Saturday, June 11, 2011

சோனியா அகர்வால் -ன் முன்னாள் கணவர் செல்வராகவன் பேட்டி - காமெடி கும்மி

http://www.southdreamz.com/wp-content/uploads/2008/06/richa-gangopadhyay-miss-ind.jpg 

இது ரொமாண்டிக் உலகம்!''


'இரண்டாம் உலகம்’ படத்தில் இன்னும் இனிமையாக இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். செம ஃப்ரெஷ்ஷாக, சாஃப்ட்வேர் இளைஞன் லுக். கல்யாணக் களை முகத்தில் மின்ன, கையில் அடிக்கடி புகைகிறது சிகரெட்.

சி.பி - அண்ணனுக்கு சம்சாரமும் இரண்டாம் சம்சாரம், பட டைட்டிலும் இரண்டாம் உலகம், ஆஹா வாட் எ கோ இன்சிடெண்ட்ஸ்


1.  ''முதல்ல விக்ரம், அப்புறம் ராணா, கடைசியா கமல்னு ஏதேதோ காம்பினேஷன் பேச்சு வந்தது. இப்போ, 'இரண்டாம் உலகம்’னு ஃபிக்ஸ் ஆகிட்டீங்களா?''

''ஆமா சார்! ரெண்டு வருஷம் தவம்கிடந்து ஃபீல் பண்ணிப் படம் எடுக்கிறது எனக்கு அலுப்பா இருக்கு.

சி.பி - அண்ணனுக்கு தொடர்ந்து ஒண்ணையே மெயிண்டெயின் பண்றது போர் அடிக்குது போல.. ஹா ஹா 


என் டீமும் டயர்டு ஆகிட்டோம். அதனால், இடையில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா ஒரு படம் பண்ண நினைச்சேன்.

 சி.பி - எது? சாந்தி அப்புறம் நித்யா மாதிரி கில்மா படமா? அதுதான் ஷார்ட்டாவும் இருக்கும் ஸ்வீட்டாவும் இருக்கும்..

அதுதான் 'இரண்டாம் உலகம்’. தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாயானு ஒரு தெலுங்குப் பொண்ணு. இந்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு பையனும் பொண்ணும் சேர்றதுதான் 'இரண்டாம் உலகம்’. என் முந்தின படங்களோட எந்தச் சாயலும் இல்லாத புது கான்செப்ட். முழுக்க முழுக்க ரொமான்டிக்கான கதை. நிறைய கேரக்டர்கள் இல்லை. தனுஷ், ரிச்சா, ஜி.வி.பிரகாஷின் இசையில் ஆறு பாடல்கள்தான் 'இரண்டாம் உலகம்’. மூணே மாசத்தில் மொத்தப் படத்தையும் முடிச்சிட்டேன். இது ரொமான்டிக் உலகம்!''

சி. பி - மூணே மாசத்துல முடிச்சுட்டீங்களா? நீங்க செம டேலண்ட்ணே.. ஹி ஹி 

2. '' 'நானும் யுவனும் சேரப்போறோம்’னு முந்தின பேட்டியில் சொல்லியிருந்தீங்க. என்ன ஆச்சு?''

''இல்லை... இல்லை. 'ஆயிரத்தில் ஒருவன்’ பண்ணும்போதே, 'இரண்டாம் உலகம்’ பத்தி ஜி.வி.பிரகாஷ் கிட்டே நிறையப் பேசியிருந்தேன். அதிவேகமா ஒரு படம் பண்ணும்போது யுவனுக்குத் திரும்ப முதலில் இருந்து சொல்லிப் புரியவைக்கணும். எனக்கு நேரம் கிடையாது. சத்தியமா யுவனுக்கும் நேரம் இருக்காது. அதனால், ஜி.வி.பிரகாஷையே ஃபிக்ஸ் பண்ணிட்டேன். அருமையான இசை. இந்தப் படத்தில் இருந்து ஜி.வி-யோட அடுத்த கட்டம் ஆரம்பிக்கும்னு நம்புறேன்!''

 சி.பி -கட்டதுரைக்கே கட்டம் சரி இல்லை.. இவரு அடுத்தவங்க ராசி பற்றி பலன் சொல்றாரு ஹய்யோ ஹய்யோ...



3. ''இரண்டாம் உலகத்தில் இருந்து ஆன்ட்ரியாவை ஏன் திடீர்னு நீக்கிட்டீங்க... ஆன்ட்ரியா சர்ச்சை உங்க ஒவ்வொரு படத்திலும் தொடர்ந்து வந்துட்டே இருக்கே?''


''நான் என் வேலைகளைச் சரியாப் பண்ணிட்டு இருக்கேன். எல்லா யூகங்களுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. எதுக்கு எல்லாரும் இதைப்பத்தியே பேசுறாங்கன்னு தெரியலை. முன்னாடி ஒரு 15 நாள் அவங்களைவெச்சு ஷூட்டிங் நடத்தினேன்.

 சி.பி - அவங்களை வெச்சு? ஹி ஹி ம் ம்

அப்புறம் நான் கதையையே மாத்திட்டேன். அதனால், அவங்க படத்தில் இல்லை.

 சி.பி - கதையை மாத்துனா கதா நாயகியை மாத்தனுமா? விடறார்யா கலர் கலரா ரீலு.. 


 சில படங்களில் சில காம்பினேஷன்ஸ் சரியா அமையும். சில படங்களில் சரியா அமையாது. சினிமாங்கிறது பெர்மனென்ட் காம்போ கிடையாது.

 சி.பி - அண்ணனுக்கு பர்மணெண்ட்னா பிடிக்காது போல.. எல்லாமே டெம்ப்ரவரி தான் ஹி ஹி

என் படங்கள்தான் பேசணும். நான் பேசிட்டே இருந்தா...

 சி.பி -  இதே டயலாக்கை மணிரத்னம்சாரும் சொன்னாரே.. ஓஹோ அதை இவரும் கேட்டிருப்பரோ..

என் வேலையை யார் பார்க்கிறது? இந்த மாதிரி கேள்விகளுக்குப் பதில் சொல்ல, இப்போ வெட்கமா இருக்கு சார்!''

சி.பி - நீங்க செஞ்ச வேலைகளை பார்த்து எங்களுக்கும் சோனியா அகர்வாலுக்கும் கூட வெட்கமாத்தான் சார் இருக்கு ஹுஹி ஹி 

 http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12766_1.jpg

4. ''ஆண்ட்ரியா கூட ஃப்ரெண்ட்ஷிப்பாவது இருக்கா?''

சி.பி - ஹா ஹா கேட்கறாங்க பாரு கேள்வியை.. அண்ணன் தான் கழட்டி விட்டாச்சுன்னு பூடகமா சொல்றாரே.. விட மாட்டீங்களா?

''வழக்கமா நான் யார்கிட்டேயும் நிறையப் பேச மாட்டேன்.

 சி.பி - ஆமா .. அண்ணன் பேசி டைம் வேஸ்ட் பண்றதில்லை.. ஒன்லி ஆக்‌ஷன் தான் ஹி ஹி

நான் பேசுற ஆட்களை விரல்விட்டு எண்ணிட லாம். மனசுக்குப் பிடிச்ச மாதிரி படம் எடுக்கணும். அதுக்கு ஓடிட்டே இருக்கிறதுதான் முக்கியம்!''

சி.பி - ஓடிட்டே எடுத்தா அது ரன்னிங்க் கமெண்ட்ரி ஃபிலிம் ஆகிடாது?#டவுட்டு


5. ''உங்க படத்தில் தனுஷ்க்கு அவார்டு வாங்கித் தருவீங்கன்னு பார்த்தோம். வெற்றிமாறன் தேசிய விருது வாங்கிக் கொடுத்துட்டாரே?''


''அவார்டுதான் முக்கியம். அதை யார் வாங்கிக் கொடுத்தா என்ன? தனுஷ் என் புள்ளை. நான் வாங்கி இருந்தாக்கூட அவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்க மாட்டேன். அன்னிக்கு நான் அவ்வளவு சந்தோஷமா இருந்தேன். நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிட்டேன். இந்த விருது தனுஷ்க்கு இன்னும் முன்னாடியே கிடைச்சிருக்கணும். கொஞ்சம் லேட் ஆகிருச்சு. அவ்ளோதான். தனுஷ் நம்ப முடியாம, சந்தோஷத்தில் அழுதுட்டார். கொத்தனார்வெச்சு வீடு கட்டுறது வேற... ஒவ்வொரு செங்கல்லா எடுத்துவெச்சு நீங்களே வீடு கட்டிட்டு, அதை வெளியே வந்து நின்னு பார்த்தா... உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்? அப்படித்தான் தனுஷ் இருக்கார்... நானும் இருக்கேன்!''


