Tuesday, February 14, 2012

நந்தியா வட்டைப்பூவும், உன் புன்னகையும் - கவிதை

உடல் மண்ணில் புதையும் வரை ஒரே ஒரு உயிரின் நினைவுகளை மட்டும் நெஞ்சில் சுமந்து கொண்டு வாழும் உண்மையான காதலர்களுக்கு வாழ்த்துகள்..

 டீன் ஏஜில் நான் எழுதிய சில மொக்கை கவிதைகள்

http://images1.fanpop.com/images/photos/1300000/Love-Wallpaper-love-1370449-1024-768.jpg


பெண்ணே! நீ சிரித்தாய்!

பெண்டாட்டி தாசர்களுக்கு முல்லையும் மல்லிகையும் வாங்காத

நினைவு வந்தது.. 


பிரம்மச்சாரிகள் பத்து பேர் பைத்தியம் ஆனார்கள்.. 

பஸ் ஸ்டேண்டில் பஸ் ஆக்சிடெண்ட்.. 

கன்னிப்பெண்களுக்கு
உன் சிரிப்பிற்கு ஈடான முத்து மாலை வாங்கி விட வேண்டும் என்ற 

அழுத்தமான அபிப்ராயம்.. 

தூக்குத்தண்டனைக்கைதிகளுக்கு

கடைசி ஆசையாய்

உன் சிரிப்பைக்காண வேண்டும் என்ற 

அடக்க முடியாத ஆர்வத்துடிப்பு.. 


நந்தியா வட்டைப்பூ உன் புன்னகை கண்டு பொறாமையில்
ஒரு மாற்று கருத்தது!!


------------------------------------

http://tipstrickstutorials.com/wp-content/uploads/Love_and_Romance_Wallpapers109.jpg

கண்மணி! உன்

கண்களைத்திற! வீட்டில் 

கரண்ட் கட்


----------------------------------------

வீட்டில் விளக்கு அணைந்து விட்டது , 

கொஞ்சம் சிரி பெண்ணே!

தீப்பெட்டி தேட வேண்டும்!

-------------------------------------------

ஈருடல் ஓர் உயிர் ஆகினர்.

. மீண்டும் ஓரு உயிர்!

---------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlc_ZnIrrNQMEF_oNpQ1hPE4slhOx5bL2ybqoU7ZjbkcajHICoyRscxNz8vopCwvn1EXVigose3CrRQa84QSI-8eQ1XL__6bYzOyBTN9aZY9z37S5zS49TRQBDsRpJF4_NJElb9mOstmvM/s1600/Love+Wallpaper+Blog+%252822%2529.jpg

கண்ணே!

நான் எனது கண்களைக்கூட சிமிட்டுவதில்லை.....

உன் பார்வைப்பரிமாறல்களை

இழந்து விடக்கூடாது என்பதற்காக.. 

ஆனால் நீயோ உன் 

கண்களுக்குத்திரை போட்டுக்கொண்டு இருக்கிறாய்.. 

ஓவியப்போட்டிக்கு உன்னை வரைந்து அனுப்பினேன்.. 

விலாசம் மாறி விட்டது என்று கவிதைப்போட்டிக்கு 

அதை அனுப்பி விட்டனர்..


கவிதையாய் இருந்த நீ 

கல்லாய் மாறிய மர்மம் என்ன?

Monday, February 13, 2012

லவ்வு, ஜிவ்வு, ஜவ்வு - லவ்வர்ஸ் டே, லவ்வர்ஸ் நைட் ஸ்பெஷல் ஜோக்ஸ்

http://s.chakpak.com/se_images/14502405_-1_564_none/parvathy-omanakuttan.jpg1. இளங்குமரன் - காதலர்தினம் மாதிரி கழட்டிவிடும் தினம்னு ஏதாவது வைக்ககூடாதா??!

யூத் குமார் - 2ம் 1 தான்யா

-----------------------------

2.ஃபிகர் என்ப ஏனை ஜிகிடி என்ப இவ்விரண்டும் டகால்டி என்ப வாழும் உயிர்க்கு # லவ் லொள்ளுவர் ஃபிப்ரவரி -14

------------------------------

3. RT  செய்யாதாரை ஒறுத்தல் அவர் நாண அவர் ட்வீட்ஸை அடிக்கடி RT செய்து விடல் # ட்விட்டராலஜி

----------------------------

4. புருஷன் பேச்சை பொண்டாட்டிங்க ஏன் கேட்கறதே இல்லை?

ஏன் கேட்காம? நகை கேட்கறாங்க, புடவை கேட்கறாங்க,சொந்த வீடு கேட்கறாங்க,

----------------------------------

5. டாஸ்மாக் போனா டக்கீலா, லவ்வர்ஸ் பார்க் போனா கோகிலா, நடராசா தியேட்டர் போனா ஷகீலா # லா காலேஜ் லத்திகா

-------------------------------

6. திருப்பதில குடி இருக்கற பொண்ணுங்க எல்லாம் லட்டு ஃபிகர்ஸூம் இல்ல, பீகார்ல குடி இருக்கற பொண்ணுங்க எல்லாம் அட்டு ஃபிகர்சும் இல்ல

--------------------------------

7. டியர், டேட்டிங்க் போலாமா?

வேணாம் சதீஷ், அப்புறம் என் டேட்   டிங்க் டிங்க் டின் டின்

-----------------------------

8. ஃபிப்-14 அன்று காதலை சொல்ல வரும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வயதுச்சான்றிதழ்,நன்னடத்தை சான்றிதழ், வருமான சான்றிதழ் உடன் நேரில் வரவும்

------------------------------

9. டியர், நான் 3 மாசம் முழுகாம இருக்கேன்..

ஜாக்கிரதையா இருந்துக்க தெரியாத உன்னை லவ்வுனதை நினைச்சு நான் வெட்கப்படறேன், வேதனைபடறேன்


------------------------------------

10. பசங்க எல்லாம் நாளைக்கு டி பி மாத்தலாமா?ன்னு திங்க்கிங்க், பொண்ணுங்க ஆளையே மாத்திடலாம்னு திங்க்கிங்க் # நீதி - பெண் புத்திசாலி

-----------------------------

http://www3.pictures.gi.zimbio.com/Bright+Star+Premiere+2009+Cannes+Film+Festival+2I7LxxyXFcul.jpg

11. ஒருவர் பார்க்கும் தொழிலை முகம் பிரதிபலிக்குமா?

நோ சான்ஸ், எழிலை மட்டுமே முகம் காட்டும், தொழிலை எப்படி காட்டும்?

-------------------------------

12. நயன் தாரா - அயோக்கிய பசங்களா இருந்தா ஆளை மாத்துறதுல ஒரு தப்பும் இல்லே!

புல் புல் தாரா - உங்கள் வீட்டில்  வருஷா வருஷம் தலை தீபாவளி!

-------------------------------

13. டியர், நீ நூடுல்ஸ் மாதிரி ஒல்லியா இருக்கே, ஐ லைக் யூ..

  வாடா வா.. நீ நொந்து நூடுல்ஸ் ஆகப்போறே..

----------------------------

14.டியர், நான் கெட்டவன் தான், ஆனா நீ என்னை திருத்துனா நான் நல்லவன் ஆகிடுவேன்..

சாரி, அதுக்கு எனக்கு நேரம் இல்ல, அங்கே பாரு க்யூ .. பை பை

--------------------------------
15. டாக்டர், இவர் என் காதலர், நல்லவரா? கெட்டவரா? செக் பண்ணனும்.

. ஓகே மேடம், செக் பண்ணி சொல்றேன், ஆனா ஏன் மாசாமாசம் புது ஆளோட வர்றீங்க?

-----------------------------------

16. டியர், நாளைக்கு லவ்வர்ஸ் டே கொண்டாடலாமா? 


வேணாம், செம போர்,லவ்வர்ஸ் நைட் வேணா கொண்டாடலாம்.. வாட் யூ சே? # ஜிஞ்சனக்கு ஜனக்கு

-------------------------------------------

17. பச்சை கலர் டிரஸ் போடச்சொன்னா ஏன் கிளிப்பச்சை கலர்ல டிரஸ் போட்டுட்டு வந்திருக்கே? 

ஹி ஹி அப்பவாவது கிளி மாதிரி காதலி செட் ஆவாளா?னு பார்க்க

---------------------------------

18. டியர், நம்ம காதல் ஹைக்கூ காதல்-னு சொல்றியே, அப்டினா?

ஹா ஹா அதுக்கு ஆயுள் 3 மாசம் தான் டாட்டா பை பை

-------------------------------

19. இன்ஸ்பெக்டர் -லவ்வர்ஸ் டே அன்னைக்கு அந்த பொண்ணு கையை பிடிச்சு இழுத்தியா? 

சார், இது 2012 இன்னுமா கையை பிடிச்சு இழுத்துட்டு இருப்பாங்க.. ?

----------------------------

20. டியர், பீச்ல எதுக்காக ஒத்து ஊதற ஆளை கூட்டிட்டு வந்திருக்கீங்க? 

நமக்குள்ள “ஒத்து” வர்லைன்னா பிரிஞ்சிடலாம்னு சொன்னியே? அதான்

-----------------------------

http://kaw.stb.s-msn.com/i/FB/5E871066B1466265863F3AA1E04BC1.jpg

தோனி - மழலை வளர்ப்பு, பெற்றோர் பொறுப்பு, திரைக்கதை சிறப்பு - சினிமா விமர்சனம்

http://i.indiaglitz.com/tamil/news/dhonitf270112_1.jpg

பெற்றவர்கள் அனைவரும் தங்கள் மழலை முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் அதற்கு அவர்கள் கையாளும் வழி , போகும் பாதை சரியானது தானா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.. சமூகத்தில் உள்ள கல்வி போதிக்கும் முறை குறித்தும்,பெற்றோர்- வாரிசுகளின் தவறான புரிதல்கள் ( MISSUNDERSTANDING) குறித்தும் தீர்க்கமாக அலசும் ஒரு ஆரோக்யமான தமிழ் சினிமா தான் தோனி..

மனைவியை இழந்த, 2 மழலைகளை வளர்க்க வேண்டிய பொறுப்புள்ள ஒரு அரசு அலுவலரான பிரகாஷ் ராஜ் தன் மகன் கிரிக்கெட் வீரனாகும் ஆசையை உதறித்தள்ள சொல்லி விட்டு  வலுக்கட்டாயமாக கல்வியை திணிக்கிறார். பையனுக்கு படிப்புல ஆர்வம் இல்ல.. அவன் கவனம் பூராவும்  கிரிக்கெட்லயே இருக்குது.. இதை கண்டிக்கும் விதமான ஒரு அசம்பாவிதமான அறையில் ( பளார்) பையன் தலைல அடிபட்டு கோமாவுக்கு போயிடறான்.. 

பையன் நல்லா இருந்த வரை அவனை கரிச்சு கொட்டிட்டு இருந்த அப்பா அவன் கோமாவுக்கு போனதும் பையன் பிழைச்சா போதும்கற நிலைமைக்கு வந்துடறார்.. தன் பையனை மக்கு ஆக்கியதில் கல்வி அமைப்புக்கும் பங்கு உண்டு, கல்வி முறை மாறனும்னு சி எம் கிட்டே க்ளைமாக்ஸ்ல வாதாடி ஜெயிக்கிறார்.. பையனும் குணம் ஆகி கிரிக்கெட் வீரன் ஆகறான்.. இது தான் கத..

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் என்ற லேபிளை விட தமிழ் நாட்டிலேயே ஆரோக்யமான சினிமா தரும் ஆர்வலர் என்ற தயாரிப்பு முகத்தை பெற்ற பிரகாஷ்ராஜைத்தான் எல்லாரும் ரசிக்கறாங்க.. மொழி, பயணம்,அபியும் நானும் போன்ற வித்தியாசமான வெற்றிப்படங்களைத்தந்தவர் இயக்கி இருக்கும் முதல் படம் இது.

http://www.akhilandhra.com/slide/Radhika-Apte6.jpg

மகாநதி படத்தில் கமல் கையாண்ட திரைக்கதை உத்தியை இவரும் கையில் எடுத்துக்கொண்டு மிகத்தெளிவான திரைக்கதையில் சொல்ல வந்த கருத்தை நச்சென்று சொல்லி இருக்கார்.. இயக்குநரா அவர் சபாஷ் வாங்கற இடங்கள் பல.. 

வெறும் நடிகரா இருக்கும்போதே சில இடங்களில் வேண்டும் என்றே ஓவர் ஆக்டிங்க் பண்றவர் இதுல டைரக்டர், கம் புரொடியூசர் என்பதால் சில இடங்களில் அடக்கி வாசித்தும், சில இடங்களில் ஆர்ப்பாட்டமான நடிப்பையும் வழங்கி இருக்கார்.. 

ராதிகா ஆப்தே தான் ஹீரோயின் .. பனை மரத்தில் இருந்து இறக்கப்பட்ட பத நீரை வாழை இலையில் ஊற்றி சூரியன் வெளிச்சத்தில் வைத்தது போல் மிக தெளிவான , அழகான, அமைதியான முகம்.. மிதமான ஒப்பனையில், கண்ணியமான தோற்றத்தில், நளினமான ஆடை வடிவமைப்பில் அசத்துகிறார்..


