Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Thursday, April 30, 2015

ANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவி)

கடந்த ஆண்டு நடந்த ஷாங்காய் திரைப்பட விழாவில் ‘ஆன்ட் ஸ்டோரி’ நாயகியான கொல்கத்தாவை சேர்ந்த ஷீனா சோஹன், இயக்குநர் முஸ்தபா சர்வார் பரூக்கி.
கடந்த ஆண்டு நடந்த ஷாங்காய் திரைப்பட விழாவில் ‘ஆன்ட் ஸ்டோரி’ நாயகியான கொல்கத்தாவை சேர்ந்த ஷீனா சோஹன், இயக்குநர் முஸ்தபா சர்வார் பரூக்கி.


எறும்பு தின்பண்டங்களை மட்டுமா அரிக்கும்? மனதை அரித்து மன நோயாளியாக மாற்றுவதற்குகூட எறும்பைக் குறியீடாகக் கொள்ளலாம்.
எம்எல்எம் எனப்படும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் சாதாரண மக்களை எப்படியெல்லாம் பாதிக் கிறது என்பதை சமீப ராஜதந்திரம் படம் வரை தமிழில் பார்க்கிறோம். சமீபத்திய படங்களில் எம்எல்எம் பற்றிய பேச்சு எப்படியோ வந்துவிடுகிறது. வங்கதேசத்தில் கூடத்தான். ‘எறும்பின் கதை’ படத்திலும்.
வங்கதேசம் பற்றி நாம் இன்னும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். பாபர் மசூதி இடிப்பின்போது அங்கு இந்து மக்கள் மீதான வன்முறைகள் பற்றி ‘லஜ்ஜா’ நாவலில் எழுதியதற்காக தஸ்லிமா நஸ்ரின் துரத்தப்பட்டு இந்தியாவில் வாழ்கிறார்.
3 வருடங்களுக்கு முன்பு நான் தாக்கா சென்றிருந்தபோது, வங்கதேசத் திரைப்படம் ஏதாவது ஒன்றை பார்க்க விரும்பினேன். அங்கு திருப்பூரைவிட பனியன் உற்பத்தி அதிகம். கூலி குறைவு. கொத்தடிமைத்தனமான பனியன் தொழிலாளர் வாழ்க்கையைக் கண்டேன் . திரைப்படம் பார்க்கும் ஆசையும் இருந்துகொண்டே இருந்தது.
உள்ளூர் நண்பர்கள் வேண்டாம் என்றனர். ‘‘இந்தியாவில் எடுக்கப்படும் இந்தி படங்களின் மோசமான பதிப்புகள்தான் எங்களூர் படங்கள்’’ என்றனர். இதை மறுக்கும் விதமாக சில அபூர்வமான படங்களும் வெளிவருகின்றன. சமீபத்தில் வந்த வங்கதேச படம் ‘எறும்பின் கதை’.
தாக்காவை அதன் அழுக்குத்தனத்தோடு சரியாகக் காட்டியிருக்கும் படம். நகரத்தின் புனித வாழ்க்கையும் நுகர்வு சார்ந்து பழகும் மக்களின் இயல்பும் ‘மித்து’ என்ற வேலையில்லாத இளைஞனை ரொம்பவும் பாதிக்கிறது. எம்எல்எம்-ல் சேருகிறான். ஓட்டை கைபேசி வைத்திருக்கிறான். நிர்வாகம் நல்லதாக வாங்கச் சொல்ல, புதியது வாங்கச் செல்கிறான். பழைய கைபேசி விற்கும் ஒருவனிடம் இருந்து பாதி விலைக்கு வாங்குகிறான்.
அது ஒரு நடிகையின் கைபேசி என்பதும், அவளிடம் இருந்து தொலைந்துபோனது என்றும் பின்னர் அவனுக்குத் தெரிகிறது. அவள் கொண்டுவந்து கொடுத்து பணம் பெற்றுக் கொள் என்கிறாள். அவள் தரும் அன்பளிப்பை மறுத்து எம்எல்எம்-ல் சேரச் சொல்கிறான். அவளும் சேர்ந்து புகைப்படம் எடுத்து விளம்பரம் தர, எம்எல்எம்-க்கு வலு சேருகிறது.
அவளது கைபேசியில் இருந்த வீடியோ காட்சி ஒன்றை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், தன்னுடன் நட்பைத் தொடர்ந்தால் அதை வெளியிட மாட்டேன் என்றும் கூறுகிறான். அவளும் ஒப்புக்கொள்கிறாள். திரைப்படத்தில் நடிப்பதுபோல, பத்து நிமிடத்துக்கு கணவன் - மனைவியாக நடிக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறான். அவள் ஏற்றாலும் பிறகு, எரிச்சலடைந்து அவனைத் துரத்திவிடுகிறாள். தனது உதவியாளர் மூலம் வீடியோ காட்சியைப் பெற முயற்சிக்கிறாள். வீட்டுக்குச் சென்று மிரட்டுகிறாள். வீடு களேபரமாகிறது.
எம்எல்எம் நிறுவனத்திலும் சோதனை. கம்பெனி மூடப்படுகிறது. முதலீட்டாளர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். வீட்டுக்கு வந்து தொல்லை தருகிறார்கள். நடிகையின் வீடியோ தொந்தரவு வேறு. ஓடி ஒளிகிறான். நண்பனின் துணிக்கடையில் இரவு நேரங்களில் துணிபொம்மையுடன் படுத்துக்கொள்கிறான். தொந்தரவுகள் அவனை அலைக்கழிக்கின்றன. மனநிலை பிசகு ஏற்படுகிறது. ‘‘அம்மா நான் பழையபடி ஆகணும். பள்ளிக்குப் போகணும்’’ என்று அரைக்கால் சட்டை, பை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.
திருமணமாகாத தங்கை, ‘‘அண்ணா, இந்த தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க நீ நடிக்கிறாய்தானே.. ஆமாம் என்று சொல், சொல்’’ என்று கதறுகிறாள். உடம்பில் எறும்பு ஊர்வதுபோல அவனை பிரச்சினைகள் சூழ்ந்து அரிக்கின்றன. பிரச்சினைகளால் மாறும் மனநோயின் கூறுகளை அவனது நடவடிக்கைகள் காட்டிக்கொண்டே இருக்கின்றன.ஒரு இளைஞனை தடுமாற வைக்கிற எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இந்த காட்சிகளை இந்தியச் சூழலிலும் வெகுவாகப் பொருத்திப் பார்க்கலாம்.
இதில் அழுக்கான தாக்கா, வறுமை சார்ந்த வாழ்க்கைகள், தடுமாறும் அரசியல் என சமூகப் பாதுகாப்பு இல்லாத வங்கதேச மக்கள் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ளலாம். இதில் வரும் அப்பா கதாபாத்திரம் நோயாளியான நிலையில் எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார். அரசியல்வாதி களும் அப்படித்தான் எதையும் கண்டுகொள்ளாமல் தாக்காவை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கிறார்களோ என நினைக்கச் செய்தது.

நன்றி - த இந்து


சுப்ரபாரதிமணியன்

Sunday, February 16, 2014

சந்திரா - திரை விமர்சனம் 35 1 / 2 +

அரச பரம்பரையினரின் சமகால வாழ்க்கை என்ற பெயரில் ஆபாசக் குப்பைகள் அவ்வப்போது பாலிவுட்டில் படமாக்கப்படும். பிரபல கன்னடப் பெண் இயக்குனரான ரூபா ஐயர் இயக்கியிருக்கும் இந்தப் படம் அந்த வகையைச் சேர்ந்ததல்ல. இந்தியக் கலாச்சாரத்தின் மீது ஆழமான நம்பிக்கையும் அழகுணர்ச்சியும் கொண்ட ஒரு பெண் மனத்தின் வெளிப்பாடாக, ஒரு பொழுதுபோக்குக் காதல் படத்தைக் கொடுத்திருக்கிறார் ரூபா. 



அரசாங்கம் எடுத்துக்கொண்டது போக மிச்சமிருக்கும் அரண்மனையில் வசிக்கிறது மைசூர் இளவரசியான சந்திரவதியின் (ஸ்ரேயா) குடும்பம் (படத்தில் காட்டப்படும் அரண்மனையை வைத்து, ஒரு வசதிக்காக மைசூர் ராஜவம்சம் என்று நினைத்துக்கொள்ளலாம்). அரண்மனை குருவின் (விஜயகுமார்) மகன் சந்திரஹாசன் (அறிமுகம் பிரேம்குமார்) இளவரசி சந்திரவதி இருவருக்கும் கண்டதும் காதல். பாரம்பரியக் கலைகள், ஆயுர்வேத மருத்துவம், மரபுக்கவிதை என்று கலாச்சாரத்தில் ஊறியவனாக இருப்பதால் சந்திரஹாசனைச் சந்திராவுக்குப் பிடிக்கிறது. ஆனால் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறியவனாக இருக்கும் மற்றொரு அரச குடும்பத்து வாரிசான ஆர்யாவுக்கு(கணேஷ் வெங்கட் ராம்) சந்திராவை நிச்சயம் செய்கிறார்கள். 



 சந்திரா - சந்திரஹாசன் காதல் இரண்டு குடும்பங்களுக்கும் தெரியவருகிறது. அவர்கள் காதலைக் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காதலர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் கதை. 

 

சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு, நடனம், அரங்க அமைப்பு, படத்தொகுப்பு கதை, திரைக்கதை, இயக்கம் என்று பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கும் ரூபா, ஒவ்வொரு காட்சியையும் ஓவியம் போலத் தீட்டியிருக்கிறார். அழகான ஒளிப்பதிவும் இசையும் பொருத்தமான நட்சத்திரத் தேர்வும் படத்தின் அசைக்க முடியாத பலம். ஆனால் இவை மட்டுமே ஒரு படத்துக்குப் போதாதே. ‘தூய்மையான காதல் கண்டிப்பாக வெல்லும்’ என்ற பழம்பெரும் கொள்கையைக் கருவாகக் கொண்டதில் பிரச்சினை இல்லை. அதைச் சொல்லும் முறையில் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் அல்லவா? 



அதுதான் சந்திராவில் இல்லை. அழுத்தமான சம்பவங்கள் இல்லாமல் திரைக்கதை ஆங்கங்கே தேங்கி நிற்கிறது. காதலுக்கு ஏற்படும் பிரச்சினை, இன்னொரு ஆணின் ஒருதலைக் காதலால் ஏற்படும் சிக்கல் ஆகியவறைச் சிறிதாவது புதுமையான காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கலாம். 



விளைவு, படத்தின் சிக்கல்களோடும் திருப்பங்களோடும் பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை. படத்தின் முடிவில் திருமண மஹால் காட்சியில், “நீ வந்து என்னைத் தாரை வார்த்துக் கொடு” என்று காதலனை இளவரசி அழைக்குப்போது, திரையரங்கில் ஆச்சரியத்துக்குப் பதிலாக ஏளனச் சிரிப்பலை. 

 

ஆனால் ஒரு பெண் இயக்குநராக சந்திராவதி கதாபாத்திரத்தின் வழியாக, பெண்மனத்தின் தனித்த ஏக்கங்களை சின்னச்சின்ன அடையாளங்கள் வழியாக வெளிபடுத்தியது பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் க்ளிஷேக்கள் குறைந்த படத்தை இந்த இயக்குனரால் தர முடியும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுகிறது. 



