Sunday, March 18, 2012

பொது பட்ஜெட் 2012-13 அப்டேட்ஸ்: முக்கிய அம்சங்கள்


தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் ரூ.20,000-ஐ உயர்த்துவது உள்ளிட்ட நடுத்தர மக்களின் மகிழ்ச்சிக்குரிய அம்சங்கள் இருக்கும் அதேவேளையில், சேவை வரி உயர்வு, கலால் வரி உயர்வின் தாக்கங்களைச் சுமந்துகொண்டு வந்திருக்கிறது, பொது பட்ஜெட் 2012-13.
2012-13 பொது பட்ஜெட்டில் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:

* உலக பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

* பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


* இந்த ஆண்டு வேளாண் வளர்ச்சி 2.5%

* இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, பின்னர் நிலையானதாக இருக்கும்.

* பொருளாதார சீர்திருத்தத்துக்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலராக அதிகரித்துள்ளது. இது, எரிபொருள் மானிய மசோதாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பு நாடாளுமன்ற தொடரில் கறுப்பு பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 


* நேரடி வரிவிதிப்பு மசோதா இயன்றவரை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.


* ஊட்டக்குறைவு, கறுப்பு பணம், ஊழல் போன்றவற்றை களைவதற்கு அதி முக்கியத்துவம் தரப்படும்.
* கார்ப்பரேட் சந்தை சீர்த்திருத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
* பால் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.242 கோடி உதவி.
* மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.
* தேசிய உணவு மேலாண்மை திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.
* கட்டுமானத் துறைக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் கோடி தேவை. இதில் பாதியளவு தனியார்த் துறையிடம் இருந்து பெறப்படும்.
* பின் தங்கிய பகுதிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.12,040 கோடி ஒதுக்கீடு.
* கல்விக் கடனுக்காக கடன் உத்தரவாத நிதி திட்டம் பரிந்துரைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு (இது கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி)
* 200 மாவட்டங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும்.
* தேசிய ஊரக மேம்பாட்டுக்கு ரூ.20,820 கோடி ஒதுக்கீடு.
* காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு ரூ.8,447 கோடி ஒதுக்கீடு.
* தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.
* தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.3,915 கோடி செலவிடப்படும்.
* ஊரக சாலை வசதி திட்டத்துக்கு ரூ.24,000 கோடி.
* வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி.
* 7 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.
* ஏப்ரல் 2012-க்குள் 40 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்படும்.
* பாதுகாப்புத் துறைக்கு ரூ.1,93,407 கோடி நிதி ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டை விட 17 சதவீதம் அதிகம்.
* போக்குவரத்து மற்றும் மின்சாரத்துக்கு தலா ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
* பொதுத்துறை வங்கிகளுக்கான முதலீடு ரூ.15,888 கோடி.
* மாநிலங்களுடன் ஒருமித்த கருத்துடன் சில்லறை வர்த்தகத்தில் 51% அந்நிய நேரடி முதலீட்டுக்கு நடவடிக்கை.
* அடுத்த 5 ஆண்டுகளில் யூரியா தேவையில் இந்தியா தன்னிறைவு அடையும்.
* மண்ணெண்ணெய் நேரடி மானியம் பைலட் ப்ராஜகட் என்ற திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் என்ற இடத்தில் தொடங்கி வைக்கப்படும்.
* நிதி சீர்திருத்த மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.
* உணவுப்பொருட்களுக்கான மானியம் தொடரும்.
* சமையல் எரிவாயுக்கு மானியம் வழங்குவதில் புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.
* உரம் மானியம் வழங்குவதில் அரசு புதிய திட்டத்தை கடைபிடிக்கும்.
வருமான வரிவிலக்கு வரம்பு..
* தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு, ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.
* ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்‍கு 10 சதவீதம்.
* ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம்.
* ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவோருக்‍கு 30 சதவீதம் வரியும் விதிக்‍கப்படுகிறது.
* வங்கி சேமிப்புக்‍ கணக்‍குகள் மீதான வட்டித் தொகைக்‍கு 10 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்‍கு.
* சீனியர் சிட்டிசன்கள் முந்தைய வரி கட்டுவதில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
* கார்ப்பரேட் வரிவிதிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை.
வேளாண் கடன் இலக்கு 5.75 லட்சம் கோடி!
* உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு முழு மானியம் அளிக்‍கப்படும்.
* வேளாண் துறைக்‍கான ஒதுக்‍கீடு 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் ரூ.20,208 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* விவசாயத்துக்‍கான கடனுதவி 5.75 லட்சம் கோடியாக உயர்வு.
* விவசாயிகளுக்‍கான கடனுதவி மீது 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
* விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு 18% அதிகரிக்கப்படும்.
* கிராமப்புற சுகாதார, குடிநீருக்கு ரூ.14,000 கோடி.
* நபார்டு வங்கிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
* நபார்டு சட்ட திருத்த மசோதா நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.
* நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* பண்ணை நீர் பாசனம், நுண்ணுயிர் பாசனத்துக்கு கடன் வழங்க தனி அமைப்பு.
* விவசாயத்தை பாதிக்காத வகையில் 100 நாள் வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* விவசாய கடன் அட்டைகளை ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.
* பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம் ரூ.30,000 கோடி வரை திரட்ட இலக்‍கு நிர்ணயிக்‍கப்பட்டுள்ளது
* பங்குச்சந்தையில் தகுதிவாய்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்‍கப்படும்.
* சென்னை அருகே தொற்று நோய் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
* 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அரசு, தனியார் துறைகள் மூலம் 6,000 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.
* 150 மாவட்டங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.3 லடசம் கடன் உதவி.
* சிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.25,555 கோடி
* மதிய உணவு திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.
வருமானவரியை சேமிக்க புதிய திட்டம்...
* சிறு முதலீட்டார்கள் பயன் பெறும் வகையில் ராஜீவ் காந்தி பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டம் தொடங்கி வைக்‍கப்படும். இதில் 5 லட்சம் வரை முதலீடு செய்து 50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்‍கு பெறலாம்.
* கச்சா எண்ணெய் மீதான மானியச் செலவு அதிகரிப்பு
* விமான எரிபொருளை நேரடியாக இறக்‍குமதி செய்ய அனுமதி; விமானப் போக்‍குவரத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்‍கத் திட்டம்;  விமான போக்‍குவரத்துத்துறைக்‍கு நடைமுறை மூலதனமாக 100 கோடி டாலர் திரட்ட திட்டம்.
* பொதுத்துறை வங்கிகளின் மறு முதலீட்டுக்‍கு ரூ.15,890 கோடி ஒதுக்‍கீடு.
* உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50 லட்சம் கோடி.
* 8,800 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்த ரூ.25,360 கோடி ஒதுக்‍கீடு
*  10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்‍க திட்டம்
* நுண் கடனுதவி நிறுவனங்கள் நெறிமுறை மசோதா கொண்டுவரப்படும்.
சேவை வரி அதிகரிப்பு...
* சேவை வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்வு. இதன் மூலம் ரூ.18,660 கோடி கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு.
* சேவை வரி விதிப்பில் இருந்து ப்ரீ ஸ்கூல் உள்ளிட்ட பள்ளிக் கல்வி, சினிமா துறை முதலியவற்றுக்கு விலக்கு.
* கலால் வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு.

* வேளாண் சாராத பொருள்களுக்கான சுங்கவரி அதிகபட்சமாக 10 சதவீதம்.

வேளாண்மை, உள்கட்டமைப்பு, சுரங்கம், ரயில்வே, சாலைகள், விமானப் போக்குவரத்து, உற்பத்திப் பிரிவுகள் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளுக்கு மறைமுக வரியிலிருந்து விலக்கு.

* சில குறிப்பிட்ட வகை சிகரெட்டுகள், பீடிகளுக்கு கூடுதல் கலால் வரி, பெரிய வகை கார்களுக்கு சுங்கவரி உயர்வு,

முத்திரையிடப்படாத நகைகளுக்கும் கலால் வரி, சிறிய கலைஞர்கள், பொற் கொல்லர்கள் மற்றும் முத்திரையிடப்பட்ட வெள்ளி நகைகளுக்கும் கலால் வரியிலிருந்து விலக்கு

*  வரி விதிப்பு மூலம் நிகர வருவாய் ரூ.41,440 கோடி
பல்வேறு வரிவிதிப்புகள் அடங்கிய பொது பட்ஜெட் எதிரொலியால் விலை குறையும் பொருட்கள்:
புற்றுநோய், எச்.ஐ.வி. மருந்துகள்
சோலார் பவர் விளக்குகள், எல்.இ.டி. பல்புகள்
அயோடின் உப்பு
சோயா உணவுப் பொருட்கள்
தீப்பெட்டிகள்
எல்.இ.டி மற்றும் எல்.சி.டி. டிவிக்கள்
பொது பட்ஜெட் எதிரொலியால் விலை அதிகரிக்கும் பொருட்கள்:
ஏ.சி. சாதனங்கள்
ஃபிரிட்ஜ்
சைக்கிள்கள்
ஜி.எஸ்.எம்., பி.டி.ஏ. மொபைல்கள்
தங்கம், பிளாட்டினம்
கார்கள்
சிகரெட்டுகள்
உயர்தர ஓட்டல் உணவுகள்
விமானக்கட்டணங்கள்
2012-13 ஆம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடுகள்:

* மொத்த வரி வருமானம் - ரூ.10,77,612. கோடி (2011-12) ஆம் ஆண்டுக்கான மறுமதிப்பீட்டைவிட 19.5 சதவீதம் கூடுதலாகும்.

* மத்திய அரசுக்கான நிகர வரி வருமானம் ரூ.7,71,071 கோடி (மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பின்)

* வரியல்லாத வருவாய் - ரூ.1,64,614 கோடி

* கடனல்லாத வருவாய் - ரூ. 41,650 கோடி

* மொத்த செலவீனம் - ரூ.14,90,925 கோடி

* திட்ட செலவு - ரூ.5,21,025 கோடி

* திட்டமிடாத செலவு - ரூ. 9,69,900 கோடி

* உலக பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

* பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த ஆண்டு வேளாண் வளர்ச்சி 2.5%

* இந்த ஆண்டு பணவீக்கம் மேலும் குறையும்.

* தொழில்துறை வளர்ச்சி பலவீனமாக உள்ளது.

* முதல் காலாண்டில் ஏற்றுமதி 23% ஆக உயரும்.
* இந்திய பங்கு வர்த்தகம் மேம்பட்டுள்ளது.

* இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, பின்னர் நிலைமை சீரானதாக இருக்கும்.

* வேளாண் மற்றும் சேவைத் துறை தொடர்ந்து சிறப்பாக உள்ளது.

* பொருளாதார சீர்திருத்தத்துக்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலராக அதிகரித்துள்ளது. இது, எரிபொருள் மானிய மசோதாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
* உணவு மற்றும் உரம் மானியங்கள் மிகப் பெரிய அளவில் செலவினத்தை ஏற்படுத்துகின்றன.

* உணவுப் பாதுகாப்பு மானியம் முழுமையாக வழங்கப்படுகிறது.
* மண்ணெண்ணெய் நேரடி மானியம் பைலட் புராஜெக்ட் என்ற திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் தொடங்கி வைக்கப்படும்.
* சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு நேரடி நிதி மானியம்

* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

* நேரடி வரிவிதிப்பு மசோதா இயன்றவரை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
* ஊட்டக்குறைவு, கறுப்பு பணம், ஊழல் போன்றவற்றை களைவதற்கு அதி முக்கியத்துவம் தரப்படும்.

* பங்குச்சந்தைகளில் ரூ.50,000 ஆயிரம் வரை முதலீடு செய்வதற்கு சலுகைகள்.

* பொதுத்துறை வங்கிகள், மண்டல ஊரக வங்கிகளுக்கு ரூ.15,888 ஒதுக்கீடு.

ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு கீழே இருப்பவர்கள், ரூ.50,000 வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், 50 சதவீத வரிமான வரிவிலக்கு சலுகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு ராஜீவ் காந்தி பெயர்.

* மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், தேசிய நில வங்கி மற்றும் கடன் மேலாண்மை மசோதாக்கள் வரும் நிதியாண்டில் தாக்கல் செய்யப்படும்.

* தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கான ஒதுக்கீடு 14 சதவீதம் உயர்வு. வரும் நிதியாண்டில் 8,800 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

* கார்ப்பரேட் சந்தை சீர்த்திருத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

* அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெறும்.

* பால் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.242 கோடி உதவி.

* வேளாண் கடன் இலக்கு ரூ.5.75 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

* நபார்டு வங்கிகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

* ஏ.டி.எம்.களில் கிஸான் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்.

* குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு பரிசு.

* உணவு தானியங்களை சேமிக்க புதிய கிடங்குகள் அமைக்கப்படும்.

* மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.

* தேசிய உணவு மேலாண்மை திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.

* கட்டுமானத் துறைக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் கோடி தேவை. இதில் பாதியளவு தனியார்த் துறையிடம் இருந்து பெறப்படும்.

* பின் தங்கிய பகுதிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.12,040 கோடி ஒதுக்கீடு.

* 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 6,000 பள்ளிகள் கட்டப்படும்.

* கல்விக் கடனுக்காக கடன் உத்தரவாத நிதி திட்டம் பரிந்துரைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு (இது கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி)

* 200 மாவட்டங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும்.

* தேசிய ஊரக மேம்பாட்டுக்கு ரூ.20,820 கோடி ஒதுக்கீடு.

* காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு ரூ.8,447 கோடி ஒதுக்கீடு.

* மகளிர் சுய உதவித் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் திட்டம்.

* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

* தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.

* தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.3,915 கோடி செலவிடப்படும்.

* ஊரக சாலை வசதி திட்டத்துக்கு ரூ.24,000 கோடி.

* வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி.

* 7 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.
*  நடப்பு நாடாளுமன்ற தொடரில் கறுப்பு பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

* ஏப்ரல் 2012-க்குள் 40 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்படும்.
* கார்ப்பரேட் வரிவிதிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை.

* தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரப்பு ரூ.2 லட்சமாக உயர்வு. இது, ரூ.1.8 லட்சமாக இருந்து வருகிறது.


* ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை - 10 சதவீதம்

* ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை - 20 சதவீதம்

* ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதம் வரி.
* சேமிப்பு கணக்கில் ரூ.10 ஆயிரம் வரை வரும் வட்டிக்கு வரி கிடையாது.

* சீனியர் சிட்டிசன்கள் முந்தைய வரி கட்டுவதில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


விலை உயரும், குறையும் பொருட்கள்...

* அயோடின் உப்பு, தீப்பெட்டி, சோயா பொருட்கள் விலைகள் குறைகிறது.

* சோலார் லைட்டுகள், எல்.இ.டி. பல்புகள் விலை குறைகிறது.

* கைவினைப் பொருட்களின் விலைகள் குறைகின்றன.

* புற்றுநோய், எச்.ஐ.வி. சிகிச்சைக்கான மருந்துகள் விலை குறைகின்றன.

* 10%-ல் இருந்து 30% ஆக வரி உயர்வதால், சைக்கிள்களின் விலை உயர்கின்றன.

* ஏ.சி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.

* ஆடம்பரப் பொருட்கள், விமானக் கட்டணங்கள் உயர்கின்றன.

* சிகரெட்டுகள் விலை அதிகரிக்கின்றன.

* தங்கம், வைரங்களின் விலைகள் உயர்கின்றன.  

Saturday, March 17, 2012

சிங்கள கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள், சேனல் 4 காட்டும் கொடூரப் பதிவுகள்

லகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சேனல் 4 தொலைக்காட்சி! 

நெஞ்சில்ஈரம் உள்ள வர்களைக் கண்ணீர் வடிக்கவும், ரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது. இப்போது, ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்களையும் மனிதஉரிமை மீறல்களையும் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும், 'ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம்தான்’ என்பதை ஒப்புக்கொள்வதற்குக்கூட பல நாடுகள் யோசிக்கின்றன என்பதுதான் வேதனை.


வியட்நாம் போர் தாக்குதலில் ஒரு சிறுமி பதறியபடி நிர்வாணமாய் ஓடி வந்த புகைப்படம் வெளியானதற்கே, இந்த உலகம் பதைபதைத்துத் துடித்தெழுந்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் நிர்வாணக் குவியலாய் லட்சக்கணக்கில் செத்து அழிந்தபோதும்கூட, 'ஒரு புகைப்படத்துக்காக கண்ணீர் வடித்த உலகச் சமூகம்’ அமைதியாகவே இருக்கிறது.


இலங்கையின் இனப்படுகொலை களுக்கு ஆயிரமாயிரம் சாட்சியங்கள் இருந்தும், 'தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்று சாயம் பூசியதே தவிர, 'இது மனிதத்துக்கு எதிரான போர்’, 'தமிழர் களை அழிக்கும் போர்’ என்று சிறு முணுமுணுப்பும் எழவில்லை. ரசாயனக் குண்டுகளில் கருகிப் பொசுங்கி, பிய்த்து எறியப்பட்ட உடலையும் விடாமல் புணர்ந்து சிரித்து தமிழர்களைத் தின்று தீர்த்தது சிங்கள இனவெறி. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த இலங் கையின் இனப்படுகொலையும் ஈழத் தமிழர்கள் வெந்து துடித்து அனுபவித்த ரணங்களையும் சொற்களால் வர்ணித்துவிட முடியாது.


உயிர் கொடுத்த சேனல் 4 


இறுதிக்கட்டப் போரின் முடிவுக்குப் பிறகு, உலகச் சமூகத்துக்கு பொட்டில் அடித்தது போல், சேனல் 4 தொலைக்காட்சி சில காட்சிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. 'இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற காணொளியை வெளியிட்டது. இலங்கைக்கு எதிரான இந்தக் காணொளியைப் பார்த்து, இங்கிலாந்து நாடாளு மன்றம் தொடங்கி நார்வே, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் செனட் வரை அதிர்ந்தன. அந்தக் காணொளி திரையிடப்படாத நாடே இல்லை என்ற அளவுக்கு உலகெங்கும் அதிர்ச்சியை உரு வாக்கியது. இப்போது நீதிக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு, பக்கபலமாக இருப்பது இந்தக் காணொளிக் காட்சிகள்தான். இப்போது மீண்டும், 'இலங்கையின் கொலைக்களங்கள் -  தண்டிக்கப்படாத குற்றங்கள்’ என்ற பெயரில் புதிய காணொளியை சேனல் 4 கடந்த புதன்கிழமை வெளியிட்டது!


அதிர வைத்த ஆவணப் படம்!
கடந்த மார்ச் 11 அன்று ஓர் ஆவணப் படம், மனித உரிமைத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இலங்கைஅரசு பாதுகாப்பான பகுதி என்று அறிவித்த பகுதிகளில் இருந்த அப்பாவி மக்கள் மீது செல் குண்டு தாக்குதல்கள் நடத்தியது முதல், பெண் புலிகள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி இறந்த பிறகும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது வரை அதில் இரு ந்தது. இதையே சேனல் 4 வெளியிட்ட நேரத்தில், 'அது பொய்யானது, ஜோடிக்கப்பட்டது’ என்று, இலங்கை அரசு சொன்னது. ஆனால், இப்போது காட்டப்பட்ட ஆவணப் படத்தில் சம் பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் என் பதும்  தெளிவாக அடையாளம் காணும் அளவுக்கு இருக்கிறது.


பாதுகாப்பான வளையம் என்று சொல் லப்பட்ட பதுங்கு குழிகள், ஐ.நா. உதவியுடன் அப்பாவி மக்கள் பாதுகாப்புக்காக இலங்கை அரசால் அமைக்கப்பட்டன. அதன் மீதே குண்டுகள் வீசித் தாக்கியுள்ளார்கள். பாதுகாப்பு வளையத்துக்கு வந்த மக்களுக்கு உணவு தரப்படவில்லை. காயம்பட்ட வர்கள் மருந்து இல்லாமல் இறந்து போயிருக் கிறார்கள். புதுமாத்தளன் மருத்துவமனை மீது செல்குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் இந்த ஆவணப் படத்தில் இருக்கின்றன.


புதன்கிழமை காணொளி! 

'அய்யோ! இந்தப் பச்சப் பிள்ளையைக் காப்பாத்த முடியலையே’ என்ற மரணத்தை  விழி முன்னே நிறுத்தும் தாயின் கதறலின் ஊடே சேனல் 4 தொலைக் காட்சியின் புதிய காணொளி கடந்த புதன்கிழமை வெளியானது. சுமார் 53:12  நிமிடங்கள் ஓடும் இந்தக் காணொளிக் காட்சிகளை கல்லம் மெக்ரே இயக்கி உள்ளார்.


''உலக நாடுகள் பலவற்றில் காட்சிப்படுத்தப்பட்டும், உலக சமுதாயமும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கைக்குத் தண்டனை அளிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டன. இத்தகைய தருணத்தில்தான் இந்தக் காட்சிகளை வெளியிடுகிறோம்'' என்ற விளக்கத்துடன் தொடர்கிறார் ஜான் ஸ்னோ.


''சேனல் 4 வெளியிட்ட இலங்கைக் கொலைக் களங்கள் வீடியோவைப் பார்த்துவிட்டு என் 28 வயது மகன் கதறி அழுதான். இந்தக் கொடூரத்தைக் கண்டுவிட்டு நான் சிங்களன், இலங்கை பிரஜை என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது என்றான்'' என்று, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சொல்வது அடுத்து வருகிறது.


இங்கிலாந்து முன்னாள் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மில்லிபேன்ட், ''26 ஆண்டு காலமாகப் போராடிய விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறி, பெருந்தொகையான மக்களை இரு சகோதரர்களான கோத்தபயவும் மகிந்தாவும் அழித்து உள்ளனர். அவர் கள் தயாரித்த நல்லிணக்க அறிக்கையில் இந்தக் கொடூரங்களுக்கு யார் காரணம் என்பதைக் கூற மறுத்து விட்டனர்'' என்று குற்றம் சாட்டுகிறார்.


கத்தினால் ராணுவம் சுடும்! 

2009 ஜனவரி 23 அன்று பொதுமக்களைக் காப்பதற்காக ஐ.நா. சார்பில் பதுங்கு குழிகள் அமைக் கப்பட்டன. 'பாதுகாப்பு வளையம்’ என்று இலங்கை அரசால் முதலில் சொல்லப்பட்ட உட்டியகட்டுப் பகுதி அருகே பீட்டர் மெக்கே என்ற ஐ.நா. பணியாளர் மேற்பார்வையில் இது அமைக்கப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் ஐ.நா-வின் பதுங்கு குழிகள் மீதே எறிகணைகள் விழுந்திட.. இந்தத் தகவலை சரத் பொன்சேகா, கோத்தபய ஆகியோரிடம் பீட்டர் மெக்கே சொல்கிறார். உடனே, பாதுகாப்பு வளைய ங்களுக்கு கொஞ்சம் தள்ளி எறிகணைகளை வீசியிருக்கிறார்கள்.


பாதுகாப்பு வளையத்தில் இருந்து காயங்களுடன் தப்பி வந்த ஆண் ஒருவர், 'நாங்கள் பட்ட காயங்களுக்கு மருந்து இல்லாமல் கத்திக்கொண்டே கண் சொருகி விழுந்து விடுவோம். அதுதான் எங்களுக்கு வலி நிவாரணி. அடிபட்டவர்கள் கத்திக்கொண்டே இருப்பதைக் கண்டால், இழுத்துப்போட்டு சுட்டுக் கொன்று விடுவார்கள் ராணுவத்தினர்''  என்கிறார் அதே வலியோடு.  


பிரபாகரனின் இளைய மகன் படுகொலை! 

மே 17-ம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது அழுத்தமாக இந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது. பாலச்சந்திரனின் மெய்க்காவலர்கள் ஐந்து பேரும் கண்கள் கட்டப் பட்டு, கைகள் முதுகின் பின் கட்டப்பட்ட நிர்வாண நிலையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

 பாலச்சந்திரன் உடம்பில் இரண்டடி முதல் மூன்று அடி தூரத்தில் இருந்து சுடப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் ஐந்து குண்டுகள் பாய்ந்து ள்ளன. இவர், பிரபாகரனின் மகன் என்பதாலேயே இவ்வாறு கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று சேனல் 4 குறிப்பிடுகிறது.


தலைப்பகுதி மோசமாக சிதைக்கப்பட்டு, உடலில் சேறு பூசி, உடைகளை அகற்றிக் காட்டப்படுகிறது புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல். 'இது பிரபாகரன்தான்’ என்று கருணா உறுதிப்படுத்தியதாக சிங்கள ராணுவம் சொல்கிறது. ஆனால், இது வரை மருத்துவச் சான்றிதழை இந்தியாவுக்குத் தராமல் மறைக்கிறது இலங்கை அரசு. சிங்கள ராணுவத்தினரால் காட்டப்பட்ட அதே காட்சிகள், சேனல் 4 தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டன. ஆனால், இவை உண்மையில் பிரபாகரன்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை.


ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் இல்லை! 


இலங்கையில் போர் நடைபெற்ற போதும், அதன் பின்னரும் ஊடகவியலாளர்கள் நிலை குறித்து இலங்கையின் சுதந்திர ஊடகவியலாளர் பாஷன அபயவர்த்தனே பேசி இருக்கிறார். ''இலங்கையில் ஊடகவியலாளர் யாராக இருந் தாலும் அவர் கொல்லப்படவோ அல்லது நாட்டை விட்டு விரட்டப்படவோ வேண்டும் என்ற நிலையே இப்போதும் தொடர்கிறது. இது வரை, 60 பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டு உள்ளனர். 2005-ம் ஆண்டு முதல் இதுவரை சிங்களர்கள், தமிழர்கள் என்று 26 பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்'' என்று சொல்கிறார்.


இதில் ஆவணப்படுத்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும், படங்களும் தடயவியல் நிபுணர் டென்ரிக் ஃபவுன்டர் மூலமாக ஆராயப்பட்டுள்ளன. ''இந்தக் காட்சிகள் அனைத்தும் உண்மை. இதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. ஜோடிக்கப்பட்ட காட்சிகளோ, பொய்யானவையோ அல்ல.




சிங்கள ராணுவத்தினர் எடுத்த காட்சிகள்தான் இவை. பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்டதில், அவருக்கு உடல் அளவில் எந்தக் கொடுமைகள் செய்யப்பட்டதற்கும் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அவர் மனதளவில் கொடுமை படுத்தப்பட்டிருப்பார் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது'' என்கிறார்.
இசைப்பிரியாவை சீரழித்த முந்தைய காட்சிகள், பெண் போராளி கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துச் செல்வது, உயிரற்ற போராளிகளைக் குப்பைகளைப் போல் ஆடைகளை அகற்றி டிராக்டரில் தூக்கி வீசும் சிங்களப் படை, உயிரைக் காத்துக்கொள்ள கடலிலும் காடுகளிலும் தஞ்சம் புகுந்து தப்பிக்கும் மக்கள் என்று ரத்தசாட்சிகளாய் சிவக்கிறது திரை.


போர் முடிந்ததும் சிங்களப் படையின் கொண் டாட்டங்கள், இந்திய அரசின் சார்பாக சிவசங்கர மேனன் ராஜபக்ஷேவுடன் நடத்திய சந்திப்புகள் போன்ற காட்சிகளும் வருகின்றன. 2013 காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்க இருக்கும் சமயத்தில், '40 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா-வும் உலகச் சமூகமும் மறந்துவிட வேண்டாம்’ என்று, குற்றவாளிகளை அடையாளம் காட்டிய நீதியுடன் இருள்கிறது காட்சிகள்.


என்ன செய்யப்போகிறது இந்தியா?

