Skip to content

Sunday, January 10, 2016

'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பாண்டிராஜ் பேட்டி

‘பசங்க 2' படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு அடங்குவதற்குள் தனது அடுத்த படமான 'கதகளி'யில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகி வந்தவரிடம் உரையாடியதிலிருந்து…




'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..
முதன்முறையாக என்னிடமிருந்து ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். நம்முடைய பேச்சில் ‘கதகளி ஆட்டம் ஆடிட்டாண்டா’ என்று சொல்லுவோம் இல்லையா, அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்தேன். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒருவனின் வாழ்வில் விதி விளையாடுகிறது. அதற்கு அவன் ஆடும் ஆட்டம்தான் இப்படம். ஒரு பூனை துரத்தத் துரத்த ஓடிக்கொண்டே இருக்கும். இதற்கு மேல் நம்மால் ஒட முடியாது என்று தெரிந்தவுடன் திரும்பி நம்மைத் தாக்கப் புலி மாதிரி பாயும். அப்படி ஒருவனுடைய கோபம், ஆக்ரோஷம், ருத்ர தாண்டவம்தான் 'கதகளி'.



முதன்முறையாக மாஸ் படம் பண்ணிய அனுபவம்?
என் நண்பரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படத்துக்கு நான் திரைக்கதை அமைத்திருக்கிறேன். அந்தச் சம்பவத்தையும் கதையையும் பார்த்தீர்கள் என்றால், முன்னுக்கு வர நினைக்கும் ஒரு நாயகனுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். இப்படி ஒரு படத்தை விஷால் ஒப்புக்கொண்டதே எனக்கு ஆச்சர்யம்தான். அவர் ‘பாண்டியநாடு' படம் பண்ணியிருப்பதால், இப்படம் அவருக்கு எப்படி வரும் என்று தெரியும்.



அனைவருக்குள்ளும் ஒரு நாயகன் இருக்கிறான். ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஒரு ஹீரோயிசம்தான் இப்படத்தில் இருக்கும். 40 பேரை அடிக்கிறது, 20 நடனக் கலைஞர்களோடு ஆடுவது, சுமோ பறப்பது, இப்படி எதுவுமே இதில் இருக்காது. இது விஷால் படமா, பாண்டிராஜ் படமா என்று கேட்டீர்கள் என்றால் இது இருவரின் படம் என்றுதான் சொல்ல வேண்டும்.



இனிமேல் மாஸ் ஹீரோ படங்கள் மட்டும்தானா?
குறைந்த பட்ஜெட்டிற்குள் ஒரு நல்ல குழந்தைகள் படமோ, குடும்ப படமோ பண்ணிக்கொண்டுதான் இருப்பேன். புதுமுகங்களை வைத்துக் கூட படம் பண்ணுவேன். மாஸ் படங்களின் வெற்றிக்கு மயங்கி அதன் பின்னால் கண்டிப்பாகப் போக மாட்டேன். குடும்பம் படம், த்ரில்லர் படம் இப்படி ஒவ்வொரு தளத்திலும் படங்கள் பண்ணிக்கொண்டிருப்பார் மணிவண்ணன் சார். அவரை மாதிரி முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்பதுதான் என் ஆசை.
‘பசங்க 2' படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பின் மூலம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
வடபழனியில் உள்ள திரையரங்கில் படம் பார்க்கப் போனபோது, இறுதியில் ‘A Pandiraj Film' என போடும்போது கைதட்டினார்கள். மூன்று வருடமாக எந்தப் படமும் வெளியாகவில்லை. அந்தக் கைதட்டலைக் கேட்கும்போது என்னை அறியாமல் அழுதுகொண்டிருந்தேன். மக்கள் வெளியே பார்க்கும்போது, ‘படம் நல்லாயிருக்கு சார்’ என்று சொல்லும்போது ஒரு பொறுப்பு வந்திருக்கிறது.




‘பசங்க 3' எப்போது எனக் கேட்கிறார்கள், நல்ல தருணத்தில் அப்படத்தையும் பண்ணுவேன். பொதுவாகவே, ரசிகர்களுக்கு ஒரு படத்தில் கருத்துச் சொன்னால் பிடிக்காது. ஆனால், இப்படத்தில் நிறைய கருத்து சொல்லியிருக்கிறோம், அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இனிமேல் எந்த ஒரு படம் பண்ணினாலும், அதில் ஒரு நல்ல விஷயம் இருக்க வேண்டும் எனக் கற்றுக்கொண்டேன்.



தயாரிப்பாளர் பாண்டிராஜைக் காணோமே?
இந்த வருடம் கண்டிப்பாக எனது தயாரிப்பு நிறுவனத்தில் ஓரிரு படங்கள் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன். மற்ற இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. அப்படித் தயாரிக்க முடியாமல் போனால் கூட, ஒரு நல்ல படத்தை வாங்கி வெளியிட்டுவிடுவோம். எனது தயாரிப்பு நிறுவனத்திலிருந்து கண்டிப்பாக ஒரு நல்ல படம் தயாரிப்பாகவோ வெளியீடாகவோ இருக்கும். அதை உறுதியாகச் சொல்லுவேன்.



‘இது நம்ம ஆளு' வெளியீட்டுப் பணிகள் எந்த அளவில் இருக்கிறது?
‘இது நம்ம ஆளு' இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். காதலர் தினத்துக்கு வெளியானால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அதற்கான பின்னணி இசைக் கோப்பு பணிகளெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளியாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தயாரிப்பாளர் கையில்தான் எல்லாம் இருக்கிறது, என் கையில் எதுவுமே இல்லை.


