Friday, March 30, 2012

3 - திருப்பதி,திருத்தணி,பழநி - சினிமா விமர்சனம்

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/09/3-movie-dhanush-shruti-first-look-poster.jpg 

ஹீரோயின் ஸ்ருதி 17 வயசு ஜிகிடி.. ஸ்கூல்ல படிக்குது.. ஹீரோ தனுஷ் என்ன பண்ணனும்? கரெக்ட் .. அதே தான்.. பிளஸ் டூ படிக்கற பாமா.. நீ இஷ்டம்னா நான் உனக்கு மாமா.. பொண்டாட்டி பார்த்துட்டு இருந்தாலும் பரவாயில்லை.. உதட்டுல தர்றேன் ஏகப்பட உம்மா.. அப்டினு ஹீரோயினை போட்டு பிழிஞ்சு எடுக்கறாரு.. தியேட்டர்ல ஜொள்ளாறா ஓடுது.. 

 சிவ கார்த்திகேயன் மெரீனால விட்ட இடத்தை இதுல பிடிச்சுட்டாரு.. செம காமெடி.. பஞ்ச் அங்கங்கே குடுத்து அப்ளாஸ்  வாங்கறது அவர் தான்.. நாம எல்லாம் வருஷக்கணக்கா பின்னால சுத்துனாலும் கண்டுக்காதுங்க ஃபிகர்ங்க.. ஆனா இந்த சினிமால மட்டும் ஹீரோ ஹீரோயினைப்பார்த்த முதல் சீன் அல்லது 2 வது சீனே மடிஞ்சிடுதுங்க.. நற நற.. 

2 பேரும் லவ் பண்ணி முடிச்சதும் மேரேஜ் பண்ண வேண்டிய சிச்சுவேஷன்.. அதுக்குள்ள மேரேஜா? பாப்பா இன்னும் மேஜர் ஆகலையே? மைனர் தானே?ன்னு யாராவது லாஜிக் மிஸ்டெக் பார்க்கக்கூடாது.. ஏன்னா 5 வருஷம் லவ் பண்ணியே காலத்தை ஓட்டிடறாங்க.. 

 இரு தரப்பு பெற்றோர்களும் லைட்டா பேருக்கு எதிர்ப்பு தெரிவிச்சு ஓக்கே சொல்லிடறாங்க.. 2 பேருக்கும் மேரேஜ் முடியுது... இண்டர்வல்... 

இது வரை படம் செம கலாட்டாவா, ஜாலியா போனாங்காட்டி நம்மாளூங்க எல்லாம் செகண்ட் ஆஃப்ல பின்னி பெடல் எடுக்கப்போறாங்கன்னு கர்ச்சீப்/ டர்ர்கி டவல் கையில வெச்சுக்கிட்டே வேடிக்கை பார்க்க ரெடி ஆகறாங்க.. அந்தோ!!!!!! பரிதாபம்.. 

 திடீர்னு டைரக்டர் ஐஸ்வர்யா தனுஷ்க்கு செகண்ட் ஆஃப் எப்படி கொண்டு போறதுன்னு தெரியலை... கொழுந்தனார் செல்வராகவன் கிட்டே  ஐடியா கேட்கறார்.. அண்ணனைப்பற்றி சொல்லவே வேணாம்.. ரெடி ஸ்டாக் காதல் கொண்டேன்./. மயக்கம் என்ன? டி வி டி எப்பவும் கார்லயே வெச்சிருப்பார் போல.. இதை வெச்சு மேனேஜ் பண்ணீக்கம்மான்னு கொடுத்துட்டார் போல.. 



http://topbollywoodactress.com/wp-content/uploads/2011/12/dhanush_shruti_hassan_3_movie-Stills11.jpg

 செகண்ட் ஆஃப்ல இன்னா ட்விஸ்ட்னா தனுஷ் ஒரு சைக்கோ பேஷண்ட்..  பை போலார் டிஸ் ஆர்டர் ( BI POLAR DISORDER) அப்டின்னு ஒரு வியாதி.. இந்த வியாதி யாருக்கெல்லாம் வரும்னா செல்வராகவன், தனுஷ், ஆர் பார்த்திபன் வகையறாக்களூக்கு மட்டும் அடிக்கடி வரும்.. எத்தனை படம்  டப்பா ஆனாலும் சரி.. அந்த சைக்கோ கேரக்டரை மட்டும் விடவே மாட்டாங்க .

 தனுஷ் டென்ஷனா இருக்கறப்ப கூட இருக்கற நாயை கொல்றார்.. அந்த நாய் ஸ்ருதி ஆசையா வளர்த்த நாய்..  ஒரு நைட் கிளப்.. டிஸ்கொத்தே பார்ட்டிக்கு போறப்ப ஒரு ரவுடி நம்ம ஜிகிடி ஸ்ருதி கிட்டே வம்பு இழுத்திங்க்..  13 பேரை ஒத்தை ஆளா நின்னு போட்டுத்தள்ளிடறாரு... 

நாமெல்லாம் ஆஃபீஸ்ல ஒரு ஜிகிடி கிட்டே 2 நிமிஷம் கடலை போட்டாலே வீட்டுக்கு வந்ததும் நம்ம முகரக்கட்டையை பார்த்தே சம்சாரம் என்னமோ நடந்திருக்குன்னு கண்டு பிடிச்சிடும்.. ஆனா பாருங்க ஸ்ருதி ஒரு அப்பாவி.. தன் புருஷன் சைக்கோ ங்கறது தெரியவே இல்லை.. 

 ஆஸ்பிடல், ட்ரீட்மெண்ட் அப்டினு படத்துல செகண்ட் ஆஃப் ஃபுல்லா தனுஷ் அலையறாரு .... க்ளைமாக்ஸ்ல எதிர்பாராத ஒரு திருப்பம்... இது வரை ஆடியன்ஸை கொலையா கொன்னெடுத்த டைரக்டர் ஹீரோவை தற்கொலை செய்ய வெச்சிடறார்.. அவ்வளவுதான் சுபம்.. ஆடியன்ஸ் எஸ்கேப்.. 







http://tamilwire.com/images/2012/01/dhanush-sruthi-620x811.jpg


 ஹீரோ தனுஷ்க்கு அல்வா சாப்பிடற மாதிரி கேரக்டர்.. அவர் முக அமைப்பு அவர்க்கு பெரிய பிளஸ்.. மீசையை ஃபுல்லா ஷேவிங்க் பண்ணிட்டா அவர் பிளஸ் டூ ஸ்டூடண்ட்.. லைட்டா மீசை தாடி வெச்சா காலேஜ் ஸ்டூடண்ட்.. கொஞ்சம் அடர்த்தியா மீசை தாடி வெச்சா ஃபேமிலி மேன் கம் சைக்கோ.. ஆஹா செம ஐடியா மிஸ்டர் சூர்யா .. நீங்க வேஸ்ட்.. எவ்வளவு சிரமப்பட்டு வானரம் அடச்சே  வாரனம் 1000 ல கெட்டப் சேஞ்ச் செஞ்சீங்க.. தனுஷ் பார்த்து கத்துக்குங்க .. 

ஹீரோயின் ஸ்ருதி  + 2 படிக்கற பாமாவா வர்றப்ப ஆஹா.. செம .. முதல் முதல் காதலனுடன் ரைடு போகையில் உள்ளாடை அணியாத வெள்ளாடாய் சாலையின் மழையில் குண்டுங்குழியில் சைக்கிளை விட்டு குலுங்கி செல்கையில்  “ துள்ளுவதோ இளமை.. அள்ளுவதே புதுமை.. அத்தனையும் தனுஷ் திறமைன்னு பாட வைக்குது.. அவரது குரல் அவருக்கு மைனஸ் தான்.. ( உன்னை யார் குரலை பார்க்க சொன்னது?)

ஐஸ்வர்யா தனுஷ் நிஜமா டைரக்டரா வேலை பார்த்தாரா? இல்லை லைட் பாயா விளக்கை பிடிச்சு வேலை பார்த்தாரா தெரியலை.. நாமெல்லாம் சம்சாரம் கூட கல்யாண விஷேஷத்துக்கு போறப்ப நம்ம பார்வை கொஞ்சம் பிசகினாலும் அங்கே என்ன பார்வை?ன்னு டமார்னு குரல் வரும்.. கதி கலங்கி போயிடுவோம்.. ஆனா ஒரு டைரக்டரா இருந்தாலும் உள்ளூர மனைவிங்கற ஸ்தானம் இருக்கும் தானே.. எப்படித்தான் இவ்வள வு நெருக்கமா ஸ்ருதி கூட தனுஷை நடிக்க விட்டாரோ.. ஹூம் ( பொறாமை பொறாமை )

 ஸ்ருதி அழுகை காட்சிகளீல் மிகச்சிறப்பாக நடிச்சாலும் திரைக்கதையுடன் ஒன்ற முடியாததால் ஆடியன்ஸ் ஓ  என கத்தறாங்க.. 

மிகப்பிரமாதமாக எதிர் பார்க்கப்பட்ட ஒய் திஸ் கொலை வெறி பாட்டு படமாக்கப்பட்ட விதம் படு சுமார்.. ஏழையின் சிரிப்பில் படத்தில் பிரபு தேவா ஊத்திக்கினு கடிச்சுக்கலாம் பாடுவாரே அந்த டான்ஸ் ஸ்டெப்..  வேஸ்ட்..  


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9QYuUrfrt2T46uCkD9pe_0hug-CvP4jTnePfpkQWwJIJpG32JDRA72TSzI458Y8y9nhJfeNEslpreTkQRpWBt8HbFvP_do3DM_AaIs9ki11aB5bs7atOIDraSc54AmkUIhetouuOgHe4a/s1600/Dhanush%252C+Shruthi+Hassan%2527s+3+Movie+Latest+Photo+2.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  சிவ கார்த்திகேயன் தனுஷை விட பர்சனாலிட்டி என்பதால் தன் கணவனை விட அவர் டம்மியாகத்தெரிய ஐஸ்வர்யா எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலே.. ஆனா மேக்கப், கெட்டப்ல அவர் எண்ணம் ஈடேறினாலும் வசனம், நடிப்பில் அவர் பின்னிட்டார்.. வெல்டன் சிவா.. 

2. இந்தக்காலத்துப்பசங்க  எப்படி ஃபிகருங்களுக்கு ரூட் விடுவாங்க.. என்ன பண்ணுவாங்க என்பதை அப்டேட் பண்ணி இடைவேளை வரை இளமை துள்ள படம் ஆக்கி இருப்பது.. 

3. ஹீரோயின் வீட்டில் யாரும் இல்லை.. ஹீரோவை வீட்டு மொட்டை மாடிக்கு வரச்சொல்லி ரொமான்ஸ் பண்ணும் இடம் செம கிளு கிளு./.. அந்த சீனில் ஹீரோயின் போட்டிருக்கும் ரோஸ் கலர் ட்ரான்ஸ்பரண்ட் நைட்டி செம கிக் .. ( நைட்டில என்ன கிக் என கேட்பவர்கள் லாலி பாப் சாப்பிடவும் ஹி ஹி )

4. கண்ணழகா.. காதழகா, லைஃப்ல ஒயிஃப் வந்துட்டா, நீ பார்த்த விழிகள், போ அன்பே போ, ஒய் திஸ் கொலை வெறி என எல்லா பாடல்களும் ஓக்கே. இசை அமைப்பாளர்க்கு நல்ல எதிர் காலம் உண்டு.. 