 சி.பி - இது படைப்புக்கும் , திறமைக்கும் கிடைத்த வெற்றி, சோ நோ கமெண்ட்ஸ்.. 
http://narumugai.com/wp-content/uploads/2011/02/Sonia-agarwal.jpg

6. ''கமலோடு விஸ்வரூபம் பண்றதா இருந்தது. 'கமல் உங்களை ரிசப்ஷன்லயே காக்கவெச்சார். ரெண்டு பேருக்கும் செட் ஆகவே இல்லை’ன்னு வதந்தி கிளம்புச்சு. என்னதான் நடந்தது?''

''கமல் மாதிரி ஒரு லெஜன்ட் அண்டு ஜென்டில்மேனை நான் பார்த்தது இல்லை. எங்க ரெண்டு பேருக்குள்ளே நிறைய விஷயங்கள் செட் ஆச்சு.

 சி.பி - ஆமாமா.. 2 பேருக்கும் காதல் நல்லா ஒர்க் அவுட் ஆகுது 


நல்ல நண்பர்கள் ஆனோம். எனக்கு நிறைய கமிட்மென்ட்டுகள் சார். நான் கல்யாணம் பண்ணி இருக்கேன். என்னை நம்பிவீட்ல ஒரு பொண்ணு இருக்கு.

 சி.பி - இன்னுமா அந்த பொண்ணு உங்களை நம்புது?



நான் அவங்களைக் கூட்டிட்டு நாலு இடம் போய் வரணும். அடுத்த மாசம் 'இரண்டாம் உலகம்’ ரிலீஸ் ஆகப்போகுது. நான் ஒரு படம் பண்ணினா, எந்த கமிட்மென்ட்டும் இல்லாமல்... அதிலேயே ஊறிடுவேன். அப்படி ஊறினால்தான் என்னால் படம் எடுக்க முடியும். இந்த கமிட்மென்ட்ஸ் வெச்சுக்கிட்டு கமல் சாரோடு படம் பண்ண முடியாதுன்னு தோணுச்சு. அதனால், நானே வெளியே வந்துட்டேன்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcF0qRtE-0Q6fjSSApKqVFT2_7ACt7dIFzlNVyebZx6dSK9YFNn_kgJT50BvBztxrVh2mMCXPI9R2c578hWUU5T5-hqqEKhs35tDEhZDsry2uFQzVaHSufZbmbUKgBVrRDi8ZEkSqetWDJ/s1600/richa_gangopadhyay_miss_india_usa1.jpg
7. ''இவ்வளவு கமிட்மென்ட்ஸ் இருப்பது முன்னாடியே தெரியாதா என்ன?''

''ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கிறதா ப்ளான் பண்ணோம். உட்காந்து பேச ஆரம்பிச்ச பின்னாடி, அதைப் பெரிய படமாப் பண்ற திட்டம் வந்துச்சு. நாங்க பேசின விஷயங்களைப் படமாப் பண்றதுன்னா... நான் ஏழெட்டு மாசம் ப்ரீ-புரொடக்ஷன் வேலை பார்க்கணும். அப்போதான் கதையை முழுமையா ரெடி பண்ண முடியும். எனக்கு சினிமா முக்கியம்... அதே மாதிரி, என் மனைவியும் முக்கியம். எல்லாமே வாழ்க்கையில் வேணும். என்னால் ஒரு இடத்தில் 100 சதவிகிதம் உண்மையா இருக்க முடியாதுன்னா... நான் வெளியில் வந்திருவேன். அதுதான் நடந்தது!''

சி.பி - மொத்தத்துல படம் டிராப்.. அதை ஏன் இப்படி சுத்தி வளைச்சு சொல்றீங்க?

தமிழனின் டாப் ஃபைவ் (5) தண்டச்செலவுகள்

http://piratheepa.files.wordpress.com/2007/11/still31.jpgதமிழக மக்கள் செய்யும் டாப் 5 வீண் செலவுகள்!

ஒஹோ என்றிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் சில வருடங்களுக்குமுன் சடசடவென சரிந்தபோது, அதற்கு முக்கிய காரணமாக நிபுணர்கள் சுட்டிக் காட்டியது அந்நாட்டு மக்களின் ஊதாரித்தனத்தைத்தான். கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி வாங்கிக் குவித்ததால் வந்த அவல நிலை இது என்றார்கள். வீண்செலவுகள் ஒரு நாட்டை எப்படி பதம் பார்த்து விடுகிறது என்பதற்கு வாழும் உதாரணமாகிப் போனது அமெரிக்கா.

ப்போது இந்தியா விலும் அந்த மனப்போக்கு குடியேறி வருவதாக எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் விஷயம் தெரிந்த நிபுணர்கள். நம் கண்முன்னே நடப்பதைப் பார்த்தால் அது உண்மைதானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு நம் மக்கள் செலவு செய்யும் விதத்தில் சமீப காலமாக பயங்கர மாறுதல்கள்.
 
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க முடியாதே! செலவு செய்யாமல் காசை மூடி மூடி வைத்தால் என்ன பிரயோஜனம் என இன்றைய இளைய தலை முறையினர் கேட்பதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், நம்மவர்கள் செய்கிற செலவுக் கணக்கை பார்த்தால் நமக்கு மலைப்பே ஏற்படுகிறது. இன்றைய நிலையில் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை அநாவசிய செலவு செய்வதாக புள்ளிவிவரங்கள் சொல்வது கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.

இந்தச் சூழலில், தமிழக மக்களின் மனப்போக்கு எப்படி இருக்கிறது, எதையெல்லாம் அநாவசிய செலவு என்று கருதுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தமிழகம் முழுவதும் களமிறங்கியது நமது நாணயம் டீம். கிடைத்த தகவல்கள் தமிழர்கள் செல்லும் பாதையை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே இருக்கிறது.

வயது, சம்பளம் போன்ற வற்றின் அடிப்படையில் அனைத்து தரப்பினரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டது. விதவிதமான பதில்கள் வந்தன. சில பதில்கள் சொல்லும் விதத்தில் நகைச்சுவை யாகக்கூட இருந்தன  என்றாலும், அதன் பின்னால் இருந்த காரணங் கள் சீரியஸ் ரகம்.

திருமணம் செய்வது, குழந்தைக்கு டியூசன் கட்டணம் செலுத்துவது போன்றவற்றைக்கூட அநாவசிய செலவு என்று குறிப்பிட்டிருந்தனர் சிலர். இளைஞர்களில் பலர் சிகரெட் மற்றும் மதுபானத்தை குறிப்பிட்டாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் வருத்தப்பட்டனர். பெண்களைப் பொறுத்தவரை சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஷாப்பிங் மால்களிலும் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதாகத் தெரிவித்தனர். 

இன்டர்நெட் பிரவுஸிங், பைக், கார்களில் நெடுந்தூரப் பயணம், டீ, காபி குடிப்பது, பார்ட்டிக்குப் போவது, அழகு சாதனப் பொருட்களை வாங்கிக் குவிப்பது என தமிழக மக்களின் அநாவசிய செலவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அழகுக்காக அதிக அளவு செலவு செய்வதாக பதில் சொல்லியிருக்கிறார்கள்.

டாப் 5 அநாவசிய செலவுப் பட்டியல்:

1. ஷாப்பிங்:

ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள் ஆண், பெண் இரண்டு தரப்பும். சம்பளம் வாங்கிய முதல் நாளே ஷாப்பிங் கிளம்பிவிடுவோம் என பலரும் சொல்லியிருக்கிறார்கள். கூடுதலாக வரும் போனஸ் மற்றும் இதர வருமானங்களை கொண்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்குகிறார்களாம். இது குடும்பத்திற்கு அவசியமில்லாத செலவுதான் என்றாலும் ஆசைக்காக வாங்குவதாக ஒப்புக் கொள்கிறார்கள். குறிப்பாக ஆடம்பர, அழகு சாதன பொருட்கள் வாங்குவதை வீண் செலவாகக் கருதி முதலிடம் கொடுத்திருக்கிறார்கள் பெண்கள்.


2. செல்போன்:

செல்போனுக்கான செலவை அடுத்ததாகச் சொல்லியிருக்கின்றனர். ரீசார்ஜ் செய்வதிலேயே பர்ஸில் முக்கால் வாசி பணம் காலியாகிவிடுகிறதாம். அதுவும் பத்து ரூபாய், ஐந்து ரூபாய்க்குக்கூட ரீசார்ஜ், டாப் அப் போன்ற வசதிகள் இருப்பதால் சில்லறை சில்லறையாகவே ஒரு மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிவிடுகிறதாம். ரீசார்ஜ் தவிர, லேட்டஸ்ட் சினிமா பாடல்களை டவுன்லோட் செய்வது, அடிக்கடி காலர் டியூன் பாட்டுகளை மாற்றுவது, அடிக்கடி மொபைல் போனையே மாற்றுவது போன்றவற்றுக்கும் எக்கச்சக்கமாக செலவு செய்வதாக தெரிவித்தனர். செல்போன் செலவு விஷயத்தில் நகர்ப்புறம், கிராமப்புறம் என்கிற பாகுபாடே பார்க்க முடியவில்லை என்பது முக்கியமான விஷயம்.