THANX - THE HINDU

கெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1?-உதயநிதி ஸ்டாலின். பேட்டி

நகைச்சுவைக் களத்தில் இருந்து ஏன் இந்த திடீர் மாற்றம் என்றால், ‘‘மூன்று படங்கள் நகைச்சுவைக் களத்தில் பண்ணியாச்சு. எனக்கே காமெடி பண்ணிப் போரடித்துவிட்டது. ஏதாவது புதுக் களத்தில் பயணித்தால் இன்னும் கத்துக்கலாம் என்று தேர்வு செஞ்ச படம்தான் 'கெத்து'’’ எனச் சிரிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.


ட்ரெய்லரைப் பார்த்தால் ஆக்ஷன் களத்தில் இனிமேல் பயணிப்பீர்கள் போல..


நான் எதையுமே முடிவு பண்ணவில்லை. எனக்குச் சரியாக வரும் என்ற படங்களை தேர்வு செய்து பண்றேன். ‘நண்பேண்டா' படப்பிடிப்பில் இருக்கும்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநர் திருக்குமரனை இந்தக் கதையோடு அழைத்து வந்தார். கதை எனக்கு புதுசாக இருக்கும் என்று நம்பி, உடனே பண்ணலாம் என்று ஒப்புக் கொண்டேன்.



இக்கதையில் வரும் அப்பா வேடம் நிறைய முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் சத்யராஜ் சார் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநரிடம் கூறி, கதை சொல்ல அனுப்பிவைத்தேன். அவருக்கும் கதை பிடித்துவிட, பண்ணலாம் தம்பி என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் எடிட் பண்ணி இயக்குநர் முருகதாஸிடம்தான் காட்டுவோம். அவரும் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லும்போது, எங்களுக்கு ஒரு நல்ல படம் பண்ணிக்கிட்டு இருக்கிறோம்கிற தைரியம் வந்தது. இப்படத்தின் கதை விவாதத்தில் கூட முருகதாஸும் அவருடைய டீமும் நான்கு கலந்துகிட்டாங்க.




படத்தில் கெத்தானவர் நீங்களா, சத்யராஜா?
கண்டிப்பாக சத்யராஜ் சார்தான். பி.டி மாஸ்டர் கேரக்டர் பண்ணியிருக்கிறார். எங்கு அநியாயம் நடந்தாலும் அவருக்குப் பிடிக்காது. உடனே போய் தட்டிக்கேட்பார். அப்படிப்பட்டவர் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார். அந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் படம்.



நான், விக்ராந்த், சத்யராஜ் சார் மூணு பேரும் பங்கேற்ற ஒரு சேசிங் காட்சி படத்தில் இருக்கிறது. கொடைக்கானலில் எட்டு நாட்கள் படமாக்கினார்கள். அங்க பயங்கர குளிர். அவ்வளவு குளிர்லயும் எங்க இருவரையும் விட வேகமாக ஓடுறார் சத்தியராஜ் சார். நானும் விக்ராந்துக்கும் காட்சிகள் இல்லாதப்போ கேராவேனில் ஏறி ஹீட்டர் போட்டு உட்காந்து விடுவோம். ஆனால் அவருக்கு அதெல்லாம் தேவைப்படல. அந்தளவுக்கு உடம்பைக் கட்டுக்கோப்பா வைச்சிருக்கார்.



ஆக்ஷன் களத்தில் ஒரு படம் பண்ணலாம் என்று தீர்மானிக்க காரணம் என்ன ?



மக்களிடையே ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. த்ரில்லர், க்ரைம் த்ரில்லர், பேய் படங்கள் என மக்கள் விரும்புகிறார்கள். ஒரே மாதிரியான படங்களில் நடிக்காமல், வேறு வேறு களங்களில் பயணிக்கலாம் என்பதுதான் என் எண்ணம். சந்தானம் கூடவே சுத்திகிட்டு இருக்கார், அவரை விட்டால் இவருக்கு வேற ஆள் கிடையாது என்று சில விமர்சனங்கள் வந்தது. ஒரு இரண்டு படம் சந்தானம் இல்லாமல் நடிச்சுட்டு அப்புறம் அவரைக் கூப்பிட்டுக்கலாம்ன்னு முடிவு செஞ்சேன்.






‘கெத்து' படத்தைத் தொடர்ந்து ஒரு இந்திப் படத்தை மறுஆக்கம் பண்ணக் காரணம் என்ன?
‘இதயம் முரளி' என்ற படம்தான் அடுத்து நான் பண்ண வேண்டியது. முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு இருந்ததால், படத்தின் பட்ஜெட் கட்டுப்படியாகவில்லை. அதனால் அந்தக் கதையை அப்படியே வைத்துவிட்டு இந்திப் படத்தை ரீமேக் பண்ணலாம் என்றார் இயக்குநர் அஹ்மத். அவர் மீது எப்போதுமே எனக்கு நல்ல நம்பிக்கை உண்டு. குறைந்த பட்ஜெட்டில் ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள், உடனே பண்ணலாம் என்று கேட்டேன். அப்போது ஒரு இந்தி படத்தின் டி.வி.டி.யைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். எனக்கும் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே உரிமையை வாங்கிப் பண்ணியிருக்கிறோம். அதுவும் எனக்கு முக்கியமான படமாக அமையும். 'கெத்து' படத்தில் சத்யராஜ் சார் என்றால், அஹ்மத் படத்தில் பிரகாஷ் ராஜ் சார் அசத்தியிருக்கிறார்.