இளவரசி சந்திராவதியாக ஸ்ரேயா சரண் வசீகரிக்கிறார். காதல் காட்சிகளில் நடிப்பதில் இவருக்கும் அறிமுக நாயகன் பிரேம்குமாருக்கும் சரியான போட்டி. இருவருக்கும் இடையிலான வாள் சண்டைக் காட்சியில், ஆண்மை, பெண்மை, காதல் ஆகிய மூன்று உணர்ச்சிகளையும் காட்சிப்படுத்திய விதம் அபாரம். பெண் தோழிகள் அதிகம் கொண்ட கதாபாத்திரத்துக்கு ஆர்யா என்று பெயர் வைத்தது இயக்குநரின் குறும்பு. 



முதல் பாதியில் சரியான இடங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் இரண்டாவது பாதியில் எக்குத்தப்பாகத் திணிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் பாடல்களில் ஒளிப்பதிவாளர் பி.ஹெச்.கே. தாஸ், இசையமைப்பாளர் கௌதம் ஸ்ரீவஸ்தா இருவரும் அருமையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். 

 

காட்சிப்படுத்தும் விதம், சிறந்த நடிப்பை வாங்குதல், அழகுணர்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக வெளிப்படும் இயக்குநர் திரைக்கதையிலும் கதையை நகர்த்திச் செல்லும் சம்பவங்களிலும் கவனம் செலுத்தியிருந்தால் மிக நேர்த்தியான பொழுதுபோக்குப் படமாகியிருக்கும் சந்திரா. 

THANX - THE HINDU 




Thursday, July 18, 2013

LOOTERA - சினிமா விமர்சனம்

 
 
 தினமலர் விமர்சனம்

சிறுகதை மன்னன் ஓ ஹென்றியின் ‘கடைசி இலை’ சிறுகதையை தழுவிய காதல்காவியம். ஐம்பொன் சிலையை களவாட வந்தவனிடம், அழகுப்பெண் ஒருத்தி காதலில் வீழ்வதும், கடைசியில்... பட்ட மரத்தின், ஒற்றை இலையாக அவள் தனியே தவிப்பதும்தான் கதை.

பாஜ்பாய் (ஆரிப் ஜாகாரியா) பலே கடத்தல்காரன். அவனுடைய குறி எல்லாம் பழங்கால சிலைகள். ஜமீன்தார் சவுமித்ர ராய் சவுத்ரியின் (பருன் சந்தா) குலக்கோயில் சிலையை திருட அனுப்பப்படுகிறான் வருண் ஸ்ரீவத்சவ் (ரன்வீர் சிங்). மூச்சுத்திணறல் நோயால் அவதிப்படும் ஜமீன்தாரின் ஒரே மகள் சவுதாமினி பக்கி ராய் சவுத்ரி (சோனாக்ஷி சின்கா), வருணால் காப்பாற்றப்படுகிறாள். காதல் அங்கே பற்றிக் கொள்கிறது.
 
 
 வருண் தன் குறிக்கோளில் ஜெயிக்கிறான். அந்த நேரத்தில் ஜமீன்தாரின் சொத்து அரசு வசமாகிறது. துயரம் தாளாமல் கடவுளோடு ஐக்கியமாகிறார் ஜமீன்தார். ‘தன் காதலை களவுக்குப் பயன்படுத்திக் கொண்டானே தன் காதலன்’ என்கிற சோகத்தோடு... எல்லாம் அற்றுப்போய், ஒற்றை இலையாக, உயிரைப் பற்றிக்கொண்டிருக்கும் பக்கி ராயின் வாழ்வில், மீண்டும் வசந்தம் வீசியதா? என்பது, இன்னும் கொஞ்ச காலத்துக்கு மறக்க முடியாத ‘ஸ்வீட்’ க்ளைமாக்ஸ்.
 
 


ஐம்பதுகளின் ரம்மியத்தை, அழகு குலையாமல் டிஜிட்டலில் எடுத்து, தங்கத் தட்டில் பரிமாறி இருக்கிறார் இயக்குனர் விக்கிரமாதித்யா மோட்வானே. வட இந்தியாவின் ஆங்கிலேய கால சூழலை, அச்சு பிசகாமல் அள்ளி வந்திருக்கிறது மகேந்திர ஷெட்டியின் கேமரா! சென்ற நூற்றாண்டை நினைவில் கொண்டுவரும், இனிமையான பாடல்களை தந்திருக்கிறது அமித் திரிவேதியின் இசை. ரன்வீர் சிங்கும், சோனாக்ஷி சின்ஹாவும் பாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். இன்றைய திரைச் சூழலுக்கு 142 நிமிடங்கள் என்பது கொஞ்சம் நீளம்தான்! ஆனால்... நல்ல ஓவியமோ, சிற்பமோ, நாள் கணக்கு வைத்தா உருவாக்கப்படுகிறது?

மொத்தத்தில் ‘லூட்டேரா’ - உயிர் பருகும் காதல்

ரசிகன் குரல்: ஏன் பங்காளி... 60 வருஷத்துக்கு முன்னாடி லவ்வர்ஸ் கிஸ் பண்ணிக்க மாட்டாங்களோ?
 
 
 
 
  • நடிகர் : ரன்வீர் சிங்
  • நடிகை : சோனாக்ஷி சின்ஹா
  • இயக்குனர் :விக்கிரமாதித்யா மோத்வானே
 
 
A
 
 
 
 
 
 

Monday, July 01, 2013

அம்பிகாபதி - சினிமா விமர்சனம்

 

ஹீரோவுக்கு 6 வயசா இருக்கும்போதே 5 வயசான ஹீரோயினை லவ் பண்றாரு. யாரும் பயப்பட வேணாம். அது பப்பி லவ் தான். 5 நிமிஷம் தான் காட்டறாங்க . இப்போ ஹீரோ 10 வது படிக்கறாரு. ஹீரோயின் 9 வது படிக்கறா. லவ்வை சொல்றாரு. பளார்னு அறை வாங்கறாரு.ஆனா அண்ணன் அசரலையே? மீண்டும் மீண்டும் லவ் சொல்லி 15 தடவை அறை வாங்கறாரு. 16 வது தடவை ஹீரோயினுக்கு லவ் வந்துடுது ( நீதி - ஒரு பொண்ணு கிட்டே 15 தடவை உதை வாங்குனா போதும் லவ்விடலாம் )


2 பேரும் லவ் பண்ணிக்கும்போது ஹீரோ தன் காதலை நிரூபிக்க 4 டைம் தன் மணிக்கட்டை அறுக்கறாரு . ஹீரோயின்  ஒரு  டைம் அறுக்கறாரு . டைரக்டர் மட்டும் படம் பூரா அறுத்துட்டே இருக்காரு .

2 பேர் லவ்வும் 2 வீட்டுக்கும் தெரிஞ்சதும் வழக்கம் போல் பொண்ணு வீட்ல பொண்ணை வேற ஊருக்கு படிக்க அனுப்பிடறாங்க . இங்கே தான் கதைல பயங்கரமான ட்விஸ்ட் . ஹீரோயின் அங்கே போய் முறைப்படி ஹீரோவைத்தானே நினைச்சு ஏங்கனும்? தூங்கனும் , அல்லது தூக்கம் வராம தலையணையை கட்டிப்பிடிக்கனும்?




 ஆனா  இது பாரதி கண்ட புதுமைப்பெண்ணுக்கு அக்கா போல . அங்கே வேற ஒரு  பையனை பிராக்கெட் போடுது . அது கூட தேவைலை . 2 இஞ்சி மரப்பான் சாப்பிட்டு ஜீரணம் பண்ணிக்கலாம். அந்த கேவலமான கதையை ஹீரோ கிட்டே  அதாவது பழைய காதலன் கிட்டே ஸ்கூட்டர்ல பின்னால உக்காந்து  அவனை கட்டிப்பிடிச்சுக்கிட்டே பெருமையா சொல்லுது . 


 படம் பார்க்கறவங்களுக்கு டவுட் . ஹீரோயின் மெண்ட்டலா? படம் பார்த்துட்டு இருக்கும் நாம எல்லாம் கேனயன்களா? 

 இப்போ படத்துல ஒரு ட்விஸ்ட் . ஹீரோயினோட லேட்டஸ்ட் லவ்வர் திடீர்னு மண்டையைப்போட்டுடறான். அதுக்கு ஹீரோ தான் காரணம்னு ஹீரோயின் நினைக்குது . அந்த லேட்டஸ்ட் லவ்வர் காலேஜ் ல சேர்மேன் . கட்சி ஆரம்பிச்சு புரட்சி எல்லாம் பண்ணும் ஐடியா. ஹீரோயின்  அவர் லட்சியத்தை நிறைவேத்த  முயற்சி பண்றாரு. ஹீரோ அவளுக்கு உதவி பண்றாரு. 

 இந்த 2 கேனங்களும் வாழ்க்கைல இணைஞ்சாங்களா? இல்லையா? என்பதை தில் இருக்கறவங்க தியேட்டர்ல போயும் , டப் வேஸ்ட் பண்ண நினைக்காதவங்க டி வி லயும் பார்த்து தெரிஞ்சுக்கலாம் .


 ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியதா சொல்லப்பட்டு செல்வராகவன் இயக்கிய 3 படத்தின் 5  ரீல் அப்படியே முன் பாதி ல சுட்டுட்டாங்க . கே பாக்யராஜின்  டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க்  கொஞ்சம் , கமலின் மூன்றாம் பிறை கொஞ்சம் .ரங்க் தே பசந்தி கொஞ்சம் , பின் பாதில புதுப்பேட்டை பாதிப்பு என படம் ஒரு காக்டெயில் மாதிரி .




ஹீரோ தனுஷ் பிரமாதமான நடிப்பு . குறை சொல்லவே முடியாது . வழக்கமா சைக்கோ ஸ்பெஷலிஸ்ட்டா வரும் அவர் இதுல சாதா ஆளா வர்றதே திருப்தி . தனுஷ் கிட்டே என்ன ஸ்பெஷல்னா அவர் தாடி மீசை எடுத்தா ஸ்கூல் ஸ்டூடண்ட் . வெச்சா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி ஒரு தோற்றம் வந்துடறது தான் . பல இடங்களில் இவர் நடிப்பு பட்டாசு . வெல்டன் தனுஷ் 


 ஹீரோயின் சோனம் கபூர் . மாசு மருவே இல்லாத மொசைக் தரையில்  ஐஸ்க்ரீம் வழிய விட்ட மாதிரி ஒரு முகம் . ஆனா அவருக்கு எல்லாமே சின்னது . ஐ மீன் அவருக்கு கண் , காது , உதடு எல்லாம் ரொம்ப சின்னது . தமிழர்கள் குஷ்பூ , நமீதா , ஹன்சிகா , அஞ்சலி மாதிரி பிரம்மாண்டங்களை ரசிச்சுப்பழகினவங்க . அதனால பெருசா எடுபட மாட்டாங்கன்னு தோணுது. ஆனா அவர் நடிப்பு கலக்கல் .


