்டறிய​வேண்டும். அப்​போது​தான் சி.டி-யில் இருப்பது உண்மையா அல்லது ஜோடிக்கப்​பட்டதா என்பது தெரியும். அதை ஏன் செய்யவில்லை?'' என்று கேட்கிறார் பி.ஜே.பி. தலைவர் அருண்ஜெட்லி. 


ஆனால், ஏனோ இந்த விவகாரம் குறித்து பி.ஜே.பி. இரண்டு அவைகளிலும் கேள்வி எழுப்பவே இல்லை. சிங்வியின் தந்தை எல்.எம். சிங்வியும் பிரபலமான வழக்கறிஞர், அரசியல்வாதி. அவர் முதல் முறையாக பி.ஜே.பி. சார்பில்தான் மாநிலங்கள் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அந்த அபிமானம்தான் சிங்வியை எதிர்க்கட்சிகளிடம் இருந்து காப்பாற்றி உள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள்.


மகனுக்குத் தந்தை ஆற்றும் உதவி!

நாளைய இயக்குநர் 29.4.2012 - விமர்சனம்

வாரா வாரம் சண்டே அன்னைக்கு காலைல 10.30 மணிக்கு வர்ற நாளைய இயக்குநர் நிக்ழச்சில தான் கலைஞர் டி வி ல பெஸ்ட் புரோகிராம்னு சொல்லலாம்.. பார்க்காதவங்க ரெகுலரா பாருங்க.. 7 நிமிட குறும்படங்கள் 3 ஒளீபரப்பாகுது.. 

பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா கீர்த்தி இன்னைக்கு பச்சைக்கலர் பாவாடை ( மிடி பாட்டம்?) போட்டுட்டு வந்திருந்தாங்க.. அவங்க கழுத்துல காசு மணீ பாசி மாலையும் பச்சைக்கலர்ல.. நல்ல வேளை பச்சை பச்சையா பேசலை.. மேட்சுக்கு மேட்ச் மிஸ்.. 


அவங்க தலை வலது புறமா லேசா வீங்கி இருந்தது,.. என்னான்னு கேட்டா அது ஒரு வகை ஹேர் ஸ்டைலாம்.. சகிக்கலை.. அவர் போட்டுட்டு வந்த ஹை ஹீல்ஸ் ரொம்ப குறுகலா இருக்கு.. இதே மாதிரி அவர் ரெகுலரா சைஸ் பத்தாத செப்பலை போட்டுட்டு வந்தா கால் பணால் ஆகிடும்.. ( இப்போ விமர்சனம் ஷார்ட் ஃபிலிமுக்கா? கீர்த்திக்கா?)


1. குறும்பட இயக்குநர் பெயர் - கார்த்திக்  - குறும்படத்தின் பெயர் - தோஸ்த்


ஓப்பனிங்க்லயே இது ஒரு காமெடி படம்னு தெரிஞ்சுடுது,, ஒரு வீட்டுக்குள்ள திருடன் திருடப்போறான்.. அங்கே ஃபோட்டோல இருக்கற பெருசு ஆவியா இருந்து அவனை வழி நடத்துது.. அதாவது அந்த பெருசு உயிரோட இருந்தப்போ அந்த வீட்ல இருந்தவங்க யாரும் சரியா அவரை கவனிக்கலை போல.. அதனால எந்தெந்த பொருளை அவன் திருடனும்னு அந்த ஆவியே சொல்லித்தருது.. 

 எல்லாம் முடிஞ்சு கிளம்பறப்ப அந்த ஆவி அந்த திருடன் கிட்டே அவன் ஃபோன் நெம்பர் கேக்குது.. அப்பப்ப போர் அடிச்சா உன் கிட்டே பேசறேன்குது.. திருடனும் குடுக்கறான்.. 

 அடுத்த நாளே போலீஸ்ல மாட்டிக்கறான்.. அந்த வீட்டின் ஓனர் ஒரு ஆட்டோமேடிக் கேமரா வீடியோ செட் பண்ணி வெச்சிருக்கான்.. அந்த வீடியோவுல்  திருடன் பேசுன ஃபோன் நெம்பர் ரெக்கார்டு ஆகிடுது.. அதனால மாட்டிக்கறான்...

மனம் கவர்ந்த வசனங்கள்


1. உன் பேரென்ன?

 கண்ணன்

 அதான் திருட வந்திருக்கே.. 


2.  முதல்ல இந்த டி வியை எடுத்துட்டுப்போ.. இதுல வர்ற 15 சீரியலையும் என் மருமக பார்க்கறா.. கரண்ட் போனா மட்டும் தான் என் பையனுக்கு சமைச்சுப்போடறா..


3. டேய்.. வீட்ல ஒரு ஆவிடா.. 

 குடிச்சிருக்கியா? எப்போ சரக்கை அடிச்சாலும் ஏண்டா எனக்கு ஃபோன் பண்ணி என் உயிரை வாங்கறே?


இந்தப்படத்துல ஹீரோவா வந்தவர் முகச்சாயல்லயும் சரி பாடி லேங்குவேஜ்லயும் சரி பருத்தி வீரன் கார்த்தி போலவே இருந்தாரு.. செம நடிப்பு.. பெஸ்ட் ஆக்டர் விருது வாங்குனாரு.. ஆவியா வந்த பெரியவர் நடிப்பும் பாந்தம்.. 

 பொதுவா பேய்னாலே பேக்கிரவுண்ட்ல  அதிரடி திகில் இசையைத்தான் போடுவாங்க.. இதுல கர்னாடிக் மியூசிக் வித்தியாசமா இருந்தது.. 


2.  குறும்பட இயக்குநர் பெயர் -ராஜேஷ்குமார் - குறும்படத்தின் பெயர் -சாரதி

 ஒரு கால் டாக்ஸி டிரைவர்.. ஒரு லண்டன் வாழ் தம்பதிக்கு ஒரு நாள் கார் டிரைவரா வர்றாரு.. அவங்க போற பக்கம் எல்லாம் டிரைவரும் போறாரு.. டிரைவருக்கு குழந்தைன்னா ஆசை.. ஆனா அவருக்கு குழந்தை இல்லை.. அந்த தம்பதியோட பெண் குழந்தை அந்த டிரைவர்ட்ட ஒட்டுதலா இல்லை.. அந்த பாப்பாவுக்கு இந்தியாவையே பிடிக்கலை.. நரசிம்மராவ் மாதிரியே மூஞ்சியை வெச்சிருக்கு.. 
பெண் குழந்தைகளை கடத்தி வியாபாரம் பண்ற ஒரு கும்பல் அந்த பெண் குழந்தையை கடத்திடுது.. டிரைவர் கஷ்டப்பட்டு  அந்த கும்பலில் மாட்டின குழந்தைகளை மீட்டு அவங்க பெற்றோரிடம் ஒப்படைப்பதுதான் கதை.. 


கால் டாக்சி டிரைவரா நடிச்சவர் ரொம்ப யதார்த்த நாயகனா சேரன் மாதிரி ( ஆனா குண்டு) நடிச்சிருந்தார்.. எதுக்கும் கோபத்தை காட்டாத பொறுமையான நடிப்பு.. லண்டன் தம்பதியின் குழந்தையா வந்த பாப்பாவை விட கும்பல்ல மாட்டிக்கிட்ட இன்னொரு பெண் குழந்தை ஃபேஸ் கட், துறு துறுப்பு எல்லாம் செம கலக்கல்.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பொதுவா கிட் நாப் கும்பல் கடத்துனதும் மயக்க மருந்து குடுத்துடுவாங்க.. ரிஸ்க் எதுக்குன்னு.. அதுவும் இல்லாம விழிச்சிருந்தா சத்தம் போடுவாங்க அல்லது தப்பிக்க வழி தேடுவாங்க ..