5. இடைவேளைக்குப்பின் கதையின் டோன் சடார் என மாறுவதில் ஒளீப்பதிவு பின்னணீ இசையின் திகில் எல்லாம் ஓக்கே .. சைக்கோவாக தனுஷ் மிரட்டும் நடிப்பு.. அதுவும் ஸ்ருதி “ ஃபிரண்ட் எங்கே இருக்கனுமோ அங்கே இருக்கனும்” என சொல்லும்போது ஏய் என மிரட்டுகிறாரே.. கிளாசிக் நடிப்பு.. 

6. பிரபு, பானுப்ரியா, ரோகினி என குணச்சித்திர நடிப்புக்கு தேர்ந்த நடிக நடிகைகள் செலக்சன்.. அதே போல் இடைவேளைக்குப்பின் தனுஷின் நண்பராக வருபவ்ரின் நடிப்பு.. டாப்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxhWH3n2WlVB4WMCLimtmSay7qkXxHXO2hNXBMPblSkSDxOJZ7mgE7vqdHXzE9os7PhHrKnX_UsO-UAgPj9TKzr-G4H-CdWR2G_zeQ6HeI1KFUuLtXOmpXUrpMN3_MOpiXno9up8B-j_g/s1600/dhanush_shruti_hassan_3_movie_first_look_155.jpg


 இயக்குநர் பல்பு வாங்கும் இடங்கள்

1. ஹீரோ சைக்கோ ஆக என்ன காரணம்? காதல் கொண்டேன் மாதிரி ஒரு ஃபிளாஸ் பேக் சீன் வெச்சிருக்கலாம்.. திடு திப்னு சைக்கோன்னா நம்பற மாதிரி இல்லையே?

2. ஹீரோ சைக்கோ என்பது ஹீரோவின் அம்மா, அப்பாவுக்குக்கூட தெரியாது.. நண்பனுக்கு மட்டும் தான் தெரியும் என்பது நம்பற மாதிரியே இல்லை..

3. இடை வேளை வரை நடந்தது எல்லாம் ஹீரோவின் கற்பனை.. ஹீரோ - ஹீரோயின் மேரேஜ் நடக்கவே இல்லை.. ஹீரோயின் பேரண்ட்ஸ் கூட ஃபாரீன் போயாச்சு.. இனிமே தான் 2 பேரும் சேரனும்.. அதுக்கு என்ன முயற்சி எடுக்கறார் என்பது மாதிரி காட்டி இருந்தால் கூட படம் தப்பி இருக்கும்.. 

4. செகன்ட் ஆஃப்ல ஹீரோவின் ஃபிரண்ட் கிட்டே ஹீரோயின் என்ன நடந்தது? என  கேட்கையில் அவர் ஒரு ஃபிளாஸ் பேக் சொல்றார்.. ஆனா அந்த ஃபிளாஸ் பேக்ல ஏகப்பட்ட காட்சிகள் ஸ்ருதி- தனுஷ் தனியா பேசிக்கற சீன்ஸ் எல்லாம் வருதே எப்படி?

5. தனுஷ் தன் அப்பாவிடம் தன் சொத்தை எல்லாம் மனைவி பேர்ல எழுதி வைங்க என கேட்கும்போது கூட தந்தை பிரபுக்கு எந்த டவுட்டும் வர்லையே, எப்படி? அட்லீஸ்ட் ஹீரோவின் ஃபிரண்ட்ஸ்க்கு ஃபோன் போட்டாவது கேட்டிருக்கலாமே?

6. தான் ஒரு சைக்கோ என்ற மேட்டர் மனைவிக்கு தெரிய வேண்டாம்னு ஹீரோ நினைக்கறது ஓக்கே.. அதுக்காக தற்கொலை லெவல்க்கு ஏன் இறங்கனும்  ?அதுக்குப்பேசாம மனைவி கிட்டே சொல்லி ட்ரீட்மெண்ட்டே எடுக்கலாமே?

7. க்ளைமாக்ஸ் சீன்ல ஹீரோயின் ஸ்ருதி எதுக்கு சுடிதார்ல ஒரு கையை பிடிச்சுக்கிட்டே அழறார்? லோ கட் தெரியக்கூடாதுன்னா? அதுதான் படம் பூரா காட்டியாச்சே.. ஹி ஹி 




http://www.tamilkey.com/wp-content/uploads/2012/01/Aishwarya-DhanushShruthi-Hassan.jpg


 மனதில் நின்ற வசனங்கள்


1.  எந்த ஸ்கூல் படிக்கறே?

 தாங்க்யூ

 அடிங்க்

2.  ஏய்.. மேக்கிங்க் ரொமான்ஸ் @ 1st சைட்டா?

ஆமா ஹி ஹி 

 ஆனா பார்ட்டி கிட்டே “ பெருசா” 1ம் இல்லையேடா.. 

3. அந்த 2 ஃபிகர்ல உயரமா இருக்கறது  சரி இல்லை.. குள்ளமா இருக்கறது ஓக்கே

4.  அய்யய்யே.. என்னடா? உன் ஆளு டியூஷன் எல்லாம் போறா? மக்கு ஃபிகரா?

5. நான் எல்லாம் ஸ்கூல்க்கு வர்றதே பெரிய விஷயம்.. என்னைப்போய் டியூஷனுக்கு வர வெச்சுட்டியே டா..

 டேய்.. படிக்கறாடா.. 

6. எங்கப்பாவுக்கு டை எதுக்குன்னே தெரியாது.. கழுத்துல கட்டாட்டி என்ன? கைல அல்லது பாக்கெட்ல எடுத்துட்டு போங்கறாரு..

7. நூடுல்ஸ் மாதிரி ஏண்டா நெளியறே.. பழைய 5 பைசா மாதிரி ஒரு மூஞ்சி.. 

8.  அட.. இன்னைக்கு எல்லாரும் நேரத்துலயே வந்துட்டீங்களே.. 

 சார்.. நீங்க லேட்.. 

9.  காஸ் லாஸ் சொல்லு.. 

 என்னது காஸ் லாசா? ( LAWS)

 இல்லை உன்னோட மதர்ஸ் லாவா?

10.  டேய்.. நீ பேசாதே.. நீ 3 மாசமா ஃபீசே கட்டலை.. 



http://www.cinemamasti.com/wp-content/uploads/Shruthi-Hassan-3.jpg

11.  இனிமே நான் போற பக்கம் எல்லாம் ஃபாலோ பண்றது.. என் பின்னாலயே சுத்தறது ( 2ம் 1 தான் ) இதெல்லாம் இருக்கக்கூடாது.. ஓக்கேவா?

 ம்.. நீ சொன்ன படி பண்றேன்.. உன் ஃபோன் நெம்பர் குடு ஹி ஹி 

12.  ஓக்கே என் ஃபோன் நெம்பர் 483201321 ( இந்த நெம்பருக்கு அடிச்சா ஸ்ருதி எடுப்பாங்கன்னு யாரும் ட்ரை பண்ணாதீங்க ஹி ஹி ஆல்ரெடி மீ ட்ரை ..  நோ யூஸ் அவ்வ்வ் )

 ஓக்கே

 ஆமா... நோட் பண்னலை?

இந்த மாதிரி விஷயம் எல்லாம் தானாவே மனசுல பதிஞ்சுடும் ஹி ஹி 

13.  இதென்ன புது டெக்னிக்? வீட்டுக்கு முன்னால நின்னு லவ் ஆர் நாட் லவ் நு டார்ச்சர் பண்றது ?  ( எல்லாம் ஐஸ்வர்யா ராயை சல்மான்கான் செஞ்ச டார்ச்சர் தான்)


அதெல்லாம் முடியாது.. இப்பவே டெல்.. சாயங்காலம் வரை நான் ஏன் வெட்டியா உனக்காக வெயிட் பண்னனும்?

14. ஹீரோயின் - நான் இதுக்கு முன்னால யார் கூடவும் இப்படி பழகுனதில்லை ( அப்போ சித்தார்த்?)

ஹீரோ - நாங்க மட்டும் டெயிலி இதே வேலையா இருந்தோமா? 

15. ஏய்.. டாடி?

 விடு.. அதான் அவர் கிட்டே பளார்னு அறை வாங்கியாச்சில்லை?

16. அவ்ளவ் தானா? ஒரு ஐ லவ் யூ கிடையாதா?

 எனக்கு தோணும்போது சொல்றேன் 

17. டேய்.. சொன்னா நம்ப மாட்டே.. என் கன்னத்துல ஒரு கிஸ் குடுத்துட்டு ஓடிப்போய்ட்டாடா.. 

 அப்டியா? யார் கூட?

18.  டேய்.. அவளை பார்க்காம ஒரு மாதிரியா இருக்குடா.. 

 ஏன்? வயிறு சரி இல்லையா?

19.  என்னடா? உன் ஆன்சர் பேப்பர்ல கொஸ்டின் பேப்பர்ல என்ன இருக்கோ அதை அப்படியே எழுதி வெச்சிருக்கே?

 என் மேலே தப்பில்லை சார்.. எல்லாம் இவன் செஞ்ச தப்பு அவனை பார்த்து தான் எழுதுனேன்.. 


20. டேய்.. இங்கே வா.. இந்தா மேத்ஸ்ல நீ 7 மார்க் தான்

 அடேங்கப்பா .. 7 மார்க்? நான் எதிர்பார்க்கவே இல்லை சார். 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM8rpbTuS5iI7qV3XN4g3a3yfmH9NdAMRpdFwJh7AkQbyuP7M7p0A6lOq8SdCVB9AWEWjaiRu6sFNM2G82cw3wRJSw8ekK9CUaAqZW4VNlN0tGRiTN14DM7U-YX8q8hyltgmPK-qJhIFaI/s1600/Shruthi+Hassan+Hot+Photo+Shoot+Stills_05.jpg

21. நீ எதுக்கு திருப்பதி போனே?

 ம் லட்டு வாங்க.. உன் கண்ணை பார்க்காம என்னால இருக்கவே முடியல

22.  என்னை அம்மா அடிச்சுட்டாங்க.. அதான் ஓடி வந்துட்டேன்.. இப்பவே வா மேரேஜ் பண்ணிக்கலாம்.. 

 அம்மா அடிச்சதுக்கெல்லாம் மேரேஜ் பண்னனும்னா நானெல்லாம் டெயிலி மேரேஜ் பண்ணனும்

23.  டேய் என்னடா.. 

 அப்பா உங்க கிட்டே ஒரு மேட்டர் பேசனும் லைஃப் மேட்டர்.. 

 சரி சரி வா.. நம்மகிட்டே 4 கம்பெனி இருக்கு

 அப்பா மொக்கை போடாதீங்க


எங்கே தான் கத்துக்கிட்டானோ எப்போ பாரு மொக்கை போடறது/.. ஆட்டையை போடறதுன்னே நமக்கு புரியாத பாஷைல பேசிட்டு

 அப்பா நான் மேரேஜ் பற்றி பேச வந்தேன்

 ஸ்ட்ரெயிட்டா மேரேஜா? லவ் எல்லாம் பண்ணலையா? 

 அதெல்லாம் 5 வருஷம் பண்ணி முடிச்சாச்சு

அடப்பாவி

24.  எனக்கு உன் லவ் இஷ்டம் இல்லை.. 

அப்போ நீ சம்பாதிச்சதை நீயே வெச்சுக்கிட்டு தாத்தா சம்பாதிச்சதை எனக்கு இப்பவே குடு

25. என்னடி? ஃபர்ஸ்ட் நைட் இது? சேலை எங்கே? நகை எங்கே?