சிரிப்பு , கோபம் , அழுகை என எல்லா காட்சிகளிலும் ஜொலிக்கிறார் ( அதாவது சோக சீனிலும்  பாப்பா  ஃபுல் மேக்கப் ) டிரஸ்சிங்க் சென்ஸ் பக்கா . பாடல் காட்சிகளில் அவர் முதுகு ஒரு  ஷங்கர் பட போஸ்டரே ஒட்டும் அளவு பிரம்மாண்டமா ஓப்பனா இருக்கு. குட் 



இன்னொரு ஹீரோவா  வரும் அபய்டியோல் ஆள் பர்சனாலிட்டிதான் . ஆனா அப்பாஸ் , ஷாம் மாதிரி மைதா மாவு கேஸ் . செல்லாது செல்லாது 


தனுஷ்-ன் தோழியாக வரும்  ஃபிகர் யாரு? நல்ல அழகு , நடிப்பு என கவனிக்க வைக்க்கிறார் ( நாம எந்த ஃபிகரை கவனிக்காம இருந்தோம் ? ) 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தின் முன் பாதி இளமைக்கலக்கல் . செம ஜாலியான திரைக்கதை . செம ஸ்பீடு . சின்ன சின்ன முக பாவனைகளில் ஹீரோ - ஹீரோயின் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க 


2. ஒளிப்பதிவு  ஹோலிப்பண்டிகை காட்சிகளில், காசி நகரின் அழகை அள்ளும் காட்சிகளில் அபாரம் . கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் 


 3 , இசை ஏ ஆர் ரஹ்மான். பிரம்மாண்டமான இசை .  பி ஜி எம் மில் பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். 2 பாட்டு ஹிட்டு . ஹிந்தி ராஞ்சனா வுக்கு மிகப்பெரிய ஓப்பனிங்க் வர ஒரே காரணம் ஏ ஆர் ஆர் தான் 


4 ஹீரோயின் , ஹிரோவின் தோழி மற்றும் பெண் கதாப்பாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பு , உடை உடுத்திய விதம் எல்லாம் அருமை . பிரம்மாண்டம் , கலை நயம் 


5. அப்ளாசை அள்ளும் தனுஷ் நடிப்பு 3 இடங்களில் பின்னிப்பெடல் எடுத்து விட்டார் . 1. இனி உன்னைப்பார்க்க வந்தேன் நான் ஒரு அப்பனுக்கு பொறக்கலை  என அவரிடம் பல்லைக்கடித்து பேசும் இடம்  2. பின் பாதியில் ஹீரோயினைப்பார்க்க காலேஜில் காம்பவுண்ட் ஏறிக்குதிக்கையில் மாட்டி யார் என விசாரிக்கப்படுகையில் தான் ஒரு திருடன் என சமாளிப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடிக்காட்சிகளும் தமிழுக்கு புதுசு  3 . அருமையான வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. பிரமாதமான ஜாலியான எப்பிசோடாக வரும் முன் பாதி திரைக்கதைக்கும், பின் பாதி குழப்படி திரைக்கதைக்கும் சமப்ந்தமே இல்லை . ஏன் இந்த தேவை இல்லாத வேலை ? 


2. காலேஜ் சேர்மேனாக வருபவர் எப்படி தொகுதி மக்களைக்கவர்ந்து கட்சி ஆரம்பிக்கும் அளவு பெரிய ஆளாக முடியும் ? 


3. தனுஷ் எப்படி திடீர் என  கட்சியில் செல்வாக்கு பெறுகிறார்? அவர் என்ன நாஞ்சில் சம்பத்தா? பரிதி இளம் வழுதியா? 



4. ஹீரோயின் ஹீரோ கிட்டே “ நீ ஜெயிச்சுட்டா உனக்கு உன் கன்னத்துல  முத கிஸ் தர்றேன் கறா . ஆனா ஆல்ரெடி அவ 2 டைம் குடுத்திருக்கா ( நான் எண்ணிட்டே இருந்தேன் ) அது எப்படி? 



5. ஹோலிப்பண்டிகை கொண்டாட்ட காட்சியில் ஊரே முகத்தில் கலர்ப்பொடியோட இருக்கு, ஹீரோயின் மட்டும் படுக்ளினா  இருக்கே? எப்படி? கூட்டத்துக்கு நடுவே தான் நிக்குது 



6. ஹீரோ “ டூயட் பட வசனமான சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால் அப்டினு வைரமுத்து கவிதையை வாசிக்கும் சீனில் பேப்பர்ல ஹிந்தி எழுத்து. ஒண்ணா அதை கட் பண்ணி இருக்கனும், அல்லது  தமிழ்ப்பேப்பர் வெச்சு ஒரு ஷாட் எடுத்திருக்கனும் 



7. ஹீரோயினின் 2 வது காதலன் முஸ்லீம் அல்ல என்பதை ஹீரோதான் கண்டு பிடிக்கனுமா?  ஹீரோயின் பெற்றோர் ஏன் விசாரிக்கலை? இத்தனைக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுது . வீட்டுக்கு போக வர இருந்திருப்பாங்களே? 




8. ஹீரோயினின் 2 வது காதலன் இறந்ததை நேரில் பார்க்கும் ஹீரோ   ஏன் வாமிட் எடுக்கறாரு? முறைப்படி வருத்தப்பட வேண்டிய ஹீரோயினே பெருசா அலட்டிக்கலை. இவரு ஏன் ஓவரா ஃபீல் ஆகறாரு? 



9. ஹீரோயின் ஹீரோ மேல உண்மையான காதலே வைக்கலை. ஹீரோவோட காதலை யூஸ் பண்ணிக்கறாரு. அதனாலேயே ஆடியன்சால அவங்க காதல் கதைல லயிப்பு வர்லை 



10. கூட்டத்தில் நடக்கும் வெடிகுண்டு காட்சிகள் , பெரிய அரசியல் தலைவி ஹீரோயினுடன் பேச வருவது எல்லாம் படு செயற்கை 





மனம் கவர்ந்த வசனங்கள்


1. இந்த உலகத்தில் எல்லாருக்கும் எல்லாமும் சமம் கிடையாது


2. என்னைக்கு தான் லவ் பண்ற பொண்ணு இன்னொருத்தனை ல்வ் பண்ணுதோ அப்பவே அவனோட லவ் செத்துடும்


3. இதுவரை எந்த ஆணும் உணர வைக்காத புது உணர்வை எனக்கு உணர வெச்சான்.அதை அவனுக்கு உணர வைக்கனும் னு நினைக்கறேன்


4. புதுசா எது வந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு அது பின்னால ஓடறதுதான் நம்ம பழக்கம்


5. நான் ரத்தம் சிந்தறேன்.நீ கண்ணீர் சிந்தறே.ஆனா நமக்குள்ளே காதல் நடக்கவே இல்லை.விசித்திரமா இல்ல?


6.  பிகரை கரெக்ட் பண்ண 2 வழி 


.1.கடின உழைப்பு.விடாம அவ பின் சுத்துவது

 2 அவளை பயமுறுத்துவது


7. தொழுது கொண்டிருப்பது என்னவோ நீ தான்.ஆனால் இறைவன் வரம் கொடுத்தது என்னவோ எனக்குத்தான்



8. ஒரு பொண்ணாலயும் ஒரு ராக்கெட்டாலயும் தான் நம்மை எந்த உயரத்துக்கும் கூட்டிட்டுபோக முடியும்



9.ஏய்.. உன் பேரையாவது சொல்லிட்டுப்போ .


 நாளைக்கு எப்படியும் என் கிட்டே அறை வாங்க வருவே தானே? அப்போ சொல்றேன் 

10  அது லவ்வே இல்லைடா, நான் அப்போ டென் த் படிச்சுட்டு இருந்தேன் 


 நான் மட்டும் லா காலேஜ்லயா படிச்சேன்? 




11. உன்னைப்பார்த்தாலே அந்தப்பொண்ணு சிரிக்குதே ..  ஏன்?


வெட்கம் , சந்தோஷம் 



12.  ஒரு பெண்ணை சராசரி கல்யாணப்பொண்ணா  தயார் பண்ற வீடாத்தான் என் அத்தை  வீடு இருந்தது 



13.  இவன் வீட்ல இல்லைன்னா  வேற எங்கேயும் தேட வேண்டாம் . நேரா ஹாஸ்பிடல் வந்துடுங்க . அங்கே தான் இருப்பான். அடிக்கடி தற்கொலை முயற்சி பண்ணிக்குவான் 


14. என் மேல தப்பு இருந்தப்பவே  எங்க அப்பா கிட்டே கூட சாரி கேட்டதில்லை. இப்போ என் மேல தப்பும் இல்லை, நீ என் அப்பாவும் இல்லை , உன் கிட்டே ஏன் நான் சாரி கேட்கனும் ? 



15. இப்போ இருப்பது 2 வகை அரசியல் தான் 

1. இருக்கும் ஆட்சியை சதி பண்ணி கவுத்துட்டு புது கட்சி ஆட்சி அமைப்பது 


2. புது அரசியல் கட்சி ஆரம்பிப்பது 



16. சவால்களை எல்லாம் தாண்டி ஜெயிப்பவனே தலைவன் 



17. நான் வாழ்க்கைல கத்துக்கிட்ட பாடம் - பொண்ணுங்களை நம்பி எப்பவும் எந்தக்காரியத்திலும் இறங்கக்கூடாது


18. கரைல நின்னுக்கிட்டே முத்தை எடுக்க முடியாது 


19. இங்கே இருக்கும் சாமியார்கள் எல்லாரும் பாவிகள் . ஏதாவது தப்பைப்பண்ணிட்டு வந்து இங்கே ( காசியில் ) ஒளிஞ்சிக்கறாங்க 



20. நாம செஞ்ச பாவத்தை கங்கையாலயோ , கண்ணீராலயோ கழுவிட முடியாது



21.  தம்பி, நீ யாரு? இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே? 


 நான் ஒரு திருடன் , திருட வந்திருக்கேன் 


22.  இந்த தேசத்துல தலைவருக்கு பஞ்சம் ,ம் என்னை மாதிரி மாக்கான் சொல்றதையே ஜனங்க கேட்கறாங்கன்னா...  





 படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ்

அம்பிகாபதி - முன் பாதி காதல் கலாட்டா,பின் பாதி அய்யய்யோ நான் கிளம்பட்டா?

 ஒரு படத்தை உல்டா அடிச்சா ரீ மேக். பல படங்கள் ல இருந்து உருவி கதம்பமாக்குனா ஓன்மேக் # சினிமா விதி

40% 3 , 30% டார்லிங் டார்லிங் டார்லிங். 30 % புதுப்பேட்டை = அம்பிகாபதி ( ரங்க் தே பசந்தி , மூன்றாம் பிறை ஆங்காங்கே )

ராஞ்ச்சனா ஹிந்தியில் ஹிட் ஆனதில் ஆச்சரியமே இல்லை.ஆனால் தமிழில் அம்பிகாபதி ஹிட் ஆக வாய்ப்பே இல்லை # அவதானிப்பு

ஏ ஆர் ஆர் துள்ளாட்ட இசை பி ஜி எம் பின்றாரு





-ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் =40,

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3 / 5


சி பி கமெண்ட் - படம் பார்த்தே ஆகனும்னு அடம் பிடிப்பவங்க இடை வேளை வரை பார்த்துட்டு ஓடியாந்துடுங்க . ஏ ஆர் ஆர்ன் தீவிர ரசிகர்கள் மட்டும் முழுசா பாருங்க  . முன் பாதி ரதி , பின் பாதி பேதி . ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன். 1300 பேர் அமரும் தியேட்டரில் 278 பேர் இருந்தாங்க



a




 




Tuesday, April 23, 2013

கவுரவம் - சினிமா விமர்சனம்



மொழி , அபியும் நானும் போன்ற பிரமாதமான படங்கள் கொடுத்த ராதா மோகன் - பிரகாஷ் ராஜ் கூட்டணியா இப்படி ஒரு படம் கொடுத்திருக்காங்க? என கேள்வி எழுப்பும் வகையில் ஒரு சறுக்கல் படமாக இப்போது வழக்கொழிந்த கவுரவக்கொலையை பேஸ் பண்ணி எடுத்திருக்காங்க. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற பழமொழியை பொய்யாக்கி திரைக்கதையில் தடுமாறி இருக்கும் ராதாமோகன் ( வசனங்களில் மட்டும் இன்னும் அதே கம்பீரம் காட்டுவது படத்துக்கு பெரிய பலம். 