2. குழந்தைகளை கடத்தி வெச்சிருக்கற அதே ரூம்ல எந்த லூஸாவது ஹீரோவை அடைச்சி வைப்பானா?

3. டிரைவர் தன் மனைவியிடம்  செல் ஃபோனில் உரையாடும் காட்சி  தேவை இல்லாதது ( பிள்ளை இல்லாதவர் என்பதால் அவர் தான் குழந்தையை கடத்தி இருப்பார் என்ற சஸ்பென்சுக்காக என்றாலும் அது தேவை இல்லாத சீனே..)

 நடுவரா வந்த சுந்தர் சி,  வெற்றி மாறன் 2 பேருமே ஒரு குறை சொன்னாங்க.. அதாவது அந்தக்குழந்தை ஏன் டிரைவர் மேல வெறுப்பா இருக்கு.. கதைக்கு அது தேவையே இல்லைன்னு.. நான் என்ன சொல்றேன்னா நோ பிராப்ளம்.. அந்த குழந்தை வெறுப்பா இருந்தாக்கூட டிரைவர் அந்த குழந்தையை காப்பாத்தறார் என்பதுதான் கதைக்கரு.. 

 இந்த ஜட்ஜுங்க எல்லாம் ஸ்டேஜ்ல இயக்குநர்களை மடக்கிடறதா நினைச்சு சில கேள்விகளை கேட்க்றாங்க /. மேடை பயம் டென்ஷன் இதனால அந்த இயக்குநர்கள் அதுக்கு சரியா பதில் சொல்ல முடியறதில்லை.. இதனால ஜட்ஜூங்க ரொம்ப மிதப்பா நினைச்சுக்கறாங்க ..  

3.குறும்பட இயக்குநர் பெயர் -அருண் - குறும்படத்தின் பெயர் -கறுப்பு, மஞ்சள், சிவப்பு


வித்தியாசமான திகில் படம்.. பேசிக் இன்ஸ்டிங்க் - பாகம் 2 படத்தோட சாயல்ல..   காலேஜ் ஃபிரண்ட்ஸ் 3 பேரு அவங்க ரூமுக்குள்ள வர்றாங்க.. அதுல ஒரு பையன் இன்னொருத்தனை ( ரூம்ல இருக்கற 3 பேர் தவிர வேற ஒரு ஆள்) திட்டிட்டே இருக்கான்.. அவங்க பேச்சுல இருந்து நமக்கு தெரிய வர்ற விஷயம் என்னான்னா  வனை இவங்க 3 பேரும் நல்ல சக்கையா அடிச்சுப்போட்டுட்டு வந்துட்டாங்க.. வந்தவங்க அவன் பேக் ஒண்ணையும் எடுத்துட்டு வந்துட்டாங்க..
 

 அந்த பேக்ல ஒரு டைரி.. அது ரத்தத்தால எழுதப்பட்டிருக்கு.. அதை ஒருத்தன் படிக்கறான்.. என்ன ஆச்சரியம்னா  அதுல இவங்க அவனை அடிச்சதை, அடிச்சுப்போட்டுட்டு ரூமுக்கு வந்ததை எல்லாம் விவரமா அதுல எழுதி இருக்கு..  பயத்தோட, ஆர்வத்தோட படிக்கறப்ப ஒரு இடத்துல “ இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. 

 அதை படிச்சதும் டக்னு படிச்சவன் டைரியை அனிச்சையா தூக்கிப்போட்டுடறான்.. படிப்பு கட்,... அவன்  மண்டை பட்.. 

 மீதியை மீதி இருக்கற 2 பேரும் படிக்கறாங்க.. இப்போ நீங்க 2 பேரும் ஒருவரை ஒருவர் அடிச்சுக்கிட்டு சாவீங்கன்னு அதுல வருது.. உடனே 2 பேருக்கும் பயம்.. யார் யாரை போடப்போறாங்கன்னு.. ஆளுக்கொரு ஆயுதம் எடுக்கறாங்க.. ஆனா அதுல ஒருத்தன் சூசயிடு பண்ணிக்கறான்.. மீதி இருக்கறவன் ஒருத்தன்.. 

 இப்போ அவனும் சாகப்போறான்.. ஆனா மறுபடி எல்லாரும் பிழைச்சுக்குவீங்கன்னு வருது.. அதே போல் பிழைச்சுக்கறாங்க,..,ஆனா மறுபடி அதே போல் படிக்க ஆரம்பிக்கறாங்க..  ( செத்து செத்து விளையாடறாங்க)

 அதாவது பாதிக்கப்பட்ட அந்த ஆள் அவங்களை கொலை கொலை செஞ்சு தன் வெறியை தீர்த்துக்கறான் என்பதே கதை.. 

 ரொம்ப புதுமையா இருந்த  இந்தக்கதையை இரு இயக்குநர்களூம் பாராட்டாட்டிக்கூட பரவாயில்லை.. ஏகப்பட்ட வன்முறைன்னாங்க.. பேய்ப்படம்னா பின்னே கொஞ்சிட்டா இருக்க முடியும்?நகரம் படத்துல இல்லாத வன்முறையா? வெற்றி மாறன் இயக்கத்தில் வந்த பொல்லாதவன்ல கூட ஓவர் வன்முறை தான்.. 

 இதே கதை நாட் ல அமரர் சுஜாதா கூட ஒரு சிறுகதை எழுதி இருக்கார்.. டைட்டில் நினைவில்லை.. அதுல ஹீரோ ஹீரோயின் ஸ்விம்மிங்க் பூல்-ல நீச்சல் பழக்குவது போலவும் ஒருவர் சாவது போலவும்... மறுபடியும் முதல்ல இருந்து மாதிரியும் வரும்.. 

மாதவன் -ன்  யாவரும் நலம் படத்துல கூட டி வி ல வர்ற சீன் எல்லாம் நிஜத்துல நடக்கற மாதிரி காட்டி இருப்பாங்க.. 

 என்னைப்பொறுத்த வரை இது ஒரு நல்ல முயற்சி,.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. முதல் ஆள் அதே போல் சாகறான், ஓக்கே, ஆனா அதுக்குப்பிறகு 2 வதா படிக்கறவன் கூட அதே போல் பாதிலயே படிக்கறதை நிறுத்தறான்..,ஆனா அவன் மண்டை வெடிக்கலை.. அது ஏன்?

2. ரூமில் இருக்கும் 3 பசங்க ஸ்டேட்மெண்ட் படி அந்தப்பையனை நல்லா அடிச்சுப்போட்டதாத்தான் வருது , கொலை செய்யலை.. ஏன்னா அவனை இன்னொரு டைம் போய் நல்லா அடிக்கனும்னு ஒருத்தன் சொல்றான்.. அப்புறம் எப்படி அவன் செத்தான்?

3. அந்த பையனை அடிச்சுப்போட்டுட்டு அப்போதான் ரூமுக்கு வர்றாங்க.. அப்படியே அவன் செத்திருந்தாலும் 10 நிமிஷ கேப்ல பேயாகி உடனே டைரி எழுதி பழி வாங்கனுமா? 2 நாள் கழிச்சு அந்த சம்பவம் நடப்பது போல் காட்டி இருக்கலாம்.. 

