Thursday, January 19, 2012

பவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி கலாட்டாக்கள்

http://www.uyirmmai.com/Images/AuthorImages/va.mu.komu.jpg

1. தலைவர் சரியான சிக்கன் பிரியரா இருக்கார்னு எப்படி சொல்றே?

ரைட்டர் வாமு கோமுவை தெரியுமா?ன்னு கேட்டா ஈமு பிராய்லர் வேணா தெரியும்கறாரே?

------------------------------------------

2.  எல்லா மட்டத்துலயும் எனக்கு ஆளுங்க இருக்காங்க.. 

எல்லாரும் மட்டமான ஆளுங்கனு சொல்லுங்க./. 

---------------------------------

3. சாமியார்க்கு 2 செட்டப்னு எப்படி சொல்றே?

மங்களம் உண்டாகட்டும், ஜெயம் உண்டாகட்டும்னு  2 லைனையே திருப்பி திருப்பி சொல்றாரே?

--------------------------------------

4.  ஈ என் டி ஸ்பெஷலிஸ்ட் ஏன் அலறி அடிச்சுட்டு ஓடறார்?

நான் பேசறது எனக்கே கேட்க மாட்டேங்குதுன்னு சொன்னேன்

----------------------------------

5. பால் எத்தனை வகைப்படும்?

ஆண்பால், பெண்பால், அமலா பால், லோக்பால் என 4 வகைப்படும் டீச்சர்.. 

-------------------------------------

http://mimg.sulekha.com/telugu/mogudu/images/stills/mogudu-pictures-074.jpg

6. மவுனகுரு படத்துக்கு தடை வருதாமே? ஏன்?

டைட்டில்ல ஒரு நாட்டோட பிரதமரையே நக்கல் அடிச்சா சும்மா விட்ருவாங்களா?

-------------------------------------

7.அர்ஜெண்ட்டினா - சிறு குறிப்பு வரைக.. 

அவசர புத்தி உள்ளவர்கள் அதிகம் இருக்கும் நாடு டீச்சர்.

--------------------------------------------

8. லோக்பால் சட்டத்தால் ஊழலை ஒழிக்க முடியுமா தலைவரே?


ராஸ்கல், கட்டம் கட்ட என் கிட்டேயே ஐடியா கேட்கறியா?

------------------------------------------

9. ஜட்ஜ் -  ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துடறதா உங்க மேல குற்றச்சாட்டு

நடிகை - ஸாரி யுவர் ஆனர், எங்கப்பா தூக்க மாத்திரை டிஸ்ட்ரிபியூட்டர் . அவர் தொழிலுக்கு ஹெல்ப் செஞ்சேன்.

--------------------------------------------------------

10. நம்ம எல்லோருக்கும் மேல ஒரு பவர்  இருக்குன்னு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியது தப்பா போச்சு..
ஏன் தலைவரே?

நன்றி-ன்னு பவர் ஸ்டார் சீனிவாசன் மெசேஜ் அனுப்பி இருக்கார்..

-------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHjjsPZvR4G_PreCHfDbiq88yThUcme7T1gBpXrBjXUAMhnvg3XwDmWWqkCVtDlLFjR12WwDGXLcGK6LDpKF05wmoNsML_9DDOj45JXAfR0fc8x4AJyxR1W9TyCzI-yVUezIA-gVM4fAA/s1600/tapsi-hot-stilss-in-mogudu-movie.JPG

11. எனக்கும், அந்த ஹீரோவுக்கும் எந்த கனெக்‌ஷனும் கிடையாது

பொய், 2 பேருமே ஏர்செல் கனெக்‌ஷன் தான் வாங்கி இருக்கீங்க.. 

---------------------------------

12.  மேடம், எதுக்காக கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து தங்குனீங்க?

காதலனுடன் ஒரே அறைல தங்க ஹோட்டல்ல ரூம் கிடைக்கலை

---------------------------------------

13. தலைவரே, ஊர்ல கலவரம் நடக்குது , என்ன பண்ன?

வேடிக்கை மட்டும் பாருய்யா..  நாளைக்கு நான் வந்து ஆறுதல் சொல்லிக்கறேன்.. 

--------------------------------------

14. தலைவர் திடீர்னு கூடன் குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கறாரே?ஏன்?


அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்க்கு வெளி நாட்ல இருந்து பணம் வருதுன்னு ஒரு நியூஸ் வந்ததாம்.. 


------------------------------------------

15. பத்திரிக்கை சுதந்திரத்தை தலைவர் ஏன் கண்டிக்கறாரு?

அவர் மேல ஏகப்பட்ட குற்றபத்திரிக்கை வந்தாச்சாம்.. 

-------------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0z_pC6L6gG2J9Esag1AwLvbh3qRGKx1FcqSNydxi6awpHh6jTt4MbyZhi9C6Fe2PZLuUWr0hh41EquCY3P4Jw3sMIeen8UsMNf7o3gAx0LQOWPVdCbOmXjuxRdcAzOguT5OmWTFW2sUY/s1600/Taapsee+Pannu+Latest+%252814%2529.jpg

16. ஸாரி சார்.. கால்ஷீட் ரொம்ப டைட்டா இருக்கு, டேட்ஸ் தர முடியாது..

மேடம், பக்கத்துல தானே இருக்கு, குனிஞ்சு லூஸ் பண்ணிக்குங்க

---------------------------------------

17.ஸாரி சார், ஃப்ளைட்ல இடம் இல்லை.. ஆல் டிக்கெட் ஃபுல்..

நோ பிராப்ளம் சார்.. ஸ்டேண்டிங்க்ல வந்துக்கறேன் 

---------------------------------------

18.  தலைவர் ரொம்ப வெளிப்படையானவர்னு எப்படி சொல்றே?

உண்ணா விரதம் இருக்கும் நேரம் காலை 9 டூ 12 , மதியம் 3 டூ 7 , இரவு 10 டூ 7 என போர்டு வெச்சிருக்காரே.. 

----------------------------------------

19. தலைவரே! மத்திய அரசின் செயல்பாடு எப்படி இருக்கு?

மத்திய அரசின் செயல்பாடு எங்கே இருக்கு?

---------------------------------------

20.   போலீசார் மீது கல்வீச்சு நடத்தி இருக்கீங்களே, ஏன்?

பாறாங்கல் வீச்சு நடத்தி இருக்கனும் , கைக்கு சாதா கல் தான் சிக்குச்சு


-----------------------------------

http://2.bp.blogspot.com/-I0sq7NvdB5Q/TkdearQ29qI/AAAAAAAACq8/qKLvuoAUeC0/s1600/Kajal+Agarwal_353.jpg

Wednesday, January 18, 2012

நாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -விமர்சனம்

http://www.bestactress.info/wp-content/uploads/2011/06/Keerthi-Chawla-hot-saree-navel.jpg 

நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு இந்த வருஷம் ஒப்பனிங்க்கே சரி இல்லை, நியூ இயர் அன்னைக்கு சண்டே, அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம் பொங்கல் என 2 சண்டே அநியாயமா அந்த நிகழ்ச்சி கட்.. அதுக்குப்பதிலா ஒரு மொக்கை புரோக்ராம் போட்டு கடுப்பேத்துனாங்க.. போன வாரம் பார்த்த அந்த நிகழ்ச்சி.. 


1. குறும்படத்தின் பெயர் -  விடுதி - குறும்பட இயக்குநர் பெயர் -  அருண் சக்தி முருகன் ( நாஞ்சில் விஜயன்)

ஓப்பனிங்க் ஷாட் ல பர பர நியூஸ் ஓடுது அதாவது ஒரு பிரபல காலேஜ் விடுதில ஒரு மாணவன் தற்கொலை செஞ்சுக்கிட்டான்.. அதை பற்றி சொல்றாங்க..

காலேஜை காட்றாங்க.. அங்கே 3 சீனியர் ஸ்டூடண்ட்ஸ்..  அவங்க பண்ற கலாட்டாக்கள், காமெடியா கொஞ்சம் காட்றாங்க.. அவங்க கிட்டே ஒரு பொண்ணு  ( ஏன் ஃபிகரு, ஜிகிடின்னு சொல்லலைன்னா அந்த அளவு பாப்பா ஒர்த் இல்ல ஹி ஹி )

வாலண்ட்ரியா  செல்வா ராகவன் ஆண்ட்ரியா போல் பழகுது.. பாப்பா  திடீர்னு பார்த்தா பாப்பா அந்த 3 பேரையும் கொலை செய்யுது.. 


 இப்போ பாப்பா ஃபிளாஸ்பேக் சொல்லுது.. பாப்பாவோட தம்பி.. கொஞ்சம் பெண்மை சாயல் கொண்டவர்.. அவன் இவன் விஷால் மாதிரி.. அவரை இந்த 3 பேரும் காலேஜ் ல ரேகிங்க் பண்ணி இருக்காங்க.. அவமானம் தாங்காம அவன் தற்கொலை செஞ்சுக்கறான்.. அவன் மரணத்துக்கு காரணமான இவங்க 3 பேரையும் அக்கா பழி வாங்கறதுதான் கதை.. 


இந்த மாதிரி ரிவஞ்ச் சப்ஜெக்ட் எடுக்கற எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்கறேன், வில்லன்களை காட்றப்ப ஆடியன்ஸுக்கு அவங்க மேல வெறுப்போ, கோபமோ வரனும், அப்போதான் அவங்க சாகடிக்கப்படறப்ப  ஒரு திருப்தி வரும்.. அவங்க பண்ற காமெடி சீன்லாம் காட்டிட்டு கொலை செய்யப்படறதை காட்னா எஃபக்ட் இருக்காது.. 

3 பேரும் கொலை செய்யப்படும் காட்சி ஓவர் வல்கர்.. 

மனதில் நின்ற ஒரே வசனம் - சீனியர்னா உங்களுக்கெல்லாம் என்ன கொம்பா முளைச்சிருக்கு?

http://chennai365.com/wp-content/uploads/actress/Keerthi_Chawla/Keerthi_Chawla_006.jpg


2. குறும்படத்தின் பெயர் -  ஒரு ஃபீலிங்க்  - குறும்பட இயக்குநர் பெயர் -  கார்த்திக்

ஓப்பனிங்க் செம காமெடியா இருந்துச்சு.. 2 ஃபிரண்ட்ஸ்.. ஒருத்தன் தம் அடிக்கறான், இன்னொருத்தன் புகை விடறான்,.. அந்த .. ஒருத்தன்   பபிள்கம் சாப்பிடறான், இன்னொருத்தன் குமிழி ( மொட்டுழி) விடறான்.. அவ்ளவ் க்ளோசாம் அடங்கோ...2 பேரும் ஜீரோ மார்க் தான் வாங்கறாங்க.. காலேஜ்ல..