3. சினிமா:

அடிக்கடி சினிமா தியேட்டருக்கு செல்வதை முக்கியமான அநாவசியச் செலவாக சொல்லியிருக்கிறார்கள் ஆண்கள். தங்களுக்குப் பிடித்த ஹீரோவின் திரைப்படம் வந்தால் முதல்நாள் முதல் 'ஷோ’விற்கு அதிகப்படியான பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் பழக்கம் இன்னும் பலரிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பெண்கள் இந்த விஷயத்தில் பரவாயில்லை; புதுப்படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டும் என்பதில் அவர்கள் ஓரளவுக்கு மட்டுமே ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். எப்படியும் கொஞ்சநாளில் இதே திரைப் படத்தை டி.வி.யிலோ அல்லது சிடி வாங்கியோ பார்த்துக் கொள்வோம் என்கிறார்கள்.


4. ஓட்டல்:

ஆண், பெண் என பேதமில்லாமல் இருவரின் அநாவசிய செலவு பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது ஓட்டல். முன்பெல்லாம் எப்போதாவது ஒருமுறை ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டவர்கள் இப்போது வாரத்தின் இறுதிநாளில் ஓட்டலுக்குப் போவது கட்டாயமான விஷயமாகி விட்டதாகச் சொல்கிறார்கள். நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் சிறிய ஊர்களிலும் இந்தப் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. நகர்ப்புறங்களில் பீட்ஸா, சைனீஸ், ஃபாஸ்ட் புட் போன்ற உணவு விடுதிகளுக்குப்போவதால் செலவு றெக்கை கட்டிவிடுகிறது.


5. நொறுக்குத் தீனிகள்:

இந்த செலவுகளுக்கு இரண்டு தரப்பினருமே முக்கியத்துவம் தருகின்றனர். என்றாலும் இதில் ஆண்களின் செலவு அதிக மாக இருக்கிறது. டீ, காபி மற்றும் நண்பர்களோடு சேர்ந்து இருக்கும்போது செய்யும் சில்லறை செலவுகள் அநாவசியமாக இருப்பதாகச் சொல்லியுள்ளனர். பாக்கெட் மணியை காலி செய்வதில் டீ கடைகளின் பங்குதான் பிரதானம் என்கிறார்கள் ஆண்கள். பெண்கள் டீ கடைகளை குறிப்பிடவில்லை என்றாலும் நொறுக்குத் தீனிகளுக்கு அநாவசியமாக செலவு செய்வதாகச் சொல்கிறார்கள்.      

மக்களின் மனப்போக்கு இப்படி இருக்க, பொருளாதார அறிஞர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய சிலரிடம் கேட்டோம்.. கோவை பாரதியார் பல்கலைக் கழக மேலாண்மை தொழில் முனைவோர் துறையக இயக்குநர் வேங்கடபதியிடம் பேசினோம்.


''நமக்கு எது தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ அதற்குள் வாழப் பழகுவதும், செலவுகளில் ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதும் பல அநாவசிய செலவுகளைத் தவிர்க்க உதவும். எந்த வேலையையும் சரியான நேரத்தில்செய்து முடித்தால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம். மின்சாரக் கட்டணம், கல்லூரி, பள்ளிக் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்திவிட்டால் அபராதத் தொகை போன்ற அநாவசிய செலவுகள் ஏற்படாது.


திட்டமிடலும், அதனை உரிய நேரத்தில் செயல்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்வதும் நம்மை அறியாமல் செய்யப்படும் செலவுகளைக் குறைப்பதும், கணிசமான தொகை நம் கையில் நிற்க உதவும். உதாரணமாக, ஊருக்குச் செல்லவேண்டும் எனில் முன்பே டிக்கெட் புக் செய்துவிட்டால் அந்த செலவு மட்டும்தான் ஆகும்.

கடைசி நேரத்தில் அவசரமாக டிராவல்ஸ் மற்றும் தத்கல் முறைகளில் டிக்கெட் எடுத்துப் போவது கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும். இதுவும்கூட அநாவசிய செலவுதான். அவசர காலங்களில் இது போன்று செய்யலாமே தவிர மற்ற நேரங்களில் திட்ட மிடலே நமக்கு பணத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும்.

பிராண்டட் பொருட்களை வாங்கும்போது கூடுதல் பணம் செலவு செய்ய நேரிடும். எந்த ஒரு பொருளையும் ஆசைக்காக வாங்காமல் அவசியத்திற்காக வாங்கினாலே பல ஆயிரங்கள் மிச்சப்படும். ஒழுக்கமான வளர்ப்பு முறையே இந்த அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த சிறந்த வழி'' என்றார்.  


சென்னை ஐ.ஐ.டி.-யில் எம்.பி.ஏ. பேராசிரியராக இருக்கும் தேன்மொழி, ''அளவுக்கு அதிகமாக வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது, மற்றவர்களுக்கு பார்ட்டி கொடுப்பது, அதிகப்படி யான உணவுப் பொருட்களை வாங்குவது, அதிகளவில் டிரஸ் எடுப்பது மற்றும் வெளியில் சென்று உணவு உண்பது இவைதான் அநாவசிய செலவு களாக நான் சொல்வேன். புதிதாக எது வந்தாலும் உடனே வாங்கிவிடுவதுகூட அநாவசிய மான செலவுதான். அந்தப் பொருள் நமக்கு தேவையா என்றுகூட நாம் பார்ப்பது கிடையாது. மற்றவர்கள் நம்மை கண்டு ஆச்சரியப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் பல பொருட்களை வாங்கிக் குவிக் கிறோம். இதெல்லாம் அநாவசியச் செலவுகள்தான்!'' என்றார்.    


பல நெருக்கடிகளையும் சமாளித்து ஈட்டப்படும் வருமானத்தை ஏன் அநாவசியமாக செலவு செய்ய வேண்டும் என்று ஒருசாராரும், வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமெனில் சில செலவுகளை செய்வதில் தப்பே இல்லை என்று இன்னொரு சாராரும் கூறுவது தவறில்லை தான். ஆனால், எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தையும் சேமிக்க வேண்டும்; அதே நேரத்தில் சந்தோஷமான ஒரு வாழ்க்கை யையும் வாழவேண்டும் என்பது நம்மக்களின் விருப்பமாக இருக்கிறது. எல்லை மீறாத செலவுகளும், பாதுகாப்பான சேமிப்புமே அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதைப் புரிந்து செயல்பட்டால் எந்த செலவும் அநாவசிய செலவில்லை
 
நன்றி - நாணயம் விகடன்

டிஸ்கி - சேமிப்பு பற்றிய கட்டுரையில் எதற்கு ஃபிகரோட ஃபோட்டோ? என கண்டனம் தெரிவிப்பவர்களுக்கு, என் பார்வையில் காதலிக்கு தமிழன் செய்யும் தண்டச்செலவுதான் அதிகம்,எனவே காதலிக்கு செய்யும் தண்டச்செலவுகளை கட் பண்ணுங்கள்,முடியலைன்னா காதலியையே கட் பண்ணிடுங்க.-இப்படிக்கு தனக்கு காதலி இல்லை எனில் வேற யாருக்கும் காதலியே இருக்கக்கூடாது என நினைக்கும் மறத்தமிழன் ஹி ஹி

ஏர்செல் ஊழல் vs தயாநிதி மாறன் -அதிர வைக்கும் உண்மைகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_w6TudwSeLIi9hyphenhyphenSEvmFijhf7pY6wvm5A1LjOUmLcbQL5KFVstBp2NnWaiQ5hmbtXsN7XDh0Pqr71e1YBFO9nX5hg9dE-9XoRBlz8fnahqSQpRGio93ep2cDltvLmH7XNPpKIFkgQI14/s1600/Aircel+wifi+service.jpgசிக்கவைத்த சிவசங்கரன்... தவிக்கும் தயாநிதி மாறன்!

16 வருடப் பகையின் கதை

சி.பி.ஐ. துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப்பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி!

'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...!

'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டப்பட்டு இருந்தாலும் அவர் நீதிமன்றத்துக்கு அப்போதே சென்று இருக்கலாம்'' என்று பதில் கூறி இருந்தார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்குவதாக இல்லை!


