Thursday, March 22, 2012

டியர், உன் கன்னம் வெட்கத்துல சிவக்குதா? கோபத்துலசிவக்குதான்னு எப்படி கண்டுபிடிக்க? (joks)

http://blogs1.targetx.com/umbssw/Ericka/Go%20Ladies-thumb.JPG

1. அன்பே! உன் இன்மை உணர்ந்தேன்

ஒரு மண்ணும் புரியலை..

டியர், ஐ மிஸ் யூ!

அப்டி புரியற மாதிரி பேசு


-------------------------------------------------

2.  லோக்பாலை எங்களால்கொண்டு வர முடியவில்லை என்பது உண்மை தான் ,ஆனால் அதற்கு பிராயசித்தமாக அமலா பாலை கொண்டு வந்தோம் என்பதை மறந்து விடாதீர் 

-----------------------------------

3. ஊழல் வாதிகளை கட்சியவிட்டு நீக்கப்போறோம்னு அறிக்கை விட்டது தப்பா போச்சு...

ஏன் தலைவரே?

கட்சில இருக்கற ஒரு லட்சம் பேரும் "என்னை நீக்கியாச்சா?"னு கேட்கறாங்க

----------------------------------------

4. டியர், செல்லமா கொஞ்ச நேரம் சண்டை போடலாமா? 

நாம லவ்வர்ஸ் தான், புருஷன் பொண்டாட்டி இல்ல, மைண்ட் இட்

------------------------

5. டாக் ஷோ  ( TALK SHOW) காம்ப்பியரிங்க் இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கேன் சார்.. 

குட், எங்கே கத்தி பேசுங்க பார்க்கலாம்

---------------------------------

6. என் ஆளு சவரி முடிக்காரின்னு நினைக்கறேன்..ஓ! எப்டி சொல்றே? 

மின்னுவதெல்லாம் பொன்னல்ல, பின்னுவதெல்லாம் ஜடை அல்ல-ங்கறாளே?

------------------------------------

7. ராவணன் - யுவர் ஆனர், எனக்குஜாமீன் வேனும்  

ஜட்ஜ் - இன்று போய் நாளை வா

--------------------------------------

8,. டியர், உன் கன்னம் வெட்கத்துல சிவக்குதா? கோபத்துலசிவக்குதான்னு எப்படி கண்டுபிடிக்க? 

என் கன்னம்சிவந்தா நான் வெட்கத்துல,உன் கன்னம்சிவந்தா நான் கோபத்துல

-------------------------------------

9. பெப்ஸி பற்றி தலைவர் கிட்டே கருத்து கேட்டது தப்பா போச்சு

ஏன்>?


அவர் பாட்டுக்கு டி ஆர் போல  " திருவாரூர்னா தேரோட்டம்,ஆறுன்னா  நீரோட்டம் ,பெப்ஸின்னா போராட்டம்" அப்டிங்கறாரே?

----------------------------------------

10. லவ் பண்றப்ப அவளுக்கு   பூக்களால் அழகு செஞ்சேன், மேரேஜ் ஆன பிறகு டெயிலி அவ எனக்கு பூஜை பண்றா..

விடு, விடு.. பூ செய் என்துதானே பூஜை?

--------------------------------

http://cdn.karmakerala.com/news/wp-content/uploads/2010/08/dsc01858.jpg

11.  உங்கப்பாவுக்கு மொத்தம் 3 பசங்க தானே?

ஆமா, நான் அவரோட ஒரே 3 வதுபையன்ஹி ஹி 
----------------------------------------

12.  தலைவரே, மேட்டூர் டேம்ல  எப்ப பாரு லவ்வர்ஸ் கூட்டமா இருக்கு



டாமிட்

--------------------------------

13. இந்தவாழ்க்கை நிலை இல்லாததுன்னு சொல்றாரே, அவர் ஞானியா?

ம்ஹூம்,ஆளுங்கட்சி மினிஸ்டர்
----------------------------------------

14. எங்கண்ணன் ஓவரா சரக்கு அடிச்சுட்டான்



அடடா, அப்புறம்?

விண்ணத்தாண்டிலவ்வரோடலாஞ்ச் ஆகவேண்டியவன் மண்ணைத்தோண்டி மடடை ஆகிட்டான்

---------------------------------------

15.  யூ ஆர் அப்பாயிண்டட்

ஸாரி சார், மீ மம்மி செல்லம்

அதுக்காக அம்மாயிணமெண்ட்-னு சொல்ல முடியுமா?

----------------------------------

16.  எங்க வீட்ல மெகா டி வி இருககு

பொய், அது 21 இஞ்ச் தானே?

எங்க வீட்ல மெகா டி வி  சேனல் இருககனு சொல்ல வநதேன்

---------------------------------------

17. ரேவதி நட்சத்திரத்துல குழந்தை பிறந்ததால  ரேவதினுபேர் வைங்க..

ஓக்கே, ஜோசியரே,மிருக சீசர  நட்சத்திரத்துல பிறந்தா?

---------------------------------

18. தலைவரே,உங்க பையன் ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ்  பண்ணிட்டான்..

அழகிரி - போதாது, பால்கனில  பாஸ் பண்ற வரை இம்பரூவ்மெண்ட் எழுதட்டும்

-----------------------------------

19. தலைவருக்கு  6 சின்ன வீடு இருக்கு.. 

ஓஹோ, அறுபடை வீடு கொண்ட கில்மாதலைவரா?

-----------------------------------

20. உங்களுக்கு நாவடக்கம் ஜாஸ்தியாமே?

ஆமா, மேரேஜ்க்குப்பிறகு என் மனைவி சமையல்ல நாக்கு செத்துடுச்சு,அடக்கம் பண்ணிட்டேன்

--------------------------------------
http://www.composedvolcano.com/wp/wp-content/uploads/2008/07/misskerala59.jpg

Wednesday, March 21, 2012

தெய்வீக கள்ளக்காதல் விவகார வழக்கு-போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பஞ்சாயத்து -

'எஸ்.எம்.எஸ். அனுப்பிய டீச்சர்... எகிறி ஓடிய மாணவன்...’ என்ற தலைப்பில் சென்னை சௌகார்பேட்டை பள்ளி ஆசிரியை குமுதுவுக்கும், மாணவனுக்கும் இடையிலான காதல் விவகாரம் பற்றி கட்டுரை ஆல்ரெடி வந்தது..  வீட்டை விட்டு ஓடிப்போன இருவரும் போலீஸில் பிடிபட்ட பிறகும் விவகாரம் தீர்ந்தபாடில்லை. ஆசிரியை குமுதுவும் மாணவனும் தங்களின் பொருந்தாக் காதலை கைவிட மறுத்து அடம் பிடிக்கிறார்கள்.


சி.பி - டீச்சர் .. டீச்சர்.. ஓ மை டீச்சர்.. உன்னை கண்டாலே ஆனந்தமே.... அப்டினு பாடி இருப்பானே?


இதனால் குமுது, அவரது கணவர் மற்றும் மாண வனின் பெற்றோர்களுக்கு இடையே மும்முனை சட்டப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த விவகாரத்துக்குள் போகும்முன், குமுதுவையும் மாணவனையும் டெல்லியில் போலீஸார் வளைத்துப் பிடித்தது பற்றி பூக்கடை போலீஸார் சொல்வதைக் கேட்போம்.

சி.பி - மேட்டர் வெளீல தெரிஞ்சதும் குமுதுவின் வீட்டுக்காரர் கும்மு கும்முனு குமுறலையா?

''கடந்த 4-ம் தேதி தன் வீட்டில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணமும் 3 சவரன் நகை யையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் குமுது. தனது தோழி சந்தோஷி வீட்டுக்கு மாணவனுடன் சென்று தங்கி உள்ளார். பின்னர், அங்கிருந்து ரயில் மூலம் காஷ்மீருக்குச் சென்றனர். அங்கு இரண்டு நாட்கள் தங்கியுள்ளனர். அவ்வப்போது தனது சகோதரி வந்தனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நிலைமையை விசாரித்து இருக்கிறார் குமுது.


சி.பி - குமுதம் போல் வந்த குமரியே.. உன் கூட ஒரு தங்கச்சி இல்லையே..!!

கடந்த 15-ம் தேதி வந்தனாவை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, அவரது செல்போனுக்குப் பேசினார் குமுது. தான் டெல்லியில் இருப்பதாகவும், அங்கு தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்து தரும்படியும் வந்தனாவைக் கேட்டார். உடனே வந்தனாவை அழைத்துக்கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் வடிவாம் பிகையும், செல்வராஜ், பிரபாகர் என்ற இரு காவலர்களும் டெல்லிக்கு விமானத்தில் பறந்தனர்.

சி.பி -தீவிரவாதிகளைக்கூட ஈசியாப்பிடிச்சடலாம் போல இருக்கு,, கள்ளக்காதல் தீவிரவாதிகளை பிடிக்கவே முடியலையாம்..


 குமுதுவையும் மாணவரையும் பிடித்து, அன்றிரவே மீண்டும் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்தனர்.

 சி.பி - 2 பேரையும் தனித்தனி சீட்ல தானே கொண்டு வந்தீங்க? இல்லீன்னா அவங்க 2 பேரும் “ வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா?”அப்டினு டூயட் பாடி இருக்கப்போறாங்க.. 




இருவரையும் விசாரித்தபோது, அவர்கள் செய்தது தவறு என்று உணராதவர்களாகவே இருந்தனர். இனி வீட்டுக்குச் செல்ல மாட்டோம். ஒன்றாக சேர்ந்து வாழப்போகிறோம்’ என்றே திரும்ப திரும்பச் சொன்னார்கள்'' என்று சொன்னார்கள்.


சி.பி - திரும்ப திரும்ப  பேசறே நீ?  திரும்ப திரும்ப  பேசறே நீ?

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியை குமுதுவை 15 நாள் காவலில் வைக்கவும், மாணவனை ராயபுரம் காப்பகத்தில் வைத்து மருத்துவப் பரிசோதனை செய்யவும் மாஜிஸ்திரேட் அலெக்சாண்டர் உத்தரவிட்டார்.


சி.பி - ஹா ஹா அலெக்சாண்ட்ரா படம் ஞாபகம்வந்துடுச்சு.. அந்த கில்மா படத்துல .. சரி விடுங்க.. இது கண்ணியமான பிளாக்.. ஹி ஹி 

ஆசிரியையுடன் வாழவேண்டும் என்று தன் மகன் உறுதியாக இருப்பதால், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் துணையை மாணவனின் தந்தை சரவண்குமார் நாடியுள்ளார். அவருடைய வழக்குரைஞர் அழகேஸ்வரன், ''தனது வீட்டுக்குத் திரும்பிச் செல்லமாட்டேன் என்பதில் மாணவன் உறுதியாக உள்ளான். ஆசிரியை குமுதுவுடன்தான் வாழ்வேன் என்றும், அதற்கான வயதை எட்டும்வரை வேறு எங்காவது தங்குகிறேன் என்றும் பிடிவாதமாகக் கூறுகிறான்.

சி.பி - டேய்.. ந்கொய்யால .. உனக்கு வயசு 21  ஆகறப்ப டீச்சருக்கு 41 ஆகிடும்டா.. 40 ல நாய்க்குணம்.. கடிச்சு வெச்சுடும்.. சும்மா அடம் பிடிக்காத.. வேற இளசான டீச்சரா பார்க்கலாம்.. நைசா கழட்டி விட்டுட்டு வா.. 


அவன் தகுந்த மனமாற்றம் பெறுவதற்கு கவுன்சிலிங் தேவை. எனவேதான், அவனை இன்னும் ஆறு மாதங்கள் காப்பகத்திலேயே வைக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம்.


சி.பி - காப்பகத்துல ஏதாவது டீச்சர் இருக்காங்களா?ன்னு செக் பண்ணிக்குங்க.. அண்ணன் அதையும் 6 மாசத்துல செட் பண்ணி அதை 3 மாசம் ஆக்கிடப்போறான்..

 
அதேபோல், ஆசிரியை குமுதுவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்று கோரி ஆட்சேபனை மனுவும் தாக்கல் செய்துள்ளோம். தற்போது மாணவன் இருக்கும் மனநிலையில், ஆசிரியை குமுதுவை சந்திக்க நேரிட்டாலோ, அல்லது செல்போனில் தொடர்பு கொண்டாலோ, மீண்டும் அவர்களைப் பிரிப்பது இயலாத காரியமாகிவிடும்'' என்றார்.


சி.பி -  ஆமா.. பெரிய அம்பிகாவதி அமராவதி காதலா? எல்லாம் நயன் தாரா - பிரபு தேவா காதல் தானே.. ஆயுசு 6 மாசம் தான் புட்டுக்கும் பாருங்க.. பச்சை குத்துனவங்களே அப்பீட் ஆகறாங்க.. 