ஈழத்தமிழருக்கு ஆதரவு கேட்டு பாரதப்பிரதமருக்கு தமிழருவி மணியனின் சாட்டையடி கடிதம்

ன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்பு​மிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு... வணக்கம்! 


இந்திய ஜனநாயகம் இந்த எளிய​வனுக்​கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்​படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன்.


தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர்கள். ஒன்றுபடுவது ஞானம், வேறுபடுவது அஞ்ஞானம் என்ற வாழ்வியல் விழுமியத்தை, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற வேத வாசகத்தின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர்கள். இந்தியாவின் ஓர் அங்கமாக இவர்கள் இருப்பதே இந்த மண்ணின் மகத்தான பெருமை என்பதை மத்திய அரசுக்குத் தலைமை ஏற்றிருக்கும் நீங்கள் முதலில் உணர வேண்டும்.


எங்கள் போற்றுதலுக்குரிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று குரல் கொடுத்தார். நாங்கள் செவிசாய்க்கவில்லை. அன்பிற்கினிய அண்ணா, 'திண் ணையில் அமர்ந்தாவது திராவிட நாடு கேட்பேன்’ என்று மேடைதோறும் முழங்கினார். அவரை நாங்கள் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தோம். ஆனால், அவருடைய பிரிவினைக் கோரிக்கையை நிரா கரித்தோம். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், 'சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தமிழரசு காண்போம்’ என்று எங்கள் கைகளைப் பிடித்து வேண்டினார். 


தேசிய மயக்கத்தில் இருக்கும் நாங்கள் அவரைத் திரும்பிப் பார்க்கவும் மறுத்தோம். இன்றும், 'தமிழ்த் தேசியம்’ பேசுபவர்களை நாங்கள் பெரிதாக ஆதரித்து விடுவது இல்லை. இன்றுவரை இந்தியராய் இருப்பதற்கு நாங்கள் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம். ஆனால், இறுதிவரை நாங்கள் இந்தியராய் நீடிப்பது இனி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்ஆப்பிரிக்காவில் மகாத்மா​வாக மலர்ந்ததற்கு முதற்காரணம் தமிழர்கள். 'அடுத்த பிறவியில் வள்ளுவத்தை வாசிப்பதற்காகத் தமிழனாய்ப் பிறக்க விரும்புகிறேன்’ என்றார். இந்தியாவைவிட்டு வெளியேறி அந்நிய மண்ணில் வெள்ளையருக்கு எதிராக நேதாஜி படை திரட்டியபோது, அவருக்குப் பின்னால் வெள்ளமெனத் திரண்​டவர்கள் தமிழர்கள். 

 அதனால்தான், 'இன்னொரு பிறவி இருந்தால் தமிழனாய்ப் பிறக்கும் வரம் எனக்கு வாய்க்க வேண்டும்’ என்றார் அந்த வீரத்தின் விளைநிலம். ஆனால், உங்கள் அரசோ தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதையே ஆட் சிச் சாதனையாக அரங்கேற்றி வருகிறது.



விடுதலை வேள்வியில் நாட்டு மக்கள் ஈடுபட்டி​ருந்தபோது, மாநில உரிமைகள் பற்றி ஆயிரம் வாக் குறுதிகளை அன்றைய காங்கிரஸ் தலைமை அள்ளி வழங்கியது. 'ஒவ்வொரு மாநிலமும் பரிபூரண சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். மாநிலங்கள் விரும்பி விட்டுக்கொடுக்கும் அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும்’ என்று இடை விடாமல் வலியுறுத்தினார் மகாத்மா. 


புதுடெல்​லி யில் 2.4.1942 அன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு, 'ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை அவர்களுடைய விருப்பத்துக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் இருக்கும்படி வற்புறுத்த விரும்பவில்லை’ என்று தீர்மானம் தீட்டியது. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களை மாண்புமிகு மாநகராட்சிகளாக மாற்றிவிட்டது. இந்தியராய் இருப்பதற்கு எங்கள் உரிமைகளை இழந்து நின்றோம். எதிர்த்துப் போர்க்கொடி பிடிக்கவில்லை.



சுதந்திர இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தெலுங்கர்கள் 'விசால ஆந்திரா’ வேண்டும் என்றனர்; கன்னடர் 'சம்யுக்த கர்னாடகா’ என்று குரல் கொடுத்தனர். மலையாளிகள் 'ஐக்கிய கேரளா’ என்ற கோரிக்கை வைத்தனர். இந்தியராய் இருக்க விரும்பிய நாங்களோ அகன்ற தமிழகத்துக்கு ஆசைப்படவில்லை. சித்தூர், புத்தூர், திருப்பதி, திருக்காளத்தி ஆகிய தமிழர் பகுதிகளைத் தெலுங்கருக்குத் தாரை வார்த்தோம்.

 மாதேசுவரன் மலை முதல் நந்திமலை வரை வாழ்ந்த நிலப் பரப்பையும், பெங்களூரு முதல் தங்கவயல் வரை சொந்தமான தமிழர் மண்ணையும் எங்கள் கன்னட சகோதரர்களுக்குச் சீதனமாகத் தந்து மகிழ்ந்தோம். ஏராளமான ஆறுகள் பெருக்கெடுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை, 'குளமாவது? மேடாவது? எல்லாம் இந்தியாவில்தானே இருக்கின்றன’ என்று தேசியத் தத்துவம் பேசி மலையாளிகளுக்கு 'மொய்’ எழுதிவிட்டு, இன்று முல்லை - பெரியாறு அணைக்காக அழுது​கொண்டு இருக்கிறோம். பிரதமரே... இவ்வளவு இழப்புகளும் எதற்காக? இந்தியராய் தமிழர் இருப்பதற்காக!


பிரிட்டனின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டு 1948 பிப்ர வரியில் சுதந்திரம் அடைந்து ஆறு மாதங்கள் ஆவதற்கு முன்பே காடாய், மேடாய், களர்நிலமாய் இருந்த மத்திய மேட்டு நிலத்தை ரப்பர், காபி, தேயிலைத் தோட்டங்களாக மாற்றி இலங்கையின் பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்குத் தங்கள் வியர் வையை, ரத்தத்தைச் சிந்திய எங்கள் தாயகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து, ஆதரவற்ற அனாதைகளாக்க முதல்பிரதமர் டி.எஸ்.சேனநாயகா மூன்று மசோதாக்களை இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க முயன்றபோது, நேருவின் மத்திய அரசு மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. மலையகத் தமிழர்களின் உரிமை காக்க 1939-ல் 'இலங்கை இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்து வைத்ததே நேருதான் என்பது எவ்வளவு பெரிய இயற்கை முரண்!



விடுதலை பெறுவதற்கு முன், இலங்கை நாடாளு​மன்றத்தில் எட்டு உறுப்பினர்களையும், 'செனட்’ எனப்படும் மூத்தோர் அவையில் இரண்டு உறுப் பினர்களையும் பெற்றிருந்த இந்தியத் தமிழர்கள், ஒரு நொடியில் நாடற்றவர்களாக ஆக்கப்​பட்டனர். இந்த அநீதியை எதிர்க்காமல், அவர்களை அகதிகளாக்க 1964-ல் சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தத்தை இந்திய அரசு அங்கீகரித்து, ஐந்து லட்சம் தமிழர்களைத் திரும்ப அழைத்து நடுத்தெருவில் நிறுத்தி நிலைகுலையச் செய்த போதும், நாங்கள் ஈர விழிகளுடன் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம், 'இந்தியர்’ என்ற மகுடத்தை இழந்து விடாமல் இருக்க!


தமிழகத்தின் தென்பரப்பில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள கச்சத்தீவு எங்க ளுக்குச் சொந்தமானது. பல நூற்றாண்டுகளாக ஒரு தேசியஇனத்துக்குச் சொந்தமான நிலப்பரப்பை, அந்த இனத்தின் அனுமதி இன்றிப் பக்கத்து நாட் டுக்குப் பரிசாய் வழங்கும் பாதகச் செயலை எந்த அரசும் செய்யத் துணியாது. ஆனால், இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி தன்னுடைய சீதனப்பொருளை அடுத்தவருக்குத் தருவது போல் திருமதி பண்டாரநாயகாவிடம் 1974-ல் கச்சத்தீவை ஒப்படைத்தது எந்த வகையில் நியாயம்?


காங்கிரஸை 1969-ல் தன் சுயநலத்துக்காக இரண்​டாகப் பிளந்த இந்திரா காந்தியின் குடும்ப அரசியலை, அன்று தொட்டு எதிர்த்த கூட்டத்தில் நான் ஒருவன். இந்திரா காந்தியின் எந்த அரசியல் நிலைப் பாட்டையும் ஏற்றவன் இல்லை நான். உலகின் மீன் வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான கச்சத்தீவை நேருவின் மகள் சட்ட வரம்பை மீறி இலங்கையிடம் சமர்ப்பித்​த போதும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு நிறுத்திக் கொண்டோம். ஏன்..? இந்தியராய் இருப்பதற்கு!


இந்தியப் பிரதமரே... உலகில் உள்ள கடற்கரை நாடுகள் அனைத்திலும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது உண்டு. எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று சொல்லி எந்த நாட்டுக் கடற்படையும் மீன​வரைச் சுடுவது இல்லை. நம் பகை நாடான பாகிஸ்தான்கூட, குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராப் பகுதியில் மீன்பிடிக்கும் இந்தியரை எல்லை தாண்டியதாக ஒரு முறையும் சுட்டது இல்லை.

 ஒருவரையும் கொன்றது இல்லை. உலகிலேயே மீனவரைச் சுட்டுக் கொல்லும் ஈனச் செயலை இலங்கை மட்டும்தான் இன்று வரை செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழகத்து மீனவரை - அதாவது நம் 'இந்திய’ மீனவரை ஊனப்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களின் - அதாவது 'இந்திய’ மீனவர்களின் உயிர் குடித்த இலங்கை அரசுக்கு வெண்சாமரம் வீசும் வேலையில் உங்கள் அரசு ஆனந்தம் அடைவதைப் பார்த்தும் நாங்கள் ஆத்திரப்படவில்லை. 'தேசியஉணர்வு’ எங்களைத் தேம்பி அழச் செய்வதோடு தடுத்து விடுகிறது; எங்கள் முதல்வர்களை உங்களுக்குக் கடிதம் எழுதுவதோடு நிறுத்தி விடுகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கள் உயர் தமிழுக்கு வட்டார மொழிக்குரிய தகுதியைத்தான் தந்திருக்கிறது. 'இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மொழியே உயர்தனிச் செம்மொழி’ என்று மொழியியல் அறிஞர்கள் வைத்திருக்கும் வரையறையைப் புறந்தள்ளி, எங்கள் தமிழோடு கன்னடமும் தெலுங்கும்கூட 'உயர் தனிச் செம்மொழிகள்’ என்று அங்கீகரித்திருக்கும் உங்கள் 'அரசியல்’ நியாயமானது என்று எந்த நேர்மை யாளரும் ஏற்க முடியாது.
இந்தியைப் போன்று தமிழும் தேசத்தின் ஆட்சி மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று மதுரை ஒத்தக்கடை வீதியில் நாங்கள் ஓங்கிக் குரல் கொடுப்பதற்கு மேல் எதையும் செய்ய மாட்டோம். எங்களுக்குத் தமிழா முக்கியம்? 'இந்தியர்’ என்ற அடையாளம் அல்லவா அதிமுக்கியம்!


போகட்டும். இந்தியராய் இருப்பதற்கு இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்து விட்டோம். எங்கள் இனம் ஈழத்தில் அழிவதற்கு இலங்கை அரக்கரிடம் ஆயுதம் அளித்தீர்களே... அதைப் பொறுத்தோம். முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர் பலியிடப்பட்ட போதும் ராஜபக்ஷேவுக்கு டெல்லியில் 'ரத்தினக் கம்பள வரவேற்பு’ வழங்கி ரசித்தீர்களே... அதையும் பொறுத்தோம். 


முள்வேலிக் கம்பிகளுக்கிடையில் மூன்று லட்சம் தமிழர் முடக்கப் பட்டபோது, இலங்கை அரக்க அரசுக்கு 1,000 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துக் கொலைகாரக் கூட்டத்தையே மறுவாழ்வு தரும்படி வேண்டி நின்றீர்களே... அதையும் பொறுத்தோம்.


'உயிரினும் சிறந்தன்று கற்பு’ என்று போற்றி வாழ்ந்த எம் குலப் பெண்களைச் சிங்களர் வன்புணர்ச்சி செய்து வதைத்த செய்தி வந்ததே... அதையும் பொறுத்தோம். பிரிட்டனின் 4-வது சேனலில், எம் இனத்தவரை எட்டி உதைத்து, கைகளைப் பின்னால் கட்டி, கண்களைத் துணியில் மறைத்துச் சுட்டு வீழ்த்திய மனிதகுல அநாகரிகத்தைக் கண்டபோதும் பொறுத்துக்கொண்டோம். இன்​னமும் பொறுப்பதற்கு என்ன இருக்கிறது பிரதமரே?


தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று 24 நாடுகளின் ஆதரவோடு ஐ.நா-வில் சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானத்தை முறியடிக்க இந்திய அரசு முனைந்தது நியாயந்தானா? இன்று, ஜெனிவாவில் மனித உரிமைகள் அமைப்பின் முன் இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை உங்கள் அரசு ஆதரிக்கத் தயங்குவது நாகரிக அரசின் நல்ல​ அடையாளமா? அபிசீனீயா மீது ஆக்கிரமிப்பு நடத்தி​யதற்காக, ரோமாபுரியில் விமானத்தில் வீற்றிருந்த நேருவை விருந்தோம்ப வருந்தி அழைத்த முசோலினியைச் சந்திக்க மறுத்த ஆசியஜோதி அமர்ந்து ஆட்சி நடத்திய நாற்காலியில் நீங்கள் அமர்ந்து இருப்பதை மறந்து விட்டீர்களா?


