Showing posts with label அனுஷ்கா. Show all posts
Showing posts with label அனுஷ்கா. Show all posts

Thursday, September 22, 2011

பத்ரா - ஆறடி அனுஷ்கா!! + நேரடி ஆந்திரா - தெலுங்கு சினிமா விமர்சனம்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/02/BATHRA-STILLS-49.jpgபோக்கிரி படத்துல விஜய் நடிப்போட ஒரிஜினல் தெலுங்குல மகேஷ்பாபு பண்ணுனாரே நினைவு இருக்கா?அவர்தான் ஹீரோ..படத்தோட பாதி நேரம் ஒரு பாலை வனத்துல பயணம் வித் அஸ்கா அழகி அனுஷ்கா...( அதாங்க ஸ்வீட் கேர்ள்.. ) இதுக்கு மேல படத்துல கதை என்ன வேணும்? ஜாலியா எஞ்சாய் பண்ண வேண்டியதுதான்..

ஹீரோ மகேஷ் வழக்கம் போல் ஆள் அலட்டிக்காம நடிக்கறார்..அனுஷ்காவுக்கும் ,இவருக்கும் பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வில்லை என்றாலும் அதைப்பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.. எல்லா ஹீரோக்களையும் போல ஹீரோயினை கலாய்க்கிறார், வில்லனை வாஷிங்க் மிஷின் இல்லாமலேயே துவைத்து எடுக்கிறார். .. அடியாட்கள் 87 பேர் ஒண்ணா வந்தாலும் அண்ணன் தன் மேல ஒரு கீறல்கூட விழாம எல்லாரையும் அடிச்சு காயப்போடறார்.

அனுஷ்கா ரொம்ப அப்பாவியா வர்றார். எந்த அளவு அப்பாவின்னா எவனோ பார்ட்டில வாங்க ஹெலிகாப்டர்ல வாக்கிங்க் போய்ட்டு வர்லாம்னு கூப்பிட்டா ஏதோ 30 கிமீ போறதா நினைச்சுட்டு பாகிஸ்தான் பார்டர் வர்றது கூட தெரியாம வர்றார்.. அது கூட தேவல. அவன் கூட பின்னாலயே காட்டுக்குள்ள போறார். அவன் பாக்கெட்ல இருந்து காண்டம் பாக்கெட் கீழே விழுந்ததும் தான் அக்காவுக்கு ஏழாம் அறிவு ஓப்பன் ஆகி எஸ் ஆகறாங்க.. அவ்வளவு அப்பாவி/..


நானும் என் 16 வயசுல இருந்து தேடறேன்.. இந்த மாதிரி அப்பாவி சிக்கவே மாட்டேங்குது. எல்லாம் விபரமான பார்ட்டிகளா தான் இருக்காங்க.. ஐ லவ் யூ சொன்னாலே அம்மா கிட்டே பேசுங்கங்கறாங்க. சாரி நான் அதிமுக அல்லன்னு சமாளிக்க வேண்டியதா இருக்கு./.


வில்லன் பிரகாஷ் ராஜ். அண்ணன் ஃபேஸ்ல புது சம்சாரம் கட்ன குதூகலத்தையே ஜாணோம், ஆள் டல்லாவே இருக்காரு. அநேகமா அண்ணன் நிகழ்கால அண்ணியை கழட்டி விட்டுட்டு அடுத்த மேரேஜ் பண்ணிடுவார்னு தோணுது..

விமர்சனம் டிராக் மாதிரி எங்கெங்கேயோ போகுது. சோனா - சரண் கில்மா கதை போல. கதைக்கு வருவோம். 

ஒரு கிராமத்துல இரிடியம் தாது மணல்ல கலந்திருக்கு. அதை எடுக்க வில்லன் ப்ளானிங்க். அதுக்காக அந்த ஊர் மக்களை இடத்தை காலி பண்ண வைக்க நீர் நிலைகள்ல வாட்டர் விஷம் மிக்‌ஷிங்க். சிலர் சாகறாங்க. பயந்து மக்கள் ஊரை காலி பண்ணுவாங்கன்னு வில்லன் எதிர்பார்க்கறார்.. ஆனா அப்போதான் ஹீரோவை எதிர்ல பார்க்கறார். .. 