அவ்ளவ் க்ளோசா இருக்கற 2 பேர்ல ஒருத்தன் ஒரு ஃபிகரை ரூட் போடறான்.. மேட்டரை அவ கிட்டே சொல்ல தயக்கம்.. அதனால அவன் ஃபிரண்ட் கிட்டே சொல்லி சொல்ல சொல்றான்.. அவன் போய் அந்த ஃபிகர்ட்ட இந்த மாதிரி இந்த மாதிரி இந்த மாதிரிங்க.. என் ஃபிரண்ட் உங்களை லவ் பண்றான்னு சொன்னதும் ஒழுக்கமான ஃபிகர் என்ன சொல்லனும்? எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு கட் பண்னனும், ஆனா ஃபிகர் சொல்லுது >நான் உங்களை லவ் பண்றேன், அவனுக்காக நீங்க தூது வந்தா எப்படி?ன்னு கேக்குது , அவன் ஷாக் ஆகிடறான்


ஃபிகரோட ஃபிரண்ட் ஜிகிடி கேக்குது ஏண்டி அப்படி சொன்னே? அதுக்கு  ஃபிகர் சொல்லுது, அப்போதாண்டி அவங்க 2 பேரும் அடிச்சுக்குவாங்க.. நம்ம கிட்டே வர மாட்டாங்க.. என்ன லாஜிக்கோ?

அப்புறம் பார்த்தா அந்த 2 பேருக்கும் கிடைக்காத அந்த ஃபிகர் ஒரு டப்பா மூஞ்சி பையனுக்கு கிடைக்குது.. 

வழக்கமான கதைதான், உருப்படியா செஞ்ச விஷயம் படத்துல நடிச்ச அந்த 2 உருப்படிகள் தான் ஹி ஹி 

ரசித்த வசனங்கள்

1. அவனுக்கு லவ்வா? அவனுக்கு ஒழுங்கா வடை சுடக்கூடத்தெரியாது..

2. அவனவன் லவ்வை அவனவனே போய் சொல்லுங்கப்பா... 

3. காதல்ங்கறது ஆயா சுட்ட வடை மாதிரி..  ஜாக்கிரதையா இருக்கனும் இல்லைன்னா எவனாவது கவ்விட்டு போயிடுவான், நட்புங்கறது ஆயா மாதிரி , எவனும் கண்டுக்க மாட்டான்..  ( எஸ் எம் எஸ் ஜோக்)


அப்புறம் குறும்படம் இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை படத்துல டயலாக்ஸ் ஓடறப்ப தேவைப்படாம பின்னணி இசை போடாதீங்க. எப்படி வசனம் புரியும்?

http://farm3.staticflickr.com/2088/2343213010_d5a36c9a38_z.jpg?zz=1


 3. குறும்படத்தின் பெயர் -  குவியம்   - குறும்பட இயக்குநர் பெயர் -  கிஷோர்

ஹீரோ ஒரு ஃபோட்டோ கிராஃபர், அவர் ஒரு ஃபோட்டோ மட்டும் இல்ல, பல ஃபோட்டோஸ் எடுப்பவர்.. ஒரு தடவை அவர் கண்ல, கேமரால எதேச்சையா ஒரு ஜிகிடி மாட்டுது.. அதை க்ளிக் பண்றாரு.. அந்த ஜிகிடி கிட்டே பிட்டை போடறாரு.. நீங்க மாடலிங்க்கா போஸ் தரனும்.. உங்க ஃபோட்டோ பார்த்துட்டு ஒரு பெரிய ஆங்கில பத்திரிக்கை ஓக்கே சொல்லி இருக்குன்னு பிட் போடறார்.. ஜிகிடி அதை நம்பிடுது ( பொதுவா இந்த பொண்ணுங்க உண்மையான பசங்களை நம்ப மாட்டாங்க, பொய் சொல்றவனுக்குத்தான் காலம், அவன் வண்டி வண்டியா பொய் சொல்லுவான், அதை நம்பிடும்ங்க அய்யா ஹய்யோ)


ஃபோட்டோ ஷூட் நடக்குது, பல கோணங்கள்ல படம் எடுக்கறார் ( அரக்கோணம், கும்ப கோணம் இப்படி இல்ல..:)2 பேருக்கும் லவ் க்ளிக் ஆகிடுது..
அப்புரம் ஒரு கட்டத்துல ஒரு விட்டத்துல, ஒரு சதுரத்துல ஹீரோயினுக்கு மேட்டர் தெரிஞ்சுடுதுன்னு , அப்புறம் ஏன் இப்படி கலைஞர் மாதிரி வாய்ல வர்றது எல்லாம் டகால்டியா இருக்கே?னு கேட்க அவர்  அதான் ஹீரோ டக்னு வடிவேல் மாதிரி பல்டி அடிச்சிடறார், உன்னை லவ் பண்ணேன், உன்னை டெவலப் பண்றதுக்காகத்தான் அப்படி பொய் சொன்னேன்கறார்.. உடனே ஜிகிடி சிரிச்சுக்கிட்டே ஓக்கே டன் அப்டினு சொல்லிடுது சுபம்.. ரொம்ப சிம்ப்பிள் லவ் ஸ்டோரி நீட்டா இருந்துச்சு ஹீரோயின் அழகும் , ஹீரோ நடிப்பும் ஓக்கே ரகம்.. 


ரசித்த வசனங்கள்


1. மேரேஜுக்காக 1000 பொய் சொல்லலாம்னு சொல்றாங்க, அப்போ லவ்வுக்காக மட்டும் பொய் சொல்லக்கூடாதா?


2. லவ் ஈஸ் ஸ்வீட் நத்திங்க் -LOVE IS  SWEET NOTHING( அப்டின்னா லவ்வுல ஸ்வீட் தவிர வேற எதுவும் இல்லைன்னு அர்த்தமா? காரம் சாப்பிட மாட்டாங்களா?) 


3. ஒரு நிமிஷம் இருங்க, கூலிங்க் கிளாஸ் போட மறந்துட்டேன் , அது லவ் க்கு ரொம்ப முக்கியம் ஹி ஹி 

மவுன ராகம் படம் மாதிரி ரொம்ப நீட்டா அழகா வந்ததா நடுவர்கள் சிலாகித்தார்கள்


டிஸ்கி - கீர்த்தி ஃபோட்டோஸ் போடலை, அதுக்கு சப்ஸ்டிடியூட்டா கீர்த்தி சாவ்லா ஃபோட்டோ  ... விமர்சனத்தை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கனும் என்பதை சொல்லும் வகையில் சானியா மிர்சா ஃபோட்டோ


டிஸ்கி  1 -

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3-

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 4 -

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

 

டிஸ்கி  5 -

பட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்


Tuesday, January 17, 2012

பட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்

 http://www.hindu.com/cp/2010/04/02/images/2010040250030102.jpgவசனகர்த்தா பிருந்தா சாரதியின் கவனம் ஈர்த்த இடங்கள்


1. அப்பா அடிச்சா திருப்பி அடிக்க முடியுமா? அதான் வாங்கிட்டேனே? அடி குடுக்கறதுக்கும், வாங்கறதுக்கும் பயப்படக்கூடாது..

2.  வெளில ஒருத்தனை தட்டிட்டேன்..

தட்டிட்டியா? என்ன? என்னை மாதிரியே பேசறே?

3.  உங்கப்பா இறந்துட்டாரு.. 

ட்ரான்ஸ்ஃபர் கேட்டிருந்தேன், சீக்கிரம் கிடைச்சிடும்னு சொன்னாரு.. இந்த டிரான்ஸ்ஃபர் தானா?

4.  அப்பா போலீஸ், தாத்தா போலீஸ் குடும்ப பாரம்பரியம் விட்டுப்போயிடக்கூடாதுன்னு நினைக்கறாங்க போல.. ( கலைஞர் அட்டாக்கிங்க்?)

5.  நீ ஒரு பயந்த ஆள்.. நீ போலீஸ். எல்லாரும் உன்னை பார்த்துத்தான் பயப்படனும்.. 

6. ஹலோ..  என்ன பண்றே?

படம் பார்த்துட்டு இருக்கேன்.. நீ?

சிலருக்கு படம் காட்டிட்டு இருக்கேன்..

7. ஆர்யா-  ஒண்ணும் பயப்படாத.. நான் இருக்கேன்..

மாதவன் - நீ இருப்பே.. நான் இருப்பேனா? 

( ஆனந்த விகடன் ஜோக் ரிட்டர்ன் பை வி சாரதி டேச்சு டாக்டர் ஜோக்)

8.  பெரிய பெரிய தப்பு செய்யறவங்களை எல்லாம் விட்டுட்டு தப்பு (மேளம்) அடிக்கற எங்களை விரட்றீங்களே? எங்களை தப்பு சொல்றீங்களே?

9.  போட்டுட்டுப்போன காக்கிச்சட்டை கசங்காமலேயே காரியத்தை சாதிச்சுட்டான்யா.. 

10.  அண்ணே, பேசாம நாம 2 பேரும் நாடோடி மன்னன் எம் ஜி ஆர்  மாதிரி ஒரே சாயல்ல பிறந்திருக்கலாம்..



http://g.ahan.in/tamil/Vettai%20Movie%20Still/Vettai%20Movie%20(27).jpg
11.  தப்பு செய்யறவனை திரு தண்டிச்சா என்ன? குரு தண்டிச்சா என்ன?

12.. ஆள் மாறாட்டம் செஞ்ச மேட்டர் வெளில தெரிஞ்சா  நானே உன்னை அரெஸ்ட் பண்ண வேண்டி வரும்..

அப்படி சொல்லாதே, நாம 2 பேருமே ஒரே ஜெயில்ல ஒரே செல்லுல.. ஹி ஹி

13.  எனக்கும் அதே ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர் தான் வேணும்..

மிஸ்.. விட்டுக்குடுங்களேன்

முடியாது

சரி.. நெம்பர் 1516 கூட்டுத்தொகை 13.. பேய் நெம்பர்.. அதனால நானே அதை ரிஜக்ட் பண்றேன்..

14.  சார்... ஏன் பொண்ணு வேணாம்னு சொல்றீங்க? கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இல்லையா? ஸ்டேஷன்ல ஏதாவது பொம்பளை போலீஸை கரெக்ட் பண்ணிட்டீங்களா?

15.  மாதவன் - பொண்ணு பார்க்க நான் போகனுமா? எனக்கு வெட்கமா இருக்கு,.. எனக்குப்பதிலா  நீ போயேன்..

அடப்பாவி.. இந்த வேலையும் நான் தான் செய்யனுமா?

16.  ஹீரோயின் - அவனவன் பொண்ணு பார்த்துட்டு போனாலே 1008 சால்ஜாப்பு சொல்வானுங்க.. இந்த லட்சணத்துல சப்ஸ்டிடியூட்டா மாப்ளையோட தம்பி பொண்ணு பார்க்க வந்திருக்கானா? விளங்கிடும்..

17.  வெளில ஆள் தோற்றத்தை வெச்சுப்பார்த்தப்ப வேற மாதிரி இருக்காங்க.. உள்ளே ஆள் வேற மாதிரி குணம்..