 ம்க்கும்.. நீ மட்டும் வேட்டி கட்டி இருக்கியா?

சரி பாலையாவது குடு.. நீயே குடிச்சுட்டா?

26./ என்னடி? அறையறே?

 போகப்போக நான் யார்னு தெரியும்?

 ம் நல்ல ஃபர்ஸ்ட் நைட்

27.  யாரும் உன்னை கஷ்டப்படுத்த விட மாட்டேன்... 

 ம் எனக்குத்தெரியும்

28.  சார்.. சுண்டல்.. வேணுமா?

 ம்க்கும்.. அவ சூப் குடுத்தா. நீ சுண்டல் குடு.. 

 விடு சார்.. இந்த பொண்ணுங்களே இப்படித்தான் சூப் குடுப்பாங்க.. எனக்குக்கூட ஒரு பொண்ணு சூப் குடுத்துச்சு சார்

 அடப்பாவி.. 10 வயசு பையன் பேச்சப்பாரு

29.  நான் சைக்கோங்கற மேட்டர் என் மனைவிக்கு தெரிஞ்சுட்டா அப்புரம் அவ கண்ல லவ் இருக்காது.. பயம் தான் இருக்கும். அதை என்னால தாங்கிக்க முடியாது

30.. அப்பா, ஒரே பாட்டுல பணக்காரன் ஆக இது என்ன சினிமாவா? லைஃப் ப்பா




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe7O3Rz6BaubcaTFQw3rm38UoDuJSHZr1vJ24sQZg_aeNMqhSw2zXnXfJJbu3t5aMCw2a0KF1DlJ6UKm3OQo8xhrnf0wdupuht76X-YRzpyqtRdQVpL0xtz1zhJxwqBjM77D8rLjMzKwn-/s1600/Shruthi+Hassan+Hot+Photo+Shoot+Stills_03.jpg


ஏ செண்ட்டர்களீல் 25 நாட்கள் ஓடும்.. பி சி செண்ட்டர்களீல் ஒரு வாரம் தான் தாங்கும்

 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

. எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

 சி.பி கமெண்ட் - இடைவேளை வரை பார்த்துட்டு திரும்பிப்பார்க்காம ஓடியாந்துடுங்க ஹி ஹி 

 ஈரோடு ஆனூர்ல படம் பார்த்தேன்

 டிஸ்கி - இந்தப்பட விமர்சன டைட்டிலுக்கான விளக்கம்.. இந்தப்படத்தை பெருசா நம்பி இருந்த ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ், ஸ்ருதி 3 பேரும் திருப்பதி,திருத்தணி,பழநி இந்த 3 திருத்தலங்களில் போய் மொட்டை அடிச்சுக்கலாம் ஹி ஹி




http://www.chitramala.in/photogallery/d/576215-1/shruthi-hassan-hot-stills+_1__001.jpg

பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட எம் எல் ஏ.. அசினின் விசிட்டிங்க் கார்டு .. ( ஜோக்ஸ்)

http://www.bollywood.ac/wp-content/uploads/2011/07/asin-thottumkal-hot-photo-4.jpg

1.எம் எல் ஏ வா இருக்கற நீங்க ஒரு பெண்ணோட குத்தாட்டம் போட்டிருக்கீங்களே? ஏன்?

நான் ராமன், அதனால தான் ஒரே ஒரு பெண்ணுடன் ஆடுனேன், ஹி ஹி

-------------------------------

2. அழகுதான் விசிட்டிங் கார்டு! -அசின் # கிளாமர்தான் கிரீட்டிங்க் கார்டு - நயன் தாரா 

-------------------------------

3. பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்: ஜெ., வேண்டுகோள்# எங்க பிறந்த நாளையா? உங்க பிறந்த நாளையா? மேடம்?

-------------------------------

4. சார், உங்க மெரீனா படம் ஒரு தழுவல் படம்னு சொல்றாங்களே, நிஜமா?

ச்சே,ச்சே ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் கட்டிப்பிடிக்கற சீனே இல்லையே?

-----------------------------------

5. நயன் தாரா சினிமாவை விட்டு விலகினால் நல்ல பையனாக பார்த்து கட்டி வைப்போம் - நயனின் அம்மா # குறளரசன் நல்ல பையன் - டி ஆர் 

------------------------------------


6. டியர்! நீ ஐ லவ் யூ சொன்னதும் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்..


டேய், சும்மா ரீல் விடாதே, கரண்ட்டே இல்ல, எப்படி ஷாக் அடிக்கும்?

-----------------------------------
7. சார்,உங்க முன்னாள் மனைவி நடிச்ச படம் ரிலீஸ் ஆகி இருக்கே? பார்த்தாச்சா? 

டைரக்டர் - பேரைச்சொல்லாம இப்படி பொத்தாம்பொதுவா கேட்டா எப்படி?

-------------------------------

8. எம்ஜிஆர் பிறந்த நாளை அவர் உயிருடன் இருந்தவரை கொண்டாடவில்லை, எனவே நானும் நோ - ஜெ # மேடம், அவர் எல்லாரையும் மதிச்சார்,நீங்க?

----------------------------

9. உங்க படம் மூலம் என்ன சொல்ல வர்றீங்க? 

டெயிலி  வாக் (WALK)போனா மூலம் வராது # ஒரு நடிகையின் வாக்கு மூலம்

-----------------------------

10. எதுக்காக புது வெப்சைட் ஓப்பன் பணி இருக்கீங்க? 

கட்டதுர - ஓப்பன் பண்ணனும்னா புதுசாத்தான் பண்ணனும், பழசை எப்படி? ஹி ஹி

-------------------------------

http://img.india-forums.com/wallpapers/1024x768/24337-asin-thottumkal.jpg

11. வாழ்வில் வெற்றி பெற நீங்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுங்கள்-விஜய் # உங்கள் படம் வெற்றி பெற புதுக்கதையை செலக்ட் பண்ணுங்க ஹி ஹி 

---------------------------------

12. புரொடியூசர் ஆதி மூலம் - படத்தோட மூலக்கதையை எங்கே இருந்து சுட்டீங்க? 

சார், ரிஷி மூலம், ஆதி மூலம் எல்லாம் பார்க்கப்படாது

----------------------------------

13.  மெண்டல் பாண்டினு ஏன் பெயர் வெச்சீங்க?

கட்டதுர - MEN TELL என வெச்சா பிரச்சனை வராது, WOMEN TELL  வி”மெண்டல்”னா கும்மிடுவாங்களே?

---------------------------

14.கன் ஃபைட் காஞ்சனா - காதலிக்க பொண்ணுகள ட்விட்டர்லயா தேடுவீங்க?

காஞ்சு போன ஜனா - ட்விட்டர்ல தேடுவோம், அப்புறம் குவாட்டர்ல மூழ்குவோம்

-----------------------------

15. சாகச குட்டி -நாளைக்கு ஒரு நாள் மட்டும் பெண் ட்விட்டர்கள் தங்கள் முகத்தை டிபியாக வைப்பார்களா ???

ரிஸ்க் அவங்க எடுக்க தயார்.. ஆனா நாம?

-------------------------------


We respect road rules...!!??
16. காதலர் தினத்தை எங்கே கொண்டாடலாம்? பார்க்கா? பீச்சா?

வேணாம், அங்கே எல்லாம் கூட்டமா இருக்கும், லாட்ஜ் ரூம் ஓக்கே?

-----------------------------------

17. உனக்குத்தான் மேரேஜ் ஆகிடுச்சே, எதுக்கு #SingleOnFeb14 டேக் போடறே?


பிப்-14 மட்டும் சிங்கிளா,அப்போதான் சிக்கும் ஒரு டக்கீலா

----------------------------------

18. பெண்கள் மேக்கப் போடாமல் இருந்தால் என்ன ஆகும்?


ஒரு பய சீண்ட மாட்டான், எல்லாரும் பயம் இல்லாம நிம்மதியா நடமாடலாம் :)

-----------------------------------

19. காஞ்சனா - 143 - ஐ 140-ல் எழுதி தீர்த்து விட முடியுமா? அது வாழ்ந்து தீர்ப்பது.


ஜனா- மேடம், வாழ்ந்த பிறகு தீர்த்தா பரவால்ல..)

---------------------------------

20.கவுதம் -ஏன் பொண்ணுங்களை கழுவி ஊத்துபவர்கள்  அதிகம்? .


அசோக் -ஏன்னா ஆம்பளைங்களை கை கழுவி கழட்டி விடற பெண்கள் அதிகம்

------------------------------

 http://www.bollywoodactresswallpapers.net/wp-content/uploads/2011/11/Actress-Bollywood-Asin-Thottumkal-Nice-Face-Wallpaper-500x375.jpg

Thursday, March 29, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (30.3..2012)படங்கள் முன்னோட்ட பார்வை

http://ottran.com/wp-content/uploads/Dhanush-In-3-1.jpg 


1.  3 - கொலிவுட்டில் தனுஷ், ஸ்ருதி நடித்த “3” திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திரையுலகில் ஐஸ்வர்யா தனுஷ் முதன் முறையாக தன் கணவரை வைத்து “3” படத்தை இயக்கியுள்ளார். தனுசுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இவர்களுடன் சிவகார்த்திகேயன், இளையதிலகம் பிரபு நடித்துள்ளனர்.


பள்ளிப்பருவத்தில் ஆரம்பிக்கும் காதலைப்பற்றி இயக்குனர் ஐஸ்வர்யா கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


சி.பி - படத்தோட ட்ரெயிலரை பார்த்தா துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன ரெண்டையும் கலந்து கட்டி அடிச்சது போல் இருக்கு 


http://ottran.com/wp-content/uploads/04-shruthi4-300.jpg

 
“3” படத்தில் தனுஷ் பாடி அனிருத் இசையமைத்த கொலைவெறி டி பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்நிலையில் “3” படத்தின் முன்னோட்டக்காட்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


சி.பி - இந்த பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால பிக்சரைசேஷன் சரி இல்லைன்னா அதுவே நெகடிவ்வா அமைஞ்சுடும் , ரசிகர்கள் கடுப்பாகிடுவாங்க.. 

http://www.filmglitz.com/tamil/wp-content/themes/transcript/timthumb.php?src=http%3A%2F%2Fwww.filmglitz.com%2Ftamil%2Fwp-content%2Fuploads%2F2012%2F03%2Fmeeravudan_krishna_audio_launch_Stills-1.jpg&q=90&w=298&h=221&zc=1

2. மீராவுடன் கிருஷ்ணா - துவார்க மயி கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ஆர்.ஏ. விஜய் தயாரிக்கும் படம் மீராவுடன் கிருஷ்ணா. இதில் நாயகியாக ஸ்வேதா நடிக்கிறார்.ராதா, மனோபாலா, ஜிகினா ஜித்தன், ஷானா, எம்.ஆர்.ஏ. விஜய், ஆனத்ஜி, கணேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.கிருஷ்ணா இயக்குகிறார். அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார்.




இல்லறம் என்பது செக்ஸ் மட்டுமல்ல அதற்கும் மேலே புரிதல் என்கிற விஷயமும் இருக்கிறது என்ற கருவை மையமாகவைத்து இப்படம் தயாராகிறது.
 