ஈழப்போரில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து பிரிட்டன் குரல் கொடுக்கும் என்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தது உங்கள் செவிகளில் சேரவில்லையா? 'சேனல் 4 ஒளிப்பதிவைக் கண்டு உறைந்து போய்விட்டேன்’ என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் சொன்னது உங்கள் சிந்தையில் பதியவில்லையா?  ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்​தின் கண்டனம் உங்கள் கண்களில் படவில்லையா?


மாண்புமிகு பிரதமரே... உங்கள் மனச்சான்றோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள். காஷ்மீர் தீவிரவாதி களை அழிக்க இந்திய ராணுவம் என்றாவது விமானத் தாக்குதல் நடத்தியது உண்டா? 'ஈழத் தமிழரும் இலங்கை மக்களே’ என்று சொல்லும் ராஜபக்ஷே அரசு சொந்த மக்கள் மீதே வான் வழியாக ரசாயனக் குண்டுகளைப் பொழிந்து பல்லாயிரவரைப் படுகொலை செய்தது மனித உரிமை மீறல் இல்லையா?

 இன அழிப்பு இல்லையா? சர்வதேசப் போர் விதிமீறல் இல்லையா? எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவருவது இந்திய மரபு இல்லை என்று சொல்லி இந்த மண்ணின் பண்பாட்டுப் பெருமையைப் படுகுழியில் தள்ள எப்படி உங்கள் அரசுக்கு மனம் வந்தது?


'தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்’ என்றார் பெரியார். உண்மைதான். முல்லை-பெரியாறு, காவிரி, பாலாறு என்று எந்தப் பிரச்னையிலும் தமிழர் உரிமை நிலைத்திட 'இந்தியன்’ என்ற உணர்வு இதுவரை உதவவில்லை. 'ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தால், மம்தாவுக்கு அள்ளிக் கொடுப்போம். சாமரம் வீசவில்லை என்றால், 'தானே’ புயல் அழிவுக்கும் கிள்ளியே கொடுப்போம்’ என்று ஓரவஞ்சனையோடு நடக்கும் நியாயமற்ற உங்கள் அரசு எங்களுக்கு எதற்கு?


கட்சி ரீதியாக நாங்கள் பிரிந்துகிடந்ததுவரை எங்களை உங்களால் எளிதில் புறக்கணிக்கமுடிந்தது. இன்று உலகின் எட்டாவது அதிசயமாய் முதல்வர் ஜெயலலிதாவும், கலைஞரும், காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஈழத் தமிழரின் இன்னல் தீர்க்க ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

 இலங் கைக்கு ஆதரவாக இந்திய அரசு இனி இருந்தால், தமிழ் நிலத்தில் காங்கிரஸ் கல்லறைக்குச் சென்று விடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் என்று சரித்திரம் படைத்த உங்களுக்கு அதுகுறித்துக் கவலைப்பட நேரம் இருக்காது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலைப்பட்டாக வேண்டும்.


இந்தியஅரசு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து எங்களை முதலில் தமிழராகவும், முடிவில் இந்தியராகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் நம்பிக்கைக்குரிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழில் தீட்டப்பட்ட என் கடிதத்தின் சாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்களுக்குச் சொல்வார் என்று நம்புகிறேன்.


இனஉணர்வை மதித்து என்னை இந்தியனாக இருக்க விடுவீர்கள் என்ற ஆழ்ந்த    நம்பிக்​கையுடன்,


தமிழருவி மணியன்

ஈழத்தமிழனின் ஈடுகட்ட முடியாத இழப்புக்கு நீதி கேட்டு வெடித்திருக்கும் ட்விட்டர் புரட்சி

 ஈழமக்களுக்கு இழைக்கப்பட கொடுமைகள் உலகம் முழுக்க கவனத்தை ஈர்க்க வேண்டும், அனைவருக்கும் அந்த கொடுமைகள் பற்றி அறியச்செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ட்விட்டரில் புரட்சி கோஷங்கள் எழுப்பப்படது.. என் அளவில் நான் எழுதியவை..

http://www.eelamview.com/wp-content/uploads/2011/09/prabhakaran-mgr.jpg


1.ஆங்கிலேயன் இந்தியாவை கொள்ளை அடித்தான், ஒரே ஒரு இத்தாலிப்பெண் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே பலி ஆக்கினாள்"


----------------------------

2. தமிழனை காட்டி கொடுக்கத்தயங்காதவன் கருணா,தமிழன் வெட்டி எரியப்பட்டபோதும் வேடிக்கை பார்த்தவர் கலைஞர் "


------------------------------

 3. திமுக கொடியின் நிறத்துக்கான விளக்கம்- ஈழத்தமிழனின் ரத்தமும்,அவன் எதிர்காலமுமா?-சிவப்பு,கறுப்பு


------------------------------

4. தமிழக அரசியல் தலைவர்கள் அனைவர் சொத்துக்களையும் பறிமுதல் செய்து, எல்லாரையும் ஒரு வருடம் இலங்கையில் தங்கவைத்தால் என்ன?"


----------------------------------------

5. சாப்பாட்டில் கை வைக்கும்போது இலங்கையில் ஓடிய ரத்த ஆறுதான் நினைவு வருகிறது, கை கழுவினால் அவர்கள் கண்ணீர் நினைவு 

-------------------------------

 6. தமிழ் நாட்டை பீடித்த ரோகி, தமிழ் இனத்தை ஆண்ட துரோகி, அவர் கலைஞரா? கொலைஞரா.?


-------------------------------------

7. தமிழ் இனத்தலைவர் என்றழைக்கப்பட்டவர் தமிழ் இனத்தை அழிக்கத்துணை போன தலைவர் என்று வரலாறு அழைக்கட்டும் 

--------------------------

 8. இந்தியா நான்கு எழுத்து,தமிழன் நான்கு எழுத்து,இலங்கை நான்கு எழுத்து,கலைஞர் நான்கு எழுத்து துரோகம் நான்கு எழுத்து


-----------------------------------

9. உயிரைக்கொடுத்து இன மானம் காக்க பலர்.. மானத்தைக்கெடுத்து,அடுத்துக்கெடுத்து பதவியைத்தக்கவைக்க சிலர் 

------------------------------------

 10. இந்தியப்பெருங்கடல் நீர் மட்டம் உயர்ந்தால் அது ஈழத்தமிழர்களின் நிலை கண்ட நம் கண்ணீராய் இருக்கும்


-----------------------------------

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg

11. அரசியல் லாபத்துக்காக ஒரு இனத்தையே பலியிடத்துணிந்த இரு குடும்பங்களும் மன உறுத்தல்களுடனே எஞ்சிவாழ்நாளை கழிக்கட்டும் 


-----------------------------------------

12. கடவுள் அரக்கனை கொன்ற நிகழ்வு சூரசம்ஹாரம், ஒரு அரக்கன் பல வீரர்களை சூழ்ச்சி செய்து தின்ற நிகழ்வு வீர சம்ஹாரம் 

------------------------------

13. இலங்கையில் ராகுலையும், கூடங்குளத்தில் பிரியங்காவையும் நிரந்தரக்குடி வைத்து விட வேண்டும் 


-----------------------------------

14. அகதிகளின் கதி அதோ கதி, அனைத்தும் அரசியல் சதி, தமிழனின் நெற்றியில் பலவந்தமாக எழுதப்பட்ட விதி 

------------------------------

15. கையில் இருப்பதை எல்லாம் கொடுத்தான் கர்ணன், கைக்கு அகப்பட்டவர்களை எல்லாம் கொன்றான் கர்ண கொடூரன் ராஜபக்சே 

--------------------------------

16. தமிழ்நாட்டைவிட்டு கலைஞர் , இந்தியாவை விட்டு சோனியா காந்தி 2 குடும்பமும் தள்ளி வைக்கப்பட்டால் நாடு சுபிட்சம் பெறும் 


---------------------------------

17. ஒரு ஊர் வாழ ஒரு குடும்பத்தை இழக்கலாம், ஆனால் ஒரு குடும்பம் வாழ ஒரு இனத்தையே அழிக்க வழி செய்தார் கலைஞர் 

----------------------------

18. இத்தாலி தன் ஒரு தாலி இழந்ததற்கு ஒரு லட்சம் தாலிகளை பலி கொடுத்தது, பழி தீர்த்தது# 

-------------------------------

19. ஒரு இந்தியன் இத்தாலிக்கு வாழ்வு கொடுத்தான், பல தமிழர்களின் வாழ்வு கெடுத்தான்


----------------------------------

20. காந்தியின் பெயரை தன் பெயருடன் கொண்டிருந்தும் அவர் குணங்கள் எதுவுமே வரப்பெறவில்லை எனில் எதற்கு அந்த பதவி? 


--------------------------------------

http://farm4.static.flickr.com/3564/3577976220_6551920c3f_o.jpg

21. இரண்டு தனி நபர்கள் நினைத்திருந்தால் ஒரு இனமே அழிக்கப்படாமல் இருந்திருக்கும் 


-----------------------------------

22. நம்மிடம் கொடுப்பதற்கு, காப்பதற்கு மனம் இல்லை, அவர்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை 

---------------------------------

23. எட்டு மணி நேர மின்வெட்டையே தாங்கிக்கொள்ள முடியாதவன் தமிழகத்தமிழன், 24 மணிநேரமும் மனித வெட்டை சந்திப்பவன் ஈழத்தமிழன்#KILLINGFIELDS

-------------------------------------------

24 இல்பொருள் உவமை அணிக்கு மிகக்கொடூரமான உதா”ரணம்” கருணையே இல்லாத துரோகி கருணா#Killingfields


----------------------------------

25. ஈழத்தமிழனின் வீட்டில் அரிசி உலை கொதிப்பதில்லை,எந்த சிங்களனும் அவர்களை மதிப்பதில்லை#KillingFields


---------------------------------

26. அமைதிக்கான நோபல் பரிசை தருவதற்கு முன் அட்டூழியத்துக்கான அகோர தண்டனை ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட வேண்டும்#KillingFields


------------------------

27. இறந்தான் இறந்தான் ஈழத்தமிழன் இறந்தான், மறந்தான் மறந்தான் தமிழகத்தலைவன் தாய் நாட்டை நேசிக்க, காப்பாற்ற  மறந்தான்#KillingFields


----------------------------------

28. ஈழத்தில் பிறந்து ஈழத்தில் அழிந்த பிரம்மபுத்திரர்கள்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாய் பிரம்மபுத்ரா நதியே வற்றிவிட்டதாம்#KillingFields

----------------------------------

29. வெண்ணைகள் எல்லாம் அன்னைகள் ஆகின்றனர்,தலை எடுக்க விடாமல் துரத்தப்பட வேண்டியவர்கள்  தலைவராக இருக்கிறார்கள்#KillingFields

--------------------------------

30. உயிருடன் ஈழத்தமிழனை எரித்த ராஜபக்சேவுக்கு விருந்து வை, கண்டனம் தெரிவிக்க உருவ பொம்மை எரித்தால் சிறையில் வை #KillingFields

----------------------------------

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/BloG%20fotos/4.jpg

31. ஈழத்தமிழனுக்காக போராடிய புலிகளை அரசியல் லாபத்துக்காக வஞ்சித்தன தமிழக நரிகள் #killingfields

------------------------------

32. கடல் கடந்து ஈழத்தில் தமிழன் மண்டையைப்போட்டுக்கொண்டிருக்கிறான்.இங்கே நாம் கடலை போட்டுக்கிட்டு இருக்கோம் :(


---------------------------------------

 33. ஓ! தமிழர்களே! நீங்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன், எனக்கு என் குடும்பம் தான் பெருசு

----------------------------------

34. ஈழத்தில் சாதம் வடிக்க வழி இல்லாமல் தமிழன், இங்கே சச்சின் சதம் அடித்தால் என்ன? அடிக்கா விட்டால் என்ன?  

---------------------------

35. எந்த குடுகுடுப்பைக்காரராலும் நம் நாட்டுக்கு நல்ல காலம் எப்போ பிறக்கும்னு சொல்லவே முடியலை :(  

------------------------------

36. தமிழக அரசியல் தலைவர்களில் முதல்வராக இருந்தவர்களில் எம் ஜி ஆர் மட்டுமே ஈழத்தமிழனுக்கு ஏதாவது செய்ய நினைத்தவர் ””

------------------------- 

 நண்பர் சிவா அனுப்பிய மெயிலில் இருந்து-

( #killingfields ).. @இந்தியா சும்மா சொல்லக் கூடாது..ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ப அறிவாளிங்கடா... நாளைக்கே உலகப்போர் என்று வந்தாலும் கூட இலங்கைகாரன் சீனாப்பக்கம்தான் நிற்பான்னு நல்லாத்தெரிஞ்சிருந்தும்.. ஆயுத உதவி,ரேடார் உள்ளிட்ட தொழில் நுட்ப உதவி, ஆயிரக்கணக்கான கோடிகள் பண உதவின்னு எத்தனையோ உதவிகள் செஞ்சதும் இல்லாம..இப்ப 7.21 கோடி பேர் கெஞ்சலையும் ஹேருக்குச் சமானமா நெனச்சு தூக்கிக் கெடாசிட்டு.. "இலங்கைக்கு எதிரா எந்த ஒரு நிலைப்பாட்டையும் எப்போதும் இந்தியா எடுக்காது!"னு சொன்னீங்க பாத்தீங்களா.. அங்க நிரூப்பிச்சுட்டீங்கடா உண்மையிலேயே உங்க நிலைப்பாடு என்னன்னு.!


 போகட்டும்... இன்னுமும் உங்க மேல துளியூண்டு நம்பிக்கை வச்சிருக்கோம்..இந்த கொடூரத்தை நிகழ்த்தி முடிச்சு 3 வருசமாச்சு..! நீங்க செய்த பச்சைத்துரோகத்துக்கு பரிகாரமா தயவுசெய்து இந்த ஒரு காரியமாச்சும் செய்ங்க..ஜெனீவால நடைபெறப்போகும் வாக்கெடுப்புல இலங்கைக்கு எதிரா வாக்களியுங்க..

