நாயகன் ஒரு பள்ளியில் மைக்ரோ பயாலஜி சப்ஜெக்ட் ஆசிரியராகப்பணியாற்றுகிறார்.
விண்வெளியில் சூரியன் உட்பட பல கோள்கள் ஒளி இழந்து வருகின்றன (டிம் ஆகிக்கொண்டு வருகிறது) என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள்.மைக்ரோ ஆர்கனிசம் படிவதால் இது நிகழ்கிறது .இதே மாதிரி தொடர்ந்து நடந்தால் 30 வருடங்களில் 15% சூரியன் அதன் சக்தியை இழந்து விடும்.உலகம் முழுக்க பசி,பட்டினி,பஞ்சம் என்பது வந்து விடும்.இதைத்தடுக்க விஞ்ஞானிகள் ஒரு பிராஜக்ட் ரெடி பண்ணுகிறார்கள்.
சூரியன் உட்பட அனைத்துக்கோள்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும் பாசிட்டி. என்னும் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் எப்போதும் போல் இருக்கிறது.அதன் ரகசியத்தைக்கண்டறிந்து விட்டால் சூரியனையும் ,உலகத்தையும் காப்பாற்றி விடலாம்.
இப்போது நாயகனை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யலாம் என முடிவு எடுக்கிறார்கள்.ஆனால் அதில் ஒரு சிக்கல்.நாயகன் விண்வெளிக்குப்போகலாம்,ஆனால் பூமிக்குத்திரும்ப வர முடியாது.ஒன் வே மாதிரி தான்.அதனால் நாயகன் அங்கே போக பயப்படுகிறான்.ஆனால் வேறு வழி இல்லாமல் போக நேரிடுகிறது.
நாயகன் விண்வெளிக்குப்போனதும் அங்கே ஒரு ஏலியனை சந்திக்கிறான்.அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் சந்திப்பது போல.
ராக்கி என்ற ஏலியன் அவர்களது கிரகத்தைக்காப்பாற்ற நாயகன் மாதிரியே இந்த கிரகத்துக்கு வந்திருக்கிறது.இவர்கள் இருவருக்கும் ஏற்படும் நட்பு ,புரிதல் தான் மொத்தப்படமும்.
ஆண்டி வேர் எழுதிய நாவலின் தழுவல் தான் இந்தப்படத்தின் திரைக்கதை.நாவலின் டைட்டிலும்,படத்தின் டைட்டிலும் ஒன்று தான்.
இரட்டை இயக்குநர்கள் ஆன பில் லார்டு + கிறிஸ்டோபர் மில்லர் தான் படத்தை இயக்கி இருக்கிறார்கள்.
படத்தில் மொத்தமே 6 கேரக்டர்கள்தான்.பெரும்பாலான காட்சிகளில் நாயகன் + ஏலியன் இருவர் மட்டுமே.
நாயகன் ஆக ரியான் கோஸ்லிங்க் நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே!இவரது நடிப்பு அருமை.மொத்தப்படத்தையும் இவர் ஒருவர் தான் தாங்கி நிற்கிறார்.
சபாஷ் டைரக்டர்
1 கிராவிட்டி ,ஈ டி போன்ற ஹாலிவுட் படங்களுக்கு நிகரான பிரமிப்பை ஏற்படுத்தியதற்காக பாராட்டலாம்
2 நான் சந்தித்த சிறந்த மனிதன். நீ தான் என்று ஏலியன் சொன்னதும் நாயகன் திகைக்க உடனே ஏலியன். "சாரி நான் சந்தித்த ஒரே மனிதன் நீ தான் " என்று சொல்லும்போது தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளியது.
3 படத்தில் முதல் 50 நிமிடங்கள் நாயகன் மட்டுமே தனியாகப்பேசிக்கொண்டே இருப்பது நமக்குப்புதிய அனுபவம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1. மொத்தப்படம் இரண்டரை மணி நேரம்.படத்தில் ஒரு மணி நேரம் நாயகன் மட்டும் தான் ,ஒன்றரை மணி நேரம் நாயகன்+ ஏலியன் தான் என்பதால் பலருக்கும் போர் அடிக்கலாம்
2 நாயகன் இந்த பிராஜக்ட்டில் பெரிதாக சாதித்த மாதிரி காட்டவில்லை.இவரை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு வலுவான காரணம் சொல்லப்படவில்லை.
3 ஏலியன்சுக்கு ஒரு முகம் மாதிரி அமைப்பைக்கொடுத்திருந்தால் இன்னமும் எமோஷனல் கனெக்ட் கிடைத்திருக்கும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க். - களின் யு
சி பி எஸ் பைனல் கமெண்ட்- சயின்ஸ் பிக்சன் டிராமாப்பிடிக்கும் என்பவர்கள் மட்டும் பார்க்கலாம்.கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் எதுவும் இல்லை.ரேட்டிங்க். 3/5
| Project Hail Mary | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Phil Lord Christopher Miller |
| Screenplay by | Drew Goddard |
| Based on | Project Hail Mary by Andy Weir |
| Produced by |
|
| Starring |
|
| Cinematography | Greig Fraser |
| Edited by |
|
| Music by | Daniel Pemberton |
Production companies |
|
| Distributed by |
|
Release dates |
|
Running time | 156 minutes[2] |
| Country | United States |
| Language | English |
| Budget |
|
| Box office | $164 million[4][5] |