 கந்து வட்டி கனிம்பாயாக வரும் முரளி ஷர்மா  வில்லன் மாதிரி முதலில் வந்து பின் நண்பனாகும் ஆச்சரிய கேரக்டர்.. எல்லோரும் நல்லோரே என்ற ராதாமோகன் ஃபார்முலாவில் உருவானவர் போல ..அவருக்கான டப்பிங்க் வாய்ஸ் குடுத்த சமுத்திரக்கனிக்கு ஒரு ஷொட்டு


பிரகாஷ்ராஜின் மகனாக வரும் ஆகாஷ் சுமாரான நடிப்பு.. சமாளிக்கிறார்.. க்ளைமாக்ஸ்சில் ஆதார காட்சியான கிரிக்கெட் வீரர் தோரணையில் பாடி லேங்குவேஜ் பத்தாது..


மகளாக வரும்  ஸ்ரிதேஜா இன்னொரு குட்டி பேபி ஷாலினி. பல ஆச்சரிய முக பாவனை மாற்றங்களில் அசத்துகிறார்.. ருதுவாகி ஹீரோயின் வீட்டில் அமர்ந்திருக்கும் போது வெட்கம் கலந்த குழந்தைத்தன முக பாவனை அற்புதம்..

மேனேஜராக வரும் பிரம்மானந்தம் காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு.. கச்சிதம்.. கோச்சராக வரும் நாசர் கம்பீர நடிப்பு.. ஓ சி செல்ஃபோன் பேசும் சாம்ஸ் கல கல நடிப்பு.

https://lh5.googleusercontent.com/-5Ai8Wb7suMc/TzZCejaAjdI/AAAAAAAAKQM/oBFGBE5Mw8M/s400/Dhoni%25284%2529.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  பிரகாஷ் ராஜ்  ஒரு பெரிய மனிதரை பார்க்கப்போன இடத்தில்  ஹீரோயினை  கட்டண சேவையில் மோகம் தீர்ப்பவர் (விலைமாது) வடிவில் பார்க்கும்போது காட்டும் அதிர்ச்சி.. அதே சமயம் ஹீரோயின் முகத்தில் காட்டப்படும் உணர்ச்சி அற்புதம்.. இந்த இடத்தில் இளையராஜாவின் பின்னணி இசை கன கச்சிதம்

2.  மேற் சொன்ன சம்பவம் நடந்த பின் இருவரும் பேச பீச்சில் சந்திக்கும்போது கேமரா கோணம் அழகு.. ஹீரோயின் சிறியவராகவும், ஹீரோ உயர்ந்தும் இருப்பது போல்  காட்டியது டைரக்‌ஷன் டச்,.

3.  17ஆம் வாய்ப்பாடு மனனம் செய்ய முடியாமல் பொடியன் தடுமாறுவதும், அக்கா அவனை அதட்டும்போது  நான் ஒண்ணும் முட்டாள் இல்ல என்று சொல்லி அவன் கேப்டன் ரேஞ்சில் கிரிக்கெட் பற்றிய புள்ளி விபரம் கொடுப்பது அசத்தல்.. (காதல் கொண்டேன் தனுஷ் பாட சாலை வகுப்பில் மேத்ஸ் பிராப்ளம் சால்வ் பண்ணுவதற்கு ஒப்பான இந்த காட்சி ஏனோ ரசிகர் வரவேற்பை பெற வில்லை)

4.  கந்து வட்டிக்காரர் ஹீரோவின் பையன் ஹாஸ்பிடலில் கோமா ஸ்டேஜில் அட்மிட் ஆனதும் வந்து பார்க்கும் சீனில் அவர் நடிப்பு, அதற்கு பிரகாஷ் காட்டும் ரி ஆக்‌ஷன் அற்புதம்..

5.  ஸ்கூல் மிஸ்ஸை சில கேள்விகள் கேட்டு அதற்கு பதில் தராமல் அவர் தடுமாறும்போது பெஞ்ச் மேல் ஏறி நில்லுங்க என்று அதட்டுவது கிளாசிக் நடிப்பு.

6. வாங்கும் பணத்துக்கும், வாழற வாழ்க்கைக்கும்  சம்பந்தம் இல்லை பாட்டும்,விளையாடும் பருவம் தான் பாடலும் இளையரஜாவின் இசையில் இதம். ஆனால் இன்னும் ராசா மெனக்கெட்டிருக்கலாம்..

7. வசனங்கள் பல இடங்களில் கலக்கல்ஸ். சமூக அக்கறை தெறிக்கும் அற்புதமான வசனங்களை எழுதிய ஞானவேல்க்கு ஒரு ஷொட்டு  ( 41 வசனங்கள் தனிப்பதிவு)

8. கதையின் போக்கு திசை மாறும் என்பதற்காக டூயட், ஹீரோ, ஹீரோயின் ரொமான்ஸை தவிர்த்ததற்கு ஒரு ஷொட்டு

http://www.dinakaran.com/tamilmurasu/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_74858820439.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ், மற்றும் அவரிடம் சில கேள்விகள்

1.  வங்காள மொழியில் வந்த படத்தின் ரீ மேக் என்பதற்காக அந்தப்பட ஹீரோ பயன் படுத்திய  அதே மாடல் ஹெல்மெட்டையே யூஸ் பண்ணனுமா? அந்த மாடல் தமிழகத்தில் யார் யூஸ் பண்றாங்க? அதுவும் இல்லாமல், ஆஃபீஸ், ஹாஸ்பிடல் என போகும் இடங்களெல்லாம் ஹெல்மெட்டை கழட்டாமல் ஹீரோ அலைவது தனியாக உறுத்துகிறது..

2.  படத்தோட முதல் சீன்ல ஸ்கூல் ஹெச் எம் சொல்லிடறார் ஹீரோவோட பையன் 9 வது படிப்பதாகவும், அடுத்த வருடம் 10வது எனவும், அதற்கு அடுத்த காட்சியிலேயே பிரகாஷ் ராஜ் டியூஷன் எடுக்கும் டீச்சரிடம் பையன் பப்ளிக் எக்ஸாம் எழுதனும், பார்த்து படிக்க வைங்க என்கிறார்.. அதுவும் இல்லாமல் எல்லா சப்ஜெக்ட் டீச்சர்ஸ் கிட்டயும் ஓவரா குழையறார் ஏன்?

3. ஸ்கூட்டர் எரிந்து போனதும் ஹீரோ ரொம்ப ஓவராக கவலைப்படறார்.. இன்சூரன்ஸ் இருக்கில்ல?

4.  நீயா? நானா? புரோகிராம்ல ஹீரோ ஒரு டயலாக் பேசிடறார்.. அதன் பின் அவர் ஏரியாவில் ஃபேமஸ் ஆகிறார் என்பது வரை ஓக்கே, ஆனால் அந்த நிகழ்ச்சியில் முகம் காட்டி விட்டால் மோட்சம் கிடைச்சுடும் என்பது மாதிரி பல காட்சிகள் அமைத்திருப்பது ஓவர்.. வாரா வாரம் பலர் அதில் முத்திரைப்பேச்சை வழங்கறாங்க, அந்தந்த வாரம் பர பரப்பா பேசப்படுவாங்க,, அவ்ளவ் தான் ( விஜய் டி வி ல காசு வாங்கிட்டாங்களா?)

5.  ஹீரோ சைடு பிஸ்னெஸா ஊறுகாய் விற்கறார், ஓக்கே , ஆனா எந்த கவர்மெண்ட் ஆஃபீஸ்ல  ஆஃபீஸ் பீரோல ஃபைல் எல்லாம் எடுத்துட்டு அதுல ஊறுகாய் பாட்டிலை வைக்க அனுமதிப்பாங்க? மேனேஜரே அதை பார்த்துட்டு காமெடி பண்ணிட்டு போறார்.. அடப்பாவமே..

6. எந்த கவர்மெண்ட் ஆஃபீசர் ராமராஜன் மாதிரி பூ போட்ட சட்டை எல்லாம் ஜிகு ஜிகு கலர்ல போடறாங்க? ( பிரம்மானந்தம் & சாம்ஸ்)

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120209202330000000.jpg

7.  ஹீரோ ஓப்பனிங்க் ஷாட்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கிடு வந்து பையனுக்கு தர்றார்.. பொதுவா செப்பல், ஷூ எல்லாம் அவங்கவங்களை கூட்டிட்டு போய் தான் வாங்கனும், அப்போதான் சைஸ் செட் ஆகும்.., சாக்ஸ் வாங்காம வந்துடறார்.. மறதி இல்லை, தெரியலை, அப்புறம் பையன் சொன்ன பின் அடுத்த நாள் வாங்கறார்.. கடைல ஷூ வாங்கறப்பவே கடைக்காரர் சார் ஷூ சாக்ஸ் வாங்கலையா?ன்னு கேட்பாரே?

8. ஒரு நாட்டின் சி எம்மை நடு ரோட்டில் நிற்க வெச்சு 20 நிமிஷம் வசனம் பேசறது எல்லாம் பார்க்க நல்லாருக்கு சாத்தியமே இல்லை..

9.  ஸ்கூல் டீச்சர்ஸை, ஹெச்செம்மை தாக்கி ஸ்கூலில் பேசும் வசனங்கள் உணர்ச்சிப்பூர்வமா இருக்கு.. ஆனா முழுக்க முழுக்க ஸ்கூல் நிர்வாகம் மேலேயே தப்பு சொல்றது ஏன்? பெற்றோர் மேலயும் தப்பு இருக்கே? பையன் மக்குன்னு ஸ்கூல்ல சொன்னா நாம ஏன் நம்பனும்? அதுவும் இல்லாம ஓவர் ஃபீஸ் வாங்கறாங்கன்னா அரசு பள்ளியில் படிக்க வைக்கலாமே?

10. ஹீரோவின் மகன் கோமா ஸ்டேஜில் விழுந்ததுமே படம் ஸ்லோ ஆகிடுது.. திரைக்கதை தடுமாறுது.. அடுத்த 20 நிமிஷம் டெட் ஸ்லோ..

11. படத்தோட டைட்டில், போஸ்டர் டிசைன் எல்லாம் பார்க்கறப்ப இது ஏதோ ஒரு கிரிக்கெட் வீரரின் கதை என்பது போல் இருக்கு.. அது மகா மைனஸ்.. கிரிக்கெட் சம்பந்தப்பட காட்சிகள் படத்துல 12 நிமிஷம் தான் வருது.. நாட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்பதால் இயக்குநர் அப்படி டைட்டில் அமைத்திருக்கலாம்.. அது மாபெரும் மிஸ்கால்குலேஷன்ஸ்..

http://www.glamour.raafatrola.com/sites/default/files/images/Radhika%20Apte%20(2).jpg

இந்தப்படம் அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய ஜாலியான படம் தான்.. அதில் சந்தேகமே இல்லை.. இந்தப்படம் விருதுகளை அள்ளும்.. வசூலையும் அள்ளினால் அது ஆரோக்யமான சினிமாவுக்கான ஆரம்பமாக இருக்கும்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று

சி.பி கமெண்ட் - நல்ல சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய கண்ணியமான  படம்

ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

http://www.telugumovietalkies.com/wp-content/uploads/2012/02/Radhika-Apte-Latest.jpg

என் காதலி ஜாலி மூடுல இருக்கறப்ப என்னை சோடியம் அயோடைடு-னு கூப்பிடுவா.,ஏன்னா... (joks)

http://actresspadam.com/wp-content/uploads/2012/01/oviya-kalavani-stills-107.jpg

1. கரண்ட் இருக்கறப்ப ஒருத்தர் பவர் ஸ்டார் ஆனவர் கரண்ட் கட் ஆனதும் பவர்கட் ஸ்டார் ஆகிடுவாரா? டவுட் டேவிட்.

--------------------------------------------

2. மேரேஜுக்குப் பிறகு பொண்ணுங்க மாமியாரை சரிக்கட்டுவது எப்படி-னு யோசிக்கறாங்க, ஆம்பளைங்க மாமிகளை கரெக்ட் பண்றது எப்படி?-னு யோசிக்கறாங்க.#கில்மா தத்துவம் 143.

--------------------------------------------

3. முதல் காதலை என்னால என்னைக்கும் மறக்கவே முடியாது.

ஏன்?

என் பிஸ்னெஸ்க்கு ‘முதல்’ போட்டு உதவி செஞ்ச காதல் அது... ஹி..ஹி..

----------------------------------------

4. டியர்!  என் கனவுல மட்டும்தான் நீ அழகா இருக்கே!

ஓஹோ! அப்போ நான் சொப்பன சுந்தரியா?

----------------------------------------

5. வேகமா மணி அடிச்சுட்டே போன ஃபயர் சர்வீஸ் வண்டியை துரத்திட்டே போன மிஸ்டர் பேக்கு அப்புறம் சொன்னாரு-போய்யா! போ! இவ்ளவ் வேகமா வண்டில போனா ஒரு பய உன்கிட்ட ஐஸ் வாங்க மாட்டான்.

---------------------------------------

6. பணம் என்பது மரத்தில் காய்க்கற மேட்டர் ஆகிட்டா பொண்ணுங்க மரத்துல தாவற மங்க்கிங்க கூட டேட்டிங் போகறதைக் கூட பெரிய மேட்டரா நினைக்க மாட்டாங்க.

--------------------------------------

7. ஜட்ஜ்: கொலை நடந்ததை பார்த்த சாட்சி நீதானா?

