1. காவல்துறையை நவீனப்படுத்த ரூ.51 கோடி ஒதுக்கீடு-. தமிழக பட்ஜெட்#இனிமே மாடர்னா மாமூல் வாங்குவாங்களா?
---------------------------------
2. சிறைச்சாலை மேம்பாட்டுக்காக ரு.117 கோடி ஒதுக்கீடு. - பட்ஜெட்#ஒரு பாரம்பரியம் மிக்க கட்சி ஆளுங்க நிறைய பேர் உள்ளே இருக்காங்கன்னு இந்த சலுகையா?
---------------------------------
3. காய்கறி, தோட்டக்கலைப் பயிர் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை. -பட்ஜெட் # ஐ ஜாலி, அம்மா ஆட்சில நல்லா கடலை போட்டுக்கலாம்
-------------------------
4. கூட்டுறவுத் துறை கடன் வாங்கியோர் திருப்பி செலுத்துவோருக்கு சலுகை.-பட்ஜெட்# திருப்பி செலுத்துனா அதை அப்படியே திருப்பி செலுத்திடுவீங்களா?
------------------------------
5. வட்டியில்லாபயிர்க்கடனாக ரூ.3000 கோடி வழங்க இலக்கு.# எல்லா விவசாயமும் போயஸ் தோட்டத்து எல்லைலயே போடனும்னு கண்டிஷன் போடுவாங்களோ?டவுட்டு
------------------------------
6. டியர்,அழகா இருக்கற நான் பந்தா பண்னக்கூடாதா?
நீ பந்தா பண்றே, ஓக்கே, அதுக்காக அழகா இருக்கேன்னு அபாண்டமா சொல்லாதே # கலாட்டா கடலை
------------------------------------
7. தலைவர் திடீர்னு டயட்ல இருந்து உடம்பை குறைச்சிட்டார்,இளைச்சிட்டார்!!ஏன்?
குண்டர் சட்டம் அவர் மேலே பாயாம தப்பிக்கத்தான்
------------------------------
8. கம்பெனி மேனேஜர் நீங்களே இப்படி ஊழல் பண்ணுறீங்களே?
சாரி சார், என் மேல் தப்பில்லை, இதுக்கு முன்னால இருந்த மேனேஜர் செஞ்சதைத்தான் ஐ ரிப்பீட்
--------------------------------
9. பொள்ளாச்சி அரசு பஸ்சில் வாலிபர்கள் சில்மிஷம், பெண் பயணிகள் கொந்தளிப்பு#அப்போ பிரைவேட் பஸ்ல சில்மிஷம் செஞ்சா கண்டுக்க மாட்டாங்களா?டவுட்டு
------------
10. ஜாக்பாட் நிகழ்ச்சில கலந்துக்க ஏன் பயப்படறே?
ஜாக்பாட் நடத்துன ஆளே ஜெயில்ல இருக்கே , அதான் பயம்.
--------------------------

11. உன் காதலி குண்டாகிட்டே போறாளே?
சவால் சுற்றுங்கறதை தப்பா புரிஞ்சுக்கிட்டா போல. பல சுற்று பெருத்துட்டா
----------------------
12. திருவள்ளுவருக்கு சிலை வெச்ச தலைவரு புது பட்டம் சூட்டுனாராமே?
ஆமா, பல குறள் மன்னர்னு..
--------------------------
13. DR,உங்க பாலி கிளினிக்ல நிறைய பேர் ஆபரேஷன்ல இறந்துடறாங்களாம்.
அதுக்காக பலி கிளினிக்னு போர்டுல எழுதறதா?
----------------------
14. என் மனைவி கஷ்டப்பட்டு 2 மணி நேரம் செய்யறதை நான் ஈஸியா 10 நிமிஷத்துல முடிச்சுடுவேன்.
எப்டி?
அவ சமைக்கிறதை நான் சாப்பிட்டுடுவேன்
---------------
15. இந்தப்படத்துல அமலாபால் ஏன் ரொம்ப இளைச்சி இருக்காங்க?
டைரக்டர் அவரை காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சிட்டாங்களாம், அதான் சுண்டிப்போய்ட்டாங்க
-----------------
16. ஹீரோயினை துரத்திட்டு வில்லன் போறப்ப திடீர்னு ஒரு குழில விழுந்துடறாரு....
அட!!!!!!!
எழுந்து பார்த்தா அது ஹீரோயினோட தொப்புள்.
-------------------------------------
17. அழகிரிக்கு பினாமி பெயரில் ரூ. 3,500 கோடிக்கு மேல் சொத்து: தெகல்கா#மைனாரிட்டி ஆட்சி என்று எள்ளி நகையாடியவர்கள் இப்போ என்ன சொல்றீங்க?-மு.க.
------------------------
18. சின்ன வயசு சம்பவங்கள் சில முட்டாள்தனங்களாக இப்போது தோன்றலாம்,ஆனால் அவை தான் நாம் எப்போதும் நினைத்து மகிழும் பொக்கிஷங்கள்
--------------------------------
19. அடலசண்ட் லவ், அஃபக்ஷன், அட்டாச்மெண்ட்,இன்ஃபேக்சுவேஷன்,லவ் என பல பரிணாமங்களில் காதல் இருந்தாலும் அனைத்திலும் அன்புதான் ஆட்சி செய்கிறது
--------------------------
20. விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு#அடி குடுக்கறவன் மன்னிக்கனுமா? அடி வாங்குறவன் மன்னிக்கனுமா? டவுட்டு
---------------------
Shazahn Padamsee for Reebok Photo Stills


21. கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் - ஜெ # அதுக்கு உதவி செஞ்சவங்களுக்கு ஏதும் உதவித்தொகை கிடையாதா மேடம்?
----------------------
22. சிறையில் திமுக.,வினர் சலுகைகளை கேட்கவில்லை : மாஜி அமைச்சர் துரைமுருகன்#உங்கள் அழுகைகளை நானும் கேட்கவில்லை -ஜெ
-------------------------
23.சாப்பிடக் கூட பிடிக்கவில்லை : அஞ்சலி கண்ணீர்!# இவ்வளவு சம்பாதிக்கறீங்க?ஏன் நீங்களே சமையலிங்க்?ஆள் வெச்சுக்குங்க சமையலுக்கு
-------------------------
24. பொது இடத்தில் லிப் டூ லிப் : ஷில்பாவுக்கு சம்மன்!! #கோர்ட்ல வழக்கு நடக்கும்போது குற்றம் நடந்தது எப்படி?ன்னு டெமோ காட்டுவாங்களா?
----------------------
25. வேலாயுதத்தை பார்த்து கப் சிப் ஆன விஜய்!#அண்ணன் நடிச்ச படம் அண்ணனுக்கே பிடிக்கலை போல. படம் பிரமாதம்னு சொன்னதே ஊத்திக்குது, ஹூம்...
--------------------------------


'' 'ஏழாம் அறிவு’ன்னா... அது DNA-க்களின் ரகசியம். அந்த ரகசியத்தை நான் கொண்டுவந்திருக்கேன். தமிழர்களின் நாகரிகம் மிகச் சிறந்தது. ஆனால், நாம் அதைப் புத்தகங்களிலும், வரலாற்றுச் சுவடிகளிலும் மட்டும் படிச்சுத் தெரிஞ்சுக்கிறோம். வெள்ளைக்காரங்க அந்தப் பெருமைகளை மறக்கடிச்சு, வறுமையை மட்டும் அறிமுகப்படுத்திட்டுப் போயிட்டாங்க. இந்த உலகத்துக்கு நாம் என்னவெல்லாம் கொடுத்தோம் என்பதை மறந்து, தாழ்வு மனப்பான்மையில் விழுந்துகிடக்குறோம். 2,000 வருடத்துக்கு முந்திய காலத்தையும், இந்த நாளையும் இதில் இணைச்சு இருக்கேன்.
''நிச்சயமா! சூர்யா, அடுத்து என்ன படம் பண்ணினாலும், இதுதான் அவருக்கு சவாலா இருக்கும். இதில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலந்த சண்டைகள் வருது. ஒரு மாசம் சூர்யா வியட்நாமில் தங்கிப் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தார். அங்கே இருந்து அந்தச் சண்டைகளில் பிரபலமான இரண்டு பேரை அழைச்சிட்டு வந்தார். அவங்களோட சண்டைகளைக் கத்துக்கிட்டு, அவங்களுக்கே சவால் தரும்படி ஃபைட் பண்ணினார். சிக்ஸ்பேக் வெச்சுக்கிட்டு சண்டை போடுறது சிரமமான விஷயம். சிக்ஸ்பேக் வெச்சா, அளவாத்தான் தண்ணீர் குடிக் கணும். இவ்வளவுதான் சாப்பிடணும்னு ரூல்ஸ் இருக்கு. இது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, படத்துக்காகத் தன்னை அவ்வளவு வருத்தி இருக்கார் சூர்யா. நேரில் சொன்னால், நன்றி... கூச்சமா மாறிடும். ரொம்ப தேங்க்ஸ் சூர்யா!''













கலந்துகொள்ள வந்தார் ஸ்டாலின். வழியில் கொரடாச்சேரி அருகே, பேருந்து விபத்தில் பலியான மாணவன் விஜய்யின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிவிட்டு, திருத்துறைப்பூண்டிக்குக் கிளம்பினார்.







கட்சிக்கு, ஈழ மக்கள் நான்காவது இடத்தையே அளித்தனர். அம்பாறை மாவட்டத்தின் காரை தீவுப் பிரதேச சபையில் 1.57 சதவிகித வாக்குகளும், திருக்கோயில் சபையில் 5.28 சதவிகித வாக்குகளையும் மட்டுமே அந்தக் கட்சி பெற்றுள்ளது.
மொத்த யாழ்குடாப் பகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில், ராஜபக்ஷே அரசு சகல இயந்திரங்களையும் களத்தில் இறக்கியது. தமிழகத்தின் திருமங்கலம் பாணியில், பணம், இலவசப் பொருள்களைக் கொடுத்து, வாக்காளர்களை மயக்க ஏதேதோ செய்தனர்.


