Showing posts with label rana. Show all posts
Showing posts with label rana. Show all posts

Thursday, January 03, 2013

ராணா , சசி தரூர் உடன் அடிக்கடி சந்திப்பு ஏன்? த்ரிஷா இடம் சுட்டிப்பொருள் விளக்கிய பேட்டி

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/05/Trisha-hot-in-Saree-10.jpg 

ஐ லைக் சமந்தா"
க.ராஜீவ்காந்தி
 
 
10 வருஷம்... 10 வருஷம்னு மத்தவங்கதான் சொல்லிட்டே இருக்காங்க. ஆனா, 'சமர்’ பட ரிலீஸை நினைச்சா ரெஸ்ட்லெஸா இருக்கு... ஏதோ முதல் படம் ரிலீஸ் ஆகுற மாதிரி'' விழிகளும் வார்த்தைகளும் படபடக்கின்றன த்ரிஷாவிடம். அழகில் இயல்பு, வார்த்தைகளில் தெளிவு, அணுகுமுறையில் சிநேகம்... 10 வருட அனுபவங்களுக்குப் பிறகு, இது த்ரிஷா வெர்ஷன் 2.0.   ''இப்போ ட்ரெண்ட்ல ஒரு ஹீரோயின் 10 வருஷம் தாக்குப்பிடிக்கிறது பெரிய விஷயம்... எப்படி முடிஞ்சது?''


 
''நேர்மையா சொல்லணும்னா, முதல் படம் நடிச்ச பிறகு ஆறு மாசம் கூட நான் சினிமாவில் தாக்குப்பிடிக்க மாட்டேன்னுதான் நினைச் சேன். ஆனா, இத்தனை வருஷம்... நான் நினைச்சே பார்க்கலை. அதுவும் ரசிகர்களுக்கு என்னை எப்படிப் பிடிச்சதுனு இப்போ வரைக்கும் தெரியலை. இப்பவும் சினிமால என் எதிர்காலம்பத்தி எந்தத் திட்டமும் இல்லை. காலைல எந்திரிச்சா ஷூட்டிங் கிளம்புற ஆர்வம் இருக்கிற வரை நடிப்பேன். நல்ல ஸ்க்ரிப்ட், வித்தியாசமான கேரக்டர்கள் கிடைச்சிட்டே இருந்தா, இன்னொரு 10 வருஷம்கூட நடிக்க ஆசைதான்.இப்பெல்லாம் படம் தேர்ந்தெடுக்கிறதில் ரொம்பக் கவனமா இருக்கேன். அதனாலதான், 2012-ல தமிழ்ல என் படம் ஒண்ணுகூட ரிலீஸ் ஆகலை. ஆனா, இந்த இடைவெளியும் நல்லதுதான். தமிழ்நாட்டு ரசிகர்கள் என்னை நல்லா மிஸ் பண்ணட்டும். எல்லாத்துக்கும் சேர்த்து, 2013-ல் நாலைஞ்சு படம் வரும். எல்லாமே நல்ல படங்கள், நல்ல நல்ல ரோல்கள்!''''த்ரிஷாவுக்கு ரீ ப்ளேஸ்மென்ட் யார்?''''பதில் சொல்றது கஷ்டமாச்சே. நான் நடிக்க வந்தப்ப, சிம்ரனுக்கு ரீ ப்ளேஸ்மென்ட்னு சொன்னாங்க. ஆனா, இப்பவும் சிம்ரன்னா சிம்ரன்தானே! இப்ப நிறையப் பேரு முதல் படத்துலயே அசத்துறாங்க. எனக்கு சமந்தாவை ரொம்பப் பிடிக்குது. ஸ்கிரீன்ல அவ்ளோ அழகா இருக்காங்க. நேச்சுரலா நடிக்கவும் செய் றாங்க. என் சாய்ஸ் சமந்தா!''''ஆஹா... நீங்க சமந்தா சூப்பர்னு சொல்றீங்க. ஆனா, 'வி.டி.வி.’ ஜெஸ்ஸியைவிட 'என்.இ.பி.’ நித்யாதான் பெஸ்ட்’னு சமந்தா சொல்லியிருக்காங்களே?''''மாட்டிவிடணும்னு பாக்கறீங்க? நான் இன்னும் 'நித்யா’வைப் பார்க்கலை. ஆனா, சமந்தா சொன்னா சரியாத்தான் இருக்கும். ஏன்னா, ஜெஸ்ஸி, நித்யா ரெண்டு ரோலுமே அவங்க பண்ணியிருக்காங்க. நான் ஜெஸ்ஸி மட்டும்தானே பண்ணியிருக்கேன்!''''ஹீரோயின்களில் யார் உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்?''''எல்லார்கிட்டயும் நல்லாப் பேசுவேன். நயன்தாரா ரொம்ப வருஷமா நல்ல பழக்கம். தமன்னா, இலியானா, வரூ எல்லாருமே நல்ல ஃப்ரெண்ட்ஸ்தான். ஆனா, ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்னு சினிமாவில் யாரும் இல்லை. 20 வருஷம் முன்னாடி க்ளோஸா இருந்தவங்கதான் இப்பவும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்!''''கிசுகிசுக்கள்..?''


  ''இத்தனை வருஷத்துல பக்குவப்பட்டுட்டேன். நானோ, ராணாவோ எதையும் சீரியஸா எடுத்துக்கிட்டதே இல்லை. எங்களைப் பொறுத்தவரை கிசுகிசுக்களை ஜோக் மாதிரி எடுத்துக்குவோம். படிச்சுட்டு சிரிச்சுக்குவோம்!''''கல்யாணம்?''


''எனக்கே தெரியாம எனக்கு ஏகப்பட்ட தடவை கல்யாணம் ஆகிடுச்சே! ஆனா, இப்ப வரை எனக்கு அப்படி ஒரு ஐடியா வரவே இல்லை. நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன், கரெக்டான ஆள் கிடைச்சதும்!


ஆளும் கிடைக்கலை, பண்ணிக்கிற மனநிலையும் இல்லை. ரெண்டும் செட் ஆச்சுன்னா பார்க்கலாம். ஆனா, எனக்கு லவ் மேரேஜ்தான்!''''திடீர்னு சசி தரூரைச் சந்திக்கிறீங்க. எதிர்காலம் அரசியலிலா?''


''ஐயோ, அதெல்லாம் வேணாங்க... இப்ப சினிமாவும் அரசியலும் கலந்துடுச்சு. அதனால சினிமால இருக்கிற வரை அரசியல்பத்திப் பேசாம இருக்கிறதுதான் நல்லது!''thanx - vikatan http://4.bp.blogspot.com/_vvisVuuXphE/TIi0m1zGugI/AAAAAAAAAAU/x9cRRnFo34I/s1600/Trisha_Latest_Hot_Stills,_Images,Photo_Gallery,_Wallpapers.jpg