அப்புறம் என்ன? ஒரு அரசாங்கத்தையே கைக்குள்ள போட்டிருக்கற மல்ட்டி மில்லியனர் வில்லனை ஒரு சாதாரண டாக்சி டிரைவர் புரட்டி எடுக்கறதை வாய்ல லாலிபாப் சாப்பிட்டுக்கிட்டே நாம பார்க்க வேண்டியதுதான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkGZ3_atabwPOS1kQBHlJGLimRkrsl-QB2-cHKbRr7Zfe3dk6Zgb4kzRiBU6el7XifsvvimjC60cM2A2zXQjcUP9V0R8lJWbevpL-gDDXaF-SkFu18Hq0uAh2vLmFqGYrG0nCC1pX48m0/s1600/1.jpg


உத்தேசமாகப்புரிந்த வசனங்கள்

1. பாப்பா உயரம் 5 அடி 10 அங்குலம்.. கரண்ட் கம்பம் மாதிரி.. ஆள் தான் உயரம்.. ஆனா செம கட்டை.. ( அடடா குள்ளமா இருந்தாக்கூட கட்டையான குட்டைன்னு பஞ்ச் டயலாக் பேசி இருக்கலாம்.. )

2.  ஓக்கே மொத்தம் டேமேஜ் செலவு  8950 ரூபா.. அதை ரவுண்ட் பண்ணி ரூ10,000 ஆக கொடுத்துடு..

அது எப்படி? அதை ரவுண்ட் பண்ணுனா  ரூ 9000 தானே வரும்?

ஆமா, ஆனா ரூ 10,000த்துல தானே நிறைய ரவுண்ட்ஸ் இருக்கு.. ?

3.  பொம்பளய பார்த்தா எல்லாரும் ஆம்பளை ஆகிடறாங்க.. கத்தி கைல இருந்தா எல்லாரும் கடவுள் ஆகிடறாங்க..

4.  என்னா பாப்பா.. பேண்ட் போட மறந்துட்டியா?

 ஷட்டப்....

ஓ.. சாரி.. உன் டிரஸ்சே அவ்ளவ் தானா?


5. சார்.. என்ன சாப்பிடறீங்க?


சர்வர்.. கொழுப்பு,சர்க்கரை இல்லாத உணவுப்பொருள் உங்க ஹோட்டல்ல என்ன இருக்கோ அது கொண்டு வா..

தண்ணீர் தான் இருக்கு சார்..

6.  முக்கியமான ஃபோட்டோஸை அண்ணன் என்னைத்தான் எடுக்க சொல்வார்..

ஆமா அப்போத்தான் அதுல நீ இருக்க மாட்டே..

7.  அவன் கிட்டே காண்டம் இருந்தது.. பயந்துட்டேன்.. எதுக்குடா ரிஸ்க்னு ஓடி வந்துட்டேன்..

அடடா.. என் கிட்டே அது கூட இல்லையே?

8. அவங்க டிரஸ் என்ன வெங்காயம் விலை மாதிரி மேலே ஏறிக்கிட்டே இருக்கு?

9. இந்த ஊர்ல எல்லாரும் உன்னை தெய்வம்னு கூப்பிடறாங்க.....

நான் சாதாரண டிரைவர்டா..

பகவான் கிருஷ்ணர் கூட சாரதி தாண்டா..



http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/08/anushka4.jpg
10.  என்ன திட்டத்தோட இங்கே வந்தே?


ம்.. ஜஸ்ட் கிஸ்.. நான் நல்லவ என்பதால் இத்தோட உங்களை விட்டுட்டு போறேன்..


11. எனக்கு ஃபர்ஸ்ட் கீர் மட்டும் தான் போடத்தெரியும்..


போதும் போதும்ம். அதை வெச்சே இவ்வளவு தூரம் வந்திட்டியே

12.  நான் காமெடி பண்ணுவேன்.. ஆனாவேற யாராவது  காமெடி பண்ணுனா எனக்கு பிடிக்காது..

13. உயரமா இருக்கற பொண்ணை தொட்டா அவன் உயரத்துக்கு போயிடுவான் ( எங்கே? சொர்க்கத்துக்கா?)

14. எதுக்காக என்னை துரத்திட்டு வர்றே?

எதுக்காக என்னை பார்த்ததும் நீ ஓடறே..

எனக்கு எதுவும் தெரியாது..

நான் இன்னும் எதுவும் கேட்கவே இல்லையே?



