Skip to content

Tuesday, January 12, 2016

வாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட்டதா?

சென்னையை வேறு சென்னையாக மாற்றுவோம்: நடிகர் கார்த்தி உறுதி # அடடே, புது சென்னைல கலைஞர் , ஜெ எல்லாரும் இருக்கமாட்டாங்களா?



=================



வாள்வீச்சில் வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஜெ வழங்கினார் # கட்சில வாய்வீச்சு யாராவது செஞ்சா உஸ் தான்




================



அறிவியல் மாநாட்டில் மோடி பேசிக் கொண்டிருந்தபோது தூங்கி விழுந்த சித்தராமையா!# நித்திரை ராமய்யா என அழைக்கப்படுவாராக



==============



4 ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு அதிமுகவே காரணம்-கனிமொழி # எல்லாத்துக்கும் அடுத்தவங்க மேல பழி போடறதே அரசியல்வாதிகளுக்கு வழக்கம் ஆகிடுச்சு




==============



5 பாமக ஆட்சியில் விவசாயத்திற்கு அனைத்தும்் இலவசம்-்.டாக்டர். அன்புமணிராமதாஸ் # இலவசம் என்பதே என்றும் இரட்டை இலை வசம் என்பதை மாத்தப்போறாரா?




==============

6 தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது வைகோ # மாற்றம் முன்னேற்றம் னு பாமக தான் சொல்லுது.அது க்கு சப்போர்ட்டா?


==============



7 விஜயகாந்த் திடீர் மும்பை பயணம் -செய்தி # அங்கே போய் தூ னு சொன்னாக்கூட யாரும் கோபப்பட மாட்டாங்க.ஹிந்தி ல தூ = நீ




==============



8 வாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட்டது- கனிமொழி # 2 ஜி ஊழலாக திமுக ஆட்சி விரிந்து பரந்து.விட்டது.அதனால் கெட்டது


=============

9 ‘ஆட்’ நம்பர் மாப்பிள்ளைக்கு, ‘ஈவன்’ நம்பர் பெண் தேவை... இது டெல்லி மேட்ரிமோனியல்! # எல்லாம் கார் காலம் படுத்தும் பாடு


============

10 மும்பையில் விஜயகாந்த் 'ராக்ஸ்': வேட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்சில் தோன்றி அசத்தல் # ஏக் காவ் மே ஏக் இன்சான் துப்பிங் தா

===========

11 எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவேன்-சிம்பு # இந்த செண்ட்டிமென்ட் லொள்ளு எல்லாம் வேணாம்.எங்கே பதுங்கி இருக்கே?- போலீஸ்


==============


12 இடதுகைக்கு கூட தெரியாமல் வலதுகை கொடுக்ககூடிய ஈரமுள்ள இதயம் தேவை -மு.க# கோடிக்கணக்கில்.சொத்து வெச்சுக்கிட்டு தேர்தல் நிதி கேட்கற உலகம்


==============

13 மனதளவில் தைரியமும் திடமும் கொண்ட பெண்கள் தான் அரசியலுக்கு வரமுடியும் -கனிமொழி # வந்து ஊழலு்ம் கோடிக்கணக்கில் செஞ்சு தப்பிக்கவும் முடியும்

==============

14 மழைக்கு 470 பேர் பலி; 4,93,716 குடிசைகள் சேதம்; 3,47,297 ஹெக்டேர் பயிர்கள் நாசம்-ஜெ # எத்தனை % ஓட்டு மாறப்போகுதுனு கணக்கு எடுத்தாச்சா?


====================


15  ஜல்லிக்கட்டு அனுமதியை உடனடியாக அறிவிக்க கருணாநிதி வலியுறுத்தல் # தலைவர்  மதுரை ஏரியா  வாக்குகளை டார்கெட் வைக்கறார் போல 


======================

16  'எழுச்சி தமிழகம்'  - சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் FB இளைஞர்கள் # அப்டி சகாயம் வந்தார்னா கலைஞர் அதிமுக கூட கூட்டணி வைக்கவும் தயங்கமாட்டார்


===================


17 ஏரியை ஆக்கிரமித்தால் தட்டி கேளுங்கள்: ஐஏஎஸ் அதிகாரி அமுதா வலியுறுத்தல் # லாக்கப்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிட்டா?அதான் யோசிக்கறோம்


=================

18 ‘யாதும் ஊரே’ திட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தும் பொறுப்பை ராம்ராஜ்  ஏற்றுக்கொள்ளும் -செய்தி# குட்,அப்போ ஈரோட்டுக்கு MCR?


=================


19 உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் ஆபத்தான சூழலில் உள்ளது: சோனியா கவலை# ஓஹோ, அதனாலதான் மோடி பாதுகாப்பா ஃபாரீன்லயே ரவுண்டிங்க்ல இருக்காரா?


================

20   20 ஆண்டுகளாக ரூ.1 நோட்டு வெளியிடவில்லை - ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் # ஒரு  ரூபாய்  காய்ன் போதும், டெட் பாடி நெத்தில வைக்க


===================

கோல்டன் குளோப் விருதுகள் -2015

'தி ரெவனன்ட்' பட இயக்குநர் மற்றும் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ | படம்: ராய்ட்டர்ஸ்
'தி ரெவனன்ட்' பட இயக்குநர் மற்றும் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ | படம்: ராய்ட்டர்ஸ்
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் ஆகிய மூன்று பிரிவுகளில் 'தி ரெவனன்ட்' கோல்டன் குளோப் விருதுகளை வென்றது. லியானர்டோ டிகாப்ரியோ சிறந்த நடிகருக்கான விருதையும், கேத் வின்ஸ்லட் சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதையும் வென்றனர். இவ்விருவரும் டைட்டானிக் படம் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.



73வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியாவின் பிவெர்லி ஹில்டன் ஓட்டலில் நடைபெற்றது. இந்த வண்ணமிகு விழாவில் 2015-ல் வெளியான சிறந்த படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் 'தி ரெவனன்ட்' திரைப்படம் 3 விருதுகளைத் தட்டிச் சென்றது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகியவற்றுக்கான விருதுகளை இப்படம் வென்றுள்ளது. 'டைட்டானிக்' புகழ் கேத் வின்ஸ்லட் 'ஸ்டீவ் ஜாப்ஸ்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த திரைக்கதைக்கான விருது உள்ளிட்ட 2 விருதுகளை ஸ்டீவ் ஜாப்ஸ் பெற்றுள்ளது.



விருதுகளின் விவரம்:
சிறந்த திரைப்படம் - தி ரெவனன்ட்
சிறந்த நடிகை : ப்ரீ லார்சன் - ரூம்
சிறந்த நடிகர் : லியோனார்டோ டிகாப்ரியோ - தி ரெவனன்ட்
சிறந்த புனைவுப்படம் (அறிவியல்): தி மார்டின்
சிறந்த நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் - ஜாய்
சிறந்த அனிமேஷன் படம் : இன்சைட் அவுட்
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்: சன் ஆஃப் சோல்
சிறந்த உறுதுணை நடிகை: கேத் வின்ஸ்லட் - ஸ்டீவ் ஜாப்ஸ்
சிறந்த உறுதுணை நடிகர்: சில்வஸ்டோர் ஸ்டாலோன் - கிரீட்
சிறந்த இயக்குநர்: அலெஜான்ட்ரோ ஜி. இனாரிட்டு - தி ரிவெனன்ட்
சிறந்த திரைக்கதை: ஸ்டீவ் ஜாப்ஸ்
சிறந்த இசை: என்னியோ மோரிகோன் - தி ஹேட்ஃபுல் எய்ட்
சிறந்த பாடல்: ரைட்டிங்ஸ் ஆன் தி வால் - ஸ்பெக்டர்



தொலைக்காட்சித் தொடர்கள்
சிறந்த தொடர் - மிஸ்டர் ரொபோட்வ்
சிறந்த நடிகை டராஜி பி. ஹென்சன் - எம்பையர்
சிறந்த நடிகர் - ஜான் ஹாம் - மேட் மேன்
சிறந்த இசைத் தொடர் - மொஸார்ட் இன் தி ஜங்கிள்
சிறந்த நடிகை : (நகைச்சுவை அல்லது இசை) தொடர் ராச்சோல் ப்ளும் - எக்ஸ் கேர்ள்ஃப்ரண்ட்
சிறந்த நடிகர் : (நகைச்சுவை அல்லது இசை) கேயெல் கார்சியா பெர்னல் - மொஸார்ட் இன் தி ஜங்கிள்.

நன்றி - த இந்து

தென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்குத் தள்ளிய நேர்த்தியான படைப்புகள்!

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில், இந்த வருடம் சுமார் 500 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் படங்களுக்கான வரவேற்பும், வெற்றி வீதமும் கலவையாகவே இருந்தது.


காஞ்சனா 2, பிரேமம், படாஸ், காக்கா முட்டை உள்ளிட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி கவலையையே தந்தன.


தமிழகத்தில் 2015-ல் வெளியான சுமார் 200 படங்களில், 10 முதல் 15 படங்களே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தன.


இதுகுறித்து நம்மிடம் பேசிய சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, "'வேதாளம்', 'ஐ' போன்ற மெகா பட்ஜெட் படங்களும் வெற்றி பெற்றன. நடுத்தர பட்ஜெட் படங்களும் மக்களைப் பரவலாகச் சென்றடைந்தன.
காஞ்சனா 2- வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' திரைப்படம், 10 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு, சுமார் 100 கோடியை வசூலித்தது. அதே நேரத்தில் குறைந்த பட்ஜெட் படமான 'காக்கா முட்டை', அதன் முதலீட்டைக் காட்டிலும் மூன்று முதல் நான்கு மடங்கு பணத்தை வாரிக் குவித்து, தேசிய விருதையும் தட்டிச்சென்றது.



அதைத் தொடர்ந்து, 'நானும் ரவுடிதான்', 'ஓ காதல் கண்மணி', 'அனேகன்', 'டிமாண்டி காலனி', 'டார்லிங்', 'மாயா' ஆகிய படங்களும், சோடை போகாமல் ஓடின. 'நானும் ரவுடிதான்' படத்தின் வெற்றி, திட்டமிடப்பட்ட பட்ஜெட்டுக்குள்ளேயே எடுக்கப்படும் படங்களும் வெற்றி பெறும் என்பதை உணர்த்தியது.
பெரிய பட்ஜெட் படங்களான கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்', 'தூங்காவனம்', விஜயின் 'புலி', சூர்யாவின் 'மாஸு' ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.



டோலிவுட்டில் எப்படி?
டோலிவுட் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த, ஆந்திரா பாக்ஸ்ஆபிஸைச் சேர்ந்த ஓம் தீபக், "எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம், தெலுங்கு திரைப்பட உலகை சுமார் 10 சதவீதம் விரிவடையச் செய்தது.
பாகுபலி, உலகம் முழுக்க சுமார் 600 கோடி ரூபாயை வசூல் செய்ய, கொரட்டலா சிவாவின் 'ஸ்ரீமந்துடு' திரைப்படம் சுமார் 200 கோடிகளை அள்ளியது" என்றார்.



சினிமா வர்த்தக ஆய்வாளரான ட்ரிநாத், இத்தகைய படங்களின் வெற்றி தெலுங்குத் திரையுலக மார்க்கெட்டை உயர்த்தியிருக்கிறது. பாகுபலியின் அனைத்து மொழி டப்பிங் படங்களும் நன்றாக ஓடின. அதன் இந்திப் பதிப்பு மட்டும் சுமார் 100 கோடி வசூலித்திருக்கிறது. நல்ல கதைதான் முக்கியம்; மொழி முக்கியமில்லை என்பதை இது உணர்த்தியிருக்கிறது.
'ராஜு காரி காதி', 'சினிமா சூப்பிஸ்தா மாவா', 'குமாரி 21 ஃபீமேல்', 'படாஸ்', 'பலே பலே மகாடிவோ' உள்ளிட்ட குறைந்த பட்ஜெட் படங்கள், கதாநாயகர்களைத் தாண்டி, கதையின் நாயகர்களை மையப்படுத்தின.