சிறு முதலீட்டுப் படங்கள் நிறையப் பண்ணியிருக்கலாமே. ஏன் பண்ணவில்லை?
நான் சிறு முதலீட்டில் ஆசைப்பட்டுத் தயாரித்த படங்கள் சரியான வரவேற்பு பெறவில்லை என்பதுதான் காரணம். எனது படங்களுக்கு வரிச் சலுகை கிடைக்காது உள்ளிட்ட பல பிரச்சினைகள் அதற்குக் காரணமாக இருக்கு. சரி பெரிய நடிகர்களின் படங்கள் தயாரிக்கலாம் என்றால், என்னுடைய தயாரிப்பில் பெரிய ஹீரோக்கள் நடிக்கப் பயப்படுவார்கள். திரையுலக வியாபாரத்தில் எனக்கென்று ஒரு மார்க்கெட் இருக்கிறது. அதனால் நான் நடிக்கும் படத்தை நானே தயாரிக்கிறேன், வெளியிடுகிறேன். அவ்வளவுதான்.



எனக்கு க்ரைம் த்ரில்லர், வில்லத்தனம் கலந்த பாத்திரம் போன்ற படங்கள் எல்லாம் பண்ண ஆசையாக இருக்கிறது. புதுமையான கதைகளில் நாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், பண்ணுவேன். அதே போல தொழில்நுட்ப கலைஞர்கள், பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். திரையுலகம் நிறைய நஷ்டத்தில் போய் கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம். படங்கள் நஷ்டமாகிக் கொண்டே இருக்கின்றன. பெரிய நடிகர்களின் சம்பளமும், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளமும் கூடிக் கொண்டே போகிறது.



தயாரிப்பாளர் சங்கம், வரிச்சலுகை உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் ஈடுபாடு காட்டுவதில்லையே. ஏன்?



வரிச்சலுகை விஷயத்தில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் தரப்பில் இருந்து வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை ஒத்தி வைத்துக்கொண்டே போகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எனக்கு எந்தவொரு உதவியும் கிடையாது. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. அவர்களே பல பிரச்சினைகளில் இருக்கிறார்கள். எனக்கு யார் மீதும் வருத்தமோ, கோபமோ கிடையாது. வரி சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப் பற்றி நான் பேச முடியாது.



அப்பா ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லி வருகிறார்களே..



தேர்தல் வருகிறது. மக்களிடையே அப்பாவின் உழைப்புக்கு நல்ல மரியாதை கிடைத்திருக்கிறது. ‘நமக்கு நாமே' திட்டத்தை நிறையப் பேர் கிண்டல் செய்கிறார்கள். அதை எல்லாம் மீறி மக்களிடையே சென்று மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்கிறார். அதை யாருமே இதுவரை பண்ணியது கிடையாது. சிலர் பண்ணியிருக்கலாம். ஆனால் இவ்வளவு பெரிய அளவுக்குப் பண்ணியதில்லை. அந்த உழைப்புக்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


நன்றி - த இந்து

2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்? ஒரு பார்வை

பல்வேறு சிக்கல்களுக்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு தமிழ் திரையுலகம் இயங்கிவந்தது. அந்தப் பிரச்சினைகள் அனைத்துமே 2016லும் தொடர்கின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால், 2016-ம் ஆண்டு தமிழ் திரையுலகம் நல்ல லாபத்தில் இயங்கத் தொடங்கும் என்கிறார்கள் திரையுலக வட்டாரத்தினர். அவர்கள் குறிப்பிட்ட சில பிரச்சினைகளின் பட்டியல்:



தொலைக்காட்சி உரிமை
அனைவருமே முக்கியப் பிரச்சினையாகக் கருதுவது இதைத்தான். பெரிய நடிகர்களின் படங்களைப் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள், அப்படங்களின் படுதோல்வியால் தாங்கள் கொடுத்த பணத்தை எண்ணிப் பதறின. அதற்குச் சான்றாக ‘மாஸு', ‘புலி' ஆகியவற்றைச் சொல்லலாம், ஏனென்றால் இரண்டு படங்களின் தொலைக்காட்சி உரிமையும் 20 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள்.



இந்த ஆண்டும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது. தொலைக்காட்சி உரிமம் விற்காத படங்களை வாங்க வைக்கத் தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும், சிறு முதலீட்டுப் படங்களைக் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று கெடுபிடி செய்ததில், சில தொலைக்காட்சி நிறுவனங்கள் சிறு முதலீட்டுப் படங்களை வாங்கியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை.



சம்பள உயர்வு
நடிகர்களின் சம்பளம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால், சம்பளத்தை உடனடியாக உயர்த்திவிடுகிறார்கள். ஆனால் அடுத்த வெற்றி என்பது எப்படி என்றால், ஒரு ஏரியா விநியோகம் 8 கோடிக்கு வாங்கப்பட்டு 8.08 கோடி வசூலித்தால் போதும் உடனே வெற்றி என்று நினைத்துவிடுகிறார்கள். அந்த நடிகரோ அடுத்த படத்துக்கு சம்பளத்தைக் கணிசமாக உயர்த்திவிடுகிறார்.