18.  எங்கக்காவை உங்கண்ணன் சார்பா பொண்ணு பார்த்துட்டு போய் ஓக்கே சொன்னதுக்கு தாங்க்ஸ்..

ஆர்யா - நானும் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லிக்கறேன்

எதுக்கு?

ஹி ஹி அதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியாது ( அதானே கண்ணாடி இருக்கறது தெரியாம அமலாபால் ட்ர்க்கி டவலை கழட்னதை ஆர்யா ஓ சி ல சீன் பார்த்துட்டாரே.. )

19.  மாதவன் - டேய்.. நீ எனக்கு மட்டும் பொண்ணு பார்த்த மாதிரி தெரியலையே?.. நீயும் ஒண்ணை கரெக்ட் பண்ணிட்டே போல?

20.  லட்டு மாதிரி இருக்கு

அமலா பால் - கடிச்சுக்கோ



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje3lsHBtppmtC1dCiW0AvZ0s-Kdyq_LmRPcnNeHre43K5OnqfDfb9xz4er-ddgC3NE7aldhYx3-175ajEMBi3rGbLN7RR683VJnxzSbsgC5SeJttyJe5_hNIdNcfppqfHtFWaB0xsOmEag/s320/sameera-amala-in-vettai-movie-stills-1.jpg
21.  உள்ளே முதல் இரவில் மாதவன் - சமீரா , வெளியே ஆர்யா அமலா பால் ஏதோ ஒரு பாத்திரத்தை தட்டி விட அந்த சத்தம் கேட்டு ஒரு பாட்டி

மாப்ள முதல் இரவை தட புடலா நடத்தறார் போல..

22. ஆர்யா - நாம இவ்ளோ க்ளோஸா இருந்ததுக்கு அந்த பாட்டிக்கு தான் தாங்க்ஸ் சொல்லனும்..

23.  ஃபோனில் அம்மா - அங்கே என்ன பண்ணிட்டு இருக்கே?

ஹீரோ - சும்மா தான் இருக்கேன்

ரோட்டில் நாய் - வள் வள் வள் லொள் லொள்

ஹீரோ - ஒரே டைம்ல 2 பேரு சத்தம் போட்டா நான் எப்படி ஃபாலோ பண்ண?

24.  காலங்காத்தாலயே கொட்டிக்கறியே, நீ என்ன செண்ட்ரல் கவர்மெண்ட் ஆஃபீசரா?

 பாட்டி. நீ என்ன ஸ்டேட் கவர்மெண்ட் பேங்க் மாதிரியே பேசறியே?

25.  ஆர்யா - ஒரு மனுஷன் 2 கோழியை எப்படி ஒரே சமயத்துல சாப்பிடுவான்? ( டபுள் மீனிங்க்?)

26.  மாதவன் - நீ எப்படா வந்தே?

ஆர்யா - நீ 2 வது கோழியை சாப்பிட்டுட்டு இருந்தியே, அப்பவே வந்துட்டேன்..

சமீரா - சாப்பிடறப்ப பேசக்கூடாது..

ஆர்யா - அது சாப்பிடறவங்களூக்கு..

மாதவன் - இன்னொரு கால் கிடைக்குமா?

ஆர்யா - அடியேய்.. அக்கா தங்கை 2 பேரும் அவனையே மாத்தி மாத்தி கவனிக்கறீங்களே..?


27.  தம்பியை கடத்தி வெச்சிருக்கார்னு தெரிஞ்சும் கல்லுளி மங்கன் மாதிரி இருக்காரே..

நான் இப்போ பரிதாபப்பட வேண்டியது கடத்தி வெச்சிருக்கற வில்லன்களோட கதையை நினைச்சுதான்..

28.  எஸ் பி ஆஃபீஸ்க்கு ஃபோன் போட்டு எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் வேணூம்னு கேட்கலாமா?

அவரே ஒரு எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் தானே? அவருக்கு எதுக்கு இன்னும் எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ்?

29.  அடிச்சா ஒரு அடி கூட மிஸ் ஆகக்கூடாது , அப்படி அடிக்கனும்.. இப்போ உங்க ஆளுங்களை நான் அடிக்கற மாதிரி.. 

30. அடியாள் - அய்யோ வேணாம்னே.. அங்கே அடிக்காதீங்க..

ஆர்யா - சரியா சொல்லு வேணுமா? வேணாமா?

அடியாள் - அடி வேணாம்..  என் உயிர்நாடி வேணும்.. அங்கே உதைக்காதீங்க..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR8HbcdCEY6A8OAJbwPTC2TSpZjJdqSis6XCK-DRjGvpw9XLUY6mkY7jCFQD14ZJDFHLUC8zpshAh8EN78Kt-xyhosh4NNxxepVhx4z58YouK2TXrDV6zsWjNduVAae-WwVKW5EJ9lzLs/s1600/vettai_movie_stills_152.jpg

31.   அடியாள் உடம்பு பூரா பஞ்சு ஃபேக்டரில இருக்கற பஞ்சு ஒட்டி இருக்கு.

ஆர்யா - செம பஞ்சு இல்ல?



32.  ஃபைட் சீனில் ஆர்யாவுக்கு வரும் ஃபோன்ல் ஒரு ஜிகிடி - சார்.. பேங்க்ல ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்றது சம்பந்தமா கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.. இப்போ நீங்க ஃபிரீயா?

நான் ஒரு அக்கவுண்ட்டை க்ளோஸ் பண்றதுல பிஸி.. அப்புறம் கால் பண்றேன்/...

33.  உன் கண்ல பயமே தெரியலையே.. ஃபயர் தான் தெரியுது.. ( நேத்து நைட் தான் மீரா நாயரோட ஃபயர் படம் பார்த்தாராம்)

34.  பேக்கு வில்லன் - நான் தான் அமெரிக்க மாப்ளைன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

ஆர்யா - எத்தனை படத்துல அமெரிக்க மாப்ளையை  பார்த்திருப்போம்?

35.  பாட்டி - டேய்.. நீ தான் அந்த அமெரிக்க மாப்ளையா? சின்ன வயசுல டவுசர் போட்டுட்டு சுத்திட்டு இருந்தியே?

ஆர்யா - இப்போவும் டவுசர் தான் போட்டிருக்கான்..

36. பேக்கு வில்லன் - இப்பவே வீட்ல போய் உங்களை பற்றி போட்டுக்குடுக்கறேன்..

ஆர்யா -அப்பாடா, நானே எப்படி வீட்ல சொல்றதுன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.. இந்த மாதிரி விஷயத்துல 3 வது மனுஷங்க யாராவது ஹெல்ப் செஞ்சாதான் நல்லாருக்கும்..

37.  கோக்ல ஏதாவது கோக்கு மாக்கு வேலை பண்ணிட்டியா? என்னமோ பண்ணுதே?

38. நான் ரொம்ப லைட் வெயிட்,,

அதான் நான் ஆரம்பத்துலயே கெஸ் பண்ணி சொல்லிட்டேனே?

39.  அமலா பால் - நீ நல்லா மாட்டப்போறே..

ஆர்யா - மாட்டிட்டு தானே இருக்கேன் ஷூவை .....

40.  இது நான் கட்டிக்கப்போற பொண்ணு.. நீ ஏன் தூக்கிட்டு போறே..?

 ஹி ஹி ஹி வேடிக்கை மட்டும் நீ பாரு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt6wKQuCHrSc_WjUvESrMNWNTqja8P1NzuPPlq92GNUnTtv-HKVUL3BZryj6yAOZtyVK82gDmUJyFOdwYlFIS7If3jgg4zbx5OwygYtufqjg6IDYyURyFedvRw6wszB5DCMDMyWUw8fUhd/s1600/3.jpg

41.  வில்லன்கள் - எல்லா ஷட்டரையும் இழுத்து மூடுங்கடா..

மாதவன் - ரன்ல கலக்குன எனக்கே ஷட்டரா?

42.  வில்லன் ஆஃப் கேனை - நான் இங்கே மாடில இருக்கேன்.. வண்டி கீழே இருக்கு.. நான் எப்படி போக. ?

ஹீரோ - இதோ இப்படித்தான்.. தள்ளி விட்டுட்டேன்.. போய்க்கோ..

43.  டேய்.. தள்றா.. நீயா மாப்ளை?

தள்ளிட்டுதான் வந்திருக்கேன் பொண்ணை..

44.  யார் யாரையோ அடிக்கறே./. டீ அடிக்க இவ்ளவ் யோசிக்கறே..

45.  ஒரு மனுஷன் சும்மா இருக்கான்னா 24 மணி நேரமும் கூடவே யாரோ இருக்காங்கன்னு அர்த்தம்

46. நீங்க பாட்டுக்கு இங்கே நின்னுட்டு குலோப்ஜாமூனா சாப்பிடறீங்க?

மேரேஜ் வீட்ல ஸ்வீட் சாப்பிடக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?

போய்யா லூஸு.. ஸ்வீட் ஸ்டால் நான் இருக்கேன், என்னை கண்டுக்காம....

47. என்னை பாழுங்கிணறுல தள்ளி விடப்பார்க்கறீங்களே.. இந்த பால் வடியும் முகத்தை பாருங்க.. ( அதாவது அமலா பால் வடியும் முகத்தை.. )

டிஸ்கி  1 -

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3-

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 4 -

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

பஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ்)

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Shobana-reel-03.jpg

1.பஸ்ஸில் கனகாம்பரப்பூச்சரம் சூடிய ஃபிகர்க்குப்பின்னால் நின்று வந்த ஃபிகரின் முகத்தில் கனகாம்பரப்பூக்கள் நிறம் ஒளிர்ந்ததைக்கண்டேன்#பஸ்ஸாலஜி

_---------------------------------

2. ஏன் என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க? என்றாள் காதலி,உன்னிடம் இருக்கும் காந்தங்களில் முதல் இரண்டு கண்களாக இருப்பதால் என்றேன்#ஜிகிடி

-----------------------------

3. நான் அதிகமா பேசறதும் இல்லை,சாப்பிடறதும் கம்மி என்றாள் காதலி.உன் உதடுகள் அந்த 2க்கு மட்டும் படைக்கப்பட்டதல்ல என்றேன்#கிஸ்சாலஜி

------------------------

4. இருவரும் கண்களைமூடிக்கொள்வோம்,யார் கண்ணை முதலில் திறக்கிறார்களோ அவர்கள் தோற்றதாகஅர்த்தம் என்றேன்,ஓகேஎன்றாள்.பொறுமையாகஅவள் அழகைரசித்தேன்

--------------------------

5. கனிமொழி கைது நான் செய்த தவறு; கருணாநிதி # தலைவரே,ஒரு சின்ன திருத்தம்,அந்த லைன்ல கைதை மட்டும் கட் பண்ணிட்டு படிக்கவும்

---------------------------

Mother Duck & ducklings....
duck%2525202.jpg

6.முன் சீட்டின் மீது கால் வைக்காதீர் என்றது சினிமா தியேட்டர் இண்ட்டர்வெல் ஸ்லைடு,அப்போ கை வைக்கலாமா?#டவுட்டு

-------------------------

7. பஸ்சில் பிச்சைக்காரர்கள்க்கு நாம் பிச்சை இடுவது இரக்கத்தால் அல்ல,மற்றவர்கள் நம்மை தவறாக நினைக்கூடாதே என்பதால்,எனவே அது கவுரவ பிச்சை

---------------------------------

8.நிஜ வாழ்வில் எந்த ஆணும் சாகசம் செய்து  ஹீரோ ஆக முடிவதில்லை,ஆனால் ஹீரோயின்கள் மட்டும் வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்

 ------------------------------

 9. தனக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை பலிக்கா விட்டாலும் பரவாயில்லை எப்படி இருக்கக்கூடாது என்பது பலித்தால்?