 இந்தப்படத்துக்கு பெஸ்ட் கேமரா, எடிட்டிங்க்னு 2 அவார்டு கிடைச்சது.. வெல்டன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 8 ( நெல்லை ஃபோட்டோக்கள் உடன்)

3
 கூடல் பாலா, சி.பி -கவிதை வீதி ரவுடி சவுந்தர்

. எதாவது பத்திரிகையிலோ அல்லது வார இதழிலோ வேலை பார்த்திருக்கிறீரா ?


 இல்லை.. ஆரம்பத்துல ஆனந்த விகடன்ல பணி ஆற்ற அடங்காத ஆர்வமும், தணியாத தாகமும் இருந்துச்சு.. அப்புறம் ஒரு தடவை ஹாய் மதன் எழுதுன கட்டுரைல பத்திரிக்கையில் பணி ஆற்ற நினைப்பவர்கள் தங்கள் சுதந்திரத்தை படைப்புத்திறனை அடகு வைக்க வேண்டி இருக்கும், ஒரு குறுகலான பாதையில் தான் பயணிக்க வேண்டும் என்றார்.. அப்போ இருந்து அந்த ஆர்வம் குறைஞ்சுடுச்சு.. ஹாய் மதன் ஆனந்த விகடனை விட்டு விலகும்போதும், குமுதத்தில் ஒரு வருடம் தீவிரமா பணி ஆற்றிய போதும் இந்த கருத்தை சொன்னார்..



37. வெறும் எழுத்து மட்டுமே படைப்பாளிக்கு சோறு போடுமா ?                    
                     

தமிழ் நாட்டு எழுத்தாளர்கள்க்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.. ஆனானப்பட்ட ராஜேஷ்குமாரே மாலை மதி நாவலுக்கு ரூ 5000 தான் வாங்கினார்.. சுபா சூப்பர் நாவல்-ல் ரூ 2000 மட்டுமே வாங்கினார்.. சுபா வசனம் எழுதிய நாம் இருவர் நமக்கு இருவர் படத்துக்கு சம்பளமாக ரூ 1 லட்சம் தான் வாங்கினார்.. ஆனாலும் இதையும் தாண்டி சுஜாதா, பாலகுமாரன் என சம்பாதிச்சவங்களும் இருக்காங்க .. காமெடி ஸ்கிரிப்ட் மட்டுமே எழுதி எஸ் வி சேகர், கிரெசி மோகன், விவேக் என நல்லா சம்பாதிச்சவங்க இருக்காங்க.. மைன்ஸ் பிளஸ் எல்லாம் இருக்கு. கூட்டி கழிச்சு பார்த்தா எழுத்து சோறு போடாது, சாம்பார், ரசம் எதுவும் ஊத்தாது.. சும்மா ஒரு புகழ் போதையை, பரவலான அறிமுகத்தை தரும்.. அதனால நாம பொழப்பை பார்க்க ஏதாவது
வேலைக்கு போறதுதான்  நல்லது



கோவை சம்பத், நாய் நக்ஸ் நக்கீரன், ஆல்வேஸ் பிஸி(!!) சி.பி ,சின்ன வீடு பல வைத்திருக்கும் சுரேஷ்


38. படைப்புலக பிரபலங்களுடனான சுவையான நினைவுகள் எதாவது இருந்தால் பகிருங்களேன் ?    by @iyyanars                                        

சுவையான சந்திப்புகள் பல உண்டு.. அவற்றை எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் தொடரில் சொல்றேன். மனதை காயப்படுத்திய ஒரு சம்பவம் சொல்றேன்.. குமுதத்தில் ஒரு கட்டுரைப்போட்டி வெச்சிருந்தாங்க.. அதில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சமயம்.. அந்த செக்கை வாங்க சென்னை சென்றேன்.. போனது தான் போறோம்.. பாக்யராஜ், சுபா, பி கே பி ஆகிய பிரபலங்களை சந்திக்கலாம் என கிளம்பினேன்..

 இந்த இடத்துல தான் ஒரு தப்பு பண்ணுனேன்.. அதாவது எந்த வித அப்பாயிண்ட்மெண்ட்டோ முன் தகவலோ இல்லாமல் போனேன்.. இருந்தாலும் மற்ரவர்களை சந்தித்து விட்டேன், ஆனால் பி கே பி தூக்கக்கலக்கத்தில் கதவை திறந்தார்.. என்ன மேட்டர்? நீங்க யாரு>?  என்றார்.. அட்வான்ஸா அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி ட்டு இன்னொரு நாள் வாங்க  என அனுப்பி விட்டார்.. 

 அது 2 வகையான பாடங்களை எனக்கு கற்றிக்கொடுத்தது

1. யாராக இருந்தாலும் சந்திக்க வரும் முன்பே தகவல் தருவது

2. பிரபலங்களை சந்திக்க ஆர்வம் கொள்வதை கட்டுப்படுத்துவது



39. .உங்கள் இளமையின் ரகசியம் ?           


 எனக்கென்னமோ 35 வயசு ஆன மாதிரியும், ஆனா ஆள் பார்க்க 25 வயசுப்பையனா இருக்கற மாதிரியும் என்ன ஒரு விதண்டாவாதமான கேள்வி ராஸ்கல்ஸ்.... ( கேட்டது சீனியர் என்றால் கூட ஒரு அண்ணே போட்டுக்கொள்க) 

தினமும் காலை 5 மணீக்கு எழுந்து வாக்கிங்க், ஜாகிங்க் 4 கிமீ , பின் யோகா கொஞ்ச நேரம், பிராண யாமம் கொஞ்ச நேரம், இதெல்லாம் உடம்புக்கு. பின் மனசுக்கு புத்துணர்ச்சி அளிக்க ஈரோடு வ உ சி பார்க் மைதானத்தில் பிளஸ் டூ கேர்ள்ஸ் எக்சசைஸ், ஜாக்கிங்க் வேடிக்கை பார்த்தல் ( அதுல என்ன புத்துணர்வு ர்ன கேல்வி கேட்பவர்கள் லாலி பாப் சாப்பிடவும் )

வெறும் வயிற்றில்  1 லிட்டர்  தண்ணீர் குடிப்பேன்.. அரை வயிறு சாப்பிட்டு கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக வெச்சிருப்பேன்

 சைவம் தான்.. நோ டீ நோ காபி.. நோ டிரிங்க்ஸ் இன்க்லூடிங்க் டொரினோ, கொக்கோ கோலா லைக் 

 பாட்டில்களீல் அடைக்கப்பட பானங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை.. 

இரவில் 7.30 டூ 8 மணீக்கு டின்னர் முடிச்சுட்டு 9 மணீக்கு அல்லது 10 ,மணீக்கு தூங்கிடுவேன்.. நல்ல தூக்கம் ஆரோக்யம்


ரத்னவேல் அய்யா,நக்கீரன்,சம்பத், பிரகாஷ், கருண், சவுந்தர், லேப் டாப் மனோ

40. .மற்றவர்களின் ஆதரவைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் , உங்கள் மனைவியின் ஆதரவு எப்படி ? பதிவுலக வாழ்க்கைக்குத்தான் சார் ?   by  @arivukkarasu 


ஹி ஹி ஹி ஒரு ரகசியம் சொல்றேன்.. பதிவுலகம், ட்விட்டர் எதுவும் ஹோம் மினிஸ்டருக்கு தெரியாது.. தெரிஞ்சா டின் கட்ட்டிடுவாங்க.. போய் பொழப்பைப்பாருய்யா அப்டிம்பாங்க.. இந்த மேட்டர் வெளில தெரிய வேணாம். ஹி ஹி 

41.  எதிர்மறையான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் ?  by @iammano    

நாம பலரை நெகடிவ்வா திங்க் பண்றப்ப நம்மை அப்படி யாரும் விமர்சனம் பண்ணக்கூடாதா? அதெல்லாம் டேக் இட் பாலிசி தான்.. கழுகு எனும் வலைத்தளம் தான் என்னை முதன் முதலாக தாக்கி பதிவிட்ட தளம்.. அதன் பின் சாம் ஆண்டர்சன், ஃபிலாசபி பிரபாகரன்,ரஹீம் கஸாலி,,புரட்சிக்காரன், உட்பட என்னை பதிவுலகில் தாக்கி பதிவு போட்டவர்கள் மட்டும் 34 பேர்.. பதிவுகளின் எண்ணிக்கை 67.. அது போக மற்ற தளங்களீல், கூகுள் பஸ்ஸீல், ஃபேஸ் புக்கில் தாக்கியவர்கள் 87 பேர்..  எல்லாம் டேக் இட் ஈசி தான்.. 