இப்போது இந்தப் பட்டியலில் இயக்குநர்களும் சேர்த்திருக்கிறார்கள். வளர்ந்துவரும் இயக்குநர் ஒருவர் முதல் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவ்வளவு குறைந்த முதலீட்டில் ஒரு படமா என்று வியக்கவும் வைத்தார். அடுத்த படத்தில் தயாரிப்புச் செலவு அதிகமானதால், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் சண்டை ஏற்பட்டது. இப்போதும் ஒரு படத்தை இயக்கி வெளியீட்டுக்குக் காத்துக்கொண்டிருக்கிறார். அவர் அடுத்து இயக்கவிருக்கும் படத்துக்குக் கேட்ட சம்பளம் சுமார் 6 கோடி. நடிகர்கள், இயக்குநர்கள் என்றில்லை, தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் திறமை மற்றும் முந்தைய வெற்றிகளை எடுத்துக் கூறி சம்பளத்தை உயர்த்திவிட்டதால், படத்தின் வியாபாரச் செலவு என்பது எங்கேயோ போய்விடுகிறது என்ற புலம்பல் முன்பைவிட கோலிவுட்டில் அதிகமாகக் கேட்கிறது. இந்தப் பிரச்சினைக்குத் தயாரிப்பாளர் சங்கம் முடிவுகட்ட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.



தணிக்கை மற்றும் வணிக வரி
படத்துக்கு 'யு' சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழக அரசு வரிவிலக்கு அளித்துவருகிறது. இதனால் இயக்குநர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். படத்தை முடித்து தணிக்கைக் குழுவிடம் கண்டிப்பாக 'யு' சான்றிதழ் வாங்கியாக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல படங்களில் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.



கடந்த ஆண்டு ‘ஸ்பெக்டர்’ என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சென்சார் அதிகாரிகளுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்திய அளவில் வெடித்தன. இந்நிலையில் தணிக்கைக் குழுவைச் சீரமைக்கப் பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மத்திய அரசு நியமித்திருக்கிறது. இந்தக் குழு ஆராய்ந்து தரும் அறிக்கைக்கு ஏற்ப தணிக்கைக் குழு சீரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.


விநியோகஸ்தர்களின் குழப்பம்
ஆண்டுதோறும் இப்பிரச்சினைக்கு மட்டும் ஒரு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. தமிழகத்தில் சுமார் 1,050 திரையரங்குகள் இருக்கின்றன. ஆனால், வாரம்தோறும் சுமார் நான்கு படங்கள் வெளியாகின்றன. ஏதாவது ஓரிரு வாரங்கள் மட்டுமே ஒன்று அல்லது இரண்டு படங்கள் வெளியாகின்றன. முன்பே பேசி வைத்து, நாங்கள் இந்த தேதியில் வெளியிடவிருக்கிறோம் என்ற கலாசாரம் தமிழ்த் திரையுலகில் தற்போதுதான் தோன்றியிருக்கிறது. ஆனால், ஒரே வாரத்தில் பல படங்கள் வெளியாவதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடையே எந்தப் படத்துக்கு முன்னுரிமை அளிப்பது என்பதில் குழப்பம் நீடித்துவருகிறது.



தற்போது பொங்கல் வெளியீடாக ‘ரஜினி முருகன்', ‘கதகளி', ‘கெத்து' மற்றும் ‘தாரை தப்பட்டை' ஆகிய படங்கள் திரையரங்க ஒப்பந்தத்தில் போட்டியிட்டுவருகின்றன. ‘ரஜினி முருகன்' பலமுறை வெளியீடு என்று திட்டமிடப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால், இந்த முறை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கியிருக்கிறார்கள். சரியாகத் திட்டமிட்டுத் தயாரிப்பாளர்களுக்குள் ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாகாத வரை இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது என்கிறார்கள் திரையுலக வட்டாரத்தினர்.

thanx - the hindu

அன்பே!5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா எப்படி?

1   ஸ்கூல்ல  வாங்கற மார்க் கீழே ரெட் லைன் இருந்தா பதறிய நெட் தமிழன் இப்போ பொண்ணுங்க ஃபேவரைட் லிஸ்ட்ல ரெட் மார்க் பண்ணா புளகாங்கிதப்படறான்




=============




கோயிலுக்குப்போய் ஓசில பிரசாதம் வாங்கி சாப்பிட்டாக்கூட  இது ஆண்டவன் தந்ததுன்னு அள்ளி விடனும்,அப்போதான் ஆன்மீகப்பழம்னு நம்புவாங்க 




================





ஈரோடு டூ திருவனந்தபுரம் ( கோவை ரூட்) ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் ஈரோடு டூ நாகர்கோயில் ( மதுரை , நெல்லை ரூட்)போய் போகலாம்.2 ரூட்டும் 500கிமீ


===============================


4
வயலட் கலர் பட்டுப்பாவாடைக்கு வெள்ளிக்கொலுசு மேட்சா இல்லைன்னு உங்க குழந்தை அடம் பிடிச்சா கொலுசை ப்ளூ இங்க்கில் நனைத்துப்போடவும்


================


ஆமா ஆண்ட்டி என்ற பதில் தரும்போது கவனமாக உச்சரிக்கவும்.ஆமாண்டி என காதில் விழ வாய்ப்பு உள்ளது.



============



6 அதிகாலையில் எழுவதில் நீ சூரியனை முந்திக்கொள்.வெற்றியின் இலக்கை முன் கூட்டியே நீ அடைவாய்!



=============




7 கீழ்ப்படிந்து நடத்தல் ,பணிவுடன் இருத்தல் குணங்களை உன் பெற்றோரிடம் இருந்து தொடங்கு.வெற்றிக்கான நிகழ்தகவு இரு மடங்கு!



===============



8 ஆபீசுக்கு/கம்பெனி க்கு முதல் ஆளாய் நீ சென்று விட்டால் ஒவ்வொரு பிகரையும் வரிசையாய்ப்பார்க்கலாம்.




=================



9 மீன ராசி அன்பர்களே! வழக்கமாக சொந்த சம்சாரத்திடம் பணிவாக நடக்கும் நீங்கள் இன்று எல்லொரிடமும் பணிவாக நடப்பீர்!