ஆசிரியை குமுதுவின் தந்தை நாராயண பாண்டே, தனது மகளை ஜாமீனில் வெளியில் கொண்டுவர தீவிர முயற்சி செய்து வருகிறார். ஆசிரியை குமுதுவின் கணவர் ராஜீவ் சுக்லாவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் சார்பில் பேசிய வழக்கறிஞர் சுரேஷ்குமார், ''ராஜீவ் சுக்லா, தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த ஏழு மாதங்களாகவே குமுதுவின் நடவடிக்கையில் நிறைய மாற்றங் கள் தென்பட்டன.


சி.பி - சுக்லாம்பரதம் சுக்லாம்பரதம்..ஹி ஹி ஹி 


 இரவு ஒரு மணி வரை அந்த மாணவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் செல்போனில் பேசுவதுமாக இருந்திருக்கிறார். இதைக் கண்டித்தும் அவர் திருந்துவதாக இல்லை. இதனால், குமுதுவின் பெற்றோர்களிடம் விஷயத்தைக் கொண்டுசென்றார்.


சி.பி -  பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவின்ன்னு ஒரு கில்மா மலையாளப்படம்.. அதுல வர்ற மாதிரி போல.. மிட் நைட் 1 மணிக்கு அனுப்பினா அது எஸ்எம் எஸ் அல்ல.. கிஸ் செஸ்




ஆனால், 'மாணவனுடன் ஆசிரியை பேசுவது இயல்பு. இதற்கெல்லாம் சந்தேகப்படக்கூடாது’ என்று ராஜீவுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்

சி.பி - கல்வி பற்றி பேசுனா பரவாயில்லை.. கலவியை பற்றி எல்லாம்  பேசி இருக்காங்க?


இதனால், வெறுத்துப்போனவர், கடந்த மூன்று மாதங்களாக ராயபுரத்தில் தனிவீடு எடுத்து, தனது மகனுடன் தங்கி உள்ளார். இந்த விவகாரத்துக்குப் பிறகு ஆசிரியை குமுதுவிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் ராஜீவ்'' என்றார்.

பெற்ற மகனின் எதிர்காலத்தைக் மீட்க வேண்டி மாணவனின் தந்தை சரவண்குமார் தாக்கல் செய்துள்ள வழக்கும், தனது 11 வயது மகனோடு மீதமுள்ள காலத்தைக் கழிப்பதற்காக குமுதுவின் கணவர் ராஜீவ் தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கும், குமுதுவைக் காப்பாற்ற வேண்டிய கடமைக்காக குமுதுவின் தந்தை நாராயண பாண்டே தாக்கல் செய்துள்ள மனுவும், உயர் நீதிமன்றத்தில் உள்ளன.விசித்திர வழக்குக்கு விரைவில் விடை தெரியட்டும்!


சி.பி - இது விசித்திர வழக்கு இல்லீங்கோவ்.. விசித்த்ரா வழக்குங்கோவ்.........

கூடன்குளம் - ஜெ நடத்திய நாடக காட்சிகள் - ஜூ வி கட்டுரை - ஒரு பார்வை



''உலகில் நடக்கும் வெவ்வேறு விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்பது தானே கேயாஸ் தியரி?'' 

சி.பி - ஆமா.. பஸ் கட்டணம் ஏற்ற லேட் ஆச்சுன்னாலும் சரி.. கூடன்குளம் திறக்க லேட் பண்ணாலும் சரி.. இடைத்தேர்தல் இருக்குன்னு அர்த்தம். 

''ஒரு வழியாக கூடங்குளம் அணு மின் திட்டத்துக்குப் பச்சைக் கொடி காட்டி இருக்கிறது தமிழக அரசு. 'கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்’ என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் ஜெயலலிதா. இந்த விவகாரத்தில் பெரிய அரசியல் சதுரங்கமே ஆடப்பட்டிருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்த சமயத்தில் கூடங்குளம் போராட்டம் வெடிக்க ஆரம்பித்து இருந்தது. தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கத் தொடங்கிய நேரத்தில், 'கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அறிக்கை வந்தது. உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொல்லிய அந்த அறிக்கையைக் கண்டு, போராட்டக் குழுவினர் கொதித்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்தால், 'கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அதனைத் திறக்கக் கூடாது’ என்று அடுத்த நாளே ஜெயலலிதா அறிவித்தார்.


சி.பி - பல்டி அடிக்கறது அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலை ஆச்சே.. என்ன.. ஜெ ரொம்ப ரேரா தான் பல்டி அடிப்பாங்க...
 

 'கூடங்குளம் பாதுகாப்பானதுதான்’ என்று ஜெயலலிதா முதலில் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி சிலவற்றை குறிப்பிட்டு இருந்தார். கிட்டத்தட்ட இப்போது அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்ட ஜெயலலிதாவின் அறிக்கையில், அதனை அப்படியே வழிமொழிந்திருந்தார். மிகமிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது அறிக்கையை அவரே ஜெராக்ஸ் எடுத்து ஒப்புக்கொண்டு இருக் கிறார்!''

''கூடங்குளத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா உறுதியாகத்தான் இருந்தார். தீவிரவாதத் தடுப்பு மையம், பட்ஜெட், பெட்ரோல் விலை உயர்வு, ஈழத் தமிழர்கள் விவகாரம், தமிழக அரசுக்கு போதிய நிதி அளிக்கவில்லை என்று மத்திய அரசோடு பல விஷயங் களில் முரண்பட்டார். இவை அனைத்துக்கும் வெளிப்படையாகவே அறிக்கையும்விட்டார். ஆனால்,  கூடங்குளம் விவகாரத்தில் மட்டும் வாய் திறக்காமல் இருந்தார். 'கூடங்குளம் திட்டம் செயல்படுத்தத் தகுதி ஆனதுதான். ஆனால், அந்தப் பகுதி மக்கள் எதிர்க்கும்போது, அவர்களது பேச்சுக்கு செவிமடுக்கத்தானே வேண்டும்’ என்பது ஆரம்பத்தில் அவரது நிலைப்பாடாக இருந்தது.


 சி.பி - அதெல்லாம் சும்மா.. ஆரம்பத்துலயே அவங்க முடிவு எடுத்திருப்பாங்க.. ஆனா தேர்தல், இடைத்தேர்தல்க்காக  வெயிட்டிங்க்..இப்போ எல்லாம் முடிஞ்சது.. அதான் சுய ரூபம் காட்டறாங்க

  'தூத்துக்குடி ஏரியாவில் பலம் பொருந்திய மணல் மனிதர் ஒருவர் கூடங்குளம் அணு உலை வந்தால், தனது தொழில் பாதிக்கும் என்று கருதி காய்களை நகர்த்தி வருகிறார்’ என்று பெயர் குறிப்பிடாமல் தனது கட்சிப் பொதுக்குழுவில் சொன்னார் விஜயகாந்த்.


சி.பி - இதென்ன புதுக்கரடி?  கேப்டன் மப்புல இருக்கறப்ப சொன்னதா? திராணியோட சொன்னதா?


 தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான 'முரசொலி’யிலும் இதுபற்றி வெளிப்படையாகவே பெட்டிச் செய்தி வெளியானது. 'அந்த மணல் மனிதர் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவைப் பார்த்துக்கொண்டவர். அதனால்தான், கூடங்குளத்தை வராமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்’ என்று எல்லாம் செய்திகளை றெக்கை கட்டின.''


சி.பி - அடப்பாவிகளா?வில்லனா இருந்தாக்கூட மறைமுகமா மக்களுக்கு அந்தாள் நல்லதுதான்யா  பண்ணி இருக்கான்.. ஏதோ கொஞ்ச நாள் தள்ளீப்போட்டிருக்கார்..
''இந்த அரசியல் விமர்சனங்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்பட்டதைவிட மின் வெட்டுதான் அவருக்கு தீராத தலைவலி ஆனது. 'வேறு வழி இல்லை! கூடங்குளம் திறக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ என்று முடிவுக்கு வந்தார் ஜெயலலிதா. அதிலும் அரசியல் வித்தைகளை நடத்தியதுதான் ஆச்சரியம். கூடங்குளத்தின் பாதுகாப்பு பற்றி ஆராய மாநில அரசின் சார்பில் போடப்பட்ட வல்லுனர் குழு அறிக்கை கடந்த மாதம் 28-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதன் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டார் ஜெயலலிதா.



காரணம், சங்கரன் கோவில் இடைத்தேர்தல். கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டித்தான் கூடங்குளத்தைத் திறக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். அப்படி முடிவு எடுத்திருந்தால், அந்தக் குழு அறிக்கை கொடுத்த மறுநாளே அறிவித்திருக்கலாம். ஆனால், சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாள் இந்த முடிவை அவர் எடுத்ததற்கு அரசியல் பின்னணிதான் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது!''


''சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் திறக்கப்பட்டுவிடும்என்ற நிலை அனைவரும் எதிர்பார்த்ததுதான்


''சங்கரன்கோயில் வாக்குப்பதிவு முடியும் தருவாயில், 'நாளை அமைச்சரவை கூடும்’ என்கிற அறிவிப்பு வந்தது. அப்போதே, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. 'சங்கரன்கோவில் தேர்தலுக்கு முன்னதாக கூடங்குளத்தைத் திறந்தால் போராட்டக்காரர்களால் ஏதாவது கொந்தளிப்பு ஆகி... சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்து... அது தேர்தல் வெற்றியைப் பாதிக்கலாம்’ என்று நினைத்தாராம் முதல்வர். அதற்குத்தான் தாமதம் காட்டி உள்ளார்!''

 சி.பி - யார் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு காரியம் நடந்தா சரி - ஜெ


 கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்கிற அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடுவதற்கு மூன்று மணி நேரம் முன்பு டெல்லியில் நடந்த சம்பங்கள்தான் தமிழகத்தில் இப்படி அதிர்வலைகளை உண்டாக்கியதாம். டெல்லியிலும் தமிழகத் திலும் நடந்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றனவாம். இங்கே அமைச்சரவைக் கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது 'இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக் கும்’ என்று நாடாளுமன்றத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார் பிரதமர் மன்மோகன் சிங். பிரதமரின் இந்த அறிவிப்பும் அமைச்சரவை முடிவும் வெவ் வேறாக இருந்தாலும் அதற்குள் அரசியல் பின்னணி இருக்கிறது. அதுதான் கேயாஸ் தியரி.’

''15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்ட கூடங்குளத்தை எப்படியும் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு ரொம்ப உறுதியாகவே இருந்தது. ஆனால், மாநில அரசிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. அதோடு வேறு விவகாரங்களில் மத்திய அரசோடு முரண்டு பிடித்துக்கொண்டு இருந்தார் ஜெயலலிதா. இந்தப் பின்னணியில்தான் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிற குரல்கள் தமிழகத்தில் இருந்து எழுந்தன.


 ஜெயலலிதா இது தொடர்பாக இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதினார். ஆனால், சரியான ரியாக்ஷன் இல்லை. அதற்குப் பதிலாக, 'எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் ஆதரிப்பது இல்லை என்பது இந்தியாவின் பொதுவான நிலைப்பாடு’ என்று தீர்மானத்துக்கு எதிராகவே கருத்து சொல்லிவந்தது மத்திய அரசு. 'கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். அதற்குப் பதிலாக நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று மத்திய அரசுக்கு செக் வைத்தாராம் ஜெயலலிதா. 'என்ன வேண்டும்?’ என்று கேட்டது மத்திய அரசு. நிதிஉதவி, மின்சாரம் உட்பட மத்திய அரசிடம்  கோரிக்கைகளின் பட்டியல் ஒன்றைக் கொடுத்தாராம் ஜெயலலிதா. அதில் ஒன்றுதான் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது. அதைத்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும் டெல்லிப் பறவைகள் சொல்கின்றன.''



'' 'இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. அதன் மீது எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்கவில்லை. இப்போது ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்ததற்கு அவசரம் காட்டியது கூடங்குளத்துக்காகத்தான். மத்திய மாநில அரசுகள் கணக்குப் போட்டு காய்களை நகர்த்தியதன் விளைவு.... கூடங்குளம் பிரச்னையும் தீர்ந்தது. ஐ.நா. தீர்மான விவகாரமும் ஓய்ந்தது. பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது என்கிற கணக்கு சரியாகி இருக்கிறது. இந்த 'மூவ்’களை கடைசி நேரம் கண்டு கோதாவில் திடீரென்று கருணாநிதியும் குதித்தார்.''


''அவர் ஏதோ உண்ணாவிரதம் என்று அறிவிப்பு வெளியிட்டாரே?''

''திங்கள் கிழமை அன்று காலையில் கருணாநிதி யிடம் பிரதமர் பேசினார். 'அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்’ என்று அப்போது சொன்னாராம் பிரதமர். இதை அறிந்துகொண்டுதான், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று கருணாநிதி அறிவித்தார். பிரதமர் அறிவிப்பு டெல்லியில் இருந்து வந்ததும் கருணாநிதி உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். 'அதாவது கருணாநிதி மிரட்டியதால்தான் மன்மோகன் இந்த முடிவு எடுத்தார்’ என்பதைக் காட்ட நடந்துள்ளன இந்தச் சம்பவங்கள்!''