கூடல் பாலாவுடன்
42. சினிமா விமர்சகர் ஆகக் காரணம் என்ன ?  

 நான் பேசிக்கலா ஒரு சினிமா பைத்தியம்.. (பொதுவாவே பைத்தியமோ?) அதனால என்னை மாதிரி தண்டமா யாரும் காசு செலவு ப்[அண்ணிடக்கூடாதுன்னு ஒரு வார்னிங்க் தர்றதுக்காக வ்மர்சனம் எழுதறேன்.. அதுக்காக யாராவது மக்களின் பணத்தை மிச்சம் பண்ணிய மாமணி என்ற பட்டமோ, விருதோ வழங்கினா அதை கலைஞர் போல் எந்த விதமான கூச்சமோ நாச்சமோ இல்லாமல் வாங்கிக்க தயாரா இருக்கேன்.. 

43. நீங்க எப்போ அரசியலுக்கு வருவீங்க தலைவரே:-). by @arattaigirl 

ட்விட்டர்க்கு வரவேணாம்னு நேரடியா சொன்னா லாங்க் லீவ் எடுத்துக்கறேன்.. ஒய் திஸ் கொலை வெறி?அரசியல்வாதி ஆகனும்னா காக்கா பிடிக்கனும், கால்ல விழனும்.. இது நமக்கு ஆகாது.. ஆஃபீஸ்ல பிரமோஷனுக்காகவோ, இன்கிரீமெண்ட்டுக்காகவோ பல் இளிச்சே பழக்கம் இல்லாதவன் நான்.. எனக்கும் அரசியலுக்கும் உள்ள தூரம் நயன் தாராவுக்கும் தூய்மையான காதலுக்கும் உள்ல தூரம்

44. பத்திரிக்கைகளுக்கு படைப்புகளை எழுதி அனுப்புவதற்கு இன்லாந்து  லெட்டர் யூஸ் பண்றீங்களா? இல்லை போஸ்ட் கார்டா ?  by @rajanleaks  

இது நக்கலுக்காக கேட்கப்பட்ட கேள்வியா இருந்தாலும் சிரியசாவே பதில் சொல்லிடறேன்.. எந்த  ஜோக்ஸ் எழுதுனாலும் ஒன்லி கார்டுதான்.. அதுதான் சீப் அண்ட் பெஸ்ட். கதை எழுதும்போது. ஏ 4 ஒயிட் சீட்ல ஒன் சைடு மட்டும் எழுதி  ஒரு கவர்ல வெச்சு 5 ரூபா ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவேன்.. 4 பேப்பர் = 20 கிராம் = 5 ரூபா ஸ்டாம்ப்..  பல்க்கா 200 ஜோக்ஸ் அனுப்ப வேண்டி வந்தா கூரியர் பெஸ்ட்.. 10 ரூபா தான் ஆகும்.. 

 ராஜபேட்டை ராஜா, கூடல் பாலா, சி.பி , லேப் டாப் மனோ
\
45. லேட்டாக பதிவுலகத்துக்கு வந்தாலும், பெரும்தலைகளோடு முட்டி மோதி உங்களுக்கும் ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துதா?       by @NattAnu   


ஜஸ்ட் டைம் பாஸ்க்கு தான் வந்தேன்.. நான் உள்ளே வந்து ஒரு வருஷம் தான் ஆகுது.. அதனால 4 வருடங்கள்க்கும் அதிகமாக இங்கே உள்ள சீனியர்களோட கம்ப்பேர் பண்ண முடியாது.. ஆனாலும் சராசரிக்கும் கொஞ்சம் மேலே அப்டினு ஒரு இடம் பிடிச்சதா உணர்றேன்.. அதுவே போதும்./. என் நோக்கம் சிரிக்க வைப்பது.. எண்ட்டர்டெயின் மெண்ட்.. அவ்ளவ் தான் 


diski -http://www.hotlinksin.com
தமிழ் திரட்டியில் தொடர்ந்து பதிவுகளை இணைத்து வருகிறீர்களா...? உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் பதிவர் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது. பதிவர்களே உடனே இணைந்து பதிவுகளை தொடர்ந்து இணைத்து பரிசினை வெல்லத் தயாராகுங்கள்.

லேப் டாப் மனோ வித் வாரிசுகள், உலக சாதனை படைத்த நெல்லை பெண் ( ரோஸ் கலர்) ஃபேஸ்புக் ஸ்பெஷலிஸ்ட் கே ஆர் விஜயன், அவர் மனைவி



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html

நித்தியானந்தா மதுரை ஆதீனம் ஆனதன் மர்மம் என்ன? ஜு வி கட்டுரை




'இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடிப்பார்கள்’ என்ற பழமொழிக்கு புதிய உதாரணமாக ஆகி விட்டார் நித்தியானந்தா!



சி.பி - மடத்தை மட்டும் பிடிச்சா தேவலை.. மக்களை மடையர்கள் ஆக்குன மாதிரி மடாதிபதிகளை மூடாதிபதிகளாகவும், அங்கே வரும் பெண்களை மூடாத பத்னிகளாகவும் ஆக்கப்போறார். அவ்வ்வ்வ்வ்


  ஏப்ரல் 11-ம் தேதி, நடிகை ரஞ்சிதா சகிதம் மதுரை ஆதீன மடத்துக்கு விசிட் அடித்துவிட்டுப் போனார் நித்தியானந்தா. அப்போதே பலரும் சங்கடப்பட்டார்கள். 'புனிதமான மதுரை ஆதீனத்துக்குள், சர்ச்சையில் சிக்கிய ஒருவர் நடிகையுடன் வரலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அன்று விருந்தாளியாக வந்தவரே... இன்று மதுரை ஆதீனமாக மாறிவிட்டார்.


சி.பி -அப்பவும் நடிகை வந்ததுதான் கேவலம்.. அந்தாள் வந்தது கேவலம் இல்லை அடங்கோ 


சம்பந்தம் இல்லாவிட்டாலும் தானே போய் சர்ச்சையில் சிக்கிக்​கொள்பவர் மதுரை ஆதீனம். கடந்த 2004-ம் ஆண்டு தன் அத்தை மகளின் மகனான சுவாமிநாதனை ஆதீனத்தின் இளவரசராக கோலாகல விழா நடத்திப் பட்டம் சூட்டினார். மிகக்குறுகிய காலத்துக்குள், 'ஆதீன விதிகளுக்கு விரோதமாகச் செயல்படுவதாக’ குற்றச்சாட்டுகளை அடுக்கி, சுவாமிநாதனை மடத்தை விட்டு விலக்கியும் வைத்தார்.