ஹீரோ ரோட்டில் கார்ல போறார். எதேச்சையா அவர் ஸ்கூல் மேட் ஒருத்தரோட ஊர் கண்ல பட அவரைப்பார்க்கலாம்னு ஊருக்குள்ளே வண்டியை விடறார். அங்கே அவரோட நண்பர் ஆளைக்காணோம்.ஏதோ லவ் மேட்டர். ஆள் எஸ். அந்த ஊர் டாக்டர் ராம்தாஸ் மாதிரி ஆள்ங்க குடி இருக்க வேண்டிய ஜாதி வெறி பிடிச்ச ஊர். கவுரவக்கொலைகள் , கலவரங்கள் நடக்கும் ஊர்.அப்பேர்ப்பட்ட ஊரில் காணாமப்போன நண்பனை எப்படி தேடிக்கண்டுபிடிக்கறாங்க என்பதே மிச்ச மீதிக்கதை 


இது ஒரு தெலுங்குப்படமோ என எண்ணும் அளவுக்கு ஏகப்ப்ட்ட ஆந்தரா வாசனை படம் முழுக்க. தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனாவின் தம்பி அல்லு சிரிஷ் தான் ஹீரோ . இதயத்தை திருடாதே நாகார்ஜூன் மாதிரி அவருக்கு வாய் ஏன் அப்படி இருக்கு? அண்ணனுக்கு நடிப்பெல்லாம் வர்லை .பக்கத்துல 4 கண் நொங்கு மாதிரி குளு குளுனு ஒரு ஃபிகர் இருந்தும் நரசிம்மராவ் கணக்கா அவர் ஏன் முகத்தை அப்படி வெச்சிருக்காரோ? தேறுவது ரொம்ப கஷ்டம் . ஒரு வேளை ஆந்திராவில் பாஸ் மார்க் வாங்கலாம் .

 


ஹீரோயின் யாமினி கவுதம் . வெய்யிலில் நின்னு காய்ஞ்சு போன தமனாவின் சாயலில் , மாநிற தேவதையாய்   அவர் முகம். படம் முழுக்க துப்பட்டாவை கழுத்து ஒண்ட போட்டிருக்கும் அவரது மேனரிசம் ஐ லைக் இட். ஆனாலும் நோ யூஸ் . பாப்பா பூஸ்ட் குடிக்காமயே வளர்ந்திருச்சு போல . அவர் நெற்றியில் பொட்டு வைத்திருக்கும் அழகும் , ஆடை அணிகலன்களில் காட்டும் நேர்த்தியும் அழகு. ராதாமோகனின் பட ஹீரோயின்களுக்கே உரித்தான் கண்ணியம் இதிலும் உண்டு . எதிர்காலம் உண்டு .



பிரகாஷ் ராஜ் தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரை முன்னிறுத்தாமல் கதைக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டும் அவர் வந்து போவது மனசுக்கு ஆறுதல் . அவரது தம்பிகளின் நடிப்பும் கன கச்சிதம் . நாசர் ஏமாற்றவில்லை . ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமாரவேல் இதிலும் நல்ல ரோல் பண்ணி இருக்கார். குட் .


 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ஆட்டிசக்குறைபாடுள்ள அந்தப்பையனின் அக்காவாக வரும் ஒரு செம கட்டை பாலுமகேந்திரா பட ஹீரோயின் மாதிரி மிளிர்கிறார். அவரை இன்னும் நல்லா பயன் படுத்தி இருக்கலாம் ( அதாவது படத்துல )


2. ராஜேஸ்வரியின் அண்ணியாக வருபவர் பூ விழி வாசலிலே ஹீரோயின்  கார்த்திகா மாதிரி முகச்சாயலில் , ஹேர் ஸ்டைலில் பாந்தமா வர்றார்.  ஆள் நல்ல உயரம் ( அளந்து பார்த்தியா  ராஸ்கல் ) 


3. ஹீரோவின் நண்பராக வருபவர் நம்ம ட்விட்டர் ஐ ஆம் கார்க்கி போன்ற முகச்சாயலில் , குறும்பில் , டைமிங்க் விட் அடிப்பதில் கலக்குகிறார். சில காட்சிகளில் எங்கேஎ இவரே ஹீரோயினை கரெக்ட் பண்ணிடுவாரோ என பதை பதைக்க வைக்கிறார்,. 



4. ராதாமோகனின் ஆஸ்தான வசனார்த்தா விஜி  பிரமாதமான வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்


5. பெண்களைக்கவரும் கண்ணியமான வசனங்கள் , ஆங்காங்கே ஒளிப்பதிவு இயற்கைக்காட்சிகளை சுட்டுப்போட்டது , லொக்கேசன் செலக்சன்



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. தொலைஞ்சு போன ஒரு ஆளை படம் பூரா த்தேடி அலைவது இது வரை தமிழ் சினிமாவில் தோல்வியையே அதிகம் கொடுத்திருக்கு. உதாரணம் - சுஜாதா கதை வசனத்தில் உருவான  ப்ரியா, கரை எல்லாம் செண்பகப்பூ இயக்குநர் சுசி கணேஷின் ஃபைவ் ஸ்டார் .. அப்படி இருக்கும்போது என்ன தைரியத்தில் இந்த கதைக்கருவை தேர்வு செஞ்சீங்க? 


2. படம் போட்டு 2 வது ரீலிலேயே என்ன நடந்திருக்கும் என்ற சஸ்பென்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சிடுது. ஆனா படத்தை இழு இழுன்னு இழுக்கும் இயக்குநருக்கோ, படத்தில் ஹீரோவுக்கோ அது தெரியாமல் போனது ஆச்சரியம் 


3. ஜாதிக் கலவரத்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணை யாருமே திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று குமரவேல் சொல்லும் போது ஏன் நீ செய்து கொள்ளக் கூடாது என்று சிரிஷ் கேட்குமிடம் சேரனின் பொற்காலம் வடிவேல் சீனை சுட்டு இருக்கிறது 


4. லவ் பண்ணி ஓடும் ஹீரோயின் நகையை ஏன் அண்ணி கிட்டே கழட்டி கொடுக்கனும்? அண்ணிக்கு அதில் ஏதோ சம்பந்தம் இருக்கு என்ற சஸ்பென்சை மெயிண்ட்டெயின் பண்ணவா? சாரி, அது ஒர்க் அவுட் ஆகலை 


5. நாவல் அல்லது சிறுகதைல ஒரு கேரக்டரை காட்டாமயே அதை தேடுவது ஓக்கெ, ஆனா சினிமான்னு வரும்போது அந்த கேரக்டரை ஆல்ரெடி அறிமுகப்படுத்திடனும் . யார்னே தெரியாத 2 பேரை படம் பூரா தேடிட்டே இருந்தா அலுப்பு வந்துடும் 


6. ஹீரோ சொன்னதும் எல்லா ஃபிரண்ட்சும் வேலையை எல்லாம் விட்டுட்டு கிராமத்துல வந்து செட்டில் ஆகிடறாங்க . அவங்களுக்குனு ஃபேமிலி , சம்சாரம் எல்லாம் கிடையாதா ? பூவாவுக்கு என்ன பண்ணுவாங்க?


7. படத்தோட ஓப்பனிங்க்ல நண்பர்கள் 60 பேர் வந்திருக்காங்கன்னு வசனம் வருது. அவங்களைக்காட்டும்போது 53 பேர் தான் இருக்காங்க. அதே நியூஸ் டி வி ல வரும்போது 50 பேர்னு  சொல்ற மாதிரி சீன் வருது. ஏன் இந்த குழப்பம் ?


 


8. படம் பூரா டென்னிஸ் கோர்ட் டொக்கா வரும் ஹீரோயின் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஒரு பனியன் , ஜீன்ஸ் மட்டும் போட்டு  நமீதா மாதிரி நெஞ்சை நிமிர்த்தி வருவது எப்படி? நான் அப்படியே ஆடிப்போய்ட்டேன் , ஹி ஹி 


9.காணாமப்போன சண்முகம்23 ந்தேதி எழுதுன லெட்டர் சென்னையிலிருந்து அவர் கிராமத்துக்கு 24 ந்தேதியே வருவது எப்படி?  25 தானே வரும்? இப்போ சென்னை ல இருந்து போஸ்ட் செய்யப்படும் லெட்டர் அடுத்த நாள் காலைல ஈரோடு வருது . அது பிரிக்கப்பட்டு அடுத்த நாள் தான் சென்னிமலை வருது . இதே மாதிரி தானே எல்லா கிராமங்களுக்கும் இருக்கும் ?


10. கோர்ட் ல ஜட்ஜ் உட்கார்ந்து இருக்கும்போது ஒரு ஆள் அத்து மீறி கோர்ட் உள்ளே வந்து கலாட்டா பண்ணும்போது யாருமே தடுத்து நிறுத்தலையே?



11. காதலை எதிர்க்கும் ஒரு குடும்பத்தில் உள்ள ரவுடி  லவ்வர்சை கொலை செய்து ஒரே குழியில் புதைப்பது எப்படி? ஜாதி வெறி உள்ளவன் தனித்தனி குழியில் தானே புதைக்கனும்?


12. பொதுவா ஜாதி வெறியில் கொலை செய்வது , செஞ்ச உடனே தீ வெச்சுத்தான் கொளுத்துவாங்க . அப்போதான் ஆதாரம் அதிகமா சிக்காது ( என கொலையாளிங்க நினைப்பாங்க ) ஆனா புதைச்சு மாட்டிக்குவது எப்படி?


13.  அந்த கிராமத்துக்கு மீடியா வந்து கூடுவது நம்பும்படி இல்லை . அதே போல் புரட்சிப்பாட்டு எடுபடலை . செயற்கை


14. மகள் ஓடிப்போய்ட்டா என்னும்போதே கல்லுளி மங்கன் போல் இருக்கும் அப்பா மகன் ஜெயிலுக்குப்போய்ட்டான் என்பதற்காக  தற்கொலை செய்வது எப்படி?


15 . படத்தில் வரும் எல்லா கிராமத்து கேரக்டர்களுமே  அதி புத்திசாலித்தனாமாய் வசனம் பேசுவது எப்படி? 






 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஃபாரீன்காரன் மளிகைச்சாமான் விற்கக்கூட இந்தியா தான் வர்றான் , ஆனா  நாம ஏன் அங்கே போகனும்?


2. நீ வந்த ஃபிளைட்ல ஏதாவது ஃபிகர் இருக்கா?

