Skip to content

Thursday, January 14, 2016

சிம்பு வின் அடுத்த பட டைட்டில் =பெண்கள் நாட்டின் கண்கள் , ஜட்ஜ் அதிர்ச்சி

 மோடி பாகிஸ்தானுக்கு சென்றதில் தவறு எதுவும் இல்லை-RSS# நவாஷ் ஷெரீப்  இந்தியா வர்றார்,மோடி அங்கே போறார்ஆனா  ஃபைட் மட்டும் நடந்துட்டே இருக்கு



=================



விஜயகாந்தை குண்டாஸில் கைது செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு # இப்போதான் யோகா க்ளாஸ் போய்க்கிட்டிருகாரு,ஸ்லிம் ஆகிடுவார்,வெயிட் 




===============




திரையுலகினர் சிம்புக்கு உதவ முன்வரவில்லை - டி.ராஜேந்தர் ஆவேசம் # இப்பவெல்லாம் தியாகிகளுக்கே உதவி. பென்சன் எதுவும் கிடைக்கமாட்டேங்குது 




=================



4  ரூ.1,06,000 கோடிகிரானைட் முறைகேடு: சகாயம் அறிக்கைக்கு விளக்கம் தர அரசுக்கு மேலும் 6 வாரம் அவகாசம் # இரட்டை இலைக்கு இரட்டை தலைவலி 



=================



5  பெங்களூரில் பரிதாபம்... காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மமரணம்... 22 வயது கணவர் மீது புகார்# ஊர்ல சசிதரூர்ங்க எண்ணிக்கை பெருகுது



================



6  திமுகவுடன் தேமுதிக கைகோர்த்தால் நாம அதிமுக அணிக்கு போயிடலாம்- வைகோவை இழுக்கும் தா.பா.!! # போய்டலாம், ஆனா கட்சிக்காரரே மதிக்கமாட்டாங்க




==============



ஆயுத உற்பத்தியே மேக் இன் இந்தியா'திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்.. மோடி.# ராணுவ ரகசியத்தை வெளில சொல்லிட்டா எதிரி உஷார் ஆகிடமாட்டானா?




=============



பாகிஸ்தானை நான்காக உடைக்கும் நேரம் வந்து விட்டது.அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது-சு.சாமி. நினைச்சாரா?பாக்குன்னு நினைச்சாரா?



============



9 பாமகவின் வெற்றி ,110' 120 '130 '140' என்று கூடிகொண்டே போகிறது-ராமதாஸ் # தலைவரே! இதுதான் தேர்தல் ஜூரம், 100 டிகிரியை தாண்டுனா ஆபத்து




=========



10 கூட்டணி கேட்டு பிற கட்சி அலுவலகங்களுக்கு செல்ல கலைஞர் திட்டம் # இதுல என்ன தப்பு ? ஒவ்வொரு லேடீஸ் காலேஜா போய் ஐ லவ் யூ ப்ளீஸ்னு நாம சொல்லல?




================




11 திமுக கூட்டணிதான் பொருத்தமானது: காங். மாவட்ட தலைவர்கள்  வலியுறுத்தல் # ஆமா, 10 பொருத்தமும் கன ஜோரா இருக்கு, ஊழல் + ஊழல்= மெகா ஊழல்




=====================





12  பாமக சாதிக்கட்சி அல்ல - ராமதாஸ் # அப்போ இந்த வாக்கியத்தை "பா ம க ஒரு கட்சியே அல்ல"ன்னு தமிழன் படிச்சுடுவானே பரவால்லியா தலைவரே?



=============

13 தமிழக மக்களின் முதல் எதிரி ஜெயலலிதாதான்.. ராமதாஸ் கடும் பாய்ச்சல் # உயிரினும் மேலான உடன் பிறப்பே! அப்போ நான் யாரு? -,கலைஞர்


===============

14 இந்தியாவில் 15 கோடி பேருக்கு சர்க்கரை நோய் - சர்க்கரை நோய் மாநாட்டில் அறிவிப்பு # இது போக மெடிக்கல் டெஸ்டே எடுக்காம நோய் உள்ளவங்க இருப்பாக


================


15  இந்தியாவில் 15 கோடி பேருக்கு சர்க்கரை நோய் - சர்க்கரை நோய் மாநாட்டில் அறிவிப்பு #  என் இனிய இந்திய மக்களே!ன்னு இனி மேடைல விளிப்பாங்களோ?


==================


16  காப்பாற்றக் கூடிய பொறுப்பு இருந்தும், பொறுப்புகளை நிறைவேற்றலை அதிமுக. அரசு-கலைஞர் # ஈழ மக்களை காப்பாற்ற வாய்ப்பு இருந்தும் நீங்க காப்பாத்தலை


================


17 தீமை பயக்கும் இந்த ADMK ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டும்- கலைஞர்  # அப்படி அகற்றலைன்னா திமுக தேர்தலில் அதிமுகவை எதிர்க்க பயக்கும்


===================

18  பெண்ணுரிமை காத்து பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்தது திமுக தான் -கலைஞர் # தயாளு அம்மாள், கனிமொழி பேர் ல சொத்து எழுதி வெச்சதை சொல்றாரா?


=================

19  தமிழ் மக்களை நாங்கள் காப்பாற்றுவோம்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி உறுதிமொழி# மழை வெள்ளத்தில் சிக்கினப்ப எத்தனை பேரை காப்பாத்துனீங்க?



======================


20 பெண்களை சிம்பு மதித்துநடக்க வேண்டும்: பீப்சாங்வழக்கில் ஹைகோர்ட்அறிவுரை# இவ்ளவ் தானே? அடுத்த பட டைட்டிலா “ பெண்கள் நாட்டின் கண்கள் வெச்டுவார்

=================

Wednesday, January 13, 2016

ஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா? சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை!!