'ராஜு காரி காதி', 'பலே பலே மகாடிவோ' உள்ளிட்டவை இந்த வருடத்தின் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தன. 'ருத்ரமாதேவி', 'ஜேம்ஸ் பாண்ட்', 'சுப்பிரமணியம் ஃபார் சேல்', 'காஞ்சி' உள்ளிட்ட படங்கள் நன்றாக ஓடினாலும், விநியோகஸ்தர்களுக்கு சிறிய தடையாகவே அமைந்திருந்தன" என்று கூறினார்.


டப்பிங் படங்களான 'ரகுவரன் பி.டெக்.', 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7', 'ஜுராசிக் வேர்ல்ட்' ஆகியவை வெற்றி பெற்றன. ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ப்ரூஸ் லீ: த ஃபைட்டர்', 'அகில்' ஆகியவை பெரும் சோகமாக அமைந்தன.


மலையாளத் திரையுலகம் மலர்ந்ததா?
மலையாளத் திரையுலகம், வணிக ரீதியில் வெற்றி பெற்று, கலவையான விமர்சனங்களையும் பெற்றது. 'பிரேமம்', 'என்னு நிண்டே மொய்தீன்' ஆகிய இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றிவாகை சூடின.
12 கோடியில் தயாரிக்கப்பட்ட 'மொய்தீன்', சுமார் 50 கோடியை அள்ளியது. 5 கோடியில் உருவாக்கப்பட்ட 'பிரேமம்' வசூலித்ததோ சுமார் 60 கோடி.


இந்த வருடம் வெளிவந்த சுமார் 100 மலையாள படங்களில், 'மிலி', 'பிக்கெட் 43', 'ஃபைர்மேன்', '100 டேஸ் ஆஃப் லவ்', 'ஒரு வடக்கன் செல்ஃபி', 'என்னும் எப்பொழும்', 'பாஸ்கர் த ராஸ்கல்', 'சந்திரனேட்டன் எவிடயா' உள்ளிட்டவை வெற்றியைச் சுவைத்தன.




மலையாளத் திரையுலக விநியோகஸ்தரில் ஒருவரான அரவிந்த் நம்பியார், "ரீமேக் மூலமாகவும் திரையுலகம் சம்பாதித்தது. 'ஒரு வடக்கன் செல்ஃபி' தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சுமார் 20 கோடியை வசூலித்திருக்கிறது" என்று கூறினார்.



மம்முட்டி நடித்த 'பாஸ்கர் த ராஸ்கல்', தெலுங்கு உரிமையோடு, தயாரிப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு பணத்தை வசூலித்திருக்கிறது.
'லைலா ஓ லைலா', 'மரியம் முக்கும்', 'சிறகொடிஞ்ச கனவுகள்' உள்ளிட்ட படங்கள் எதிர்பார்ப்போடு வெளியாகி ஏமாற்றத்தை அளித்துச் சென்றன.



கவனத்தை ஈர்த்த கன்னடத் திரையுலகம்
அனுப் பந்தாரியின் 'ராங்கிதரங்கா' மூலம் ஒட்டுமொத்த கன்னடத் திரையுலகமும் தன் கவனத்தை ஈர்த்தது. 88வது அகாடமி விருதுகளில் பட்டியலிடப்பட்ட சுமார் 300 படங்களில் ஒன்றாக 'ராங்கிதரங்கா' வந்தது. விநியோகஸ்தரான ரமேஷ் கவுடா, கன்னட திரையுலகம் குறித்துப் பேசினார்.



'' 'ராங்கிதரங்கா' படம் கர்நாடகாவில் மட்டும் சுமார் 20 கோடியை வசூலித்திருக்கிறது. இப்படம் நிறைய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை முறியடித்திருக்கிறது. ஹைதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களிலும் படம் சுமார் ஐந்து வாரங்கள் தொடர்ந்து ஓடியது. முதல்முறையாக அமெரிக்காவில் எட்டு வாரங்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய கன்னடப் படம் இது என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.


தர்ஷன் நடித்த 'மிஸ்டர். ஐராவதா படமும்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மூன்று வாரங்களில் இப்படம், சுமார் 32 கோடியை வசூலித்தது.
'ரன்னா', 'வஜ்ரகயா', 'ராணா விக்ரமா', 'சித்தார்த்தா' உள்ளிட்ட பெரிய படங்கள், சுமாராக ஓடி, போட்ட முதலீட்டை எடுத்திருக்கின்றன. கன்னட உலகைப் பொருத்த வரை, இந்த வருடம் படங்களின் எண்ணிக்கை அதிகம் ஆனால் வெற்றி பெற்றது குறைவே.


நன்றி - த இந்து

‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக்க இருந்தாரா?- ஏ ஆர் முருகதாஸ் சிஷ்யர் பேட்டி

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் தற்போது தாணுவின் தயாரிப்பில் அதர்வா, கேதரின் தெரசா நடிக்கும் ‘கணிதன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியாகி யுள்ள நிலையில் சந்தோஷை சந்தித்தோம்.



படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே?
‘கணிதன்’ என்ற தலைப்பைக் கேட்டதும் பலரும் இது கணிதத்தைப் பற்றிய படமா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. ‘கணிதன்’ என்ற வார்த்தைக்கு ஒரு நபர் கணக்கிட்டு வேலை செய்வது என்று அர்த்தம். இப்படத்தின் நாயகன் - வில்லன் இருவருமே புத்திசாலிகள். அந்த இரண்டு புத்திசாலிகளின் மோதல்தான் படம்.



எதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறீர்கள்?
கடைசி இடத்தில் இருக்கும் ஒரு தொலைக்காட்சியில் வேலை செய்யும் ஒரு பத்திரிகையாளன் வாழ்வின் உச்சத்தைத் தொட என்ன செய்கிறான் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம். இந்தப் படம் பத்திரிகையாளர் களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய தாக இருக்கும். இப்படத்தில் போலிச் சான்றிதழ் தயாரிக்கும் கும்பல் அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதை யும் தெளிவாக காட்டியிருக்கிறேன். இதுவரை யாரும் இந்த விஷயத்தை இத்தனை தெளி வாக சொன்னதில்லை என்று நினைக்கிறேன்.



இப்படத்தின் வில்லனாக இந்தி நடிகர் தருணை எப்படி தேர்வு செய்தீர்கள்?
இப்படத்தின் வில்லனைப் பொறுத்தவரை தமிழுக்கு புதியவராகவும், நல்ல உடலமைப்போடும், 40-45 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நிறைய தேடினோம். ஜாக்கி ஷெராஃப் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம், ஆனால் அவருக்கு வயது அதிகமாக தெரிந்தது. இந்த சூழ்நிலையில்தான் ‘ஜப் வி மெட்’ இந்தி படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த தருணை இந்த வேடத்துக்கு தேர்ந்தெடுத்தோம். இப்படத்தில் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்.


ஏ.ஆர்.முருகதாஸிடம் பணியாற்றி இருப்பதால் பெரிய நடிகர்களின் நட்பு கிடைத்திருக்குமே. அவர்களை வைத்து ஏன் இப்படத்தை இயக்கவில்லை?
இக்கதை தயாரான வுடன் நான் விஜய் சாரிடம் சொல்லியிருக் கலாம். ஆனால் ஒரு இயக்குநராக என்னுடைய பார்வையில் இக்கதை விஜய் சாருக்கு பொருத்தமாக இல்லை. ஒரு சின்ன பையனை பெரிய நாயகனாக பார்க்க வேண்டும் என்ற பார்வையில்தான் நான் இக்கதையை எழுதியிருக்கிறேன். இப்படத்தைப் பார்த்தவர்கள் ‘அதர்வா இப்படத்துக்குப் பிறகு மாஸ் ஹீரோவாகி விடுவார்’ என்றார்கள். மாஸ் என்பது 10 பேரை அடிப்பதோ, வசனங்கள் பேசுவதோ கிடையாது. நாயகன் பண்ணுகிற விஷயங்கள் புத்திசாலித்தனமாக இருக்கும். அவ்வளவுதான். இது என் குருநாதர் எனக்கு சொல்லிக் கொடுத்தது. ‘துப்பாக்கி’ படத்தில் விஜய் சார் மிக அமைதியாக நடித்திருப்பார். ஆனால் அந்தப் படம் மாஸாக இருந்தது.
பெரிய நடிகர்கள் பலரையும் எனக்கு தெரியும். ஆனால் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த பிறகுதான் பெரிய நாயகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.



ஏ.ஆர்.முருகதாஸிடம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
நான் அவரிடம் ஒன்றும் தெரியாத ஜீரோவாகத்தான் போனேன். அவரிடம் இருந்துதான் அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். ‘நீ இப்படி பண்ண வேண்டும், இதெல்லாம் தப்பு’ என்றெல்லாம் அவராக சொல்லித்தர மாட்டார். அதே நேரத்தில் பல பொறுப்புகளை நம்மை நம்பி கொடுப்பார். எல்லோரையும் சமமாக நடத்துவார். நாமாக அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவரிடம் பணியாற்றிவிட்டால், நிச்சயம் ஒரு நல்ல இயக்குநராக உருவாகலாம்.



‘கணிதன்’ படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது அதில் ஏ.ஆர். முருகதாஸின் சாயல் தெரிகிறதே. இதே பாணியில்தான் உங்களது இயக்குநர் பயணம் இருக்குமா?
நான் அவரிடம் பணியாற்ற விருப்பப்பட்டதே, எனக்கு அவர் எடுக்கும் படங்கள் பிடிக்கும் என்பதால்தான். என்னால் முழுமையான ஒரு காதல் கதையை எடுக்க முடியாது. ஏனென்றால் எனக்கு அதில் விருப்பம் கிடையாது. ஆரம்பத்தில் இருந்தே சமூக அக்கறை உள்ள படங்கள் பண்ண வேண்டும் என்று தான் நான் ஆசைப்பட்டேன். ஷங்கர் சார் படங்களைப் பார்த்துதான் நான் இத்துறைக்கே வந்திருக்கிறேன்.

நன்றி - த இந்து

மேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் சுருங்கிடுது?

டேய், பழநி மலைக்கு வரும்போது எதுக்கு பர்முடாஸ் போட்டுட்டு வந்திருக்கே? 

 சார், பழநி மலை முருகனே கோவணத்தோடதானே இருக்காரு?



===============


2 சார், பெங்களூர் டேஸ் படத்தோட  தமிழ்  ரீமேக் டைட்டிலை சஸ்பென்சா  வெச்சிருந்தீங்களே? இப்போ  சொல்லுங்க.

 ஆங், பெங்களூர்  நாட்கள், எப்பூடி?


====================


3  டியர், நான் எது கேட்டாலும் எதிர்த்துப்பேசக்கூடாது, சரி சரின்னு தான் சொல்லனும், சரியா?

சரி.

 இன்னைக்கு என்ன ஸ்வீட்  செய்ய?

 கே”சரி”


================

4  தலைவரே! கட்சியோட கொள்கைப்பரப்புச்செயலாளரை ஏன் கட்சியை விட்டு நீக்கிட்டீங்க?



 கொள்கையையே  மாத்தும்போது கொள்கை பரப்புச்செயலாளரை மாத்தக்கூடாதா?