------------------------------

10 . அரை வயிறு உணவு,கால் வயிறு நீர்,கால் வயிறு காற்று-ஆரோக்ய உடலுக்கான டிப்ஸ்,மனசு முழுக்க நிரம்பி இருக்கும் நீ.ஆரோக்ய மனசுக்கான டிப்ஸ்#லவ்ஸ்

---------------------------------

Mountain Lion with Cubs......
Mountain%252520Lion%252520With%252520Cub.jpga



amazing..........
eagle%201.jpg
11.நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்ற ஒரே ஒரு பொய்யை வைத்துக்கொண்டே பல ஆண்கள் பல பெண்களை ஏமாற்றி வருகிறார்கள்#ஜிகிடி

---------------------------
12. ஹோட்டலில் நுழைந்ததும் ஓடும் ஃபேன் கீழே அமர்பவன் புத்திசாலி,துணை தேடும் ஃபிகர் எதிரே அமர்பவன் சாமார்த்தியசாலி#ஜிகிடி

--------------------------
13.ஞாயிற்றுகிழமைகளில் எல்லோரும் குடும்பத்தோடு சந்தோஷமாக பொழுது போக்க சனிக்கிழமைநினைப்பார்கள்.விடிந்ததும் மூடு மாறி விடுகிறது#குரங்குமனம்

---------------------
14. சாரிடி,எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங்க் இருக்கு என சிநேகிதி கழட்டி விடுகையில் அந்த மீட்டிங்க் அவளது காதலனுடனாகத்தான் இருக்கும்#லவ்வாலஜி

------------------------
15. மழை பெய்யும்போது யார் யார் எல்லாம் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வேடிக்கை பார்க்க குடையுடன் நான் வெளியே நிற்கிறேன்

-----------------------------


A duckling learning to have food.....
chick.jpg
16. அப்பாவிடம் 100% அன்பை மகளால் காட்ட முடிகிறது.. அம்மாவுடனான அன்பை மகனால் 50% கூட காட்ட முடிவதில்லை#ஃபேமிலி செண்ட்டிமெண்ட்

----------------------------
17. அதிகாலையில் எழுந்து யாரும் பார்க்கும் முன்பே கோலம் போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிவிடவேண்டும்எனபெண்கள் நினைக்கிறார்கள்#அதிகாலையில்துயில்எழு

-------------------------------

18.காதலை சொல்ல எளிய வழி,காதலியின் தோழியிடம் நான் உங்க ஃபிரண்டை லவ் பண்றேன்,ஆனா அதை நீங்க அவ கிட்டே சொல்லிடாதீங்க என்று சொல்வதே#லவ்வாலஜி


---------------------------------

19. காதலியின் தோழிகள் 10 பேரையாவது காதலன் தெரிந்து வைத்திருப்பான்,ஆனால் தன் நண்பர்கள் யாரையும் காதலிக்கு தெரிய வைக்க மாட்டான்#ஜெண்ட்ஸாலஜி

------------------------

20. நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிடும்போது யார் பில் பே பண்ணுவது என பம்முகிறார்கள். கூட ஒருஃபிகர் இருந்தால் நான்தான் என முந்துகிறார்கள்#ஜிகிடி

A Little Lamb .............
lamvb.jpg

Monday, January 16, 2012

ஒய் திஸ் உலை வெறி? - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்

 ஓ பக்கங்கள் ஞாநி இந்த வார கல்கியில் ( கல்கி 14.1.2012 ) மத்திய அரசின்  பொய்யான பிரச்சாரம் பற்றி காட்டமாக விமர்சித்திருகிறார்.. சமீப காலமாக  மீடியாக்களில் அரசின் அணு உலை ஆதரவுப்பிரச்சாரம் ஒரு எல்லையை மீறி சென்று கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்..

கூடங்குளத்தில் அணு உலை நிறுவியே தீருவோம் என்ற உலைவெறியில் இருக்கும் இந்திய அரசும் அதன் அணுசக்தித் துறையும் எதிர்பார்த்தபடியே மீடியா மூலம் பெரும் பொய்ப்பிரசாரத்தை அவிழ்த்துவிட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் அவை போடும் விளம்பரங்களைப் பார்த்தால் அணு மின் நிலையம் இல்லாத இடங்களில்தான் புற்று நோய் அதிகம் என்றும் அணுமின் நிலையம் இருந்தால் புற்று நோய் அந்த வட்டாரத்தில் குறைந்துவிடுவதாகவும் தெரிகிறது.


உலக அளவில் இப்படி ஒரு புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை யாரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். 


புற்று நோய் துறையில் பிரபலமான டாக்டர் சாந்தா புற்று நோய்க்கும் கதிரியக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்று அரசு பிரசாரத்தில் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. கதிரியக்கம் எப்படி புற்று நோயை ஏற்படுத்துகிது என்று மலைமலையாகத் தகவல்கள், ஆய்வுகள் கொட்டிக் கிடக்கின்றன இணையத்தில் உலகம் முழுவதும் கதிரியக்கம் புற்று நோயை உண்டாக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம். 


அதுவே பொய் என்று ஒரு டாக்டரை சொல்லவைக்கிறது இந்திய அரசு. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி ரொம்பத் தெளிவாகவே சொல்ல்யிருக்கிறான்.

இந்திய அரசு தூண்டிவிட்டிருக்கும் இன்னொரு பிரசாரம் கூடங்குளம் அணு மின் நிலையம் வராவிட்டால் தமிழகமே இருண்டுவிடும் என்பதாகும். கூடங்குளம் உலையிலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஆயிரம் மெகாவாட் வருமாம். 


இதுவும் நம் காதில் பூ சுற்றும் பிரசாரம்தான். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். அணுசக்தி துறை ஆயிரம் மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி அளவுகூட உற்பத்தியே செய்வதில்லை என்பதுதான் வரலாறு. கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான் மொத்த உற்பத்தி திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன. 


ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித் திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம் தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம் கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன). மீதி 1080 மெகாவாட்தான். 


இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம் எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.) ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட். இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும் டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது 405 மெகாவாட்தான். 


இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும் இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500 மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போது டிரான்ஸ்மிஷன் லாஸ் என்ப்படும் மின் கடத்துதலில் ஏற்படும் இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம்.


ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 


இந்த மாதிரி நடைமுறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 5500 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகளிலிருந்து தயாரிக்கலாம். ஆனால் இதில் 4700 மெகாவாட்தான் இப்போது தயாரிக்கிறோம். அதிலேயே இன்னும் 700 மெகாவாட் மீதம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின் கூரைகளில் மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதையே பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், என்று பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம் உபரியாகிவிடும். 


காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. புனல் மின்சாரம் எனப்படும் நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசிய புனல்மின் கழகம் இந்தியாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்கமுடியும் என்றும் இப்போது அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது. 


சூரியசக்தி பல மடங்கு பிரும்மாண்டமானது. மொத்தம் நான்கு லட்சம் மெகாவாட் தயாரிக்க முடியும்.இந்தியாவின் மொத்தத் தேவையை விட இது பல மடங்கு அதிகம். வருடத்தில் நான்கே மாதம் மட்டும் வெயில் அடிக்கக்கூடிய ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் ஏற்கனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில் 300 நாட்களுக்கு மொத்தம் 2500 மணி நேரம் தெளிவான வெயில் இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வொல்டேய்க் செல் பேனல்கள் தங்கள் மொத்த திறனில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம் 2015ல் இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம் ! 


சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கச் செலவு அதிகம் என்று அணு ஆதரவாளர்கள் பிரசாரம் செய்வது இன்னொரு பொய். எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல் விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில் பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு கிலோவாட்டுக்கு 21 கோடி ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அங்கே நிறுவும் செலவு ஒரு கிலோவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான். நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம். 


இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார் போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது. 


ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள். 


காற்று சூரியசக்தி மின்சாரத்தையெல்லாம் தேசிய கிரிட்டில் இணைப்பது கடினம் என்றும் அவற்றைக் கொண்டு 500, 1000, 2000 மெகாவாட் நிலையங்களை நடத்த முடியாது என்பது அவர்களின் இன்னொரு வாதம். முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும் ஆயிரக்கணக்கான மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே நாம் கேள்வி கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும் வாகனங்களை எடுத்துக் கொள்ளுவோம். சைக்கிள், டூ வீலர், கார், ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ் நடத்தச் சொல்வோமா ? 


இதே போல மின் உபயோகமும் பலதரப்பட்டது. வீட்டு உபயோகம், விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும் கிரிட் மூலம்தான் செய்யவேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான் மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன் லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது. 


இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு தொழிற்சாலை தேவைகளை பூர்த்தி செய்யலாம். வீட்டுத் தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட் மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் இன்வர்ட்டர் வைத்துக் கொள்வதை விட சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம். 


மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்துவைத்துக் கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது. சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர்கட். அத்திப்பட்டில் ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால் நடப்பது. அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே ஒரு மணி நேரம் கூட பவர் கட் இருக்காது. 


சூரியசக்தி மின்சாரத்தை பல விதமாக தயாரிக்கலாம். போட்டொவோல்டேய்க் செல் பேனல் முறை ஒன்று. இன்னொன்று குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப் பயன்படுத்தி தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும் பயன்படுத்த வசதி இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரும்மாண்டமான சூரியசக்தி மின் நிலையங்களை ஏற்படுத்தினால் 15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம். 


வெளிநாடுகளில் சூரியசக்தி மின்சாரம் நிலை எப்படி தெரியுமா? இந்தியாவைப் போல வருடம் முழுவது வெயில் இல்லாத நாடுகள் கூட முன்பே இதில் இறங்கிவிட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகித மின்சாரம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவொல்டெய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது.

உலக அளவில் 3800 மெகாவாட்டுக்கான் சோலார் பேனல்களில் சரி பாதியை தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. . 


இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கிரிட்டுடன் இணைத்துவிட்டது. 


இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர் அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டொ வோல்டெய்க் செல் பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சார தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது. 


அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்து கவனிக்க வேண்டும். 

ஏன் இந்திய அரசுக்கு மட்டும் இந்த கொலைவெறியான உலைவெறி?


கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

http://www.rajtamil.com/wp-content/uploads/2012/01/Kollaikaran-Movie-Online.jpg 

டைட்டிலை பார்த்ததும் எனக்கும், என் நண்பன்க்கும் ( விஜய் அல்ல) ஒரு வாதம்.. நான் சொன்னேன் ஏதோ பேங்க் கொள்ளையை அடிப்படையா வெச்சு எடுக்கப்பட்ட வித்தியாசமான கிராமக்கதையா இருக்கும்னேன்.. அவன் சொன்னான், ஹீரோயின் மனசை கொள்ளை அடிச்ச ஹீரோவோட லவ் ஸ்டோரின்னான்..  கடைசில  2 பேரும் தோத்துட்டோம்... 

விமர்சனத்துக்குள்ளே போறதுக்கு முன்னே நான் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன்.. தமிழ் அகராதில திருட்டுக்கும், கொள்ளைக்கும் வித்தியாசம் தெளீவா சொல்லப்பட்டு இருக்கு.. சின்னதா திருடுனா , அதாவது எம் எல் ஏ திருடுறது எல்லாம் திருட்டு.. அவன் திருடன்..  ஆ ராசா மாதிரி பல்க்கா கொள்ளை அடிச்சா அது கொள்ளை, கொள்ளைக்காரன்.. அது தெரியாம சின்ன சின்ன திருட்டு பண்ற ஹீரோவோட கதைக்கு எதுக்கு கொள்ளைக்காரன் டைட்டில்?

பருத்தி வீரன் ஹிட் ஆன பிறகு நம்ம கோடம்பாக்கம் இயக்குநர்கள் கத்துக்கிட்ட மேட்டர் இன்னான்னா ஹீரோ தலையே சீவக்கூடாது, ஹேர் கட் பண்ணக்கூடாது, தலைக்கு ஆயிலே தடவக்கூடாது.. ( ஹீரோயினை தடவவே நேரம் சரியா இருக்கு ) கேவலமான தாடி வெச்சிருக்கனும் ( டி ஆர் மன்னிக்க )

இந்த ஃபார்முலாவுக்கு பங்கம் வந்துடாத படி மைனா விதார்த்  இந்த படத்துல ஹீரோவா வர்றார்.. அண்ணனோட தொழில் இன்னான்னா  ஆடு திருடறது ( நன்றி - தென் மேற்குப்பருவக்காற்று), மோட்டார் , கைக்கு கிடைச்ச எந்தப்பொருளையும் திருடி வித்து காசு பார்க்கறது..ரொம்ப கஷ்டப்பட்டு இந்த தொழிலை செய்யறார்.. .

ஹீரோயின் புதுசு , இளசு.. நந்தியாவட்டைப்பூ மாதிரி அழகிய முகம்.. ( தமிழனோட பண்பாடு என்னான்னா பெண்களை அவன் என்னைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டான்.. ) பாப்பா டுட்டோரியல் காலேஜ் போய் இம்ப்ரூவ்மெண்ட் எக்ஸாம்க்கு படிக்குது. பாவம் பாப்பா அதனோட லைஃப்ல ஆம்பளைங்களையே பார்த்தது இல்ல போல..  பல் துலக்காத, தலை சீவாத, தாடி வெச்ச பக்கிரி மாதிரி இருக்கற ஹீரோவை பார்த்த உடனே காதல் வந்துடுது.. 

http://reviews.in.88db.com/images/Kollaikaran-movie-press-meet/Kollaikaran-movie-press-meet-Sanchita-Shetty-pics.jpg

நான் தெரியாம தான் கேக்கறேன்.. நாங்க எல்லாம் தலைகீழா நின்னு பார்த்தும், பல சாகசங்கள் பண்ணிப்பார்த்தும் கண்டுக்காத பொண்ணுங்க இந்த சினிமால மட்டும் பார்த்த அடுத்த செகண்டே லவ் பண்ற ரகசியம் என்ன? 

பஸ்ல ஹீரோயின் போகுது. அப்போ ஹீரோ ஒரு திருட்டு மோட்டார் எடுத்துட்டு பஸ்ல ஏறுகிறார்.. ஒரு கை பிடிங்க அப்டின்னு ஹீரோ சொல்றார், அப்போதான் முத டைமா ஹீரோயின் அந்த கேவலமான ஹீரோவை பார்க்கறார்.. உடனே லவ்  வந்துடுது.. இதை படிச்சு பார்க்கறவங்க உடனே நாமும் அதே போல் ட்ரை பண்ணலாம்னு ஏதாவது  மோட்டார் திருட போயிடாதீங்க.. உதை தான் கிடைக்கும்.. 


இப்போ ஆடியன்சில் ஒருத்தன் பெட் கட்றான். நீங்க வேணா பாருங்க. ஹீரோயின்க்கு ஹீரோ திருடன்கற மேட்டர் தெரிய வரும்போது இடைவேளை விடுவாங்கன்னு. அதே மாதிரி தான் நடந்தது அடங்கோ.. 


வில்லனை பற்றி சொல்லனுமே.. வில்லன் பயங்கரமான ஆள்.. ( அப்படி இருந்தாத்தாம் அவன் வில்லன்) ஏகப்பட்ட காசு இருக்கு, செல்வாக்கு இருக்கு , கோயில் குருக்களோட 40 வயசு சம்சாரம் இன்னைக்கோ நாளைக்கோ செத்துடும்போல , பார்க்கவே பரிதாபமா இருக்கற ஒரு ஆண்ட்டிஅதாவது மாமி மேல ஒரு  கண் வைக்கறாரு.. வெக்கறதே வெக்கறோம் 2 கண்ணையும் ஏன் வைக்கலைன்னு அவர் மனசாட்சி கேட்கல போல.. அவரு மாமியை ரேப்பிடறார்

கோயில் நகைகளை வில்லன் கொள்ளை அடிச்சு அவர் வீட்டு பீரோவுக்குள்ள  வைக்கறார். ( எந்த லூசாவது கொள்ளை அடிச்ச நகையை அவன் வீட்டுக்குள்ள வைப்பானா? )

ஹீரோயின் கோவிச்சுக்கிட்டதால ஹீரோ டகார்னு திருந்தி நல்லவன் ஆகிடறார்.. இனிமே திருடமாட்டேன்னு சொல்லிடறார்.. ஆனா வில்லன் பழியை ஹீரோ மேல போட்டு அடிக்கறார்.. இப்போதான் டைரக்டர் யோசனை பண்றார்.. சிம்பதி பத்தலை இன்னும் என்ன பண்ணலாம்னு அவரோட அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் 15 பேர்ட்டயும் ஐடியா கேட்டு ஹீரோவோட மன வளர்ச்சி குன்றிய தங்கயை சம்பந்தமே இல்லாம வில்லன் கொலை பண்றார்.. 

பொங்கி எழுந்த ஹீரோ ( பொங்கல்-பொங்கி )  பொங்கி அண்ணன்  வில்லனை கொலை செஞ்சுடறார்.. 10 வருட தண்டனை முடிஞ்சு அவர் ரிலீஸ் ஆகி வரும்போது படத்தோட ஒப்பனிங்க்ல ஹீரோயின் எப்படி இருந்தாரோ அதே மாதிரி ஃபிரெஸ்ஸா , தலைல ஒரு முடி நரை கூட இல்லாம ஹீரோயின் கல்யாணம் கட்டி சந்தோஷமா வாழ்றார்.. சுபம். அவ்வ்வ்வ்வ்

ஹீரோ விதார்த்க்கு நடிப்பு வருதோ இல்லையோ காமெடி கொஞ்சம் வருதோ தப்பிச்சார்.. ஊர்ல ஒரு பய பாக்கி விடாம நான் எப்படி இருக்கேன்? என கூலிங்க் கிளாஸ் போட்டு காமெடி பண்றது ஓக்கே.. சோக நடிப்பில் பாஸ் மார்க்.. அக்காவிடம் வாதம் செய்வது, தங்கையிடம் பாசம் பொழிவது, அக்கா கணவரிடம் சண்டை போடுவது எல்லாம் குட்

ஹீரோயின் புதுமுகம்  சஞ்சிதா ( நல்லா கவனமா படிங்க, நாட் ரஞ்சிதா) கண்கள், கன்னம் பிளஸ்..  ரொம்ப சாதாரண ஃபேமிலி பொண்ணு மாதிரி இயல்பான தோற்றம்..

ஹீரோவின் அக்கா கணவராக வருபவர் சீமானின் சாயல்.. பொறுமையான நடிப்பு.. வில்லன் நடிப்பு சுமார்.. ஹீரோவின் தங்கை, அக்கா இருவரின் நடிப்பும் கன கச்சிதம்.. 

http://cdn1.supergoodmovies.com/FilesOne/kollaikaran-0c0442a0.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. கொடுத்த கொய்யாப்பழம் கிராமத்து டப்பாங்குத்து பாட்டு படமாக்கிய விதம்.  சாமிக்குத்தம் ஆகிப்போச்சு பாட்டை 2 முறை சரியான விகிதத்தில் சேர்த்தது.. 

2. கதைக்களம்  சேலம் மாவட்டம் ஆத்தூர், திருமங்கலம், கிருஷ்ணாபுரம், அந்தியூர் என்பதால் படத்தில் வரும் பெண் கேரக்டர்கள் அந்த ஏரியா மக்கள் போலவே உடை உடுத்தி வருவது, குறிப்பாக ஹீரோயின் உட்பட அனைத்து பெண் கேரக்டர்களும் கனகாம்பரப்பூ அணிவது அழகு.

3. ஹீரோயின் புதுமுகம் என்றாலும் கண்ணியம் குறையாத கவுரவமான நடிப்பு.. மிக யதார்த்தம்.. 

4. கிராமத்துப்பழக்க வழக்கங்கள், எள்ளல்கள் என படம் முழுக்க கிராம வாசனை.. 


http://www.melisai.com/gallery/data/media/177/TamilBeat.Com%20-%20Kollaikaran%20034.jpg

இயக்குநரின் லாஜிக் மிஸ்டேக்ஸ்

1.  அறநிலைத்துறை அமைச்சகத்திடம் இருந்து வரும் கடிதம் இப்படியா லோக்கல் டைப்ரைட்டரில் அச்சடித்து வரும்? அதில் க்ளோசப் வேறு.. 

2.  பெட்டிக்கடை பெருசு கிட்டே ஹீரோ பெருசு சில்லுன்னு குடிக்க ஏதாவது குடு என்பார்.. அது மட்டும் நல்லா காது கேட்கும் அவருக்கு, அதை தொடர்ந்து வரும் அடுத்த ஷாட்டில் என்ன சொல்றே? என பல டைம் கேட்டு  தான் காது கேளாதவர் என்பதை உணர வைக்கிறார்.
3. அந்தியூர் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் மொத்தமே 4 கான்ஸ்டபிள்ஸ் தான், ஆனால் படத்தில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் 2 பேர் காவலுக்கு நிக்கறது மாதிரி அடிக்கடி சீன் வருது.. இப்போ எல்லாம் எந்த ஊர் ஸ்டேஷன்ல அப்படி போலீஸ் வாசல்ல நிக்கறாங்க?