கைதி: ஆமா யுவர் ஆனர், கொலைகாரன் அஜித் ரசிகன் போல, கொலை பண்ணிட்டு ஜாலியா நடந்து போய்ட்டு இருந்தான். கொலைகாரன் நடந்ததை பார்த்த சாட்சியும் நாந்தான்.

---------------------------------------

8. என் சம்சாரம் செத்துப் போன நினைவு நாள் இன்னைக்கு. எனக்கு அழுகையே வர்ல. என்ன பண்ண?

அவ திரும்பி வர்றதா கற்பனை பண்ணிக்க. தன்னால அழுகை வரும்.

--------------------------------------


http://southtamil.files.wordpress.com/2010/08/001-oviya_kalavaani_01.jpg

9. என் காதலி ஜாலி மூடுல இருக்கறப்ப என்னை சோடியம் அயோடைடு-னு  கூப்பிடுவா.

அப்படினா என்ன?

சோடியம் (Na)+அயோடைடு(I)=NAI=நாய்.

-----------------------------------------

10. நீ செய்யற தப்புல இருந்து ஏதாவது கத்துக்கிட்டா நீ இண்ட்டலிஜெண்ட், மத்தவங்க மிஸ்டேக்ல இருந்து கத்துக்கிட்டா நீ ஜீனியஸ்.

-------------------------------------

11. டாடி...  நான் ஸ்கூலுக்கு போகலை, வேலைக்கு போறேன்.

UKGதான் படிச்சிருக்கே! உனக்கு எவன் வேலை தருவான்?

LKGகேர்ள்ஸ்க்கு டியூஷன் எடுப்பேன்.

-----------------------------------

12. தலைவரே! சாப்பிடலையா?

இன்னும் மணி அடிக்கவே இல்லையே?

தலைவரே! விளையாடாதீங்க இது ஜெயில் இல்ல, வீடு.

---------------------------------------

13. ஒரு யானையும், எலியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிச்சு யானை அடுத்த நாளே செத்துடுச்சு. அப்போ எலி சொல்லுச்சு “ஓ! அன்பே! ஒரு நாள் காதலுக்காக ஆயுசு முழுக்க என்னை குழி தோண்ட வெச்சுட்டியே?”

------------------------------------

14. என் கிட்ட அழகு இல்லையா? அந்தஸ்து இல்லையா? சொத்து இல்லையா? ஏண்டா உனக்கு என்னை பிடிக்கலை?

உனக்கு தங்கச்சி இல்லையே?

-------------------------------------

15. நான் வருவதே உன்னை பார்க்கத்தான். ஆனால் ஏனோ நான் செல்லும் வரை உன் கண்களை நீ மூடியே வைத்திருக்கிறாய்-வருத்தத்துடன் நிலா!

-------------------------------------

16. டாக்டர்! என் மனைவியை நீங்கதான் எப்டியாவது காப்பாத்தனும்

கட்ன புடவையோட என் வீட்டுக்கு வரச்சொல் நான் காப்பாத்தறேன்.

-------------------------------------

http://www.mirchiphotos.com/wp-content/uploads/2011/01/meera-nandan-new-stills-03-557x800.jpg

Sunday, February 12, 2012

தி மு க வின் ஆட்சியை ஜெ ஆட்சி முந்துகிறது .. எப்படி? ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2wyDlOluPDHAocqVf6F1_ktZb8I2BISbmAvxI-OT-K1CDQPkFN8-1HOp72gUlX2-ucxJCiw7w7dhRNZN_V0LHggTFB0bZ-3RPhyphenhyphen2ApKRrjBKs7ThlZbKWVfysYdiS1JRxlgc3coyIwSc/s640/1+(13).JPG

1. சட்டசபை என்ன சினிமா எடுக்கும் இடமா ?- ராமதாஸ்#  இல்லை, சினிமாக்காரங்க உள்ளே போய் பொறுப்பான பதவியில் இருந்துகொண்டே பொறுப்பில்லாம நடப்பது

----------------------------------

2. நெட்ல நியூஸ் பார்ப்பது = மாடர்ன் கேர்ள்சை சைட் அடிப்பது மாதிரி ஜாலிதான் ஆனாலும் சுவ்ராஸ்யம் கம்மி , டீக்கடைல பேப்பர் படிப்பது = தாவணியில் பவனி வரும் மாமன் மகளை கலாய்ப்பது மாதிரி, பாரம்பரியம் மிக்கது செம கிக் ஹி ஹி

-------------------------------------------------

3.எனக்கு குழந்தை மனசுன்னு   ஒவ்வொருத்தர்ட்டயும் தனித்தனியா சொல்லிட்டு இருக்க நேரம் இல்லை, அதனால ட்விட்டர் டி பில என் மழலை பருவ பிம்பம், ஹி ஹி

--------------------------------------

4. வாக்காளர்களை கொச்சைப்படுத்தி பேசவில்லை-கருணாநிதி# ஆமா, எங்க தலைவர் மானம் உள்ளவர், வாக்கு அளிக்காதவங்களைத்தான் திட்டுவார்

-----------------------------

5. ஒளிமயமான எதிர்காலத்தை காங்கிரஸ் மட்டுமே தரும்: ராகுல் காந்தி! #  கிலி மயமான நிகழ்காலம் உணர்த்தியதே போதும் அண்ணே

--------------------------------

6. ஒளிமயமான எதிர்காலத்தை காங்கிரஸ் மட்டுமே தரும்-ராகுல்.,# இதை நம்ப நாங்க டியூப்லைட்ஸ் இல்லை

---------------------------------

7. வயதானாலும் மனதளவில் நான் இன்னும் இளைஞன்தான்-ஸ்டாலின் # ஜாக்கிரதை ஜாக்கிரதை தாய்க்குலமே ஜாக்கிரதை

------------------------------

8. ட்விட்டரில் நிறைய செந்தில்கள்.அந்தளவுக்கு கவுண்டமணிகள் இல்லாமல் போனது குறைதான்


நாங்க உதை வாங்கறதுல சவுமிகளுக்குத்தான் எவ்ளவ் சந்தோஷம்?

---------------------------------

9. சொரணை கெட்டவன்தான் அதிமுக கூட்டணியில் இருப்பான் - விஜயகாந்த் # மானம் கெட்டவன் தான் அரசியலில் இறங்குவான் - பொது ஜனம்

----------------------------------

10. சங்கரி & சவுமி - என்னை ஏன் அக்கான்னு கூப்பிடறீங்க?

  யாராவது என்னை கோபத்துல அடங்கொக்காமக்கா?ன்னு கேட்டா “ஆமா, மக்கு”னு சொல்ல ஹி ஹி

----------------------------------

http://thebollywoodactress.com/wp-content/uploads/2010/08/Nayantara1.jpg

11.மிஸ், வீட்டை விட்டு வெளீல போகாம இருக்கீங்களே, ஏன்?

இன்னைக்கு உலக முத்த தினமாம்,ஊர்ல இருக்கற பசங்க எல்லாம் மொத்தமா ரோட்ல, எதுக்கு வம்பு?

------------------------------------

12. தலைவருக்கு முன்னால நாக்கை மடிச்சு பேசுனாராமே?

ஆமா, நல்ல வேளை, அவரை கூட்டிட்டு போய் அயர்ன் பண்னாம விட்டாங்களே?

-------------------------------

13. நீங்க டெயிலி ஒரே கலர்ல தான் சட்டை போடறீங்க, ஏன்?

எந்த பொண்ணும் என்னை சட்டை பண்றதில்லை,டெயிலி சட்டை மாற்றி மட்டும் என்ன யூஸ்?

-----------------------------

14. ஆசீர்வாதம் பண்ணுங்க குருவே!

மகராசியா இருக்கனும்.. 

என் ஜாதகம் பார்க்காமயே பலன் சொல்லுங்க பார்க்கலாம்.

மகர ராசியா இருக்கனும்?

-----------------------------------

15.தி மு க வின் ஆட்சியை ஜெ ஆட்சி முந்துகிறது # கரண்ட் கட் அய்யா ஆட்சில தினசரி 4 மணி நேரம், அம்மா ஆட்சில 7 மணி நேரம், சபாஷ்!!

----------------------------------
16. ஒவ்வொரு வேளை பசி எடுக்கும்போதும் உணவு கிடைக்காத சந்தர்ப்பங்களில் எல்லோருக்கும் அவரவர் அம்மா நினைவு வந்து விடுகிறது

-----------------------------------

17. கோவிச்சுட்டுப்போன சம்சாரத்து கிட்டே ஒரு புருஷன் - அன்பே! இரவு வணக்கத்தை உங்கப்பாட்ட சொல்லிட்டு கிளம்பு,   நமக்காக காத்திருக்கிறது இரவு

-------------------------------

18. டயட்ல இருக்கனும், கம்மியா சாப்பிடுங்க -மனைவி! இவ்ளவ் கம்மியாவா சாப்பிடுவாங்க?நல்லா சாப்பிடறா!கல்லையும் ஜீரணீக்கும் வயசு-அம்மா # பாசம்

--------------------------------

19.  போலீஸ் - உடம்புல இவ்ளவ் அடி பட்டிருக்கே, யார் அடிச்சது? 

நல்ல நேரம் சதீஷ் - ஸாரி சார், தாலி கட்ன சம்சாரத்தை காட்டிக்குடுக்க மாட்டேன்

-----------------------------------

20. டெயிலி உங்களுக்கு சமைச்சுப்போட நான் என்ன சமையல் காரியா? 

டெயிலி உன்னை ஆஃபீஸ்ல டிராப் பண்றேனே? நான் என்ன டிரைவரா? # வாக்கு வாதங்கள்,பேக்கு

----------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtoFfuSFHl_ayDxTRHeLazSMNqjzc6rtP6dT1jtU3Jh2pLxRcrs_n_PyFTJ1H0B3gJGHiYsrrXz1YsXnHAbELD6KTrMZEHvX7bPNUG0mkPKjkznB_hZypeCPawva9Fid2NZ-GN1p-Jx58/+Latest+Photos+%25281%2529.jpg

Saturday, February 11, 2012

வீறு கொண்ட விஜய்காந்த்தின் சிவப்பு மல்லி பேட்டி - காமெடி கும்மி

http://moonramkonam.com/wp-content/uploads/2012/02/Vijayakanth-jayalalitha-jokes.jpgசென்னை: மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார்.

 சி.பி - வழக்கமா கோபப்படும் நீங்க வெட்கப்படறதைப்பார்த்து நான் துக்கப்படறேன், துயரப்படறேன்.. படறேன்.. றேன்.. 

சட்டசபையிலிருந்து 10 நாள் தடை விதிக்கப்பட்டதத் தொடர்ந்து தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும், அமைதியாகவும், பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி நீண்ட நேரம் அவர் பேசினார்.

சி.பி - வசனம் எழுதிக்கொடுத்தது லியாகத் அலிகானா?

விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்...

நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம்.இவர்கள்தான் வந்தார்கள், இவர்கள்தான் கூப்பிட்டார்கள். நாங்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் இவர்கள் ஜெயித்தார்கள். நாங்கள் மட்டுமில்லை, மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் ஜெயித்தார்கள்.


சி.பி - அண்ணே ஒரு டவுட்.. கூட்டணி உடன்பாடு நடந்தப்ப உங்க வீட்டுக்கு அம்மா வந்தாங்களா? இல்லையே? நீங்க தானே பம்மிக்கிட்டே போயஸ் போனீங்க? 

எங்களைப் பார்த்து திராணி இருந்தால் என்று கேட்கிறார்.இவர் கடந்த ஆட்சியின்போது 13 இடைத்தேர்தலில் ஜெயித்தாரா. 5 தொகுதிகளில் நடந்த தேர்தலில் போட்டியிடப் பயந்து ஓடியவர் இவர்.



சி.பி - அண்ணண் பயமே இல்லாதவர், பாருங்க வெள்ளை சட்டை போட்டிருக்கார், வெள்ளை சட்டை போட்டவர் பயப்பட மாட்டார்.. அண்ணே கேப்டன் அண்ணே  அவ்ளவ் தில் உள்ள ஆள் எதுக்கு கூட்டணி வைச்சீங்க? வழக்கம் போல தண்ணியா நின்னு சாரி தனியா நின்னு டெபாசிட்டை இழந்திருக்கலாமெ?



மதுரைக்கே மல்லிகைப் பூவா என்பார்கள், திருநெல்வேலிக்கே அல்வாவா என்பார்கள். அதுபோல தேமுதிகவுக்கே சவாலா. எங்களைப் பார்த்து சவால் விடாதீர்கள். அதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.

சி.பி - ஆமா, கேப்டன் சம்சாரத்தை தவிர யாருக்கும் பயப்படமாட்டார்.. யார் கிட்டே?

தனியாக போட்டியிட தயார். நாளைக்கே நாங்க ராஜினாமா செய்கிறோம், நீங்களும் வாங்க, கவர்னர் ஆட்சியில் தேர்தலை சந்திப்போம். ரெடியா. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும்.