'இல்லை..அப்டி செஞ்சா என் முகமூடி கிழிஞ்சிடும்'னு இப்பவும் துரோகத்த செஞ்சீங்கன்னா..இனி இந்தியாவும் தமிழ்நாடும் உணர்வுரீதியா மட்டுமில்ல..அனைத்துரீதியுலும் வேற வேற ஆகிடும்.. இதற்கு மேல நாங்க இந்தியன்னு சொல்லிக்கறது நாங்க குடிச்ச தமிழ்ப்பாலுக்கு கேவலம்.


 @தமிழன் ..இனியாச்சும் நிஜமாவே இனப்பற்று, மொழிப்பற்றோட இருந்துக்கோங்க...இல்லாட்டி இவனுங்க தமிழ்நாட்டையும் அழிச்சு..அடியோட பொதச்சு.. சோனியா குடும்பமும், ராஜபக்ஷே குடுபமும் தமிழ்நாட்டில தன் சந்ததிகள உருவாக்கி குதூகலமா வாழ்வாய்ங்க!! :-(((( 



டிஸ்கி -1   ட்விட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்  ”” இந்த டேக்கில் வரும் அனைவர் ட்வீட்ஸையும் ஆர் டி செய்யவும்.. அது உலக அரங்கில் கவனம் ஈர்க்கும்.. RT பட்டனை க்ளிக் செய்ய வேண்டாம், தனி ட்வீட்டாய் ஆர் டி செய்யவும்

டிஸ்கி 2 - சமூக வலைத்தளங்களால் என்ன சாதித்து விட முடியும்? என்ற அலட்சியமோ, அங்கலாய்ப்போ வேண்டாம்.. ஒபாமாவின் ஆட்சிக்கு ட்விட்டர் மற்றும் சமூக வலைதள புரட்சியே முக்கிய காரணம்.. ஒரு சிறு தீ பற்றிக்கொண்டால் புரட்சித்தீ வெடித்தே தீரும்..


http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg

Friday, March 16, 2012

கழுகு - சினிமா விமர்சனம்

15 Mar (1 day ago)

to sabiramisree
http://1.bp.blogspot.com/-JScKCVg8YUE/T1ECUVVx49I/AAAAAAAABMs/KBVARErypL8/s1600/kazhugu_movie_wallpapers_501.jpg
டைட்டில், போஸ்டர் டிசைன், ட்ரெயிலர், படம் வெளியாகும் முன்பே சூப்பர் ஹிட் ஆன 2 பாடல்கள் இவை எல்லாம் ரொம்பவே வித்தியாசமான படமாக இருக்கும் என்று  எதிர் பார்க்க வைத்தது.. ஆனால் கதைக்களம் மட்டுமே புதுசு, மற்றபடி எப்பவும் சொல்ற அதே காதல் கதை தான்.. 

ஹீரோ கிருஷ்ணா,கருணாஸ், தம்பி ராமையா,இன்னும் ஒரு ஆள் இவங்க 4 பேரும் ஒரு குரூப். இவங்க தொழில் என்னன்னா மலை உச்சில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கற காதல் ஜோடி பிணங்களை பள்ளத்தாக்குல போய் இறங்கி எடுத்துட்டு வந்து ஒப்படைச்சு பணம் வாங்கறவங்க. ஹீரோயினோட அக்கா அவ லவ்வரோட குதிச்சு செத்துடறா.. அக்கா டெட் பாடியை எடுத்து தர்ற ஹீரோ பார்த்து ஹீரோயின்க்கு லவ் வந்துடுது.



ஹீரோயின் கண் எதிரே நடக்கற ஒரு விபத்துல ஹீரோ அடிப்பட்டார்னு பதட்டத்துல ஹீரோயின் ஹாஸ்பிடல் போய் பார்க்கறப்ப ஹீரோவுக்கு லேசா தான் அடி. ஹீரோயின் பதட்டம் பார்த்து ஹீரோவுக்கும் லவ் வந்துடுது.. இண்டர்வல்.

இதுக்குப்பிறகு திரைக்கதையை எப்படிக்கொண்டு போலாம்னு டைரக்டருக்கு ஒரே கன்ஃபியூஷன். அசிஸ்டெண்ட் டைரக்டர்கள்கிட்டே விவாதம் பண்றார். ஒரு வில்லனை உருவாக்கிறார்.  அவன் கள்ளக்கடத்தல் பண்றப்ப குறுக்க வந்த போலீஸ் ஆஃபீசருங்களை போட்டுத்தள்ளறார்..அந்த ஆஃபீசருங்களை பள்ளத்தாக்குல வீசிட்டு ஹீரோ அண்ட் கோ விடம் பாடி கிடைச்சா புதைச்சுட்டு பாடி சிக்கலைன்னு சொல்லிடுங்க அப்டிங்கறான்.


http://www.nakkheeran.in/AllImages/Gallerys/17993_1.jpg

 ஹீரோ அண்ட் கோ என்ன பண்ணுச்சு, க்ளைமாக்ஸ் என்ன? என்பதை வெண் திரையில் காண்க..

 அலாவுதீன், கற்றது களவு என்ற 2 வித்தியாசமான கதைக்களம் உள்ள  படங்களில் நடித்த கிருஷ்ணா இந்தப்படத்திலும் ஓரளவு புதிய கதா பாத்திரத்தில் தான் நடிச்சு இருக்கார்.. செகண்ட் ஆஃப் ஸ்க்ரீன்ப்ளே தான் காலை வாரிடுச்சு.. நடிப்பை பொறுத்தவரை ஓக்கே.. பாதி நேரம் தம் அடிப்பது, சரக்கு அடிப்பது என்றே ஹீரோ அண்ட் கோ டைம் பாஸ் பண்றாங்க.

மா இலை போல் அழகிய வதனம் உள்ள பிந்து மாதவி தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்யும் எழில்..அவரது ஒப்பனை இல்லாத உதட்டழகும். , களங்கம் இல்லாத கண்ணழகும் பெரிய பிளஸ்.. ஹீரோவுக்கு ஆக்சிடெண்ட் என்றதும் அவர் பதறித்துடித்து ஓடி வந்து துடிப்பது செம நடிப்பு.. படம் முழுக்கவே குறை சொல்ல முடியாத நடிப்பு..

தம்பி ராமையா வழக்கம் போல் யதார்த்த நடிப்பு.. ஆனால் அவர் லொட லொட என்று பேசிக்கொண்டே இருப்பது எரிச்சல்.. கருணாஸ் அங்கங்கே கமெண்ட் அடித்து கொஞ்சம் கல கலப்பு ஏற்றுகிறார்..



http://www.nakkheeran.in/AllImages/Gallerys/18006_1.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. டெட்பாடியை எடுத்து வரும் ஆட்கள் பற்றிய முதல் தமிழ்ப்பட பதிவு என்ற வகையில் இயக்குநருக்கு ஒரு சபாஷ்..

2.  ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் அவசரம்,காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம் அது எப்போதும் போதை ஆகும் நிலவரம் என்னும் பாடல் காட்சி நடன அமைப்பு, இசை, பாடல் வரிகள் எல்லாம் செம.. தியேட்டரில் கைதட்டல் காதை பிளந்தது.. ( அந்த பாடலில் ஒரே ஒரு சீனில் ஆடும் 18 வயசு ஃபிகர் ஹீரோயினை விட அழகு)

3. ஆத்தாடி மனசு தான், காதலை சொல்லு ஆகிய 2 பாடல்களும் ஓக்கே ரகம்..

4. லொக்கேஷன்கள், ஒளிப்பதிவு இரண்டும் அருமை.. ஊட்டி, மூணாறு, கொடைக்கானல் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்..

5. இடைவேளை வரை படம் எந்த இடத்திலும் தொய்வு இன்றி பரபரப்பாக செல்வது படத்தின் பிளஸ்..



http://puremasalablog.files.wordpress.com/2010/05/bindumadhavi06.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. தன் அக்கா இறந்த அடுத்த 5 வது நாளே ஹீரோயினுக்கு காதல் வருதே எப்படி? அதுவும் அக்கா இறந்தது காதல் தோல்வியால்.. அப்போ காதல் மீதே ஹீரோயினுக்கு வெறுப்பு வந்திருக்க வேண்டாமா?

2. ஹீரோயினின் அக்கா பிணத்தை ஹீரோ பணம் வாங்கி எடுத்துத்தர்றார்.. அந்த டெட் பாடில இருந்து அவர் அபேஸ் செஞ்ச நகையை திருப்பி தர்றார்.. கூலி 3000 ரூபாய்ல ரூ 1000 குறைச்சுக்கறார். இந்த 3 காரணங்கள் தான் ஹீரோயினுக்கு ஹீரோ மேல் லவ் வரக்காரணம் .. இந்தியன் டயலாக் தான் நினைவு வருது.. ஹீரோ அவன் செய்யவேண்டிய கடமையைத்தானே செய்தான்.. இதில் என்ன தியாகம் இருக்கு?

3. போலீஸ் ஆஃபீசர்ஸ் ஸை வில்லன் அடிச்சு போட்டிருக்கான்.. அது விபத்து அல்ல என்ற முக்கியமான விஷயத்தை ஹீரோ அண்ட் கோ போலீஸ்ட்ட சொல்றாங்க.. அப்பா அவங்க கிட்டே ரிட்டர்ன் ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்காமயே அவங்களை இன்ஸ்பெக்டர் அனுப்பிடறாரே, அது எப்படி?

4. வில்லனாக வரும் ஜெயப்பிரகாஷ் எதைக்கடத்தறார் என்பது தெளிவாக இல்லை.. அவர் ஏதோ டீத்தூள் கம்பெனி வெச்சிருக்கார் என்பது மட்டும் தான் தெரியுது.. ஹீரோ அண்ட் கோவிடம் லஞ்சம் வாங்கும் போலீஸ் வில்லனிடம் மட்டும் லஞ்சம் வாங்காமல் மாள்வது ஏன்?

http://www.bestceleb.info/wp-content/uploads/2012/02/bindu-madhavi-hot-300x254.jpg


 மனதில் நின்ற வசனங்கள்

1.  யோவ்.. இங்கே யார்யா தற்கொலையை பார்த்தது?

 நான் தான் அய்யா..

 எங்கே விழுந்து காண்பி..


2.  கள்ளக்காதல் ஜோடிங்க தான் நிறைய விழுந்து சாகுதுங்க.. நாம யார் கிட்டே போய் காசை வாங்கறது?


3.  கோபப்பட்டாலும் சரி நீ அதிகம் கோபப்படறே.. சிரிச்சாலும் நீ அதிகமா சிரிக்கறே..


4. விழுந்து சாகனும்னு முடிவு பண்ணுனவன் பக்கமா விழுந்து சாகக்கூடாது? இவ்வளவு தூரம் வந்தா சாவாங்க?


5. தற்கொலை செஞ்சு மலை உச்சில இருந்து விழும் ஜோடிகள் கைல எப்படி இலைகள்?

 சாவு பயத்துல கடைசி கட்டமா நாம தப்பிட மாட்டோமா?ன்ன கைக்கு கிடைக்கற கிளைகள், இலைகளை பிடிப்பாங்க :(


6.  நிறைய  பணம் சம்பாதிக்கற கம்ப்யூட்டர் ஃபீல்டுல இருக்கறவனை எவளும் வேணாம்னு ஒதுக்கறது இல்லை.. நிறைய கம்ப்யூட்டர் கம்ப்பெனிகளை மூடுனா  ஏகப்பட்ட லவ் ஜோடிகள் தற்கொலை செஞ்சுக்குவாங்கன்னு தோணுது


7. வேண்டப்பட்டவங்க சாகறப்பதான் சாவோட வலி மனுஷனுக்கு தெரியுது


8. சரக்கு அடிக்கறவரை நீ நம்பியாரு.. அடிச்சுட்டா எம்ஜியாரா? தத்துவம் பொழியறே?

9.  டாஸ்மாக் வர்றவங்க பாதி பேர் லவ் ஃபெயிலிய்ர்ல தான் வர்றாங்க

10.  ஏட்டய்யா, எனக்கு மட்டும் 7 அடி அடிச்சீங்க, என் ஃபிரஃண்ட்ஸ் 3 பேருக்கும் 2 அடிதானா? ஏன்?

 அடேய்.. எல்லாருக்கும் ஒரே மாதிரி அடி கொடுக்க இது என்ன சமத்துவபுரமா? லாக்கப்./..


11.  செயின் புதுசா இருக்கே..

 பரம்பரை செயின்னு இவர் தான் சொன்னாரு

 அட திருட்டுப்பயலே

12 .டீ விக்கறவன் கிட்டேயும் சரி, டிக்கெட் விக்கறவன் கிட்டேயும் சரி இந்த போலீஸ் கட்டிங்க்கை கரெக்ட்டா வாங்கிடும்.


13.  இப்பவெல்லாம் யார் நகையை போட்டுக்கிட்டு சாகறாங்க? ஊரை விட்டு ஓடி வந்ததும் லாட்ஜ்ல ரூம் போடறாங்க, அப்புறம் மேட்டரை முடிக்கறாங்க, வாடகைக்கு கூட பணம் பத்தாம நகையை வித்து செட்டில் பண்றாங்க.


14.  அக்கா.. உன் கிட்டே பேசனும்..

 அதைத்தாண்டி. தினமும் செஞ்சுட்டு இருக்கே..?

அய்யோ, ஒரு முக்கிய விசயம்  பேசனும்..

15.  அடியேய்.. பொண்டாட்டி விடற நீலிக்கண்ணீருக்கு அவளூங்க புருஷங்க வேணா பயப்படலாம், இரக்கப்படலாம்..  மத்தவங்க கிட்டே உங்க பப்பு வேகாது..

16.  நாளைக்கு என்ன டே?

 சண்டே..

 அப்போ அவ வீட்ல தான் இருப்பா..

 அது உனக்கு எப்படி தெரியும்?