 சி.பி - நாடகம் போடறதுல கலைஞர் கில்லாடி ஆசே..
''கூடங்குளம் போராட்டக்காரர்களை ஜெயலலிதாவே நேரடியாக அழைத்துப் பேசினாரே!''
''இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசினோம் என்பதைப் பதியத்தானே வேண்டும்!
கேபினெட் நடந்துகொண்டு இருந்தபோதே கூடங்குளம் பகுதிக்கு போலீஸார் மலையளவு குவிக்கப்பட்டுவிட்டார்கள்.




சங்கரன்கோவில் தேர்தல் பணிகளுக்காக சென்ற போலீஸார் அங்கு திருப்பிவிடப்பட்டார்கள். மாநில அரசு நினைத் தால்தான் கூடங்குளத்தை திறக்க முடியும் என்பதில் மத்திய அரசும் தெளிவாக இருந்தது. எனவே ஜெயலலிதாவையே அவர்கள் முழுமையாக நம்பி இருந்தார்கள். அவர்களது எண்ணத்துக்கு 19-ம் தேதிதான் வந்தார் ஜெயலலிதா!


இதனால் கூடங்குளம் பகுதியில் வன்முறை ஏற் படக்கூடும் என்பதால் முதல் நாளிலேயே, தென்மண்டல ஐ.ஜி-யான ராஜேஸ்தாஸ் தலைமையில் 4,000 போலீஸார் குவிக்கப்பட்ட னர். சங்கரன்கோவில் தேர்தல் பணிக்காக வந்திருந்த எட்டு மாவட்ட எஸ்.பி-க்கள் கூடங்குளம் பகுதிக்குத் திருப்பிவிடப்பட்டனர். நிலைமையைக் கண்காணிக்க கூடுதல் டி.ஜி.பி-யான ஜார்ஜ் வந்து சேர்ந்தார். வன்முறையைக் கட்டுப்படுத்த வஜ்ரா வாகனங்கள், கலவரத் தடுப்புப் படை என கூடங்குளம் அணு உலை முன்பாக பெரும் படையே குவிக்கப்பட்டது.

அணு உலைக்கு எதிரில் வாடகைக் கட்டடத்தில் அமர்ந்து அணு உலையைக் கண்காணித்து வந்த போராட்டக் குழு உறுப்பினர்களான வக்கீல் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். தமிழக அரசின் தீர்மானம் பற்றி அறிந்த இடிந்தகரை மக்கள், ஆலய மணியை அடித்துக் கூட்டத்தை திரட்டினர். அதற்குள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்ததால், இடிந்தகரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.''

''போலீஸை வைத்து இதற்குப் பதில் சொல்வார்களா?''
''போராட்டக்காரர்களை 18-ம் தேதி இரவு நெல்லைக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவட்ட ஆட்சியர் அழைத்தார். 'என்ன விஷயம்?’ எனக் கேட்டதற்கு, 'ஏற்கெனவே நீங்கள் முதல்வருக்கு கொடுத்திருந்த மனு பற்றி பேச வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்.

'கூடங்குளத்தில் போலீஸாரைக் குவிப்பதையும் எங்களைத் திட்டமிட்டு அழைப்பதையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். இதனால், நாங்கள் அங்கு செல்ல மறுத்து விட்டோம். 19-ம் தேதி காலையில் மீண்டும் எங்களை அழைத்த அவர், 'ராதாபுரம் வரையாவது வாருங்கள். அங்கு வைத்துப் பேசிக்கொள்ளலாம்’ எனக் கூப்பிட்டார். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக எங்கள் மக்கள் சந்தேகப்பட்டார்கள்.


அதனால் எங்களைப் போக அவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் போயிருந்தால் எங்களைக் கைது செய்திருப்பார்கள்’ என்று போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். கூடங்குளத்தை அமைதியாகத் திறக்கவிடுவார்களா என்பது இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும்''

சி.பி - இந்த தலைமுறை மக்கள் மின்சாரம் பெற வேண்டும் என்பதற்காக கூடங்குளம் அணு உலை திறப்பது நம் எதிர் கால சந்ததிக்கு நாம் செய்யும் துரோகம்.. மக்கள் பெருமளவில் இதை எதிர்க்கக்கூடாது என்பதற்க்காக செயற்கையான 8 மணி நேர மின் வெட்டை ஜெ உருவாக்கினார் என்று சில ர் சொல்றாங்க.. நாளை கூடங்குளத்தில் ஏதாவது விபத்து நடந்து மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? மேலும் அங்கே பணீ புரிந்த 147 பேருக்கு புற்று நோய் என்று இந்தியா டு டே கட்டுரை வெளியிட்டு இருக்கு.. அதுக்கெல்லாம் என்ன பண்ணப்போறாங்க?

இப்போ லேட்டஸ்ட் நியூஸ் அந்த ஏரியா மக்களுக்கு தண்ணீர் சப்ளை, , மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறுத்தமாம்/... அட தேவுடா.. ஏழை எளிய மக்களை அடக்குமுறை கொண்டு ஆள ஆங்கிலேயர் என்ன? நம்மாளுங்க என்ன? எல்லாம் ஒரே கேட்டகிரிங்க தான்..

கேயாஸ் தியரிக்கும் ரீமாசென், ஸ்ரேயாவுக்கும் இன்னா சம்பந்தம்?

http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/12/Shreya2.jpg

1.இலங்கையில் பல கொடுமைகள் நடந்துள்ளன: கருணாநிதி!! # தமிழ்நாட்டில் ஒரே ஒரு கொடுமைதான் வீல் சேரில் உக்காந்திருக்கு தலைவரே!


---------------------------------

2. என்றென்றும் திகட்டாத காதல் வேண்டும் எனில் புகட்டாத காமம் வேண்டும்


--------------------------------

3. அய்யய்யோ, பாம்பு.. ஏய் அந்த குச்சியை கொண்டு வா



 இருய்யா.. சீரியல் பார்த்துட்டு இருக்கேனில்லை ..?விளம்பரம் வர்ற வரை வெயிட் பண்ணு


----------------------------------

4. . மாப்ளை கவர்மெண்ட் ஜாப் னு சொல்றீங்க . விசாரிச்சா அவரு பயங்கர கேடி, ரவுடின்னு சொல்றாங்களே?


 ஹி ஹி 2ம் உண்மை தாங்க.மாப்ளை எம் எல் ஏ.

----------------------------------------------

5. எதுக்காக எனக்கு மட்டும் சைவ அயிட்டமா பரிமாறிட்டு இருக்கீங்க?

தலைவரே! நீங்க தான் கட்சியோட கறுப்பு ஆடுன்னாங்க.ஆடு சைவம் தானே சாப்பிடனும்?

------------------------------------

6. நித்யானந்தா -பெண்ணே! மங்களம் உண்டாகட்டும்


 விளையாடாதீங்க குருவே..  கணவர் துபாய்ல இருக்கார், நான் இங்கே தனியா பாய்ல.


 யாமிருக்க பயம் ஏன்?

----------------------------------------

7.செல்வா-ங்கற பேரே ஸ்டைலிஷாத்தானே இருக்கு?எதுக்கு செல்வம்னு கெஜட்ல மாத்த சொல்றே? 


அத்தான், எல்லார் கிட்டேயும் திருமதி செல்வம்னு பந்தா பண்ணத்தான் ஹி ஹி 


-----------------------------------------

8. சி .பி. ஐ - உங்களுக்குத்தெரிஞ்ச உண்மைகளை மறைக்காம சொல்லுங்க 

ராம்தாஸ் - 2016-ல் நான் தான் சி .எம்


.சி.பி ஐ - ஆ கிர்ர்ர்ர்ர்

-------------------------------------

9. "கட்டிங்' எதிர்பார்க்கும் கட்சியினர், அதிகாரிகள்: சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்?# ஜெ - சரக்கு வாங்கித்தர நான் கேப்டன் இல்லை, எம்டன்


-----------------------------------

 10. சோனா -இந்த டிரஸ் எல்லாம் என் சொந்த உபயோகத்துக்கு.. 

கஸ்டம்ஸ் அதிகாரி-சும்மா ரீல் விடாதீங்க,எந்த காலத்துல நீங்க இவ்ளவ் டிரஸ் போட்டீங்க?

------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNbr4Ta9Z9zwLUXnnVBq0zsEqzJKsvAIZsTBebee44aYHQSWR8Sw6J9VcEDboDfkQqwJq_v1j5e-38iGB6eq7R0ZW7_WWRHIwsEeahLm96rvuB4PKWgorkeltKJTr-dpqtBoL1tjaH5zSj/s1600/1.jpg

11. சினிமாவில் நிறைய கஷ்டங்களை பார்த்து விட்டேன் -அசின்! # அட ராமா!உங்களையாரு குருவி,சுறா எல்லாம் பார்க்க சொன்னது?


----------------------------

12. 3வது அணி உருப்படாது: கருணாநிதி மறைமுக சாபம் # ஸ்டாலின் அணி முதல் அணி, அழகிரி அணி 2வது அணி, கனி மொழிதான் 3வது அணி - ஜெ நக்கல் பதில்

----------------------------------------

13. சி.பி ஐ - கொலையாளிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? 


ராம்தாஸ் - எத்தனை வாட்டிங்க சொல்றது? கலைஞர், கொலைஞர் 2 பேருக்கும் எனக்கும் எந்த சமப்ந்தமும் கிடையாது

-------------------------

14. ஒரு ஆணை நிலைகுலைய செய்ய வைக்க அவன் வயதை சந்தேகித்தால்,சம்பளத்தை கேட்டால் போதுமானதாக உள்ளது# வேலைக்கே போகலைன்னா சம்பளம் எப்படி வரும்?

------------------------------

 15. படிக்கட்டில் செல்லும்போதெல்லாம் லிஃப்டில் சென்றிருந்தால் நல்லது என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை # லிஃப்ட்ல 5 ஃபிகரு.

----------------------------

16.  காதலித்துப்பார்.. காலமெல்லாம் BAR # டாஸ்மாக் பேக்கு


---------------------------------

17. ஸகை ப்ளூ கலர் தாவணி, கறுப்புக்கலர் ஜாக்கெட் காம்பினேஷனில் சுமாரான ஃபிகர்கள் கூட சூப்பர் ஃபிகர்களாக தோற்றம் # எதிர்கீச்சு


-------------------------------

18. ரீமா கல்யாணத்தில் ஸ்ரேயா ஐட்டம் டான்ஸ் # அப்போ ஸ்ரேயா மேரேஜ்ல ரீமா ஆடுவாரா? ( டைட்டில் ட்வீட்)


------------------------------

19. பெண்களால்தான் இயங்குகிறது உலகம்! -சின்மயி # ஓடி ஆடி ஆஃபீஸ் போய் வேலை செஞ்சு இயங்குவது ஆண்கள், பெண்களால் கலகம் தான் எப்பவும்


----------------------------

20. நீ பதட்டமா இருக்கற டைம்ல என்ன செய்வே?


 என் சம்சாரத்துக்கு ஃபோன் போட்டு நீ என் ஆஃபீஸ்க்கா வந்துட்டு இருக்கே?ன்னு கேட்பேன்


-----------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibfpfGRicpe3RfiChwxhI2qfm__YVz376oq3edD51K0_CpZzGeD5ud7i5hLXkEUBWdvGoK8A9Kerza4tBKTg7BJxN6w7UJOCiRieXioOwsvSehksGOkg-cy4mlk6IiMcQ16u0xPi5eXZ4/s1600/shreya-hot-hot-side-look.jpeg


டிஸ்கி - பொதுவா டைட்டில் என்பது அட்ராக்‌ஷனுக்காக ஏதாவது வைப்பது.. அதுல யாரும் லாஜிக் பார்க்காதீங்க.. இப்போ கில்மா குமாரின்னு பேர் உள்ள ஃபிகர் செம கிளாமரா இருக்கனும் நு அவசியம் இல்லை.. அந்த மாதிரி..

டிஸ்கி 2 - தளத்தில்  போடப்படும் ஃபோட்டோஸ் சும்மா கண் குளிர்ச்சிக்காக.. வெய்யில் காலம் முடியும் வரை .. ஹி ஹி ஹி

Tuesday, March 20, 2012

மகாவம்சம் - சாண்டில்யன் நாவல் ?? -சினிமா விமர்சனம்


 http://www.indiancinemagallery.com/Gallery2/d/734309-1/Mahavamsam+movie+wallpaper.jpg
சாண்டில்யனின் கடல் புறா நாவலில் இருந்து கொஞ்சம், எம் ஜி ஆர்-ன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இருந்து கொஞ்சம், நரசய்யா ஆனந்த விகடனில்  எழுதிய  கடற்காற்று கதையில் இருந்து கொஞ்சம் என்று கலந்து கட்டி ஒரு கதை ரெடி பண்ணி இருக்காங்க.. லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஓரளவு பிரம்மாண்ட படம்..