படம் ஜாலியா போகுது..... தெலுங்குக்கு ஓக்கே. தமிழ்ல விரைவில் ரீ மேக் செய்யப்படலாம்.. லெமன் அழகி தமனாவின் முன்னாள் காதலரும் ,இந்நாள் ரஞ்சனியின் மணவாளனுமான கார்த்தி ஹீரோவா நடிக்க வரப்போகுது தமிழ்ல.

http://www.virupu.com/Anushka-6/photos/actress-anushka-sizzling-swimsuit-hot-spicy-stills-4.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1.  ஒரு பொண்ணுக்கு 30 கிமீ தூரத்துக்கும் 3000 கிமீ தூரத்துக்கும் வித்தியாசம் தெரியாதா?

2. கதைப்படி ஹீரோ அந்த கிராமத்துக்கு வந்ததும் கடவுள் ஆகறார். அவர் மனசுல நினைக்கறது நடக்குது.. இறந்த குழந்தைக்கு உயிர் வருது.. மழை வா அப்டின்னா வருது. பூமில இருந்து தண்ணி வான்னா வருது.. அப்புறம் எதுக்காக அவர் மெனக்கெட்டு வில்லன் இடத்துக்கு போய் ஃபைட் போட்டு அவனை வீழ்த்தனும்? மனசுல அவனை ஜெயிக்கனும்னு நினைச்சா போதாதா?

3. பாலைவனத்துல ஹீரோ முதுகுல வில்லன் கடப்பறையால குத்திடறான், ஹீரோ என்பதால் அவர் உயிர் பிழைச்சுக்கறார் ஓக்கே.. ஆனா அந்த காயத்துல கடப்பாறைத்துண்டை உடம்புல இருந்து எடுக்க வேகமா வண்டில மோத முதுகு வழியா அது தெறிச்சு விழறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க.. ஆள் அவுட் ஆகிடுவார்.. அதுக்கும் பிறகும் அவர் 34 பேரை சண்டை போட்டு அழிக்கறார்..அது எப்படி?

4. ஒரு சாதாரண டாக்ஸி டிரைவருக்கு ஏன் ஒரு மல்ட்டி மில்லியனர் அப்டி பயந்துக்கறார்? அவர் என்ன மாணீக் பாட்ஷாவா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzRLVNMco_SEJq-qWTH2p85OqTssVifey0AdnSJxBL9qHG8lwchmljwRgGqZryeiu_fWhfH3q8cDqISj3dT6uF4UbnfM52cgthDLO7GtAKa6jhZFgQjayC74x8LmFJ4uonBJG-7TKEcno/s1600/anushka+hot+-+panchakshari+stills+(6).jpg

பாடல் காட்சிகள் சுமார்தான். பாட்டு லைனே புரில. ஏதோ அனுஷ்கா இருப்பதால் தப்பிச்சோம்.

ஆனந்த விகடன் , குமுதம்ல எல்லாம் இதுக்கு விமர்சனம் போட மாட்டாங்க.

சி.பி கமெண்ட் - டி வி ல போடறப்ப பாருங்க..  மார்க் - 38

ஈரொடு சங்கீதாவுல பார்த்தேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_96EyJoC9ZfWZUm9OlHy100aKZGC7J3yPGMLgYlF-Ym_v4Yf2AnCzqUOgq8S0gWIOy_2wNMql5P2zOkp79aET8r2MyYWHHAhClR47HC-JC1-DpqbJj4ZHUikSAwA2ASngtP9z-dKYv8I/s1600/Hot+anushka.jpg

Friday, August 12, 2011

செல்வராகவன் கூட படம் பண்றது டேஞ்சரா? அனுஷ்கா பேட்டி காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpg2tD7G0pJ3nKdphBw7UuXbqis_14bRUz7GMWVBhsP-ukGiZ1cjdJh3_q469iBn3Sc2fMbF-6yc23Oxkk4eDY6K0h5JBHQH6V7KlN71uniq3rRpFuJlJ0gvtjwsdoto6hSetqBaP4MmA/s1600/anushka6p51272558401.jpg 

'ஆந்திரக் குதிரை’ அடையாளம் மறந்து 'சிம்பிள் ஏஞ்சல்’ என்று கொண்  டாடத் தோன்றுகிறது அனுஷ்காவை!

சி.பி - பம்மல் கொஞ்சல் போதும், நேரடியா மேட்டர்க்கு வா நைனா!!