==================

5  தலைவரே! பேட்டி குடுக்கும்போது கார்ல வந்தீங்க, ரிட்டர்ன் வீட்டுக்குப்போகும்போது ஏன் நடந்து போறீங்க?

பேட்டி குடுக்கறப்பவே கட்சியை விட்டு ம் தூக்கிட்டாங்க , காரையும் தூக்கிட்டாங்க


===================


6 சம்பத் = தலைவரே! தாய்க்கழகத்துக்கே வந்துடலாம்னு பார்க்கறேன்

 வை கோ = நானும் அதான் யோசிக்கிறேன், திமுக வுக்கே போய்டலாமா?


===================


7 டியர், எதுக்காக என்னை உங்க வீட்டுக்கு வர வேணாம்கறே?

 வீட்ல மாப்ளை பார்த்துட்டாங்க. உன்னை லவ்வர் போஸ்ட்ல இருந்து விடுவிச்ட்டேன்


=================


8  கட்சில நமக்கு செல்வாக்கு இருக்குன்னு கெத்து காட்ட  பேட்டி குடுத்தது தப்பா போச்சு 


ஏன் தலைவரே?

 வாயைக்கொஞ்சம் பொத்து-ன்னு நீக்கிட்டாங்க 


=====================

9 தலைவரே! மீடியாவை நீங்க மதிக்கறதே இல்லையாமே? 

 இல்லையே? மீடியாவுல எனக்கு எதிரா பேட்டி குடுத்தவரை கட்சியை விட்டே நீக்கிட்டனே?


======================


10 மிஸ்! உங்களுக்கு பொங்கச்சோறுன்னா பிடிக்காதா?

பிடிக்குமே? சோறு பொங்க வைக்கச்சொன்னாதான் சமையல் பிடிக்காது


==================

11  மிஸ்! டெய்லி எட்டரைக்கு எந்திரிக்கும் ஏழரை நீங்க. எப்படி  விடியல் , உதய சூரியன் ஃபோட்டோ   வை  ஃபேஸ்புக்ல அப்டேட்ட்டறீங்க?


கூகுள் இருக்க கவலை எதுக்கு நமக்கு ?


===================


12 டாக்டர்.சொல்லாமலே பட ஹீரோ மாதிரி என் நாக்கை கட் பண்ணனும்.

பேச்சு.வராது.பரவால்லியா?
.பதவி வந்தா போதும்

=================


13 இந்த தாயத்தை கைல கட்டிக்கிட்டா உன் வீட்ல தனலட்சுமி குடி வந்துடுவா.

ஓஹோ.அப்போ ஆல்ரெடி குடி இருக்கற சம்சாரத்தை துரத்தி விட்டுடலாமா ஜோசியரே?

===============

14 நீக்கப்பட்டார் என்பதற்கும் விடுவிக்கப்பட்டார் என்பதற்கும் வித்தியாசம் என்ன?

 ரிசைன் லெட்டர் வாங்கிட்டு அனுப்பறது, டெர்மினேட் பண்றது


======================

15 சார், கூட ஃபிரண்டா பழகிட்டு இருந்த  பொண்ணுக்கு திடீர்னு ப்ரப்போஸ் பண்ணீங்களா?

5 வருசமா திட்டம் போட்டு  இப்பதான் டி”ஃபிரண்ட்டா” சொன்னேன்


====================

16 டாக்டர்! டெய்லி மத்தியானம்  தூங்கி எழுந்து காலைலனு நினைச்சு பல்பு வாங்குறேன்

 ஏம்மா, நிஜமா இது பல்பு கடை தான். கண்ணை முழிச்சுப்பாரு


===================

17 என்  முத பையன் தொணதொணனு பேசிட்டே இருக்கான்,2 வது பையன் சாஷ்டாங்கமா தரைல விழுந்தே கிடக்கான்


2வது பையனுக்கு அரசியல்ல நல்ல எதிர்காலம் இருக்கு


==================

18 டியர்,எங்க வீடு  ஒரு கோயில் மாதிரி.


 யோவ், அதுக்காக வீட்ல கூட நைட்டி போடக்கூடாதுன்னு உடைக்கட்டுப்பாடு விதிக்கறதா?


===================


19  மாப்ளை,கவலையேபடாதீங்க, என் பொண்ணு வாய்லயே நல்லா வடை சுடுவா.


அதெல்லாம் சரி மாமா. நிஜமான வடை சுடுவாளா?சமையல் தெரியுமா?


======================


20 மேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் சுருங்கிடுது? 
அந்த நட்பு வட்டம் வீட்டுக்கு வந்தா புருசன் ஃபிகரை கட்டம் கட்டிட்டா?ஒரு பயம்


=======================






Monday, January 11, 2016

சொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்

அன்பே விசாலாட்சி! : விசாலமான உன் முதுகிற்கு விலாசம் எதற்கு!?" லாங்க் ஷாட்டிலேயே தனியா தெரியறியே !



===========



2 என் மொக்கை ஜோக்சை எல்லாம் இங்க்லீஷ் ல மொழிபெயர்க்கனுமாம்.பொதுக்குழு கூடி விவாதிக்கிறது.விரைவில் செத்தாண்டா பாரீன் சேகரு



==========



3 நமக்குப்பின் வந்த பெண்களுக்கு நம்மைவிட அதிக ஃபாலோயர்சா? என யாரும் மனக்கிலேசம் கொள்ளாதீர்!ஆண்களுக்கு வரும் ஒவ்வொரு ஃபாலோயரும் படைப்புக்காக




=================



பெண்களை முந்த எளிய வழி -அவர்கள் கடலையில் கான்செண்ட்ரேட் செய்யும்போது ஆண்கள் படைப்புகளில் கவனம் செலுத்தவும்




===============



நடிகை டிபி யை பெண் வைப்பது தன் அழகைப்பறை சாற்ற. நடிகர் டிபியை ஆண் வைப்பது அந்த ஹீரோ மேல் தன் அபிமானத்தை வெளிப்படுத்த  மட்டுமே




==================



உனக்கு  எல்லாம் தெரிந்திருந்தாலும் எதுவுமே தெரியாதவன் போல் அமைதியாக இரு. வாழ்வில் முன்னேறுவாய்! # எதிர்மறை உதா - நாஞ்சில் சம்பத்

======================




கடல் கன்னி ஹேண்டிலைத்தொடர்ந்து  ஆறு கன்னி , குளம் கன்னி , கிணறு கன்னி, ஏரி கன்னி ஹேண்டிலை எல்லாம் எதிர்பார்க்கிறேன்




=================



8  பேரைச்சொல்லி  ஹாய் என தனியாச்சொல்லத்தேவை இல்லை , இவங்க பேர்லயே ஹாய் இருக்கு sahaya rani   ச”ஹாய்” ரா நீ!