யார் இந்த சிவசங்கரன்?

சென்னையில் வசிக்கும் 54 வயதாகும் சிவசங்கரன், திருவண்ணா மலைக்காரர். பி.இ. (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. (ஹார்வர்டு பல்கலைக் கழகம்) படித்தவர். ஸ்டெர்லிங் குரூப் மற்றும் சிவா வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஆரம்பித்து, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர். பின்லாந்து நாட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று கடந்த 30 வருடங்களில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வந்தாலும், உச்சகட்ட பெரிய டீல் என்றால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனியிடம் 4,860 கோடிக்கு ஏர்செல் உள்ளிட்ட மூன்று  நிறுவனங்களை விற்று லாபம் பார்த்தது.

 பிறகு, நார்வே நாட்டில் ஷிப்பிங் கம்பெனி, மற்றொரு நாட்டில் மினரல் வாட்டர் பிசினஸிலும் இறங்கினார். மகாராஷ்டிர மாநிலத்தில் ரிசார்ட் பிசினஸ், சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திலும், தனது பணத்தை முதலீடு செய்தார். லேட்டஸ்ட்டாக, வெளிநாட்டில் படிப்பு முடித்துத் திரும்பிய தனது மகனை ஷிப்பிங் பிசினஸைக் கவனிக்கும்படி பணித்திருக்கிறார்.


கம்ப்யூட்டர் உலகில் நுழைகிறார்!

அது 1983-ம் ஆண்டு. 'கம்ப்யூட்டர்’ என்ற வார்த் தையே பலரை மிரள வைக்கும். அது எப்படி இருக்கும் என்றுகூட அப்போது பலருக்குத் தெரியாது. இனி உலகத்தை இதுதான் ஆட்சி செய்யப் போகிறது என்று மற்ற அத்தனை பேரையும் முந்திக்கொண்டு இனம் கண்டுகொண்ட சிவசங்கரன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜின் அப்பா நடத்திவந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை சகாயமான விலைக்கு வாங்கி, அதற்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்று புதிய பெயர் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில், கம்ப்யூட்டர் என்றாலே லட்சத்தில் விலை சொன் னார்கள். இவர் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதைவைத்து இங்கே கம்ப்யூட்டர் உருவாக்கி, ஒவ்வொன்றையும் சுமார் 33,000 என்று விற்பனை செய்தார். தொலைநோக்குப் பார்வை, கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப மூளை, வியாபார தகிடுதத்தங்கள் என்று அனைத்தையும் சரிவிகிதத்தில் பயன்படுத்தி, ஒரு சில ஆண்டுகளிலேயே மற்ற நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வளர்த்தார்.

அதன் பிறகு சென்னை டெலிபோன்ஸ் 'எல்லோ பேஜ்’ புத்தகத்தை பிரின்ட் பண்ணும்  டெண்டரைக் கைப்பற்றினார்.  கம்ப்யூட் டரை அடுத்து இன்டர்நெட் அறிமுகமானபோது... 'வந்துவிட்டது, அடுத்த புரட்சி’ என்பதை உணர்ந்து கொண்ட சிவசங்கரன், 'டிஷ்நெட் டிஎஸ்எல்.’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன்களில் 'பாரீஸ்தா’ ரெஸ்டாரெண்டுகளை ஆரம்பித்தார். இன்னொரு பக்கத்தில் பிட்னெஸ் சென்டர்களும் நடத்தினார். செல்போன் அறிமுகமானதும், அதன் வீச்சு பலமாக இருக்கும் என்பதை எல்லோரையும்விட மிகமிக முன்னதாகவே மோப்பம் பிடித்த சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு துவக்கினார்.

வேகமாக வளர்ச்சியடைய ஏர்செல் என்ற ஒரு குதிரை போதாது என்பதை உணர்ந்த சிவசங்கரன், 210 கோடி கொடுத்து 'ஆர்பிஜி செல்லுலார்’ என்ற இன்னொரு செல்போன் நிறுவனத்தையும் வாங்கினார்.

சிவசங்கரனின் பாலிசி!

'வியாபாரத்தில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது’ என்பது சிவசங்கரனின் தாரக மந்திரம். தான் ஆரம்பித்த டிஷ்நெட் நிறுவனம், எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை என்றதும், சற்றும் தயங்காமல் 270 கோடிக்கு விற்றுவிட்டார்.

கோடிகளில் புரண்டாலும்... அவரின் எண்ண ஓட்டங்கள் எப்போதும் எளிமையானதுதான். தன் சகாக்களிடம் பேசும்போது விஷயத்தை எளிமையாக புரியவைக்க அவர் பல்வேறு உதாரணங்கள் சொல்வதுண்டு. ''என்னோட மனைவி, பிள்ளைகளைத் தவிர நான் போட்டிருக்கும் சட்டையைக் கூட விற்பேன்!'' என்று அடிக்கடி சொல்வார்.

''சரவணபவனுக்குப் போற எல்லோருமே இட்லியைத்தான் வாங்குறாங்க. சட்னி, சாம்பாரை வாங்குவதில்லை. ஆனால் சட்னியும் சாம்பாரும் கொடுக்கவில்லை என்றால் இட்லி விற்பனை ஆகாது. அதுபோல, நம்மிடம் கம்ப்யூட்டர் வாங்க வருபவர்களுக்கு நாம் பிரின்டரையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் விற்பனை அதிகமாகும்!'' என்பது அவரது பிரபலமான உதாரணம்.

''சிவசங்கரன் தொலைநோக்குப் பார்வை கொண்ட கலர்ஃபுல் தொழில் அதிபர்!'' என்று சொல்பவர்களும் உண்டு. ''ஒரு தொழில் இல்லாமல் பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்தும் அவரை தொடர் தொழில் தொழிலதிபர்!'' என்றும் சொல்கிறார்கள்.

கம்ப்யூட்டரின் பயன்பாடு மெள்ளத் தொடங்க ஆரம்பித்ததுமே எழுத்தாளர் சுஜாதாவை தனக்கு ஆலோசகராக வைத்துக் கொண்டவர் சிவசங்கரன். அப்போது உடன்வேலை பார்க்க வந்தவர்தான் கனிமொழியின் கணவர் அரவிந்தன்!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சிறு கட்டடத் தில் அலுவலகம் வைத்திருந்தவர், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேனாம்பேட்டை பகுதியில் 24 கோடி களைக் கொடுத்து, ஹரிகந்த் டவர் என்கிற கட்டத்தை விலைக்கு வாங்கி 'ஸ்டெர்லிங் டவர்’ என்று பெயர் மாற்றி னார். அதில் இருந்து அவரை 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார்கள்.

 சிவசங்கரனைப் பற்றி அவரது பிசினஸ் நண்பர்களிடம் கேட்டபோது, ''கடந்த 30 வருடங்களில் அவர் சுமார் 25 தொழில்களில் ஈடுபட்டு இருந்தார். எந்த பிசினஸையும் அவர் தொடர்ந்து நடத்தியது இல்லை. ஒரு தொழிலைத் துவக்குவார்; அதை நன்றாக வளர்ப்பார்; ஒரு லெவலுக்கு வந்ததும், அதைப் பல மடங்கு லாபம் வைத்து வேறு யாரிடமாவது விற்றுவிட்டு வேறு பிசினஸுக்குத் தாவிவிடுவார்.

உதாரணத்துக்கு, ரயில்வே ஸ்டேஷன்களில் காபி ஷாப்-களை பிரமாண்டமாகத் துவங்கி, பிறகு அதை அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டார். இதுதான் சிவசங்கரனின் ஸ்டைல். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு அடிக்கடி மாறியதால், பலத்தரப்பட்ட பிசினஸ் பிரமுகர்களுடன் மோதல், விரோதம் அதிகமானது. இதுவே அவருக்கு நிறைய தொழில்முறை எதிரிகளை உருவாக்கிவிட்டது!’' என்று சொல்கிறார்கள்.

கருணாநிதி, முரசொலி மாறன் அறிமுகம்!

1989-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, டிட்கோ நிறுவனம் சார்பாக பிரபல தொழில திபர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். திடீரென ஒரு பிரமுகர் எழுந்து, 'நான் ஒரு தொழில் அதிபர். பெயர் சிவசங்கரன். டிட்கோவில் போய்க் கடன் கேட்டால், முதலியாரா? ரெட்டியாரா? என்ன சாதி என்றுதான் கேட்கிறார்கள்.

தொழிற்சாலை துவங்குவது பற்றிக் கேட்காமல், இப்படிக் கேட்பது சரியா?’ என்று துணிச்சலாகக் கேட்க... முதல்வர் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தார். 'யாருப்பா நீ? உனக்கு என்ன உதவி வேணும்?’ என்று கேட்டு விசாரித்து, ஒன்றிரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகை செய்தார்.