====================






10 பயணத்தில் தூங்கிவழிபவருக்கு ஜன்னல் ஓர இருக்கை எதற்கு?



==========



11 சோ க்யூட் என எல்லாரும் உங்களை சிலாகிக்கவேண்டுமா?ஹேன்டில் நேம் முன் க்யூட் சேர்த்துக்கொள்ளவும்.வாழும் உதா = க்யூட் புஷ்பா ,க்யூட் லில்லி



=========



12 உங்க வீட்டில் லட்சுமி சரஸ்வதி குடி இருக்கவில்லையா?கவலைப்படேல்.FB யில் குடி இருக்கும் லட்சுமி,கலைவாணி வகையறாக்களுடன் கடலை போடுவீர்



==========



13 கடக ராசிக்கு மட்டும் 2016 சூப்பரா இருக்குமாம்.எனவே மழைத்தோழன் மாதிரி டைம் பாஸ் லவ்வர்ஸ் இந்த.வருசம் கடக ராசி பிகரை கரெக்ட்.செய்யவும்



===========



14 பொண்ணுங்க் இப்போ கோயிலுக்குப்போகும் முன் புருசன் கிட்டே சொல்றாங்க்ளோ இல்லையோ FB ல வந்து ஏ நான் கோயிலுக்குப்போறேன்னு சொல்லிட்டுதான் போறாக



==============



15 எல்கேஜி டூ யுகேஜி =,டேய்.என் பாலோயர்க்கு நீ ஏன் டி எம் அனுப்புனே?


ராஸ்கல்.அவ எனக்கும் தாண்டா பாலோயர்


=============


16 அன்பே!5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா எப்படி?கொஞ்சம் திரும்பவும்


===============
17 மவுனிகா வுக்கு கல்யாணப்பத்திரிக்கை அடிக்கும்போது மவு"நிக்காஹ்"னு அடிப்பாங்களோ?# ஆல்சோ பவுர்ணிகா ,கிருனிகா

=======


18 ஒரு சிம்ம ராசி பிகரு 2,சிம் வெச்சிருந்தா அதை டூயல் சிம்ம ராசினி நீ எனக்கு என்றென்றும். ராசி நீ னு டூயட் பாடலாம்

==============

19 அந்த அக்காவுக்கு போன வருசம் வாழ்த்து சொன்ன 6890 பேருக்கே இன்னும் ரிப்ளை வர்ல.இந்த வருசம் சொல்றாங்களா?ன்னு.2,க்ரூப் பெட் கட்டிட்டு இருக்கு

============

20 அமுதம் ருசிப்பதற்குக்காரணம்.அன்பே அமுதா உன் பெயர் அதில்புதைந்திருப்பதால்


=================

Saturday, January 09, 2016

நடிகை ரூபா கங்குலி-நான் ஆளான "தாமரை" பாட்டு

விஜயகாந்த்தை  காமெடியனாக சித்தரிப்பதை ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்- ஸ்டாலின் # இங்கே அடிச்சா அங்கே வலிக்குது.அப்போ கூட்டணி உறுதி


===============



2  பொருத்தம் பார்த்துக் கொண்டுள்ளோம்.. கூட்டணி குறித்து இல.கணேசன் # கட்டதுர க்கு கட்டம் சரி இல்லைனு சொல்லி இருப்பாங்ளே?




=============



3 தேர்தலில் பா.ம.க. 40%


வாக்குகளை பெறும்
# தலைவரே!,நமக்கு 4% ஓட்டு தானே?
ஜீரோக்குதான் மதிப்பில்லையே ?அதான் 4,பக்கத்தில் சேத்துட்டேன்


==============

4 காவல் நிலையத்தில் வைத்து போலீசாரை அடித்து உதைத்த பெண் கைது # கேப்டன் பிரபாகரன் ஓப்பனிங் சீன் பார்த்துட்டு நேரா வந்துடுச்சு போல

============

5 என் வீட்டின்முன்பு போராட்டம் நீடித்தால் ஜெ வீட்டின் முன்பு அறப்போராட்டம் நடத்துவேன்:விஜயகாந்த் ஆவேசம் # அறப்போராட்டம்னா அமைதியா நடத்தனும்

===============

6 திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும்: சோனியாவிடம் வலியுறுத்திய இளங்கோவன் # எப்படியோ ”கை”யை சுட்டுக்குவாங்க போல

================

7 காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில் # எங்களுக்குத்தான் சித்தி, உங்களுக்கு அத்தை , பார்த்துப்பேசுங்க

==============

8 ஸ்டிக்கர் அரசுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் தொலைவில் இல்லை-விஜயகாந்த் # தேர்தல் வர இன்னும் 6 மாசம் இருக்கு, தமிழன் மறந்துடுவானே?


==============


மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டது- ப.சிதம்பரம் தாக்கு # சுற்றுலாத்துறைல உலகத்துக்கே நாம தானே முன்னோடி? இப்படிக்கு மோடி


===================

10 போன வருஷம் ஓடிப்போன ஆசிரியை - மாணவன் ஜோடி இன்னும் சில நாளில் பிடிபட போகுதாம்-செய்தி # பையன் ரொம்ப மோசமாம், டீச்சர் 9 மாசமாம் 


=================


11 சிறப்பாக செயல்படுகிறோம்.. சீக்கிரமே முடிவு கட்டி விடுவோம்.. -ஸ்டாலின்!  # அண்ணன் - தம்பி பிரச்சனையைச்சொல்றாரா? 