ரோமாபுரி இளவரசர்க்கு சீன இளவரசியை பொண்ணு கேட்கறாங்க. ஓக்கே சொல்லிடறாங்க. ஆனா ஒரு கண்டிஷன் என்னான்னா மன்னர் இல்லாத பூமியில் பவுர்ணமில தான் கல்யாணம்.. அது அவங்க சம்பிரதாயம்.. மாப்ளை வீட்டுக்காரங்க, பொண்ணு வீட்டுக்காரங்க தனித்தனியா கப்பல்ல கிளம்பி போறாங்க. வழில கடல் கொள்ளையர்கள் சீனா இளவரசியை கைப்பற்றிடறாங்க. அதாவது கையை எல்லாம் பற்றலை..  கஸ்டடில வெச்சுக்கிட்டு சீன அரசுக்கு தகவல் தர்றாங்க. 1000 பெட்டி நிறைய தங்கம் தந்தா இளவரசியை விட்டுடறோம்னு. 


கருடர் தலைவன் இருக்கானே அவன் தான் வில்லன். அவன் ஒரு தாயத்தை நெஞ்சுல கட்டி இருக்கான்.. ( நல்ல வேளை;) அது இருக்கறவரை அவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது. 

பாரசீக இளவரசர் தன் சகா வோட சேர்ந்து எப்படி இளவரசியை மீட்கறார் என்பதுதான் கதை..


http://www.cinemaparvai.com/wp-content/uploads/2012/01/mahavamsam-16.jpg
சாண்டில்யன் நாவல்ல வர்ற மாதிரியே இளவரசரா வர்றவர் ஹீரோ இல்லை. இளவரசர் பாடி கார்டு தான் ஹீரோ.. அவர் அடிபட்டு படுத்திருக்கறப்போ பார்த்துக்கற மருத்துவரோட  பொண்ணு தான் ஹீரோவுக்கு ஜோடி. ஆனா பாப்பா வர்ற சீன் மொத்தமே 5 தான்.. 

ஹீரோவா வர்றவர் ஆள் ரகுமான் ஹிம்ஸ் நல்லா சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் எல்லாம் வெச்சு நல்லா தான்  நடிச்சிருக்கார்.. அவரோட தோரணைக்கு முன்னால இளவரசரா வர்றவர் நடிப்பு எடுபடல.. அதுக்கு காட்சி அமைப்புகளும் காரணம்.. சாண்டிலயன் நாவல்களிலும் இதே போல் காட்சி அமைப்புகள் வரும்.. மன்னர், சக்ரவர்த்தியை விட படைத்தலைவன், தளபதி கேரக்டர் தான் முன்னிலைப்படுத்தப்படும்.. 

சீன இளவரசியா வர்ற ஃபிகர் 60 மார்க் ஃபிகர்னா ஹீரோவுக்கு ஜோடியா வர்றவர் 55 மார்க் ஃபிகர். ஆனா என்ன ஒரு கொடுமைன்னா யாருக்கும் டூயட்டே இல்லை.. ( விட்டா நாம சரித்திரக்கதைலயும் குத்தாட்ட சாங்க் கேட்போமே.. )

படத்துல பாராட்டப்பட வேண்டியது பிரம்மாண்டமான போர்க்களக்காட்சிகள் தான்.. கடல் போர் அப்படியே கண் முன் நிறுத்துது.. தேவை இல்லாத வளா வளா காட்சிகள் அதிகம் இல்லை.. என்ன கதையோ அதை நோக்கித்தான் படம் பயணிக்குது..

http://3.bp.blogspot.com/-8L7P5L_rB_8/TxbvBNxKxgI/AAAAAAAAfp8/xzlHaGbkHw0/s1600/Mahavamsam+Movie+Stills+%252813%2529.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. படத்தோட ஓப்பனிங்க்ல இருந்து இடைவேளை வரை தேவை இல்லாத காட்சிகள்னு எதையும் சொல்ல முடியாதபடி நீட்டா ஸ்க்ரீன்ப்ளே பண்ணி இருக்கார்.. சபாஷ்.. 

2. பாரசீக இளவரசர் இறந்துட்டதா ஆடியன்ஸும், ஹீரோயினும் நம்பற மாதிரி காட்சி வெச்சு இளவரசி படைத்தலைவனுக்கா? என்ற டெம்போவை 4 ரீல் வரை கொண்டு சென்றது


3. சில காட்சிகளே வந்தாலும் ஹீரோயின் ஹீரோவிடம் காட்டும் மின்னல் காதல், கவனிப்பு கவிதை.. 

4. கப்பல், கடல், போர்க்காட்சிகளில் பிரம்மாண்டம்.. சரித்திர நிகழ்வுகளை கண் முன் காட்டும் லாவகம்..


 http://chennai365.com/wp-content/uploads/movies/Mahavamsam/Mahavamsam-Movie-Stills-15.jpg

இயக்குநர் சறுக்கிய இடங்கள்


1. படத்தின் இடைவேளைக்குப்பிறகு பெரும்பான்மையான காட்சிகள் போர்க்காட்சிகளே! கொஞ்சம் போர் அடிக்கும் காட்சிகள்


2. யாராலும் வெல்ல முடியாத தாயத்தை அணிந்த வில்லனை இளவரசி சிருங்கார ரசம் காட்டி மயக்கி அபேஷ் பண்ணுவது ஓக்கே.. ஆனால் அந்த  லூஸு வில்லனுக்கு தாயத்து பறி போன விஷயம் அப்போத்தான் தெரியலை.. க்ளைமாக்ஸ் ஃபைட் வர்றவரை தெரியாதா?


3. வில்லன் பாசறைல தான் இளவரசி இருக்கா.. வில்லன் இளவரசி கிட்டே டெயிலி 3 டைம் கில்மாக்கு கெஞ்சிட்டு இருக்கான்.. ஏதாவது மயக்க மருந்தையோ, போதை மருந்தையோ கொடுத்து ஒரு டைம் மேட்டரை முடிச்சுட்டா தன்னால அவ வழிக்கு வர்றா ( ஹி ஹி ஹி )

4. சீன இளவரசி ஆண்கள்னாலே வெறுப்புத்தான்ன்னு ஓப்பனிங்க்ல கன் ஃபைட் காஞ்சனா மாதிரி வீராவேசம் காட்டுது.. அப்புறம் என்னடான்னா பூங்குழலி மாதிரி கவிதையா போட்டு தாக்குது.. ஒய் திஸ் தடுமாற்றம் இன் கேரக்டரைசேஷன்?

5. இறந்ததா கருதப்பட்ட இளவரசர் உயிரோட வர்றார்.. அதை பார்த்து சீன இளவரசி ஓடி வந்து ஸ்லோ மோஷன்ல கட்டி அணைச்சிருக்க வேணாம்? ( எங்களுக்கும் கொஞ்சம் கில்மாவா இருந்திருக்கும்.. வட போச்சே..) ஆனா பாப்பா என்ண்டான்னா திருமதி செல்வம் சீரியல் ஹீரோயின் மாதிரி பராக்கு பாக்குது..


http://www.kollytalk.com/wp-content/gallery/mahavamsam-movie-stills/mahavamsam-14.jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இல்லைன்னா, நல்லெண்னை.. விளக்கெண்ணெ...தேங்காய் எண்னெய்.. நீங்க எப்படிப்போனா எனக்கென்ன? ( ஆஹா.. டி ஆர் பேரன் போல )

2.  பேசித்தீர்க்க வேண்டியதை தீர்த்துட்டு பேசுவான் ( ராஜபக்சே மாதிரி..?)

3.  இன்னைக்கு உங்களுக்கு நல்ல நேரம் தான்.. கடவுள் தான் உங்களை காப்பாத்தி இருக்காரு.. 

 உங்களை நீங்களே கடவுள்னு சொல்லிக்கறிங்களா?

4. கல்யாணம் பண்ணிக்கிட்டா பறவையா அறைக்குள்ளேயே இருக்க வேண்டியதுதான்.. சுதந்திரமா பறக்க முடியாது..  ( அல்போன்சாக்கு கூடத்தான் 2 டைம் மேரேஜ் ஆச்சு,.,. மேடம் சுதந்திரமா இல்லையா?)

5.  சினம் கொண்ட புலியா இருந்தாலும் தன் குட்டியை தின்னாது.. 

6. சந்தோஷம் என்பது ஆடம்பரத்துல மட்டும் கிடைப்பதல்ல.. 


7. நேரமும் , காலமும் சேரும்போது நாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு./.

http://mimg.sulekha.com/tamil/mahavamsam/stills/mahavamsam-cinema-034.jpg


யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்?

 சாண்டில்யன், கல்கி, விக்கிரமன் போன்ற வரலாற்று நாவல் ரசிகர்கள் பார்க்கலாம்.. எம் ஜி ஆர்  ரசிகர்கள்.. வரலாற்று கதைகள் விரும்பி படிப்பவர்கள் பார்க்கலாம்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38 ( இது ஹிந்திப்பட டப்பிங்க் என்பதால் விகடன்ல விமர்சனம் வராது, சும்மா போட்டிருக்கேன்)

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் -ஓக்கே

 சி.பி கமெண்ட் - முன் பாதி ஓக்கே.,. பின் பாதி இழுவை ( நோ டபுள் மீனிங்க்)

 ஈரோடு அண்ணாவில் பார்த்தேன்

தனி ஒரு மனிதனுக்கு கடலை போட உரிமை இல்லை எனில்.......


1.விஜயகாந்த் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது:ஸ்டாலின் #ழேய்.. அது பேச்சு இழ்ழே திட்டுனேன் - கேப்டன்


-----------------------------------

 2. ஆண்களுக்கு எப்படி என்று தெரியவில்லை,பெண்களுக்கு நிச்சயம் நகைகள் தேவை.


----------------------------------

 3. கோவை ஷேக்கு -எந்த ஃபிகரையும் கரெக்ட் பண்ண முடியல,எங்கேயும் கூட்டிட்டு போகவும் முடியல, இந்த பிரச்சனை எனக்கு மட்டும் தானா?


----------------------------------

 4. அதிமுக, திமுக இரண்டுமே விஷச்செடிகள்-விஜயகாந்த் # ம்க்கும், பூந்தோட்டக்காவல்காரனே இப்படி சொல்லலாமா?


--------------------------------

 5. பெண்களால்தான் இயங்குகிறது உலகம்! -சின்மயி # ஓடி ஆடி ஆஃபீஸ் போய் வேலை செஞ்சு இயங்குவது ஆண்கள், பெண்களால் கலகம் தான் எப்பவும்


------------------------

காலண்டர்லயே ப்ரிண்ட் பன்னிடுவான் போல--fb http://pic.twitter.com/KuSyTpqa- யங்க் சிங்கம்


6. டியர், அடிக்கடி தாலியை தொட்டு கும்பிடறியே, உனக்கு புருஷன்னா உசுரா?


போய்யா யோவ், எங்கப்பா போட்ட 6 பவுன் தாலிக்கொடி,1.3 லட்சம் ஒர்த்


-------------------------------

7. ஆஃபீஸ்ல லேடி ஸ்டாஃப் எல்லாரும் 6 மணிக்கு கிளம்பிடறாங்க, அதுக்குப்பிறகு எங்களை மட்டும் வேலை வாங்கி கொல்றாங்க :(


-------------------------------------

8. எங்கோ வெறித்தபடி அசையாமல் அமர்ந்திருக்கும் ஒரு நிமிடத்தில் போலீஸ் வந்து என்னை சந்தேகக்கேஸ்ல பிடிச்சுட்டு போயிட்டுது , அடங்கோ.

-----------------------

 9. காதலித்துப்பார் - உன் பாக்கெட் காலி ஆகும்,ஒரு ஃபிகரைத்தவிர எந்த ஃபிகர்ட்டயும் கடலை போட முடியாது - சுடலை முத்து


-----------------------------

 10. சொந்தமா யோசிச்சு ட்வீட் போடறதை விட எதிர் ட்வீட், ரீ மிக்ஸ் ட்வீட், உள் குத்து ட்வீட் போடறது ஜாலியாவும், ஈசியாவும் இருக்கு

-------------------------

இப்ப தான் பேப்பர் படிச்சேன்,அப்படியே ஷாக் ஆயிட்டேன்;p http://pic.twitter.com/Of9X3hdB - புரோட்டா புவனா

11. பெற்றோர்களை பெற்றோர்களாகப்பார்க்கும் குழந்தைகள் கிடைக்கப்பெற்ற பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான் :))# அடிச்சு விடு



-------------------------

12. தென்னந்தோப்புலயோ,பனந்தோப்புலயோ போய் குட்டிக்கர்ணம் அடிக்கறதுதான் ”தோப்பு” கர்ணமா? ஹி ஹி


---------------------------

13. ஒரு ஃபிகரோட ஃபேஸ்புக்ல உங்களுடன் இவரது பொதுவான நண்பர்கள்னு 12,678 பேரை காட்டுது, அடங்கோ.. நான் 12 ஆயிரத்தில் ஒருவனா?