சி.பி - ஹா ஹா இது எப்படி இருக்குன்னா 2 லட்சம் கைல வெச்சிருக்கறவன் 10 கோடி வெச்சிருக்கரவனை பார்த்து நான் என் சொத்தெல்லாம் தானம் பண்றேன், நீ அதே போல் பண்ண தயாரா? என கேட்பது மாதிரி



சட்டசபையில் சபாநாயகர் சொன்னதும் நான் உட்கார்ந்து விட்டேன். ஆனால் எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததால்தான் நான் எழுந்து நின்றேன். நான் எழுந்து நின்றதை மட்டும் காட்டினார்களே, எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததை ஏன் காட்டவில்லை. அதையும் காட்டியிருக்க வேண்டுமல்லவா, அதுதானே நியாயம்.

சி.பி - அண்ணே, அவங்க எல்லாம் ஆளுங்கட்சி, எப்படி காட்டுவாங்க, அதுவும் இல்லாம நீங்க தான் செமயா காட்டு காட்டுன்னு காட்டிட்டீங்களே,,,

நியாயத்தைப் பத்தி இவங்க பேசக் கூடாது. 13 நாளில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தியவர் இவர். இவர் நியாயம் பத்திப் பேசலாமா.

 சி.பி - ஆஹா, மாநில அரசியல்ல இருந்து மத்திய அரசியலுக்கு அய்யா குறி வைக்கறாரு.. 

http://www.vikatan.com/news/images/Building.jpg

தேமுதிக சரியில்லை என்று இப்போது சொல்கிறாரே, அதை ஏன் கூட்டணி முடிவானபோது சொல்லவில்லை, தேமுதிக தொகுதிகளை அறிவித்தபோது ஏன் செய்யவில்லை.

சி.பி - ஏன்னா டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கு.. மப்பு இல்லை ஹி ஹி 

நாங்கள் இல்லாவிட்டால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். கூட்டணி இல்லாமல் ஒருபோதாவது அதிமுக போட்டியிட்டுள்ளதா. எம்.ஜிஆர். இருந்தபோதும் கூட கூட்டணி இல்லாமல் அதிமுக போட்டியிட்டதில்லை.


சி.பி - அண்ணே, இதெல்லாம் ரொம்ப ஓவர்,.. அவங்க சர்வீஸ் என்ன? உங்க சர்வீஸ் என்ன?என்னதான் மப்புல உளறுனாலும் பார்த்து அளவா உளறனும்

ஊர் கூடித்தானே தேர் இழுத்தோம். எல்லாக் கூட்டணியும் கூடித்தானே வெற்றி பெற வைத்தோம். சட்டசபையில் நாங்கள் மக்கள் பிரச்சினைகளைத்தானே பேசப் போனோம். கூட்டணி குறித்து பேசப் போகவில்லை.

சி.பி - மக்களுக்கு நீங்க 2 பேரும் தான் பெரிய பிரச்சனை.. 

என்னைப் பார்த்தால் அறுவறுப்பாக உள்ளது என்கிறார். இவரைப் பார்த்தால் கூடத்தான் அறுவறுப்பாக உள்ளது, அசிங்கமாக இருக்கிறது. நாங்கள் பொறுத்துக் கொள்ளவில்லையா. அமைதியாக இருக்கவில்லையா.

சி.பி - ஹா ஹா ஹி ஹி ஹோ ஹோ சகிப்புத்தன்மை ஜாஸ்தி இருக்கு போல 2 பேருக்கும்

பேசுவதை சர்வாதிகாரமாக தடுக்கிறார்கள். பேச வாய்ப்புக் கொடுத்தால்தானே தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

தானே புயல் நிலவரம் பற்றிப் பேச விடவில்லை, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்துப் பேச விடவில்லை.

இன்றைய நிலவரம் என்று போர்டு போடுவார்களே அது போல இன்றைய மந்திரிகள் என்ற நிலையில் இந்த ஆட்சி உள்ளது.


சி.பி - மந்திரிங்க ஏதாவது தப்பு பண்ணா அவங்க பதவியை பறிப்பதில் என்ன தப்பு?



தூர்தர்ஷன் ஒரு சார்பாகவே நடக்கிறது. ஜெயா டிவியில் எடிட் செய்து தருவதை போடாதே, எல்லாவற்றையும் போடு.

நீங்க மட்டும்தான் மக்கள் பத்திப் பேசுவீங்களா, மத்தக் கட்சிக்காரன் பேச மாட்டானா. ஆணவத்தில் இருக்கிறார் ஜெயலலிதா, மமதையில் இருக்கிறார்.


சி.பி - மமதையில் ஜெ, போதையில் கேப்டன் எப்படி டைட்டில்? ஹி ஹி 

எங்களுக்கு இறங்குமுகம் என்று நீங்கள் சொல்லக் கூடாது. மக்கள் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் மட்டும்தான் தொடர்ந்து ஆட்சி புரிந்தவர். நீங்களும், மத்தக் கட்சியும் மாறி மாறித்தான் ஆள முடிந்தது. இப்போதுதானே விஜயகாந்த் வந்துள்ளான், பொறுத்திருந்து பாருங்கள் என்னை.


சி.பி - ஆமா, அண்ணன் தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி புரியப்போறார், ஏலேய் சம்முவப்பாண்டி, அப்பாவை எழுப்பி விடு

2005ல் கட்சி ஆரம்பித்து தொடர்ந்து தனியாகத்தானே தேர்தலை சந்தித்தேன். நான் தலை குணிந்தாலும் உங்களைத் தலை குனிய வைக்க மாட்டேன் என்று சேலத்தில் சொல்ல விட்டுத்தான், தொண்டர்களின் விருப்பத்திற்கேற்பத்தானே கூட்டு சேர்ந்தேன்.

இவங்களை பாராட்டிக்கிட்டே இருக்கனும், இதுக்குப் பெயரா ஆட்சி. பாராட்ட மட்டும் டைம் தர்றீங்கள்ள, விமர்சனம் செய்யவும் டைம் தாங்க. புள்ளி விவரம் இருந்தா பேசுங்க என்கிறார்கள். ஊரைக் கொள்ளையடிச்சதுக்கு உங்க கிட்ட புள்ளி விவரம் இருக்கா.

யார் மந்திரி, யார் ஐஏஎஸ், யார் ஐபிஎஸ் என்று இவர்களுக்கேத் தெரியாது. இவங்கதான் தகுதி இல்லாதவர்.

நான் யாருக்கும் பயப்படவில்லை. மக்கள் மனது வைத்தால்தான் யாராக இருந்தாலும். நான்தான் புலி என்றால், ஆட்சிக்கு நாளை நான் வந்தாலும் இப்படிப் பேச முடியும். அப்ப என்ன சொல்வீங்க.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkham2GAdl3N4R6oiRfFzlv-mLNwBaDNr4LgOUfmosyvItKUsjqEP4m-OUXUooTktRinl9p1oEU4pb1EjQK1VUWQWC3QBJUCsZOPC9Od3dEVVRcTaKCa8cdP9Cj6v7jfWk2tmvNw9rGKk/s400/6.jpg

ஜெயலலிதா திருந்தி விட்டார் என நினைத்தேன், இல்லை, பழைய குருடி கதவைத் திருடி கதைதான். ஜெயலலிதா திருந்தவில்லை, ஆணவத்துடன் இருக்கிறார். போன 5 வருடமாக எங்கே போனீர்கள். தேர்தலை சந்திக்கக் கூட திராணி இல்லையே உங்களுக்கு. நான் பயப்படாமல்தான் சந்தித்தேன்.

ஆவுடையப்பன் சபாநாயகராக இருந்தபோது இவரை 1 மணி நேரம் பேச விட்டார்கள். இவர் பேசலாம், நாங்க பேசக் கூடாதா.

எனக்குப் பயமெல்லாம் கிடையாது. மரியாதைக்கு மரியாதை, அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். மிரட்டிப் பணிய வைக்க வைத்தால் அது முடியாது.

தகுதி இல்லை என்கிறார்கள். உங்களுக்குத்தான் தகுதி இல்லை. தகுதியில்லாத உங்களுடன் கூட்டணி வைத்ததை நினைத்து நான்தான் வெட்கப்படுகிறேன்.

நன்றி கெட்டவங்க, எப்படிக் கெஞ்சுனாங்க என்று எனக்குத் தான் தெரியும். பேச நினைத்தால் நான் நிறையப் பேசுவேன். பேசக் கூடாதென்று அமைதியாக இருக்கிறேன்.

கேவலப்பட்ட ஒரு அரசாங்கத்தின் கீழ் மக்களை உட்கார வைத்து விட்டார்கள். அந்தமக்களை தூக்கி நிறுத்தத்தான் நான் இனிமேல் போராடப் போகிறேன்.

இப்போது சொல்கிறேன், என்ன திமிராக சொல்கிறான் என்று தப்பாக நினைக்க வேண்டாம். அடுத்த முறை தேமுதிகதான் ஆட்சியைப் பிடிக்கும். பிடிக்கப் போவதைப் பாருங்கள்.

சி.பி - 2012ல உலகம் அழியும்னு சொன்னாங்க, அப்போ நம்பலை, இப்போ நம்பறேன் 

நாளை முதல் எனது கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குப் போவார்கள். நான் மக்கள் மன்றத்திற்குப் போகப் போகிறேன் என்றார் விஜயகாந்த்.

சி.பி - அப்போ டாஸ்மாக், எலைட் பார் போக மாட்டீங்களா? 

Friday, February 10, 2012

புற்று நோயை வெற்று நோய் ஆக்குவது எப்படி? -நேசம்+யுடான்ஸ் கேன்சர் விழிப்புணர்வுப் போட்டி

1980 களில் வந்த சினிமா படங்கள் நம் மக்கள்ட்ட ஏற்படுத்துன பயம் இன்னும் போகலை..அதாவது கதைப்படி ஹீரோ அல்லது ஹீரோயின்க்கு கேன்சர் வந்திருக்கும்.. டாக்டர் தேதி குறிச்சுடுவார்.. நிர்ணயிக்கப்பட்ட மரணம் என்பது போல் ஒரு தவறான  கற்பிதம் மக்கள் மனதில் பரவிடுச்சு.. அது இன்னும் நிலைத்திருப்பது வேதனை தான்..

சினிமா பிரபலங்களான லிசா ரே, கவுதமி , மம்தா மோகன் தாஸ் உட்பட பல நடிகைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்களே.. அதனால் யாரும் கேன்சர் என்றால் மரணம் தான் என எண்ணத்தேவை இல்லை..



இன்று மாடர்ன் டெக்னாலஜிகள் வந்து விட்டது.. கீமோதெரபி உட்பட்ட பல சிகிச்சைகள் குணம் அடைய போதுமான மருத்துவ முறைகள் வந்து விட்டன.. எனவே எந்த விதமான மரண பயமும் இல்லாமல் இந்த நோயை அணுகலாம்.. எய்ட்ஸ் போல் இது உயிர்க்கொல்லி நோய் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..


புற்று நோய் என்பது என்ன? அதுல என்னென்ன வெரைட்டி இருக்கு?நோய் வரும் முன் காப்படு எப்படி? வந்த பின் சிகிச்சை மூலம் குணம் ஆவது எப்படி? நோயின் தீவிரத்தை குறைப்பது எப்படி? என்பதை எளிமையா, பாமரனுக்கும் புரியற மாதிரி பார்ப்போம்.. 

புற்று நோய் என்பது குறிப்பிட்ட வயது வந்த ஆட்களைத்தான் தாக்கும் என்றில்லை, அது யாரை வேணும்னாலும் தாக்கலாம்.. ஆனாலும் வயது அதிகம் ஆக ஆக வாய்ப்பு அதிகம்,, 

நம்ம உடம்பு பல செல்களால் ஆனது.. செல்கள் பிரிந்து பல புதிய செல்களை உருவாக்குது.. பழைய செல்கள் இறந்து வெளியேறாமல் உள்ளேயே தங்கிடுது.அதுதான் புற்று நோய் ஏற்பட முக்கிய காரணம்

புற்றுநோய் அதிகமாக பெண்களை தாக்குகிறது..

 புற்று நோய் வருவதற்கான காரணங்கள் +.யார் யாருக்கெல்லாம் நோய் தாக்கும் அபாயம்?
1. அதிகமாக உடலில் படும் சூரிய ஒளி

2. அதிக உடல் எடை போடுதல்

3. உடல் பயிற்சி செய்யாமல் உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல்

4. கருத்தடை மாத்திரைகள் அடிக்கடி உபயோகம் செய்யும் பெண்கள்

5.மிக தாமதமாக முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள்

6. மிகச்சிறிய வயதில் பூப்டையும் பெண்கள்

7. தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு

8. மிகத்தாமதமாக மாத விலக்கு நிற்கும் பெண்கள் ( மெனோபாஸ் லேட்)

9. கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள் உண்பவர்கள், மாமிச உணவு அதிகம் உண்பவர்கள்

10. குடும்பத்தில் அம்மா அல்லது சகோதரர்களுக்கு இருந்தால் அந்த பெண்ணுக்கு வர வாய்ப்பு அதிகம்

 புற்று நோய்களின் வகைகளும், வருவதற்கான காரணங்களும்

 1. செஸ்ட் கேன்சர் - ( மார்புப்புற்று) பெரும்பாலும் இது பெண்களுக்கே வரும், ஒரு குழந்தை மட்டுமே பெற்ற பெண்கள்,தாய்ப்பால் தராத பெண்கள்,குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், குண்டான உடல் வாகு கொண்ட பெண்கள்க்கு செஸ்ட் கேன்சர் வருகிறது

2. லங்க்ஸ் கேன்சர்  - (நுரையீரல் புற்று ) புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்க்கு வரும் வாய்ப்பு அதிகம்.. ஆஸ்பெஸ்டாஸ், சிலிக்கான் தொழிற்சாலைகளில்  பணி புரிபவர்கள் , சிமெண்ட் தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள்க்கு வரும் வாய்ப்பு அதிகம்

3. மவுத் கேன்சர்  - (வாய்ப்புற்று) -புகையிலை உபயோகிப்பவர்களுக்கு,பான் பராக், ஜர்தா பீடா அடிக்கடி சாப்பிடுபவர்கள், பற்களை முறையாக பராமரிக்காமல் அஜாக்கிரதையாக இருப்பவர்கள்க்கு இது வரும் வாய்ப்பு அதிகம்.