நெட் தமிழன் பழைய காலண்டரை குப்பைத்தொட்டில தூக்கி வீசிட்டு வரும்போதே சும்மா வர்றதில்லை, அதை வெச்சு 4 ட்வீட் தேத்திட்டுதான் வீட்டுக்கே வர்றான்



=================



பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு உள்ளே போய்ட்டு வரும் வரை வெளீல வாசல்ல விட்டுட்டு வந்த செருப்பு பத்ரமா இருக்கும் என நம்புவதும் ஒரு வித நம்பிக்கையே




==================



மனசுக்குள்ளே 1008 சோக முள் இருந்தாலும் காலங்காத்தால கே டி வில மோக முள் போட்டா சிலாகிச்சுக்கிட்டே பார்ப்பான் நெட் தமிழன்




================



ஒரு தடவை கூட என் பெண் பாலோயர்சை பாத்ததாவோ பேசினதா வோ ஞாபகம் இல்லை நல்ல ட்விட் போடலைன்னாலும் பாராட்டிட்டு தாம் இருக்கேன் #,எ கீ



===========



5 அன்பே நவீணா!


உன்னை விட்டுப்போவேனா?

உனக்கு குட் மார்னிங் சொல்வது வீணா?



============

6 நல்லக்கண்ணு நல்லவர் தான், ஆனா வல்லவர் இல்லை, ஜெயிச்சதும் கூட்டணிக்கட்சிகள் அவரை நைசா கழட்டி விட்டுடும் வாய்ப்பு இருக்கு, எனவே மநகூ ஊ ஊ


=============

7 பஸ்.ஸ்டேன்ட்க்கு 1 கிமீ ரேடியசில் 16 தியேட்டர்கள் உள்ள ஒரே ஊர் திருவனந்தபுரம்.3 தியேட்டர் காம்ப் =3 , 2 தியேட்டர் காம்ப் = 3,சிங்கிள் 1


=============




8 கிராமத்து மக்கள் இயற்கைப்பேரிடர்க்கு அரசு என்ன செய்ய முடியும்?என கருத்தை முன் வைப்பதால் எதிர்க்கட்சிகளுக்குப்பின்னடைவே!




==========




9 முகத்தை ஒரு கையால பாதி மூடி மறைச்சு இருக்கும் பெண்கள் (டிபி) சாப்பிடும்போது என்ன செய்வாங்க? டக்னு பாத்துடனும்



==============



10 பிகரு வீட்டு வாசல்ல வாத்துக்கோலம் போட்டா வாத்து மடையன் மாதிரி கிராஸ் பண்ணிப்போய்டக்கூடாது.இதானா உங்க DUCKகு?டக்னு கேட்டுடனும்



===============




11  DMல ஆலோசனை சொல்லும்  நண்பர்கள் 4 பேரை சம்பாதிச்சு வச்சிருக்கேன்


 கேட்டை திறந்து  விட்டா உங்க 3478 ஃபாலோயர்சும் வர ரெடியா இருக்காங்க மிஸ்


=

================

12 அன்பே! நீ எனக்கு 2 சுண்டு விரல் மாதிரி! சுண்டுவிரல் இல்லன்னா கை தனது 50%பலத்தை இழக்குமாம், நீ என்னுடன் இல்லைன்னா 100% பலம் இழப்பு எனக்கு

===========

13 மவுனமாக இருப்பது  சில சமயம் கவசம்,  பல சமயம் ஆயுதம்.உன் எதிரியை  அச்சம் கொள்ள வைப்பது உன் மவுனம் தான்


=====================


14 சரியான நேரத்தில் இமைகளை பயன் படுத்தனும் தூங்கும்போதும் ,எதிரே பிகர் வருகையில் கண் அடிக்கும்போதும்

================
15 புது சம்சாரம்னு நினைக்கேன்.தியேட்டர் ல ஒருத்தன் சுத்தமா இருக்கும் சீட்டை் துடைச்சட்டு உட்காரு டார்லிங் கறான்.டேய்.ரொம்ப நடிக்காதீங்கடா


==========

16 நீங்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள் என்பதை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கும்படி உங்கள் வெற்றி இருக்கவேண்டும்.உதா கேப்டன்


===============

17 உங்கள் கவிதையில் 1000 அர்த்தம் பொதிந்து கிடக்க வேண்டுமா?,முதலில் 999, அர்த்தங்களை புதைக்கவும்.1000 வது தானா தோன்றும்


==============

18 மொக்கை பிகர் என யாரையும் ஒதுக்கி விட.வேண்டாம்.வெய்ட்டிங்/பெண்டிங் லிஸ்ட்டில் வைக்கவும்.ஏனெனில் சக்க பிகர் கடைசி வரை கிடைக்காமலே போகலாம்


============

19 ஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளாம்.இது தெரியாம ஒரே கவிதை யை 2,காபி டிஎம் ல ஜெராக்ஸ்.அனுப்பி மாட்டிக்காதீங்க மக்களே!

=============


20 பசங்க பாட்டுக்கு சிவனேன்னு தான் உண்டு.தன் வேலை உண்டுன்னு இருக்காங்க.இந்த பொண்ணுங்க தான் நோ டி எம் ப்ளீஸ் னு மறைமுகமா தூண்டறாங்க