------------------------------


14. புரோட்டா  புவனா -காத்தாலயே புரைஏறிகிட்டே இருக்கு யாரு நினைக்கறாங்களோ! கலாட்டா பாவனா - பசங்களுக்கு தண்ணி காட்டறதை கட்,ட்ரிங்க் வாட்டர்


---------------------------------

15. நையாண்டி நைனா-காதலுக்கு தூது போவதை விட சிவனேன்னு நாலு மாடு மேய்க்க போகலாம்! ச்சே!!

மாயாண்டி மைனா - நண்பனின் காதலிக்கும் தோழி உண்டு

---------------------------


தக்காளி ..எலேய் !!யாரவன் மேலே ,மாப்ள நான்தான்ட,குடை எப்புடி ,:))) # செம வொர்க் :)) http://pic.twitter.com/ou1mhJb5 - அண்ணே ஒரு விளம்பரம்




16. தமிழ் ஸ்டோரி-ன்னு ஒரு ட்விட்டர் ஹாண்டில் பார்த்துட்டு ஃபாலோ பண்ணேன், அடங்கொய்யால.. தமிழைத்தவிர மற்ற எல்லாத்தையும் வளர்க்கறாங்க


------------------------

17. யார் வெட்டியாய் ஆஃபீசில் அமர்ந்திருக்கிறார்களோ, அவர்களுக்கும், ரிசப்ஷனிஸ்ட்டுக்குமான தூரம் குறைகிறது # ஹி ஹி எ கீ


-------------------------------

18. ட்விட்டர்ல பாட்டுக்குப்பாட்டு போட்டி நடக்குது, இது அப்படியே பரிணாம வளர்ச்சி அடைஞ்சு கடலை VS ரகளை ஆகப்போகுது :)


------------------------------------

19. ஒரு இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாள் பஸ் கட்டண உயர்வு, இன்னொரு இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாள் கூடங்குளம் பணித்தொடக்க உத்தரவு


-----------------------------------

20. தனி ஒரு மனிதனுக்கு கடலை போட உரிமை இல்லை எனில் ட்விட்டரை அழித்திடுவோம் - பார் (BAR)ரதிப்பிரியன்

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்



பொண்டாட்டிகளிடம் புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்-னு ஒரு பதிவை போட்டாலும் போட்டுத் தொலைச்சேன்..,  மெயிலிலும், போன்லயும் மகளிர் அணிகள் குமுறி எடுத்துட்டாங்க. எப்படி இப்படி ஒரு போஸ்ட் போடலாம்ன்னு. அதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட என் வீட்டம்மாவும், உனக்கு எம்புட்டு தெகிரியம் இருந்தா இப்படி ஒரு போஸ்ட் போடுவே சோறும் கிடையாது, ஒண்ணும் கிடையாது வெளி திண்ணைல போய் படுய்யான்னு சொல்லி வெரட்டி விட்டுட்டாங்க.நான் வீட்டுக்குள்ள போக வேண்டி புருசன்மார்களிடம் பொண்டாட்டிகளிடம் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போடுறேன்(அப்பாவி ஆண்கள்லாம் என்னை மன்னிச்சுடுங்க..).

1. கல்யாணம் நிச்சயமான புதுசுல பர்த்டே, லவ்வர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவீங்க. ஆனால், கல்யாணம் ஆகிட்டாலோ எங்க பர்த்டே கூட மறந்து போகுதே! நிஜமாவே எங்களைத்தான் பார்க்க வருவீங்களா? இல்லை மச்சினிச்சியை பார்க்க வந்தீங்களா?

2. மீட்டர் 25ரூபாய்க்கு மேல துணி எடுத்து சட்டை போடாத கஞ்சூஸ் நீங்க, மாமனார் துணி எடுக்கும்போது மட்டும் பார்க் அவென்யூ சர்ட்டும், ரேமாண்ட் ஃபேண்டும் தவிர வேறேதும் போடாத மாதிரி சீன் போடுறிங்களே எப்படி?

3.உங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு லீவ் கிடைக்குது. ஆனால், எங்க வீட்டு விசேசத்தன்னிக்கு மட்டும் ஆடிட்டர் வந்துடுறார், இண்டெர்வியூ, மீட்டிங்க் ஏதாவது  வந்துதுடுதே அதெப்படிங்க?

4. உங்க வீட்டு விசேசத்துல வாசல்ல வாழைமரம் கட்டுறது முதற்கொண்டு , மிச்சம் மீதி மளிகை சாமான் வண்டில ஏத்தி வீட்டுக்கு கொண்டு வந்து இறக்கும் வரை மாடா வேலை செய்யும் நீங்கள், எங்க வீட்டு விசேசங்களில் மட்டும்  டீக்கா டிரெஸ் பண்ணிக்கிட்டு கால் மேல் கால் போட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டு மாப்பிள்ளை முறுக்கு காட்டுறீங்களே  அது எப்படிங்க?



5. உங்க வீட்டு விசேசங்களுக்கு சீர் செய்ய மட்டும் லோன் போடாம, சீட்டு பணத்தை உடைக்காம 25,000 கூட பணம் வருது. ஆனால், எங்க வீட்டு விசேசத்துக்கு சீர் செய்யறதுக்கு மட்டும், இன்கம் டாக்ஸ், மன்த் எண்ட் வந்து 1001க்கு மேல செய்ய முடியாம போய்டுதே எப்படிங்க ?




6. உங்க அக்கா பிள்ளைங்க, தம்பி பிள்ளைங்க கோடை விடுமுறைக்கு வந்து டி.வி, வாசிங்க் மெசின், ஏசிலாம் ரிப்பேர் செஞ்சு 1000, 2000ன்னு தண்டம் அழுதாலும் குழந்தைங்கன்னா அப்படிதான்மான்னு சொல்லிட்டு, எங்க அக்கா பிள்ளையோ, அண்ணன் பிள்ளையோ வந்து ஒரு 10ரூபாய் பொம்மையை உடைச்சுட்டால்கூட வானரப்படைகள்ன்னு திட்டுறிங்களே எப்படிங்க?

7. கம்மல் வாங்கி தாங்க, செயின் வாங்கி தாங்கன்னு கேட்டால் மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதிக்கும் நீங்க வீடு கட்ட, வண்டி வாங்கும்போது பணம் பத்தலை உன் செயினை தாயேன் கொலுசை தாயேன்னு ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல வந்து நிக்குறிங்களே எப்படி?

8. புடவை எடுக்கும்போது 500 ரூபாய்க்கு மேல புடவை எடுத்தால் முகத்தை தூக்கி எரவானத்துல வச்சுக்கிட்டு, எங்காவது கிளம்பும்போது எங்க ஆபீஸ் மேனேஜர் வீட்டு விசேசம் இப்படியா சாயம் போன சேலை கட்டிக்கிட்டு வருவே...,ன்னு  வழியெல்லாம் திட்டிக்கிட்டே வருவீங்களே. காஸ்ட்லியா புடவை எடுத்துக்குடுக்காத உங்களுக்கு வெட்டி பந்தா மட்டும் ஏங்க?

9. ஒருமணி நேரம் புடவை கட்டி, மேக்கப் போட்டு உங்களோடு வந்தாலும் அழகா இருக்கு, உன் நிறத்துக்கு எடுப்பா இருக்குன்னு சொல்லாத நீங்க பார்த்த பத்து செகண்டுக்குள் இந்த புடவை உங்களுக்காகவே தயாரிச்ச மாதிரி இருக்குங்க. இந்த மயில் டிசைன்  அழகுன்னு டைப்பிஸ்ட்டுக்கிட்ட ஜொள்ளு வழிய வழிய சொல்றிங்களே எப்படிங்க?


10. உங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால், லீவ் போட்டு ஊரை சுத்தி காட்டி, ஊரு கதை, உலகத்து கதைலாம் பேசறீங்க. ஆனால், எங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால் மட்டும் ஆபீசுல மீட்டிங்க், எம்டி வந்துட்டான்ன்னு சொல்லி ராப்பிச்சைக்க்காரன்கூட தூங்கினப்பின் வர்றீங்களே அதெப்படிங்க?





11.உங்களுக்கு சின்னதா தலைவலி வந்தால்கூடா ஆ, ஊன்னு கத்தி ஊரையே கூட்டி, பொழுதன்னிக்கும் படுத்து ரெஸ்ட் எடுக்கும் நீங்க..., எங்களுக்கு உடம்பு முடியாதப்ப ஃப்ரெண்ட்சை கூட்டி வந்து ஒரு சாம்பார், ரசம், ஒரு பொறியல், அப்பளம் மட்டும் செஞ்சுடேன். வேற எதும் வேணாம்ன்னு உங்களால் மட்டும் சொல்ல முடியுதே எப்படிங்க.


12. நீங்க ரெண்டு வீட்டுக்கு முன்னாடி வரும்போதே உங்க தொப்பை நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குறதை மறந்து.., எங்க ஆபீஸ் ஸ்டெனோ ஸ்லிம்மா சூப்பரா இருக்கா. நீயும் இருக்கியேன்னு பூசுனாப்புல குஷ்பூ போல இருக்கும் எங்களை கிண்டல் பண்றீங்களே எப்படி?


13. நண்பன் ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான் அதுக்கு பார்ட்டின்னு சொல்லி ராத்திரி முச்சூடும் பார்லயே பழியா கிடந்துட்டு, கடைத்தெருவுல காலேஜ் மேட்டை பார்த்து ஹாய் பார்த்து ரொம்ப நாளாச்சுடின்னு சொல்லும் தோழிக்கிட்ட பேசக்கூட விடாம பஸ் போய்டும், கிரிக்கெட் மேட்ச் இருக்குன்னு சொல்றிங்களே எப்படிங்க.


14. பொழுது போகாம சீரியல் பார்க்குற எங்களை குறைச் சொல்லி, ரிமோட்டை பிடுங்கி ஒரு நியூஸ் சேனல் விடாம பார்த்துட்டு, அப்பா இப்போ தமிழக கவர்னர் யார்ப்பா?ன்னு குழந்தை கேட்கும் கேள்விக்கு  ரோசையாவோ? சுர்ஜித் பர்னாலாவோன்னு நினைக்குறேன். எதுக்கும் அம்மாவை கேட்டுக்கோன்னு சொல்றீங்களே, நிஜமாவே நியூஸ்தான் பார்த்தீங்களா? இல்லை நியூஸ் வாசிக்குற லேடீசை பார்த்திங்களா?


15. பொழுதன்னிக்கும் ட்விட்டர், விடியோ சாட், ஆடியோ சாட், ஃபேஸ்புக், பிளாக், பஸ்ன்னு நெட்டுல சுத்திக்கிட்டு...,  ஸ்கூல்ல போய் அஞ்சாவது ஏ  செக்‌ஷன்ல படிக்குற குமாரை பார்க்கனும் சொல்ல பியூன் கூட்டி வரும் பையனை பார்த்து இது என் பையனில்லையேன்னு விழிக்க..  சார் உங்க பையன் பேரு சுகுமார்ன்னு அந்த வழியா வரும் கிளாஸ் டீச்சர் சொல்ற லட்சணத்துல குடும்பம் நடத்திட்டு..., பொண்டாட்டிகள்கிட்ட புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு ஒரு பதிவை மனசாட்சி இல்லாம போட்டீங்களே எப்படிங்க?


http://farm1.staticflickr.com/9/15602667_877f52006a_z.jpg?zz=1

 டிஸ்கி - முதல் பாகம் படிக்காதவர்களுக்காக   http://www.adrasaka.com/2012/02/blog-post_4359.html?m=0

Monday, March 19, 2012

மாசி - என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்ட் ஆஃப் ஆடியன்ஸ் - சினிமா விமர்சனம்

http://farm5.static.flickr.com/4015/4665225547_5f2fba7b71.jpga


வணக்கம் டைரக்டர் சார்.. அது எப்படி ரொம்ப தைரியமா இப்படி ஒரு டப்பா படத்தை உங்களால எடுக்க முடிஞ்சது?


 ஹா ஹா எல்லாம் நேரம் தான்.. நீங்க என்னமோ சூப்பர் ஹிட் படங்கள்ல மட்டுமே நடிச்ச மாதிரியும், இது 1 தான் டப்பா படம்கற மாதிரியும் சொல்றீங்களே.ஹூம்.. என்னத்தை சொல்ல.?


சரி. தமிழர்கள்க்கு உங்க மேல கோபம் வந்தா  என்ன செய்வீங்க?