 

கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் போது பிரச்சினை இல்லாத வாழ்க்கை அமைகிறது. ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் வாழ்க்கை நரகமாகிவிடும் என்ற கதை யோட்டத்தில் படம் தயாராகிறது என்றார் இயக்குனர்.
 
 
http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/meeravudan-krishna-audio-launch/wmarks/meeravudan-krishna-audio-launch18.jpg
 
 

ஒளிப்பதிவு: எம்.ஆர்.ஏ. விஜய், குகன், இசை: கே.கே. செந்தில்பிரசாத், எடிட்டிங்: சாய்சுரேஷ். 
 
சி.பி - பிரபுதேவா - ரம்லத்  நயன் தாரா கதை போல இருக்குன்னு பிரிவ்யூ ஷோ பார்த்த என் நண்பர் அசிஸ்டெண்ட் டைரக்டர் முருகன் மந்திரம் சொன்னாரு.. படம் பார்க்கலாம்னாரு 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwDgJChjITjBSn-n4VBEsgfr1FOttlF2_fy_V910mlPGeM7WSQrZ4ZGG4Xp4dF4H6U_hFKN2zkXd5PbLjZkYfxQeVot4rMAz7fESZcqBHA_Up3KO4SgiYl_i4auxpyDEqLgxYFIJzuXEw/s1600/oththa_veedu_20110814_1391703743.jpg
3. ஒத்தை வீடு -விஷ்ஷிங் வெல் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தேவ்‌ குமார் தயாரித்து வரும் படம் ‘ஒத்த வீடு’.இந்தப் படத்தில் புதுமுகங்கள் திலீப்குமார், ஜானவி ஜோடியாக நடிக்க, இவர்களுடன் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், திரவிய பாண்டியன், நெல்லை சிவா, இமா‌ன்‌, பந்தனா, ராதா, வாமன் மாலினி, மதுரை‌ சரோ‌ஜா‌, சண்‌முகம்‌, யோ‌கி‌ தே‌வரா‌ஜ்‌ உட்பட பலர் நடித்துள்‌ளனர்‌.
 
 
பாலு மலர்வண்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு வீ.தஷி இசையமைத்துள்ளார். ஸ்ரீரஞ்சன் ஒளிப்பதிவு செய்துள்‌ளா‌ர்‌. கே‌.இத்‌ரீ‌ஸ்‌, எம்‌. சங்‌கர் இருவரும்‌ இணை‌ந்‌து எடி‌ட்‌டி‌ங்‌ செ‌ய்‌துள்‌ளனர்‌.


இந்‌தப்‌ படம்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ பா‌லு மலர்‌வண்‌ணன்‌ கூறுகை‌யி‌ல்‌, “கி‌ரா‌மங்‌களி‌ல்‌ ஒத்‌த வீ‌டு பற்‌றி‌ நி‌றை‌ய கே‌ள்‌வி‌ப்‌ பட்‌டி‌ருப்‌பீ‌ர்‌கள்‌. அப்‌படி‌ ஒரு ஒத்‌த வீ‌ட்‌டி‌ல்‌ நடக்‌கும்‌ சம்‌பவம்‌தா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌. அந்‌த ஒத்‌த வீ‌ட்‌டு தலை‌மை‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ வடி‌வு‌க்‌கரசி‌, நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. ஒரு கி‌ரா‌மத்‌து தா‌யி‌ன்‌ வெ‌ள்‌ளந்‌தி‌யா‌ன மனமும்‌, அதனா‌ல்‌ ஏற்‌படும்‌ வி‌ளைவு‌களும்‌, பி‌ரி‌வு‌ம்‌, பரி‌வு‌ம்‌ தா‌ன்‌ படத்‌தி‌ன்‌ பலமா‌ன கா‌ட்‌சி‌கள்‌.


வடி‌வு‌க்‌கரசி‌யி‌ன்‌ மகனா‌க கதா‌நா‌யகன்‌ தி‌லீ‌ப்‌குமா‌ர்‌, மகளா‌க பந்‌தனா‌ நடி‌த்‌தி‌ருக்‌கின்‌றனர்‌. ஒருவர்‌ மீ‌து ஒருவர்‌ வை‌த்‌தி‌ருக்‌கும்‌ பா‌சத்‌தை பக்‌கத்‌து வீ‌ட்‌டி‌ல்‌ இருந்‌து பா‌ர்‌ப்‌பது போ‌ல அவர்‌கள்‌ வா‌ழ்‌ந்‌து கா‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt70ae-3ykOohEvGL4BcOoZ1qP9G0SuH1wq8GSXioKnOiEEJS4SmYB8vdAYihCYfQXNzMPUJlXqw3MiAVExLzD6xIXzM0jaMGoImoiAi7QTOzUzNoRyG83nvw04RM-imJQ5J6iBmQ24OQ/

தி‌லீ‌ப்‌குமா‌ருக்‌கு இது முதல்‌ படம்‌ என்‌றா‌லும்‌, பல படங்‌களி‌ல்‌ நடி‌த்‌து நி‌றை‌ய அனுபவம்‌ வா‌ய்‌ந்‌த நடி‌கர்‌ போ‌ல நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. வி‌ல்‌லி‌வலம்‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ வி‌நா‌யகர்‌ கோ‌வி‌லி‌ல்‌ கி‌ரகம்‌ எடுத்‌து தெ‌ருவழி‌‌யா‌க வலம்‌ வந்‌து, அம்‌மன்‌ கோ‌வி‌லி‌ல்‌ இறக்‌கி‌ வை‌க்‌கும்‌ கா‌ட்‌சி‌ எடுத்‌த போ‌து, அந்‌த கி‌ரா‌மத்‌து மக்‌கள்‌ அனை‌வரும்‌ தங்‌கள்‌ செ‌லவி‌ல்‌ மா‌வி‌ளக்‌கு எடுத்‌து ஊர்‌வலமா‌க வந்‌து நடி‌த்‌த தோ‌டு அல்‌லா‌மல்‌, தி‌லீ‌ப்‌குமா‌ரி‌ன்‌ வீ‌ரனா‌ர்‌ ஆட்‌டத்‌தை‌ பா‌ர்‌த்‌து வி‌யந்‌து போ‌னா‌ர்‌கள்‌. அந்‌த பா‌த்‌தி‌ரமா‌கவே‌ படத்‌தி‌ல்‌ வா‌ழ்‌ந்‌து அந்‌த கதா‌ப்பா‌த்‌தி‌ரத்‌தை‌  வா‌ழ வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. சண்‌டை‌க் ‌கா‌ட்சி‌யி‌லும்‌ இயல்‌பா‌க நடி‌த்து படப்‌பி‌டி‌ப்‌பு‌ தளத்‌தி‌ல்‌ கை‌ தட்‌டலை‌ வா‌ங்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.


கதா‌நா‌யகி‌ ஜா‌னவி, மும்‌பை‌ அனுபம்‌கெ‌ர்‌ தி‌ரை‌ப்‌படக்‌ கல்‌லூ‌ரி‌யி‌ல்‌ பயி‌ற்‌சி‌ பெ‌ற்‌றவர்‌. வசனங்‌களை‌ உள்‌வா‌ங்‌கி‌க்‌ கொ‌ண்‌டு, தனது தி‌றமை‌யை‌ நன்‌கு வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. ‌ தி‌லீ‌ப்‌குமா‌ர்‌, ஜா‌னவி‌‌ இருவரது நடி‌ப்‌பு‌ தி‌றமை‌யை‌ப்‌ பா‌ர்‌த்‌து 350 படங்‌களுக்‌கு மே‌ல்‌ நடி‌த்‌த வடி‌வு‌க்‌கரசி,‌ வி‌யந்‌து, ஆச்‌சர்‌யப்‌பட்‌டா‌ர்‌.‌


கதா‌நா‌யகனி‌‌ன்‌ பெ‌ரி‌யப்‌பா‌வா‌க, சா‌மி‌யா‌டி‌ வே‌டத்‌தி‌ல்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரவர்‌ அவரவர்‌ தெ‌ளி‌வு‌‌க்‌கு தகுந்‌த மா‌தி‌ரி‌ வா‌ழ்‌க்‌கை‌ நடத்‌துவது போ‌ல, அவரும்‌ அவரது தெ‌ளி‌வு‌க்‌கு தகுந்‌த மா‌தி‌ரி‌ பே‌சி‌ வா‌ழும்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவர்‌ அறி‌யா‌த வி‌ஷயங்‌களை‌ப்‌ பற்‌றி‌ யா‌ரும்‌ பே‌சி‌னா‌ல்‌ அவருக்‌கு கோ‌பம்‌ வந்‌து வி‌டும்‌. அப்‌படி‌ ஒரு போ‌ல்‌டா‌ன, கோ‌பக்‌கா‌ரரா‌க நடி‌த்‌து சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. அவரை‌ உசுப்‌பே‌ற்‌றும்‌   வே‌டத்‌தி‌ல இமா‌ன்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.


ஒச்‌சா‌யி‌ படத்‌தி‌ன்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளரும்‌, அந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ ஒரு முக்கி‌ய‌ வே‌டத்‌தி‌ல்‌ நடி‌த்‌த வருமா‌ன தி‌ரவி‌ய பா‌ண்‌டி‌யன்‌, இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பசுத்‌ தோ‌ல்‌ போ‌ர்‌த்‌தி‌ய பு‌லி‌ போ‌ன்‌ற ஒரு வி‌ல்‌லன்‌ வே‌டத்‌தி‌ல்‌ நடி‌த்‌து, அந்‌தப்‌ பா‌த்‌தி‌ரத்‌தை‌ வலி‌மை‌ படுத்‌தி‌ இருக்‌கி‌றா‌ர்‌.


ஆர்‌ட்‌ டை‌ரக்‌டர்‌ சண்‌முகம்‌, இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ ஒரு கோ‌பக்‌கா‌ர இளை‌ஞரா‌க நடி‌த்‌தி‌ருக்கி‌றா‌ர்‌. பு‌துமுகம்‌ பந்‌தனா‌, ரா‌தா‌, வா‌மன்‌ மா‌லி‌னி‌, மதுரை‌ சரோ‌ஜா‌ என பலர்‌ நடி‌த்‌தி‌ருக்‌‌கின்‌றனர்‌. கதா‌பா‌த்‌தி‌ரங்‌களுக்‌கு பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து நடி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌.




ஒரி‌ய மொழியி‌ல்‌ அறுபது படங்‌களுக்‌கு மே‌ல்‌ பணி‌யா‌ற்‌றி‌ய, ஸ்ரீரஞ்‌சன்‌ ரா‌வ் என்கி‌ற ஒளி‌ப்‌பதி‌வா‌ளரை‌, இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பயன்‌ படுத்‌தி,‌ அவரது  தி‌றமை‌யை‌ பயன்‌படுத்‌தி‌க்‌ கொ‌ண்‌டே‌ன்‌. அதே‌ போ‌ல‌ ‌ கே‌ரள அரசி‌ன்‌      சி‌றந்‌த இசை‌யமை‌ப்‌பா‌ளருக்‌கா‌ன வி‌ருது பெ‌ற்‌ற வீ‌.தஷி‌யி‌ன்‌ இசை‌யி‌ல்‌ ஆறு பா‌டல்‌கள்‌ படத்‌தி‌ல்‌ இடம்‌ பெ‌றுகி‌றது. எல்‌லாமே‌ சூ‌ழ்‌நி‌லை‌க்‌கு தகுந்‌த மா‌தி‌ரி‌ எழுதப்‌ பட்‌ட பா‌டல்‌கள்‌.