==============

திரைப்பட விழாவில் கிடைத்தது என்ன?- சினிமா ஆர்வலர்கள் கருத்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
சர்வதேச திரைப்படவிழாவில் எங்களுக்குக் கிடைத்தது என்ன? - பார்வையாளர்களின் கருத்துத் தொகுப்பு
இயக்குநர், நடிகர் ரவிமரியா:
கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் வளர்ச்சியடைந்து வருகிறது சென்னை சர்வதேச திரைப்படவிழா. ஒரு இயக்குநராக பல்வேறு கதையுள்ள படங்களைப் பார்த்து அவர்களது கலாச்சாரங்களை, அவர்களின் திரைக்கதை முறைகளை தெரிந்துகொள்கிறேன். ஒரு நடிகனாக இண்டர்நேஷ்னல் அளவில் எப்படி திறமையை வெளிப்படுத்துகிறார்கள், நம் இந்தியாவில் அதை நாம் எப்படிப் பயன்படுத்தமுடியும் என்பதைத் தெரிந்துகொள்கிறேன். இத்திரைப்படவிழாவை எப்போதும் நான் மிஸ் செய்வதில்லை. சினிமா வளரவும் சினிமாவுக்கான அறிவு வளரவும் இத்திரைப்படவிழா உதவுகிறது.இவ்விழாவுக்காக முன்பே படபிடிப்பு வாய்ப்புகளை மாற்றியமைத்துக்கொள்வேன்.
டி.ஜி.வைஷ்ணவா காலேஜ் மாணவர்கள்:
திரைப்படவிழாக்களுக்கு வருவதன்மூலம் எப்படி திரைத்துறையைச் சார்ந்த முக்கியமானவர்கள் வருவார்கள். அவர்கள் தொடர்புகளைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பு. தவிர எப்படி ஷாட் எப்படி வைப்பது, கேமரா எப்படி வைப்பது என்பதை தெரிந்துகொள்ள இப்படங்கள் உதவுகின்றன. எங்கள் வாழ்வில் இது ஒரு வைடல் பார்ட். இங்கு வரும் இயக்குநர்களிடம் உரையாடும் கலந்துரையாடல் நிகழ்வு முக்கியமானது. அதில் கலந்துகொள்ளும்போது எந்த பாயிண்ட் ஆப் வியூவில் காட்சிகளை வைத்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.
இயக்குநர் சந்தானபாரதி:
நடத்தப்பட்டது. இப்போதும் திரைத்துறையிலிருந்து எஸ்பிஎம் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலைஞர்கள் தவறாமல் வந்துபடங்களைப் பார்க்கிறோம். முதலில் இத்திரைவிழா பைலட் தியேட்டரிலும் ஆனந்த் தியேட்டரிலும்தான் அப்போது பெரும்பாலும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள்தான் அதிகம் வந்தார்கள். அடுத்தது திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வரத் துவங்கினார்கள். தற்போது விஸ்காம் மாணவர்கள் பெருமளவில் திரைப்படவிழாவில் வந்து கலந்துகொள்வதைப் பார்க்கமுடிகிறது. உலகஅளவில் இருந்து வரும் படங்களைப் பார்க்கலாம். அதன்மூலம் அவர்களது கலாச்சாரம், அவர்களது தொழில்நுட்பம், லேட்டாஸ்ட்டாக என்ன செய்திருக்கிறார்கள் கேமராவை எப்படி வைக்கலாம் என எல்லாவற்றையும் விஷூவலாகப் பார்த்து அனுபவித்துத் தெரிந்துகொள்ளமுடியும். கல்லூரியைவிட இங்கு அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். காரணம் இது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எப்படி விதவிதமாக எடுக்கலாம் எப்படி கேமரா கோணங்களை வைக்கலாம். இங்கு வந்து படங்களைப் பார்க்கும்போது விஷூவலாக்
இயக்குநர், நடிகர் ரமேஷ் கிருஷ்ணா:
உலகப் படங்களைப் பார்க்க ஒரு வாய்ப்பு. ஆனா அதையெல்லாம் இங்க செய்யமுடியாது. ஏன்னா மாறுபட்ட கலாச்சாரம். நமக்கு ஈரான் படங்களோட கலாச்சாரம் ஓரளவுக்குப் பொருந்தி வரும். இந்தப் படங்கள் மூலம் நல்ல விஷயங்கள் தெரிஞ்சக்கலாம். வித்தியாசமான படங்கள் பார்க்கலாம். எப்பவுமே பழைய படங்களைப் பாத்து ஒரே இடத்துல இருக்கற நமக்கு வெளியில வேறொரு பார்வை கண்ணோட்டம் நமக்கும் கிடைக்கும்.
சி.ஆர்.சரஸ்வதி(திரைப்பட நடிகை):
நான், டைரக்டர் சந்தானபாரதி, ரமேஷ் கண்ணா பிலிம் பெஸ்டிவல் ஆரம்பித்ததிலிருந்து 10 வருஷமா தொடர்ந்து வந்துகிட்டிருக்கோம்.டிவிடில படம் பாக்கலாம், தியேட்டர்ல பாக்கலாம், பிலிம் பிரிவியூல பாக்கலாம், எந்தப் படமா இருந்தாலும் சரி தியேட்டர்ல பாக்கற சந்தோஷம் டிவிடில கிடைக்காது. அதுவும் மத்த நாட்டுப் படங்கள்னும்போது அவங்க டெக்னிக்கலா எப்படி படம் பண்றாங்க. எப்படி கதை எப்படி சொல்றாங்க. அந்த நாட்டோட அழகு, அந்த நேச்சர், அந்த சீனரீஸ், படத்துல நடிக்கற கலைஞர்களோட திறமை, தொழில்நுட்ப திறமை யெல்லாம் பாக்கும்போது நிறைய விஷயங்கள் தெரிஞ்சக்கமுடியுது. எங்களைப் பொறுத்தவரையில் இந்த சீசனை என்ஜாய் பண்றோம். எல்லாப் படங்களையும் பாத்துடுவோம். இதை வழக்கமான ஒரு வேலையா வச்சிக்குவோம்.
சத்யேந்திரா (நடிகர்):