 நான் வந்தது ஏர் இந்தியாவுல . 50 வயசுப்பாட்டிதான் இருந்தது




3. இப்படியே விட்டா நம்மாளுங்க எலெக்சனுக்காக தொகுதி எம் எல் ஏவையே கொலை பண்ணாலும் பண்ணிடுவாங்க


4. அவனுக்கு ஊர் இல்லாம போச்சு , எனக்கு பிள்ளை இல்லாம போச்சு



5. சன்முகம் எந்த தப்பும் செய்யலை, ஆனா கீழ் ஜாதில பொறந்ததே  தப்புதான்


6. இயற்கையை விட்டு மனிதன் எப்போ விலக ஆரம்பிச்சானோ  அப்பவே அழிவு ஸ்டார்ட்  ஆகிடுச்சுன்னு அர்த்தம் . உயிரினங்கள்லயே செப்பல் போட்டுட்டு நடப்பது மனிதன் மட்டும் தான்


7. ஆறு மணீக்கு மேல சந்திரமுகி வருமா? குஷ்பூவுக்குத்தான் கோயில் கட்னாங்க , ஜோதிகாவுக்குமா? சந்திரமுகிக்கப்புறம் காஞ்சனா எல்லாம் வந்துட்டுப்போயிடுச்சே?


8. நாங்க பொறக்கும்போது இருக்கும் கஷ்டம் எங்க பொணத்துக்கும் இருக்கும்


9.  சென்னைக்கு வந்து 30 வருஷம் ஆச்சு. என்னை யாரும் என்ன ஜாதின்னு கேட்டதே இல்லை. என்னைப்பொறுத்தவரை சென்னை தான்  எனக்கு எல்லாமே , என் அன்னை கூட அதுக்குப்பின்னால தான்


10. சென்னைல மட்டும் தான் கிழிஞ்சதும் ஃபேஷனு , கிழிச்சதும் ஃபேஷனும் ( கிழி கிழி - கலா மாஸ்டர்)


11. காணாமப்போனவனைத்தேடலாம், ஆனா ஓடிப்போனவனைத்தேடுனா ஓடிட்டே தான் இருக்கனும்


12, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கவுரவம் இருக்கும். சொத்து சேர்ப்பது மாதிரி அதை சேர்த்து வெச்சிருப்பாங்க


13. ஒரு பொண்ணு குடும்பத்துல இருக்கும் வரை தான் மரியாதை . ஓடிப்போய்ட்டா முடி - மயிர் மாதிரிதான்


14.  அடேங்கப்பா , ஒரு விதவைத்தாய் மட்டும் இந்த கேங்க் ல இருந்தா பி வாசு படம் மாதிரி ஆகி இருக்கும்



15. அடிமைகள் எல்லாம் சேர்ந்து  கொண்டாடுவதா சுதந்திரம்


16. நாம முதன் முதலா பார்க்கும்போது மாட்டுடன் இருந்துச்சே அதான் அவங்க எனகு மாட்டுப்பொண்ணு ஹி ஹி


17.  மேடம், ஒரு டவுட்டு , லாயர் ஆகனும்னா இந்த புக்ஸ் எல்லாம் வாங்கி வெச்சா போதுமா? இல்லை படிச்சே ஆகனுமா?

 

18.  இவ்ளவ் பிரச்சனை உள்ள ஊர்ல உங்கப்பா டைம் டேபிள் போட்டு லவ் பண்ணி இருக்காரு


19. அந்த பாட்டியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?

 உன் ஃபேஸ் புக் ஃபிரண்டா இருக்கும் 


20. என்னது அவ உனக்கு பிரில்லியன் கேர்ளா? வேணாண்டா. நாமளே ஒருத்தனை தேடி இங்கே வந்திருக்கோம், இப்டி பண்ணினா உன்னைத்தேடி நாங்க டெண்ட் அடிக்க வேண்டி வரும்


21. நானும் இதே ஊர்ல தான் இருக்கேன். இந்த தகவல்கள் எல்லாம் எனக்குத்தெரியலையே?


 மேடம், உங்களுக்கு வேலை வெட்டி இருக்கும்


22.  நான் மீன் சாப்பிட்டதே முதல் மரியாதைல  சிவாஜியைப்பார்த்துத்தான் . ஆட்டுக்கறி சாப்டதே ராஜ் கிரனைப்பார்த்துத்தான் ( நல்ல வேலை , முதல் இரவு கொண்டாடுனதே வாலி படத்துல அஜித் - சிம்ரனைப்பார்த்துத்தான்ன்னு சொல்லலை )


23. காதல் தோன்றுவதற்கும் , மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதும்னு ஜெயகாந்தன் சொல்லி இருக்காரு  ( கர்ப்பமான காரணங்கள் தான் நிறைய ஹி ஹி )


24.  என்னடா சப்பாத்தி கருகிடுச்சு?

 சப்பாத்தி வேகுவதற்கும், கருகுவதற்கும் அற்பமான காரணங்களே போதும் ( கலாய்ச்சுட்டாராம் )


25.  அவன் மெயில் ஐ டி கண்டு பிடிச்சு எப்டியாவது பாஸ்வோர்டை கண்டு பிடிக்கனும்

 யூ மீன் ஹாக்கிங்க்

 யா

  இங்கே பக்கத்துல ஜெயில் எங்கே இருக்கு?

 ஏன்?

 நானே போய் அங்கே அட்மிட் ஆகிக்கறேன்


26. சினிமால கூட நான் அப்பப்ப ஆக்ட் பண்ணி இருக்கேன்

 நடு நிசி நாய்கள் ல 4 நாய்கள் வருமே அதுல ஒரு நாய் இவன் தான் ஹி ஹி


27. நாட்ல மீடியாக்கள் இருக்கும் அளவு பர பரப்புச்செய்திகள் இல்லை. அவனவன் பேயா அலைஞ்சுட்டு இருக்கான்


28. சார், ஆல்ரெடி பாதுகாப்பு கொடுத்தாச்சு  இன்னும் என்ன பண்ன? போலீஸ் ஸ்டேஷனையே பெயர்த்து எடுத்து வெச்சாத்தான் உண்டு


29. கோயிலுக்கு போய்ட்டு வர்ற கேப்ல எல்லாம் வில்லன் வந்துட்டுப்போறான்?

 மங்காத்தா படத்தை விட இதுல வில்லன்க அதிகம்


30. செத்தாதான் அழனும், கொன்னா கோபம் தான் வரனும்


31. இந்த ஊர்ல 4 திசைகளிலும் சுடுகாடு இருக்குன்னு சொன்னாங்க, ஆனா ஊரே சுடுகாடாத்தான் இருக்கு


32.  நீ அவளை கொல்லனும்னு கொல்லலை. ஆனா நான் சாகாம செத்துட்டு இருக்கேன்


33. ஒரு குழந்தையைக்கொல்லவா இன்னொரு குழந்தையை பெத்தேன்?


34. உங்க மானம் போச்சுன்னு நினைச்சா நீங்க செத்திருக்கனும். அவளைக்கொன்னிருக்கக்கூடாது  





ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39


 குமுதம் ரேங்க் - ஓக்கே


 ரேட்டிங்க்  -   2.5 / 5


 சி. பி கமெண்ட் - ராதா மோகன் ரசிகர்கள் , பெண்கள் பார்க்கலாம் . மற்றபடி தியேட்டரில் படம் பார்க்க பொறுமை வேணும் . பொறுமை எருமையை விட பெருசு.. 



டிஸ்கி - ராதா மோகன் படம் பூரா ஹீரோயினை கண்ணியமாத்தானே காட்டி இருந்தாரு , எப்டி ஸ்டில்ஸ் எல்லாம் கிளாமரா இருக்கு?ன்னு யாரும் கேட்காதீங்க. அட்ரா சக்க வுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு ,. அதை மெயிண்ட்டெயின் பண்ண வேணாமா? ஹி ஹி


உதயம் NH4 - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/04/nh4.html

Monday, April 22, 2013

உதயம் NH4 - சினிமா விமர்சனம்

 

காலேஜ் படிக்கற பணக்காரப்பையன் லஞ்ச் டைம்ல மத்த ஏழைப்பசங்களை எல்லாம் கேலி பண்ணுவான். என்னடா எப்போப்பாரு பழைய சோறு , கடிச்சுக்க மோர் மிளகாய், வெரைட்டியே கிடையாதா அப்டினு நக்கல் அடிப்பான்.அப்பேர்ப்பட்ட அபாடக்கர் பையன் ஒரு நாள் எல்லாப்பசங்களையும் கூட்டிட்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்க்கு போனான். அங்கே பிரம்மாண்டமா டெக்ரேஷன் எல்லாம் பண்ணி ஒரு அயிட்டம் கொண்டு வந்தாங்க, பேரு ஐஸ் பிரியாணி , அட வெண்ணெய் , அதுதாண்டா பழைய சோறு. 


அந்த பணக்காரப்பையன் தான் எப்போ பாரு எல்லாரையும் குறை சொல்லிட்டே இருக்கும் வெற்றி மாறன். அந்த ஏழைப்பசங்க தான் நாளைய இயக்குநர்கள். எதுக்கு இந்த தேவை இல்லாத முன்னுதாரணம்னா அண்ணன் வெற்றி மாறன் கலைஞர் டி வி ல குறும்பட விமர்சனத்துல ஜட்ஜா தீர்ப்பு சொல்லும்போது “ என்னய்யா படம் , ஒரு புதுமை வேணாமா?ன்னு கலாய்ப்பார். அப்பேற்பட்ட அவரு எங்கே ஒரு புதுமையான படம் கொடுத்துடுவாரோன்னு பயந்துட்டே இருந்தேன், அண்ணன் அரைச்ச மாவைத்தான் அரைச்சிருக்காரு , ஆனாலும் ஸ்டைலிஸா இருக்கு , ஹி ஹி

அழகிரி மாதிரி ஒரு மினிஸ்டர், அவருக்கு  ஒரு பொண்ணு, தான் லவ் பண்ற பையன் கூட ஓடிடுது . அதுக்கு இன்னும் 18 வயசு ஆகலை. இன்னும் 1 நாள் தான் இருக்கு . அந்த ஒரு நாளுக்குள்ளே அவங்களைப்பிடிச்சாகனும், இல்லைன்னா பாப்பா மேஜர் ஆகி இன்னொரு பாப்பாவுக்கு அம்மா ஆகிடும்.

 



அதனால மினிஸ்டர் போலீஸ்  ஆஃபீசர் உதவி கேட்கறாரு.அவரு ஆல்ரெடி இல்லீகலா ஒரு என்கவுண்டர் கேஸ்ல மாட்டினவர் தான்.மினிஸ்டர் தான் காப்பாத்தி விட்டாரு. அந்த நன்றிக்கடனுக்காக பர்சனலா மினிஸ்டருக்கு இந்த உதவி பண்றாரு . எப்படி என்பதைத்தான் சுவராஸ்யமா திரைக்கதைல சொல்லி இருக்காங்க . 


 நான் - லீனியர் ஸ்க்ரீன்ப்ளே அப்டினு ஒரு யுக்தி இருக்கு . அதாவது முதல் ஷாட்ல நயன் தாரா - பிரபு தேவாவை காட்டுவது , அடுத்த ஷாட்ல நயன் தாரா - சிம்பு வை காட்டுவது ,3 வது ஷாட்ல ஆர்யா - நயன் தாராவைக்காட்டுவது , இப்படி மாத்தி மாத்தி கதை சொல்லி சுவராஸ்யமா முடிச்சை அவிழ்ப்பது தான் நான் - லீனியர் மெத்தேட்.