சென்னை டெலிபோன்ஸ் வெளியிடும் எல்லோ பேஜஸ் டெண்டரை பயங்கரப் போட்டியில் குதித்து வாங்கினார். சென்னையைச் சேர்ந்த பிசினஸ் நிருபர்கள் இதன் பிறகுதான், சிவசங்கரனை நெருக்கமாகக்  கவனிக்க ஆரம்பித்தார்கள்.


தமிழகம் முழுக்க சிவசங்கரன் பிரபலம் ஆனது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வாங்கியபோதுதான். நாடார் சமூகத்தினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பைக் கிளப்பியது. 'முரசொலி மாறனின் நண்பரான சிவசங்கரன்தான் இதை வாங்கி இருக்கிறார்’ என்று சொல்லி தி.மு.க-வுக்கு எதிரான பிரச்னையாக மாற்றினார்கள்.

மெர்க்கன்டைல் வங்கி மீட்புக் குழுவினர் ஜெயலலிதாவைப் பார்த்து, அவரது ஆதரவைக் கோரினார். அதன்பிறகு, கணிசமான பங்குகளை மட்டும் நாடார் சமூகத்தவர்களுக்கு கொடுத்தார்.

1995-ம் ஆண்டு தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறை லைசென்ஸ் பெற சிவசங்கரன் முயற்சித்தார். 97-98-ல் சென்னையைத் தலைமையகமாகச் கொண்டு ஏர்செல் தொடங்கினார். அப்போது முரசொலி மாறனுக்கும் இவருக்குமான நட்பு அதிகமானது. ஆர்.பி.ஜி. செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரன் வாங்க முரசொலி மாறன் உதவி செய்ததாகவும் சொல் கிறார்கள். இந்த நட்பு முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு தொடரவில்லை.

சிவசங்கரனை விரட்டிய சம்பவம்!

2006-ம் வருடம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஏ.என்.சண்முகம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் (பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கின் எண் சி.சி. 191/2006) கொடுத்தார். அதில், ''சென்னை அய்யப்பன்தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகளைக் கட்டி விற்கும் திட்டத்தைச் செயல் படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார்.

அவர் பேச்சை நம்பி, 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் பவர் எழுதித் தந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது, அந்த நிலத்தை நான் சிவசங்கரனின் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்துவிட்டார்!'' என்று சொல்லப்பட்டது. 

இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார்,  ஸ்டெர்லிங் நிறுவன அலுவலர்கள் ஆறு பேர்களை கைது செய்தனர். நிறுவனத் தலைவர் சிவசங்கரனை விசாரணைக்காக போலீஸ் தேட... சிவசங்கரன் எங்கே போனார் என்று தெரியவில்லை. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் படியேறினார் சிவசங்கரன்.

ஆனால், அங்கே இவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ''இந்த வழக்கைப் பின்னணியில் இருந்து போட வைத்ததே தயாநிதி மாறன்தான்!'' என்று சிவசங்கரன் ஆட்கள் செய்தியைக் கிளப்பினார்கள்.

இரண்டு தனி மனிதர்களுக்கு மத்தியிலான மோதலாகத் தொடங்கி இன்று இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் போதுதான் இந்தப் பகை யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறது என்பதும் தெரியும்!


தெஹல்காவும் தயாநிதியும்!

''ஏர்செல் கம்பெனியின் சார்பாக 14 சர்க்கிள்களில் செயல்பட, நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தை நொண்டிக் காரணங்களைக் காட்டி, தயாநிதி மாறனின் அமைச்சரகம் தாமதப்படுத்தியது. இது குறித்து, 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி, அமைச்சராக இருந்த தயாநிதிக்குக் கடிதம் எழுதினேன்.

பலன் எதுவும் இல்லை. அதன்பிறகு, என்னுடைய ஏர்செல் கம்பெனியை, தயாநிதி மாறனின் மலேசிய நண்பரான அனந்தகிருஷ்ணின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யச் சொல்லி, எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் வேறு வழி இல்லாமல் ஏர்செல் கம்பெனியின் 74 சதவிகித பங்குகளை அனந்தகிருஷ்ணனின் மலேசிய (மேக்சிஸ் குழுமத்தின்) கம்பெனிக்குக் கைமாற்றினேன்.

என் கட்டுப்பாட்டில் ஏர்செல் இருந்தபோது வருடக்கணக்கில் முயன்றும் கிடைக்காத லைசென்ஸ், அனந்தகிருஷ்ணனின் கைகளுக்கு ஏர்செல் சென்ற ஆறே மாதங்களில் கிடைத்தது!

இந்த  உரிமங்களைக் கொடுத்த நான்கே மாதங்களில் சன் டைரக்ட் டி.வி-க்கு சவுத் ஆசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் என்ற மலேசிய கம்பெனியிடம் இருந்து 600 கோடிகள் முதலீடு வந்திருக்கிறது. இந்த நிறுவனமும் அனந்தகிருஷ்ணனின் நிறுவனம்தான். அதன் பிறகு (அதாவது, பிப்ரவரி 2008-ல் இருந்து ஜூலை 2009 வரை)  சவுத் ஆசியா எஃப்.எம். நிறுவனத்துக்கு அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் மேலும் 100 கோடியை முதலீடு செய்து இருக்கிறது...'' என்று சிவசங்கரன் சொன்னதாக 'தெஹல்கா’ செய்தி வெளியிட்டுள்ளது! 


''சிவசங்கரன் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. தவிர, மேக்சிஸ் குழுமம் சன் டி.வி-யில் முதலீடு செய்த காலகட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. தவிர சன் டி.வி-யிலும் நான் பங்குதாரர் இல்லை. ஆகையால், என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தியை தெஹல்கா வெளியிட்டு இருக்கிறது'' என்று சொல்லி தயாநிதி மாறன், தெஹல்காவுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்!


நன்றி - ஜூவி

Friday, June 10, 2011

சாந்தி அப்புறம் நித்யா -கில்மாவா? ஜொள்மாவா?- சினிமா விமர்சனம்

https://lh5.googleusercontent.com/-aJAYqxRnmMI/TX0R8BDHflI/AAAAAAAAtbs/ONtvS0NQfL0/s1600/shanthi-appuram-nithya-hot-romancing-stills%25286%2529.jpgபடத்தோட டைட்டிலைப் பார்த்ததும் விக்கி தக்காளி மாதிரி ஒரு சபலிஸ்ட் பேர்வழி சாந்திங்கற ஃபிகரை முதல்ல கரெக்ட் பண்ணி நெல்லை அல்வாவை குடுத்துட்டு நெக்ஸ்ட் டார்கெட்டா நித்யாவுக்கு பிட் போடற கதைன்னு யாராவது எதிர்பார்த்தா ஏமாந்தே போனீங்க.. 

2 கதை படத்துல.. முதல் ட்ராக் நாஞ்சில்மனோ மாதிரி ஒரு சின்சியர் லவ்வர் தன் காதலை ஒரு சுமாரான ஃபிகர்ட்ட சொல்றான்,அவ ஆள் பார்க்க படு திராபையா இருக்கா.. படத்துல 13 தடவை 13 வெவ்வேற லவ் லெட்டரை தர்றான் ( சொல்ல முடியாது, 13 தடவையும் ஒரே பேப்பரை தர்றானோ என்னவோ?)அவ கடைசி வரைக்கும் அவனுக்கு ஓக்கே சொல்லாம ஒரு புரோக்கர்ட்ட, லேடி புரோக்கர்ட்ட (மாமா) வாழ்க்கையை தொலைக்கறா..

இந்த கதையை அப்படியே தொடர்ந்தாற் போல அரை மணி நேரம் காட்னாக்கூட கல்லடி அபாயம் இருக்கறதால மெயின் கதைல கில்மா உண்டு,, அது என்னான்னா விக்கி தக்காளி மாதிரி ஒரு ப்ளே பாய் ஹாஸ்பிடல்ல இருக்கற நர்ஸூக்கு ( ஹாஸ்பிடல்ல இருந்தாத்தானே அது நர்ஸ்?) ரூட் போடறான்,பட்சி சிக்கிடுது..ஆனா தக்காளி மேட்டர் முடிச்சதும் குவாட்டர் அடிச்சுட்டு கிளம்பிடறான், (பின்னே இருந்து 10 நாள் விருந்து சாப்பிட்டு இருப்பானா?)