 டேய்.. சண்டேன்னா எல்லாரும் வீட்ல தாண்டா இருப்பாங்க.. என் வெண்ணெய்....



http://www.thedipaar.com/pictures/resize_20120114142346.jpg


படத்தில் தேவை அற்ற டூயட், ஃபைட் சீன்கள் இல்லாதது ஒரு பிளஸ்..  வில்லனுக்கும் , ஹீரோயினுக்கும் வேறு ஏதாவது விரோதம் இருந்ததாக தனிக்கிளைக்கதை அமைத்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.. ஓக்கே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39

 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி.பி கமெண்ட் -  இடைவேளை வரை பார்த்துட்டு ரிட்டர்ன் வரலாம்னு நினைக்கறவங்க தியேட்டரிலும், மத்தவங்க டி வி லயும் பார்க்கலாம்.. எல்லாரும் பார்க்கற மாதிரி தான் படம் இருக்கு.. நோ வல்காரிட்டிஸ் ( சரக்கு அடிக்கற சீன், தம் அடிக்கற சீன் அதிகம்.. அதை விரும்பாத பெண்கள் தவிர்ப்பது நல்லது )

ஈரோடு ராயலில் படம் பார்த்தேன்

 ஆல் செண்ட்டர் 20 நாட்கள் சராசரியா ஓடும்




ஹிட்லரே அஞ்சி நடுங்கும் ராஜபக்சேவின் கொடூரங்கள் - மக்கள் கருத்து


"ஆசையால் வெற்றி பெற்றவன் அந்தப் போதையால் தவறுகள் செய்து அழிவைத் தேடுவான். ஆனால் தன்னடக்கம் உள்ள மனிதன் அறிவுடன் சிந்தித்து எப்போதுமே இன்பமாக வாழ்ந்திடுவான்." இது சிங்களவர்கள் வணங்கும் புத்தரின் வாக்கு!

'ஒற்றைத் தமிழனையும் விட்டுவிடாதே, தமிழச்சிகள் கருவில் உள்ள குழந்தை கூட நாளை விடுதலைப் புலியாக மாறிவிடும்' என்ற ரத்த வெறிக்கொண்ட இக்கூப்பாடுகள் இறுதிக்கட்ட போர் நடக்கையில் ராணுவத்துக்கு 'மகிந்த ராஜபக்சே'வால் பணிக்கப்பட்ட வேலைகள். இதுவே அன்று சிங்கள ராணுவத்துக்கு வேத வாக்கு!

இலங்கை ராணுவத்தின் ஒவ்வொரு விலங்கு மனிதர்களும் ராஜபக்சேவாக மாறி தமிழ் மழலைகளை முண்டமாக, பிறந்து விழித்திறக்காத குழந்தைகளை பூட்ஸ் கால்களில் நசுக்கி, தமிழச்சிகளின் பிணத்தை கூட முகர்ந்து பார்த்தது உள்ளமே இல்லாத இலங்கை ராணுவத்தின் உடல்.

'தப்பு செய்தவன் ஒரு தடயத்தையாவது விட்டுச் செல்வான்' என்பது துப்பு துலக்குவர்களின் வாக்கு. அந்த வாக்கை போல் 'போரில் வதைப்பட்டவர்கள், தப்பி வந்தவர்கள், ஐ.நா. பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், இவ்வளவு ஏன்.. இப்போர்க்குற்ற காணொளியை கொடுத்த உதவிய சிங்கள ராணுவர் வரை இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு ஆயிரம் ஆயிரம் சாட்சியங்கள் உண்டு. ஆனால் தண்டணைகள்தான் இல்லை.

இதைத்தான் 'இலங்கையின் கொலைக்களங்கள் - தண்டிக்கபடாத குற்றங்கள்' என்று இரண்டாவது பாகமாக இலங்கை இனப்படுகொலைகள் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது 'சேனல்-4'.

'இன்று உனக்கு இனிய நாள்' என்ற தோழமையின் குறுஞ்செய்தியுடன் அலைபேசியை ஓரங்கட்டிவிட்டு கணினியின் முன் காலை அமர்ந்தேன். அதுவே 'இலங்கை கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத குற்றங்கள்' ஒளிபரப்பட்ட நேரம். கண்ணில் நீர் வற்றிய தருணம் .

அய்யோ! இந்த பச்சப் பிள்ளைய காப்பாத்த இயலையே... என்ற 'சேய்'யை இழந்த ஈழத்தாயின் கதறலே 53:12 நிமிட காட்சியில் கண்ணீரை சொட்ட வைக்கும் முதல் காட்சி.

'தமிழீழம் என்றொரு தேசம் விடிய போராடிய விடுதலைப் புலிகளுக்கு' எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர் பல ஆயிரம் மக்களை காவு வாங்கியதை ரணத்தை ஏற்படுத்தும்  காட்சிகளுடன் வெளியிட்டும் 'சேனல்- 4', ஜெனிவா முதல் நியூயார்க் வரை ஒளிப்பரப்பியும் இதுவரை இம்மக்களுக்கு நீதி கிடைத்ததா தெரியவில்லை.

நீதி கிடைக்காத இன்றைய நிலைமையில் தான் 'தண்டிக்கபடாத போர்க்குற்றங்கள் 'என்ற படத்தை ஓர் ஆவண சான்றாக வெளியிடுகிறோம் என்பதுடன் 'ஐ.நா. மற்றும் கண்டும் காணாது இருந்த சர்வதேச சமூகத்தின் மனசாட்சியற்ற கதவுகளை தன் கேள்விகளால் தட்டுகிறார், ஆவணப் படத் தயாரிப்பாளர் ஜான் ஸ்னோ.  

உலக நாடாளுமன்றங்கள் பலவற்றில் சேனல் 4-ன் முதல் ஆவணப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்கா இதனால் ஏற்பட்ட விளைவை கூறியதே 'தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை சிங்களமே ஒப்புக்கொள்கிறது' என்பதற்கான சான்று. அவர் "சேனல்-4 வெளியிட்ட இலங்கை கொலைக்களங்கள் வீடியோவை பார்த்துவிட்டு, "என் 28 வயது மகன் கலங்கிப் போனான், அவன் அதில் காட்டிய சித்தரவதைகளை பார்த்துவிட்டு, நான் சிங்களன், இலங்கையன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக உள்ளது என்றான்," என்று தெரிவித்துள்ளார்.

2007 முதல் 2010 வரை இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டேவிட் மில்லிபேன்ட் கருத்துரைத்த பொழுது, நல்லிணக்க அறிக்கையில் போருக்கு அந்த குரூர இனப்படுகொலைக்களுக்கு யார் காரணம் என்பதையே இலங்கை அரசு மறைத்து விட்டது.

"விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களையே முழுவதுமாக அழித்துள்ளனர் கோத்தபயாவும், மகிந்தாவும்" என்று குறிப்பிட்டுள்ளார், மில்லிபேன்ட்.

சிங்கள அரசு அலுவலகங்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல், ஐ.நா. விதியை மீறி 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இறுதிக்கட்ட போரில் புலிகள் போரிட பயன்படுத்தினர்  என்று சான்றுகள் முன்வைக்கப்பட்டாலும், ஏன் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த படுகொலைகளுக்கு, போர் விதிகளை மீறி புலிப்போராளிகளுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு தண்டனைகள் அளிக்கப்படவில்லை? என்ற கேள்விகள் காட்சிகளுக்கு இடையே எழுப்பப்பட்டது.

மக்கள் மீதே எறியப்பட்ட குண்டுகள்...

பாதுகாப்பு வலயங்களில் (No Fire zone) இருந்த பதுங்கு குழிகள், மக்களை காக்க ஐ.நா அமைத்த பதுங்கு குழிகள் என பதுங்கு குழிகள் எல்லாவற்றி்ன் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. சரத் பொன்சேகா போரில் எவ்வித வலிமையான ஆயுதங்களும் பயன்படுத்தவில்லை என்று சொல்லிவிட்ட பிறகே, ஐ.நா. பதுங்கு குழிகள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

இத்தாக்குதல் நடக்கும்போது பீட்டர் மக்கே என்ற ஐ.நா.வின் ஆஸ்திரேலிய பணியாளரால் இதை நிறுத்தக்கோரி பல அழைப்புகள் கொழும்புக்கு விடப்பட்ட பிறகும், அங்கிருந்து சற்று தள்ளி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இப்போரில் ஐ.நா. பதுங்குக்குழிகள் மீது தெரிந்தே தகுதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசு போரின் விதிகளை அப்பட்டமாக மீறியது தெரிகிறது.

உணவுக்கு வழி இல்லை... மருந்தில்லாமல் வலியோடு துடித்தவர்கள்!

அரசுக்கு பணிந்து பாதுகாப்பு வலயங்களுக்குள் வரும் மக்களுக்கு உணவு, மருந்து கொடுப்பது ஐ.நா.விதிப்படி ஒரு ஜனநாயக நாட்டின் கடமை. ஆனால் எந்த கடமையும் இல்லை என்றே இலங்கை ராணுவமும் அரசும் செயல்பட்டுள்ளது என ஆதாரங்களுடன் வருகிறது அடுத்தடுத்த சாட்சியங்கள்.

பாதுக்காப்பு வலயங்களுக்கு உள்ள மருத்துவராக பணியாற்றிய ஒருவரின் பதில் "அவசர சிகிச்சை (ஐசியூ) யூனிட்டில் மருந்து மிகவும் பற்றாக்குறையாக உள்ளது என்று சொல்லியும் அரசு பொருட்படுத்தவே இல்லை, இதனாலே குண்டுகளால் அடிப்பட்டு சிகிச்சையின் பொழுது  ரத்தப்போக்கு  நிற்காமல் இறந்தவர்களே அதிகம்."

இதுகுறித்து இதில் வதைப்பட்டு தமிழ் பெண்மணி கூறியது, "கடைக்கு பொருள் வாங்க போனால் குண்டு எப்ப வந்து விழும் என்றே தெரியாது, விழுந்தால் வியாபாரியும் விழுந்துக்கிடப்பார்.. மக்கள் உணவுக்கு வழியின்றி கீழே சிதறிய பொருட்களை அள்ளிக்கொண்டு இருப்பார்கள். அடுத்த அவர்கள் இருப்பார்களா இல்லையா என்றே தெரியாது" என்று அனுபவித்த கொடுமையை விளக்கினார்.

இதே போல் பல காயங்களுடன் தப்பி வந்த ஆண் ஒருவர் "நாங்கள் பட்ட காயங்களுக்கு எல்லாம் மருந்து இல்லை.. கத்திக்கொண்டே கண்கள் சொருகி விழுந்து விடுவோம் ,அதுவே குண்டடிபட்ட எங்களுக்கு வலிப்போக்கும் மருந்து. அப்படி இல்லாமல்  அடிப்பட்டவர்கள் வலியால் துடித்து கத்துவதைக் கண்டால் இழுத்திப்போட்டு சுட்டுக்கொன்று விடுவார்கள் ராணுவ ஆட்கள்" என்றார்.

முழுமையான திட்ட வகுத்தலுடன் குண்டுவீச்சு!

எந்தவித எச்சரிக்கையும் விடப்படாமலே திட்டுமிட்டு பொது மக்கள் குண்டுகள் வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதுவும் மருத்துவமனை என்று அறிந்தும், அதன் மீதே குண்டுகள் வீசப்பட்டுள்ளன. 2009 ஏப்ரல் 22-ம் தேதி இலங்கை அரசு 'வலிமை வாய்ந்த குண்டுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை' என்று சொல்லியதே, அப்படியென்றால் குண்டுவீச்சுத் தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது? இந்த தாக்குதலுக்கு யார் உத்தரவு கொடுத்தது? என்று வினவியுள்ளது, சேனல் 4.

இவ்வளவு ஏன், ராஜபக்சேவே தன் பேச்சில் "மக்களை எங்கள் பக்கம் கொண்டு வருவதற்காக தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அதில் 5000 முதல் 10000 பேர் செத்திருக்கலாம்" என்று கொலைவெறிப் பேச்சு இணைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரம் இல்லாத நாடு..

ராஜபக்சே அரசுக்கு எதிராக பத்திரிகை எதாவது எழுதினால் உடனே அவர்  'எல்.டி.டி.ஈ. உதவி பெறுபவர்' என்று முத்திரை குத்தப்பட்டு காணாமல் போவார் என்பது தான் இலங்கையின் பத்திரிகை விதி.

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்திலும் அதன் பிந்தைய காலக்கட்டத்திலும் பத்திரிகையாளர்கள் நிலைமையை பேசிவருபவர் இலங்கையின் சுதந்திர பத்திரிகையாளர், பாஷன அபயவர்தனே. அவர், "தன் அரசுக்கு எதிராக நடக்கும் பத்திரிகையாளர் யாராக இருந்தாலும் அவர் கொல்லப்படுவார் அல்லது நாட்டைவிட்டு விரட்டப்படுவார் என்றே நிலைமையே இதுவரை தொடர்கிறது. இந்த தருணம் வரையிலும் 60 ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். 2005-லிருந்து  சிங்களர்கள், தமிழர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்," என இலங்கையின் பத்திரிகை சுதந்திரமற்ற தன்மையை விளக்கினார். 

பிரபாகரன் மகன் என்பதாலே பாலச்சந்திரன் படுகொலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திர பிரபாகரன். பிரபாகரன் மகன் என்பதாலே கொடுமைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரருகே ஐந்து பேரின் சடலமும் கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் இருக்கின்றன. அவரின் மெய்க்காவலர்களாக இருக்கக்கூடும் என்று இப்படத்தின் தடயவியல் நிபுணர் டெர்ரிக் பவுண்டர் (Derrick Pounder) குறிப்பிட்டுளார்.

பாலச்சந்திரனின் உடம்பில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளன. பாய்ந்த குண்டுகள் அனைத்தும் சில அடிகள்  தொலைவில் இருந்தே பாய்ந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதில் உடல் அளவிலான சித்திரவதைகளுக்கு சாட்சியங்கள் இல்லை என்றாலும்  'பிரபாகரன் மகன்' என்பதாலே மனதளவில் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று அறியப்படுகின்றது. இக்கொலை மே 17, 2009 அன்று நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.      