சி.பி - சுவாமிநாதனை விலக்கி வெச்சவங்க சுவாமியையே விலக்கியும் வைப்பாங்க.. யார் கேட்கறாங்க.. எப்படியோ நாத்திக வாதிகளூக்கு கொண்டாட்டம்.. சும்மாவே அவலை மெல்லுவாங்க.. அவள் , அவாள் எல்லாம்  சிக்கினா பக்கோடாவே சாப்பிட்ருவாங்க.. 


இந்த வில்லங்கமே இன்னமும் முழுமையாகத் தீராத நிலையில், நித்தியானந்தாவை அவசர கதியில் அடுத்த குரு மகா சந்நிதானமாகத் தேர்வு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஆதீனம்.

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் கணபதி சந்தானத்திடம் இதுகுறித்துப் பேசினோம். ''திருஞானசம்​பந்தரால் உருவாக்கப்பட்டது மதுரை ஆதீன மடம். சிறந்த முறையில் சைவத் தொண்டாற்றி மக்களைப் பண்புள்ள மனிதர்களாக உருவாக்கிய ஒரு பாரம்​பரியமான மடத்துக்கு, செக்ஸ் வழக்கில் சிறை சென்று வந்த ஒருவரை, இன்னும் வழக்கில் இருந்து விடுபடாத ஒருவரை, அடுத்த மடாதிபதியாக ஆதீனகர்த்தர் நியமித்து இருப்பது கண்டிக்​கத்தக்கது. வருந்தத்தக்கது.


சைவப் பாரம்​பரியத்தில் வந்தவர்​களுக்கும் ஆன்மிகத்​துக்கு சிறந்த தொண்டாற்றி பல்வேறு அறிஞர்களை உருவாக்கிய சைவ சமயத்தாருக்கும் இது மாபெரும் இழுக்கு. இந்தச் செயலை சைவப் பாரம்பரியத்தில் வந்த எவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.


 சி.பி - நித்தி சாப்பாட்டு விஷயத்துல சைவம் தான்.. ஆனா கில்மா விஷயத்துல அசைவம்

எனவே, ஆதீனகர்த்தர் அவர்கள் தனது அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற்று, சைவ சமயத்துக்கு உண்மையாகத் தொண்டாற்றும் ஒருவரை நியமிக்க வேண்டும். சைவ வேளாளர் பிரிவில் உள்ள 13 சாதிக்காரர்கள்தான் மதுரை ஆதீனமாக வர முடியும். ஆனால், மரபுகளை மீறி, முதலியார் சாதியைச் சேர்ந்த நித்யானந்தாவை அடுத்த வாரிசாக அறிவித்திருக்கிறார் ஆதீனம். ஆதீனத்தின் செயல்பாடுகள் எல்லாமே முரண்பாடாகவே இருக்கிறது.



தருமபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்கள், கல்லூரி​களைத் தொடங்கித் தமிழை வளர்க்கிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் பழைய தமிழ் நூல்களை எல்லாம் புதுப்பித்து வெளியிட்டு சேவை செய்கிறார்கள். மதுரை ஆதீனம் இதுவரை தமிழுக்காக என்ன செய்திருக்கிறார்? நித்தியானந்தா ஒரு கோடி கொடுத்தால், மடத்தை விக்கிறதுக்கு இது என்ன மாநகராட்சி டெண்டரா? அப்படியானால் நாளைக்கு இன்னொருவர் இரண்டு கோடி கொடுத்தால், அவருக்குப் பட்டம் சூட்டுவாரா?


 சி.பி  - பேசாம ஏலம் போட்டுடலாம்/.. சொல்ல முடியாது.. கலைஞர் குடும்பத்துல இருந்து கூட யாராவது ஆதீனம் ஆக சான்ஸ் இருக்கு..


ஆதீனம் தன் இஷ்டத்துக்குச் செயல்படுவதற்கு மடம் ஒண்ணும் அவங்க பாட்டன் சொத்து இல்லை. நித்யானந்தா சைவ வேளாளரே அல்ல. அவருக்குப் பட்டம் சூட்டியது செல்லாது என்று கோர்ட்டுக்குப் போகப்போகிறோம். அரசாங்​கமும் இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும்'' என்றார்.

பெங்களூருவில் இருந்த மதுரை ஆதீனத்தைத் தொடர்புகொண்டு பேசி​னோம். ''எங்களைப் போல அனைத்துத் திறமைகளும் தகுதிகளும்கொண்ட ஒரு துணிச்சலான மாவீரனைத் தேடிக்கொண்டு இருந்தோம். பார்வதி தேவியும் சிவபெருமானும் நித்தியானந்தாவை அடையாளம் காட்டினார்கள். அவர்களது உத்தரவை ஸ்டே பண்ணி வைக்கக் கூடாது. அதனால், அவசர அவசரமாக நித்தியானந்தாவுக்குப் பட்டம் சூட்டிவிட்டோம்'' என்றார்.

 சி.பி - கலைஞர் தான் இதுக்கெல்லாம் முன்னோடி.. அவர் தான் கனவுல அண்ணா வந்தார்.. பெரியார் வந்தார்னு கலர் கலரா ரீல் விடுவார்.. இப்போ ஆன்மீகவாதிகளூமா? அதென்ன உங்களூக்கு மட்டும் வர்றாங்க.. மக்கள்ல 10 பேருக்கு கனவுல வரச்சொல்லுங்க பார்ப்போம்ம்.. கால் டைவர்ட் பண்ற மாதிரி கனவு டைவர்ட் பண்ணுங்க.. ..

1. மடம் மதுரையில் இருக்க, மகுடத்தை பெங்களூருவில் வைத்து சூட்டி இருக்கிறீர்களே?''


சி.பி - மதுரை வெய்யிலா இருக்காம்.. பெங்களூர் குளு குளுன்னு இருக்காம்.. அதான் லொக்கேஷன் சேஞ்ச் போல..  




''நித்தியானந்தாவுக்குப் பட்டம் சூட்டும் விழாவில் பிடதியில் உள்ள அவரது சிஷ்யர்களும் வெளி​நாடுகளில் இருப்பவர்களும் கலந்துக்கப் பிரியப்பட்டாங்க. அவ்வளவு பேரையும் மதுரைக்கு கூட்டிட்டுப்போறது முடியாதுங்​கிறதால நாங்களே இங்கு வந்து விட்டோம்.''

2. ''சைவ வேளாளர் அமர வேண்டிய ஆதீனகர்த்தரின் இருக்கையில் முதலியாரான நித்தியானந்தாவை வைத்து உள்ளீர்களே?''



''அதெல்லாம் இல்லை. நித்தியானந்​தாவும் சைவ வேளாளர்தான். மதுரை ஆதீனகர்த்தராக அமர்வதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருக்கு. இப்படிப்பட்ட ஆற்றல்மிக்க ஒரு தம்பி​ரானைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்காக, நாங்கள் இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். இதை நாங்கள் செய்த தவத்தின் புண்ணியமாகக் கருதுகிறோம் நித்தியானந்தாவின் வருகை ஆதீனத்துக்குப் பெருமை''




3. ''ஒரு கோடிக்கும் தங்க சிம்மாச​னத்துக்கும் உங்களது சுயநலத்​துக்​காகவும் மதுரை ஆதீனத்தை நித்தி​யானந்தாவிடம் அடகு வைத்து​விட்ட​தாகச் சொல்கிறார்களே...''