4.  பத்திரத்தில் வில்லன் கையெழுத்து போடறப்ப  வெற்று பதிவுத்தாளீல் சைன் பண்றார். அரை பக்கத்துக்கு சைன் இருக்கு.. அப்புறம் மேட்டரை எங்கே எழுதுவாங்க? தாளின் கடைசி இடத்தில் கொஞ்சமாதானே சைன் பண்ணனும்? எவ்லவ் பெரிய வில்லனாத்தான் இருக்கட்டுமே..

5. கோயில் காளை, வைதேகி காத்திருந்தாள் வரிசைல கோயிலுக்குள் ஃபைட் போடும்  ஹீரோ எதுக்கு அப்டி பண்றார்னு படம் முடிஞ்ச பிறகும் தெரியவே இல்லை.. 


http://tamil.oneindia.in/img/2011/09/21-kollaikaran300.jpg
டி வில போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - வேணாம்.. அழுதுடுவீங்க.. என்னோட போகட்டும் .. 

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்.. 

டிஸ்கி -1 படம் டப்பா ஆனதைக்கூட நான் தாங்கிட்டேன்,.. ஆனா வ்ழக்கமா ஆங்கிலப்படங்களை மட்டுமே திரை இடும் வி எஸ் பி தியேட்டர் இந்த படத்தை ரிலீஸ் பண்ணி எதிர்பார்ப்பை ஏற்படுத்துனதை தாங்கவே முடியல. ஃபிரண்ட் சொன்னான்,. இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கும் போல.. அதான் வி எஸ் பில ரிலீஸ் ஆகுதுன்னு.. அவ்வ்வ்வ்

டிஸ்கி 2 - முத ஃபோட்டோல இருக்கற மாபெரும் வெற்றி பார்த்ததும் மனசுக்குள்ள மாபெரும் வெறி எழுது.. வாய் கூசாம பொய் சொல்றாங்கப்பா..

பிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்திப்பு

http://www.tamilspider.com/attachments/Resources/5000-10341-pongal.jpg 

பொங்கல் டைம்ல காலேஜ், ஸ்கூல், ஆபீசுல்லாம் எல்லாரும் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைப்பாங்க.அது போல பிளாக்கர்ஸ் நாமெல்லாம் சேர்ந்து பொங்கல்  வைக்கலாம்ன்னு ஒரு ஐடியா தோணுச்சு. சரின்னு எல்லா பிளாக்கர்சுக்கும்  குறிப்பிட்ட இடத்துல, டைம்ல எல்லாரும் ஒண்ணு கூடி பொங்கல் வைக்கலாம்ன்னு மெயில் அனுப்பப்பட்டு எல்லாரும் சரி வரேன்னு சொன்னாங்க. 
 
இது பொங்கல். சாப்பாடு, கோலம், சாமிக்கு படையல்ன்னு நிறைய வேலைகள்லாம் இருக்கு. சாமி விஷயம் என்பதால் பொறுப்பா செயல்படனுமேன்னு யோசிச்சு சில பெண் பதிவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு அவங்களும் வரோம்ன்னு ஒத்துக்கிட்டாங்க. 

இது தனி ஒருத்தரால மட்டும் முடியும் காரியமல்ல. அதனால், ஆளாளுக்கு தனித்தனியா வேலைகளை பிரிச்சு கொடுத்தாச்சு. கரும்பு, அரிசி, வெல்லம், நெய் போன்ற சமையல் பொருட்களை வாங்கும் பொறுப்பு  கருண், சௌந்தரை சார்ந்தது. பானை வாங்கும் பொறுப்பு மகேந்திரன்கிட்ட. வீடு வாசல்லாம் ஒட்டடை அடிச்சு சுத்தம் பண்ற பொறுப்பு மனோ, விக்கிக்கு. கோலம், பொங்கல் வைக்கும் இடத்தை அலங்காரம் பண்ணும் பொறுப்பு மகளிரை சார்ந்ததுன்னு பிரிச்சு கொடுத்தாச்சு.


பொங்கல் அன்று:

சீனா தானா ஐயா: என்ன இது. இன்னிக்கு பொங்கல் வைக்கலாம்ன்னு எல்லாரும் ஒண்ணு கூடியிருக்கோம். மணி ஏழாச்சு. பொங்கல் வைக்கும் வேலையை இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே. ஏம்மா ”மணிராஜ்” ராஜராஜேஸ்வரி நீங்க எடுத்து சொல்லக்கூடாதா? மளமளன்னு வேலையை ஆரம்பிங்கம்மா. கைல என்னதும்மா?


ராஜராஜேஸ்வரி: சார், இது என் உறவினர் ஒருத்தர் கொடுத்தனுப்பிய ஃபாரீன் கேமிரா. பொங்கல் வைக்குறதை படம் எடுத்து என் பிளாக்ல போடுவேன்.


சீனா தானா ஐயா: சரிங்கம்மா. வேலையை ஆரம்பிங்கம்மா, முதல்ல பொங்கல் வைக்க போற இடத்தை சுத்தம் பண்ணுங்கம்மா.


ராஜராஜேஸ்வரி: ஐயா, இங்கதான் இது பொங்கல், இதுவே வட நாட்டுலலாம் மகர சக்ராந்திகை. அதுமட்டுமில்லாம ஒரிசாவுல கொணார்க் சூரிய பகவான் கோவில்ல பொங்கல் இப்படியெல்லாம் கொண்டாட மாட்டாங்க.


சீனா தானா ஐயா: அம்மா! உங்க ஸ்தல சுற்றுலா மேட்டரை அப்புறம் பேசிக்கலாம். ஏம்மா காணாமல் போன கனவுகள்” ராஜி, இங்க வாம்மா. நல்ல அழகா கோலம் போடும்மா.

ராஜி: ஐயா, கோலம் போடுவது எப்படி, கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள், கோலப்பொடி, கலர்பொடி வாங்கும்போது கவனிப்பது எப்படின்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். 

சீனா தானா ஐயா: ஓக்கே.அதை பார்த்து யாரையாவது கோலம் போட சொல்றேன்.  ஏம்மா ”வானம் வெளித்த பின்னும், உப்பு மட சந்தி”ஹேமா! பொங்கல் அதுவுமா  நீ என்ன யோசனைல  இருக்கே? வாம்மா வந்து கோலம் போடு.


ஹேமா: நான் இங்க போடும் இதே கோலத்தையே அங்க போய் போட்டுக்கலாமா? இல்லை அங்க வேற கோலத்தை போடலாமான்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.


சீனா தானா ஐயா:  உன் அவஸ்தை உனக்கு. சரிம்மா ”காகித பூக்கள்”ஏஞ்சலின் பொங்கல் மேடை, சாமிக்கு படையல் போடும் இடத்தை கொஞ்சம் அலங்காரம் பண்ணும்மா. 

http://2.bp.blogspot.com/-sfkoOhIpsBE/TwQ47TAi2CI/AAAAAAAAAUE/87X6637ygAo/s1600/Bhogi+Pongal+festival.jpg


ஏஞ்சலின்: சரிங்க ஐயா, அசத்திடுறேன். அதுக்கு தேவையான மெட்டீரியல் சொல்றேன் குறிச்சுக்குறீங்களா?


சீனா தானா ஐயா: நீ குறிச்சு குடுத்து இனிமே வாங்கி வந்து நீ செஞ்சு அலங்காரம் பண்றதுக்குள்ள காணும் பொங்கலே வந்துடும். ஏம்மா ”ஷாதிகா” ஸாதிகா, மேனகா நீங்க ரெண்டுபெரும் ஏம்மா அடிச்சுக்குறிங்க.


ஷாதிகா: ஐயா,**** பிளாக்குல *** அக்கா பொங்கல் குழம்புல மிளகு சேர்க்க கூடாதுன்னு சொல்லியிருகாங்க. ஆனால், சசிகா மேனகா மிளகு போட்டே ஆகனும்ன்னு அடம் பிடிக்குறாங்க.


மேனகா: ஐயா, மிளகு போட்டால் ஜீரணத்துக்கு நல்லது. பொங்கல் டைம் என்பதால், கரும்பு சாப்பிட்டு வறட்டு இருமல் வரும் அதனால மிளகு சேர்த்துக்கிட்டால் இருமல் வராதுன்னு *** பிளாக்குல ***அக்கா சொல்லியிருக்காங்க. 

இன்னிக்கு என்னவோ மகளிர் அணிதான்  சொதப்பிட்டிங்க. ஆண்கள் அணி என்ன கூத்து பண்றாங்கன்னு போய் பார்க்குறேன்.


சீனா தானா ஐயா: ”நாஞ்சில் மனோ”மனோ ஒட்டடை அடிக்காம லேப்டாப்புல என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?

மனோ: சார் பஹ்ரைன் ஓட்டல்ல ஒருமுறை இதுப்போல பொங்கல் கொண்டாடி இருக்கோம். அப்போ கேரள சேச்சிகள்லாம்கூட கலந்துக்கிட்டாங்க. 

விக்கி: டேய் உன் சுய புராணத்தை நிறுத்துடா நாதாரி.

மனோ: நீ முதல்ல அடங்குடா இல்லாட்டி அருவா எடுத்து ஒரே போடு போட்டுடுவேன். ஐயா இந்த விக்கி தக்காளி நைட் அடிச்ச மப்பு தெளியாம, தண்ணிக்கு பதில் அந்த தண்ணியை ஊத்தி இடத்தை கழுவி சுத்தம் பண்ணும் கூத்தை கேளுங்க.

விக்கி: இவன் தான் இவ்வளவு நேரமும் பஹ்ரைன்ல பொங்கல் அன்னிக்கு கேரள சேச்சிகள் கூட ஆட்டம் போட்டத என்கிட்ட சொல்லி கடுப்பேத்திக்கிட்டு இருந்தான். 

சீனா தானா ஐயா:  ஐயோ ஐயோ ஏன்தான் ஆளாளுக்கு நல்ல நாள் அதுவுமா இப்படி அலப்பறையை குடுக்குறீங்களோ? ஏம்பா தமிழ்வாசி பிரகாஷ் வந்தே மாதரம் சசி, வீடு சுரேஷ் நீங்க மூணு பேரும் அப்படி என்ன அங்கே டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கிங்க. 