13 வருஷமா நான் பெஸ்டிவல்லுக்கு வந்துகிட்டிருக்கேன். இங்கே வந்தா இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சந்திக்கமுடியும். இந்தவருஷம் இந்த விழாவில் 120 படங்கள்வரை கவனித்தாலும் 30 படங்களிலிருந்து 35 படங்கள் வரை கவனித்துப் பார்ப்பேன். முக்கியமாக வெளிநாட்டுப் படங்களைத் திரையிட வந்திருக்கும் இயக்குநர்கள் தொடர்பான படங்களைப் பார்ப்பேன். காரணம் படம் முடிந்ததும் அவர்களோடு கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும். இந்தப் படங்களில் என் சுவைக்கேற்ற படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறேன். நிறைய பரிசோதனை முயற்சிப் படங்கள், நிறைய சிறந்த படங்கள். குறிப்பிட்டு சொல்லணும்னா முதல் நாள் பார்த்த விக்டோரியா ஜெர்மன் படம். இப்போ நான் பாத்துட்டு வந்திருக்கிற ப்ரியமானசம். ஒரு சம்ஸ்கிருத மொழிப்படம் முதன்முதலா பாக்கறேன். நல்ல ஒளிப்பதிவில் சிறந்த நடிப்பில் சிறந்த இசை, கதகளி நடனம் என நல்லபடம் இது.
பாலாஜி தரணிதரன் ( இயக்குநர்):
நான் சென்னை திரைப்படக் கல்லூரி முடித்ததிலிருந்தே இந்த விழாவுக்கு வந்துகிட்டிருக்கேன். இங்கே என்னுடைய முதல் குறும்படம் திரையிட்டாங்க. அதுலருந்து சில ஆண்டுகளா நான் தொடர்ந்து வந்துகிட்டிருக்கேன். இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா ஷார்ட் பிலிம் எடுத்தவங்க, விஸ்காம் மாணவர்கள் என பலரும் இங்கே வந்து பாக்கறாங்க. இங்கே வந்தா ஒரு உந்துதல் கிடைக்கிறது.
ஷைலஜா:
பிலிம் ஃபெஸ்டிவல்னாலே அப்படியொரு சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம். என்னைப் பொறுத்தவரை ஒரு இண்டாக்ஸிகேட்டடு நிலையில இருக்கேன். பேஷனா ஆறாத ஒரு ரொமான்ஸ் பலபேருக்கு சினிமாமேல இருக்கும். அந்த மாதிரி எனக்கு உலகத்திலிருந்து வந்த படங்கள் மேல ஒரு ஈடுபாடு. 50க்கும் மேற்பட்ட நாடுகள்லருந்து வந்த படங்கள் இங்கே இருக்கு. என்னன்னு சொல்லத்தெறியலை. ஒருவிதமான மனநிலையில வெளிநாட்டுப் படங்களைப் பாக்கறது. அந்தப் படங்கள்ல நாம பாக்கற அரசியல், பெண்களுக்கான முக்கியத்துவம், அதப் பத்தி மணிக்கணக்கல பேசறது...
இந்தப் படத்தைப் பாத்து அதுல ஊரிப்போற ஒரு சந்தோஷம். அதப்பத்தி திரும்பத் திரும்ப பேசறது... நண்பர்களோட தொடர்ந்து பேசறது... உண்மையில் இது திரைப்பட விழா மட்டுமே கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் அது. மெயின்ஸ்ட்ரீம் படங்களைப் பாக்கும்போது ஒரு சில விஷயங்களைத்தான் பேசுவோம். ஆனால் ஒரு சர்வதேச படங்களைப் பற்றிப் பேசினால் அந்த நாடு பற்றி, அரசியல் பற்றி, கலாச்சாரம், சமூகம், விமன்னோட ஸ்டேட்டஸ் பற்றி, இளைஞர்கள் பற்றி.. விக்டோரியான்னு ஒரு படம் பார்த்தேன்.
முதல்ல பாக்கும்போது 15, 16 வயசுக்கு பேரன்ட்ஸா இருக்கறவங்க என்ன இப்படின்னு ஒரு கன்சர்ன்னு வரும். ஆனா அப்புறம் படம் நகர நகர என்ன விக்டோரியாவோட கேமரா ஒர்க், அவங்களோட பர்மாமென்ஸ் எல்லாம் மிக மிக அருமை. அந்தப் படத்தைப் பற்றியே நீண்டநேரம் பேசிக்கிட்டிருந்தோம். முன்பெல்லாம் பெஸ்டிவல்லுக்கு வர நிறைய தயக்கம் இருக்கும். ஏனா பெண்களே குறைவா இருப்பாங்க. ஆனா இப்போ நிறைய பெண்கள் நிறைய பேர் வராங்க. நாங்க எல்லாம் சிலபேர் இங்கே வாலண்டியராவும் வொர்க் பண்றது மகிழ்ச்சியா இருக்கு.
இயக்குநர் நாகா
நம்ம படங்கள் ஆஸ்கருக்கு போகலையேன்னு ஒரு வருத்தம் நமக்கு இருக்கு. ஆனா நமக்கு exposureரே கிடையாது. வெறும் பிஸினஸா மட்டுமே பாத்து பழக்கப் பட்ட நமக்கு சினிமாவை எப்படி பாக்கணும்? அதை எப்படி பேசணும்னு தெரியாது. போறபோக்குல சில படங்களைப் பாத்துட்டு கைதட்டிட்டு விசிலடிச்சிட்டு போயிடறோம். ஏன்னா சினிமாங்கறது ஒரு சக்திவாய்ந்த சாதனம், ஊடகம்... ஆனா அந்த மீடியத்துக்கு நாம பெரிய கவனம் செலுத்தறதில்லை. நாம சினிமாவைப் புரிஞ்சிகிட்டோம்னு சொல்லமுடியாது. அதனால exporsure தேவை. அதனால இளம் தலைமுறையினர் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் வரும் படங்களைப் பார்த்துவிட்டு படங்களை இயக்க முற்படவேண்டும்.
ஆரி (நடிகர்)
நான் நடிச்ச நெடுஞ்சாலை படம் முதல்முதலா 2014ல் இங்க திரையிடப்பட்டது. அதேமாதிரி மாயாவுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. இந்தத் திரைப்படவிழாவில் இங்க உங்களோட பேசற வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. தமிழில் நிறைய ஹாரர் படங்கள் வந்துகிட்டிருக்கு. ஆனா மாயா ஒரு டிரெண்ட் செட்டிங் படமா அமைஞ்சிடுச்சி. திரைப்படவிழாவில் நிறைய படங்களை வேறவேற மொழிப் படங்களைப் பாக்கற ஒரு அருமையான வாய்ப்பு. நன்றி.