1.  ''வாழ்த்துக்கள்... கிளாமரே இல்லாமல், செம ஹோம்லியா 'தெய்வத் திருமகள்’ படத்துல கலக்கிட்டீங்க...''

சி.பி - ஏதோ ஆதங்கமா சொல்ற மாதிரி மைண்ட் வாய்ஸ் சொல்லுதே?


''தேங்க்ஸ்... ஒரு நடிகைனா, எல்லா ரோலும் பண்ணணும். 'அருந்ததி’யும், 'தெய்வத் திருமகள்’ கேரக்டரும் எனக்குப் பயங்கர சவால் கொடுத்தவை. சவால்ல பாதி தாண்டிட்டேன்னு நினைக்கிறேன். ஷூட்டிங்ல நான், விக்ரம், சாரா... நாங்க மூணு பேருமே ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். டெய்லி நான் அவ்ளோ சந்தோஷமா இருந்தேன். ஐ மிஸ் தெம்!''

சி.பி - என்னது? பாதிதான் தாண்டுனீங்களா?விழலை?
2. ''உண்மை சொல்லணும்... 'தெய்வத் திருமகள்’ படத்தில் விக்ரம், அனுஷ்கா, சாரா... யார் பெர்ஃபார்மன்ஸ் பெஸ்ட்?''

சி.பி -  நோ  டவுட் இன் இட், 100% பாப்பா சாரா தான் பெஸ்ட்


''இதில் உண்மை சொல்ல என்ன யோசிக்கணும்? கண்ணை மூடிட்டு சொல்வேன்... விக்ரம் - சாரா தான் படத்தோட ஸ்டார் பெர்ஃபார்மர்ஸ். அதுவும் அந்த க்யூட் குட்டி சாரா... சான்ஸே இல்லை!


ஒரு ஷாட்டுக்கு அவ்வளவு எக்ஸ்பிரெஷன்ஸ் கொடுப்பா. எல்லார்கிட்டயும் ரொம்ப சீக்கிரமே ஒட்டிப்பா. பிரேக் சமயங்களில் 'ஆன்ட்டி விளையாட வாங்க...’னு என்னை ஒரு வழி பண்ணிடுவா. அழகுக் குட்டிச் செல்லம்!''


சி.பி - உங்களைப்போய் ஆண்ட்டின்னு சொல்லிடுச்சே பாப்பா.. அதான் மனசுக்கு கஷ்டம், அப்போ நாங்க ஆண்ட்டி ஹீரோவா?

http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/08/anushka4.jpg


3''விளம்பரப் படங்களில் நிறைய நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?''

சி.பி - ஹா ஹா இது செம ஜோக், பாப்பா முழுப்படத்துலயே நடிக்கறதில்லை ,சும்மா கிளாம்ர் ஒன்லி.. இதுல 3 நிமிஷ 'விளம்பரப் படங்களில் எப்படி நடிக்க முடியும்?


''இந்தக் கேள்விக்கும் உண்மை சொல்லவா? சினிமாவைவிட விளம்பரங்கள் மூலமா நல்ல ரீச் கிடைக்குது. 

 சி.பி - ரீச் (REACH) கிடைக்குதா? ரிச்  (RICH) கிடைக்குதா? டவுட்டு

விளம்பரத்தில் நடிச்சா, தினமும் நாலு தடவையாவது நம்ம முகத்தை மக்கள் பார்த்துதான் ஆகணும். 

சி.பி - என்னது முகத்தையே 4 தடவை பார்க்கறாங்களா? அப்போ!!!!!!!!!!!!!!!!!

ஆனா, சினிமாவில் அப்படி இல்லை. அதைவிட, சில நாள் கால்ஷீட்டுக்கே ரொம்ப நல்ல சம்பளம் தர்றாங்க. யாருக்குத்தான் விளம்பரத்தில் நடிக்கப் பிடிக்காது.ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் விளம்பரத்தில் நான் ரொம்ப அழகா இருக்கேன்னு நிறையப் பேர் சொன்னாங்க. ஒரு நடிகைக்கு வேற என்ன கிரெடிட் வேணும்!''