=================




தான் ரொம்ப உயரமா இருக்கோம்கறதை பொண்ணுங்க  நாசூக்கா எப்டி சொல்வாங்க தெரியுமா? நான் வாசப்படி தாண்டும்போது நிலைக்கதவுல இடிச்சுக்கிட்டேன்




=================



10 நாசமாப்போறவனே! = நா(ஞ்சில்) ச(ம்பத்) மா(திரி) வீணாப்போறவனே!




====================




11 பணியில் அடிக்கடி கம்பெனி மாறினால் ஒவ்வொரு ஸ்கிப்புக்கும் சம்பளம் உயரும், ஆனால் அரசியலில் அடிக்கடி கட்சி மாறினால் நன்மதிப்பை இழப்பாய்!




==================

12  தஞ்சாவூர் கண்ணம்மா வும், மாயாஅப்சராவும் ஒரே ஆளா?னு யாரும் குழம்ப வெணாம், அவங்க வெச்சிருந்தடிபியை இப்போ இவங்க வெச்சிருக்காங்க, அம்புட்டுதான்



=================




13 உனனைச் சுமக்க என் கரு' விழிகளை திறந்தே வைத்திருக்கின்றேன்!"


ஓஹோ.கலைஞர் கூட்டணி கதவு மாதிரி ஓப்பன் யுனிவர்சிட்டியா உங்க கண்ணு?
================

14 பொண்ணுங்க குடி இருக்கும் எல்லா ஊரும் அலங்கார நல்லூரே! # யாதும் மதுரை யாவரும் மகளிர்


==============

15 பிருத்விராஜ் நடிக்கும் பாவாடை மலையாளப்பட ட்ரெய்லர் பாத்தேன்.இதுல SJ சூர்யா நடிச்சா டைட்டில் உள் பாவாடை ?
மம்முட்டி நடிச்சா பிரில்பாவாடை?

===========

16 எதிரியை ,சக போட்டியாளரை முந்த /ஜெயிக்க அவர்கள் சென்ற.அதே பாதையில் தான் நாம் பயணிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை

=============

17 சொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண்ணின்் முக அழகை நக்கல் அடித்த ஆண் ட்வீட்டரின்DP யைப்பார்த்தேன்.ஏதோ ஒரு நடிகரின் முகத்தில் ஒளிந்திருந்தார்

============

18 நீங்கள் கொஞ்ச காலம் பழகி விட்டால் எல்லோரும் நல்லோரே!

===============

19 சமூக வலைத்தளத்தில் பொண்ணுங்க என்னடான்னா சாப்ட்டியாடா பட்டுக்குட்டி, பாப்புனு கொஞ்சிக்கறாங்க, ஆஃபீசில் அடிச்சுக்கறாங்க ;-)


=================

20 அவங்கவங்களுக்கு எவ்ளோ இடம் தரனும்னு மைண்ட்ல வெச்சிருக்கேன்


ஓஹோ, உங்க ஃபாலோயர்ஸ் எல்லாருக்கும் தலா 1 செண்ட் இடம் ஒதுக்குவீங்களா?

====================

முன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம்-பாமயன்

புஞ்சைத் தானியங்கள் எனப்படும் அருந்தானியங்கள் புறக்கணிக்கப் பட்டதால் நீரின் பயன்பாடு அதிகமானது. காரணம், அந்த இடத்தில் வீரிய விதைகள் (உண்மையில் வறட்சி, பூச்சி தாக்குதல் இவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாத சோதா விதைகளே அவை) வந்து அமர்ந்தன. இவை அதிக ரசாயன உரம், அதிக நீர் தேவையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அது மட்டுமல்லாமல் மண்ணின் வளம் பல்வகைப் பயிர்ச் சாகுபடியால் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதாவது தினை, வரகு போன்றவற்றைத் தனியாகச் சாகுபடி செய்யமாட்டார்கள். அத்துடன் பல பயறு வகைகள், காய்கறிகள் என்று கலப்புப் பயிர் சாகுபடியைச் செய்வார்கள்.



இதனால் பயறு வகைப் பயிர்கள் மண்ணில் வெடியம் (நைட்ரஜன்) என்ற தழை ஊட்டத்தைச் சேமிக்கும். இதன் விளைவாக மண் வளம் காக்கப்படும். ஆனால் பசுமைப் புரட்சி முன்வைத்த ஓரினச் சாகுபடி (monoculture) என்பது முற்றிலும் வேதி உப்புகளை அடிப்படையாகக் கொண்டது, வெளி இடுபொருட்களுக்கு வழிகோலியது. எனவே, மண் வளம் தொடர்ந்து குறைந்துகொண்டே போகும். அது மட்டுமல்லாமல் அருந்தானியங்களுக்கு எவ்விதமான பாசன வசதியும் தேவையில்லை. பெய்யும் மழையே போதுமானது.