தா‌னு கா‌ர்‌த்‌தி‌க்‌ எழுதி‌ய வீ‌ரனா‌ர்‌ பா‌டல்‌ பட்‌டி‌ தொ‌ட்‌டி‌யெ‌ங்‌கும்‌ பே‌சப்‌படும்‌. அந்‌த அளவு‌க்‌கு பா‌டலி‌ன்‌ டெ‌ம்‌போ‌ இயல்‌பா‌கவே‌ அமை‌ந்‌தி‌ருக்‌கி‌றது. எனக்‌கு தெ‌ரி‌ந்‌து, வீ‌ரன்‌‌ பா‌ற்‌றிய‌ பா‌டல்‌ இதுவரை‌ வெ‌ளி‌வந்‌ததி‌ல்‌லை என நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌. அதே‌ போ‌ல பட்‌டுக்‌கோ‌ட்‌டை‌ சண்‌முகசுந்‌தரம்‌,  வா‌ட்‌டா‌குடி‌ ரா‌ஜரா‌ஜன்‌, ‌ சி‌ங்‌கப்‌பூ‌ர்‌ சொ‌.சி‌வக்‌குமா‌ர்‌, இனி‌யதா‌சன்‌ போ‌ன்‌றவர்‌கள்‌ எழுதி‌ய பா‌டல்‌களும்‌ பெ‌ரி‌ய அளவி‌ல்‌ பே‌சப்‌படும்‌. ஒரு    பா‌டலை‌ சி‌ங்‌கப்‌பூ‌ரி‌ல்‌ எடுக்‌க இருக்‌கி‌றே‌‌ன்‌.

வி‌த்‌தி‌யா‌சமா‌ன நடனத்‌தை‌ டா‌ன்‌ஸ்‌ மா‌ஸ்‌டர்‌ ஈஸ்‌வர்‌ பா‌பு‌, ரமே‌ஷ்‌ ரெ‌ட்‌டி‌‌அமை‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌‌. பரபரப்‌பா‌ன சண்‌டை‌க்‌ கா‌ட்‌சியை‌ ஸ்‌டண்‌ட்‌ மா‌ஸ்‌டர்‌ ‌ தே‌ஜா‌ பயி‌ற்‌சி‌ அளி‌க்‌க படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌.

http://www.cinemaaajtak.com/wp-content/uploads/2012/03/Janavi-At-Oththa-Veedu-Press-Meet-Event-New-Images-2-284x378.jpg


கி‌ரா‌மத்‌து கதை‌ என்‌பதா‌ல்‌, கா‌ஞ்‌சி‌பு‌ரம்‌ அருகே‌ உள்‌ள வி‌ல்‌லி‌வலம்‌  கி‌ரா‌மத்‌தி‌லும்‌, தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ அருகே‌ உள்‌ள வடசங்‌கந்‌தி‌ கி‌ரா‌மத்‌தி‌லும்‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌.

மக்‌களி‌டம்‌ நா‌ன்‌ பா‌ர்‌த்‌த வி‌ஷயங்‌களை‌ எடுத்‌து, அதை‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌. நா‌ன்‌ எதை‌யு‌ம்‌ கற்‌பனை‌யா‌க கொ‌ண்‌டு வரவி‌ல்‌லை‌. எல்‌லா‌மே‌ இங்‌கி‌ருந்‌து எடுக்‌கப்‌பட்‌டதுதா‌ன்‌. கலை‌, இலக்‌கி‌யம்‌ யா‌வு‌ம்‌ மக்‌களுக்‌கா‌கத்‌தா‌னே‌!.


இந்‌தப்‌ படம்‌ தி‌ரை‌யி‌ல்‌ ஓட ஆரம்‌பி‌க்‌கும்‌ போ‌து, முதல்‌ கா‌ட்‌சி‌யி‌லே‌யே‌  அந்‌த கி‌ரா‌மத்‌துக்‌குள்‌ செ‌ன்‌று அங்‌கு தங்‌கி‌, அந்‌தக்‌ கதா‌ப்‌பா‌த்‌தி‌ரங்‌களுடன்‌ பே‌சி‌ பழகி‌, வா‌ழ்‌ந்‌து, படம்‌ முடி‌யு‌ம்‌ போ‌து அந்‌த கி‌ரா‌மத்‌தை‌ வி‌ட்‌டு வெ‌ளி‌யே‌ வருகி‌ற உணர்‌வை‌ ஏற்‌படுத்‌தும்‌ படமா‌க ரசி‌கர்‌களுக்‌கு இருக்‌கும்‌ என நம்‌பு‌கி‌றே‌ன்‌…” என்‌று கூறி‌னா‌ர்‌.

 http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_09_w800_h537_600024.jpg
4 . ஒத்தைக்குதிரை - இந்தப்படம் ரிலீஸ் ஆகுதே ஒழிய இது பற்றி எந்த தகவலும் கூகுள்ல கிடைக்கலை.. ஒரு வேளை டப்பிங்க் படமா இருக்கலாம்.. ஆனா ஸ்டில்ஸ், போஸ்டர் எல்லாம் பார்த்தா ஏதோ கொலை கதை போல.. 

http://www.musicrooms.net/files/movies/Wrath_Of_The_Titans_355445987.jpg


5.  WRATH OF TITANS - இது  முதல் பாகமே செம டப்பாவா இருந்துச்சு.. 2 வது பாகம் நெட்ல பார்த்தவங்க அய்யோ அம்மான்னு சொல்லிட்டாங்க.. சோ எல்லாம் உஷாரா இருந்துக்குங்க..  ஈரோடு வி எஸ் பில ரிலீஸ்

போடா போடி ??- தனுஷ், 9 தாரா ?!! - வேட்டை மன்னன் சிம்பு பேட்டி காமெடி கும்மி


http://www.innisaitamil.com/images/cd_images/1323747983_vettai%20mannan.jpg


அமெரிக்கக் குளுமை இன்னமும் படிந்திருக்கிறது சிம்பு முகத்தில்!  'வேட்டை மன்னன்படத்துக்காக பின்னி மில்லில் பின்னி எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் காதல், லவ் ஆன்தம், தனுஷ், கொலவெறி, ஸ்ருதி, ஸ்டார் கிரிக்கெட், கல்யாணம்... இன்னும் நிறையப் பேசியதில் இருந்து...  


சி.பி -பின்னி மில்லுல பின்னிட்டு இருந்தாரா? எதை? ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியோட ஜடையையா?


1.  '' 'லவ் ஆன்தம்ஆல்பம் ரெடியா?''

சி.பி - லவ் பண்றவங்க எல்லாருமே தாடி வெச்சுட்டு தம் அடிக்கனும்கறதை சிம்பாலிக்கா சொல்றதுதான் லவ் ஆன்”தம்”ம்மா?



''அது ரெண்டு மாச உழைப்பு. 'ஒரு பாட்டோட நிறுத்த வேணாம். முழு ஆல்பமாவே பண்ணிரலாம்னு முடிவு பண்ணி இறங்கிட்டேன். புரொமோஷனுக்காக வெளியான ரெண்டு நிமிஷப் பாட்டுக்கே பாராட்டு அள்ளுச்சு. முழு ஆல்பத்தைச் சிலருக்கு மட்டும் போட்டுக் காமிச்சேன். 'செம சூப்பர்னு மனம் திறந்து பாராட்டினாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல ரிலீஸ். ரொம்பப் படபடப்பா, ஆர்வமா இருக்கு. எல்லாம் சரியா அமைஞ்சா, இந்த ஆல்பம் எனக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கித் தரும்!''


சி.பி - என்னது? சிம்பு அண்ணனுக்கு நல்ல பேரா? குறளரசன் திகைப்பு.. டி ஆர் நகைப்பு.. ஹி ஹி 


http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/10/Hansika_gangster_Vettai-Mannan.jpg
2. ''நீங்க இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க. ஆனா, 'சிம்பு ஷூட்டிங் வராம அமெரிக்கா போய் உட்காந்துட்டாரு. தயாரிப்பாளர்கள் கொதிச்சுப்போய் இருக்காங்கனுல இங்கே செய்தி பரவிக்கிடக்கு?''  

''நான் எது பண்ணாலும் தப்பாப் பேசுறவங்க கௌப்பிவிடுறதுதான் இதுவும். 'வேட்டை மன்னன்தயாரிப்பாளர்கிட்ட 'லவ் ஆல்பம்வேலைகளுக்காக அமெரிக்கா போறேன்னு முன்னாடியே சொல்லிட்டுத்தான் கால்ஷீட் தேதி கொடுத்தேன்

சி.பி - அதானே, அமெரிக்கா எப்போதான் சுத்தி பார்க்கறது?


'போடா போடிபடத்தின் வெளிநாட்டு லொகேஷன் களின் படப்பிடிப்புக்கு உடனே அனுமதி கிடைக்கலை. சரி... சென்னைக்குக் கிளம்பு வோம்னு பார்த்தா, இங்கே ஸ்டிரைக். 'கிடைச்ச நேரத்தை ஆல்பம் வேலைகளுக் குப் பயன்படுத்திக்கலாம்னு இறங்கிட் டேன். எனக்குச் சம்பளம் கொடுக்கும் எந்தத் தயாரிப்பாளரும் என்னைப் பத்தி எந்தப் புகாரும் பண்ணலை. மத்தவங்களைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? இன்னும் எவ்வளவுதான் பேசுறாங்கனு பார்க்கலாம்!''

சி.பி - நல்ல வேளை.. நீங்க கெட்டவர்ங்கறதுக்காகத்தான் உங்க பட டைட்டிலே கெட்டவன்னு வெச்சாங்களா?ன்னு யாரும் கேட்கலை..


http://static.sify.com/cms/image//lf0tKCchiaa.jpg


3. ''என்னதான் சமாதானம் சொன்னாலும் 'போடா போடிஆரம்பிச்சு ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சே... இது அதீத தாமதம்தானே?''  



'' 'போடா போடிரொம்ப ஸ்டைலான படம். சென்னையில் எடுக்கும் படங்களுக்கு அழகு சேர்க்க வெளிநாட்டில் டூயட் வைப்போம். ஆனா, இந்தப் படம் முழுக்கவே வெளிநாட்டில் நடக்கும் கதை. 'ஹம் ஆஃப் கே ஹைன் கௌன்மாதிரி கலர்ஃபுல்லான படம்.

சி.பி -சுத்தம்.. அப்போ அந்தப்படத்தோட அப்பட்டமான தழுவலாத்தான் இருக்கும்.. கேட்டா ஜ்ஸ்ட் இன்ஸ்பிரேஷன்...பாங்க


 அப்போ எவ்வளவு வேலை இழுக்கும்? படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குறதே பெரிய வேலையா இருக்கு. வெய்ட் பண்ணுங்க... 'விண்ணைத் தாண்டி வருவாயாபடத்தில் என்னைப் பிடிச்ச மாதிரி, இந்தப் படத்திலும் எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!''

சி.பி - விண்ணைத்தாண்டி வருவாயா? ஹிந்தி வர்ஷன்ல ஊத்திக்கிச்சாம்.. இதான் நல்ல சான்ஸ்.. விடாதீங்க.. ஹிந்தி ரீமேக்ல நான் நடிச்சிருந்தா சூப்பர் ஹிட் ஆகி இருக்கும்னு அறிக்கை விடுங்க.. இப்போ அது தான் ஃபேஷன்..  

http://2.bp.blogspot.com/_T1vzYiWcy7U/SMs-ocq_LAI/AAAAAAAAXjA/MdpYpjWIq0o/s1600/Podaa-Podi-Movie-stills-simbu%2B(9).jpg


4. ''முன்னாடி ஸ்டார் கிரிக்கெட்னா முதல் ஆளா நிப்பீங்க... இந்த சீஸன்ல ஆளைப் பார்க்க முடியலையே?''  