சி.பி - பார்த்தீங்களா? படுவாப்பசங்க, அப்போக்கூட நடிப்பைப்பற்றி எதுவும் சொல்லலை, அழகு பற்றித்தான் ஜொள்ளி இருக்காங்க .. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_96EyJoC9ZfWZUm9OlHy100aKZGC7J3yPGMLgYlF-Ym_v4Yf2AnCzqUOgq8S0gWIOy_2wNMql5P2zOkp79aET8r2MyYWHHAhClR47HC-JC1-DpqbJj4ZHUikSAwA2ASngtP9z-dKYv8I/s1600/Hot+anushka.jpg
 படத்துல பேண்ட் கிழிஞ்சிருக்கா? கிழிச்சு விட்டிருக்கா?ஃபேஷனுக்காக?டவுட்டு

4.''அனுஷ்காவின் அழகு ரகசியம் ப்ளீஸ்...''


 ''அழகா இருக்கணும்னு நான் என்னிக்குமே மெனக்கெட்டது இல்லை. நிறையத் தண்ணீர், காலையில் யோகா இது மட்டும்தான் நான் ரெகுலரா கடைப்பிடிக்கும் விஷயங்கள். யோகா உடம்பையும் மனசையும் ஃபிட்டா வெச்சுக்க உதவும். தண்ணீர், ஸ்கின்னைப் பளபளப்பா வெச்சுக்கும். இது ரெண்டும் சரியா இருந்தாலே, முக அழகு ஃப்ரீ!''


சி.பி - நிறைய தண்ணீர்னா எந்த தண்ணி?


http://tamil.koodal.com/cinema/gallery/actress/anushka/anushka_24_1126200885125321.jpg

5. ''சினிமா ஸ்டார்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கும்போதுதான், உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சதாமே... உண்மையா?''

சி.பி - நாம் படிக்கும் ஒவ்வொரு மொக்கைப்பேட்டிலயும் ஒரு அரிய தகவல் மறைஞ்சு இருக்கும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. அட!!!யோகா டீச்சரா நீங்க!!! 


''யெஸ்!

நான் அவங்கவங்க வீட்டுக்கே போய் யோகா சொல்லிக் கொடுப்பேன். அப்படி என்னிடம் யோகா கத்துக்கிட்டவர் தெலுங்குப் பட இயக்குநர் பூரி ஜெகன்னாத். அவர் மூலமாத்தான் நாகர்ஜுனாகூட 'சூப்பர்’ பட வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து, பல வாய்ப்புகள். என் ஃபேவரைட் படம் 'லக்ஷயம்’தான். அதில் எதைப்பத்தியும் கவலைப்படாத, செம ஜாலியான கேரக்டரில் நடிச்சிருப்பேன். உண்மையிலேயே என் கேரக்டரும் அதுதான். அப்படி கேரக்டர்கள் கிடைச்சா, ஆசை ஆசையா நடிச்சுட்டே இருப்பேன்!''

சி.பி - உங்க கேரக்டர் எதைப்பற்றியும் கவலைப்படாத கேரக்டரா? ஐ ஜாலி!!!!

http://picworld.files.wordpress.com/2007/07/anushka-0018.jpg


6. '' 'தெய்வத் திருமகள்’, 'அருந்ததி’ இரண்டில் எந்தப் படத்தோட பெர்ஃபார்மன்ஸ் பெர்சனலா உங்களுக்குப் பிடிக்கும்?''  

சி.பி -  யோவ் பர்சனலா பிடிக்கறதை  எல்லாம் பப்ளிக்கா சொல்லிட்டு இருக்க முடியுமா?  ஓ!! படத்துலயா?.. அப்போ சரி..
 
''எனக்கு ரெண்டுமே பிடிக்கும். 

சி.பி - ஆ!!!! உங்களுக்கும் ரெண்டுமே பிடிக்குமா? எங்களுக்கும் அந்த ரெண்டும் தான் பிடிக்கும் மேடம்!!!!!!!!!!!!!!

பொதுவா, என் அம்மா-அப்பா நான் நடிச்ச படம் பார்த்துட்டு எந்த கமென்ட்டும் சொல்ல மாட்டாங்க. 'அருந்ததி’ படம் அவங்களோட சேர்ந்து பார்த்தேன். படம் முடிஞ்சதும் அப்பா, என் தலையில் கைவெச்சு, 'ஸ்வீட்டி... கீப் இட்-அப்’னு சிரிச்சுட்டே பாராட்டினார். சந்தோஷத் தில் உடனே அழுதுட்டேன். நான் நடிச்சதிலேயே என் அப்பா, அம்மா ரெண்டு தடவை பார்த்த படம் 'அருந்ததி’ மட்டும்தான். ஐ லைக் அருந்ததி... ஐ லவ் அருந்ததி!''

http://2.bp.blogspot.com/_k936YJKWxuM/S-bVDLB1nAI/AAAAAAAAHIY/eDk-2iRtY_k/s1600/Anushka-Hot-Video_songs_gsvfilms.jpg


7''இனிமேலாவது தமிழ்ல நிறையப் படங்கள் நடிப்பீங்களா?''