================


12 தேர்தலுக்கு முன்பாகவே மீண்டும் சிறைக்குச் செல்வார் ஜெ.. வைகோ # ஜெ வுக்கு இந்த வருசம் ஜெயிக்கும் வருசம், ஜெயிலுக்குப்போகும் வருசம் இல்ல


==================





13  நாகை அருகே 10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்ற 21 வயது பெண்! # வர வர ஆம்பளைங்களுக்குப்பாதுகாப்பே இல்லை


=================

14  தமிழகத்தில்
ஊழலற்ற ஆட்சியை
மக்கள் நல
கூட்டணி விரும்புகிறது
-வைகோ # அது நடக்காது, சாய்ஞ்சா தமிழன் இலைப்பக்கம், இல்லைன்னா சூரியன் பக்கம்


==================

15 ஊழலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை - அன்னா ஹசாரே எச்சரிக்கை # மீடியாக்கள் கவனம் கவர வேறு வழி இல்லை? 



=====================

16  புகை பழக்கமுள்ள பெண்கள் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம். # புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றுகிறார்கள் போல



===============



17 ஜல்லிக்கட்டு தடையை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் - ஸ்டாலின் # ஏழைகளுக்கு வாழ்வே ஒரு போராட்டம்,அரசியல்வாதிக்கு பேருக்கு ஒரு போராட்டம்





=====================




18  பத்திரிகையாளர்களுக்கு அபாயகரமான நாடு இந்தியா - சர்வதேச அமைப்பு அறிக்கை # கேப்டன் புகழ் அதுக்குள்ளே இன்ட்டர்நேசனல் லெவல் ஹிட்டா?


============

19 மக்கள்விரோத ஆட்சிஅகலட்டும்
என்போன்ற நல்லோர் ஆட்சிமலரட்டும்
விஜயகாந்த்
நல்லவராம்.
யார் சொன்னது? பிரேமலதாவா?
நோ.கேப்டனே சொன்னார்

=============


20 பாஜக மகளிர் தலைவியாக நடிகை ரூபா கங்குலி நியமனம் | # நான் ஆளான "தாமரை" பாட்டு தான் இவங்க செல்போன் ரிங் டோனா?

=============

ஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சனம்

நடிகர் : ஹாரிசன் போர்டு
நடிகை :கேர்ரி பிஷர்
இயக்குனர் :அப்ராம்ஸ்
இசை :ஜான் வில்லியம்ஸ்
ஓளிப்பதிவு :டேனியல் மின்டல்
ஸ்டார் வார்ஸ் படங்கள் இதுவரை 6 பாகங்கள் வந்துள்ளன. ஜார்ஜ் லூகாஸ் இயக்கிய முந்தைய பாகங்களின் சாதனையை ஸ்டார் வார்ஸ் 7 முறியடிக்குமா? என்ற சந்தேகத்தை தவிடுபொடியாக்கி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது அறிவியல் புனைகதைப் படமான ஸ்டார் வார்ஸ் 7-வது பாகம்.

இந்த கதையானது சூரிய குடும்பத்தை தாண்டிய மற்றொரு கேலக்ஸியில் நடைபெறுகிறது. கதையின் ஹிரோவான போ டேமரோன் ஒரு மிகச் சிறந்த பைலட். தீயவர்களை அழிக்கும் கடைசி ஜெடாய் வீரரான லூக் ஸ்கைவாக்கர் 30 ஆண்டுகளாக காணவில்லை. அவரை கண்டுபிடிக்க வேண்டுமானால் அவர் இருக்கும் இடத்தின் மேப் வேண்டும். ஆனால் வில்லனான ஸ்னோக்கும் மேப்பை கண்டுபிடித்து லூக் ஸ்கைவாக்கர் அழிக்க முயற்சிகிறான்.

ஒரு கட்டத்தில் ஹீரோயின் ரே வில்லனிடம் சிக்கிக்கொள்கிறாள். வில்லன் கிரகங்களையே அழிக்கும் ஆயுத்தை கண்டுபிடிக்கிறான். ஹிரோவுக்கு வில்லன் படையை சேர்ந்த போர் வீரன் ஒருவன் உதவுகிறான்.

கடைசியில் ஹீரோ கேலக்ஸியை காப்பாற்றினாரா?, போரில் யார் வென்றது? லூக் ஸ்கைவாக்கர் ஏன் மறைந்து வாழ்கிறார்? போன்ற கேள்விகளுக்கு சுவராசியாமாக மிரட்டலான கிராப்பிக்ஸ் காட்சிகளுடன் பதில் அளித்துள்ளார் படத்தின் இயக்குனர் அப்ராம்ஸ்.

வழக்கமான ஸ்டார் வார்ஸ் படங்களில் இருந்து இந்த படத்தின் விஷுவல்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும், கதாபாத்திரங்கள்தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. ஸ்டார் வார்ஸ் படங்களுக்கே உரிய குறிப்பிட்ட சூழ்நிலையில் கதாபாத்திரங்கள் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரசிகர்களின் மனதை வெல்லும் பல காட்சிகள் படத்தில் உள்ளன. 

மொத்தத்தில் ‘ஸ்டார் வார்ஸ்’ மின்னுகிறது.

http://cinema.maalaimalar.com/2015/12/31201932/Star-Wars-The-Force-Awakens-Mo.html

POINT BREAK- (2016)-திரை விமர்சனம்

நடிகர் : எட்கர் ரமிரேஜ்
நடிகை :தெரேசா பால்மர்
இயக்குனர் :எரிக்சன் கோர்
இசை :ஜுங்கி எக்ஸெல்
ஓளிப்பதிவு :எரிக்சன் கோர்
1991-ம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்ட படத்தை இப்போது 3டி-யில் ரீமேக் செய்திருக்கிறார்கள். மலையில் இருந்து குதிப்பது, வானில் பறப்பது என்று எதற்கும் அஞ்சாமல் தங்கள் உயிரை பணயம் வைத்து கொள்ளையடிக்கும் ஒரு குழுவை ஹீரோ எப்படி பிடிக்கிறான் என்பதுதான் பாய்ண்ட் பிரேக் படத்தின் கதை.