 படத்துல முதல் ஹீரோ அந்த போலீஸ் ஆஃபீசரா வ்ர்ற  கே கே மேனன் தான் . பட்டாசான நடிப்பு , தூர் தர்ஷன் ல வாரா வாரம் திங்கள் கிழமை சுராக் அப்டினு ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர் வரும் அதுல ஹீரோவா நடிப்பவர் போலவே முகச்சாயல். ஆனா பாடி லேங்குவேஜில் மனிதர் அசத்திட்டார். தமிழ் சினிமாவுக்கு முக்கியமான ஒரு வில்லன் கிடைச்சுட்டார்னு தாராளமா சொல்லலாம். இவர் போலீசாக கெத்து காட்டுவதும், அவரோட சம்சாரத்து கிட்டே ஃபோன் வரும்போதெல்லாம் பம்முவதும் அபாரம். ( போலீசா இருந்தாலும் பொண்டாட்டி கிட்டே பம்மித்தான் ஆகனும் போல ) 



அடுத்த ஹீரோ சித்தார்த்.ஆண்ட்ரியாவை மிஸ் பண்ணின அனிரூத் மாதிரி மூஞ்சியை ஏன் அப்டி வெச்சிருக்கார்னு தெரியல. இந்த மாதிரி பர பர ஆக்‌ஷன் திரைக்கதைக்கு ஹீரோ முகம் மவுன ராகம் கார்த்திக் மாதிரி , சச்சின் விஜய் மாதிரி  செம ஜாலியா கலாய்ச்சுக்கிட்டு இருக்க வேணாமா? பீமா விக்ரம் போல் ஜிம் பாடி வெச்சுக்கிட்டு , தில் விக்ரம் போல் ஃபைட் சீனில் கலக்கி இருக்க வேணாமா?  கிடைச்ச பிரமாதமான சான்சை அட்டகாசமா கோட்டை விட்டிருக்கிறார் சித்தார்த் .


ஹீரோயின் அஷ்ரிதா ஷெட்டி .சாதா இலந்தைப்பழத்தை விடுங்க , கொஞ்சம் பெரிய சைஸ்ல ஒரு இலந்தைப்பழம் வருமே அந்த மாதிரி வழு வழுப்பான கன்னம் .ரோஸ் கலர்ல இருக்குமே தர்பூசணிப்பழம் ( கோஷாப்பழம் ) அதுல 2 பீஸ் கட் பண்ணின மாதிரி உதடு , நாவல் பழம் மாதிரி கண்ணு ( போன ஜென்மத்துல ஃப்ரூட் ஸ்டால்ல வேலை செஞ்சியா? ) . பொட்டு வைக்காமயே லட்சுமிகரமான முகம் தான் . ஃபிகருக்கு 70 மார்க் கண்ணை மூடிட்டு கொடுக்கலாம் ( காசா? பணமா? அள்ளி விட்றா அழகேசா) இவருக்கு ஆடை வடிவமைப்பு பிரமாதம் . எல்லா வகை மாடர்ன் டிரஸ்சும் ஓக்கே . ( ஒரு சீன்ல ஸ்லோ மோஷன் ல ஓடி வரும்போது ........ )


அடுத்தது நம்ம ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்ன் உழைப்பு. மிகப்பிரமாதம் .இசை ஜி வி பிரகாஷ்குமார். கானாப்பாட்டில் தேவாவின் சாயல் . மொத்தம் 3 பாட்டு ஹிட் . 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. நேரடியாக சாதா \திரைக்கதையில் கதையை சொல்லி இருந்தால் படம் சுமார் படமாகி சராசரி ஆகி இருக்கும் . அதைப்புரிந்து  புது முக இயக்குநர்  மணிமாறன் ( வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் )  மிகச்சிறப்பாக இயக்கி இருக்கிறார் ( கதை , திரைக்கதை அண்ணன் வெற்றி மாறன் ) 


2. ஹீரோயின் செல்க்ஷன் . வில்லன் செலக்‌ஷன் , லொக்கேஷன் செலக்சன், டெம்ப்போ ஏற்றும் காட்சிகள் எல்லாம் குறிப்பிட வேண்டியவை 

3. போலீஸ் ஆஃபீசரின் மனைவி ஃபோன் மூலம் டார்ச்சர் செய்வதை ஒரு சிறுகதையாக சொன்ன விதம் ( கடைசி வரை போலீஸின் மனைவியை  காட்டாமல் விட்டது புத்திசாலித்தனம் )


4. செல் ஃபோன் , சிம் கார்டு மாற்றங்கள் இவற்றை வைத்து ஹீரோ போலீஸ்க்கு தண்ணி காட்டும் உத்திகள் 


5. படத்துக்கான போஸ்டர் டிசைன் , விளம்பர உத்திகள் , நல்ல தியேட்டர்களை தமிழகம் எங்கும் புக் செய்தது  எல்லாமாகச்சேர்ந்து ஏ செண்ட்டர்களில் இந்தப்படம் அமோக வரவேற்பு பெறும் வாய்ப்பு 


6. ஓவரா உணர்ச்சி வசப்படும் சின்சியர் டியூட்டி கான்ஸ்டபிள் கேரக்டரின் அசத்தலான  நடிப்பு  ( செம காமெடி )


7.ஓரக்கண்ணாலே கானாப்பாட்டுக்கு தியேட்டர் அதிர்கிறது. செம மேக்கிங்க் 


8. யாரோ இவன் யாரோ இவன் பாட்டுக்கான ஆர்ட் டைரக்‌ஷன் கலக்கல். அதே போல் அந்த கிளப் டேன்ஸ் ஓப்பனிங்க்ல வருவதும் செம






 இயக்குநரிடம் சில கேள்விகள்  ( திரைக்கதை வெற்றி மாறன் என்பதால் அவருக்கும் பங்கு உண்டு ) 


1. ஹீரோயின் காலேஜ் படிக்கறா. ஆனா மேஜர் ஆகலை. அதாவது 18 வயசு ஆகலை . இதுதான் படத்தின் மெயின் மேட்டர். யாரா இருந்தாலும் பிளஸ் டூ முடிச்சாலே 18 வயசு ஆகிடும் .  காலேஜ் வரும்போதே 19 ஆகி இருக்கும். காலேஜ் 3 வது வருஷம் படிக்கும் பொண்ணுக்கு 18 வயசு ஆகி இருக்காதா? நல்ல வேளை ஃபிகர் இன்னும் வயசுக்கே வர்லைன்னு சொல்லாம விட்டாங்க . ( ஹீரோயின் முகம், மற்ற சமாச்சாரங்களைப்பார்த்தா எப்படியும் 25 வயசு இருக்கும் .) அப்டியாவது பிஞ்சு முகம் உள்ள ஃபிகரை ஹீரோயினா போட்டாங்களா? 


2. ஓடிப்போகனும்னு பிளான் போட்டவங்க  ஒரு நாள் கழிச்சு ஓடி இருக்கலாமே? 18 வயசு ஆகி இருக்குமே? ( ஆனா படமே அதுல தான் இருக்கு ) 


3. ஹீரோவுக்கு ஹீரோயினோட அப்பாவைத்தெரியாது. அதனால மினிஸ்டர் காரைப்பார்த்ததும் லிஃப்ட் கேட்கறார். ஓக்கே . ஆனா ஹீரோயினுக்கு அப்பா கார் தெரியும் , பக்கத்துலயே கல்லுளி மங்கி மாதிரி நிக்க்றவர் ஏன் காதலனை  வார்ன் பண்ணலை? அது அப்பா கார். போகாதேன்னு சொல்லி இருக்கலாமே? 


4. ஹீரோ , ஹீரோயின் இருவரும் அன் ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்ல போறாங்க. இன்ஸ்பெக்டர் டி டி ஆர் கிட்டே அவங்களைப்பற்றி விசாரிக்கும்போது அவர் எல்லாத்தகவலும் சொல்றாரு. எந்த ஊர்ல எந்த டி டி ஆர்க்கு அன் ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் பேசஞ்சர்ஸ் பற்றி தெரியும்? 


 



5. ரயில்வே ஸ்டேஷன் வரும் எஸ் ஐ ஹீரோயினை கையைப்பிடிச்சு இழுத்துட்டுப்போறார். அப்போ ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் என்ன செஞ்சாங்க ? அவங்களை காட்டவே இல்லையே? 


6. இந்தக்காலத்து ஃபிகருங்க எல்லாம் விபரமானவங்க. கமுக்கமா இருப்பாங்க. அப்பா மினிஸ்டர் , லவ் ஏத்துக்க மாட்டார்னு தெரிஞ்சும் லூஸ் மாதிரி தன் லவ்வர் கூட எடுத்த ஃபோட்டோக்களை ஃபேஸ் புக்ல அப்டேட் பண்ணுதே , எப்டி?


7. இந்தக்காலத்துல ஃபிகர் கிடைப்பதே உன் பாடு என் பாடுன்னு இருக்கு. இந்த லட்சணத்துல ஹீரோயின்  ஹீரோ ரூம் க்கு தேடி வந்து கில்மாவுக்கு கூப்பிடறா. ஹீரோ பெரிய இவராட்டம் வேதாந்தம் பேசி அவளைத்திருப்பி அனுப்பிடறாரே? அந்த அளவு யோக்கிய சிகாமணி இந்த உலகத்துல யாராவது இருக்காங்களா?  ( சீன் போச்சேங்கற ஆதங்கம் தான் ) 


8. எஸ் ஐ ஐ கார்ல கை விலங்கோட மாட்டி எஸ் ஆகும் ஹீரோ ஏன் லூஸ் மாதிரி விலங்கோட சாவியை விட்டுட்டுப்போறார்? 


9. க்ளைமாக்ஸ்ல ஒரு லிப் டூ லிப் கிஸ் இருக்கு. கிளுகிளுப்புக்கு நன்றி, ஆனா  யாருமே இல்லாத தனி ரூமிலேயே கிஸ் பண்ணாத ஒரு யோக்கியன் நடு ரோட்ல இன்னொரு ஆம்பளைக்கு முன்னால அப்டி கிஸ் அடிப்பானா? ( இதுவும் ஸ்டொமக் பர்னிங்க் தான் , 2 நிமிஷம் பாவி அந்த உதட்டை விடவே இல்லை ) 


 



 மனம் கவர்ந்த வசனங்கள் 



1. நம்மளை விட இங்க்லீஷ் நல்லா பேசறான், கான்வெண்ட் ல படிச்சிருப்பான் போல 


2. பெங்களூர்ல படிக்காம இருக்கலாம், சரக்கு அடிக்காம எப்டி இருக்க முடியும் ? 


3. இந்த மாதிரி எல்லாம் இருந்தா பொண்ணுங்களை கரெக்ட் பண்ண முடியாது . எப்டின்னு ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லித்தர்றேன் இரு 


4. கண்டிப்பா ஷூ போட்டுட்டுத்தான் பார்ட்டிக்கு வரனும்னு சொன்னேனே? 

 சொன்னே. ஆனா ஷூ போட்டுட்டு வர்லைன்னா பார்ட்டிக்கு உள்ளே விட மாட்டாங்கன்னு சொல்லலையே? 