நன்றி - த இந்து

உலகப்பட இயக்குநர் ஆவது எப்படி?

மார்ட்டின் ஸ்கார்ஸேஸி, குறும்படங்கள் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்து தனது முதல் திரைப்படத்தை (Who’s that knocking at my door Black & white 1967) இயக்கி ஆண்டுகள் 48 ஆகின்றன. கடந்த நவம்பர் 17-ல் தனது எழுபத்துமூன்றாம் வயதில் அடியெடுத்து வைத்த இவரை, இத்தனை ஆண்டுகள் திரையுலகில் இருந்தும், திறமையில் துளிக்கூட மங்காத இயக்குநர் என்று தாராளமாகக் குறிப்பிட முடியும். இத்தனை வருடங்கள் சுறுசுறுப்பாகத் திரையுலகில் இயங்கிய / இயங்கிக்கொண்டிருக்கும் இயக்குநர்கள் உலக அளவில் மிகச் சிலரே இருக்கின்றனர் (ஸ்பீல்பெர்க் இன்னொரு உதாரணம்).



‘முத்திரை’ இயக்குநர்
ஸ்கார்ஸேஸியின் படங்களின் விசேஷ அம்சங்கள் என்ன? எதனால் அவரை இன்றுவரை அற்புதமான இயக்குநர் என்று திரைப்பட வெறியர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம்?
சில இயக்குநர்களின் படங்களை, எந்தக் காட்சியை கவனித்தாலும் அது அவரது படம் என்பதைச் சொல்லிவிட முடியும். அவர்களது முத்திரை அந்தப் படங்களில் அப்படிப் பதிந்திருக்கும். முத்திரை என்பது, வெறும் ஷாட்கள் அமைக்கும் முறை, லைட்டிங், ‘கட்’கள் போன்றவை இல்லை (mise en scène). அந்த இயக்குநரின் மனதில் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைப் பற்றி என்னென்ன தனிப்பட்ட எண்ணங்கள் இருக்கின்றனவோ, அவை அப்படியே அந்தப் படங்களின் காட்சிகளிலும் பிரதிபலிக்கும். இதுவே, நான் குறிப்பிட்ட ‘முத்திரை’ என்ற வார்த்தையின் பொருள். இதனை ‘auteur’ என்ற வார்த்தையால் (இந்தப் பதத்தை ஒரு அத்தியாயத்தில் விரிவாகக் காண்போம்) விளக்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு இயக்குநர்தான் ஸ்கார்ஸேஸி.
எப்படிப்பட்ட படங்களை இதுவரை ஸ்கார்ஸேஸி இயக்கியிருக்கிறார் என்று கவனித்தால், Biopic என்று சொல்லக்கூடிய, உண்மைச் சம்பவங்கள் கொண்ட படங்கள், வாழ்ந்து மறைந்த மனிதர்களைப் பற்றிய படங்கள்தான் அவரது திரைவாழ்க்கையில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து இதுவரை ஒன்பது திரைப்படங்களை அப்படி இயக்கியிருக்கிறார் (Boxcar Bertha, Raging Bull, The Last Temptation of Christ, Goodfellas, Casino, Kundun, The Aviator, Hugo மற்றும் The Wolf of Wall Street).



இதற்கு அடுத்தபடியாக, Gangster Crime திரைப்படங்கள். இவற்றில், GoodFellas, Casino, Gangs of New York, Mean Streets, The Departed ஆகியன அடங்கும். கூடவே, தனிப்பட்ட மனிதர்களின் அடிமன உளவியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்டும் ஸ்கார்ஸேஸி பல படங்களை எடுத்துள்ளார். அவை: Taxi Driver, Cape Fear, Bringing out the Dead, Shutter Island போன்றவை. இவை தவிர, நகைச்சுவைப் படங்கள் (Alice doesn’t live here Anymore, The King of Comedy, After Hours) ஆகியவையும், Musical படங்களையும் (New York, New York) எடுத்திருக்கிறார்.
இயல்பின் எல்லைவரை
ஸ்கார்ஸேஸியின் படங்களில் வரும் கதாபாத்திரங்களைக் கவனித்தால், அவர்கள் பெரும்பாலும் மனச்சிதைவு உள்ளவர்களாக இருப்பார்கள். இந்தக் கதாபாத்திரங்களை அவர் விரிவாகக் காட்டும்போது, அவரது படங்களின் தொனியைப் பற்றிய குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் பலமுறை எழுந்துள்ளன. ஆனால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை முழுவதுமாக ஸ்கார்ஸேஸி காட்டும்போது, அவர்களின் போராட்டம், எழுச்சி, தோல்வி, மாற்றங்கள் போன்றவற்றை அவர் முடிந்தவரை இயல்பாக, உள்ளது உள்ளபடி காட்டுகிறார் என்பதைக் கவனித்தால் அந்தக் குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதவை என்பது புரிந்துவிடும்.
ஸ்கார்ஸேஸியின் படங்களில் வன்முறை அதீதமாகக் காண்பிக்கப்படும். ஆனால் காட்சியுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் மிக இயல்பாகவே தோன்றூம். உதாரணமாக, Goodfellas படத்தில், ஜோ பெஸ்சி ஏற்றிருக்கும் கதாபாத்திரமான டாம்மி என்பவன், ஒரு பாரில் பில்லி பேட்ஸ் என்ற மற்றொரு பிரபல ரவுடியை அடித்தே மயக்கமுறச் செய்யும் காட்சி வரும்.
அதே படத்தில், சிறிய வேடத்தில் நடித்த சாமுவேல் ஜாக்ஸனை டாம்மி கொல்லும் காட்சியும் அப்படிப்பட்டதே. இதன் பின் வந்த Casino படத்தின் இறுதியில், அதே ஜோ பெஸ்சி நடித்த நிக்கி என்ற கதாபாத்திரத்தை ஒரு காட்சியில் மாட்டை அடிப்பதுபோல் அடித்துவிட்டு, நகருக்கு வெளியே உயிரோடு புதைப்பார்கள். தற்காலத்தில் மிக அதிகமாகப் புழங்கும் இப்படிப்பட்ட வன்முறைக் காட்சிகளையும் என்றோ ஸ்கார்ஸேஸி செய்துகாட்டிவிட்டார். இவற்றையெல்லாம், இவை ரவுடிகளோடு சம்மந்தப்பட்ட காட்சிகள் என்பதால் இயல்பாக, அப்படியப்படியே காட்ட வேண்டும் என்பது அவரது முடிவு.
சமூகத்தைக் கண்காணிப்பவர்
தனது 14-வது வயதில் பாதிரியாராக மாறுவதற்கான படிப்பில் ஈடுபட்டார் ஸ்கார்ஸேஸி. ஆனால், அவரால் அதில் தொடர முடியவில்லை. பாதிரியாராக ஆசைப்பட்ட ஒரு நபரின் படங்களில் தெறிக்கும் வன்முறை என்பது சுவாரஸ்யமான முரண்தானே? ஸ்கார்ஸேஸியின் The Last Temptation of Christ படமும் அதனால்தான் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது என் யூகம்.
ஸ்கார்ஸேஸியின் இன்னொரு விசேஷம், அவரது படங்களில் அவர் ஷாட்களை அமைக்கும் முறை. அவரது படங்களின் ஷாட்கள் பெரும்பாலும் குறுகிய அளவிலேயே cut செய்யப்படும். இவற்றை ஸ்கார்ஸேஸியே எடிட்டிங் டேபிளில் முடிவு செய்வார். கூடவே, ஒரு ஷாட்டுக்குள் இடம்பெறும் விஷயங்கள் மிகவும் உயர்தரமாகவும் ஆடம்பரமாகவும் (rich feel) இருக்கும் கதாபாத்திரங்களின் பின்னணி இவரது பெரும்பாலான படங்களில் அப்படி இருப்பதால்.
தனது படங்களின் மூலம், தொடர்ச்சியாக, தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை மிகக் கவனமாகக் கண்காணித்துப் படம் பிடித்தே வந்திருக்கிறார் ஸ்கார்ஸேஸி. இதற்கு அட்டகாசமான எடுத்துக்காட்டு Taxi Driver.
ஏன் ஸ்கார்ஸேஸியின் சில படங்கள் கிட்டத்தட்ட ஒரே போன்ற கருவைக் கொண்டிருக்கின்றன? குறிப்பாக Goodfellas, Casino & The Wolf of Wall Street? தனது திரை வாழ்க்கையை ஸ்கார்ஸேஸி தொடங்கிய காலத்தில் அவரிடமிருந்து பல பரிசோதனை முயற்சிகள் வெளிப்பட்டன. இளமையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், முதுமையில், நம்மிடம் இருக்கும் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும்போது, எதைச் செய்ய வேண்டும் என்று நன்றாக யோசித்தே முடிவுசெய்ய முடியும் என்பது அவரது கூற்று. ஆகவே, அவரது சில படங்கள் ஒரே போன்ற கருவைக் கொண்டிருப்பது என்பது, அந்தப் படங்களை உருவாக்க வேண்டும் என்று அவருக்குள் எழுந்த ஆழமான எண்ணத்தினால்தான் என்பதை அவர் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.
தற்போது கிட்டத்தட்ட 17 வருடங்களாக அவரது மனதில் இருந்த ஒரு கதையைப் படமாக்கும் வேலையில் இறங்கிவிட்டார் ஸ்கார்ஸேஸி. படத்தின் பெயர் Silence. கதை, வழக்கப்படி பிரச்சினைக்குரியதுதான். பதினேழாம் நூற்றாண்டில் நடக்கும் கதையான இதில், இரண்டு போர்த்துக்கீசியப் பாதிரியார்கள், ஜப்பானில் கிறிஸ்துவத்தைப் பரப்ப மேற்கொள்ளும் பயணம் விவரமாக வருகிறது. 1966-ல் ஜப்பானிய மொழியில், ஷுஸாக்கு எண்டோ (Shsaku End) என்பவரால் எழுதப்பட்ட நாவல் இது. 2016-ல் திரைக்கு வரும்.
- தொடர்புக்கு: [email protected]