பன்மயப் பாதுகாப்பு
காடைக்கண்ணி (common millet) என்றொரு தானியம், இன்றைய தலைமுறையினர் இதைப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். இது அறுபது முதல் எண்பது நாட்களில் அறுவடையாகிறது. ஒன்று அல்லது இரண்டு மழை போதும். மிகவும் சிறப்பான ஊட்டங்களைக் கொண்டது. மண்ணின் வளத்தைப் பெருக்குவதில், அடுத்ததாகத் திணையவியல் (சூழலியல்) நோக்கில் பார்த்தால் புஞ்சைத் தானியங்கள் பெருமளவு வைக்கோல்களைக் கொடுப்பவை. அதன்மூலம் கால்நடைகளுக்கான உணவு உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. எண்ணற்ற பறவையினங்கள் இந்தத் தானியங்களை உண்டு வாழ்வதோடு, அந்த வயல்களுக்கு வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று பூச்சிக் கட்டுப்பாட்டுக்கும் உதவுகின்றன.


ஆனால் மக்காச்சோளச் சாகுபடியிலோ, சீமைக் கருவேல மரத்திலோ பறவைகளுக்கான உணவு கிடைப்பதில்லை. ஒரு நிலத்தில் பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படும் உயிரியல் பன்மயம் (Biodiversity), இப்போது மறைந்துவிட்டது. இதன்மூலம் மாறுபட்ட சூழலைத் தாங்கி வளரும் பயிரினங்கள், நுண்ணுயிர்கள் போன்றவை மறைந்துவிட்டன. வெப்பமண்டல வானவாரி நிலத்தில் உயிர்மக் கூளத்தை (Bio-mass) அதிகரிக்கச் செய்வதன் மூலம் பெருமளவு கரியை மண்ணில் நிலைநிறுத்த முடியும். இந்தக் கரிம அகப்படுத்தல் (Carbon sequestration) காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது.



ஊட்டம் நிறைந்த தானியங்கள்
புஞ்சைத் தானியங்கள் உள்ளூர் பொருளியலில் மிக முதன்மையான பங்கை வகிக்கின்றன. இதனால் உணவுக்கான பணமும் உழைப்பும் உள்ளூரிலேயே சுழன்று வருகிறது. வெளிச்சந்தைக்கு அவை போவதில்லை. இந்தப் பயிர்களுக்கு வெளி இடுபொருட்களான உப்பு உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லாததால் பணம் வெளியேறுவதில்லை.



அது மட்டுமல்ல புஞ்சைத் தானியங்கள் மிகச் சிறந்த ஊட்டங்களைக் கொண்டவை. குறிப்பாக, குதிரைவாலி எனப்படும் தானியம் நார் ஊட்டத்தைப் பொறுத்தளவில் கோதுமையைவிட 6.8 மடங்கு கூடுதல் ஊட்டத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் அரிசியைவிட 13 மடங்கு கூடுதல் ஊட்டம் கொண்டுள்ளது. தினை என்ற தவசம் அரிசியைவிடக் கூடுதல் புரதத்தைக் கொண்டுள்ளது. குதிரைவாலியில் கோதுமையைவிட 5.3 மடங்கு கூடுதலாக இரும்பு ஊட்டம் உள்ளது, அரிசியைவிட 10 மடங்கு கூடுதலாக உள்ளது. இதேபோலப் பல ஊட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நமது மருத்துவர்களின் பரிந்துரை வரகரிசிச் சோறுதான்!


நெல் கவர்ச்சி
இந்திய/தமிழக சமூக வரலாற்றில் மக்களின் சிந்தனைப் போக்கிலும் பண்பாட்டு வெளியிலும் பெரிய மாற்றம் நிகழ்த்தப்பட்டது. இது வெறும் வேளாண்மையோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மொழி, நிறம், சாதி என்று பல தளங்களிலும் பெரும்பான்மை அடித்தட்டு மக்களுக்குப் புறம்பான, சில மேட்டுக்குடிகளின் பண்பாட்டை நிலைநிறுத்துவதாக அமைந்தது.



'கருங்கால் வரகு அல்லது பிற உணவே இல்லை' என்று கூறிய பண்டை மரபுக்கு மாறாக 'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு' என்று ஏங்க வைக்கும் சூழல் ஏற்பட்டது. கருப்பாக இருக்கும் பனைவெல்லமான கருப்பட்டி இழிவாக மாறி, வெள்ளை நிறத்து 'சீனி' உயரிய பொருளாக மக்களால் அணுக வைக்கப்பட்டது. பொருள் வளம், ஊடக வலு, சிந்தனைத் திறம் என்ற எல்லா வசதிகளையும் கையில் வைத்துக்கொண்டு ஒரு பெரும் பண்பாட்டு மாற்றம் நிகழ்த்தப்பட்டது. அதில் ஒன்றுதான் நெல்லரிசியின் மீதான கவர்ச்சி.


(அடுத்த வாரம்: நம் உணவை நாம் தீர்மானிக்கிறோமா?) 
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: [email protected]


நன்றி - த இந்து

நயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது?மாயா இயக்குநர் பேட்டி

சென்னை சர்வதேச பட விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அஸ்வின் பார்வையாளர்களுடன் கலந்திரையாடினர். | படம்: எம். நாகராஜன்
சென்னை சர்வதேச பட விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அஸ்வின் பார்வையாளர்களுடன் கலந்திரையாடினர். | படம்: எம். நாகராஜன்
13வது சென்னை சர்வதேச பட விழாவின் நான்காம் நாள் (9.1.2016) சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், 'மாயா' பட இயக்குநர் அஸ்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திரைப்படத் துறை மாணவர்கள், சினிமா ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.


இதில் பேசிய 'மாயா' திரைப்பட இயக்குநர் அஸ்வின், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.


பொறியியல் படித்துவிட்டு இந்தத் துறைக்கு வரக்காரணம் என்ன? எப்படி இந்த முயற்சி வெற்றியடைந்தது?
பொறியியல் படித்து, அது சார்ந்த துறையில் வேலைக்குச் சென்றாலும், அது எனக்கு திருப்தியாக அமையவில்லை. என்னுடைய இலக்கு இதுவல்ல என்று தோன்றியது. இரண்டு வழிகளில் இயக்குநர் ஆகலாம். உலக சினிமாக்கள் பார்த்து, புத்தகங்கள் படித்து, குறும்படங்கள் எடுத்து இயக்குநராகலாம். அடுத்தது இயக்குநர்களிடம் வேலை பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.