சி.பி - பேக்கரி உனக்கு , தங்கச்சி எனக்கு ஹி ஹி  




இந்தக் கேள்விக்கு அருகில் இருந்த நித்தியானந்தாவே பதில் சொன்னார். ''நானும், நித்தியானந்தர் பீடத்தின் சீடர்களும் பீடத்தின் அசையும் அசையா சொத்துக்களும் குரு மகா சந்நிதானத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். இனி நாங்கள் வேறு, அவர்கள் வேறு அல்ல. எங்களது அன்பின் அடையாளமாகத்தான் சந்நிதானம் அவர்களின் சமுதாயப் பணிகளுக்காக இந்தச் சிறிய தொகையை பாத காணிக்கையாகத் தந்திருக்கிறோம். வேறு எதுவும் சொல்லி இதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். இந்தத் தொகையை இப்போது ஐந்து கோடியாகக் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.


தொடர்ந்து, மதுரை ஆதீனத்திடம் பேசினோம்

4.''நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தை வீழ்த்தி​விட்டாரா?''


''ஆதீனத்தை யாரும் வீழ்த்த முடியாது. அவருக்கு ஏராளமாய் சொத்துக்கள் இருக்கு. அதனால் எங்களை வீழ்த்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. சிவபெருமான் - பார்வதி தேவியின் அஸ்திரம்கொண்டு நாங்கள்தான் அவரை வீழ்த்தி இருக்கிறோம்.''

சி.பி - யார் யாரை வீழ்த்தினீங்களோ, மொத்தத்துல இந்து மதத்தை  தாழ்த்திட்டீங்க..



5.''செக்ஸ் புகாரில் சிக்கிய ஒருவர்தான் அடுத்த மதுரை ஆதீனமாக வர வேண்டுமா, வேறு நல்ல சைவத் தொண்டர்கள் கிடைக்கவில்லையா?''



  ''செக்ஸ் புகாருக்கும் நித்தியானந்தாவுக்கும் சம்பந்தம் இல்லை. அவர், அதுபோன்ற காரியங்களில் ஈடுபடவும் இல்லை. அவரையும் ரஞ்சிதாவையும் இணைத்து பரப்பப்பட்ட செய்திகள் அனைத்துமே அப்சல்யூட்லி ராங்.



இது ஒரு பெரிய பிரச்னையா? செக்ஸ் குற்றச்சாட்டு யார் மீதுதான் இல்லை. புகார் கொடுக்கணும்னா, திருமணமாகி பிள்ளை பெற்ற அத்தனை பேர் மீதும் செக்ஸ் புகார் குடுக்கலாம். ஒரு பொம்பளைப் பிள்ளைகிட்டப் பேசுறது தப்பா? நாமெல்லாம் பெண்ணில் இருந்துதானே வந்தோம். மதுரை ஆதீனத்திலும், 'வைஷ்ணவி, கஸ்தூரி, மாதவி, கோபிகா’னு நிறையவே பெண்கள் பணிவிடை செய்கிறார்கள்.


 சி..பி - ஹா ஹா ஹா நீங்க சொன்ன 4 பேருமே நடிகைகள் பேரா இருக்கே? கவுண்டமணி பண்ணைக்கு ஆள் எடுத்த மாதிரி எடுத்தீங்களோ?

 அதற்காக எங்கள் மீதும் ஏதாவது பழி போடுவதா? மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசிதானே திருஞானசம்பந்தரை அழைத்து வந்து மதுரை ஆதீன மடத்தையே தொடங்கினார். பெண்களின் சிறப்புகளை மதித்து அவர்களின் மாண்புகளைக் காக்கிற மடம், மதுரை ஆதீன மடம். அதே நிலைப்​பாட்டில்தான் நித்தியானந்தர் பீடமும் இருக்​கிறது. சைவ வேளாளர் சங்கத்தினர் ஆதீனம் எடுத்திருக்கும் இந்த முடிவைப் பாராட்டி வரவேற்காமல், பழி போடுவது வேதனையாக இருக்கிறது'' என்று மதுரை ஆதீனம் கூறினார்.



அடுத்து நித்தியானந்தாவிடம் பேசினோம் ''ஸ்வாமி அவர்கள் என்னை மதுரை ஆதீனத்தின் அடுத்த குருமகா சந்நிதானமாக அறிவித்​திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் தயக்கமாக இருந்தாலும், இப்போது தைரியம் வந்துவிட்டது. இந்த வாய்ப்பை முழுமையாக ஏற்று இன்னும் மூன்று ஆண்டுகளில் மதுரை ஆதீனத்தை அகில உலக ஆன்மிக இயக்கமாக மாற்றிக்​காட்டுவோம்.

 சி.பி - அகிலா உலக பெண்மீக இயக்கமாவா? ஆமா.. எனக்கு ஒரு டவுட்.. அகிலம்னாலும் , உலகம்னாலும் ஒண்ணுதானே... அது என்ன அகில உலக..?

நித்தியானந்தர் தியான பீடத்துக்கு 151 நாடுகளில் மையமும் 40 நாடுகளில் கிளைகளும் இருக்கின்றன. உலகம் முழுவதும் 1.20 கோடி சீடர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நாங்கள் நினைத்ததை முடிப்போம். பிடதி ஆசிரமப் பணிகள் இருப்பதால், மதுரை ஆதீனத்தில் என்னால் முழுமையாகத் தங்கி இருக்க முடியாது என்றாலும், அடிக்கடி மதுரைக்கு வருவேன்'' என்கிறார் பூரிப்புடன்.









பிடதியில்...

 கடந்த 27-ம் தேதி, கர்நாடக மாநிலத்​தின் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் ஆட்டம் பாட்டம்,  எக்கச்சக்கக் கூட்டம் என்று கல்யாண வீட்டுக் கலகலப்பு.


தங்கமுலாம் பூசப்பட்ட மூன்று  ஆசனங்கள் மேடையில் போடப்பட்டு இருந்தன. அதில், ஆனந்த சிரிப்போடு நிஜ நித்தியானந்தாவும், அடுத்த ஆசனத்தில் ஃபைபரில் ட‌ம்மி நித்தியானந்தா சிலையும், மூன்றாவது ஆசனத்தில் மதுரை ஆதீனமான அருணகிரியும் காட்சி தந்தார்கள்.


சரியாக 9.05 மணிக்கு மதுரை ஆதீனமான அருணகிரி, நித்தியானந்தாவை மதுரையின் 293-வது ஆதீனமாக அறிவித்தார். கூடவே வெள்ளைப் பேப்பரில் மேடையில் வைத்து கையெழுத்து போடப்பட்டது. இதனால் அகம் மகிழ்ந்துபோன நித்தி, ஒரு கோடி ரூபாய்க்கான செக்கை மதுரை ஆதீனத்திடம் வழங்கினார். கூடவே, ஆறு அடி உயர தங்கச் செங்கோல் வழங்கி, தங்கக் கிரீடத்தையும் அணிவித்தார்.


 மதுரை ஆதீனமும் நித்தியானந்தாவுக்குத் தங்கக்கிரீடம் அணிவித்தார். நித்தியானந்தா மற்றும் மதுரை ஆதீனத்தின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட பக்தர்கள், சத்தமாக ஒலித்த சினிமா பாடலுக்கு ஏற்ப ஆட்டம் போட ஆரம்பித்தனர். மதுரை ஆதீனமும் ஆடலுக்கு ஏற்ப தலையை ஆட்டி ரசித்தபடி, ஆடுபவர்களை உற்சாகப்படுத்தினார். இதை, முன்வரிசையில் இருந்து பார்த்த ரஞ்சிதா, அமைதியான சிரிப்போடு ரசித்தார்.


விழாவில் பேசிய மதுரை ஆதீனம், ''திருஞான சம்பந்தரால் 1,500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தை, எனக்குப் பிறகு யார் கண்ணியமாகக் கண்காணிக்கப் போகிறார்கள் என்ற கவலையில் பல நாட்கள் தூக்கமின்றித் தவித்தேன். அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமான் என் கனவில் தோன்றி, 'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு’ என்று சொன்னார்.