 அவங்க  நெம்ப நெம்ப நல்லவங்க பாஸ்.. ஒரு இனத்தையே அழிக்க உதவி செஞ்சவரை தமிழ் இனத்தலைவர்னு சொன்னதும் அவங்க தான்.. வெண்ணை மாதிரி வெளிநாட்ல இருந்து இங்கே வந்து நம் இனத்தை அழிக்க புறப்பட்டதொன்னையை அன்னை என்றதும் அவங்க தான்.. டப்பா படம் கொடுத்தாக்கூட டாப்பா வசூல் கொடுத்துடுவாங்க..

அய்யய்யோ.. எனக்கு அரசியல் வேணாம்.. மேட்டர்க்கு வாங்க .. படத்தோட கதை என்ன?

உங்களுக்கு லொள்ளு, குசும்பு எல்லாம் ஓவர்யா.. படம் புக் பண்றப்போ, ஷூட்டிங்க் போறப்ப எல்லாம் கேட்காம படம் ரிலீஸ் ஆகி அட்டர் ஃபிளாப்  ஆன பிறகு கேக்கறீங்களே.. இனிமே இந்தப்படத்தோட கதையை தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க?

 ஹி ஹி .. சும்மா சொல்லுங்க..

அதாவது நீங்க நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர்.. கவுண்டர் ஜாதியா இல்லைன்னாலும் என்கவுண்ட்டர் ஜாதி நீங்க.. பர்சனல் லைஃப்ல எப்படி நீங்க கிடைச்ச ஃபிகரை மடக்கி போடுன்னு ஒரு கொள்கை வெச்சிருக்கீங்களோ அந்த மாதிரி கண்ல தட்டுப்பட்ட ரவுடியை போட்டுத்தள்ளுங்கற கொள்கை உள்ளவர்.. விக்ரம் படத்துல அம்பிகா வை வில்லன்க ஓப்பனிங்க்லயே ஷூட் பண்ண மாதிரி உங்க சம்சாரத்தை தவறுதலா ஒரு கன் ஃபைட்ல கொன்னுடறாங்க.. ரவுடிங்க.. உடனே நீங்க பலி வாங்க.. ஆடியன்சை பழி வாங்க கிளம்ப்றீங்க..






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWLleXK21jjG-6vdvTJWFScRJHN_k32XATX3gNNk-MzY8-OtWMvzZs1Xwp9bzzPKjWiM9QO41dnHkMc5gYsw08IM1dgo0-c3kMw2moGkDR5CPl-IgRpiCmsKKP4DCAhImpbY3JekImms0K/s1600/Maasi-Movie8.jpg

ஆனா படத்துல வேற நிறைய  சீன் இருந்துச்சே..

 அட இருங்க.. வில்லன் உங்களை அடக்க உங்க மேலயே பழி சுமத்தி உங்களையே ஜெயில்ல போட்டுடறான்.. இப்போ இடைவேளை.. தியேட்டர்ல கேட் எல்லாம் மூடியே இருக்கு.. ஒரு பய எஸ் ஆக முடியாது..

 ஹி ஹி ஹி

 ஜெயில்ல இருக்கறப்ப ஹீரோவுக்கும், வில்லனுக்கும் டீல்.. வில்லனுக்கு ஹெல்ப் பண்றதா ஹீரோ சொல்ல வில்லன் கேனத்தனமா நம்பி ஹீரோவை ரிலீஸ் பண்ணி டியூட்டில ஜாயின் பண்ண வைக்கறான்.. ஹீரோ எப்படி 346 பேரை கொலை செஞ்சு 346 வது ஆளா வில்லனையும் கொல்றார்ங்கறது தான் மிச்ச சொச்ச கதை..

 அடேங்கப்பா.. லேடீஸ் கிட்டே வர முடியாது போல இருக்கே?சரி.. வழக்கம் போல எனக்கு 2 ஹீரோயின் புக் பண்ணீங்க.. ஆனா அவங்களை நீங்க சரியான படி படத்துல நீங்களும்  காட்டலை.. அவங்களையும் காட்ட விடலை.. அது ஏன்?

 யோவ்,, நான் கவுரமான டைரக்டர்யா.. சீன் எல்லாம் காட்ட விட மாட்டேன்..

ஓஹோ.. சரி நம்ம கவுண்டமணி அண்ணனுக்கு நேத்து ( 19.3.2012) பர்த்டே.. பிறந்த நாளும் அதுவுமா உங்க படத்துக்கு போய் மாட்டிக்கிட்டாராம். உங்க கிட்டே ஏதோ கேக்கனும்கறாரு. எப்படியும் நீங்க பதில் சொல்ல மாட்டீங்க.. அந்த கேள்வியை மட்டும் படிங்க..




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_wsSTSt26WQdeK4poYCarTEd1eNh27anAEbpuO5xRComX19Zct4TcXaFb_5hXrTOuBek_Ksw2z1dD0wVHdgo6FhAWhTtIAis5zjvRrl2amNDo-gud-5mGHcFCgHVbeYUnAYZeP-jwQHk/s1600/Tamil+Movie+Maasi+2012+First+look%252CBanner%252CCast%252CWallpaper%252CStill%252CTrailer%252CCrew%252CMovie+Plot%252CBudget%252CPosters%252CPhoto%252C3.jpg

இயக்குநரிடம் கேட்க விரும்பும் கேள்விகள்


1. தன்னோட வாகனம் திருடு போனதை, அதை திருடுனது யார்?னு கண்டு பிடிச்ச ஹீரோயின் ஏன் அதை போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லாம, புகார் குடுக்காம  ரவுடி கிட்டே புகார் தர்றார்?



2.  என்கொயரிக்காக ஹோட்டல் வந்த இன்ஸ்பெக்டர் அர்ஜூன் ரிசப்ஷன் கேர்ள் கிட்டே  ரூம் நெம்பர் 24 ல யார் தங்கி இருந்தாங்க? சாவி குடுங்கன்னு கேட்டதும் சுவர்ல மாட்டி வெச்சிருக்கற  சாவியை தராம ரெடியா கைல வெச்சிருக்காரு அந்த பொண்ணு ஹய்யோ அய்யோ.. ( அந்த ஜிகிடி ஒரு மஞ்ச மாக்கி போல மஞ்ச கலர் சுடிதார்க்கு மேட்சா ஹி ஹி சாரி சென்சார் கட் )

3.  ஹீரொ அர்ஜூன் தன் அம்மாவின் சிதைக்கு நெருப்பு வைக்க சுடுகாட்டுக்கு வேட்டி சட்டைல வராம என்னமோ காலேஜ்க்கு போற மாதிரி ஜீன்ஸ் பேண்ட்டும், ஸ்டோன் வாஸ் சர்ட்டும் போட்டுட்டு வர்றார்.. ஏன்?


4. சிபிஐ ஆஃபீசர்ஸ் அர்ஜூனை விசாரனை பண்றப்ப என்னமோ பிரஸ் ரிப்போர்ட்டர் மாதிரி நோட்ஸ் எடுக்கறாங்க.. ஏன் டேப் இல்லையா?

5. அதே மாதிரி அர்ஜூன்கிட்டே பேட்டி எடுக்கற பிரஸ் ரிப்போர்ட்டர் கைல பென்சில் வெச்சிருக்காரு.. பாவம் பேனா கூட இல்லையா?

6. ஹீரோ அர்ஜூன் கதைப்படி ஒரு இன்ஸ்பெக்டர் தான்.. ஆனா அவர் ஜீப்பை விட்டு இறங்குனா எங்கிருந்தோ 280 நிருபர்ங்க ஓடி வந்து பேட்டி கேட்கறாங்க..  ஓவர் பில்டப்.. கமிஷனர் வந்தாலே 4 நிருபர்ங்க தான் பாஸ் வருவாங்க..

 7. அர்ஜூன் கூட இருக்கற ஒரு போலீஸ் ஆஃபீசர் ஒரு லேடி ரிப்போர்ட்டர் தோளை பிடிச்சு தேவையே இல்லாம தள்ளி விடறார்.. அப்படி எல்லாம் லேடி ரிப்போர்ட்டரை டச் பண்ணுனா கிழிச்சுடுவாங்க

8. ஹீரோ படத்துல பிச்சைக்காரருக்கு 3 சீன்ல இடது கைல தர்மம் பண்றாரு.. வலது கை புட்டுக்கிச்சா?

9.  ஹீரோயின் மவுண்ட் ரோட்ல நைட் கவுன் போட்டுட்டு அல்லது ஒரு நைட்டி போட்டுக்கிட்டு பட்டப்பகல்ல டான்ஸ் ஆடுது.. அவ்வ்வ்வ்

10. நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கேள்வி.. வேலப்பொழப்பில்லைன்னு 2 ஹீரோயின் புக் பண்ணுனீங்களே.. ஒரு ஆளையாவது ஃபுல்லா யூஸ் பண்ணுனீங்களா?

http://cinespot.net/gallery/d/352360-1/Maasi+tamil+movie+photos+_6_.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. எமன் கிட்டேயே எருமை மாடு திருடலாமா? இந்த தைரியம் அவனுக்கு எப்படி வந்தது?

2.  என்னப்பா ? இது லேடீஸ் வண்டி  மாதிரி தெரியுது?

 என் சம்சாரத்துது சார்..

நீ ஏன் உன் சம்சாரம் வண்டியை எடுத்துட்டு வந்தே?

 அடுத்தவன் சம்சாரம் வண்டியையா எடுத்தேன், என் சம்சாரம் தானே?

 ஓக்கே ஸ்டார்ட் பண்ணிட்டென் எடுத்துட்டு போ..

 என் சம்சாரம் வண்டி எனக்கே ஸ்டார்ட் ஆகலை.. உங்களுக்கு  எப்படி ஸ்டார்ட் ஆச்சு?

சிலருக்கு ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள்

3.  போலீஸ் என்னை 10  அல்லது 15 பேரை கொன்னதா சொல்றாங்க.. ராங்க் நெம்பர்..  ஜஸ்ட் 3 தான் இருக்கும்..

4.  நம்ம டிபார்ட்மெண்ட்ல நமக்கே சப்போர்ட் இல்ல சார்.. ஒவ்வொரு என்கவுண்ட்டருக்கும் நாம விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கு..


5.  அட.. பின்னால இருந்து பார்க்க நல்லவர் மாதிரி இருக்கீங்களேன்னு வந்தேன்

6.  ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவங்க எல்லாம் பெரிய ஆள் ஆகிடறாங்க.. அவ்வ்வ்

7.  வாழ்க்கைல எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு.. ஆனா அதை விலை குடுத்து வாங்கத்தான் யார் கிட்டேயும் தில் இல்லை..

8.  வில்லன் - நான் ஏன் உன்னை இங்கே வரச்சொன்னேன் தெரியுமா>

 ஹீரோ - ஒரு பொறுக்கி  எதுக்கு போலீஸை வரச்சொல்லுவான்?விலை பேச.. அல்லது மிரட்ட..



http://hott.in/wp-content/uploads/2010/05/Maasi-Audio-Launch-7.jpg


சரி, பாட்டை பற்றி சொல்லவே இல்லையே?

 உனக்காக நான் வாழ்வேன், கண்ணே நீ காதல் தேவதையோ அப்டினு 2 பாட்டு தேறுது.. அதுவும் தியேட்டர் விட்டு வெளீல வந்ததும் மறந்துடுது../

ஹீரோயின்ஸ் பற்றி எதுவுமே சொல்லலையே?

 அர்ச்சனா, ஹேமா அப்டினு 2 பேரு.. மொத்தமே 2 பேரும் 20 நிமிஷம் தான் வர்றாங்க.. படம் பூரா ஹீரோ யாரையாவது சுட்டுட்டே இருக்காரு..

 இந்தப்படம் யார் எல்லாம் பார்க்கலாம்? பொழுதே போகாதவங்க... காது வலி வந்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கறவங்க ( டமார் டுமீல் டமார் ), கூட்டமே இல்லாத தியேட்டர் வேணும் ஒதுங்க என நினைக்கும் கள்ளக்காதலர்கள் இவங்க எல்லாம் பார்க்கலாம்..

 புத்திசாலித்தனமா  கேட்கறதா நினைச்சு அப்போ நீஎந்த கேட்டகிரி?ன்னு கேட்றாதீங்க ஹி ஹி ...

யார் எல்லாம் இந்தப்படத்தை பார்க்கக்கூடாது? ஆஃபீஸ்க்கு ஒழுங்கா வேலைக்கு போறவங்க.. வேலை வெட்டி உள்ளவங்க, பெண்கள் இந்த படத்தை டி வி ல கூட பார்க்கக்கூடாது..





http://freemp3.mobiblaze.com/Wallpapers/Movie_Wallpapers/Tamil/M/Maasi/Maasi%201.jpg

 எதிர் பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர் பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - அய்யய்யோ!!!!!!!!!!!!!!!!!!!

இந்த படு டப்பா படத்தை ஈரோடு அபிராமில பார்த்தேன்.. இந்த லட்சணத்துல இந்தப்படம் ஈரோட்ல 4 தியேட்டர்ல போட்டிருக்காங்க.. 