குறும்படங்கள் எடுத்து, சினிமாவிற்கு வந்திருக்கிறீர்கள். இது எந்த விதத்தில் உங்களுக்கு உதவியாக அமைந்தது?
குறும்படங்கள் எடுப்பதன் மூலம் எழுத்திலிருந்து, படப்பிடிப்புக்குச் செல்லும்போது என்னென்ன தவறுகள் நிகழும் என்பதை தெரிந்துகொள்ள முடியும். குறும்படத்தில் செய்கின்ற தவறுகளை, திரைப்படத்தில் தவிர்க்க முடியும்.


புதுமுக இயக்குநரான உங்களுக்கு, நயன்தாரா மாதிரியான பிரபல நடிகையை வேலை வாங்குவது எப்படி இருந்தது?
கதைக்காக மட்டுமே நயன்தாரா இதில் நடித்தார். சொல்லும்போதே அவருக்குக் கதை பிடித்திருந்தது. முழு எனர்ஜி கொடுத்து நடிப்பது அவரின் வழக்கம். அதற்கேற்றவாறு நாமும் முழுமையான திறனோடு வேலை செய்தாலே போதும்.



இயக்குநர் வெற்றிமாறன் 'காக்கா முட்டை', 'விசாரணை', உலக சினிமா உள்ளிட்ட பல விஷயங்களைக் குறித்துப் பேசினார்.
விசாரணை வெளியீடு எப்போது?


(சிரிக்கிறார்). எனக்கே தெரியவில்லை. விநியோகஸ்தர்தான் முடிவு செய்ய வேண்டும்.
விசாரணை படத்தை எதனால் சென்னை சர்வதேச பட விழாவில் திரையிடவில்லை?



மிகப்பெரிய படங்களுக்கே பெரிய அளவில் விளம்பரம் தேவைப்படுகிறது. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும், அதனால் மூன்று வாரங்களுக்கு மேல் ஓட முடிவதில்லை. இப்போது சமூக ஊடகங்களே சிறந்த விளம்பரக் கருவிகளாகச் செயல்படுகின்றன. வெளிநாட்டு விழாக்களுக்கு அனுப்பப்படுவது சிறந்த வியாபாரமாக இருக்கும். இங்கு படத்தை வெளியிட சிறந்த தருணத்துக்காகக் காத்திருக்கிறோம்.



விசாரணை படத்தின் தணிக்கை செய்யப்படாத காட்சிகளை வெளியிடும் திட்டம் இருக்கிறதா?


நிச்சயம் இருக்கிறது. அது குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும்.
கலைப்படங்கள் என்றாலே அவை ஓடாது என்ற எண்ணம் இன்னும் இருக்கிறதா?


நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கலைப்படங்களை உலக சினிமா விழாக்களுக்கு அனுப்புவதும் ஒரு வியாபாரம்தான். 'காக்கா முட்டை' ஹாங்காங்கில் முதல் வாரத்தின் இறுதியில் சுமார் 24,000 டாலர்களை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. 'லன்ச் பாக்ஸ்', 'பிகே' ஆகிய படங்களைக் காட்டிலும் இது அதிகம். சீனாவில் பிரம்மாண்டமான அளவில் வெளியிடப்பட உள்ளது. நல்ல தயாரிப்பாளர்கள் இருந்தால் போதும்.



புத்தக வாசிப்பு, திரைத்துறைக்கு எந்தளவுக்குப் பயன்படும்?
என்னைப்பொருத்த வரையில் நல்ல புத்தகங்களை வாசிப்பது என்றைக்குமே நல்லதுதான். 50 வயதில்தான் நீங்கள் முதல் கதையே எழுதுகிறீர்கள் என்றால், உங்களின் கதையில் வரும் இளமைப் பருவம், உங்களுடையதாகவே இருக்கும். அதைப் பார்த்து இன்றைய இளைஞர்கள் சிரிப்பார்கள். உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள, புத்தகங்கள் நிச்சயம் உதவும்.


எல்லாப் பிரச்சனைகளுக்கும், சினிமாவிலேயே தீர்வு இருக்கிறது. நிறைய படங்களைப் பார்த்தால், வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று ஒரு இயக்குநர் சொன்னது நினைவுக்கு வருகிறது.


நம்மூர் படங்களை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்துவது எப்படி?
உலக சினிமாவுக்கும், உள்ளூர் சினிமாவுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் விஷயங்களை நீக்க வேண்டும். அப்படி நிறைவாக இருக்கிறது என்னால் இரண்டு படங்களைச் சொல்ல முடியும். ஒன்று 'லன்ச் பாக்ஸ்'. மற்றொன்று 'காக்கா முட்டை'.



இப்போது வெளிவரும் படங்கள் குறைவான கால அளவிலேயே இருக்கிறதே?
ஆம், இரண்டு மணி நேரப்படம் என்றால் உங்களால் ஐந்து ஷோக்களை வெளியிட முடியும். அதிக அளவில் பணத்தை ஈட்ட முடியும். இப்போது இருக்கும் ரசிகர்கள் அதிகம் பொறுமை காப்பதில்லை. ஐந்து நிமிடத்துக்கு மேல் அவர்களால் மொபைலைப் பார்க்காமல் இருக்க முடியாது.
அவர்களுக்கேற்றாற்போலத்தானே நாமும் படம் எடுக்க வேண்டும். இரண்டு மணி நேரம் என்னும்போது, சண்டைக்காட்சி, நடனங்களைக் குறைத்து, உணர்வுப்பூர்வமான விஷயங்களில் அதிகக் கவனத்தை செலுத்த முடியும்.

நன்றி - த ஹிந்து