''இப்போ ஜெயிச்ச செட்ல பலரை டீமுக்குள் கொண்டுவந்ததே நான்தான். டீம் வொர்க்தான் கிரிக்கெட்டின் அழகு. ஆனா, அதைப் புரிஞ்சுக்காம சிலர் என்னை டாமினேட் பண்ணப் பார்த்தாங்க. எனக்கு எதிரா சில வேலைகள் பார்த்தாங்க. முக்கியமான முடிவுகள்ல வேணும்னே என்னைப் புறக்கணிச்சாங்க. அதான் நான் ஒதுங்கிட்டேன். ஆனா, அடுத்த முறை நிச்சயம் டீம்ல இருப்பேன். கிரிக்கெட்டையும் என் னையும் பிரிக்க முடியா துங்க!''


சி.பி - கிரிக்கெட் என்ன நயன் தாராவா?


5. ''இவ்வளவு நாள் லவ் பண்ணாம இருக்கிறது கஷ்டமா இருக்குமே?''


சி.பி - வாரத்துக்கு வாரம் வித்தியாசம் அதுதான் சிம்பு ஹி ஹி ஆ:ளை அடிக்கடி மாத்து... நம்பி வர்ற ஃபிகரை ஏமாத்து.. இதுதான் அண்ணன் பாலிசி

''இல்லைங்க... அமெரிக்காவுல என் கஸின் வீட்ல ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவனுக்குச் சாதம் ஊட்டுறதுல ஆரம்பிச்சு நாப்கின் மாத்துறது வரை நானே எல்லாம் பார்த்துக்கிட்டேன். அவன்கூடவே விளையாடிட்டு இருந்தப்ப, நானே என்னை ஒரு சின்னப் பையன் மாதிரி ஃபீல் பண்ணேன். அப்போதான் சட்டுனு அப்பா ஆகணும்... மகனைப் பார்த்துக்கணும்னு ஆசை வந்துச்சு.


உண்மையைச் சொன்னா, கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு நம்பிக்கையும் இல்லை; ஆசையும் இல்லை. கல்யாண வாழ்க்கை மேல சின்ன பயம்கூட இருக்கு. ஆனா, 'அப்பா ஆசைக்காகத்தான் கல்யா ணம் பண்ணிக்கலாம்னு தோணுது. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். காதல் கல்யாணம்தான் ஆசை. அது ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். ஆனா, ஒரு வருஷத்துக்குள் காதல் வருமான்னு தெரியலை. பார்க்கலாம்!''

http://www.kollytalk.com/wp-content/uploads/2012/03/Varalaxmi-Sarathkumar-Celebrates-Womans-Day-3.jpg
போடா போடி படத்தில் வரலட்சுமி சரத்குமார் ( சரத்குமாரின் மகள்)
6. ''வீட்லயும் பொண்ணு பார்ப்பாங்களே... உங்க கண்டிஷன்கள் என்ன?''


சி.பி - என்ன புது கண்டிஷன்? எல்லாரும் சொல்றதுதான்.. பொண்ணு குடும்பப்பாங்கா இருக்கனும்.. அவங்க வீடே பேங்க்கா இருக்கனும்.. வீட்டுக்கு புருஷன் மிட் நைட்ல லேட்டா வந்தாலும் கண்டுக்கக்கூடாது.. 


''பொண்ணு அழகா இருக்கணும். நல்ல சிவப்பா இருக்கணும். ஏன்னா, எனக்கு அழகான குழந்தை வேணும். நான் சரியாப் படிக்காதவன். அதனால, பொண்ணு நல்லாப் படிச்சிருக்கணும். சினிமாபத்தி கொஞ்சம் தெரிஞ்சிருக்கணும். என்னைப் பார்த்து பயப்படக் கூடாது. தைரியமா, தன்னம்பிக்கையோட இருக்கணும். சுருக்கமா சொன்னா, ஒய்ஃப் வந்தா... என் லைஃபே மாறணும். அப்படி ஒரு தேவதையா இருக் கணும்!''




Andrea is not Simbus heroine

7. தனுஷ் மேல் கொலவெறியா?


''தனுஷோட 'கொலவெறிக்குப் போட்டியாதான் 'லவ் ஆன்தம்ஆல்பம் பண்றீங்களா?''

''ஒரு பாட்டு சந்துபொந்தெல்லாம் ஹிட் ஆகுற துக்கு, 'நாக்க முக்க’, ' போடுனு ஏற்கெனவேநிறைய உதாரணங்கள் இருக்கு. 'லூஸுப் பெண்ணேனு காதல் தோல்வி ஃபீலிங் பாட்டு டிரெண்டை ஆரம்பிச்சு வெச்சதே நான்தான். இப்போ நேரம் கிடைச்சதால், 'லவ் ஆன்தம்பண்றேன். இதை தனுஷ§க்குப் போட்டினு சொன்னா, அது தப்பு. அப்படி எல்லாம் சீப்பா நடந்துக்கிற ஆள் நான் இல்லை. சொல்லப்போனா, என் ஆல்பம் பேரைப் பார்த்து காப்பி அடிக்கிறவங்க தான் இங்கே இருக்காங்க!''


சி.பி - அண்ணன் எடுத்த படம் எல்லாம் காப்பி.. இதுல அண்ணனையும் காப்பியா? அவ்வ்வ்  .. லூசுப்பெண்ணே.. பாட்டு செம ஹிட் தான் .. ஆனா பிக்சரைசேஷன் மகா மட்டம்.



8. இப்போ தனுஷ்தான் மன்மதனா?




''வழக்கமா ஹீரோயினுடன் காதல்னு உங்க பேர்தான் அதிகமா கிசுகிசுக்கப்படும். இப்போ அந்த இடத்துல தனுஷ் இருக்காரோ?''  


''அவர் லவ் மேட்டர் பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது.



சி.பி - என்னாது? அவரோட லவ்வர் ஒரு மேட்டரா? என்னா பேச்சு இது ? ராஸ்கல்? ஏதோ சித்தார்த்தை 2 வருஷம் லவ் பண்ணாங்க.. அப்புறம் தனுஷை 1 வருஷம்.. இப்போ மறுபடி சமாதானம் ஆகி சித்தார்த்தை லவ்விங்.. 3 படம் ஹிட் ஆனா மறுபடி தனுஷ்க்கு ஒரு சான்ஸ் தர்றாராம் ஹி ஹி மற்றபடி அம்மணி நெம்ப நெம்ப நல்ல டைப்ப்ங்கோவ்

 
 என்னைப் பத்தி எதுவும் தப்பா நியூஸ் வர்றதில்லைங்கிற வரை எனக்குச் சந்தோஷம். முன்னாடி விகடன்லயே என்னைத்தான் போட்டு பரேடு எடுப்பீங்க. இப்போ 'வலைபாயுதேகமென்ட்டில் மட்டும்தான் நாம அடிபடுறோம். 'என்னடா பையன் எந்தத் தப்பும் பண்ணாம சும்மா இருக்கானேனு வீட்ல பயந்துட்டாங்கபோல. பரபரனு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நானும் சரினு சொல்லிட்டேன். எவ்வளவு நாள்தான் தனியாவே சுத்திட்டு இருக்கறது?''


சி.பி - விகடன் தாத்தா சைக்கிள் கேப்ல வலை பாயுதே பகுதியை விளம்பரம் பண்ணி எடுத்து அள்ளி விடறாங்க..அப்படி எல்லாம் அவர் சொல்லி இருக்கவே மாட்டார்.. இதுதான் இடைச்செருகல் ஹி ஹி 


http://www.tamilkey.com/wp-content/uploads/2011/07/nayanthara-simbu-0424-550.jpg


9. ''அப்போ உங்களைத்தான் எல்லாரும் திட்டிட்டு இருந்தாங்க. இப்போ நயன்தாரா பிரபுதேவாகிட்ட இருந்தும் விலகிட்டாங்களே?''



''யார் பண்ண தப்புக்கோ... நாம திட்டு வாங்குறது நம்ம ராசிங்க. நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு!''

சி.பி - மைன்ட் வாய்ஸ்ல எங்கே இருந்தாலும், யார் கூட இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்னு சொல்ற மாதிரி கேட்குது ஹி ஹி



10. ''நயன்தாராகூட சேர்ந்து நடிப்பீங்களா?''


''நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் 'அவங்கதான் வேணும்னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன். நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் கொண்டுவரக் கூடாது!''


சி.பி - ஆர்யா பற்றி எதுவுமே கேட்கலையே? என்ன நிருபர் நீங்க? குமுதம் பாருங்க.. இந்த வாரம்.. ஆர்யா பற்றி அண்ணன் கிட்டே கேட்டு பொளந்து கட்டி இருக்காங்க..  ( 9 தாரா யா யா யா யா யாயா-னு 6 டை, ஆர்யா ( 6 யா) பச்சை குத்தி இருக்காராம் ஹி ஹி 6 யா + 9 தாரா = 69 ஜென்மக்காதல்கள் ஹி ஹி 

http://www.extramirchi.com/gallery/albums/south/actors/Simbu_nayanthara/Simbu_nayanthara__Hogenakkal_fast2.jpg


அண்ணே.. பேப்பர் தலைகீழா இருக்கு ஹி ஹி

ஒவ்வொரு காதலனும் காதலியிடம் சொல்லும் ஒரே பொய் என்ன?


1ரேணு - ஆஃபீஸ் போய்ட்டு வர்றேன் டாடி.. 

ஜாக்கிரதையாப்போய்ட்டு வாம்மா,எவன் கண்லயாவது பட்டு அவன் லைஃபை கெடுத்துடாதே?

--------------------------------

2.  கை கோர்த்து நடக்க விரும்புகிறது காதல், கை கொடுத்து தூக்கி விடுகிறது நட்பு

---------------------------------

3. வாழ்க்கை என்பது ஒரு அரிய பயணம், அது மேப்புடன் வருவதில்லை, நாம் தான் நம் சொந்த வழிகளின் மூலம் இலக்கை அடைய வேண்டும்

------------------------------

4 தனித்து போட்டியிட தே.மு.தி.க., முடிவு : # தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன். 

---------------------------

5.சி.டி., ஆதாரத்தை வெளியிடுவேன்: நடிகை சோனா # அட போம்மா!இப்படியே தான் 4 நாளா சொல்றீங்க!

----------------------



6.புனிதமான கேரக்டர் கிடைத்தால் நயன் தாரா நடிப்பார் - பிரபுதேவா # அப்போ இத்தனை நாளா  கேவலமான கேரக்டர்லயா நடிச்சார் ? 

--------------

7. இன்றைய செய்தி - வீடியோ ஆதாரத்தை கமிஷனரிடம் கொடுத்தார் சோனா. நாளைய செய்தி - கமிஷனர் வீடியோ கேசட்டை பார்த்த போது கைதானார்

----------------------------------

8. ஆ ராசா - ஹெலிகாப்டரில் நான் ஸ்விட்சர்லாந்து சென்ற போது என் மணி பர்ஸ் ஸ்லிப் ஆகி கீழே விழுந்தது, அதுவே ஸ்விஸ் பேங்க் என அழைக்கப்படுகிறது

------------------------------



9. நடிகை சோனா மீது கமிஷனர் குற்றச்சாட்டு, எதிர்பார்த்த அளவு கேசட்டில் ஏதும் இல்லை # அண்ணே , என்ன எதிர்பார்த்தீங்க?