ராஜபக்சே- சோனியா ரகசிய உரையாடல்,வெளியிட்ட இணைய தளம்

hehehe...
1. தினமும் காலையில் சூர்யோதயத்தை நாம் பார்க்கையில் ஈழத்தமிழர்கள் வாழ்வே அஸ்தமனத்தில் என்பதை நினைவில் கொள்வோம்


-------------------------------------

2. தமிழர்களின் தலை எடுக்கத் துணை போன தலைவர்கள் மீண்டும் அரசியலில் தலை எடுக்க நாம்  விடலாமா?


--------------------------------

3. ஈழத்தமிழனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க மறுத்த தமிழக அரசியல்வாதிகள் ஓட்டுப்பிச்சை கேட்டு நம் வீட்டுக்கு வருகையில் அவர்களை துரத்தி அடிப்போம்

--------------------------------------

4. ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி.. சோனியா, கலைஞர் இருவரும் குற்றவாளிக்குத்துணை போன குற்றவாளிகள்


--------------------------------------

5. ராஜபக்சே நம் விரோதி, அவனை நாளை கூட அழித்து விடலாம், ஆனால் காங்கிரஸ்-ம், தி முக வும் தமிழ் இனத்தின் துரோகிகள்,இன்றே அவர்களை துரத்தி அடிப்போம்

-----------------------------------------


6. ஞாபக மறதிதான் தமிழனின் தேசிய வியாதி.அதனால் தான் திராவிட கழகங்கள் மாற்றி மாற்றி நம்மை ஏமாற்றி வருகின்றன

-------------------------------

7.  உடன்பிறப்புகள் எல்லாம் வலி உடன்,எமன் உடன்,வேதனை உடன் போராடிக்கொண்டிருகிறார்கள்,அவர்களுக்காக நாம் போராட வேண்டாமா?


----------------------------------

8. சேவல்கள் கூவி பொழுது விடிவதில்லை, கழுகுகளின் சதியில் தமிழ் இனம் அழிவதில்லை


-------------------------------------

9. தோளில் மங்களகரமான  மஞ்சள் துண்டை போட்டுக்கொண்டு ஒருவர் தமிழ் இனத்தின் மார்பில் கறுப்பு பேட்ஜ் குத்தி விட்டார்


------------------------------------

10. சுனாமி வந்து சுருட்டிச்சென்றது ஓராயிரம் தமிழரை! ஒரு அனானி வந்து கொன்று சென்றான் ஒரு லட்சம் தமிழரை.

-----------------------------





 

11. இந்தியாவின் சிறந்த மாநிலம் குஜராத்! இந்தியாவின் மோசமான, கையாலாகத மாநிலம் தமிழகம்

------------------------------------------------

12. அகதிகளாய் பல அநாதைகள்.. அநாதையாய் அலைய வேண்டியவன் அரசனாய் # ராஜபக்சே


---------------------------------

13. ஆண்டவன் இருக்கிறானா? இல்லையா? இலங்கையை சுடுகாடு ஆக்கி ஆண்டவன், ஆள்பவன் மாண்டவன் ஆவது எப்போது?

-----------------------------

14.மறை மழண்ட சிங்களர்களுக்கெதிரான மெரினா கண்டனக்கூட்டத்தில்  கலந்து கொண்ட பாடல் ஆசிரியர் தாமரை-க்கு நன்றி


-----------------------------------

15. ஒரு வி ஐ பி  ஏதாவது தவறு செய்தால் கூட புகழ்ந்து தள்ளும் ஜனங்கள், ஒரு சாதாரணன் ஒரு சாதனை செய்தாலும் அதை பழிக்கிறதே!


----------------------------------



16. ராஜபக்சே - ஓ!கடவுளே! எனக்கு நீண்ட ,ஆரோக்யமான வாழ்க்கையை கொடு!


கடவுள் - அப்படி ஒரு சம்பவம் நடந்துட்டா மக்கள் என் மேல வெச்சிருக்கற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடும்

------------------------------------

17. சோனியா - காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்லாம போயிடுமோன்னு பயமா இருக்கு..

 ராகுல் - ம்க்கும், நிகழ்காலம் மட்டும் இருக்கா?


------------------------------------------

18. தமிழன் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கான்னா “கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல, அரண்மனைல வை”ங்கறதை கொள்கையா வெச்சிருக்கறதாலதான்


------------------------------------------------

19. 'துப்பாக்கி' படத்திற்காக தனது உடலமைப்பு எல்லாம் மாற்றி ஒரு தோட்டாவாகவே நடித்து வருகிறாராம் விஜய்.# கரூர் ஜெகன் கோவிச்சுக்க மாட்டாரா?

------------------------------------

20. ஹன்சிகா துணையோடு மீண்டும் இணைந்த சித்தார்த்-ஸ்ருதிஹாசன்...! # ஹூம், வாழ்க்கை ஒரு வட்டம்டா - தனுஷ்


---------------------------




21. ராஜபக்சே - இந்தியாவுல எப்படி எந்த பயமும் இல்லாம உங்களால இருக்க முடியுது?


 சோனியா - தமிழர்கள் அப்பாவிகள்,இன்னும் என்னை அன்னைங்கறாங்க

---------------------------------

22. சோனியா - நமக்கு வாய்த்த தி முக அடிமைகள் மிக மிகத்திறமை சாலிகள்!

ராகுல் - மக்கள் தான் நம் எல்லாருக்கும் எஜமானர்கள், மறந்துடாதீங்க


-------------------------------------

23. ராஜபக்சே - மேடம், என் பையனுக்கு எதுக்காக விருது கொடுத்திருக்கீங்க? \

சோனியா - தமிழர்களே அதை பற்றி கேட்கலை, உங்களுக்கென்ன போச்சு?


-----------------------------------

24. கஹானி ஹிந்திப்படத்துல நான் கர்ப்பவதியா நடிக்கறேன் -வித்யா பாலன் # மோசமான பொண்ணா டர்ட்டி பிக்சர்ல, மாசமான பொண்ணா கஹானில?


------------------------------

25. அம்மாவுக்கும்,மனைவிக்கும் நடக்கும் மோதலில் நான் பார்வையாளராக இருக்கக்கூட வாய்ப்பே இருந்ததில்லை! # கண் மண் தெரியாம அடிக்கறாங்க அவ்வ்


----------------------------------

ரஜகை ராபர்ட் படம் இது



டிஸ்கி - ராஜபக்சே- சோனியா ரகசிய உரையாடல்,வெளியிட்ட இணைய தளம் அட்ரா சக்க தான் ஹி ஹி  .......

கட்டுப்பட்டி பொண்ணு-ட்விட்டுப்பெட்டிப்பொண்ணு இன்னா வித்தியாசம்?

http://hotphotos.picswallpapers.com/var/albums/Bhoomika/hot/Bhoomika-hot-photo-004.jpg?m=13060016761.டியர், நீங்க என் காதலை மதிக்கலை....

 இல்லையே! நீ எப்போ வந்தாலும் உக்காந்திருந்தா எந்திரிச்சு நிக்கறேனே?


------------------------------------

2. ஒரு ( கோப்பை) கள் = (உன்) ஒரு கண்ணடி


----------------------------------

 3. இடைத்தேர்தல் என்றாலே ஒரு பரபரப்பு...பஸ் பயணத்தில் முன் பின் தெரியாத பெண்ணின் இடை காண நேர்தல் ஒரு கிளுகிளுப்பு # எதிர் கீச்சு


-----------------------------------

 4.டிப்ஸ் கொடுக்கனுமே என்பதற்காகவே நான் பெரிய ஹோட்டல்களுக்குப்போவதே இல்லை. ஒன்லி கையேந்தி பவன் ஆர் மெஸ் ஹி ஹி # எ கீ

------------------------------------

5. வள்ளுவர் - ஏய் வாசுகி, இங்கே வா!

 வாசுகி - யோவ், தண்ணி சேந்திட்டு இருக்கறது கண்ணுக்கு தெரில? வந்து குடத்தை எடுத்துட்டு போய்யா..


------------------------------------


6. 2 ஏக்கர் நிலம் வெச்சிருக்கறவன் எல்லாம் “பூமி விற்பனைக்கு”-ன்னு விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுட்டான்.. அடேய், அடங்குங்கலேய்


-------------------------------------------


7. டிபியில் கிளாமர் நடிகைகளை தோழிகள் வைப்பதால் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் விளக்கிட முடிவதில்லை


----------------------------------

8. கட்டுப்பட்டி பொண்ணுன்னா வீட்டை விட்டு வெளீல தனியா வரவே வராது, ட்விட்டுப்பெட்டிப்பொண்ணுன்னா ஜாக்கிரதையா யாருக்கும் ஃபோன் நெம்பர் தரவே தராது


-------------------------

9. காலைல இருந்து கரண்ட்டு இருந்துச்சு, ஆனாலும் உருப்படியா எந்த  வேலையும் செய்யல எப்பவும் போல  # பேக்கு மூலம் ஹி ஹி

--------------------------------

10. ரேணுகா - நான் கண்டிப்பா யாருக்கும் ஃபோன் நெம்பர் தர மாட்டேன்


பூமிகா - சரி, அன்பா தாங்க

--------------------------------------

http://gallery.southdreamz.com/cache/actress/shreya/hot-dancing-scene/hot-glamour-actress-shriya-spicy-stills-35_720_southdreamz.jpg

11. காஞ்சனா -உனக்கு  வேற வேலை இல்லயா?.

 காஞ்சு போன ஜனா - ஹலோ, வேலை இருந்தா அதை பாக்க மாட்டோமா?ஒய் கடலை போட இதர் கமிங்க்?

---------------------------

12. டியர், அடிக்கடி தாலியை தொட்டு கும்பிடறியே, உனக்கு புருஷன்னா உசுரா?

 போய்யா யோவ், எங்கப்பா போட்ட 6 பவுன் தாலிக்கொடி,1.3 லட்சம் ஒர்த்


------------------------------

13. துரையம்மா - கடவுள் படைச்சதுலையே அருமையான விஷயம் சாப்பாடு தான் !

துரை - மம்மி, அளவு சாப்பாடா? அன்லிமிட்டட் சாப்படா? ஹி ஹி

---------------------------

14. திறமையை விருத்தி செய்பவன் வாழ்வில் விருட்சம் ஆகிறான், தேக்கி வைப்பவன் தாழ்வில் மிரட்சி அடைகிறான்

------------------------------

15. ஆற்றைக்கடப்பது சிரமம்னு சொல்றாங்களே. 6, 16, 26, 36, 46.. னு ஈஸியா கடக்கலாமே?ஹி ஹி

------------------------------

16. தகுதி வாய்ந்தவர்கள், புகழ் பெற்றவர்கள் அங்கீகரிக்கும்போதுதான் ஒரு நல்ல படைப்பு அதிக மக்களை சென்று அடைகிறது


------------------------------------

17. ஆத்திகவாதி, நாத்திக வாதி என்று எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் கணேஷ் பீடி விற்கப்படுகிறது


------------------------------------

18. . கப்பல் ஓட்டிய தமிழனை ஆங்கிலேயன் கொன்றான், படகு ஓட்டிய தமிழனை சிங்களன் கொல்கிறான்


---------------------------

19. திருப்பதியில் சீப்பு வியாபாரமும், பஞ்சாபில் சவரக்கத்தி வியாபாரமும் செய்யக்கூடாது

---------------------------------

20. பிராண்ட் அம்பாசிடர்க்கு தூய தமிழ் வார்த்தை -முத்திரைத்தூதுவர் -இவரை அமர்த்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது 


--------------------------------------

http://www.jayahotelugu.com/jayahotelugu/News/bhoomika290610/bhoomika-4.jpg

Sunday, March 18, 2012

புத்திர சோகம்....- சிறுகதை

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataU/unnikris/images/restricted/15-05-2009/babies_108_.jpg 

சரளாவின் இதயத்தில் ஓங்கி ஆணி அடிச்ச  மாதிரி இருந்துச்சு. அப்போ அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்த அந்த எண்ணங்களின் எதிரொலி. எத்தனையோ இழப்புகளும் அதனால் ஏற்பட்ட சோகங்களும் அவள் மனசை முழுசா ஆக்கிரமிச்சுக்கிட்டு இருந்துச்சு. தன்னை மறந்த நிலைலிருந்த  அவள் நினைவுகளில் நீந்தத்தொடங்கின அன்னிக்கு காலைல அவளது வீட்டில் நிகழ்ந்த அந்த சம்பவம்.


அன்னிக்கு காலைல சரளாவின் கணவன் ரகு ஆபீஸ் போக ரெடியாகிட்டு இருந்தான் .  சரளா கிச்சனில் காலை உணவு ரெடி பண்ணிக்கிட்டிருந்தாள். அப்போ தான் ரகுவின் மூத்த அக்கா புவனா  வீட்டிற்கு வந்தாள். வந்தவள நேரா ரகுவின் ரூமுக்கு போய் ரகுவிடம் பேசிக்கிட்டிருந்தாள். சரளாவின் காதுகளிலும் அந்த பேச்சு விழுந்தது.