4. லிவர் கேன்சர் - (ஈரல் புற்று ) -  மது பான வகைகளை அதிகம் உபயோகிப்பவர்கள், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர்கள்க்கு வர வாய்ப்பு அதிகம்

5. ஸ்டொமக் கேன்சர்  -( வயிற்றுப்புற்று) -  முறையில்லாமல் கண்ட நேரத்தில் சாப்பிடும் உணவுப்பழக்கம் கொண்டவர்கள் அதாவது நினைச்ச நேரம் சாப்பிடுபவர்கள்க்கு,ஜங்க் ஃபுட் எனப்படும் பாக்கெட்களில் விற்கப்படும் நொறுக்ஸ்களை அதிகம் உண்பவர்கள்க்கு,சரக்கு அடிக்கற குடிமகன்கள்க்கு, தம் அடிக்கற ஆட்களுக்கு இது வர வாய்ப்பு அதிகம்

6.  ஸ்கின் கேன்சர் - ( தோல் புற்று  ) - சோரியாசிஸ் எனப்படும் தோல் வியாதி வந்தவர்கள், நாட்பட்ட ஆறாத புண்கள் உள்ளவர்களுக்கு, அதிகமாக வெய்யில்லில் உடல் காய்பவர்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்

7. யூட்ரஸ் கேன்சர் -(கருப்பை புற்று) - கணக்கு வழக்கே இல்லாம ,வகை தொகை இல்லாம குழந்தை பெத்துக்கற பெண்கள்க்கு,ஹெச் பி வி வைரஸ் தாக்கிய பெண்கள்க்கு இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம்.. பல ஆண்களுடன் உறவு வைக்கும் பெண்கள்,பிறப்பு  உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளாத பெண்கள்க்கு வர வாய்ப்பு அதிகம்

8.  பிளட் கேன்சர்  ( ரத்தப்புற்று) - புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்க்கு, சில சிகிச்சைகளின் போது இன்ஃபெக்‌ஷன் ஏற்படுபவர்களுக்கு இது அதிகம் வருகிறது.. பரம்பரைத்தன்மையும் ஒரு காரணம்.. அதிக வயது ஆனவர்களுக்கும் வரலாம். 

விந்தையான விஷயம் - மேற்கொண்ட எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்களுக்கும் கேன்சர் வர வாய்ப்பு உண்டு.. நமக்குத்தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லையே என ஜாலியாக இருக்கக்கூடாது.. 35 வயதுக்கு மேல் முழு உடல் செக்கப் செய்து கொள்வது அவசியம்.. 

புற்று நோய் வராமல பாதுகாப்பது எப்படி?

1. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருள்களை சேர்த்துக்கொள்தல்

2. பச்சை காய்கறிகள் அதிகம் உட் கொள்தல்

3. வைட்டமின் டி குறைபாடு வராமல் பார்த்துக்கொள்ள  அந்த வைட்டமின் சத்து உள்ள உணவு வகைகளை உண்ணுதல்

4. பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் குடிக்காமல் தவிர்த்தல்,அழகு சாதனப்பொருட்கள் அதிகம் உபயோகிக்காமல் இருத்தல் நலம்..

5. ரோட்டோரம் விற்கும் நடைபாதை கடைகளில் பஜ்ஜி, போண்டா சிப்ஸ் வகைகள் சாப்பிடாமல் தவிர்த்தல் நலம், ஏன் எனில் அவர்கள் ஒரே எண்ணெயை மீண்டும் , மீண்டும் உபயோகிப்பதால் அது உடல்க்கு கெடுதல் விளைவிக்கிறது

 புற்று நோய் வந்ததற்கான அறி குறிகள்

1. வாயில் கொப்புளங்கள் வந்து ஆறாமல் இருத்தல்

2. வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படுதல்

3. மார்பில் வலி உள்ள அல்லது வலி அற்ற கட்டிகள் தோன்றுதல்

4.மார்பகம் வழக்கத்திற்கு மாறாக பெரிதாக இருத்தல்

5. உடல் உறவின்போதோ, அதற்குப்பின்போ ரத்தக்கசிவு இருப்பது

6. நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் இருத்தல்

7. அதீத இருமல், உணவு உண்ணுவதில் ஏற்படும் மாற்றங்கள்

8. இயற்கை உபாதைகளில் வழக்கத்திற்கு மாறான சில மாற்றங்கள்


சிகிச்சை முறைகள்

1. கதிர் இயக்க சிகிச்சை 2.  அறுவை சிகிச்சை 3  மருத்துவ சிகிச்சை

இப்போதெல்லாம் பெரும்பாலும் கதிரியக்க சிகிச்சையே அளிக்கப்படுகிறது..

பீட்ரூட், கீரை வகைகள் சேர்த்துக்கொள்வது நல்லது..

செல் ஃபோன்கள் அதிகம் பயன் படுத்துவதால் கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.. இது முழுதாக நிரூபிக்கப்படலை, இருந்தாலும் அனைவரும் செல் ஃபோன் பயன் பாட்டை குறைக்கனும். தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒரே காதில் வைத்துப்பேசுவது கூடாது.. .

கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மையம் மிக புகழ் பெற்றது.. அது போக அனைத்து முக்கிய நகரங்களில் புற்று நோய்க்கான சிகிச்சை மையங்கள் உள்ளன..

நாம் செய்ய வேண்டியது ஒன்று தான் . 35 வயது டூ 40 வயது ஆனவர்கள் உடனடியாக முழு உடல் பரிசோதனை செய்வதே ..

புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபலங்கள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்க்.. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.. இதில் சோனியாவுக்கு சிகிச்சை முடிந்தது.. நலமாக உள்லார்.. யுவராஜ்க்கு இப்போதான் சிகிச்சை ஆரம்பித்து உள்ளார்கள்

புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவோம், அதை வெற்று நோய் ஆக்குவோம்.. ஆரோக்யமான உலகம் படைப்போம்.. நாளைய உலகமும், இன்றைய உலகமும் நம் கையில்..

வாச்சாத்தி- அதிகாரிகளின் அத்து மீறல்,அதிகார துஷ்பிரயோகம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLz3gJMm2NH-kd8zL9DKfvsQKWRnrnXwdZFSSTB3Wxzshbk1pnLc3bJNhDl5igCIcvPaBcharS-bEi6p9pcIICTV91_-m2atwNPN5BBE_xbHnJ9tM2r9isAN-mVNddsTBZgfWr7vPXV4PV/s640/Vaachchaaththi+Movie+Posters.jpg
பரபரப்பான உண்மை சம்பவங்கள் அடிக்கடி நடக்குது.. ஆனா வீரப்பன் கதையை 5 பேர் படமா எடுத்தாலும் ஒரு ஆர் கே செல்வமணியால மட்டும் தான் பிரம்மாண்டமான வெற்றி கண்ட கேப்டன் பிரபாகரனைத்தர முடிஞ்சுது.அதனால எடுத்துக்கற கரு எந்தளவு முக்கியமோ அதை விட ரொம்ப முக்கியம் அதை எப்படி மக்கள்ட்ட எடுத்து சொல்றோம்கற திரைக்கதையும்,எடுக்கப்படும் விதமும்.. வாச்சாத்தி உண்மை சம்பவ கதையை மையமா வெச்சு எடுக்கப்பட்ட கதை எப்படி எடுத்திருக்காங்கன்னு பார்க்கலாம்.

மனிதனோட குணாதிசியம் தனியா இருக்கறப்ப ஒரு மாதிரியும் , கூட்டமா இருக்கறப்ப வேற மாதிரியும் சிந்திக்கும்னு மனோதத்துவ நிபுணர்கள் சொல்றாங்க, உதாரணமா 8 பெண்கள் இருக்கற ஒரு காலேஜ் கேட் வாசல்ல ஒரு  பையன் மட்டும் இருந்தான்னா அவன் ஒழுக்கமா, அடக்கமா இருப்பான், அல்லது அப்படி நல்லவனாட்டம் நடிப்பான், ஆனா அதே இடத்துல 20 பசங்க இருந்தா அவங்க பண்ற அலப்பறை இருக்கே?

அது போல் தான் இந்த காட்டிலாகா அதிகாரிகள், போலீஸ் ஆஃபீசர்ஸ் எல்லாருமே.. அதிகமான மக்கள் நடமாட்டம் இல்லாத, மீடியாக்கள் கவனத்துக்கு வராத ஒரு குக்கிராமத்துல யாருக்கு தெரிஞ்சுடப்போகுதுங்கற அதிகார மமதைல செஞ்ச அட்டூழியங்கள் தான் கதை..

வாச்சாத்தி கிராமத்துல ஒரு பழக்கம்,அந்த கிராமத்துல எந்த பொண்ணு வயசுக்கு வந்தாலும் உடனே அந்த ஊர்ல இருக்கற வனத்துறை அதிகாரி டேஸ்ட் பார்த்துடுவார்.. ( அந்தக்கால ராஜாக்கள் அந்தப்புரம் அமைச்சதே இந்த நாட்டு நலன் பணிக்காகத்தான் )ஒரு முறை அந்த ஊர் தலைவர் பொண்ணு வயசுக்கு வருது.. அவசர அவசரமா அவர் தன் பெண்ணுக்கு முறைமாமனையே  கட்டி வெச்சுடறார்..

ஆனா முதல் இரவு நடக்கறதுக்கு முன்னமே அந்த அதிகாரி ஆட்களோட வந்து கலாட்டா பண்றார்.. விறகு வெட்டி வாழ்க்கை நடத்தும் ஜனங்களை சந்தன மரம் வெட்டி பதுக்கி வெச்சிருக்கறதா குற்றம் சாட்டறார்.. உண்மைல அவர் தான் அந்த வேலையை பண்றார்.. 

விசாரணை பண்ண வந்த 4 காட்டிலாகா அதிகாரிகளை ஊர் மக்கள் காரசாரமா பேசி அனுப்பறாங்க.. அதனால வெறி கொண்ட வேங்கைகளா அவங்க  2 லாரி நிறைய போலீஸ் ஆட்கள், வனத்துறை ஆட்களை கூட்டிட்டு வந்து கிராமத்தில் இருக்கற பெண்களை எல்லாம் கேங்க் ரேப் பண்ணிடறாங்க.. விசாரணை செய்ய கூட்டிட்டுப்போறோம்னு சொல்லி இந்த அக்கிரமம் நடக்குது.. 

சமூக நல ஆர்வலர்கள் கவனத்துக்கு இந்த மேட்டர் கொண்டு செல்லப்பட்டு சி பி ஐ விசாரணை நடக்குது.. ரிட்டயர்ட் ஆகப்போற ஒரு ஆஃபீசர் தன் கடைசி கேஸா இதை எடுத்துக்கிட்டு திறமையா ஆராய்ந்து பாதிக்கப்பட்டது உண்மைதான் என்று ரிப்போர்ட் தர்றார்.. 

அவ்ளவ் தான் கதை.. கோர்ட்ல கேஸ் நடந்த விதம்,சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என எதுவும் காட்டலை..

ஹீரோ தண்டம்.. ஹீரோயின் சுமார் அழகு நல்ல நடிப்பு.. வில்லன் நடிப்பு பக்கா 



http://chennai365.com/wp-content/uploads/movies/Vaachchaaththi/Vaachchaaththi-Movie-Stills-001.jpg
படத்தில் இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. சென்சார் பிரச்சனை வரும் என்ற பயம் இல்லாமல் இந்த கருவை எடுத்துக்கொண்ட தைரியத்துக்கு ஒரு ஷொட்டு.. அதே போல் சம்பவம் நடந்த அதே இடங்களில் படப்பிடிப்பை நடத்தியது..

2. ஹீரோயின் மற்றும் அவரது தந்தையாக வரும் ஊர்த்தலைவர் இருவரின் இயற்கையான நடிப்பு.. 

3. வில்லனாக வரும் காட்டிலாகா அதிகாரியின் பாடி லேங்குவேஜ் , தெனாவெட்டு, கம்பீரம் கலக்கல்

4. கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு,லொக்கேஷன்கள் அழகு.. சிறு மல்லிகை மல்லிகை பெண்ணானதே, தொடத்தொட மெல்ல ,மச்சக்கன்னி, காலம் செய்த கொடுமை, உயிராசை வார்க்கும் கனவுகள் என 5 பாடல்களும் படத்தில் கேட்கும் விதத்தில் சராசரி பாடல்களாக இருப்பது

http://www.cinepicks.com/tamil/gallery/vaachchaaththi/vaachchaaththi-4150.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், சில ஆலோசனைகள்

1. உண்மை சம்பவத்தில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் செய்த இந்த பாதக செயலை அதன் வீரியம் குறையாமல் படம் ஆக்கி இருக்க வேண்டாமா? என்னமோ சும்மா 38 பேரை மட்டும் வெச்சு ஷூட் பண்ணா அந்த எஃபக்ட் கிடைக்குமா?