 அதன்பிற‌கு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு பழகிப்பார்த்தேன். அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவருடைய ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களை மறந்து ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். நானும் நேற்று அவர்களோடு சேர்ந்து ஆடினேன்.அப்போது பல பெண்கள், 'அடடா... ஆதீனமே ஆடுது’ என ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். இப்படித்தான் எல்லோரும் ஜாலியாக இருக்க வேண்டும். நித்தியானந்தாவின் இந்த அணுகுமுறையை நான் ரொம்ப லைக் பண்றேன். நித்தியானந்தா மிகவும் இளமையாக இருக்கிறார். அதனால் என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். இந்து மதத்தை அவரால் மட்டுமே சரியான திசையில் வளர்க்க முடியும். கூடவே,  ஆதீனத்தின் கொள்கையான சைவ சித்தாந்தத்தில் நித்தியானந்தாவும் ஆழமாக இருப்பதால், எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. நித்தியானந்தா மாதிரி புனிதமானவரைப் பார்க்கவே முடியாது.


எனவே, மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களையும், 1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் 293-வது மதுரை ஆதீனமான நித்தியானந்தாவை, 'ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரஹம்ச நித்தியானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்’ என்று பயபக்தியோடு அழைக்க வேண்டும்'' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி முடித்தார்.



அடுத்து உற்சாக மிகுதியில் பேசிய நித்தியானந்தா, ''மதுரை ஆதீனமான ஸ்ரீஸ்ரீ அருணகிரி சுவாமிகளின் ஆன்மீக சேவை செய்த ஆண்டுகள்கூட என் வயது இல்லை. மதுரை ஆதீனத்தின் புகழை சர்வதேச அளவுக்கு உயர்த்துவேன். அதேபோன்று மதுரை ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களும் கைப்பற்றப்பட்டு, புனரமைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.


ஏற்கெனவே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாக இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீண்டும் ஆதீனத்தின் ஆளுகைக்கே கொண்டு வருவேன். இதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன். ஆதீனம் சார்பாக மதுரையில் மருத்துவக் கல்லூரியும், 24 மணி நேர அன்னதானச் சேவையும் உடனே தொடங்கப்படும். அதேபோன்று, ஜூன் மாதம் மதுரையில் நடைபெற இருக்கும் குரு பூஜையில், மதுரை ஆதீனமான அருணகிரி சுவாமிகளுக்கு தங்க சிம்மாசனம், தங்க செங்கோல், தங்கக் கிரீடம் வழங்கப்படும்'' என்று பட்டியல் வாசித்தார்.


அதுசரி, எப்படி மதுரையைப் பிடித்தார் நித்தியானந்தா? சில கதைகளைச் சொல்கிறார்கள்.


கதை ஒன்று:


சி.டி. மேட்டரில் சிக்கியதில் இருந்தே, நித்தியானந்தாவின் இமேஜ் ஈடு செய்ய முடியாத அளவுக்கு டேமேஜ் ஆகியிருந்தது. அதை எப்படியாவது மீட்டுக்கொள்ளத் துடித்தார். கர்நாடகத்தில் எந்த மடாதிபதியும் இவரை அருகில் சேர்க்கவே இல்லை. அதனால், தமிழகத்தில் தன்னுடைய செல்வந்த பக்தர்கள் மூலமாக காய் நகர்த்த ஆரம்பித்தார்.



மதுரையில் இருக்கும் பிரபல பிசினஸ் புள்ளிஒருவர் ஹீலிங் டச் மூலமாக நித்தியானந்தாவால் கடந்த ஆண்டு குணப்படுத்தப்பட்டார். அவர் மூலமாக ஆதீனத்​துக்கு அறிமுகமாகி, அவரை பெங்களூருவுக்கு லவட்டிக் கொண்டு​வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகத் தன் சேவையில் ஆதீனத்தை வைத்துப் பராமரித்தாராம். ஆதீனத்​தை ஹாங்காங் கூட்டிச் சென்றும் ஆன்மீக சேவையை அரங்கேற்றி​னாராம் நித்தி. அங்கே நடந்தவை குறித்தும் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன!


கதை இரண்டு:


மதுரை ஆதீனத்துக்குப் பணச் சிக்கல் இருந்தது. நித்தியிடம்  எக்கச்சக்கமாகப் பணம் இருந்தது, ஆனால், போதிய மதிப்பு இல்லை. அதனால், இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி தேவைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை.


கதை மூன்று:


ஆதீனத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் நீண்ட காலமாகவே நல்ல தொடர்பும் உறவும் உண்டு. இருவரும் பல்​வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் ஒன்றாகவே போய் வந்திருக்கிறார்கள். அந்த நேரங்களில் மதுரை ஆதீனத்தின் ஆர்வங்களை மிகத்தெளிவாக அறிந்துகொண்ட நித்தியானந்தா, சரியான நேரத்தில் காரியத்தைச் சாதித்துக்கொண்டார். மதுரையில் வைத்து பதவியேற்பு விழாவை நடத்தினால் பிரச்னை வரும் என்றுதான் பெங்களூருவில் நடத்தினார்.


ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள், ஆதினமூலமும் அப்படித்தானோ?




 மதுரையில்...


 பட்டத்து இளவரசரை அழைத்துக்கொண்டு கடந்த 29-ம் தேதி காலையில் மதுரை வந்து இறங்கினார் மதுரை ஆதீனம். அதிகாலையிலேயே விழாக்கோலம் சூடிக்கொண்டது ஆதீன மடம். நித்தியின் சீடர்களால் ரொம்பிக்கிடந்த ஆதீன மடத்தில் ஆளாளுக்கு லேப்டாப்களைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்​கொண்டு இருந்​தார்கள்.


சரியாக காலை 9.35 மணிக்கு கிழக்கு வாசல் திறக்க, ஆதீனங்கள் இருவரும் புன்னகைத்தபடி பிரசன்னமானார்கள். வழக்கமான காவியை விடுத்து, மதுரை ஆதீனத்தின் டிரேட் மார்க் காவிக்கு மாறி இருந்த நித்தியானந்தா, முடி இறக்கம் செய்யாமலே தலையில் ருத்ராட்சம் கட்டி இருந்தார். ஒருவருக்கொருவர் தங்கக் கிரீடங்களை அணிவித்துக்கொண்டு, பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள்.


முதலில் பேசிய ஆதீனம், ''நம்முடைய குருமகா சந்நிதானம் திருஞான சம்பந்தர் பெருமான் தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்து வைத்தார். அதேபோன்ற வல்லமை நித்தியானந்தருக்கு இருக்கு. இவர் இங்கிருந்து பிரார்த்தனை செய்தால், வெளிநாட்டில் இருந்து தங்கமும் வைரமும் வருகிறது.


எனக்கு இருந்த சுவாசக் கோளாறையே குறைத்து விட்டார். அதனால், உங்களில் யாருக்காவது நோய் வந்தால், நம்முடைய 293-வது குருமகா சந்நிதானத்தை அணுகுங்கள்'' என்று கலாய்த்த ஆதீனம், ''உலகத்திலேயே இப்படிப்பட்ட முதலமைச்சரை நான் பார்த்தது இல்லை. புரட்சித் தலைவி என்றால், புரட்சித் தலைவிதான். தமிழ் மக்களை, தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைக்கும் புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியைப் பாராட்டி ஆசீர்வதிக்கின்றோம்'' என்று அம்மாவுக்கு திடீர்ப் புகழாராம் சூட்டினார்


  அடுத்துப் பேசிய நித்தியானந்தா, ''பிடதி ஆசிரமத்தில் நடக்கும் அத்தனை பணிகளும் மதுரை ஆதீனத்துக்கும் விரிவுபடுத்தப்படும். இதை நான் ஏற்கெனவே சொல்லி இருந்தா, 'அத்தனை பணிகளுமா?’ன்னு நீங்க ஏடாகூடமாக் கேள்வி கேப்பீங்க.