சிங்கள அரசு கணக்கின் அடிப்படையில் பிரபாகரன் இதுவரை பத்து முறைக்குமேல் இறந்துள்ளார். சேனல்-4 காட்சிப்படுத்திய இப்படத்திலும், தலை மோசமாக அடிப்பட்டு நைந்து போன நிலையில் கைக்குட்டையால் மூடப்பட்ட தலையுடன்... சிங்கள அரசு, 'இவரே  பிரபாகரன், விடுதலைப் புலிகளின் தலைவர்' என்று ஒரு உடலை காட்டியது. அதுவே  இந்த ஆவணப் படத்திலும் காட்டப்பட்டது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுற்றதாக சொல்லப்பட்டபோது சிங்களர்களின் கொண்டாட்ட உற்சவங்களை பார்த்தால் தெரியும் தமிழர்கள் இலங்கையில் பட்டப்பாடினை. இந்த போர் முடிவுற்ற பொழுது இந்தியாவின் சார்பாக கலந்துக்கொண்டு ராஜபக்சேவுக்கு கைக்குலுக்கிய சிவசங்கரன் மேனன் உள்ளிட்ட காட்சிகள் வரை காட்டப்பட்டது.

'2013 காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்கவிருக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், 40,000 அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா.வும் சர்வதேசச் சமூகமும் மறந்துவிடக் கூடாது' என்று உள்ள குமுறல்களுடன் இலங்கையின் மனித உரிமை மீறல்களை சேனல்-4 தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கும்' என்று ரத்தக்கறைகள் நெஞ்சில் பதிவதோடு முடிவு பெறுகிறது.

நீதிக்கு இன்னுமா புலப்படவில்லை தண்டிக்கப்பட்டத இக்குற்றங்கள்?


 விகடன் வெளியிட்ட இந்த கட்டுரைக்கு மக்கள் கருத்து


1. ஏ ஆர் சி - நெஞ்சத்தை பதற வைக்கக்கூடிய காட்சிகள். குழந்தைகளையும் கொன்றொழித்த அரக்கத்தனமான செயலை கண்டு மனித இனம் வெட்க்கபடத்தான் வேண்டும்.

எப்படியாயினும், மக்களின் சக்திக்கு தகுந்தாற்போல் தனது போராட்டக்களத்தை அமைத்துக்கொள்ளாத விடுதலைப்புலிகள் தான் இப்பேர்பட்ட இனவெறி தாக்குதலுக்கு முதற்காரணமானவர்கள். விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் எத்தனை உயிர்களை அந்த மண் இழந்திருக்கிறது என்பதையும் நியாய உணர்வு கொண்டவர்கள் சிந்திக்கட்டும். இருப்பினும், ஒரு அரசை நடத்துபவர்களால் பொதுமக்கள்மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதும் தண்டனைக்குறியதுமாகும்.

வன்முறையால் எதையும் சாதித்துவிடலாம் என்று என்னுபவர்களுக்கு இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளுக்கு இடையே நடந்த இந்த யுத்தம் ஒரு படிப்பினையாக இருக்கட்டும். அது ஒன்று மட்டும்தான் உலகிற்கு ஆறுதலான விசயமாக இருக்க முடியும்.


2.அன்பாயன் -ஜ.நா.விதியை மீறி 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இறுதிக்கட்ட போரில் புலிகள் போரிட பயன்படுத்தினர்..என்கிற வரிகளை படித்த போது, போர் நடந்துகொண்டிருந்தபோது, தன் பணியாள்ர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அதிக அழுத்தம் கொடுத்தது மட்டுமல்லாது, இவ்வாறான போர் நடக்கும் பொழுது கடைபிடிக்கவேண்டிய சகல விதிகளையும் மீறிய பான்கீ மூனையும், அவர் வழிநடத்தும் ஜ.நா.வையும் தண்டிப்பது யார்? 


3. தமிழன் -அய்யா அப்துல்கலாம் அவர்களே, தமிழனாக அல்ல ஒரு சக மணிதனாக கேட்கிறேன்... இந்த ஆவணத்தை பார்த்திருப்பீர் என்று நம்பி கேட்கிறேன்.. தமிழர்களுக்கு நடந்தேறியுள்ள இந்த பேரழிவை பற்றி ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுங்களேன்... ராஜபக்ஷேவின் குருதி படிந்த கரங்களை உங்களது தமிழ் கரங்களால் குலுக்கிய உங்களை தான் கேட்கிறேன், வெள்ளையர்களுக்கு இருக்கும் மணிதாபிமானம் ஏன் பாரத மனித்திரு நாட்டிற்கு இல்லாது போனது என்று கேட்கிறேன்.... 

4. தமிழன் -பச்சிளங் குழந்தைகளை எப்படியெல்லாம் கொண்றிருக்கிறார்கள்... சோனியா சர்க்காரே, ராஜபக்ஷேவுடன் இவ்வளவு நெருக்கமாக பழகுகிறீர்களே, கொஞ்சம் கூடவா மணித குருதியின் வாடை, பிய்ந்து தொங்கும் சதைகளின் நாற்றம், வெள்ளெலும்பின் வீச்சம் என்று ஒன்று கூடவா உங்களின் சுவாசத்திற்கு எட்டவில்லை??? சோனியாவின் சர்க்காரே, ஈழத்தில் சிந்திய தமிழனின் ஒவ்வொரு துளி குருதிக்கும், போக்கிய ஒவ்வொரு இன்னுயிருக்கும் நீ தான் பொறுப்பு

5. சிவகுமார்  -புத்தனை வணக்கும் தேசம் கொன்று குவித்தது
புத்தனை ஈன்ற தேசம் உதவி செய்தது ......

இவர்கள் எல்லாம் பரிணாம வளர்ச்சியடைந்த மிருகங்கள் .....இது போல் ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று நினைக்கும் போதே அருவருப்பாக உள்ளது ......இவ்வளவு கொடூரங்கள் நடந்த பிறகு இன்று விசாரணை வைக்கவும், தீர்மானகளுக்கு அதரவு தெரிவிக்கவும் யோசிக்கும் நாடுகளும் தலைவர்களும் மனிதர்களே அல்ல ...இலங்கையை எங்கே சீனாவோ பாகிஸ்தானோ தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுமோ என்ற எண்ணத்தில் இன்று அமெரிக்க இவ்வளவு நாட்களுக்கு பிறகு இலங்கையில் போர் குற்றங்கள் நிகழ்ததாக தீர்மானம் கொண்டு வந்துள்ளது ..... 22 நாடுகள் அதரவு தெரிவித்த பின்பும் ஏன் இந்த காங்கிரஸ் மட்டும் இன்னும் அதரவு தெரிவிக்க வில்லை ...... ஏன் எனில் பிறகு ராஜபக்சே கேட்பார் - நீங்கள் தானே எனக்கு அணைத்து உதவிகளும் செய்திர்கள் என .....நீங்கள் என்ன தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் அந்த கதறலும் கண்ணீரும் மரணமும் நேர்தது நேர்தது தான் ..... அந்த ஆன்மாக்கள் இந்த மனித சமுதாயத்தை என்றுமே மன்னிக்காது (என்னையும் சேர்த்துதான் - கை நீட்டும் தொலைவில் இருந்தும் எதுவும் செய்யவில்லையே அவர்களுக்கு)

தன் இனத்தை தானே அழிக்கும் இனம் மனித இனம் என்பதற்க்கு இதை விட வேறு எந்த உதாரணமும் தேவை இல்லை ..
கேவலம் ......

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (16.3..2012) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.dinamani.com/Images/New_Gallery/2012/3/11/video5.jpg 

1. கழுகு - நூறு புதிய இயக்குனர்கள் அறிமுகமானால் வெற்றியை எட்டிப்பிடிப்பவர்கள் வெறும் ஐந்து சதவிகிதம் பேர் மட்டும்தான்! வெற்றிக்கு உத்திரவாதம் இல்லாத சினிமா வாழ்கையில், ஒரு அறிமுக இயக்குனரின் படைப்பில் உருவாகும் படம் திரையரங்குகளை எட்டும் முன்பே பாராட்டுகளை குவித்தால் எப்படியிருக்கும்!



 பிரபல தயாரிப்பாளர் பட்டியல் சேகர் தயாரிப்பில், சத்தியசிவா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கும் ‘கழுகு’ படத்துக்குதான் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருகின்றன. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட பாடல்கள், டிரைலர் மற்றும் சில காட்சிகளை பார்த்து விட்டு, அறிமுக இயக்குனரை “ ஒரு குட்டி பாலா” என்றே சொல்லி விட்டார்கள். 


அல்லிபாபா, கற்றது களவு போன்ற படங்களில் நடித்த இளம் நாயகன் கிருஷ்ணாவுக்கு இது மூன்றாவது படம். இவருக்கு ஜோடி வெப்பம் படத்தில் துணிச்சலாக பாலியல் தொழிலாளி கதாபாத்திரம் ஏற்ற பிந்துமாதவி. ஊட்டிக்குப் போய் தற்கோலை செய்து கொள்ளுபவர்களின் சடலங்களை மலையடிவாரத்திலிருந்து மீட்டபதற்காக சிலர் இருப்பார்கள்.

http://www.tamilnewsa2z.com/uploaded_files/news_images/132426988681.jpg


அந்த கதாபாத்திரத்தில்தான் கிருஷ்ணா, நடித்திருக்கிறார். கதைக் களமே புதிதாக இருகிறது கழுகின் பார்வையும் தமிழ்சினிமாவுக்கு புதிதாக இருந்தால் நல்லதுதான்! இதில் கவணிக்க வேண்டிய விஷயம், படத்தின் நாயகன் கிருஷ்ணா தயாரிப்பாளரின் இளையமகன்! 

அப்படியென்றால் மூத்தமகன் யார்? அஜித்தின் பில்லா உட்பட தொடர்ந்து வெற்றிபடங்களை இயக்கி வரும் விஷ்ணுவர்த்தன்!

ஈரோடு ராயல், ஸ்டார் ஆகிய இரு தியேட்டரில் ரிலீஸ்


http://www.tamilcinema.com/CINENEWS/images2/vinmeengal.jpg

 2. விண்மீன்கள் - விண்மீன்கள் பட இயக்குனர் விக்னேஷ் மேனன் கூறியதாவது: வயிற்றிலிருக்கும் சிசுக்கு சில காரணங்களால் மூளைக்கு ஆக்ஸிஜன் போகாததால் குறைபாடுள்ளவைகளாக பிறக்கின்றன. இதை செரிபெரல் பால்ஸே என்று கூறுகிறார்கள். இதுபற்றி இன்னும் படங்கள் வந்ததில்லை என்பதால் இதை மையமாக வைத்து கதை உருவாக்கினேன்.
   
Vinmeengal is a new story for Tamil cinema/.




  இதுபற்றி டாக்டர்களிடம் ஆலோசித்ததோடு இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எப்படி தங்களது வாழ்க்கையை வாழ்கின்றன என்பதை நேரடியாக சென்றும், அவர்களின் வீடியோ காட்சிகளையும் பார்த்தேன்.


அப்போது பட ஹீரோ ராகுல் ரவீந்தரும் வந்திருந்தார். ஷூட்டிங் செல்வதற்கு முன் இந்த கேரக்டரில் நடிக்க பயிற்சி எடுத்தார். பாண்டியராஜன், விஷ்வா, ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.erode lakshmi release

http://video.hosuronline.com/pictures/mahavamsam-15.jpg

3. மகா வம்சம் போதிதர்மரின் மூலம் தமிழர்களின் பெருமையை சொல்லிய ஏழாம் அறிவு படத்தை தொடர்ந்து மற்றொரு படமும் தமிழர்களின் பெருமையை விளக்க வரவிருக்கிறது.

போகஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு 'மகாவம்சம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. உலகின் ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியிலும் தமிழன்தான் காரணகர்த்தாவாக இருந்திருக்கிறான். 

 http://www.kollytalk.com/wp-content/uploads/2012/01/Mahavamsam-1.jpg

வளந்த நாட்டின் மேம்பாட்டிலும், வளரும் நாடுகளின் முன்னேற்றத்திலும் இன்று வரை தமிழன் இருக்கிறான். என்ற உண்மையை விளக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரகுமான் ஹிம்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். ப்ரியா, ஹென்றி, ரவிசுந்தரலிங்கம், மனோன்மணியன், கீர் ரகுமான் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

1900ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற நிஜ சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.. ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்


 http://3.bp.blogspot.com/_rR_DLxd7wts/S_-45vOPe5I/AAAAAAAAEkU/3cdBcXotQn0/s1600/maasi-poster.jpg

4.  மாசி - ஜி.கிச்சா இயக்கத்தில் அர்ஜுன் நடிக்கும் மாசியில் அவருக்கு போலீஸ் அதிகா‌ரி வேடம்.

படம் பற்றி கேட்டால், அர்ஜுன் ஆச்ச‌ரியமாகச் சொல்லும் ஒரு விஷயம், “இதுவரை ஆ‌க்சன் ஹீரோவா நடிச்சேன். இதில் முதல் முறையா எதி‌ரிகளுடன் மசில் ஃபவருடன் மோதாமல் மைண்ட் பவரை யூஸ் பண்றேன். ஏதி‌ரிகளை எப்படி புத்திசாலித்தனத்தால் வீழத்துகிறேன் என்பது ஹைலைட்டாக இருக்கும்.

சி.பி - அப்போ இன்று முதல் நீங்கள் மைண்ட் பவர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள் ஹி ஹி 

” ஆ‌க்சன் கிங் அறிவை வைத்து விளையாடுவது ச‌ரிதான். ஆனால், அவரது ரசிகர்க‌ள் இதை ஏற்றுக் கொள்வார்களா? அந்த சந்தேகம் இயக்குனருக்கும் இருக்கும் போலிருக்கிறது. அதனால், இருக்கிற ஒன்றிரண்டு சண்டைகளை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்.