------------------------------

10. காஜலை தேடி வரும் கில்மா படங்கள்...! வாய்ப்புகள் # போஸ்டர்ல காஜல் நடிக்கும் அஜால் குஜால் படம்னு விளம்பரம் பண்ணலாம்.!


---------------------------



11.என் கையால்அடிவாங்குபவன் மகாராஜாஆவான் - கேப்டன் , என்கையைபிடிச்சு இழுத்தவன் ஒரே நாளில் ஃபேமஸ் ஆவான் - சோனா # அரிய வாய்ப்பு  நழுவ விடாதீர்

-------------------------------------

12.லஞ்சம் என்பது அன்பளிப்பின் மறுஊ மொழி என்பவர்கள் அன்பை கேவலப்படுத்துகிறார்கள்

-----------------------------------

13. மற்றவர் எதிர்காலத்தை கணிப்பதாக கூறப்படும் கிளி ஜோசியனும் சரி ,  கிளியும் சரி பிரகாசமான எதிர்காலம் கொண்டா இருக்காங்க?

-------------

14. நீ கூந்தலில் சூடும் ரோஜா உன்னை விட அழகில் குறைந்தது என்பதால்தான் உன் முகத்துக்குப்பின் ஒளிந்துகொள்கிறதோ?

-------------------------------

15. நீயே என் முதலும், கடைசியுமான காதலி என்பதே ஒவ்வொரு காதலனின் முதல் பொய்யாக இருக்கிறது

--------------------------------------

16.காலில் ஈரம் படாமல் கடற்கரையில் நடை பயின்றவர்கள் உண்டு, ஆனால் கண்களில் ஈரம் தொடாமல் வாழ்க்கையை கடந்தவர் இருக்க முடியாது

--------------------------------

17.யார் தவறு செய்தார்கள் என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் , என்ன தவறு என்பதை முதலில் பார் # ஆஃபீஸ் மீட்டிங்கில் டேமேஜர்

-------------------------------

18 வாழ்க்கை என்பது ஓவியம் அல்ல,மாற்றி மாற்றி வரைய, அது சிற்பம் போல, செதுக்கினால் செதுக்கியதுதான் -கு அழகிரிசாமியின் சிறுகதையிலிருந்து

--------------------------------

19 காதல் என்பது ஸ்டேப்ளர் பின் செட் போல, அட்டாச் பண்றது ஈஸி, அதை பிரிக்கறது கஷ்டம்

--------------------------------

20. ஐ லவ் யூ என சொல்ல 3 செகண்ட்ஸ் போதும், அதை விளக்க 3 மணிநேரம் ஆகும், அதை நிரூபிக்க வாழ்நாள் முழுதும் தேவைப்படுது

-------------------------------
பனங்கிழங்கு ...அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே

21. உன் கண்கள் கண்ணீர்ப்பூக்களை உதிர்க்கும்போது முதலில் ஓடி வருபவர் நீ நேசிப்பவரா? உன்னை நேசிப்பவரா?

--------------------------------

22. டியர்,நான் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவன்னா நம்ப மாட்டேங்கறியே.. ஏன்? 

டெயிலி பீச்ல மட்டும் 32 ரூபா செலவு பண்றியே?

---------------------------------
23 ஒருவரை நேசிக்க 1000 காரணங்கள் இருந்தாலும் அவர் ஒரு சின்னத்தவறு செய்தாலும் அவரை வெறுக்க நினைக்கிறது மனித மனம்

-----------------------------

24. எழுத்துக்களாய் நான் சிதறிக்கிடந்தேன்.. நீ என்னைப்பார்த்தாய்! நான் கவிதை ஆகி விட்டேன்

----------------------------------

25. கொதிக்கும் வெய்யில் மணலில் கால்கள் நடக்கையில் ஒதுங்க நிழல் தேடும், அப்படித்தேடப்பட்ட நிழல்தான் உன் அன்பு!

-------------------------------

26 சிரிப்பு என்னும் சாவி தொலைந்து விட்டால் சந்தோஷம் என்னும் வீடு பூட்டியே கிடக்கும்

---------------------------

27.தன்னை நேசிப்பவர் ,தான் நேசிப்பவர் மகிழ்ச்சிக்கு தான் காரணம் இல்லாவிட்டாலும் அவர்கள் மகிழ்ச்சிக்காக ஏங்கி இருந்தால் அதுவே உண்மையான அன்பு

--------------------------

28 மறைந்த சூரியன் மீண்டும் உதய சூரியனாக வரும் - குஷ்பூ ட்விட்டரில் # மேடம், இது தத்துவமா? அபாய அறிவிப்பா?

-----------------------





Wednesday, March 28, 2012

கர்ணன் - நன்றி உணர்ச்சியின் நாயகன் - சினிமா விமர்சனம்

http://cinegilma.com/wp-content/gallery/karnan-movie-stills/karnan-movie-stills-2.jpg 

புராணக்கதைகள் உண்மையில் நடந்த சம்பவமா? அல்லது கற்பனைக்கதையா? என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் அதில் மனிதன் கற்றுக்கொள்ள  என்ன இருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்க்கைப்பாடத்துக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வதே நல்லது.. அதைத்தான் நம் முன்னோர்களும் விரும்பினார்கள்..

கொடை வள்ளல் என்றே அறியப்பட்ட கர்ணனின் நன்றி உணர்ச்சி, செஞ்சோற்றுக்கடனுக்காக அவனது தியாகங்கள் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான கதையே கர்ணன் என்னும் இந்த பிரம்மாண்டமான படம்.. 

குந்தி தேவிக்கு ஒரு வரம். அவர் மனதில் யார் நினைக்கிறாரோ? அல்லது யார் மேல் ஆசைப்படுகிறாரோ அவரே அவரது கணவராக வாய்க்கப்பெறுவார்.. விளையாட்டாக சூர்ய பகவானை கணவனாக அடைந்தால் எப்படி இருக்கும்? என்று மனதில் நினைக்க சாட்சாத் சூரிய பகவானே நேரில் வந்து தரிசனம் தந்து ஒரு குழந்தையையும் இன்சிடெண்ட்டாக தந்து செல்கிறார் .. 

 இப்போ குந்தி கன்னித்தாய்.. குழந்தையை பேழையில் வைத்து ஆற்றில் விடு விடுகிறார்.. அதை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். 

25 வருடங்கள் கழித்து.. வாலிபன் ஆனதும் தனது வளர்ப்புப்பெற்றோர்கள் பேசிக்கொண்டிருக்கையில் எதேச்சையாக அவர்கள் பேச்சை கேட்டு கர்ணன் உண்மை அறிகிறான்.. 

ஒரு வில் வித்தைக்கான போட்டியில் அர்ஜூனை விட கர்ணன் சிறந்த வில்வித்தை வீரன் என்று நிரூபணம் ஆகிறது.. ஆனால் அர்ஜீணன் சத்திரியன்.. கர்ணன் தேரோட்டியின் மகன்.. இந்த ஒரே ஒரு வாதத்தை முன் வைத்து கர்ணனை பலர்  பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்துகின்றனர். 

தக்க சமயத்தில் துரியோதணன் ராஜ்ஜியம் கொடுத்து அவனை மன்னன் ஆக்கி கவுரவம் காப்பாற்றுகிறான்.. அந்த நன்றிக்கடனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் துரியோதனனுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பதாக சபதம் செய்கிறான் கர்ணன்.

தேவேந்திரன் மாறு வேடத்தில் கர்ணனிடம் வந்து அவனது கவச குண்டலத்தை  தானமாக பெறுகிறான்.. யார் வந்து என்ன கேட்டாலும் மறுக்காமல் தானம் செய்யும் தயாள குணம் படைத்தவன் அவன்.. 

 அர்ஜூணனை ஒழிக்க பிரம்மாஸ்திரம் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். அது பற்றி தெரிந்த முனிவர்  அந்தணர்களுக்கு மட்டுமே அதை கற்றுக்கொடுப்பார்.. சத்தியர்களுக்கு கற்றுத்தர மாட்டார்... எனவே தான் ஒரு அந்தணர் என  பொய் சொல்லி கர்ணன் அந்த வித்தையை கற்றுக்கொள்கிறான்.ஒரு சமயம் அந்த முனிவர் கர்ணனின் மடியில் அமர்ந்து உறங்கும்போது  ஒரு வண்டு வந்து கர்ணனின் தொடையில் குத்திக்கிழிக்கிறது.. அவன் அசைந்தால் குருவின் தூக்கம் கெட்டு விடும் என்பதால் கர்ணன் அமைதியாக வலியைப்பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான்.. 


 கொட்டிய ரத்தம் பட்டு விழித்து உண்மை உணர்ந்த முனிவர் கர்ணனுக்கு சாபம் விடுகிறார்..

சுபாங்கி எனும் இளவரசியை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் கர்ணன் அவள் மேல் காதல் கொள்கிறான்.. துரியோதணன் மூலம் திருமணம் நடக்கிறது.. திருமணம் முடிந்த பின் கர்ணன் ஒரு தேரோட்டி என்ற உண்மை தெரிய வந்து மாப்பிள்ளையை அவமானப்படுத்துகிறார் மாமனார்.. 

 மகாபாரதப்போர் மூளும் நேரம்.. கிருஷ்ணர் கர்ணனை டம்மி ஆக்கினால் தான் பாண்டவர்கள் வெற்றி பெற முடியும் என்பதை கண்ணன் உணர்ந்து குந்தி தேவியை தூண்டி விட்டு கர்ணனிடம் தூது அனுப்புகிறார்..

குந்தி தேவி தான் தன் அம்மா, பாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்பதை அறிந்தும் நன்றி உணர்வின் காரணமாக கர்ணன் அவர்கள் பக்கம் வரவில்லை.. துரியோதணன் உடன் இருந்து போரிட்டு  மடிகிறான்

 நடிப்பு பற்றி சொல்லனும்னா சிவாஜி ஆக்டிங்க் கிளாஸ்.. கர்ணன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நினைக்கும் அளவுக்கு கம்பீரம் காட்டி கலக்கலான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவரது நடை ஆஹா... ( உத்தம புத்திரன், ராமன் எத்தனை ராமனடி,வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்ற படங்கள் அவர் நடை அழகுக்கு பெயர் போனவை)


சிவாஜிக்குப்பின் பேர் சொல்லும் நடிப்பு என் டி ஆர்.. கிருஷ்ணர்னா அப்படியே தெய்வத்தை நேரில் பார்ப்பது போலவே.. அப்படி ஒரு சாந்தமான, எதற்கும் அசைந்து கொடுக்காத முகம்.. தெய்வீக தோற்றம் அவருக்கு இயற்கை கொடுத்த வரம்.. ஆந்திராவின் எம் ஜி ஆர் என போற்றப்பட்டவர்.. அவர் வரும் காட்சிகள் எல்லாம் மற்ற நடிகர்கள் எல்லாரும் டம்மியாக தெரிவது அவரது ஆளுமைக்குச்சான்று..


துரியோதணனாக வரும் அசோகன் காமெடி கலந்த நடிப்பு தந்திருக்கிறார்,.. இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.. வில்லத்தனம் கொஞ்சம் கம்மி தான்.. 

அர்ச்சுணனாக வரும் முத்து ராமன் ரொம்ப மென்மையான  முகச்சாயல் உள்ளவர்,.. அவர் சரத் பாபு மாதிரி ஜெண்டில் மேன் கேரக்டருக்கு ஓக்கே. அர்ச்சுனன் மாதிரி போர் வீரன் கேரக்டருக்கு..?? 