நன்றி - த ஹிந்து

'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதிகம் ?-சசிகுமார் சிறப்பு பேட்டி

  • இயக்குநர் பாலாவுடன் சசிகுமார்
    இயக்குநர் பாலாவுடன் சசிகுமார்
  • ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி, சசிகுமார்
    ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி, சசிகுமார்
சசி இப்போது சன்னாசி! தாடி, மீசை, தடாலடி பார்வை என ‘தாரை தப்பட்டை’ படத்துக்காக குருநாதர் பாலாவின் வார்ப்பில் கூடுதல் மிரட்டலைக் கொடுக்கிறார், சசிகுமார். மணிரத்னம் கணக்காக, படம் வெளியாகும்போது மட்டுமே தரிசனம் கொடுக்கும் சசிகுமார், ஒரு பின்னிரவு நேரத்தில் ‘தி இந்து’வுக்கு கொடுத்த சிறப்பு பேட்டி:




பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த நீங்கள், இப்போது அவர் இயக்கத்தில் ஹீரோவாகி இருக்கிறீர்கள். இந்த திருப்பம் எப்படி இருக்கிறது?


என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது. ‘சேது’வில் உதவி இயக்குநராக என்னை சேர்த்துக்கொண்ட பாலா அண் ணன், ‘தாரை தப்பட்டை’யில் நாயகனாக்கி இருக்கிறார். சினிமாவில் ஒரு சிஷ்யனுக்கு குருநாதர் கொடுக்கும் பெரிய வரம் இது. என் சந்தோஷத்தையும் மனநிறைவையும் எந்த வார்த்தையாலும் சொல்லிவிட முடியாது. ஒரு பெருமூச்சு மாதிரி எல்லா நெகிழ்ச்சியும் என் நெஞ்சுக்குள் அப்படியே இருக்கு. நம்மளோட பழக லட்சம் பேர் கிடைப்பாங்க. ஆனா, நம்மளை நெறிப்படுத்த, வார்த் தெடுக்க சிலர் வாய்க்கிறது அபூர்வம். பாலா அண்ணன் அபூர்வம். ஒரு நடிகனா அவரோட ஒவ்வொரு அசைவிலும் நிறைய கத்துக்கிட் டேன்.