சி.பி - அறிவை வெச்சு விளையாடறேன்னு ஹீரோ வில்லன் 2 பேரும் 13 ரீலும் செஸ் விளையாடாதீங்கய்யா செம காண்டாகிடுவோம்.. 

http://reviews.in.88db.com/images/maasi/maasi8.jpg
அதிலும் கிளைமாக்ஸ் சண்டை மிகப் பிரமாண்டம். அர்ஜுன் பொன்னம்பலத்துடன் மோதும் இந்தக் காட்சியில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் 600 கார்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த சண்டைக் காட்சியை படமாக்க பயன்படுத்தப்பட்டவை ஏழு கேமராக்கள். தமிழ் சினிமா ச‌ரித்திரத்தில் இது முதல்முறை.

சி.பி - 7 கேமராவானா என்ன? 70 கேமராவா இருந்தா என்ன? படத்துல ஒரு சீன் தானே ? அதுவும் இல்லாம எந்திரன்ல 35 கேமரா யூஸ் பண்ணாங்களே? 


இதே கிச்சா சினேகாவை வைத்து பவானி ஐபிஎஸ் படத்தை இயக்கி வருகிறார், அதுவும் ஒரே நேரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.பி - விளங்கிடுச்சு.. அந்தப்படம் ரிலீஸ் ஆகி பல மாசங்கள் ஆச்சு.. அப்போ இந்தப்படம் 2009ல ஸ்டார்ட் பண்ணிய படம் போல அவ்வ்வ்வ்,
ஈரோடு ஆனூர்,ராயல்,அன்னபூரணி 3 தியேட்டர்ல ரிலீஸ்.

 http://www.mazhalaigal.com/images/issues/mgl0804/im0804-61_karnan.jpg
5. கர்ணன் -  1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்தலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என்.என். டி. ராம்ராவ், தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.இது இப்போ ரி ரிலீஸ் ஆகுது..  ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ்

Thursday, March 15, 2012

தமிழா! தமிழா! இருப்பாய் தமிழா நெருப்பாய்!ஈழத்தமிழனும் கலந்தான் நம் உயிர் உறுப்பாய்..


a
உலகம் முழுவதும் தன் இனம் வாழ அதை பார்த்து பெருமைப்படும் மனங்கள் இருக்கையில் தமிழ் இனம் மட்டும் தான் தன் இனம் வீழ்வதை நேரில் கண்டும் என்ன செய்வது என்ற நினைப்பே இல்லாமல் சொரணை அற்று இருக்கிறான்.. ஒரே ஒரு ராஜீவ் உயிரை கொன்றதற்கு 3 பேருக்கு தூக்கு என்றால் ஒரு லட்சம் தமிழ் உயிர்களை கொன்ற ராஜ்பக்சேவுக்கு  என்ன தண்டனை தருவது? இத்தனை நாளாக மறைத்து வந்த போர்க்குற்றங்கள் இப்போது வீடியோ வடிவில் வெளிவந்து விட்டது.. கனத்த நெஞ்சத்துடன் அதை பகிர்கிறேன்


கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவை  இல்லை. ஆனால், கொலைக்கு..? கண்ணே தேவை இல்லை!


 மரணத்தின் ஓலமே பச்சைப் படுகொலையை உணர்த்தும். ஈழத் தில் இருந்து ஒலிக்கும் ஒப்பாரியும் ஓலமும் இப்போதுதான் உலக நாடு களுக்கு ஓரளவு கேட்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை உணர்த்துகிறது அமெரிக்கா.


ஜெனிவாவில் கூடிப் பேசும் நாடுகள், வவுனியாவில் கூடி இருந்தால் உண்மை அதிகமாகவே சுடும். ''எனது பணிக் காலத்தில் நெஞ்சத்தைப் பதைபதைக்க வைத்த காட்சி அது!'' என்று 2009 மே மாதம் 23-ம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், மூச்சடைத்துப் போய்ச் சொன்னார். மே 19-ம் தேதி உயிர்ப் பறிப் பின் கடைசி தினம். அன்றில் இருந்து நான்கு நாட்கள் கழித்து சென்ற பான்-கி-மூன் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டார். அந்த இடங்களும் போர்க் குற்றத்தின் கொடூரச் சுவடுகள் தெரியாமல் அழிக்கப்பட்டு இருந்தன.


 அந்தத் தடயங்களை மறைப்ப தற்குத்தான் நான்கு நாட்களை எடுத்துக் கொண்டார் மகிந்த ராஜபக்ஷே. தடயம் அழிக்கப்பட்ட இடங்களே பான்-கி-மூனைப் பதைபதைக்கவைத்தது என்றால், முந்தைய மூன்று ஆண்டுகள் எப்படி இருந்திருக் கும்?


''குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகள் மிகவும் பயங்கரமானவை. அவை வெடித்ததும் அந்தப் பகுதியில் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சும். அதனால், காற்றில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகும். இதனால் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் மூச்சடைத்துச் செத்துப்போவார்கள். அப்போது அவர்களுடைய உடைகள் எல்லாம் நார்நாராகக் கிழியும். செத்துப்போனவர்கள் உடல்கள் எல்லாம் நிர்வாணமாகவே கிடக்கும்!'' என்று தான் பார்த்த காட்சியை மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் குழுவிடம் தமிழ் ஈழப் பெண் ஒருவர் சொன்னார். அவர் சொன்னது கற்பனை அல்ல. அந்தப் பெண் சொன்னதை வாஷிங்டனில் உள்ள சர்வதேச மூத்தகுடி மக்கள் குழு வழிமொழிந்தது.


'இலங்கை அரசின் செயல்பாடு, சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்!’ என்று எழுதப்பட்ட வாசகத்தில் கையெழுத்துப் போட்ட மூன்று முக்கியமானவர்கள்... தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர், ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான்.


மூன்று ஆண்டுகள் கழித்து, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா வந்து இதனை ஆரம்பிக்க வேண்டிய அளவுக்கு உலக நாடுகளிடம் மௌனம் நிலவியது. ஜார் சக்கரவர்த்திக்குப் பாடம் கற்பித்த சோவியத் ஒன்றியமும் பண்பாட்டுப் புரட்சி கண்ட செஞ்சீனமும் பாடிஸ்டாவுக்கு எதிராகக் களமாடிய ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபாவும் ஈழத் தமிழர்க்கு அரணாக இருந்து காத்திருக்க வேண்டும். அல்லது காந்திய தேசமாவது கை கொடுத்திருக்க வேண்டும். அமைதி விடுதலை கண்டவர்களும் ஆயுத விடுதலை அடைந்தவர்களும் மௌனிக்க... அமெரிக்கா இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது.


ஒருகாலத்தில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைதான் இலங்கை. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் ரத்தத் தொடக்கமாக அமைந்தது 1983 ஜூலைப் படுகொலைகள். அப்போது அமெரிக்க அரசாங்கம் விடுத்த அறிக்கையில், 'சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பயங்கரவாதிகள் நடந்துகொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இந்த இனக் கலவரமாகும்’ என்று நியாயப்படுத்தியது. இந்தப் பாவத்துக்குப் பரிகாரம்தான் ஜெனிவாவில் இப்போது காணப்படுகிறது!


ராஜபக்ஷே மீதான போர்க் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. சபை மூவர் குழுவை அமைத்து விசாரித்தது. சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள் என்று அந்த அறிக்கை சொல்கிறது. இந்த அறிக்கையை மையமாக வைத்துதான் அமெரிக்கா தனது தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதை விடுத்து, இலங்கை அரசாங்கம் அமைத்த கண்துடைப்பு ஆணைய அறிக்கையை மையமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ் மக்களுக்கும் மனித உரிமைக்கும் காட்டும் அக்கறை ஆகாது. ஆனாலும், அமெரிக்கா இதையாவது செய்கிறதே, இவர்களாவது செய்கிறார்களே என்று மனத் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்!


பொருளாதார வளத்திலும் ராணுவ வளத்திலும் அமெரிக்காவுக்குச் சமமாக நிற்கும் சீனாவின் கைப்பாவையாக இலங்கை மாறிவிட்டது என்பதால், அந்த நாட்டை மிரட்டுவதற்கு அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது. அமெரிக்கா எதைச் செய்தாலும் எதிர்ப்பது என்று கம்யூனிஸ நாடுகள் குருட்டுக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன. இந்த இரண்டு பகடைகளுக்கு மத்தியில் தமிழனின் உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. ராஜபக்ஷே உயிர் தப்பிவருகிறார்.


1949-ம் ஆண்டில் இயற்றப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 3-ல் போர்க் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. 'போரில் நேரடியாகப் பங்கெடுக்காதவர்கள், போரில் ஈடுபாடுள்ள வீரர்களின் குடும்பத்தினர், ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய முன்வந்தவர்கள், காயத்தாலோ, நோயினாலோ பாதிக்கப்பட்டவர்கள், சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோரை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும்!’ என்று அந்த விதி கூறுகிறது. 


ஐ.நா. சபை அமைத்த மூவர் குழு அறிக்கைப்படி கொல்லப்பட்ட 40 ஆயிரம் பேரும் (இதைவிட எண்ணிக்கை கூடுதலானது என்றாலும்!) இந்த விதிகளில் குறிப்பிடப்படும் வகையினர்தான். தங்கிய இடங்கள், பதுங்குக்குழிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வளையம் என அத்தனையையும் மயானமாக்கியவர்களுக்கு ஐ.நா. சபையோ 47 உறுப்பு நாடுகளோ தண்டனை தருமா? அதுவும் எப்போது என்று தெரியாது.


ஆனால், 'தெய்வம் நின்று கொல்லும்’ என்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர தமிழனுக்கு வேறு வழி இல்லை!


தனது கைக்கூலிகளால் ஆளப்படும் இந்தியா இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஏன் தன்னை எதிர்க்கிறது என்று அமெரிக்காவே ஆச்சரியப்படும். இந்தியாவில் இருந்து வெள்ளைக்காரன் காலத்திலும் கொள்ளைக்காரர்கள் காலத்திலும் கொண்டு பதுக்கப்பட்ட 75 லட்சம் கோடிகளை பாதுகாப்பாகவும் அதே நேரம் தங்கள் பாதுகாப்பிலும் வைக்க சிறந்த இடம் இலங்கைதான் என்று நம் ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களோ? மொத்தத்தில் காட்டிக்கொடுக்கும் கூட்டம் ஒன்று உள்ளிருந்தே தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. சாதி, மதம், கட்சி என பல கூறுகளாக தமிழர்களை பிரித்து அவர்களுக்கு இனமானம் இல்லாமல் செய்து இறையாண்மை என்று புதிதாக ஒன்றை கண்டுபிடித்து அந்தக் கூட்டம் கொட்டமடிக்கிறது. தமிழனின் ஆரம்பம் காங்கிரஸின் அழிவில்தான்.
 
சற்று சிந்தித்து பாருங்கள். அமெரிக்கா தான் பாதிக்கப்பட்டால் ஒழிய போரில் ஈடுபடாது. ஈராக் (புஷ் குடும்ப யுத்தம்). ஆப்கான் - இரட்டை கோபுர தாக்குதல். மற்றப்படி ரவாண்டாவில் என்ன செய்த்து. டார்போர் ஒன்றும் இல்லை. சோமாலியா - சுணக்கத்துடன் போய் அடி வாங்கி வந்தது. பாஸ்னியா - வோ ஐரோப்பிய இணையம். லிபியாவில் கூட பிரெஞ்ச் அரசு தீவிரமாக இருந்த்தே தவிர ஒபாமா இல்லை.

அப்படிப்பட்ட அரசு - இலங்கைக்காக எப்படி போராட முன்வரும்? இந்தியாவை எதிர்த்து கொண்டு (ஒரு போர்தளம் நிறுவ ஏதுவாக இடமில்லையே).

வெறும் பொருளாதார மிரட்டல் விடுக்கலாம் - இலங்கையின் ஏற்றுமதிகள் மீது. அதுவும் கடினமே. ஈரான் இத்தனை தடைகளுக்கும் பின்னர் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அப்படி தடைகள் ஒரு வேளை அவர்களின் பொருளாதாரத்தை அசைக்கும் எனில் அதன் கோபம் அநாவசியமாக இலங்கை தமிழர்கள் (அங்கு இருப்பவர்கள்) மீதுதான் திரும்பும். ஆக, இவர்களின் மிரட்டல் யாருக்காக செய்யப்படுகிறதோ அவர்களுக்கே இன்னல் தரும்.

இது தமிழ் சினிமா போல - பொண்ணை கட்டி கொடுத்தால் மாப்பிள்ளை இஷ்டப்படி நடக்க வேண்டும் என்ற கோட்பாடு போன்றது.

அடுத்தது கொல்லப்பட்ட 40 ஆயிரம் என்பதனை யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் அறிக்கைகள் கேள்வி குறி ஆக்குகின்றன. அதனை படிக்கும் முன் என் எண்ணமும் அட இத்தனை பேரா என்று!. ஆனால் அந்த அறிக்கையை படித்த பின்னர் ஒரு நிகழ்வையே மீண்டும் மீண்டும் பலர் விவரிக்கின்றனர். நேரில் பார்த்தவர் இல்லை எல்லாமே கேள்விப்பட்டது, மருவி வேறு சூழ்நிலையில் (using diff background) சொல்லப்பட்டது. ஆக எத்தனை டபுள் கவுண்ட் என்பது தெரியவில்லை. ஆள் கணக்கெடுப்பு என்பது தோராயமாகத்தான் உள்ளது. நிஜமாகவே எத்தனை பேர் இறந்தனர் என்பது தெரிய வராது. 30 இல்லை 50 ஆயிரமாக கூட இருக்கலாம்.

 எத்தனையோ இனங்கள் இந்த உலகத்தில் அழிந்திருக்கின்றன! போராடியவை மட்டுமே தப்பி பிழைத்திருக்கின்றன.இந்தியா தமிழர்களின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் மிதித்துகொண்டேயிருக்கிறது.தவறு செய்தவர்களை 'தெய்வம் நின்று கொல்லும்’ என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்ததாகவோ அல்லது அழிந்துப்போன இனத்தை தெய்வம் மீட்டெடுத்தாக எவராவது அறிந்ததுண்டோ