5. சொல்றேனேன்னு  கோவிச்சுக்காதே, இவ்ளவ் மொக்கையான பொண்ணை நான் பார்த்ததில்லை 


6. அந்தப்பசங்களுக்கு 2 மேட்டர் தான் தெரியும்  1. சரக்கு 2 ஃபிகரு 



7.போலீஸ் வேற வேலையா வந்திருப்பாங்க, நம்மைத்தேடி இல்லை, முகத்தை கேசுவலா வெச்சிரு 

------


 ஏண்டா இப்படி வெச்சிருக்கே முகத்தை ?

 ஹி ஹி கேசுவலா இருக்கேன் 



8. மைனர் பொண்ணை கிட்நாப் பண்ணா 7 வருஷம் கடுங்காவல் தெரியுமில்ல? 


9. டேய், நாம தாண்டா அவளை சப்போர்ட் பண்ணனும் 

 ம்க்கும், நமக்கே சப்போர்ட் இல்லை 



10 . மச்சி , சரக்கு ஃபிரீயா கிடைக்கும்போது எப்டிடா  சரக்கு அடிக்கறதை விட முடியும் ? 


 



11. மச்சான் , ஹெல்த் ஈஸ் வெல்த். நீ மட்டும் குடிக்கக்கூடாது , நான் குடிப்பேன் ஹி ஹி 


12. இந்த ஒரு தடவையாவது எங்கப்பா பேரு  ஒரு நல்லதுக்கு யூஸ் ஆகட்டுமே?


13. நீ எப்படி இந்த மாதிரி பேலன்ஸ்டா, மெச்சூரா, புரொஃபஷனலா இருக்கே? ஐ லைக் யூ டா



14. இங்கே பாரு . நீ செத்துட்டா நானும் சாக மாட்டேன். நாம வாழனும் , சேர்ந்து வாழனும் 


15 . போலீஸ்  எஸ் ஐ - என் கழுத்துல அவன் பிளேடு வெச்சுட்டாண்டா


 சார், அவன் ஏன் உங்களுக்கு இந்த நேரத்துல ஷேவிங்க் பண்றான் ( பயங்கர அப்ளாஸ் ) 


16. என்னடா  மாப்ளை , சரக்கடிச்சேன்னு இபடி ஜாலியா சொல்றே?


 மச்சான்,ஜாலியா சரக்கடிச்சதை  ஜாலியா சரக்கடிச்சேன்னுதானே சொல்ல முடியும்?


17. உன் கூட பேசும் போது தான், தனியா பேசற மாதிரி இருக்கு  (இந்த வசனம் மட்டும் விடுபட்டுடுச்சு, சுட்டிக்காட்டிய க்கு நன்றி )





 சி.பி கமெண்ட் - ஏ செண்ட்டர்களில் இது நல்லா ஓடும் , பி சி சுமாராத்தான் போகும் ,  டோட்டலா இது ஒரு வெற்றிப்படமே . லவ்வர்ஸ் , வெற்றி மாறன் ரசிகர்கள் , காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், பார்க்கலாம் . மீரா, திருடா திருடா, தாம் தூம் ,மாதிரி ரன்னிங்க் ஃபிலிம் ( அதாவது படம் பூரா ஹீரோ , ஹீரோயின் ஓடிட்டே  இருப்பது )களை ரசித்தவர்கள் இதையும் தாராளமாக ரசிக்கலாம்


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 ரேட்டிங்க் -  3 / 5 



Monday, April 08, 2013

சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம்

 

 நம்ம ஊர்ல நடந்த ஒரு உண்மைச்சம்பவம் -ஹிதேந்திரன் என்ற சிறுவனின் உடல் உறுப்பு தானம்  பற்றிய  கதையை மலையாளத்துல டிராபிக் என்ற பெயரில் எடுத்து ஹிட் ஆக்கினாங்க , அதை ரீ மேக்கி இருக்காங்க . இது எப்படின்னா தமிழன் தமிழ் நாட்டில் கிடைக்கும் 10 ரூபா இளநீரை வாங்கிக்குடிக்காம அந்த இளநீரை அமெரிக்காக்காரன் நம்ம நாட்டில் வந்து வாங்கி அவங்க நாட்டுக்குக்கொண்டுபோய் பாலிபேக்ல பேக் பண்ணி 100 ரூபாய்க்கு விக்கும்போது அதை வாங்கிப்பான். அந்த மாதிரி


மாமூல் மசாலாக்கதைகளை பார்த்து சலித்த கண்களுக்கு  இது மாதிரி வித்தியாசமான களத்தில் சொல்லப்படும் கதைகள் ஆச்சரியத்தைத்தருவதில் ஆச்சரியம்  ஏதும் இல்லை 


குடும்பத்துக்கு நேரம் ஒதுக்காத சினிமா சூப்பர் ஸ்டார் பொண்ணுக்கு மாற்று இருதயம் 1 வேணும்.அதுவும் உயிரோட இருக்கும் ஆளின் இதயம் தான் வேணும்.  ஒரு விபத்தில் பலி ஆகி மூளைச்சாவு ஏற்பட்டு நிச்சய இறப்பு என உறுதி ஆன ஒரு கேஸ். அந்தப்பையனோட இதயத்தை  இந்தப்பொண்ணுக்கு பொருத்தனும் .டிராபிக் உள்ள பகல் டைம்ல சென்னை டூ வேலூர் 170 கிமீ வேகத்துல 90 நிமிடங்கள் ல போய் ஆகனும். இதை எப்படி சக்சஸ் ஃபுல்லா செய்யறாங்க என்பதுதான் திரைக்கதை 


 



சமீபத்தில் எனக்குத்தெரிந்து  இத்தனை கதாப்பாத்திரங்களை வைத்து அத்தனை பேரையும் நம் மனசில் பதித்து பிரமாதமான, குழப்பமே இல்லாமல் ஒரு திரைக்கதை வந்ததில்லை . கதைப்போக்கு  மணி ரத்னத்தின் ஆய்த எழுத்தை ஒத்திருந்தாலும் , திரைக்கதை சாயல் எங்கேயும்  எப்போதும் படம் மாதிரி இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு இது ஒரு முக்கியமான படமே..

படத்தில் கம்பீரமான நடிப்பு சரத் குமாருடையது .ஆபரேஷன் லீடர் இவர் தான் . போலீஸ் ஆஃபீசர் , நாட்டாமை ஆகிய 2 கேரக்டர்களும் சரத்துக்கு  அல்வா சாப்பிடுவது போல . அசால்டாக செய்து இருக்கிறார். அவர் காட்டும் பாடி லேங்குவேஜ் , உடல் மொழி , கம்பீரம் , தோரணை புது நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று .


ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தும் முக்கிய ஆள் அந்த காரின் டிரைவராக போலீஸ் காரர் சேரன் .சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட குற்ற உணர்ச்சி அவர் முகத்தில் தாண்டவம் ஆடுது .தன்னை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் பயன் படுத்திக்கொள்வதில் ஒரு சுய நலம் இருந்தாலும் அதில் பொது நலனும் இருப்பதால் நோ இஸ்யூஸ்


குடும்பத்தின் மீது கவனம் செலுத்தாமல் எப்போதும் பிசியாகவே  இருக்கும் சூப்பர் ஸ்டாராக பிரகாஷ் ராஜ். ஆர்ப்பாட்டமான நடிப்பு , அவர் மனைவியாக வரும் ராதிகா இந்தப்படத்தின் புரொடியூசர் என்பதற்காக அவருக்கு அதிக சீன் எதுவும் வைக்காமல்  அண்டர்ப்ளே ஆக்ட் செய்ய வைத்திருப்பது சிறப்பு


இடைவேளை திருப்பத்துக்காகவும் , கதையில் கமர்சியல் சுவராஸ்யத்துக்காகவும் பிரசன்னா , இனியா கேரக்டர்கள் . தன் மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டாள் அதுவும் தன் உயிர் நண்பனுடன் என்பதை உணரும் பிரசன்னாவின் நடிப்பு எதார்த்தம் 


 பேஷண்ட்டின் காதலியாக பார்வதி மேனன். புருவம் ரொம்ப அடர்த்தி என்ற குறை தவிர நல்ல ஃபிகர் தான்

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ஒரு உண்மைச்சம்பவத்தை சுவராஸ்யமான சம்பவச்சேர்ப்புகளோடு திரைக்கதை அமைப்பது சவாலான பணி , மிகப்பிரமாதமாக அதை செய்து இருக்கிறார். வாழ்த்துகள் 



2. பாத்திரத்தேர்வு அழகு . கே பாலச்சந்தர் படம் போல் எல்லா கேரக்டர்களுமே மனதில் நிற்கிறார்கள் , அவர்களை அழகாக நடிக்க வைத்ததற்கு , நம்  மனதில் நிறுத்தியதற்கு 



3.  மொத்தப்படமும் நமக்கு உணர்த்தும் சேதிகள் 2 தான் . 1. சாலையில் செல்லும்போது கவனம் வேண்டும்  2 உடல் தானம் உயிரைக்காக்கும் . அதை எந்த பிரச்சார நெடியும் இன்றி கலைப்படத்தின் நேர்த்தியுடன் ஜனரஞ்சகமாய்ச்சொன்னது 


4. ராடான் பிக்சர்ஸ் செய்த புத்திசாலித்தனமான விஷயம் மலையாள ஒரிஜினல் டிராபிக்கில் உதவி இயக்குநராகப்பணி ஆற்றியவரையே இதில் இயக்குநர் ஆக பிரமோஷன் பண்ணியது 


5. மூளைச்சாவு நிகழ்ந்த பேஷண்ட்டின் பெற்றோராக வரும் இருவர் நடிப்பும் கன கச்சிதம்



 


 மனம் கவர்ந்த வசனங்கள் ( அஜயன் பாலா)


1. ஒரு மனுசன் கடவுளா நம் கண்ணுக்கு தெரிவது இக்கட்டான தருணங்களில்



---------------------


2. எல்லோருடைய லைப்லயும் ஏதாவது ஒரு நாள் முக்கியமான நாளா அமைஞ்சிடும் 


----------------------


3. தப்பாயிடும் தப்பாயிடும்னு பயந்துட்டே ஒரு காரியம் செஞ்சா அந்த காரியம் தப்பாயிடும்


--------------------


4. முடியாதுன்னு சொல்லிட்டா வழக்கமான நாளா இதுவும் ஆகிடும்.முடியும்னு சொல்லி முயற்சி செஞ்சா இந்த நாள் வரலாறா மாறும்


--------------------


5. க்ளைமாக்ஸ் சூப்பர்னு எல்லாரும் சொல்றாங்க 


அப்போ அதை மட்டும் ரிலீஸ் பண்ணா போதுமா? 