‘இங்க பார்... அப்படித் திரும்பு... கண்ணை சிமிட்டு’ன்னு சொல்வார். அவர் சொன்னதை அப்படியே செய்வேன். அதை திரையில் பார்க்கும்போதுதான் அவர் எவ்வளவு பெரிய மாயாஜாலத்தை செய்திருக்கிறார்னு தெரியும். ‘தாரை தப்பட்டை’க்கு அண்ணன் அழைச்சப்ப ஒரு நடிகனா நான் போய் நிற்கலை. அங்கேயும் ஒரு உதவியாளராத்தான் நின்னேன். ‘நடிகன்’, ‘தயாரிப்பாளர்’ங்கிறது எல்லாம் மத்தவங்க எனக்குக் கொடுக்கிற அடைமொழி. என்னைக்குமே அவர் பின்னால கைக்கட்டி நிற்கிற, அவர் சொல்றதை முதல் ஆளா செய்யுற ‘முந்திரிக்கொட்டை’ உதவியாளன் நான். இது போதும் எனக்கு.


இளையராஜாவின் 1000-வது படத்தில் நீங்கள் ஹீரோ? இதை எப்படி பார்க்கிறீங்க?


நல்லது கெட்டது எதுவானாலும் ஒவ்வொரு மனுசனுக்கும் இளையராஜா சிநேகிதனா இருக்கார். எல்லாத்துக்கும் நாம ராஜா சாரைத்தான் தேடுறோம். அவர் சோகத்தை கழுவுறார். காதலிக்க வைக்கிறார். நம்பிக்கையை உண்டாக்குகிறார். நாடி நரம்புகளில் புகுந்து என்னென்னமோ செய்கிறார். சமீபத்தில் ஒரு வாசகம் படிச்சேன். ‘ஏ.ஆர்.ரஹ்மான் லாங் டிரைவ் போனால்கூட இளையராஜா பாடலைத்தான் கேட்பார்’னு. நாம சொல்ல முடியாத சிலிர்ப்பை எவ்வளவு குறைவான வார்த்தைகளில் ஒரு ரசிகன் சொல்லிட்டு போயிட்டான். தலைவாழை இலை விருந்தில் ஒரு துவையல் மாதிரி ராஜா சாரோட 1000-வது படத்தில் நான் இருக்கிறது சிலிர்ப்பா இருக்கு.


பாலாவின் படம் என்றாலே வருடக்கணக்கில் ஷூட்டிங் இழுக்கும். அதேபோல்தான் ‘தாரை தப்பட்டை’ படமும். ‘தெரிந்தே சிக்கிட்டாரே சசிகுமார்’னு சினிமா உலகம் முழுக்க பேச்சு இருந்துச்சே?


சினிமா உலகில் ஆயிரம் பேசுவாங்க. அதே சினிமா உலகில் உள்ளவங்கதான் பாலா சார் படத்தில் ஒரு இடத்திலாவது தலை காட்ட முடியாதான்னு தவிச்சுட்டு இருக்காங்க. அவர் படத்தில் ஹீரோவாகிற வாய்ப்பு எனக்கு சீக்கிரமே கிடைச்சிடுச்சு. இதைத் தவறவிட நான் விரும்பலை. தவில், நாகஸ்வரம், டான்ஸ்னு நான் எல்லாத்தையும் மெனக்கெட்டு கத்துக்கிட்டேன். அதில்தான் கொஞ்சம் லேட் ஆனது. படம் எவ்வளவு திருப்தியா வந்துகிட்டு இருக்குங்கிறதை நேர்ல பார்த்தவன் நான்.


காலையில் ஏழு மணிக்கெல்லாம் முதல் ஷாட் வைப்பார். ஒரு நாளைக்கு ரெண்டு ஸீன் முடியும். 85 நாளில் முடிஞ்சிருக்க வேண்டிய படம் அது. எல்லாரும் பேயா வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறப்ப நானும் என்னோட ஈடுபாட்டை காட்டணும் இல்ல? அதனால ஒரு சண்டைக் காட்சியில் ரொம்ப மெனக்கெட்டு நடிச்சேன். மூட்டு நழுவி துடிச்சுப் போயிட்டேன். என் கை சரியாக நாலு மாசம் ஆச்சு. அதுவரைக்கும் பாலா அண்ணன் காத்திருந்தார். அப்படியிருக்க, அவர்தான் தாமதம் செஞ்சார்னு எப்படி சொல்ல முடியும். ‘தாரை தப்பட்டை’ தாமதத்துக்கு முழுப் பொறுப்பும் நான்தான்.



படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருப் பதற்கு வன்முறை காட்சிகள்தான் காரணம் என்கிறார்கள். ‘சுப்பிரமணிய புரம்’ தொடங்கி ‘ஈசன்’, ‘போராளி’ என உங் கள் படங்களில் தெறிக்கும் ரத்தத்துக்கு அளவே இல்லை. இது உங்களுக்கு சலிக்கவில்லையா?


யதார்த்தம்தான் என்னோட கதை. அப்படியிருக்க நாட்டுல நடக்குற வன்முறையை மட்டும் நான் எப்படி வடிகட்ட முடியும்? தினமும் பேப்பர் படிக்கும் போது தெறிக்காத ரத்தமா என் கதையில் தெறிக்குது? நடப்பில் இல்லாத கொடூரத்தை நான் காட்டியிருக்கேனா? அப்பட்டமா நடக்குற கொலையை இன்னிக்கு சேனல் களில் நேரடியாவே காமிக்க ஆரம்பிச் சிட்டாங்க. வாட்ஸ்அப்பில் பரவுற வன் முறை ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் வந்திடுச்சே. அதை எப்படித் தடுப்பீங்க? வன்முறையை என் படங்களில் நான் விரும்பி வைக்கலை. விரும்பாததால்தான் வைக் கிறேன்.



நிர்பயா கொலைக் குற்றவாளி விடுதலை ஆகிறார்... பெண்களை கொச்சைப்படுத்தும் பாடல்கள் வைரலாகின்றன‌... பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறதே... இவையெல்லாம் உங்கள் பார்வையிலோ, படைப்பிலோ வராதா?


நீங்க ‘ஈசன்’ பார்க்கலையா? தலைநகர் சென்னைக்கு வரும் ஓர் இளம்பெண் எப்படி சின்னாபின்னம் ஆகிறாங்கிறதுதான் கதை. ‘ஈசன்' வந்தப்ப ‘இப்படி நடக் குமா'ன்னு கேட்டவங்க‌, இன்னிக்கு ‘இப்படி நடக்கலாமா?’ன்னு கேட்கிறாங்க.