2. ஓப்பனிங்க் ஷாட்ல ஒருத்தர் “ 30 வருஷமா என் அத்தை பொண்ணுக்காக காத்திட்டு இருக்கேன்கறார்.. அவருக்கு வயசு 24 மாதிரி தான் தெரியுது.... அந்த பொண்ணுக்கு 19 வயசு மாதிரி இருக்கு.. 

3.  வழக்கமாக  திருநெல் வேலி பாஷையில் அசத்தும் நெல்லை சிவா இதில் ஓவரோ ஓவர் ஆக்டிங்க்.. அலட்டல் சகிக்கலை.. 

4. கிராமங்களில் குறிப்பா கதை நடக்கும் தர்மபுரி மாவட்ட  பெண்கள் வயதுக்கு வரும்போது குடிசையில் வைத்திருக்கும் நாட்களில் அவர்கள் ரெட்டை ஜடை போடக்கூடாது, ஆனா ஹீரோயின் ரெட்டை ஜடைல வருது.. 

5. ஹீரோயினை காணோம்னு ஊர்மக்கள் சிலர், ஹீரோ தனித்தனியா தேடறாங்க.. ஹீரோ ஹீரோயினை கண்டு பிடிச்சதும் முதல் வேளையா ஊர் மக்கள்ட்ட தேடறதை  நிறுத்துங்க..கிடைச்சுட்டான்னு சொல்லாம கில்மா பண்ணிட்டு இருக்கார்... பொழப்பைக்கெடுத்துட்டு தேடிட்டு இருக்கறவன் கேனயனா?

6.  வருவாய்த்துறை-னு ஒரு பழைய வெள்ளை பேப்பர்ல எழுதி ஒட்டிக்கிட்டு ஒரு கார் வருது.. பொலீஸ் டிபார்ட்மெண்ட்க்கே அவமானம்.. 

7.  ஊர்ல கலவரம் நடக்கறப்ப ஆஜானுபாகான ஒரு கமிஷனரை சோப்ளாங்கி மாதிரி இருக்கற ஒரு ஆள் அடிக்க வர்றார்.. கமிஷனர் கெஞ்சிட்டு இருக்கார்.. அடிக்காதீங்க அடிக்காதீங்கன்னு .. அய்யோ ராமா.. 

8. மச்சக்கன்னி பாட்டு வரிகள், இசை ஓக்கே, ஆனால் பிக்சரைசேஷன் மகா ஒர்ஸ்ட்.. எந்த ஆளாவது சம்பங்கி கலர்ல ( கிட்டத்தட்ட காக்கி கலர் )பேண்ட் போட்டு, சிந்தாமணி கலர்ல சர்ட் போட்டுட்டு டூயட் பாடுவானா? ராமராஜன் கூட அப்படி செய்ய மாட்டார்.. 

9. போலீஸ் வருது.. ஒளியறவங்க வீட்டுக்கொல்லைல, பின் பக்கம் ஒளிவாங்க, அல்லது ஓடிடுவாங்க, ஆனா ஹீரோயின் வீட்டின் முன்னால கதவுக்குப்பின்னால ஒளியறாங்க.. அவ்வ்வ் வ்
\
10. மேடைல சமூக ஆர்வலர் ரொம்ப சீரியசா இந்த வாச்சாத்தி பிரச்சனையை பேசறார், கூட இருக்கறவர் ஏதோ ஜோக் கேட்ட மாதிரி சிரிக்கறார்.. ஏன்?

11.  சி பி ஐ ஆஃபீசரா வர்ற ஒய் ஜி மகேந்திரன் என்னமோ பழநி காவடி எடுக்கற ஆள் மாதிரி லுங்கி கட்டிட்டு வர்றார்.. கெத்தா காட்ட வேணாம்?

12. வில்லனா வர்ற காட்டிலாகா அதிகாரி சி பி ஐ ஆஃபீசர் வர்றார் நம்ம கேஸை விசாரணை பண்ண என பம்மிக்கிட்டே சொல்றார் தன் சக அதிகாரிகள் கிட்டே.. ஆனா அவர் நேர்ல வந்ததும் நேரடியா சி பி ஐ ஆஃபீசரை மிரட்றார்.. யாராவது அப்படி மிரட்டுவாங்களா? எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கற கணக்கா.?

13.  ஹீரோ மன நிலை பாதித்து இருக்கறப்ப ஹீரோயின் ரேப் செஞ்ச மேட்டர் அவன் கிட்டே சொல்ல வேணாம்கற முடிவை சொல்ற சீன்ல “ அவனே ஒரு மெண்ட்டல்.. அவன் கிட்ட எந்த அதிர்ச்சியான செய்தியையும் சொல்ல வேணாம்னு வசனம் வருது.. அதை உணரும் பக்குவம் இருந்தா அவன் எப்படி மன நிலை குன்றியவன் ஆவான்?

14.சி பி ஐ ஆஃபீசரா வர்ற ஒய் ஜி மகேந்திரன் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட வர்றப்ப வெறும் கையை வீசிட்டு வர்றார்.. ஃபோட்டோ எதும் எடுக்கலை.. ஒரே ஒரு வளையல் துண்டை மட்டும் எடுத்துட்டு போயிடறார்.. அடப்பாவமே, சி பி ஐ என்றால் அவ்ளவ் கேவலமா?

http://123tamilgallery.com/images/2011/12/Vaachchaaththi-543.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ராக்காயி, நீ எப்போ வயசுக்கு வரப்போறே?

சுத்தம், நான் வயசுக்கு வந்து 30 வருஷம் ஆகுது..

சொல்லவே இல்ல? ( ந்க்கொய்யால, போஸ்டர் அடிச்சு ஒட்டுவாங்க இரு )

2.  அக்கா, வரிசையா ஆம்பள புள்ளயா பெத்துப்போடறியே, நீ பெத்த 9 குழந்தைகளும் ஆம்பள பசங்க, இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம் ஆகாது போல.. ( டேய், நீ ஆப்பிரிக்கா போயிடு, உங்கக்காவை சீனா அனுப்பு )

3. ஆம்பளைங்க எல்லாரும் தலை மறைவாயிடுங்க, பொண்ணுங்களை யாரும், எதுவும் செய்ய மாட்டாங்க..

4.  ஆஃபீசர்ஸ். எதுக்காக லேடீஸை அழைச்சுட்டு போறீங்க?

அவங்க தான் உண்மையை சொல்லுவாங்க..

5. போலீஸ் காரரே, உங்க துப்பாக்கில சுட லைசன்ஸ் தேவை, ஆனா எங்க துப்பாக்கில லைசன்ஸே தேவை இல்லை, டப்னு சுட வேண்டியதுதான்..

6.  இவ்ளவ் ஃபாரஸ்ட் ஆஃபீசருக்குத்தெரியாம, போலீஸ் ஆஃபீசருங்க அறியாம இந்த அப்பாவி ஜனங்க எதையும் மறைச்சு வெச்சிருக்க வழியே இல்லை..


விழிப்புணர்வு ஊட்டுகிறேன் பேர்வழி என படம் எடுத்த இயக்குநர் முதலில் ஒரு படத்தை எப்படி எடுக்கனும்கற விழிப்புணர்வை பெறனும்..


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - டி வி ல போட்டா பார்க்கலாம்.. ( 18 வயதுக்கு மேற்பட்டவங்க )

 ஈரோடு ஸ்டார் தியேட்டரில் படம் பார்த்தேன்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (10.2.2012) - 7 படங்கள் முன்னோட்டம்

இந்த வாரம் 6 தமிழ்ப்படங்களும், ஒரு ஆங்கிலப்படமும் ஆக மொத்தம் 7 படங்கள் ரிலீஸ் ஆகுது.. இதுல 3 தேறும்னு நினைக்கறேன்..பரபரப்பான படமா வாச்சாத்தியும், செல்வராகவன் வயிற்றில் புளியைக்கரைக்கும் படமாக ஒரு நடிகையின் வாக்கு மூலம் படமும், பிரகாஷ் ராஜின் பேர் சொல்லும் படமாக தோனியும்  அமையும்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLz3gJMm2NH-kd8zL9DKfvsQKWRnrnXwdZFSSTB3Wxzshbk1pnLc3bJNhDl5igCIcvPaBcharS-bEi6p9pcIICTV91_-m2atwNPN5BBE_xbHnJ9tM2r9isAN-mVNddsTBZgfWr7vPXV4PV/s640/Vaachchaaththi+Movie+Posters.jpg
1. வாச்சாத்தி - அண்மைக் காலங்களாக வெள்ளித்திரையில் உண்மைச் சம்பவங்கள் திரைப்படமாக உருவாவது தொடர்ந்து வருகிறது. இவ்வரிசையில் வாச்சாத்தி மலைக்கிராம சம்பவமும் படமாக வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க வாச்சாத்தியிலேயே படமானது என்பது கூடுதல் சிறப்பு.

அறிமுக நாயகன் ரமேஷ் ,நடிகை தர்ஷனி ,ஒளிப்திவாளர் குரு சில்வா ,அறிமுக இசையமைப்பாளர் ஜாக்சன், முன்னணி நடிகர்கள் மகேந்திரன், பாண்டு ஆகியோருடன் நெல்லை சிவா, பாபு ஆனந்த், கொட்டாச்சி, அப்புராஜ் மற்றும் நடிகை ஷகீலா என்ற குழுவுடன் இயக்குனர் ரவித்தம்பி இப்படத்தை இயக்குகிறார்.

 பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்ட இந்த வழக்கு பற்றிய நாம் அறியாத பல உண்மைகள் இந்தப்படத்தில்  வெளி வரும்..ஈரோடு ஸ்டாரில் படம் ரிலீஸ்

 http://www.indiancinemagallery.com/Gallery2/d/706083-1/Oru+Nadigayin+Vakku+Moolam+Audio+Launch.jpg


2. ஒரு நடிகையின் வாக்குமூலம் -சோனியா அகர்வாலின் நடிப்பில்  வெளியாகி இருக்கும் ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்திற்கு யூஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. முட்டலும் மோதலுமாக எப்படியோ தணிக்கை சான்றிதழை பெற்றிருக்கும் இப்படத்திற்கு சினிமாக்காரர்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் உருவாகலாம் என்று படத்தின் தயாரிப்பாளர் புன்னகை பூ கீதா கூறியிருக்கிறார்.

அந்த அளவுக்கு சோனியா அகர்வாலின் கதாபாத்திரம் ஒரு பரபரப்பை ஏற்படுத்துமாம். அதே சமயத்தில் மக்கள் இப்படத்தை பாராட்டவும் தவற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும் புன்னகை பூ கீதா படத்தை பற்றி கூறுகையில், “எந்த ஒரு தொழிலிலும் நல்லது இருக்கும், கெட்டதும் இருக்கும். சினிமாவிலும் நல்லதும், கெட்டதும் சேர்ந்தே இருக்கிறது. அதைத்தான் பதிவு செய்திருக்கிறோம்.


சி.பி -  >> மக்கள் இப்படத்தை பாராட்டவும் தவற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும் புன்னகை பூ கீதா

 ஹி ஹி செல்வராகவனுக்கு படத்துல சோனியா ஆப்பு வெச்சிருக்காங்களா?ன்னு பார்க்கத்தான் பாதிப்பேர் படத்துக்கு போவாங்க 


இதற்கு முன்பு நான் எடுத்த படங்களில் தவறான கருத்துக்களை பதிவு செய்யவில்லை. நானும் ஒரு பெண் என்பதால் கவர்ச்சியின் எல்லை எது? ஆபாசம் எது? என்று தெரியும். அதை மீறி எப்போதும் நான் படம் எடுக்க மாட்டேன்.” என்றார்.




இப்படம் வெளியான பிறகு இப்படத்தின் இயக்குநர் ராஜ்கிருஷ்ணா இயக்கும் மற்றொரு படத்தை தயாரிக்க இருக்கும் கீதா, இரண்டு நட்சத்திர நடிகர்கள் மற்றும் நட்சத்திர இயக்குநர்களை வைத்து மேலும் இரண்டு படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணா, ஈரோடு ஸ்ரீநிவாசா ஆகிய 2 தியேட்டர்களில் ரிலீஸ்

http://images.supergoodmovies.com/PrakashRajDhoniFirstLook_3Jan2012.jpg

3. தோனி -   பிரகாஷ்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'தோனி'.வங்காள மொழியில் வந்த படத்தின் தழுவல்..


இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.


பிரகாஷ்ராஜ்.  இப்படத்தின்  படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது
 

குழந்தை வளர்ப்பு மற்றும் படிப்பு குறித்து 'தோனி'யில் கூறி இருக்கிறாராம் , நண்பன் படத்துல சொன்ன அதே கருத்து ஆனா திரைக்கதை வேற. பையன் படிச்சு பெரிய ஆள் ஆகனும்னு அப்பா நினைக்கறார், பையன் ஒரு கிரிக்கெட் ப்ரியன் கம் டோனி பைத்தியம்... அவன் வாழ்க்கைல நடந்த சம்பவங்கள் தான் திரைக்கதை

பிரகாஷ்ராஜ். இப்படத்தின் கதையை கேட்ட உடனே படத்திற்கு இசையமைக்க

ஒப்புக் கொண்டாராம் இளையராஜா.
 