படத்தோட நீதி என்னான்னா பொண்ணுங்க சின்சியரா லவ் பண்ற ஆம்பளையை நம்ப மாட்டாங்க.. ஏமாத்திட்டு அல்வா குடுக்கற அயோக்கியனை நம்புவாங்க.. 

http://www.celluloidtamil.com/wp-content/gallery/shanthi-movie/shanthi-movie32.jpg
இந்த கேவலமான படத்திலும் வந்த கில்மா வசனங்கள்

1.  மகா ஜனங்களே.. இவன் என்ன தொழில் பண்றான் தெரியுமா?அவன் பண்ற தொழில் ரெண்டே எழுத்து.. ரெண்டும் ஒரே எழுத்து..  ( மாமா)

2. அடேய் பாவி.. இப்போ எல்லாம் இதுலயும் அக்கவுண்ட் வைக்க ஆரம்பிச்சுட்டீங்களாடா?

3. இவன் என்ன கேரக்டர்னா பொண்ணுன்னு பேப்பர்ல எழுதி கீழே போட்டா  போதும், பையன் பேப்பர் பின்னாலயே போயிடுவான்..


4. எனக்கு 2 ரூபா தேவைப்படுது.. 

இவ்ளவ்தானா? உனக்காக இது கூட செய்ய மாட்டேனா?இந்தா 2 ரூபா...


அடப்பாவி.. நான் கேட்டது ரெண்டாயிரம் ரூபா.. 


5. பச்சை ( டஞ்சன்) ஃபிகர் கிடைச்சாலே பம்முவான்,இப்படி பச்சைக்கிளி மாதிரி பொண்ணு கிடைச்சா...?

6. காலம் கெட்டுக்கிடக்கு மேடம்.. அதனால தான் எலக்ட்ரீசியனைக்கூட நம்பாம நானும் உங்க பாதுகாப்புக்கு வந்தேன்

ஆமாமா , எல்லாம் பொறுக்கிப்பசங்களா இருக்காங்க.. 

7.  டேய். உனக்கு தண்ணி வேணுமா?


இருந்தா குடு.. 

இரு , பார்த்துட்டு வர்றேன்.. 

ம் ம் , நல்லா பார்த்துட்டு வா.. அவ டிரஸ் மாத்தறதை.. 

8. காஃபி சாப்பிடறீங்களா?

வேணாம் மேடம், வழில தான் சாப்பிட்டுட்டு வந்தோம்.. நீங்க சாப்பிடுங்க.. 

அடப்பாவி, இவன் பால் சாப்பிட ஆசைப்பட்டு நமக்கு கிடைக்க இருந்த காஃபில கை வெச்சுட்டானே.. 

9. நான் தப்பு பண்றேனா?ன்னு செக் பண்ண அவரு நிறைய தப்பு பண்ண ஆரம்பிச்சுட்டாரு... 

10. நீ செம அழகுடி.. நான் பார்த்த ஃபிகர்லயே நீ தான் செம அழகு.. 

அட நீ கூட இப்படி பேசுவியா?

ஹூம், அதான் வருத்தம்.. பேச மட்டும் தான் முடியுது.. 

11. என்னடா? ரத்தத்தாலயே எழுதி இருக்கே? வலிக்கலை?

அவ குடுத்த வலியை விட இது ஒண்ணும் மோசம் இல்லை.. 

12.  நீ வர மாட்டேன்னு நினைச்சேன்.. 

ஏன்?

2 மாசத்துல வேற எவ பின்னாலயாவது சுத்திட்டு இருப்பேன்னு நினைச்சேன்.. 

அடிப்பாவி.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS9T3hAgxobOlcg9iF2GdZxxCIXK3lQbSix875fKvObG5IX7crhHpQl15LRqcAiioaTuWRqarf1YaIoLFzxICAE7YfqxrNMbJ-che-Wbogcea3DsHD0KEeq1kH54tNc9IFqghaW1GCub1z/s400/Shanthi-Tamil-Movie-Hot-gallery-6.jpg
இந்த கில்மா படத்துல இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிகள்

1. ஒரு ஃபிகர் வீட்டுக்கு போறப்ப நாம அவளை கரெக்ட் பண்ண ட்ரை பண்றோம்னு அவளுக்கு தெரிஞ்சிட்டா அவ கிச்சன் ரூம்ல இருந்து ஹால்க்கு அடிக்கடி எட்டி பார்ப்பா.. 

2. நீங்க வர்ற நேரம் பார்த்துத்தான் பாத்ரூம்ல குளிப்பா.. (கதவை தாழ் போடாம)

3. நீங்க காலிங்க் பெல்லை அடிச்சா.. வெயிட் பண்ணுங்க அப்டின்னு சொல்லி நல்லா டிரஸ் பண்ணிட்டு வர மாட்டா.. அப்டியே ஓடி வருவா.. (வித் டர்க்கி டவல்)

4. ஹால்ல அவ உங்க கூட இருக்கறப்ப நீங்க எதுவும் ட்ரை பண்ண வேணாம். ஏன்னா முகத்தை முகம் நேருக்கு நேரா பார்க்க வேண்டி இருப்பதால் தயக்கம் வரும், அதனால கிச்சன் ரூம்ல அவ சமையல் பண்றப்ப நைசா பின்னால இருந்து மெதுவா கட்டிப்படிக்கலாம்.. ( ஏன்னா செருப்பு வாசலுக்கு வெளில இருக்கும், விளக்குமாறு வாசலுக்கு உள்ள ஹால்ல இருக்கும் ,சேஃப்டி.. )

5. கரெக்ட் பண்ணுன ஃபிகரை கடைசி வரை கரெக்ட் பண்ணிட்டே இருக்கனும் ,கழட்டி விட்றக்கூடாது.. பாவம் செஞ்சாக்கூட அதுக்குள்ள சப் டிவிஷன் பாவம் தான் கரெக்ட் பண்ணுன பிறகு அந்த ஃபிகரை கழட்டி விடறது..

6. ஒரு ஃபிகருக்கு லவ் லெட்டர் குடுக்கறப்ப அவ தூன்னு துப்பிட்டா விடு கழுதைன்னு அடுத்த ஃபிகரை பார்க்க கிளம்பிடனும்.. அதே ஃபிகரை துரத்திட்டே இருக்கக்கூடாது.. ..

7, க்ளினிக் போறப்ப டாக்டர் இல்லாதப்ப & நர்ஸ் இருக்கும்போது போகனும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilgbGJk9ZhVLTBXGkEhx9-f_yZKYeob3vSNNAL7TNkFfrQoNPq_e3_0T73rKzOeTBt_OmrE380vdJw7eEFXxFTCI_f2aZsWJt8dIOtW-XzyN-3-To1jG06oF7bzgwt_q6LTLj9bT9Hfws/s1600/shanthi-movie-stills-020.jpg
ஜிக் ஜாக் கதை சொன்ன படத்திலும் சில லாஜிக் இல்லா மேஜிக்..


1. எந்த ஊர்ல நர்ஸ் வெள்ளை யூனிஃபார்ம் போடாம சேலை கட்டி இருகு? அதுவும் பேக் லோ யூ நெக் ஜாக்கெட் போட்டுட்டு?


2. நர்சோட வீடு-  சாரி பங்களா அவ்வளவு ஆடம்பரமா இருக்குமா?

3. கில்மா படத்துல வர்ற ஹீரோயின்கள் எல்லாம் டெஸ்ட் டியூப் பேபிஸா இருக்காங்களே? எப்படி? அம்மா, அப்பா, புருஷன் யாருமே இருக்க மாட்டாங்களா?

4. இந்த காலத்துல கால் லிட்டர் பால் பாக்கெட் முதல் ஒரு லிட்டர் பால் பாக்கெட் வரை வந்தாச்சு.. அப்பப்ப பால் வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.ஆனா ஹீரோயின் ஒரு பாட்டில்ல பால் சேமிச்சு வைச்சிருக்கு.. அது ஏன்? ( ரொம்ப முக்கியம்..)

5. நெற்றில காயம்னு வந்த பேஷண்ட்டை நெற்றியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் அந்த கில்மா நர்ஸ் தொடுதே அது ஏன்? ( ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை-நன்றி எம்.ஜி .ஆர்@ஆயிரத்தில் ஒருவன்)

6. ஒரு ஃபிகருக்கு ஒருத்தனை பிடிக்கலைன்னா பிடிக்கலைனு ஓப்பனா சொல்வா. எந்த கேனக்கிறுக்கியாவது ( நிஜமான கேனக்கிறுக்கிகள் மன்னிக்க) 2 மாசம் என்னை பார்க்காம இருந்தா உன்னை லவ் பண்றேன்னு சொல்வாளா?


7. மாமா வேலை பார்க்கும் ஆள் இன்னும் கல்யாணமே ஆகாத தன் வருங்கால மனைவியை கூட்டிக்குடுக்க நினைப்பானா?
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஹீரோயின் செலக்‌ஷன், அவரை கண்ணியமாக காட்டியது..