பிரகாஷ்: பொங்கல் நல்ல படியா பொங்கி வர மாதிரி javal ஒரு புரோகிராம் இருக்கு அது எப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் ஐயா,

சசிக்குமார்: பிரகாஷ் சொன்ன மாதிரி புரோகிராம் பண்ணினால் பன்கலின் ருசியும், நிறமும் மாறிடும் அபாயம் இருக்கு. அதுக்கு மாற்று வழி என்னன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம் 

சுரேஷ்: ஐயா, அதுக்கு javaவைவிட வேற ஒரு சாஃப்ட்வேர் போட்டு செய்தால் ருசி, நிறம் மாறாது. நம்பிக்கை இருந்தால் என் பிளாக்குல அது பற்றி ஒரு பதிவே போட்டிருக்கேன் ஐயா.

சீனா தானா ஐயா:  என்னது பொங்கல் வைக்க சாஃப்ட்வேரா? ஒருவேளை சமத்துவ பொங்கல் வைக்கலாம்ன்னு ஆசைப்பட்டது தப்போ? பானை வாங்க போன ”வசந்த மண்டபம்”மகேந்திரனும், ”ஆணிவேர்”சூர்யஜீவாவும் எங்கே? 

http://cafehindu.com/files/pongal_757052816.jpeg


மனோ: அதோ வராங்க ஐயா, ஆனால் வெறுங்கையோடத்தான் வராங்க. எலேய் பானை எங்கலேய்


மகேந்திரன்- அன்பு நிறை மனோ,

மனோ: நாசமா போச்சி, இப்போ உன் பிளாக் கமெண்டுன்னு நினைச்சியா? ஒழுங்கா பேசு.

மகேந்திரன்: நான் பானை வாங்க போன இடத்துல குயவன்கிட்ட சூர்யஜீவா சண்டை போட்டு பெரிய அடிதடியாகி இந்த ஏரியாவுல யாருக்கிட்டயுமே பானைவாங்க கூடாதுன்னு என்னை சூர்ய ஜீவா கூட்டிக்கிடு வந்துட்டாரு. 


சீனா தானா ஐயா:  என்ன ஆச்சு? மனோதான் கோவக்காரன் அருவா கத்திலாம் தூக்குறான்னு பார்த்தால் நீயுமா? என்ன ஆச்சுன்னு சொல்லு சூர்யா?

சூர்யஜீவா: ஐயா, நான் பாட்டுக்கு பானை வாங்கிட்டு இருந்தேன். அப்போ குயவன் கைல சின்னதா ஒரு கொப்பளம்.என்னன்னு கேட்டேன். அது என்னன்னு தெரியலை. அது சாதாரண கட்டி னுசொன்னான். அவனை தோண்டி துருவி விசாரித்ததுல பானை செய்ய தேவையான மண்ணு கூடங்குளத்துல இருந்துதான் வருதுன்னு சொன்னான். அதோட விளைவுதான் இது, நீ போய் இந்த லிங்குல பார்த்து தெரிஞ்சுக்கோன்னு சொன்னேன்.  நானே  பானை செஞ்சு அஞ்சுக்கும் பத்துக்கும் விக்குறேன் என்கிட்ட ஏது கம்ப்யூட்டரும் நெட்டும் என்ன நக்கல் பண்றியான்னு அந்த ஏரியாவே அடிக்க வந்துட்டுது. கூடங்குளத்துல இருந்து வந்த மண் என்பதால் ஏன் ரிஸ்க்குன்னு நான் பானையே வாங்காம வந்துட்டேன். 


சீனா தானா ஐயா: இன்னிக்கு பொங்கல் வச்ச மாதிரிதான் அரிசி, வெல்லம் வாங்க போன ”வேடந்தாங்கல்” கருணும் ”கவிதைவீதி” சௌந்தரும், “உணவு உலகம்: சங்கரலிங்கமும் இன்னும் காணோம். ஏம்பா “நல்ல நேர” சதீஷ் அவங்களுக்கு போன் போட்டு பாரு,

சதீஷ்: ஐயா இன்னிக்கு நவமி. அதனால் என் போனை நான் யூஸ் பண்றதில்லை.

சீனா தானா ஐயா:  சரி, யார்கிட்டயாவது செல்லை வாங்கி அவனுங்களுக்கு போன் போடு.

சதீஷ்: இப்போ குளிகை ஐயா, அதனால நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன்.

மனோ: அப்போ நீ...

விக்கி: நல்ல நாள் அதுவுமா, சதீஷை திட்டி ஏழரையை கூட்டாதே.

சௌந்தர்: போன்லாம் போடாதீங்க. நாங்களே வந்திட்டோம்.

சீனா தானா ஐயா:  ஏம்பா சௌந்தர்  இந்த அரிசி, வெல்லம், ஏலக்காய், நெய் வாங்கி வர உங்களுக்கு இவ்வளவு நேரமா?

கருண்: ஆபீசர் சாரலதான் லேட்.அவர்தான் எந்த பொருளை எடுத்தாலும் கலப்படமிருக்கா? சுத்தமானதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்து பார்த்து வாங்குனார். 

சௌந்தர்: கிராமத்து தோட்டத்துல விளைஞ்சு வரும் காய்கறிகள், கறிவேப்பிலை கொத்தமல்லி க்கு கூட தர சான்றிதழ் இருக்கான்னு கடைக்காரனை கேட்டு அவனை தலை கிறுகிறுக்க வைத்தாரே அந்த கொடுமை சொல்லேன்.

ஆபீசர்: நீ மட்டும் ஒழுங்கா? ஒரு போஸ்டரையும் விடாம பார்த்து, அது எப்போ ரிலீஸ் யார் நடிகர்கள், எந்த தியேட்டர்ன்னு பார்த்துக்கிட்டே மெதுவா நடந்து வந்தே.  இந்த கருணோ ஒரு பஸ்ஸை விடலை, கண்ணே மணியே, சக்கரமேன்னு கவிதை எழுத ஆரம்பிச்சுடுறான்.


கருண்: டேய் மாப்ள “ராஜபாட்ட” ராஜா, நீ  என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்கே.

ராஜா: சூர்யா, அஜீத், விஜய்லாம் எப்படி பொங்கல் வச்சாங்கன்னு நாளைக்கு ஃபேஸ்புக்குல வருமா? அது வச்சு எப்படி பதிவை தேத்தலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.


பிரகாஷ்: அடங்கோ, விஜய் பேரை சொல்லிட்டியா? இந்த பொங்கல் நல்லபடியா போன மாதிரிதான்.ஏண்டா மாப்பிள்ளை விஜய் பேரை சொன்னே?


மனோ: இங்க இம்புட்டு கலவரம் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த சிபி மூதேவி மட்டும் ஏன் மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கான்?
டேய் அண்ணா உனக்கென்னடா கவலை? ஏன் உம்முன்னு இருக்கே.

சிபி: இன்னிக்கு, தமிழ்ல 4 படம், இங்கிலீஷ் ல 2 படம், இந்தி ல 1 ஒரு படம்ன்னு ரிலீஸ்.

விக்கி:கில்மா படம்?

சிபி:கில்மா படம் ஏதும் ரிலீஸ் ஆகலை.

விக்கி: டேய் நாதாரி அதான் உன் கவலையா ங்கொய்யால 

சிபி: ஹி ஹி அதில்லை தம்பி.  இன்னிக்கு ரிலீசாகுற படத்தையெல்லாம் பார்க்க முடியாம உங்ககூட பொங்கல் கொண்டாட வேண்டியதா போச்சே அதான் என் கவலை.
http://www.vikatan.com/news/images/onam.jpg

எல்லாரும் கோரஸாக, என்னது எங்ககூட பொங்கல் கொண்டாடுறதுதான் உங்க கவலையா?ன்னு கரும்பு, விறகு கட்டைன்னு கைக்கு கிடைச்சதை தூக்கிக்கிட்டு அடிக்க ஓடி வர, சிபி அதிலிருந்து தப்பிக்க ஓடன்னு பொங்கல் இனிதே முடிந்தது.

Saturday, January 14, 2012

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/01/vettai-arya-300x294.png 

அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி ஆபத்பாந்தவனாய் கை கொடுப்பது நம்ம எம் ஜி ஆர் ஃபார்முலாதான்.. அதை கையில்  எடுத்து சக்சஸ் அடைஞ்சவங்களும் உண்டு, கையை சுட்டுக்கிட்டவங்களும் உண்டு./.. இந்த முறை கயில் எடுத்திருப்பது என் லிங்குசாமி... சாஃப்ட் ஹீரோ மாதவனையே ரன்னில் ஆக்‌ஷன் ஹீரோ ஆக்கியவர்.. கேட்கவா வேணும்.. மசாலா பொங்கல் படைச்சிருக்கார்.. 

எங்க வீட்டுப்பிள்ளை பயந்தாங்கொள்ளி எம் ஜி ஆர் கேரக்டர் மாதவனுக்கு.. போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் இருந்த அப்பா இறந்ததும் ஆட்டோமேடிக்காக இவருக்கு எஸ் ஐ போஸ்ட் வருகிறது.. கலைஞருக்குப்பிறகு ஸ்டாலின் சி எம் ஆக முயற்சிப்பது போல். ஆர்யா அழகிரி மாதிரி ஒரு அதிரடி பேர்வழி.. வேலை ஏதும் இல்லா வெட்டாஃபீஸ்.. ஆனா இவங்க 2 பேரும் கலைஞர் பசங்க மாதிரி அடிச்சுக்கலை,.. ஒத்துமையா இருக்காங்க.. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்தாலும் எல்லா கேஸ், சண்டை எல்லாத்தையும் டீல் பண்றது ஆர்யா. அதுக்கான பலனை அனுபவிப்பது மாதவன்.. லோக்கல் பாஷைல சொல்லனும்னா  கெடா வெட்றது ஆர்யா, பொங்கல் சாப்பிடறது  மாதவன்...

ஹீரோக்கள் 2 பேரு.. அண்ணன் , தம்பின்னா ஹீரோயின் எப்படி இருக்கனும்? கரெக்ட்.. அவங்களும் அக்கா தங்கை தான்.. ஆர்யாவுக்கு அமலா பால், மாதவனுக்கு சமீரா ரெட்டி.. மாதவன் சார்பா பொண்ணு பார்க்க போன ஆர்யா அண்ணியை ஓக்கே சொல்ல தங்கை அமலா பால் ஆர்யாவுக்கு த்ரட் விடறார்.. அதாவது நூல் விடறாரு.. 





http://images.news.pluzmedia.com/slide/big_Vettai__The_season_of_celebration_begins-f50d7d5ae3ea639eb139216bc3dd496e.jpg

படம் ஃபேமிலி, லவ் , ஜாலியா போனா அதுல என்ன இண்ட்ரஸ்ட் இருக்கு? அந்த ஏரியாவுல 2 தாதாங்க.. ( ஆனா 2 பேரும் பக்கா சோதாங்க.. )அந்த தாதாவோட சரக்கு லாரியை ஆர்யா மடக்கி மாதவன்கிட்டே ஒப்படைக்க மாதவன் நல்ல பேர் வாங்கறார்.. நாளா வட்டத்துல மாதவன் டம்மி, ஆர்யா தான் மம்மி அப்டிங்கற மேட்டர் வில்லன் குரூப்க்கு தெரிஞ்சுடுது.. சசிகலாவை ஜெ  கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கற மாதிரி மாதவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டுடுது வில்லன் குரூப்..