ஜானி ஒரு இளம் எப்.பி.ஐ. அதிகாரி மட்டும் அல்ல, சாகச வீரனும்கூட. ஆனால் மோட்டர் சைக்கிள் சாகசத்தின்போது தன் நண்பன் இறந்த பிறகு, சாகசங்கள் செய்வதை விட்டுவிட்டு எப்.பி.ஐ.-யில் வேலைக்கு சேர்கிறான்.

அவன் வேலை பார்க்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடிக்கடி கொள்ளை நடக்கிறது. மிக வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் உயிரை பணயம் வைத்தும் கொள்ளையடிக்கும் இந்த குழுவை பிடிக்க முடியாமல் போலீஸ் திணருகிறது.

இதனையடுத்து ஹீரோ ஜானியை அந்த குழுவினரோடு பழகவைத்து, அவன் மூலமாக கொள்ளை கூட்டத்தை பிடிக்க திட்டமிடுகிறது போலீஸ். ஜானியும் அந்த குழுவோடு நெருக்கமாகிவிடுகிறான். அந்த குழுவின் தலைவனான வில்லன் போதி, ஜானிக்கு கடல் சறுக்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கிறான்.

சாகச விரும்பியான ஜானி வந்த வேலையை மறந்துவிட்டு சர்பிங்கில் மூழ்கிவிடுவதோடு, அந்த குழுவை இருக்கும் டெய்லரையும் காதலிக்க தொடங்குகிறார். இதனை அறிந்துக்கொண்ட போலீஸ் ஜானிக்கு நெருக்கடி கொடுக்கிறது. இதனால் அந்த குழுவின் செயல்பாடுகள் பற்றி தனது மேல் அதிகாரிக்கு தகவல் கொடுக்கிறான்.

பின்னர், வில்லன்கள் ஒரு வங்கியை கொள்ளையடிக்கும்போது ஜானியும் மற்ற போலீஸ் அதிகாரிகளும் அவர்களை விரட்டுகிறார்கள். அப்போது கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவனை கொல்ல ஜானிக்கு வாய்ப்பு கிடைத்தும் அவன் கொல்லாமல் விட்டுவிடுகிறான். இதனால் மேல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகிறான். கொள்ளை கூட்டத்திற்கும் ஜானி ஒரு போலீஸ் என்று தெரிந்துவிடுகிறது. வில்லன் போதி ஜானியின் காதலியான டெய்லரைக் கடத்துகிறான். அவளை விடுவிக்க வேண்டுமென்றால், ஜானி தங்களுடன் சேர்ந்து ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபட வேண்டுமென சொல்கிறான்.

இறுதியில் ஜானி, கொள்ளைக்கூட்டத்துடன் இணைந்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு தனது காதலியை காப்பாற்றினாரா? அல்லது உண்மையான போலீஸ் அதிகாரியாக தனது கடமையை ஆற்றினாரா? என்பதே மீதிக்கதை.

1991-ம் ஆண்டு வெளிவந்த படத்துடன் ஒப்பிடும்போது புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலக்கியிருக்கிறார் இயக்குனர் எரிக்சன் கோர். மற்றபடி படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வானில் பறப்பது, சர்ப்பிங் செய்யும் காட்சிகள் எல்லாம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால் பழைய படத்தில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்லை. இந்த படத்தின் இயக்குனர் ‘பாஸ்ட் அண்ட் தி ப்யூரியஸ்’ படத்தில் கேமராமேனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ‘பாய்ண்ட் பிரேக்’ தடுமாற்றம்
http://cinema.maalaimalar.com/2016/01/08083646/Point-Break-Review.html

தற்காப்பு-திரை விமர்சனம்

காவல்துறை நிகழ்த்தும் மோதல் (என்கவுன்ட் டர்) கொலைகளைப் போற்றிப் புகழும் படங் களைப் பார்த்து வாய் பிளந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது இந்த அசலான ‘என்கவுன்ட்டர்’ படம். என்கவுன்ட்டர்கள் மற்றும் போலி என்கவுன்ட்டர் களின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல், வணிகப் புள்ளிகளின் சுயநல வலைப்பின்னலை அப்பட்டமாக காட்டியிருக்கிறது தற்காப்பு.


புகழ்பெற்ற என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சக்திவேல். தனது சக அதிகாரிகள் இருவருடன் இணைந்து செயல்பட்டு மேலதிகாரிகள் தரும் கட்டளைகளுக் கேற்ப 18 மோதல் கொலைகளை நடத்தியவர். பல கொலைகளைச் செய்த குற்றவாளியான ரியாஸ் கானை என்கவுன்ட்டர் செய்யும் பணி அவருக்குத் தரப்படுகிறது. ரியாஸ் கான் செய்த கொலைகள் அரசியல்வாதிகளுக்காகச் செய்யப்பட்டவை என்பது சக்திக்குத் தெரியாது. தனக்களிக்கப்பட்ட பணியைச் செவ்வனே முடிக்கிறார். நிஜ மோதல் போன்ற தோற் றத்தை உருவாக்கிப் போலி மோதல் கொலையை அரங்கேற்றிவிடுகிறது அவரது அணி. கொடூரமான ஒரு கொலைகாரனைக் கொன்றுவிட்ட திருப்தியுடன் இருக்கும் அவர்களுக்கு மனித உரிமை ஆணையத் தின் விசாரணை மூலமாக நெருக்கடி ஏற்படுகிறது.