2. ஒரு சீன் கூட மருந்துக்கு கூட  இல்லாத படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கியது.. 

3. யூ டியூப்ல சில க்ளிப்பிங்க்ஸை காட்டி பரபரப்பு ஏற்படுத்தியது.. 

4. ஒவ்வொரு ஊர்லயும் 2க்கும் மேற்பட்ட தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி செம படம் போல எனும் மாயையை ஏற்படுத்தியது..

5.போஸ்டர் டிசைனை கிளாமராக வடிவமைத்தது.. 

மொத்தத்துல படத்துல சீன் கிடையாது.. ஆனா தக்காளி மாதிரி ஃபிகரை மடக்கற டைப் பசங்களுக்கு பாடம் எடுக்கறாங்க ஜனங்களே.. கண்டு ரசியுங்கள்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் போட்டா வீடு தேடி வந்து உதைப்பாங்க

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் போட்டா ஃபோன் பண்ணியே திட்டுவாங்க.. 

இந்த கில்மா படம் ஈரோடு அன்ன பூரணி, ஸ்டார் 2 தியேட்டர்ல ஓடுது..

ஸ்போர்ட்ஸ் நாலெட்ஜே இல்லாத மாக்கான்னு என்னை யாரும் இனி சொல்லிட முடியாது..

female Tennis Stars


Pretty Tennis Players
Pretty Tennis Players
Pretty Tennis Players
Pretty Tennis Players
Pretty Tennis Players
Pretty Tennis Players
Pretty Tennis Players
Pretty Tennis Players
Pretty Tennis Players
Pretty Tennis Players
Pretty Tennis Players
Pretty Tennis Players
Pretty Tennis Playersa


டிஸ்கி- ரொம்ப நாளா என் மேல வைக்கப்படும் குற்றச்சாட்டு எனக்கு ஸ்போர்ட்ஸ் ரிலேட்டட் போஸ்ட் போட தெரியல.. அப்டின்னு.. அது நிஜம் தான்.. எனக்கு ஆரம்பத்துல இருந்தே விளையாட்டுக்கள்ல நாலெட்ஜ் பத்தாது.. பொதுவாவே நாலெட்ஜ் கம்மி தான் ஹி ஹி . இருந்தாலும் எனக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்க இப்படி இரு பதிவு.. ஹி ஹி 

Thursday, June 09, 2011

பூவைக்கு பூவை சூடும்போது....அய்யய்யோ இன்னாபா ஆச்சு?


1. மெடிக்கல் காலேஜ் ஃபிகர்கள் காதலில் விழுவது சிரமம் ஏன் எனில் தினமும் உடற்கூறுகளை பிரித்து மேய்வதால் அவர்களுக்கு உடல் கவர்ச்சி அலுக்கிறது#லவ்வாலஜி

---------------------



2. மாப்ளைக்கு கவர்மெண்ட் வேலையா? சொந்த வீடு இருக்கா? என விசாரித்த பின்னரே கேரக்டர் எப்படி என விசாரிக்கிறார்கள் பெண் வீட்டார்#சைக்காலஜி


-----------------------------




3.ஆண் சிரிக்கையில் முகம் பொலிவு பெறுகிறது,அதுவே பெண் சிரிக்கையில் உடல் முழுவதும் அழகு பெறுகிறது#சைட்டாலஜி

------------------- 



4. ஆணுக்கு கேஷூவல் டிரஸ் லுங்கி,பெண்ணுக்கு கேஷுவல் டிரஸ் நைட்டி,ஆனால் வெளியே செல்லும்போது அணிந்தால் யாராலும் விரும்பப்படாது@டிரஸ்ஸாலஜி


---------------------



5. மெஜாரிட்டி பெண்கள் வட்டப்பொட்டுக்கு மாறி விட்டதால் நீளச்சாந்து வைத்தால் மைனாரிட்டிகள் மயிலாரிட்டிகளாக வாய்ப்புண்டு#டிப்ஸாலஜி


---------------------






6. பரிசுப்பொருளாக எதைக்குடுத்தாலும் அடிஷனல் அட்டாச்மெண்ட்டாக பூவைக்கு கூந்தலில் ஒரு பூவை சூடி விடவும்#கிஃப்டாலஜி

---------------------



7. நேருக்குநேராக முகம் பார்த்து பழகிய சிநேகிதியை விட முகம் பார்க்காமல் சேட்டிங்கில் பழகிய சிநேகிதி நெருக்கம் ஆகி விடுவது மனித மன விசித்திரம்
#சேட்டிங்காலஜி

----------------------




8.ஜிமிக்கி அணிந்த பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்.ஆனால் அவர்கள் ஆண்களுக்குப்பிடிக்காத பெரிய சைஸ் ரிங்கை காதில் மாட்டி கடுப்படிக்கிறார்கள்#லேடீஸாலஜி

-------------------



9. பொய்யான ஆண்களை சீக்கிரமாக பெண்கள் நம்பி விடுவதும், உண்மையான ஆண்களுக்கு 1008 டெஸ்ட் வைப்பதும் பெண்களின் பலகீனங்கள்#லேடீஸாலஜி


-------------------



10. நம்ம 2 பேருக்கும் ஒரே ரசனை என்றோ எதிர் எதிர் துருவங்கள்தான்  ஈர்க்கும் என்றோ பொய் பிள்ளையார் சுழியுடன் காதல் அத்தியாயம் துவங்குகிறது#லவ்வாலஜி


---------------







நாளைய இயக்குநர் - த்ரில் கதைகள் - விமர்சனம்

இன்னைக்கு தொகுப்பாளினி  ஓரளவு சுமாரான நைட்டி போட்டுட்டு வந்தாங்க.. (நான் பார்த்ததிலேயே மிக மோசமான ஃபிகர் இவர் தான் ஹி ஹி )ஹாய் மதன் வந்ததும் ஒரு டிஸ்கஷன்.டிஜிட்டல் டெக்னாலஜி வந்த பிறகு மேக்கிங்க்ல தரம் குறைஞ்சிடுச்சா? என்பதே அந்த கேள்வி. கோட்ஜில்லா பட டிஸ்கஷன்ல சில குறைகள் இருந்தப்ப டைரக்டர் கிட்டே ஆளாளுக்கு எடிட்டிங்க்ல பார்த்துக்கலாம், டிஜிட்டல்ல பார்த்துக்கலாம் அப்டின்னு தட்டிக்கழிக்கறாங்களாம்..

ஜூராசிக் பார்க் படத்துல அந்த மாதிரி ஒரு பிராணி இல்லாதப்பவே இருக்கற மாதிரி ஒரு இமேஜினேஷன் மனசுக்குள்ள கொண்டு வந்து பயந்த மாதிரி நடிக்கனும்.அது கஷ்டம் என்றார்..

பென்ஹர் படத்துல ஒரு சீன்ல ரேஸ் கார் அவங்களையும் அறியாம இடம் பிடிச்சதையும் அதை ஒண்ணும் பண்ண முடியாம போனது பற்றியும் குறிப்பிட்டாங்க..

www.forwards4all.com
1. அருண்ராஜா காமராஜர் - THE DARK

வாய் பேச முடியாத பொண்ணு ,அவங்கம்மா மொத்தம் 2 கேரக்டர். அந்த பொண்ணுக்கு இருட்டுன்னா பயம்.. அது ஞாபகம் இல்லாம வெளில கிளம்பறப்ப அம்மா ஆல் லைட்ஸ் ஆஃப் பண்ணிட்டு போறாங்க.. உடனே அந்த பொண்ணு ஆ என அலறுது.. அப்பத்தான் அம்மாவுக்கு ஞாபகம் வருது.. உடனே ரிட்டர்ன் ஆகி அவளை சமாதானப்படுத்திட்டு அப்புறமா  வெளியே கிளம்பறாங்க.. 

அவங்க போனதும் மறுபடி கரண்ட் கட் ஆகுது.. ( கலைஞர் டி வி லயே இப்படி கரண்ட் கட் ஆகற சீன் வருதேன்னு யோசிச்சா அட,..  இப்போ நடக்கற ஆட்சி அம்மா ஆட்சின்னு நினைவு வருது.. )ஆனா இந்த டைம் அந்த பொண்ணு பயப்படலை.. விளக்கு ஏற்றி வெச்சு( ஒரு குத்து விளக்கே இன்னொரு குத்து விளக்கை ஏற்றுகிறதே அடடே ஆச்சரியக்குறி.. )ஏதோ ஒரு புக் படிக்கறாங்க.. 

அந்த புக் ஆதிகாலத்தில் மனிதன் எப்படி எதேச்சையாக நெருப்பை கண்டு பிடிக்கிறான் என்பது..