---------------


6. காரியம் நடக்கனும்னா கொஞ்சம் செண்ட்டிமெண்ட் கலந்து பேசுவது தப்பில்லை 



-------


7. உங்களுக்கு என் பையன் சாகக்கிடக்கும் ஒரு உயிர் , ஆனா எங்களுக்கு அவன் உயிரோட இருக்கும்  மகன் 




-----


8. எல்லா மனிதர்களுக்கும்  அவர்கள் குடும்பம்தான் முக்கியம், அதை சரியா கவனிக்காத யாரும் வெற்றியாளர் கிடையாது 



----------------------------


9.  ரசிகர்களை ஏமாத்தலை . உங்களை நீங்களே ஏமாத்திட்டு இருக்கீங்க 




----------------------


10 ஒரு ஹீரோவா நீங்க ஜெயிச்சிருக்கலாம் , ஆனா ஒரு மனுஷனா தோத்துட்டீங்க 



-------

 




இயக்குநரிடம் சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. மிட் நைட்ல தம்பதிகள் அவங்க பெட்ரூம் ல படுத்திருக்காங்க , அப்போ மனைவிக்கு அவ கள்ளக்காதலனும் , கணவனின் நெருங்கிய நண்பனுமான ஆள் கிட்டே இருந்து ஃபோன் வருது. அப்போ மனைவி “ அவர் பக்கத்துல தான் இருக்கார், நான் அப்புறமா கூப்பிடறேன்”ன்னு சொல்லி ஃபோனை கட் பண்றா, அப்போ புருஷன் எழுந்து யார் ஃபோன்ல என கேட்க மனைவி “ ராங்க்  கால்” ங்க்கறா. எவ்வளவு பெரிய ஓட்டை இந்த காட்சில ... 


அ. கணவனின் நெருங்கிய நண்பன் என்பதால் அவன் எப்போ வீட்ல இருப்பான்னு நண்பனுக்கு தெரிஞ்சிருக்கும் , மிட் நைட்ல ஃபோன் பண்ணினா ஆபத்துன்னு தெரியாதா? 


ஆ.  கள்ளக்காதலன் கிட்டே இருந்து ஃபோன் வரும்போது  அருகில் கணவன் இருப்பதால் மனைவி ஃபோனை கட் பண்ணி ஆஃப் பண்ணி இருக்கலாம், அல்லது மெசேஜ் அனுப்பி இருக்கலாம், அல்லது பெட்ரூமை விட்டு வெளியே பாத்ரூம் போவது போல் போய் அங்கே ரகசியமாய் பேசி இருக்கலாம் 


இ . போன் பேசி முடித்ததும் அந்த காலை எரேஸ் பண்ணவே இல்லை . பின் கணவன் ஃபோனை எடுத்துப்பார்த்து மிட் நைட்ல அவன் ஏன் ஃபோன் பண்ணான்? என கேட்க மாட்டானா? 


2. பர்சனாலிட்டியான , வசதியான , கவுரவமான பதவியில் கணவன் , குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கறான். மனைவியை அப்பப்ப சந்தோஷப்படுத்தறான், இத்தனை பிளஸ் இருந்தும் மனைவி தடம் மாறுவதற்கு காரணம் சொல்லவே இல்லை 



3.  துரோகம் செய்த மனைவியை பிரசன்னா கார் ஏத்தி கொலை பண்ண முடிவு எடுத்தாச்சு , ஓக்கே . மோதியவர் அரைகுறையா அப்டியே விட்டுட்டுப்போவாரா? மனைவி அவரை பார்த்துட்டா , உயிர் பிழைச்சா ஆபத்து , சாட்சி ஆகிடுவா . இன்னொரு ஏத்து ஏத்தினா மேட்டர் ஓவர். அதை செக் பண்ணாம ஆளில்லா அந்த ரோட்டில் அவசர அவசரமா அவர் ஏன் திரும்பனும் ? 



4. கிரிமினலான பிரசன்னாவுக்கு சேரன் எதுக்கு பரிதாபம் காட்டறார்? 



5. பொதுவா மேல் அதிகாரிகள் என்ன சொல்றாரோ அதைக்கேட்பதுதான் நம்ம வேலை. ஆனா கமிஷனரின் ஆர்டருக்கு கட்டுப்படாமல் சேரன் தன் போக்கில் முடிவு எடுப்பது ஏன்? அதை சரத்தும் கண்டு கொள்ளலையே? 

 

6. ராமராஜன் வேட்டிகள் மற்றும் பிரபல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் மார்க்கெட்டிங்க் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் ஒழுங்கா  ஏரியா பார்க்கறாங்களா? என்பதைக்கண்காணிக்க அவர்கள் வசம் ஜிபிஎஸ் ஃபோன் கொடுப்பாங்க , அது அவங்க இருக்கும் ஏரியாவை காட்டிக்கொடுத்துடும் . சாதாரண கம்பெனியே அந்த ஐடியா ஃபாலோ பண்றப்ப போலீஸ் ஏன் அதை ஃபாலோ பண்ணலை?  சேரன் செல் கீழே விழுந்தாலோ , திடீர்னு ரிப்பேர் ஆனாலோ எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு ஏன் முதல்லியே யோசிக்கலை? 



7. மணிக்கு 170 கிமீ வேகத்துல போகும் போலீஸ் சேரன் செல் ஃபோன்ல பேசிட்டே போவது ஆபத்து இல்லையா? பக்கத்துல ஒரு ஆள் சும்மாவே இருக்காரே? எதுக்கு? ஃபோன் ஆர்டர்களை ரிசீவ் பண்ண ஒருவர் , கார் ஓட்ட ஒருவர் என ரெடி பண்ணி இருக்கலாமே? 



8. மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட் ஃபேமிலி உருக்கம் ஓக்கே , ஆனா எப்போ திரைக்கதை கார்ப்பயணத்துக்கு வந்துச்சோ அப்பவே  அந்த செண்ட்டிமெண்ட் போர்ஷன் ஓவர் ஆகிடுச்சு , அதுக்குப்பின் கரெக்ட் டைம்க்கு அது போய்ச்சேர்ந்ததா? என்பதில் தான் ஆடியன்ஸ் ஆர்வம் இருக்கும் . அந்த டைம்ல பழைய சோகத்தை எல்லாம் பிழியக்கூடாது 



9. மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட்டின் காதலியாக வரும் ஃபிகர் புருவம் ஏன் அவ்ளவ் அடர்த்தியா இருக்கு? அதை ட்ரிம் பண்ணி இருக்கலாம் .க்ளோசப் ல அடிக்கடி காட்டுவதால் உறுத்துது ( உறுத்துதுன்னா கொஞ்சம் தள்ளி உட்கார்) 



10 .  மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட்டின் அப்பா கேரக்டர் சோகம் காட்டின அளவுக்கு அம்மா கேரக்டர் சோகம் காட்டலை . மேக்கப் எதுக்கு அவ்வளவு ? குங்குமம் எல்லாம் கல்யாண வீட்டுக்குப்போற  மாதிரி , அந்த ஹாஸ்பிடல் சீன்ல இன்னும் அந்தம்மாவுக்கு மேக்கப் டல் பண்ணி இருக்கனும் 


 

மல்லிகாவுக்குப்பக்கத்துல இடது புறமா நிக்கும் ஃபிகரின் கீழ் உதட்டைப்பார்க்கவும் ஹி ஹி

11. பேஷண்ட்டோட கிரிட்டிகல் சிச்சுவேஷன் பற்றி ஒரு டாக்டர் இப்படித்தான் ஹெட் ஆஃப் த டாக்டர்ஸ் கிடே பேஷண்ட்டோட பேரண்ட்ஸ் முன்னால உளறுவாங்களா?



12. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல எப்பவும் “ நீ இந்த வேலையைச்செஞ்சிடு”ன்னு ஆர்டர் தான் போடுவாங்க. ஆனா கமிஷனர் சரத் “ யார் இதை செய்யத்தயார்?”னு கேட்பது காமெடின்னா யாருமே தயார் இல்லை என்பதும் செம காமெடி 



13 . ஹெலிகாப்டர்ல போக முடியாது என புத்திசாலித்தனமா வசனம் வெச்சா போதுமா? குறிப்பிட்ட அந்த பயணம் பூரா மழை வருவது போலவோ , வானம் மோடம் போட்டிருப்பது போலவோ காட்ட வேணாமா? 



14. மொத்தப்படமும் பிரமாதமா போய்ட்டிருக்கும்போது சூர்யா கேரக்டர் திணிப்பும் அவர் ரசிகர்கள் காருக்கு ரூட் ஏற்படுத்துவதும் அப்பட்டமான சினிமாத்தனம் 


15. சூர்யா ரசிகர்கள் உதவி பண்றாங்க  ஓக்கே , அப்போ படத்துல சூப்பர் ஸ்டாரா வரும் பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் ?


16. இதய தானத்துக்கு ஆரம்பத்துல பெற்றோர் ஒத்துக்கலை , ஓக்கே , ஆனா அவங்க பின்னர் ஒத்துக்கொள்வதை காட்சியா காட்ட வேணாமா? சும்மா வசனத்துல மட்டும் ஒப்பேத்துனாப்போதுமா? 



17. காரில் பயணம்  செய்ய  இன்னொரு ஸ்பேர் டிரைவர் ஏன் ரெடி பண்ணலை? சப்போஸ் அவர் டயர்டு ஆனாலோ , முடியாம போனாலோ ஆல்ட்டர்நேட்டிவ் டிரைவர் வேண்டாமா?


18. சாதாரண கார் டிரைவரை யூஸ் பண்ணீயதை விட அஜித் மாதிரி பைக் ரேஸ் வீரர் அல்லது  கார் ரேஸ் வீரர் என காட்டி இருந்தால் இன்னும் நம்பகத்தன்மையா இருந்திருக்கும்


19. கார் பயணிக்கும் நேரம் எல்லாம் வெய்யில் கொளுத்துவது போல் ஏன் காட்ட வேண்டும்? மூலப்படமான டிராபிக் மலையாளப்படத்தில்  மிகச்சிறப்பாக சீதோஷ்ணத்தை பேலன்ஸ் செய்து இருப்பதாக பார்த்தவர்கள் சொல்றாங்க



20 ரவுடிகள் காரைத்துரத்தி பைக்கில் ரவுண்ட் கட்டும்போது அந்த லேடி ஏன் கார்க்கண்ணாடிக்கதவுகளை ஏற்றி விட வில்லை? 
 




21, சிட்டி கமிஷனர் நடத்தும் அவசர மீட்டிங்கில் போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டுமே இடம் பெற முடியும், சாதாரண போலீஸ் ட்ரைவர் எப்படி இடம் பிடிக்க முடியும்? அதே போல் ஆல் போலீஸ் டிரைவர்ஸ் மீட்டிங்க்கு வரனும் என சரத் குறிப்பிடுவதும் தேவை இல்லாததே


22. யார் யாருக்கோ நன்றி என டைட்டில் கார்டு போட்டவங்க “ 2008 இல் உடல் தானம் செய்ய உதவிய ஹிதேந்திரனின் பெற்றோருக்கு நன்றி என டைட்டில் ல போட்டிருக்கலாமே? 


23.  சேரன் ஃபாஸ்ட் டிரைவிங்க்கில் இருக்கும்போது சரத் அடிக்கடி ஃபோன் பண்ணி இப்போ எங்கே இருக்கீங்க? என பொண்டாட்டி மாதிரி நச்சரிப்பது மகா எரிச்சல். அவர் கார் ஓட்டுவாரா? உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருப்பரா?







சென்னையில் ஒரு நாள் - நல்ல திரைக்கதை உத்தி - விகடன் மார்க் மே பி - 46  ( இது ட்விட்டர்ல போட்டது, ஆனா விகடன் மார்க் - 43



 குமுதம் ரேட்டிங்க் - ஓக்கே 


 ரேட்டிங்க்  3.5 / 5


சி பி கமெண்ட் - மாறுபட்ட சினிமாக்களை விரும்புபவர்கள் தவற விடக்கூடாத படம்