பெண் கள் மீதான வன்முறையும் கொடூரமும் ஒவ் வொரு இருட்டுக்குள்ளயும் நடந்துக்கிட்டு தான் இருக்கு. அதில், வெளியே வர்றதை மட்டும்தான் நாம பேசுறோம். நாகரிகம் வளர்ந்த அளவுக்கு நம்மகிட்ட நல்லெண் ணம் வளரலை. நிர்பயா வ‌ழக்கில் மட்டும் இல்லை... பெண்களுக்கு எதிரான அத்தனை பிரச்சினையிலும் மகளிர் அமைப்புகள் மட்டும்தான் இறங்கிப் போராடுறாங்க. இது மகளிருக்கான பிரச்சினை மட்டும்தானா? மனுஷங்களா பிறந்த அத்தனை பேரும் களமிறங்கிப் போராட வேண்டிய பிரச்சினை இல்லையா?


நன்றி - த இந்து

தலைவரே!மனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா?

வயசுல பெரியவங்களை மரியாதையா கூப்பிடனுமாம்,அதான் அண்ணா-ன்னு கூப்பிடறோம், தப்பா?


ஏன் ? மாமான்னு கூப்பிடுங்களேன், அதை விட சுருக்,



==================


2 குருவே! கோயிலுக்குப்போய்ட்டு ரிட்டர்ன் வரும்போது என் செருப்பைக்காணோம்.


இத்துப் போன செருப்பை பாத்துக்கறது இறைவன் வேலையா?"

===========

3 சுகர் இருக்கறதால ஆயில் சேர்த்தாத ரொமாலியன் ரொட்டி மட்டும் சாப்பிடுங்க.


டாக்டர்.
ரொட்டீன் லைஃப்" போர் அடிச்சுடாதா?



================

4 மிஸ்.பாடும்போது உங்க பக்கத்துல ஸ்ருதிஹாசன் இருக்கனுமா?ஏன்?


.குரல் குட்.ஆனா சுருதி நிறைய இடத்துல மிஸ் ஆவுது, னு யாரும் சொல்ல முடியாதில்ல?

============

5 டியர்.கிச்சனோபோபியா வியாதி இருக்கு.மத்தபடி நான் மாபியா.கிச்சன்ல மட்டும் எனக்கு பயம்


சமைக்க முடைப்பட்டுட்டு அதுக்கு ஒரு சால்ஜாப் வேற.


=============

6 மிஸ்! இது புள்ளிக்கோலமா? ரங்கோலிக்கோலமா?


FULLY ரங்கோலி தான்.



=============

7 டியர்.சமையல்ல கூட மாட ஒத்தாசைக்கு ஒரு சமையல்காரிய வேணா வச்சுக்கலாமா?"


என் ஒத்தாசைக்கா?உங்க ஆசைக்கா?


=============


8 டாக்டர்.என் கணவர் நல்லா குறட்டை விட்டுத்தூங்கறார்.என்னால தூங்க முடியல.அவர் குறட்டையை நிறுத்த என்ன வழி?


தலையணையால முகத்தை அமுக்குங்க




================

9 தலைவரே!கொள்கைப்பரப்புச்செயலாளரை ஏன் டிஸ்மிஸ் பண்ணீட்டீங்க?


கட்சியோட கொள்கை என்ன?னு இப்போ வந்து கேட்கறாரு


===============

10 தலைவரே!மனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா?


முதல்ல என் புத்ரன் ,புத்ரி வகையறாக்கு சீட் ஒதுக்கனும்.மத்ததெல்லாம் அப்புறம்



=============

11மிஸ்! உங்க கைக்கு மருதாணி போட்டு விட்டது யாரு?4 விரல்லதான் போட்டிருக்கு?


என் ஒண்ணு.விட்ட தங்கச்சி தான்


=================


12 இவங்க பெரிய பல் டாக்டர்.


ஓஹோ.கடை வாய்ப்பல் மட்டும் தான் பார்ப்பாங்களா? இவங்க தங்கச்சி சின்ன பல் டாக்டரா?


=================

13 தலைவரே! நம்மைத்தான் கூட்டணிக்கு யாருமே அழைக்கலையே?எதுக்கு சர்ச் க்கு போறீங்க?


இயேசு உங்களை அழைக்கிறார்.பாவிகளை.ரட்சிப்பார்னு எழுதி இருக்கே?


=============

14 தலைவரே! இடது கை வாங்கறது வலது கைக்கு தெரியக்கூடாதா?


அது தேவலை.அல்லக்கைக்கு தெரிஞ்சுடக்கூடாது.ஆபத்து.பங்கு கேப்பான்


===============

15 சார், பர்சனல் லோன் 1 லட்சம் சாங்க்சன் ஆகனும்னா பேங்க்ல 20,000 ரூபா டெபாசிட் கட்டனும்


கைல காசில்லை. மீதி 80000 குடுங்க சார்

===================

16 மிஸ்! ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு கோவிலுக்கு வரக்கூடாது..வேணா 200 ரூபா கட்டுங்க, சிறப்பு தரிசனம் அனுமதி

யோவ், ஜீன்சே ரூ 150தான்.


===================


17  டாக்டர், கடைவாய்ப்பல் டெய்லி வளர்ந்துட்டே இருக்கு, எதனால?


நீங்க வீட்டுக்கு கடைக்குட்டியோ என்னவோ?


=================

18  பல்லி கத்துனா பஞ்சாங்கத்தப் பார்க்கலாம்...தவளை கத்துனா என்ன பண்றது....!?

 பக்கத்துல பாம்பு வருதா?ன்னு பாருங்க


==================

19  உங்க தொப்பை  குறையனும்னா பிள்ளையாரை  நினைச்சுக்கிட்டு டெய்லி 100 தோப்புக்கரணம் போடனும்

 டாக்டர், பிள்ளயாருக்கே குறைக்க  முடியாத அளவு தொப்பை இருக்கே?


====================


20 தலைவரே! தனியா நின்னா நமக்கு 4 சீட் கிடைப்பதே பெருசு, எதுக்கு 100 + சீட் வரும்னு அடிச்சு விடறீங்க?

வாக்காளர்களைக்குழப்பத்தான்


===================