இருள் இவ்வுலகின் முடிவல்ல ஆரம்பம் என்ற பின் குரலோடு படம் முடியுது.. 

படம் ஏதோ சொல்ல வருது.. ஆனா இன் கம்ப்ளீட்.. இதை கே பி சார் ரொம்ப நாசூக்கா சொன்னாரு.. ஆதிகால நிகழ்வு, நிகழ்கால நிகழ்வு இரண்டுக்குமான லிங்க் ஈஸ் நாட் சோ குட் என்றார்..

ஹாய் மதன் பேசுனப்ப 2 டைம் சீன் சேஞ்சிங்க்க்காக இருட்டை காட்றீங்க.. அதுக்கும் பவர் கட்டுக்கும் என்ன வித்தியாசம்? சாதா ரசிகன் குழம்ப சான்ஸ் உண்டு என்றார்.. என் பதில் நோ சான்ஸ் எனபதுதான்.. அதான் சீன் சேஞ்சுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் குடுக்கறாரே?

3வதா வந்த பிரதாப் சார் எடுத்த எடுப்புலயே அந்த ஊமைப்பொண்ணு அப்படின்னு ஆரம்பிச்சார்.. நான் கடுப்புல ரிமோட்ல சேனல் மாத்திட்டேன்.. ஸ்டேஜ் மேனரிசம் என்ற ஒன்றை பிரதாப் சார் கத்துக்கறது நல்லது.. பிசிக்கலி சேலஞ்சுடு,மவுனமொழிபேசுபவர்கள்,என எத்தனையோ கண்ணிய வார்த்தைகள் இருக்கறப்ப.. ஹூம்.. திருந்த மாட்டாங்கப்பா.. 


www.forwards4all.com
2. அருண்குமார் - நிழற்படம்

இந்தப்படத்துல என்னைக்கவர்ந்த முக்கிய அம்சம் ஹீரோயினின் டிரஸ்ஸிங்க்சென்ஸ்.. ஓப்பனிங்க் சீன்ல போட்டுட்டு வந்த டிரஸ்க்கு மேட்சா ஸ்டெட்,செப்பல் முதற்கொண்டு கலக்குனாங்க.. அப்புறம் 4 வதா போட்ட டிரஸ் சோபா கலர்ல ஆரஞ்ச் டிரஸ் போட்டுட்டு வந்து அசத்துனாங்க.. 

வீட்ல தனியா இருக்கற பொண்ணுக்கு வரிசையா க்ரீட்டிங்க் கார்டு வருது.. அதுல அவ காதலனுடன் இருந்த ஃபோட்டோஸ் இருக்கு. தொடர்ந்து பெட்ரூம்ல ஒரு கார்டு.. உடனே அவ காதலனுக்கு ஃபோன் பண்றா.. அவன் வர்றான்.. 2பேரும் டிஸ்கஸ் பண்றாங்க.. 

2 பேரும் ஒரு முடிவெடுத்து ஒரு ஆள் வீட்டுக்கு போறாங்க.. அங்கே அவன் தனியா இருக்கான்.. அவன் இவங்களை உபசரிக்க ஏதோ டீ காபி போட உள்லே போறப்ப இவங்க டேபிள், ஃபிரிட்ஜ் எல்லாம் செக் பண்றாங்க.. அவங்களுக்கு அனுப்புன அதே மாதிரி கார்டு அங்கேயும் இருக்கு.. 

அவன் தான் அந்த ஆள்னு தெரிஞ்சுக்கிட்டு ஓடி வந்துடறாங்க.. 

அப்போ நியூஸ்ல சொல்ராங்க.. சீரியல் கில்லர் தொடர்ந்து கொலைகளை செய்து வருகிறான்... அவன் கொலைகளை செய்யும் முன் அவர்களுக்கு ஒரு ஃபோட்டோ அனுப்புகிறான்.... 

அவ்வளவுதான் படம் ..

கே பி சார் கமெண்ட் - படம் இன் கம்ப்ளீட்டா இருக்குன்னு சிலர் சொலலாம். அதே சமயம் அப்படி காட்டுனதுல தான் சஸ்பென்ஸ் நிக்குதுன்னும் சொல்லலாம்.. எனி வே இட் ஈஸ் எ குட் ஃபிலிம்னார்.. 

பிரதாப் சார் பேசறப்ப   THERE IS NO MOTIVATION.. WHAT IS THE FUNDAMENDELனு கடைசி வரை நீங்க சொல்லவே இல்லை அப்டீன்னார்.. 

ஹாய் மதன் சார்.. படம் ஓக்கே இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்னார்.. 

என் கருத்து என்னான்னா சஸ்பென்ஸ் படம்னா அவ்வளவு தான் சொல்லனும்.. இது இது இன்ன என படம் வரைந்து பாகங்களை குறிக்க முடியாது.. உள்ளங்கையை மூடி இருக்கும் வரை தான் சஸ்பென்ஸ்.. திறந்துட்டா ப்ச்.. சப்னு போயிடும்.. இது காதலிக்கு மட்டும் இல்லை.. சஸ்பென்ஸ் படத்துக்கும் பொருந்தும்.. 

இந்தப்படத்துக்கு பெஸ்ட் மியூசிக் அவார்டு கிடைச்சுது.. 

www.forwards4all.com








3. ரங்கநாதன் - தா காட்டு

திருநெல்வேலி,கன்யாகுமரி போன்ற தென் மாவட்டங்களில்  தண்ணி காட்டு என்ற சொலவடைக்கு தா காட்டு என்பார்களாம்..

போலீஸ் லாக்கப்ல ஒரு ஆளை அடிக்கறப்ப அவன் மேல் லோகத்துக்கு டிக்கெட் வாங்கிடறான்.உடனே போலீஸ் டிஸ்கஷன்.. சில நாட்களுக்கு முன்னால் டிராஃபிக் டைம்ல தன்னை எதிர்த்துப்பேசிய ஆளை இந்த கொலை கேஸ்ல மாட்டி வைக்க திட்டம் போடுது.. 

அவனை கண்டு பிடிச்சு அவன் காருக்குள்ள பிணத்தை வெச்சுட்டு வந்துடறாங்க..  அவன் காரை கண்காணீக்கறாங்க.. அவன் டெட்பாடியை மறைக்கறப்ப டகார்னு கையும் களவுமா பிடிச்சுடலாம்கறது அவங்க பிளான்.. 

ஆனா அவன் கலைஞர் மாதிரி எத்தனுக்கு எத்தன்.. அவங்க ஜீப்லயே பாடியை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறான்..

இந்த நம்ப முடியாத கதைக்கு சிறந்த படம் அவார்டு குடுக்கறாங்க.. அய்யோ ஹய்யோ..

www.forwards4all.com
இந்தப்படத்தை எடுத்த இயக்குநர், பாராட்டிய வி ஐ பி களுக்கு நான் முன் வைக்கும் கேள்விகள்

1. போலீஸ் லாக்கப்ல ஆள் இறந்துட்டா வழக்கமா தூக்குல தொங்க விடுவாங்க.. அல்லது என்கவுண்ட்டர்ல  போட்டுட்டதா சொல்லிடறது தான் உலக வழக்கம்.. இப்படி தேவை இல்லாம டெட் பாடியை தூக்கிட்டு ரோடு ரோடா போலீஸ் அலையுமா?

2. ஃபுல் மப்புல இருக்கும் போலீஸ் ஆஃபீசர் டிரங்க்கன் டிரைவிங்க்கை பற்றி கேள்வி கேட்பதாகவும், அதை டிரைவர் கேலி செய்வது போலும் சீன் அமைத்திருப்பது நம்ப முடியவில்லை.. 

3. போலீஸ் வேனுக்கு டெட் பாடி மாற்றும் நேரம் குறைந்த பட்சம் 2 நிமிடங்கள் ஆகும், ஆனால் போலீஸ் ஆஃபீசர் வாய் கொப்புளிப்பது 20 செகண்ட் மட்டுமே.. அந்த கேப்பில் அவர் எப்படி தன் பங்களாவிலிருந்து 2 மாடி இறங்கி வந்து இத்தனை வேலையையும் செய்திருக்க முடியும்?

4. டிராஃபிக் இன்ஸ்பெக்டரா? க்ரைம் இன்ஸ்பெக்டரா? கேரக்டர் வடிவமைப்பில் குழப்பம்..  டிராஃபிக் இன்ஸ்பெக்டரா இருந்தா அவர் எப்படி ஸ்டேஷன்ல லாக்கப்ல கைதியை அடிக்க முடியும்? க்ரைம் இன்ஸ்பெக்டரா இருந்தா அவர் எப்படி சிக்னல்ல நின்னு பைக்கை ,காரை நிறுத்தி டிரங்க்கன் டிரைவ் சோதனை போட முடியும்?