”ஏண்டா ரகு, நானும் எத்தனை நாளா சொல்லிட்டு இருக்கேன். நீ கொஞ்சமாவது என் வார்த்தையை காதில் வாங்குரியா”


”இப்ப உனக்கு என்னக்கா வேணும் சொல்லு. எதுக்கு இப்ப வந்ததும் வராததுமாக இப்டி என்னை ஆஃபிஸ் கிளம்ப விடாம ஆர்ப்பாட்டம் பண்றே”


”என்னடா இப்படி சொல்லுறே, உன் பொண்டாட்டிக்கு இது வரைக்கும் நாலு முறை கரு தரிச்சது. நாலுமே குறை மாதத்துலயே செத்தே பொறந்திருச்சு. அவளுக்கு ஏதோ குறை இருக்குடா. அதுனால தான் உன்னை இன்னொரு கல்யாணம் செய்துக்க சொல்றேன். என் மகளுக்கும் திருமண வயசு வந்திருச்சு. அவளுக்கும் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியாச்சு. பேசாம அவளை உனக்கே கல்யாணம் செய்து வைக்கிறேன். அவ மூலமாவது உனக்கு ஒரு நல்ல ஆரோக்யமான குழந்தை பிறந்து நம்ம வம்சம் தழைக்கட்டும். நானும் என் கணவரை பறி குடுத்துட்டு நிற்கிறேன். நீ அவளை திருமணம் செய்துகிட்டா நானும் என்னோட இறுதி காலத்தை இங்கயே கழிச்சுடுவேன்“.


அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை எதேச்சையாக கேட்டுவிட்ட சரளா அந்த நிமிசத்திலிருந்தே நிலை குலைந்து போனாள். மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் இமை நிறைந்து வழிந்தது. பொங்கிக்கொண்டு வந்த அழுகையை தன் தொண்ண்டைக்குள்ளாயே  கட்டிப்போட்டு வைத்தாள். மூன்று முடிச்சுகளுக்கு கட்டுப்பட்டவளாய், அன்றைய பகல் பொழுது முழுவதும் ஒரு நடை பிணமாக பல மனப்போராட்டங்களுக்கு நடுவே ஓர் உறுதியான முடிவு கிடைத்தவளாய் தன் கனவுகளுக்கு அன்றிரவே அமைதி கொடுக்க வேண்டும் என காத்திருந்தாள் தன் கணவனின் வருகைக்காக. 

https://www.nhm.in/img/978-81-8368-710-2_b.jpg


எத்தனையோ இனிய இரவுகளை தங்கள் வாழ்க்கை புத்தகத்தில் காவியமாக பதித்த அவர்கள் வாழ்வில் இன்றைய இரவு ஓர் திருப்புமுனையை பெற்றுத்தந்தது. இரவு முழுதும் பலவித கெஞ்சல், கொஞ்சல், அழுகை, சமாதனங்களுக்குப்பின் ரகுவிற்கு இரண்டாவது மணம் முடிப்பது என்றும், சரளா வேறு ஒரு வாடகை வீட்டில் குடிபோவது என்றும் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.


பேசி முடிவு செய்தது போலவே ரகுவுக்கும் புவனாவின் மகள் ஆனந்திக்கும் திருமணமும் இனிதே நிறைவேறியது, சரளாவும் வாடகை வீட்டில் குடியேறினாள்.


2 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் சரளாவின் கைபேசி அதிர்ந்தது. எதிர்முனையில் அவளது கணவனின் குரல் ஒலிக்க, அப்போது அவன் ஆனந்தி கருவுற்றிருக்கும் செய்தியைக் கூறினான். அதைக்கேட்டு மகிழ்ச்சியின் எல்லைவரை சென்ற அவள் தானும் கருவுற்றிருப்பதை தன் கணவனிடம் பகிர்ந்து கொள்ளாமல் தனக்குள் மட்டுமே மகிழ்ந்து கொண்டாள்.


மாதங்கள் வேகமாக நகர்ந்தன. தலை பிரசவத்திற்காக ஆனந்தி அந்த பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கடவுள் நம்பிக்கையை மட்டுமே தன் துணையாக கொண்டிருந்த சரளாவும் அதே மருத்துவமனையில் ரகுவால் சேர்க்கப்பட்டாள்.


எத்தனையோ ஏக்கங்கள், இழப்புகள், ஏளனங்களுக்கு இடையே இப்பிறவியின் பயனை அடைந்தவளாய் ஆழ்கடல் முத்தைப்போல் சரளா ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனந்திக்கோ பெண் குழந்தை அதுவும் தாயின் கருவறையையே கல்லறையாக்கிக் கொண்டு வயிற்றுக்குள்ளேயே இறந்தே பிறந்தது. இதைக் கேள்விப்பட்ட சரளா அதிர்ந்து போனாள். 


முன்பு தான் பெற்ற அதே நரக வேதனை ஆனந்திக்கும் நேர்ந்துவிட்டதே என்பதை உண்ர்ந்த அவள் சட்டென ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவலாய் தன் 10 வருட தாம்பத்திய வாழ்க்கையின் வரப்பிரசாதமாய் தான் பெற்றெடுத்த அந்த ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆனந்தியின் அறைக்கு விரைந்தாள். மயக்க நிலையிலும் ஆனந்தியின் முகத்தில் மலர்ந்திருக்கும் அந்த மகிழ்ச்சி மங்கி விடக்கூடாதென தன் வாழ்வின் ஆதாரத்தை அவள் அருகில் இருந்த தொட்டிலில் போட்டுவிட்டு தன் கண்ணீர் துளிகளையே குழந்தைக்கும் ஆனந்திக்கும் ஆசீர்வாதங்களாய் தந்துவிட்டு அறையினின்றும் வெளியேறினாள்.


இதை கவனித்துக் கொண்டிருந்த ரகுவும் அவனது சகோதரியும் மிகுந்த குழப்பம் அடைந்தவர்களாய் சரளாவிடத்தில் “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு, ஏன் இப்படி பன்னுன இந்த குழந்தை தான் உனது கனவு” என்று கேட்டனர்.






http://www.viduppu.com/photos/full/couples/jothika_Diya_Birthday002.jpg
அதற்கு சரளா “ஒரு பிள்ளையை பெற்றெடுத்து அதை உடனே பறி கொடுக்குற புத்திர சோகம் மிகவும் கொடுமையானது, அந்த கொடுமையை நான் ஏற்கனவே நாலுமுறை அனுபவிச்சுட்டேன். அது எனக்கு பழகிவிட்டது, ஆனால் ஆனந்தி அப்படி அல்ல. அவ சின்ன பொண்ணு, அந்த கொடுமையை அவ அனுபவிக்க வேண்டாம். அதை அவ தாங்கிக்கவும் மாட்டா. இந்த குழந்தை அவ குழந்தையாவே வளரட்டும், தூரத்தில் இருந்தே நான் பார்த்து சந்தோசப்பட்டுக்குவேன் “ என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.


சரளா கூறிய அந்த வார்த்தைகளை கேட்டு ரகுவின் சகோதரி புவனாவின் கண்களில் தன் குற்ற உணர்ச்சி கண்ணீராய் வழிந்தது.

காஜல் அகர்வால் ,அல்போன்சா, த்ரிஷா யார் காமெடி டாப்? ( ஜோக்ஸ் )

1.தனது ஒவ்வொரு செயலையும் பெற்றோருக்கு தெரிவித்து விட்டு செய்வதில் பெண் ஆணை விட  முன்னணியில் இருக்கிறாள்


-------------------------------

2. அல்போன்சா - யுவர் ஆனர்,சாகறதுக்கு முன்னால என்  கணவர் என் கூட  சந்தோஷமா இருந்தார்.

ஜட்ஜ் - சட்டத்துக்கு ஆதாரம் தேவை, வீடியோ லிங்க் இருக்கா?

---------------------------------

3. தனி சம்பாத்தியம் வந்த பின்னும் பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பதே  பெற்றோரை மதிப்பதற்கான அடையாளம்


---------------------------------

4. நிர்வாண போஸ் குறித்த செய்திகள் ரொம்ப சில்லியான மேட்டர் -  காஜல் அகர்வால்# நோ, அது கில்லியான மேட்டர்


----------------------------

5. அல்போன்சா- யுவர் ஆனர், என் முத கணவரோட நான் சந்தோஷமா இருந்தது என் 2 வது கணவருக்கு பிடிக்கலை, அதனால 3வது கணவரை தேடி போனப்ப பிரச்சனை ஆகிட்டு


-----------------------


6. பெரும்பாலான ஆண்களின் தடுமாற்றம் -தாய் சொல்லை தட்டாதே, மனைவி சொல்லே மந்திரம் 2டையும் பேலன்ஸ் செய்வது எப்படி என்பதே!


--------------------------------

7. வெளி அழகு,உருவத்தோற்றம் 2க்கும் பெரும்பாலான பெண்கள் முக்கியத்துவம் தருவதில்லை,பாதுகாப்பு, நம்பிக்கை, கண்ணியம் இவையே அவர்கள் எதிர்பார்ப்பு

------------------------------------

8. கொடுத்த வாக்கை காப்பாற்றுதல், நேரம் தவறாமை (PUNCTUALITY) இவற்றை கடைப்பிடிப்பதில் பெண்ணை விட ஆண் அதிக முனைப்பு காட்டுகிறான்

---------------------------------

9. ஜட்ஜ் - உங்களுக்கு மொத்தமா எத்தனை கணவர்கள் மேடம்? 

அல்போன்சா -எல்லாருமே ஒல்லிதான் யுவர் ஆனர்.. ஒல்லி ஈஸ் ஆல்வேஸ் கில்லி ஹி ஹி

---------------------------------

10. ஜீவாவுடன் ஜோடி சேரும் த்ரிஷா # ம்க்கும், ஏற்கனவே சிம்புக்கும்,ஜீவாவுக்கும் வாய்க்கா தகறாரு,இனி பாருங்க த்ரிஷாக்கும், சிம்புக்கும் சண்டை

-------------------------------
11. ஆண் குழந்தை பிறந்தால் நிகழ்கால பெருமிதமாகவும், பெண் குழந்தை பிறந்தால் எதிர்கால பாதுகாப்பு என்றும் பெற்றோர்கள் நினைக்கிறார்க:ள்


---------------------------------

12. ரயிலுக்கு ஏன் ஸ்டெப்னி இல்லை? 

விட்டா தசரத சக்கரவர்த்திக்கு ஏன் சின்ன வீடு இல்லைன்னு கேப்பீங்க போல.அதான் ஆல்ரெடி 1000 இருக்கே?

----------------------------------------

13. பெண் குழந்தை இல்லாத வீடு அலங்காரம் இல்லாத மணப்பெண் போல


--------------------------

14. ஒரு நல்ல படைப்பை பார்த்ததுமே டக் என்று RT செய்துவிடுங்கள்.ஆண்ட்வீட்டரா?பெண் ட்வீட்டரா? பிரபலமா? புது ஆளா? என பார்க்க வேண்டாம்


------------------------------

15. அம்மா,மனைவி,மகள் என்று பெண்களின் அன்பு சூழ வாழும் ஆண்கள் தவறு செய்வதில்லை

----------------------------


16. நான் ஒரு இண்ட்டெலிஜெண்ட் கேர்ள் - குஷ்பூ # அட!, பிரபு, சுந்தர் சி, கார்த்திக் எல்லாருமே இதையே தான் சொன்னாங்க மேடம்


----------------------------

17. கற்பு நெறி பிறழாமல் வாழ்வது பெண்களுக்கு பரம்பரைப் பழக்கமாக ஆகிவிடுவதால் ஆண்களுக்குத்தான் அதிக மனோபலம் தேவைப்படுகிறது


-----------------------------

18. அன்புள்ள புரொடியூசர்களே! 2012ல ஆரண்ய காண்டம் படத்துக்கு விருது கிடைச்சதால 2013 -ல விருதுக்கு ஆசைப்பட்டு அழகிய காண்டம்,பழகிய காண்டம்னு படம் எடுக்காதீங்க, விருது அதுக்கு கிடையாது.. ஹி ஹி

---------------------------------

19. இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு 9 தாரா தனது புதிய காதலரை அறிவிப்பார்,2 லட்சம் இளைஞர்கள் பெயரை அண்டாவில் போட்டு நமீதா முறையில் செலக்‌ஷன்


-------------------------------------

20.  நான் செஞ்ச உப்புமால உப்பு போட மறந்துட்டேன், இப்ப நான் செஞ்சத உப்புமான்னு சொல்லலாமா?

 இல்லை சப்புமான்னு சொல்லுங்க :) அல்லது ஆப்புமான்னு சொல்லுங்க

-----------------------------------

http://a.imageshack.us/img861/5863/43211934470981829101434.jpg