 நாட்டுக்கு ஒரு நல்லவன்ல ரஜினி குஷ்பூ கிட்டே சொல்வாரே அந்த மாதிரி ஆர்யா சொல்றாரு , எத்தனை நாளைக்கு  நானே உன்னை காப்பாத்திட்டு இருப்பேன், நீயும் வீரன் ஆகு  படத்தை சீக்கிரம் முடிக்கனும்கறாரு.. 

வைஜயந்தி ஐ பி எஸ் படத்துல வர்ற மாதிரி 4 கி மீ ரன்னிங்க், 18 பஸ்கி எடுத்து  உடனடி சேமியா, திடீர் இட்லி மாதிரி மாதவன் வீரன் ஆகிடறார்.. இப்போ எண்ணி பாருங்க, மொத்தம் 2 வீரன்க, வில்லன்களும்  2 , ஹீரோயின்களும் 2 .. ஹி ஹி  ( எனக்கு என்ன குறைன்னா 2 வில்லிகளையும் காட்டி இருந்தா  இன்னும் செமயா இருந்திருக்கும்.. )



http://www.boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Vettai-Stills,Photos,Pictures/Vettai%20Movie%20Stills00.jpg?m=1307983153

இடைவேளை வரை ஜாலியா ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம்னு போகுது, அதுக்குப்பிறகு ஆக்‌ஷன் அதிரடி தான்.. பக்கா கமர்ஷியல் மசாலா.. இந்தப்படத்தை ஹிந்தில வேற பண்ணப்போறாராம் அவ்வ்வ்வ் , ஆனா அங்கேயும் ஹிட் ஆக்கிடுவார்னு தோணுது.. 

இப்போ இருக்கற ஹீரோக்கள்ல ஆர்யா மாதிரி ஒரு அசால்ட் கேரக்டரை நான் பார்த்ததே இல்ல.. எதுக்குமே அலட்டிக்காம சர்வ சாதாரணமா பாடி லேங்குவேஜ்ல தெனா வெட்டு, முகத்தில் எப்போதும் ஒரு அலட்சியம் , நல்லா கேரக்டர்ல மேட்ச் ஆகறார்.. அமலா பால் குளிச்சுட்டு டர்க்கி டவல் மட்டும் கட்டிட்டு வந்து அவரை கிராஸ் பண்ணி போன பின் தாங்க்ஸ் சொல்றாரே செம.. ஒரே அப்ளாஸ்தான் தியேட்டர்ல.. 

மாதவன்.. இயல்பாவே சாஃப்ட் கேரக்டர் என்பதால் அவர் போலீஸ் யூனிஃபார்மில் பயந்துநடுங்குவது செம காமெடியாக இருக்கு.. ஆர்யா செய்யும் வீரசாகசங்கள் எல்லாம் இவர் செஞ்சதா மக்கள் நினைக்கறது இவருக்கு  தெம்பையும், பயத்தையும் ஒரு சேரத்தர்றதை அவர் நல்லாவே காட்டி நடிச்சிருக்கார்.. 

vettai tamil movie stills00-5


அமலா பால் தான் ஹீரோயின், ஏன்னா அவருக்குத்தான் 2 டூயட்.. அதுவும் இல்லாம கார்ல சரச சலாபம் , லிப் டூ லிப் கிஸ் அடிக்கறதுன்னு பாப்பாவுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை, பாவம் நாம தான் பயந்து பயந்து பார்க்க வேண்டி இருக்கு..  நடன காட்சிகளில் அவருக்கு நளினம் சரியாக வரவில்லை.. ( ஒரு வேளை இயற்கையாவே அவருக்கு நளினம் வர்லையோ என்னவோ?)

சமீரா ரெட்டி கொஞ்சம் முற்றல் முகம் தான் ( முகம் மட்டுமா? நடிப்பும் தான்னு சொல்ல வந்தேன் ஹி ஹி ) அவர் பல காட்சிகளில் ஓவர் ஆக்டிங்க்.. நடன காட்சிகளில் இவர் ஸ்கோர் பண்ணிடறார்.

2 ஹீரோயின்களுக்கும், இயக்குநருக்கும் பொதுவான ஒரு அட்வைஸ்,, கிராமத்துப்பெண் கேரக்டர்னா  இயல்பான மேக்கப்பில் கொஞ்சம் வெட்கம், நாசூக்கு எல்லாம் முகத்துல, பாடி லேங்குவேஜ்ல காட்டனும்..  அரை கிலோ பவுடர், கால் கிலோ ரோஸ் பவுடர், கால் லிட்டர் ஃபேரன் லவ்லி எல்லாம் போட்டுக்கிட்டு தாவணி போட்டா அது வில்லேஜ் கேர்ள் ஆகிடுமா? ( வாகை சூடவா இனியாவை ஒரு முறை பார்க்கவும்)

தூத்துக்குடி தான் கதைக்களன் என்பதால் வழக்கம் போல் அரிவாள், அடிதடி. வெட்டு எல்லாம் உண்டு என்றாலும் இயக்குநர் சாமார்த்தியமாக லவ் , ஃபேமிலி மேட்டர் கொஞ்சம் சேர்த்து போர் அடிக்காமல் க்தையை நகர்த்துகிறார்.. 




Vettai Movie Stills00-15

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  ஓப்பனிங்க் ஷாட்ல ஆர்யா சினிமா தியேட்டர்ல் பண்ற ஆக்‌ஷனை திரைல ஓடற ரவுத்திரம் பட ஹீரோ ஜீவா ஆச்சரியமா பார்க்கறதை காட்ன விதம்.. 

2.  முதல் பாடல் காட்சியில் ஏகப்பட்ட பனை மரங்களை ஒரே ஷாட்டில் அழகாக ஏரியல் வியூவில் காட்டியது , ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு ( நீரவ் ஷா)

3.  மாதவன் எஸ் ஐ ஆக  ஜாயின் பண்ணும்போது உயர் அதிகாரியாடு சல்யூட் அடிக்கும் 3 முறையும் அவர் ஸ்டிக் தவறி கீழே வழிவதும் அவர் வழிவதும் செம காமெடி..

4.  மாதவனை நாசர் பாராட்டி அடுத்த பிராஜக்ட்க்கு தயார் செய்து அனுப்ப முயற்சிக்கையில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பலி ஆட்டை சிம்பாலிக்காக காட்டுவது கல கல காமெடி.. 

5.  கட்டிப்புடி பாடல் காட்சியில் அமலா பாலின் அழகை  எல்லாம் அள்ளிகொள்ளும் விதமாய் ஆடை வடிவமைப்பு செம..  க்ளை மாக்ஸ் குத்துப்பாட்டான பப்பாறப்பா பாட்டில் நடன அமைப்பு அள்ளிக்கொள்கிறது.. லொக்கேஷன் செலக்‌ஷனும் செம.. 

6. யுவன் சங்கர் ராஜா இசையில் தைய தக்கா தக்க, டம டம  பாடல்கள் ஒன்ஸ்மோர் சொல்ல வைக்கிறது.

7 . தாதா கதை என சலித்துக்கொள்ளாதபடி புத்திசாலித்தனமாய் திரைகதையில் ஆர்யா - அமலா பால் காதலை நுழைத்த விதம்.. 


Vettai Movie Stills00-5

.
இயக்குநர் கோட்டை விட்ட  சில இடங்கள்

1.  தனக்குப்பிடிக்காத அமெரிக்க மாப்ளையுடன் காரின் பின் சீட்டில் வரும் அமலா பால் ஜன்னல் ஓரம் உக்கார வேண்டியதுதானே, ஏன் அப்படி ஒட்டி உக்காந்துட்டு வரனும்? இந்த லட்சணத்துல காதலன் ஆர்யா டிரைவிங்க் த கார்.. 


2. அமெரிக்க மாப்ளையை போலீசில் மாட்டி விட ஆர்யா கோக் என சொல்லி சரக்கை கொடுக்கறா... என்ன தான் அவன் கேனை மாப்ளையா இருந்தாலும் சரக்கு வாசத்துக்கும், கோக் வாசத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்குமா?

3. ஒரு சீன்ல வில்லன்கள் புடை சூழ நிற்கும்  ஆர்யா தன் அண்ணன்மாதவன்க்கு ஃபோன் போட செல் ஃபொன்ல நெம்பரை டைப் பண்றார்.. அது அவர் ஃபோன், மாதவன் அவர் சொந்த தம்பி. ஆல்ரெடி ஸ்டோர் ஆகி இருக்காதா நெம்பர்? வழக்கமா பிரதர்னோ, அவர் பேரோ வரனும்.. ஆனா ஏன் அவர் ஒவ்வொரு நெம்பரா டைப் பண்றார்?

4.  மாதவனுக்கு ஆக்சிடெண்ட் ஆகி 3 நாள்  வீட்டுக்கே வர்லை.. சமீரா ரெட்டி அப்போ எல்லாம் கண்டுக்காம ஆர்யா மாதவனை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றப்போ  பதர்றாரே அது எப்படி? அதே போல் விபத்து நடக்கும்போது நெற்றியில், காது அருகில் பயங்கர காயங்களோட இருந்த மாதவன் 3 நாள்ல வீட்டுக்கு வர்றப்ப முகம் டென்னிஸ் கோர்ட் மாதிரி நீட்டா இருக்கே அது எப்படி?

5.  க்ளைமாக்ஸ்ல  வில்லன் ஆட்கள்  சமீரா வீட்டுக்குள்ள நுழைஞ்சிடராங்க..  உடனே சமீரா மாதவனுக்கு தகவல் தெரிவிக்க , அவர் வீட்டை தாழ் போட்டுட்டுஅங்கேயே இரு, நான் வந்துடறேன்கறார்.. கொஞ்ச நேரத்தில் சமீராவின் தங்கை அமலா பால் பர்ச்சேஸ் முடிச்சு வீட்டுக்கு வந்து வில்லன் கிட்டே மாட்றார்.. மாதவனுக்கு ஃபோன் செஞ்ச சமீரா தன் தங்கைக்கு ஃபோன் செஞ்சு இப்போ வராதே என ஏன் சொல்லலை?

Vettai Movie Stills00-2


பம் பம்  பாடல் காட்சியில் ரன் பட தேரடி வீதியில் தேவதை வந்தா பாட்டின், நடன அமைப்பின் பாதிப்பு தெரியுது.. 

ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள், பி செண்டர்களில்  40 நாட்கள், சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 

சி,பி கமெண்ட் - ஆக்‌ஷன், ஜாலி டைம் பாஸ் பிரியர்கள் பார்க்கலாம்

ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தோம் ( வித் நல்ல நேரம் சித்தோடு சதீஷ் )


Vettai Movie Stills00-23


டிஸ்கி -1

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்