மனித உரிமை ஆணைய அதிகாரியான சமுத்திரக்கனி மூவரையும் தீவிரமாக விசாரணை செய்கிறார். அவர்கள் செய்தது போலி மோதல் கொலைதான் என்பதை அம்பலப்படுத்துகிறார். அதற்கான உத்தரவு யாரால், ஏன் கொடுக்கப்பட்டது என்பதையும் அவர்களுக்கு உணரவைத்து, நீதிமன்றத் தில் உண்மையைச் சொல்லும்படி வலியுறுத்துகிறார். இதை மோப்பம் பிடித்துவிடும் உயரதிகாரிகள் இந்த மூவரையும் தீர்த்துக்கட்ட முடிவுசெய்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்க இவர்கள் முயலும்போது அப்பாவிப் பொதுமக்கள் நால்வர் நடுவில் சிக்கிக்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை.



அதிகார வர்க்கத்தின் சுயநலம், வணிக உலகின் பணபலம், இவர்களுக்குத் தலையாட்டி அனுகூலம் பெறும் காவல் துறையினர் ஆகியோரின் திட்டமிட்ட சதியே மோதல் கொலைகளுக்குப் பின்னால் இருக்கின்றன என அப்பட்டமாகச் சொல்லும் அறிமுக இயக்குநர் ஆர்.பி. ரவியைப் பாராட்ட வேண்டும். இந்தக் கொலை பாதக நாடகத்தில் நேர்மையான பல அதிகாரிகள் பலிகடாவாகிறார்கள் என்பதையும் காட்டியிருக்கிறார்.



கொலைக்குத் தேர்வு செய்யப் பட்ட இடத்திலிருந்து கதையை முன்னும் பின்னுமாக நகர்த்தித் திரைக்கதை அமைத்த விதம் சுவாரஸ்யமாக உள்ளது. துப்பாக்கிக் குண்டுகளுக்கு நடுவே சிக்கிக்கொள்ளும் காதல் ஜோடிகளின் துணைக் கதைகள் சுவாரஸ்யமற்ற விதத்தில் சொல் லப்பட்டிருப்பது தொய்வை ஏற்படுத்துகிறது. கொலைகள், திட்டங்கள், விசாரணைகள், வேட்டைகள் ஆகியவை அடங்கிய பகுதிகள் கச்சிதமாகவும் நம்பகத்தன்மையுடனும் அமைந்து வேகமாக நகருகின்றன. காதல் கதைகள் வரும் பகுதிகள் சப்பென்று இருக்கின்றன.


பல மோதல் கொலைகளை நிகழ்த்திய சக்திவேலின் மனம் இந்தக் கொலைகளின் பின்னணி தெரிந்ததும் மாறுகிறது. தன்னைக் கொல்ல வருபவர்களைக் கொல்வதற்கான வாய்ப்பு இருந்தும் கொல்லாமல் விடுவது அந்த மனமாற்றத்தின் அடையாளமாக மனதில் நிற்கிறது.



சரியான கதையும் திறமையை வெளிக்காட்டும் கதா பாத்திரமும் அமையாமல் தத்தளித்துவந்த சக்திவேல் வாசு, தனக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைத் திறம்படப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தொடக் கத்தில் கம்பீரமும் திட்டமிடலும் தெறிக்கும் என்கவுன்ட் டர் அதிகாரியாக வரும் சக்தி, சமுத்திரக்கனியின் விசாரணையில் சிக்கி ‘தாம் செய்தது’ அத்தனையும் அப்பட்டமான கொலைகள் என்பதை உணர்ந்து துடிக் கும்போது அவர் நடிப்பு முற்றிலும் மாறுபட்ட பரி மாணத்தை வெளிப்படுத்துகிறது. சமுத்திரக்கனியின் நடிப்பும் அவரது விசாரணையில் மிளிரும் நுணுக்கங் களும் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.
திரைக்கதையை முன்னும் பின்னுமாகக் கலைத்துப்போட்டுச் சொல்லும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லருக்குத் தேவையான ஒளிப்பதிவைச் சரியாகக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த். பின்னணி இசை அதிகம் பேச வேண்டிய படத்தில் அதன் பங்கை மிகுந்த உழைப்புடன் வழங்கியிருக்கிறார் எஃப்.எஸ். பைசல்.



‘குற்றவாளி தப்பிக்க முயன்றபோது நடந்த சண்டை யில் காவல்துறையினர் தாக்கப்பட்டனர். எனவே தற் காப்புக்காக போலீஸ் சுட வேண்டி வந்துவிட்டது. இந்தச் சண்டையில் குற்றவாளி இறந்து போனார்’ என்று செய்திகளில் படித்த பார்வையாளர்களுக்கு யாருடைய தற்காப்புக்காகச் சுடப்பட்டது என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறது இந்தப் படம். உள்ளடக்கம், உரையாடல் மட்டு மல்லாமல் படமாக்கல் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாகவும் உயர்ந்த தரத்துடன் வந்திருக்கிறது. பிரதான கதையில் செலுத்தியிருக்கும் கவனத்தில் சிறிதளவாவது கிளைக் கதைகளில் செலுத்தியிருந் தால் படம் மொத்தமாகக் கவர்ந்திருக்கும்.


நன்றி - த ஹிந்து