இப்ப நீங்களே கேட்டதால், இதைச் சொல்கிறேன். குருமகா சந்நிதானம் அவர்கள் ஒரு ஆல விருட்சம். நாங்களெல்லாம் முந்தா நாள் பெய்த மழையில் நேத்து முளைத்த காளான்கள். ஆலமரத்தின் நிழலில் காளான்கள் இருப்பது இயற்கைதானே. மதுரை ஆதீனம் என்பது மிகப் பெரிய கடல். நாங்கள் சிறு துளி. கடலில் கலப்பதை துளி விரும்புவதைப் போல எனக்குக் கொடுத்த வாய்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு இருக்கிறேன்'' என்றார். பேட்டியை முடித்துக்கொண்டு இருவரும் பூரண கும்பங்கள் சகிதம் மீனாட்சி அம்மனைத் தரிசிக்க ஊர்வலமாய்க் கிளம்பினார்கள்.

இன்று, 'இந்திய சினிமாவின் அடையாளம்' சத்யஜித் ரே-வின் பிறந்த தினம்! 


டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 
 

பெண்கள் பசங்களை பா போட்டு பேசக்காரணம் என்ன? ( ஜோக்ஸ்)

"A dream doesn't become reality through magic; it takes sweat, determination and hard work."
1.உழைப்புதான் நம் பிழைப்பு என்பதை உணர்ந்து தினமும் 15 மணி நேரம் தன் குடும்ப நலனுக்காக உழைக்கும் தொழிலாளர்கள்க்கு மே தின வாழ்த்துகள்



---------------------------

2. ஓட்டுப்பொறுக்குவதையே பிழைப்பாக வைத்திருக்கும் அரசியல் வியாதிகள் உழைப்பாளிகளுக்கு தினசரிகளில் சம்பிராதய வாழ்த்து சொல்லி நடிக்கிறார்கள்


---------------------------

3.  டாக்டர் , ஒற்றைதலைவலி, ரெட்டைத்தலைவலி எதனால வருது?


 காலைல அஜித் படமும், மேட்னி விஜய் படமும் தொடர்ச்சியா பார்த்தா அப்படித்தான் வரும்

-------------------------

4. டியர்,எதுக்காக லவ் லெட்டர்ல மே 1 , மே 1, மே 1 -னு பக்கம் பூரா எழுதி வெச்சிருக்கீங்க? 


 ரொமாண்டிக்கா ஒண்ணு”மே ” எழுதத்தெரியலைன்னு சொன்னியே?


--------------------------

5. அத்தான், பொதுவா எல்லாரும் பொண்டாட்டிக்கு மல்லிகைப்பூதான் வாங்கித்தருவாங்க, நீங்க மட்டும் ஏன் ரோஸ்?யூ லைக் இட்? 


நோ நோ மல்லிகை முழம் 18 ரூபா, ரோஸ் ஜஸ்ட் 3 ரூபாதானே?


-------------------------

Dharshini Suriyakala shared CLicKK's photo.

6. கப்பல்களில் பணி புரியும் ஃபிகர்கள் லைஃப் ஃபுல்லா ஒரே ஜாக்கெட் அணிவதுதான் லைஃப் ஜாக்கெட்டா?


------------------------


7. மிஸ், எப்போ பாரு தலையே பின்னாம பரட்டையாவே இருக்கீங்களே, ஏன்? 


ஒத்தை ஜடை போட்டா ஒற்றைத்தலைவலி வருது, ரெட்டை ஜடை போட்டா ரெட்டைத்தலைவலி வருது


------------------------------

8. ஹேண்ட் பேக் பர்ச்சேஸ் பண்ணும் பெண்கள் எப்போதும் கைக்கு அடக்கமாக சின்னதாவே வாங்கறாங்க, ஆனா ஆண்கள் ஜஸ்ட் ஆப்போசிட் டூ தெம் # ஹி ஹி ஹி 


---------------------------------

9. நான் சினேகாவின் கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன் - பிரசன்னா #அடடா, அப்போ டைவர்ஸ் பண்றப்போ 2 டைம் கோர்ட்க்கு அலையனுமே?


--------------------


10. ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.5 இன்று அமல் # போங்க, இனி லவ்வர்ஸ் பார்க்குக்கே போய்க்குவாங்க, அங்கே 2 ரூபாதான், சீப்


------------------------------


என்ன கொடுமை இது அவ்வ்வ்வ் :-)))

11. விஷால் நடித்து வரும் சமரன் படத்தின் தலைப்பு சமர் என்று மாறியிருக்கிறது. # சம்மர்னு மாத்திடுங்க, மேட்சிங்கா இருக்கும், படம் காய வைக்கப்போகுது


-------------------------


12. என்னை முட்டிவிடாதே! என் அழகு கெட்டுவிடும்! - ஒரு லாரியின் பின்னால் எழுதியிருந்தது! # நல்ல வேளை எந்த ஃபிகரும் தன் டி சர்ட்ல அப்படி எழுதலை


----------------------------------

13. அத்தான், குக்கர் விசில் வந்ததும் அடுப்பை அணைச்சுடுங்க


.. ம்க்கும்,அதுக்கு மட்டும் தான் என்னை கூப்பிடறே...


------------------------

14. விஸ்வரூபம் ஸ்டில்லுல கமல் முக்காடு போட்டிருக்காரு. அதை பார்த்து டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்க்கு வயிறு கலங்கிடுச்சாம்.


-------------------

15. கவுதம் -எல்லா பொண்ணுகளும் பசங்கள பா போட்டே சொல்றது ஏன்? அசோக் - பாக்கெட்ல பணம் இருக்கா?ன்னு பார்த்துக்கோனு அர்த்தம்?



-------------------



Ilaya Raaja shared Dikkat Sanat Var's photo.
16. பெண்கள் பசங்களை பா போட்டு பேசக்காரணம் அப்பாவைப்போன்ற அரவணைப்பை, பாதுகாப்பை எதிர்பார்ப்பதால்



----------------------------

17. வெட்டி பெட்டிங் கைய்ஸ். = பெட்ல கூட வெட்டியா உக்காந்து வேடிக்கை பார்க்கும் கைஸ்?




-----------------

18.டியர், உன்னைப்பார்த்ததும் கற்பனை, கவிதை 2ம் அப்படியே பீறிட்டு கிளம்புது....



 ம்க்கும், முதல்ல ஆஃபீஸ்க்கு கிளம்புங்க


----------------------------------


19. எந்த ஃபிகராவது உங்களை பார்த்து “து”-ன்னு துப்புனா கவலைப்படாதீங்க, அது அணில் ரசிகையாக்கூட இருக்கும் # துப்பாக்கி



-----------------------------

20. ரொம்ப லோ ஆங்கிளில் ஹை கிளாஸ் ஃபிகர்கள் வி நெக் ஜாக்கெட், யூ நெக் ஜாக்கெட் அணிந்து வந்து நெக்குருக வைக்கிறார்கள் # NECKலெஸ் பாண்டி


----------------------------------


Cartoonist Bala's photo.

அடிக்கடி சகோதர யுத்தம்னு ஏன் பேசுறாரு.. தெரியுமா...?

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.