பிரகாஷ்ராஜுடன் ராதிகா ஆப்டே, 'தலைவாசல்' விஜய் மற்றும் பலர்

இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள்.
 

படத்தின் ஹைலைட் : பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.


சி.பி - நயன் தாராவையும் ஜோடி சேர்த்திருக்கலாம், நிஜ வாழ்க்கைல தான் சேர முடியல ஹி ஹி 

ஈரோடு அபிராமியில் ரிலீஸ்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWqOaCFZyjYrEK1l0_QSbPWpP7zaIbtSjl7sKubJ0JcDqE8hyyX6Q-TdZDlCRQ3myQh8Yxdb-43J94oWkFyWrks40WKCPvsuqCXGTgNw89rDVj9chfvveIprdWmKHEGrouo8W0A09PleRH/s1600/Vilayada+Vaa+Movie+Posters+%25282%2529.jpg

4.விளையாடவா - திரிபுர சுந்திரி சினி கிரியேசன்ஸ் சார்பில் உருவாகியிருக்கும் புதிய படம் "விளையாடவா". பாலாஜி ஹீரோவாக நடிக்க, திவ்யா பத்மினி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் பொன்வண்ணன், லிவிங்ஸ்டன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேரம் விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் டைரக்டர் கே.விஜயநந்தா.

நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி ஆகியோர் பாடல் வரிகள் எழுத, ஸ்ரீமுரளி இசையமைக்கிறார். திரிபுர சுந்தரி தயாரித்துள்ளார்.கேரம் விளையாட்டை மையப்படுத்தி படம் வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


சி.பி - கபடி, கில்லி, கேரம், ரன்னிங்க் என வரிசைப்படி வருது, அடுத்து அஞ்சாங்கல், பாண்டி ஆட்டம் பற்றி படம் வருமோ? 

ஈரோடு அண்ணா, சங்கீதா ஆகிய 2 தியேட்டர்களில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKLhpdkqp1STERH5D4CVDrMfAYbbuAPp1aGMnkq89-Zj6DXdh6EB6i5tiY9dwCL9u3Gl4ZYvAL2p_bBpxw4KCE39-JSOFHZh-i30WU4k5ynZUdBI9v9igRxpmXpNKRzvgaiLtomV_l4h0/s1600/Soozhnilai+Soolnilai+Songs+Free+Download+Poster.jpg

5. சூழ்நிலை -இந்தப்படத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கலை.. இசை தீனா .. இயக்குநர் கம் தயாரிப்பாளர் செந்தூரன்.. டி வி இசை மேடைகளில் பாடிய கே முரளி என்ற பாடகர் பாடிய இளந்தாரி இளந்தாரி என்ற பாடல் ஹிட் ஆகி உள்ளது..ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் ரிலீஸ்

http://picasamusic.com/musicimg/oru%20mazhai%20naangu%20saaral.jpg
6. ஒரு மழை நான்கு சாரல் - சிகே3 புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் கே. பத்ரி நாராயணன் தயாரிக்கும் படம் ஒரு மழை நான்கு சாரல்.

இதில் ரவி, சுதர்ஷன், கணா, சதீஷ் ஆகிய புதுமுகங்கள் நடிக்கின்றனர். நாயகிகளாக அனகா, ரம்யா ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் பிரகாஷ், சிங்கமுத்து, எம்.எஸ். அருள்மணி, கோவை செந்தில், ஷீலா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆனந்த் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

சோகத்தை அறியாத இருவர், போராட்ட வாழ்க்கை வாழும் இருவர் ஓரிடத்தில் இணைகின்றனர். நட்பை மட்டும் உறவாக கொண்ட அந்த நால்வருக்கும் லட்சிய போராட்டம் ஆரம்பமாகிறது. அதில் வென்றார்களா? என்பது கதை. நகைச்சுவை யுடனும் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத விறு விறுப்புடனும் திரைக் கதை உருவாக்கப்பட்டு உள்ளது.


சி.பி - யூகிக்க முடியாத திரைக்கதைன்னு தான் எல்லாரும் சொல்றாங்க, ஆனா பாருங்க படம் போட்டு 15 நிமிஷத்துலயே க்ளைமாக்ஸ் வரை எப்படி மூவ் ஆகப்போகுதுன்னு தெரிஞ்சுடுது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhumpSClIPNVyf_LJ2pq4sdADXDxJrAdRtpzWMyrgfCkHOV4tCCutAwFxb5urr54fq3uafGzNrTT5HBGtxDHwDWkKlEoxK3xWrebTTXtwBYOwOOtWW35gInJ84Abn758oXEMLVkKnqL7MAP/s320/Oru+Mazhai+Naangu+Chaaral.jpg

ஒளிப்பதிவு: டி. மகிபா லன், இசை: ஏ.டி. மேஹன், எடிட்டிங்: வேலாயுதம், சண்டைப்பயிற்சி: ஆக்ஷன் பிரகாஷ், நடனம்: சீனுப்பிரியா, பாடல்: சித்தார்த், தயாரிப்பு மேற்பார்வை: ஜோதிமணி.ஈரோட்ல தியேட்டர் எதுவும் இதுவரை புக் ஆகலை.


7. THE JOURNEY 2 THE MYSTERIOUS ISLAND VANESSAA HUDGENS-


. http://static.moviefanatic.com/images/gallery/journey-2-the-mysterious-island-vanessa-hudgens-character-banner.jpg

ஹீரோ தன் அம்மாவோட பாய் ஃபிரண்ட்டோட சேர்ந்து தன் தாத்தாவை கண்டு பிடிக்கறதுதான் கதை.. படம் பூரா ஒரு தீவுல நடக்குது போல.. ட்ரெயிலர் செமயா இருந்தது.. ஒளிப்பதிவுக்காகவே, லொக்கேஷன்களுக்காகவே படம் பார்க்கலாம் போல ,.. கூடுதல் போனஸா ஹீரோயின் நல்ல ஃபிகர் போல .. ( நாம எந்தக்காலத்துல ஃபிகரை நல்லாலைன்னு சொல்லி இருக்கோம்?

இந்தப்படத்தோட முதல் பாகம் "A Journey to the Centre of the Earth" (1964-ல் )), இப்போ வர்ற படம் இதனோட ரீமேக்கா? அதனோட செகன்ட் பார்ட்டா?ன்னு தெரியலை.. 3டில ரிலீஸ்.. ஆனா ஈரோட்ல 3 டி இல்லை.. ஈரோடு வி எஸ் பி ல படம் ரிலீஸ்..

http://www.makeushot.com/wp-content/uploads/2011/11/Vanessa-Hudgens2-Journey-2-The-Mysterious-Island.jpeg


டிஸ்கி -

ஆகவே செக்‌ஷன் 302-ன் படி - சிறுகதை -நேசம்+யுடான்ஸ் கேன்சர் விழிப்புணர்வுப் போட்டி

ஆகவே செக்‌ஷன் 302-ன் படி - சிறுகதை -நேசம்+யுடான்ஸ் கேன்சர் விழிப்புணர்வுப் போட்டி

கோர்ட் வளாகமே மகளிர் அமைப்புகளாலும், மனித உரிம கழகத்தினராலும் பரபரப்பாக கூச்சலுடன்,  இன்னும் கொஞ்ச நேரத்தில் கூண்டில் ஏற இருக்கும் தணிகைவேலுவுக்காய் காத்திருந்தது.

யார் இந்த தணிகைவேலு ?அவனுக்காக ஏன் இவர்கள் காத்திருக்கிறார்கள்? முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கைதானவனா? இல்லை எதாவது பெண்ணின் மானத்தை  காப்பாற்ற போய் ஜெயிலுக்கு போனவனா?

ம்ஹூம் வேறொரு பெண்மீது கொண்ட ஆசையினால் தாலி கட்டிய மனைவியையும், தன் ஒரே வாரிசான 24 வயது மகளை அவள் நிச்சயதார்த்த தினத்தன்று எரித்து கொன்ற கொலைக்காரன்.

அவனை தூக்கில் இட வேண்டிதான் இத்தனை பேரும் சத்தமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

போலீசின் வண்டியிலிருந்து இறங்கும் தணிகைவேலுவை அடிக்க வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தி அவனை பாதுகாப்பாய் கோர்ட் வளாகத்திற்குள் கொண்டுவருவதற்குள் போலீஸ்காரர்களுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.

நீதிபதி வந்து இருக்கையில் அமரும்வரை அவனை பிய்த்து எடுக்குற சான்ஸ் கிடைக்காதான்னு  எல்லாரும் காத்து இருந்தவங்க நீதிபதி வந்ததும் அமைதியானார்கள்.

நீதிபதி: வழக்கை ஆரம்பிக்கலாம்.

அரசு வக்கீல்: யுவர் ஆனர்,இதோ கொலை குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிற்கும் தணிகைவேலு காதலித்து கல்யாணம் கட்டிக்கிட்டு, 25 வருசம் ஒண்ணா  வாழ்க்கை நடத்திய  மனைவியையும், ஆசையாக வளர்த்த ஒரே மகளையும் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்ததால் அந்த பெண்ணின் நிச்சயதார்த்தன்னிக்கு எரித்து கொலை செய்த கொடூர மனம் கொண்டவன்.

நீதிபதி: இதை உங்களால் நிரூபிக்க முடியுமா? அதற்கு சாட்சிகள் இருக்காங்களா?

அரசு வக்கீல்: முடியும், தணிகை வேலுவின் பக்கத்துவீட்டில் இருக்கும் ”கோகிலா”வை விசாரிக்க அனுமதிக்குமாறு வெண்டிக்கொள்கிறேன்.

நீதிபதி: சரி, விசாரிக்கலாம்

அரசு வக்கீல்:என்ன நடந்ததுன்னு சொல்லுங்கம்மா.

கோகிலா: சார், அந்தம்மா பேரு தங்கம். பேருக்கேத்த மாதிரி குணத்திலும் தங்கம் சார், அந்த பொண்ணோட பேரு செல்வி. எம்.சி.ஏ படிச்சு, வெளிநாட்டு கம்பெனில வேலை செஞ்சாலும் அடக்கமான பொண்ணு சார். தணிகைவேலு ஐயாவும் ரொம்ப நல்லவர்தான், அக்கம் பக்கம் வீட்டாரோட நல்லா பழகுவாங்க. எல்லா பெண்களையும் தாயா, மகளாதான் டிரீட் பண்ணுவார். இப்படி ஒரு குடும்பம் நமக்கு அமையலையேன்னு எங்க ஏரியாவுலயே எல்லாரும் பொறாமைப்படுற மாதிரி தான் வாழ்ந்தாங்க.

இதெல்லாம் 3 மாசம் முன் வரைக்கும்தான். குடும்பத்தோட திருப்பதிக்கு போய்ட்டு வரும்போது ஆக்சிடெண்ட் ஆச்சு சார். அப்போ அந்தம்மாவுக்கு பலத்த அடி பட்டு ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்து கொஞ்ச நாளில் நல்லபடியா திரும்பி வந்தாங்க.

ஹாஸ்பிட்டலில் அந்தம்மா தங்கியிருந்த சமயத்துல அந்த ஹாஸ்பிட்டலில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த நர்ஸ் கூட எதோ கசமுசா ஆகிடுச்சு போல. வாரத்துல ஒரு நாள் , அந்த பொண்ணு ஆபீஸ் போனதுக்கப்புறம் அந்த நர்ஸ் வீட்டுக்கு வரும் சார். ரெண்டு மணி நேரத்துக்கும் மேல இருக்கும். அப்போ அவங்க வீட்டுல கசமுசான்னு சத்தம் வரும். போகும்போது அந்த நர்ஸ் உடை கலைஞ்சு, ஒரு மாதிரியா களைப்பா போகும் சார்.

சம்பவம் நடந்தன்னிக்கு செல்விக்கு நிச்சயதார்த்தம் சார். எல்லாரும் மண்டபத்துக்கு போக ரெடியாகிட்டு இருந்தோம். சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு எல்லாரும் தணிகைவேலு வீட்டுல இருந்தோம். அந்த நர்சும் வந்திருந்தாங்க. நர்சும், தங்கம்மாவும், தணிகைவேலுவும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அந்த ரூமுக்கு போன செல்வியம்மா சத்தமா என்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்க. அது ஏசி ரூம். சத்தம்தான் கேட்டுதே தவிர என்ன பேசுறாங்கன்னு தெரியல.