ஆடை வடிவமைப்பு, ஆர்ட் டைரக்‌ஷன் . ஒளிப்பதிவு எல்லாமே செம பிரம்மாண்டம்.. அப்படியே சம்பவங்களை கண் முன் நிறுத்துகிறது.. 3 மணீ நேர படத்தில் போர் அடிக்கும் காட்சிகள், அல்லது தேவை இல்லாத காட்சி என்று எதுவுமே இல்லை.. சபாஷ் எடிட்டிங்க்.. 

 பாடல்கள் 11.. அதில் சூப்பர் ஹிட் பாடல்கள் 4.. 

http://cinegilma.com/wp-content/gallery/karnan-movie-stills/karnan-movie-stills-3.jpg

மகா பாரதம் இயற்றிய வியாசரிடம் சில கேள்விகள்


1. குந்தி தேவி அரண்மனையில் மக்களுடன் மக்கள் பார்வையில் தான் இருக்கார்.. 9 மாசம் காணாம போய் குழந்தையோட வர்லை.. ஒரே நிமிஷத்துல குழந்தை பிறந்துடுது.. அவர் ஏன் அதை ஆத்துல விடனும்.. கண்டெடுத்ததுன்னு சொல்லி அரண்மனையில் வளர்த்தலாமே?மக்கள் ஏன் பழிக்கப்போறாங்க?

2. உலகையே ரட்சிக்கும் கண்ணன் போர் நடக்காமல் காத்து இருக்கலாமே.. தனிப்பட்ட 6 பேரின் பகைக்காக ஏன் நாட்டு மக்களை போரில் இறக்கி பலிஆடுகளாய் மக்களை ஆக்கனும்? பல சித்து வேலைகள் தெரிந்த கண்ணன் துரியோதனன் மனதை மாற்றி இருக்கலாம்.. அல்லது ராஜ்யம் தானே பிரச்சனை? இந்தா ராஜ்யம் என புது ராஜ்யமே உருவாக்கி தந்திருக்கலாமே?

3. கர்ணனிடம் பிரம்மாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகிக்க வேணாம் என வரம் வாங்கி வரச்சொல்லி குந்தியை அனுப்புவது ஏன்?அவருக்குத்தான் சக்தி இருக்கே? முதல் முறை கர்ணன் அதை பிரயோகிக்கும்போது எப்படி அர்ச்சுனரை காப்பாற்றினாரோ அதே போல் ஒவ்வொரு முறையும் காப்பாற்றலாமே?

4. முக்காலும் உணர்ந்த முனிவர்க்கு வந்திருக்கும் கர்ணன் அந்தணன் அல்ல என்பது ஏன் தெரியாமல் போச்சு.. அவரும் சராசரி மனிதர் தானா?

5. கர்ணன் உயிரோடு இருக்கும்போதே ஏன் அவனது 10 வயசு பாலகன் போருக்கு வர்றான்?அப்படி என்ன அவசியம்?

6. போர் நடந்து கொண்டிருக்கும்போது கண்ணன் அர்ச்சுணருக்கு கிட்டத்தட்ட 2 மணி நேரம் உபதேசம் செய்கிறார்.. அது வரை அனைவரும் வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்களா?


http://static.moviecrow.com/movie/karnan/658.jpg
 கர்ணன் பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1. பீமன் கேரக்டர்க்கு நல்ல ஆஜானுபாவமாக ஒரு ஆளை போட்டிருக்க வேண்டாமா? பீமன் பஞ்ச பாண்டவர்களில் மிக பலம் பொருந்தியவர்.. ஆனா படத்துல அவர் பரிதாபமா இருக்கார்.. 

2. காந்தாரி கறுப்பு நிறத்துணியால் தான் தன் கண்களை கட்டி வாழ்நாள் முழுவதும் தன் கணவன் காணாத உலகத்தை தானும் காணப்போவதில்லை என்றாள்..என மகாபாரதம் கூறுகிறது..  ஆனால் படத்தில்  பச்சை ரிப்பனை கட்டி இருக்கார்..

3.  கர்ணனுக்கு மன்னன் பதவி அளிக்கபட்டதும் கர்ணனிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை, கூனிக்குறுகி இருக்கும் உணர்வு, தகுதிக்கு மீறிய மரியாதை  கிடைத்த குற்ற உணர்வு வர வேண்டாமா? ஆணவம் தெரியுதே அவர் நடை உடை பாவனையில்... 

4. பிரம்மாஸ்திரம் மறந்து போகும் என சாபம் கிடைத்ததும் ஏன் அந்த மந்திரத்தை ஒரு ஓலையில் எழுதி வைத்துக்கொள்ளக்கூடாது?

5. பிரம்மாஸ்திரம் கற்றுக்கொள்ளும் நாட்களில் தாடியுடன் இருக்கும் சிவாஜி கானகத்தில் அங்கேயே தங்கி பணி புரிகிறார்.. ஆனா அப்பப்ப அரண்மனைக்கு வர்றாரே.. அது எப்படி?

6. துரியோதணன் கேரக்டர் ஆட்காட்டி விரலில் மோதிரம் அணிந்து வருகிறார்.. ஆனால் மகா பாரதத்தில் மோதிர விரலில் தான் அணிவதாக வருது.. 

7. கண்ணனை பாண்டவர்கள், கவுரவர்கள் போய் பார்த்து கால் மாட்டில் தருமர், தலை மாட்டில் துரியோதணன் நின்று ஆதரவு கேட்கும் மிக முக்கியமான சீன் படத்தில் இல்லையே?

8. அமாவாசை அன்று பலி இட்டு போரை ஆரம்பித்தால் அவருக்கு வெற்றி நிச்சயம் என்று ஆனதும் கண்ணன் சூரிய சந்திரனை ஏமாற்றி ஒரு நாள் முன்னதாக அமாவாசை வரும்படி செய்கிறார்.. ஓக்கே.. ஆனால் துரியோதணன் அவன் கணக்குப்படி அமாவாசை அன்று தானே பலி தர்றான்.?

9. கர்ணன் - துரியோதணன்  மனைவி சொக்காட்டான் ஆடும் காட்சி.. எடுக்கவோ கோர்க்கவோ என வசனம் பேசும் முக்கியமான சீன் - அதில் கர்ணன் துரியோதனன் மனைவியுடன் இன்னும் நெருக்கம் காட்டி இருக்க வேண்டும்..அப்போதான் துரியோதணன் எந்த சூழ்நிலையிலும் கர்ணன் மேலோ, தன் மனைவி மேலோ சந்தேகம் கொள்ள வில்லை என்பது நிரூபணம் ஆகும்.. மகாபாரதத்தில் மிக பிரமாதமாக வர்ணிக்கப்படும் இந்த காட்சி படத்தில் மிக சாதாரணமாகவே எடுக்கப்பட்டிருகிறது

http://i.ytimg.com/vi/LwMNIpHWs_o/0.jpg

 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

.  1. வாரி அணைக்க வா என்றேன்... வறியவன் ஏதோ வரம் கேட்பதாய் எண்ணி அந்த மழலை எனக்கு வாரிக்கொடுத்தான்.


2. வில்லுக்கு ஒரு விஜயன் என்ற சொல்லுக்கு பிறந்தவன் அர்ச்சுணன்

3.  அம்மா, அப்பா இருவரும் இறந்து விட்டார்களா? குழந்தாய்?

 இல்லை, என்னை மறந்து விட்டார்கள்

4.  என் இனமடா நீ!! மேக நாதா!!

5. இந்த சமூகம் அடித்த இடத்தை துடைத்து விட்டு மீண்டும் அதே இடத்தில் அடிக்கிறது

6. கொடுப்பது என்று உறுதி ஆன பின் உயிரும் ஒரு பொருட்டா?

7. பெண்கள் தோல்வியை தாங்க மாட்டார்கள். அதனால் நான் விட்டுத்தருகிறேன்.. 

ஆண்கள் பலசாலிகள்.. ஆனால் அறிவில்லாதவர்கள்

8.  ஏய்.. தேரோட்டி.. உன் ரத்தத்தில்  தேர் ஓடுகிறது.. 

 இல்லை.. எல்லோர் ரத்தத்திலும் சிவப்பு தான் ஓடுகிறது

9. நான் தேரோட்டுவதில் என்ன குறை கண்டீர்.. நான் ஒரு தேர்ரோட்டியின் மனைவி அல்லவா?

 ஆரம்பத்தில் இருந்து எல்லோரும் என்னை என்ன சொல்லி இகழ்ந்தார்களோ அதே பழி சொல்லை உன்னையும் அறியாமல் சொல்கிறாய்.. 

10.  வாயும் வயிறுமாய் உள்ள மனைவியை உயிரும் உணர்வுமாய் காக்க வேண்டும்..

11. விட்டுக்கொடுப்பதற்கே வீரம் அதிகம் வேண்டும்..

12.  இது என்னை நோக வைக்கும் கேள்வி... கர்ணா,,,

 ஆனால் கேட்க வேண்டிய கேள்வி கண்னா./..


13. போரில் மனிதனின் மதி மாறும், வெறி ஏறும். 

14. இறக்கும்போதும் நான் சிரிப்பை விரும்புகிறேன்

15. இந்த மனிதர்களுக்கு எப்போதும் எதற்கும் கடவுளை குறை சொல்வதே வழக்கம் ஆகி விட்டது..

16.  பாவ காரியங்கள் என்றும் மறைத்து வைக்க முடியாது.. எப்படியும் என்றாவது வெளியே வந்து விடும்.. 

17. வல்லவனாக ஒருவன் பிறக்கலாம்.. ஆனால் வளர்ப்பால் மட்டுமே  அவன் நல்லவனாக ஆக முடியும்.. 

18./. அண்ணன் ஜாதகத்துலயே சமாதானம் கற பேச்சே இல்லை.. 

19.  எல்லோருடைய முட்டாள் தனத்துக்கும் ஈடு கொடுக்க இந்த உலகத்தில் இருப்பது கடவுள் மட்டுமே.. 

20. உலகத்துக்கு துரியோதனன் எப்படியோ எனக்கு அவன் தான் கடவுள்.. செய் நன்றி கொண்டவன் நான்

21. வீரத்தை வீரம் ஒதுக்கி வைக்குமா? நீ க்டைசி வரை துரியோதனனுக்கு பக்க பலமாய் இருக்க வெண்டும் என்பதற்க்காகத்தான் உனக்கு போரில் எந்த பொறுப்பும் தரவில்லை

http://uyire.com/wp-content/uploads/mvbthumbs/img_7484_karnan-dts-version-trailer.jpg

 கலக்கலான பாடல்கள்

1. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதது வல்லவன் வகுத்ததடா கர்ணா.. வருவதை எதிர் கொள்ளடா.. 

2. இரவும், நிலவும் வளரட்டுமே.. நம் இளமை நினைவுகள் மலரட்டுமே.. 

3. கண்ணுக்கு குலம் ஏது?கர்ணா... கருனைக்கு நிறம் ஏது?

4. போய் வா மகளே போய் வா.. 

5. மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை

6. என்னுயிர்த்தோழி. 

7. ஆயிரம் கரங்கள் உடையாய் போற்றி.. 

8. கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே?

9. மரணத்தை எண்ணி

 யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்? என்ற கேள்வியே தேவை இல்லை.. அனைவரும் இந்தப்படம் பார்க்கலாம்.. 

 ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் படம் பார்த்தேன்