கொஞ்ச நேரத்துல நர்ஸ்  வெளில வந்து கிளம்பி போய்ட்டாங்க. தணிகைவேலு ஐயா ரூமுக்குள்ள இருந்து வெளிய வந்து மண்ணேன்ணெய் கேன் எடுத்துக்கிட்டு ரூமுக்குள்ளாற  போனார். போன கொஞ்ச நேரத்துல திடீர்னு செல்வி அலறுன சத்தம் கேட்டுது. தங்கம்மாவும் அலறும் சத்தம் கேட்டுது. நாங்களெல்லாம் கதவை உடைச்சுக்கிட்டு உள்ள போய் பார்த்தா..., செல்வியும், தங்கம்மாவும் எரிஞ்சுக்கிட்டு இருந்தாங்க. செல்வி அப்பாவை பிடிச்சு இழுத்துக்கிட்டு இருந்தா..., நாங்க எவ்வளவோ போராடி பார்த்தும் செல்வியும், தங்கம்மாவும்  செத்துட்டாங்க. தணிகை வேலு ஐயாவை மட்டும்தான் லேசான தீக்காயத்தோடு காப்பாத்த முடிஞ்சுது, இதுதான் ஐயா நடந்தது.

அரசு வக்கீல்: நன்றிம்மா நீங்க போலாம். அடுத்து தணிகை வேலுவோட தெரு முனையில  தள்ளு வண்டில துணி அயர்ன் பண்ணும் முத்துவை விசாரிக்க வேண்டுகிறேன்

நீதிபதி: சரி  முத்துவை விசாரிக்கலாம்

அரசு வக்கீல்: முத்து உனக்கு தெரிஞ்சதை சொல்லுப்பா.

முத்து: ஐயா,அந்த நர்சம்மா, ஒவ்வொரு வாரம் செவ்வாய் கிழமை டான்னு மூணு மணிக்கு ஆட்டோவுல வந்து தெருமுனைல இறங்கி யாருக்கோ போன் பண்ணும் சில சமயம் நேரா தணிகைவேலு சார் வீட்டுக்கு போய்டும். சில சமயம் தெருமுனைலயே காத்திருக்கும். நான் என்னடான்னு சில நாள் மண்டையை பிச்சுக்கிட்டது உண்டு. அதற்கப்புறம்தான் தெரிஞ்சுச்சு. செல்வியம்மாவுக்கு ஷிப்ட் முறைல வேலை. செல்வியம்மா போறதுக்காக காத்திருந்துட்டு வீட்டுக்கு போறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன் சார்.

அரசு வக்கீல்: தணிகைவேலுவுக்கும், அந்த நர்சுக்கும் இடையிலான கள்ள உறவை நிரூபிக்க இந்த இரு சாட்சிகளே போதுமானதாக இருக்கும்ன்னு நினைக்குறேன். கோர்ட்டுக்கு இன்னும் சாட்சிகள்  தேவைப்பட்டால் சமர்ப்பிக்க தயாராய் உள்ளேன்.  தணிகைவேலுவுக்கும் நர்சுக்கும் இருந்த ரகசிய உறவும், தணிகைவேலு தன் மகளையும், மனைவியையும் எரிச்சு கொன்றது இப்போதளித்த சாட்சிகளின் வாக்குமூலங்களின் மூலம் தெளிவாகிறது..என்வே குற்றவாளிக்கு அதிகப்பட்ச தண்டனையான மரண தண்டனை அளிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீதிபதி: மிஸ்டர் தணிகைவேலு, நீங்க அமைதியா இருந்தா எப்படி ?உங்களுக்குன்னு வாதாட எந்த வக்கீலையும் நீங்க நியமிக்கலை. வாயை திறந்து பேசவும் மாட்டேங்குறீங்க. எதாவது சொன்னால்தானே வழக்கை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியும்.?

முதன் முறையாக வாய்திறந்த தணிகைவேலு..., என் மனைவி மற்றும் மகளின் சாவுக்கு முழு காரணமும் நானே. அதனால் என்னை தூக்கில போட்டுடுங்க ஐயான்னு முகத்தை மூடிக் கொண்டு அழுதான்.

நீதிபதி: தணிகைவேலுவே குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டாலும் நீதிமன்றத்திற்கென்று வழிமுறைகள் சிலது  இருக்கு.அதனால அரசே குற்றவாளிக்கு ஆதரவா வாதாட ஒரு வக்கீலை நியமிக்குது. அவர் அடுத்த வாரம் தன் தரப்பு வாதத்தை முன் வைப்பார். அதுவரை கோர்ட் தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன்.

அடுத்த வாரம்

தணிகைவேலுவின் வக்கீல்: கணம் நீதிபதி அவர்களே,  எனது கட்சிக்காரரான தணிகைவேலுவின் மீது சாட்டப்பட்ட குற்றம் முற்றிலும் தவறானதாகும். அவருக்கு எதிராக சொல்லப்பட்ட சாட்சிகள் ம் சொன்னவை அனைத்தும் உண்மையானாலும், அவை அனைத்தும் தவறான ரீதியில்  புரிந்து கொள்ளப்பட்டவையே.

நீதிபதி: அவற்றை உங்களால் நிரூபிக்க முடியுமா?

தணிகைவேலுவின் வக்கீல்: முடியும் ஐயா, எனது சாட்சியாக தணிகைவேலுவுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்ட அந்த நர்சை முதலில் அழைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீதிபதி: அனுமதி அளிக்கின்றேன்

தணிகைவேலுவின் வக்கீல்: உங்க பேரு?

நர்ஸ்: என் பேர் ஜானகிங்க 

தணிகைவேலுவின் வக்கீல்: எங்கேம்மா வேலை செய்றீங்க?
நர்ஸ்: இந்திரா நர்சிங்க் ஹோம்ல


தணிகைவேலுவின் வக்கீல்: உங்களுக்கும் அவருக்கும் எப்படி பழக்கமேற்பட்டுச்சு?

நர்ஸ்: தங்கம் ஆக்சிடெண்ட்ல அடிப்பட்டு எங்க ஆஸ்பிட்டலில்தான் சேர்த்தாங்க. அப்போ அவர் பழக்கமானார்.

தணிகைவேலுவின் வக்கீல்: அப்பிடியா, சரி உங்களுக்கும் தணிகைவேலுவுக்கும் ரகசிய உறவு இருந்ததா எல்லாரும் சொல்றாங்களே, அப்படியா?

நர்ஸ்: அப்படிலாம் இல்லை சார்.

அரசு வக்கீல்: அப்புறம் ஏன் அவங்க வீட்டுக்கு போனீங்க. நீங்க  அங்க போகும்போதெல்லாம் சண்டைன்னும், திரும்பி வரும்போது  உடை களைஞ்சு வருவதாக எல்லரும் சொன்னாங்களே? 

நர்ஸ்: நீதிபதி ஐயா, இந்த நேரத்துல உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்ல விரும்புறேன். 

நீதிபதி: சொல்லுங்கம்மா.

நர்ஸ்: ஐயா, தங்கத்தை எங்க ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கும்போது அவங்க உடம்பை செக் பண்ணோம். அப்போ, அவங்களுக்கு மூளையில புத்து நோய் இருப்பது கண்டுபிடிச்சோம். 

அவங்க அடிக்கடி தலைவலி வந்து அலட்சியபடுத்தி இருக்காங்க.  அதுமட்டுமில்லாம அவங்க 40 வயசுல அடியெடுத்து வைக்குறவங்க வருசத்துக்கு ஒருமுறை உடம்பை ஃபுல் செக்கப் செஞ்சுக்கனும்ன்னு அரசாங்கம் எவ்வளவோ அறிவிப்புகள் செய்யுது.  இருந்தாலும் இப்படி படிச்சவங்களே இப்படி அலட்சியப்படுத்தியதன் விளைவு  நோய் முற்றி போய் சிக்கிச்சை கொடுத்தாலும் பலனில்லாத நேரத்துல இருக்குறது தெரிஞ்சது. 

     முதல்லயே ஃபுல் செக்கப் செய்திருந்தா.., ஆரம்ப கட்டத்துலயே நோயை கண்டுப்பிடிச்சு குணப்படுத்தியிருக்கலாம். பெண்கள் தலவலி, வயிற்றுவலி, மார்பு வலின்னு வந்தால் ஏன் வீண் செலவுன்னு ஆஸ்பிட்டலுக்கு போகாம கைவைத்தியம் செஞ்சுக்குவாங்க. அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுங்களா? பெண்கள் அலட்சியப்படுத்தினாலும் ஆண்கள் அவங்களை வற்புறுத்தியாவது ஆஸ்பிட்டலுக்கு கூட்டி போய் காட்டனும் சார்.

சிகரெட், புகையிலை யூஸ் பண்றவங்களுக்குத்தான் புற்று நோய் வரும், மற்ரவங்களுக்கெல்லாம் கேன்சர் வராதுன்னு தப்பான நம்பிக்கை மக்களிடையே பரவுனது வருத்தமான விஷயம்.. 

   அப்போதான் தங்கம் , எனக்கு இருப்பது ஒரே பொண்ணு அவளுக்கு கல்யாணம் கட்டுறவரைக்கும் எனக்கு நோய் இருப்பதை சொல்லாதீங்க. சொன்னால்,என் பொண்ணு மனசொடிஞ்சு போய்டுவாள்ன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டதால யாருக்கும் தெரியாம இந்த நோய் இருப்பதை மறைச்சுட்டோம். அதற்கான ஆதாரம் இந்த ஃபைலில் இருக்கு சார். அவங்களுக்கு வந்த நோய், அதற்கெடுத்த டெஸ்ட்டுங்க, குடுத்த மருந்துங்க, என்னென்னிக்கு குடுத்ததுன்ற விவர்ங்களும் இந்த ஃபைலில் இருக்குங்க.

 நான் வட நாட்டுக்கு குடும்பத்தோட டூர் போனதால் இந்த விசயங்கள் எனக்கு தெரியாம போய்டுச்சு. அதனாலதான் முன்னாலயே வந்து இந்த விவரங்களை சொல்லியிருப்பேன் சார்.

  நோயோட தீவிரத்தால அவங்களுக்கு கண்பார்வை மங்கல், ஞாபகமறதி நோய்லாம் வர ஆரம்பிச்சது. அடிக்கடி ஹாஸ்பிட்டலுக்கு வந்து பார்த்துக்கிட்டால் பொண்ணுக்கு தெரிஞ்சு போய்டுமோன்னு என்னை வீட்டுக்கே வரச்சொல்லி எங்க டாக்டர் அட்வைசில நான் டிரீட்மெண்ட் எடுதேன். இதான் நடந்ததே தவிர அவங்கள்லாம் சொல்ற மாதிரி ஒண்ணுமில்லை சார்.

நீதிபதி: தணிகைவேலுவுக்கும் நர்சுக்கும் தவறான உறவு இல்லைன்னு தெள்ளத்தெளிவா புரிஞ்சுடுச்சு. அப்புறம் ஏன் ரெண்டு பேரையும் கொலை பண்ணார். மிஸ்டர் தணிகைவேலு இப்பவாது  சொல்லுங்க அன்னிக்கு என்ன நடந்தது.

தணிகைவேலு: சார், அன்னிக்கு நான், நர்ஸ் ஜானகி, என் மனைவிலாம் பேசிக்கிட்டு இருந்ததை என் பொண்ணு எப்படியோ கேட்டுட்டா. அவளுக்கு அவ அம்மாவோட நோய் தெரிஞ்சு போச்சு. இந்த நிலைமைல எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொல்லி என் பொண்ணு ரொம்ப பிடிவாதம் பிடிச்சா. இப்படிலாம் பிடிவாதம் பிடிச்சால் நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு  மண்ணென்னெய் கொண்டுவந்து என்மேல ஊத்திக்கிட்டு  மிரட்டினேன்.

    என்னாலதானே இவ்வளவு பிரச்சனை நான் செத்து போய்டுறேன் ந்னு என் மனைவியும் தன் மேல ஊத்திகிட்டு பத்த வச்சுக்கிட்டா. காப்பாற்ற போன என் மகளையும் தீப்பிடிச்சுடுச்சு. ஆனால், அந்த தீக்கும் என் மேல் என்ன கோவமோ தெரியலை. என்னை பொசுக்கலை. இப்பவும் நான் வாயை தொறந்து சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் ஒரு நல்ல பொண்ணு மேல களங்கம் வந்துடக்கூடாதேன்னுதான் இப்பவாச்சும்  சொல்றேன். என்னை தூக்குல போட்டுடுங்க. என் குடும்பத்தோட நானும் போய் சேர்ந்துடுறேன் ப்ளீஸ்ன்னு கதறி கையெடுத்து கும்பிட்டு அழ ஆரம்பித்தார்..,


நீதிபதி: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அறிந்தப்பின் தணிகைவேலுவின் மேல் எந்த குற்றமுமில்லை என்பது தெரிகிறது. இருந்தாலும் தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக அவரை தண்டிக்க வேண்டியுள்ளது. அவர், காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு வருடம்  சேவை செய்ய வேண்டுமென தீர்ப்பு வழங்குகிறேன்.

இரண்டு வருடங்களுக்கு பின்..., 
தண்டனைக்காலம் முடிந்தும் வெளியே போக மனசில்லாம, புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வேண்டிய சிறு சிறு உதவிகளை செய்தும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கதை சொல்லி, அவரக்ளுடன் விளையாடி மகிழ்வித்து வயதானவர்களுக்கு ராமாயாணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படித்து காட்டியும், தன் சொத்து முழுதும் அம்மருத்துவமனைக்கு எழுதி வைத்து  அவர்கள் உருவில் வாழும் தன் மகளுடனும் மனைவியுடனும் சந்தோசமாய் தன் இறுதி நாளை கழிக்கின்றார்.