''நிச்சயமா! அடுத்து கார்த்தியோட ஒரு படம் கமிட் ஆகி இருக்கேன். ஒரு ரகசியம் சொல்லவா? செல்வராகவனோட ஒரு படம் பண்ணப்போறேன். சீக்கிரமே அறிவிப்பு வரும். அடுத்து, தெலுங்கில் நாகார்ஜுனாகூட ஒரு படம். இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அனுஷ்கா பிஸி!''


சி.பி -  நீங்க இப்போ கமிட் ஆகி இருக்கற 3 படங்கள்லயுமே டேஞ்சர் தான்.. கிசு கிசுவா வரப்போகுது, பார்த்துக்குங்க,,  3 பேருமே மேரீடுதான் இருந்தாலும் எங்க அண்ணன் செல்வராகவன் கிட்டே மட்டும் ஜாக்கிரதை.. என் திருமணம் பொம்மைக்கல்யாணம், நீங்க தான் நிஜமான பொம்மைன்னு டயலாக் எல்லாம் விடுவார். நம்பி ஏமாந்துடாதீங்க

thanx - vikatan
 

Friday, July 15, 2011

தெய்வத்திருமகள் - கொஞ்சி மகிழ ,நெஞ்சம் நெகிழ - சினிமா விமர்சனம்

-- http://mimg.sulekha.com/tamil/deiva-thirumagan/wallpaper/800-600/deiva-thirumagan-download-wallpapers-048.jpgஇந்த உலகில் உள்ள மனிதர்களில் நல்லவனோ,கெட்டவனோ,இரண்டும் கலந்த சராசரியோ  ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் ஒளிந்திருக்கும்.ஆனால் அது எல்லா நேரங்களிலும் வெளிப்பட்டுவிடாது.தன் மீது அன்பு கொண்ட உள்ளம் அருகில் இருந்தாலோ,தான் மிக அன்பு வைத்த இதயம் பக்கத்தில் இருந்தாலோதான் வெளிப்படும்.ஆனால் இந்தப்படம் பார்க்கும்போது யாரும் அருகில் இல்லாமலேயே உங்கள் குழந்தைத்தனம் கண்ணீராக உங்கள் விழி வழியே வெளிப்படும்...

மனநலம் குன்றிய தந்தை ஒரு குழந்தையை வளர்த்த முடியுமா?தாய் இல்லா அந்த குழந்தையை அவன் பராமரிக்க சட்டத்தில் இடம் இருக்கா? இது தான் படத்தின் மையக்கரு.. (I AM SAM பட தழுவல்)

சிப்பிக்குள் முத்து கமல் நடிப்பைப்பார்த்து பிரமித்தவர்கள் எல்லாருமே  சொன்ன ஒரு கருத்து இது போல் ஒருவர் நடிக்க இனி பிறக்க வேண்டும் என்பதே.. விக்ரம் ஏற்கனவே பிறந்து விட்டதை அறியாமல்.... 

பாடிலேங்குவேஜ்ஜிலும் சரி, ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸனிலும் சரி விக்ரம் தன் அடுத்த தளத்துக்கு போய் விட்டார் என்று தாராளமாக சொல்லலாம்.. காசி ,,அந்நியன் படத்தை விட இந்தப்படத்தில் அவருக்கு ஹெவி ஒர்க். மனிதர் சும்மா பிரிச்சு மேஞ்சுட்டார்...

வக்கீலாக வரும் அனுஷ்கா விதி படத்தில் வரும் சுஜாதா அளவு கம்பீரம் காட்ட முடியாததற்குக்காரணம் அவர் முகத்தில் தொட்டுத்தெறிக்கும் இளமை +அழகு.. முடிஞ்ச வரை சமாளிக்கிறார்..

விக்ரமின் குழந்தைக்கு சித்தியாக வரும் அமலாபால் பண்பட்ட நடிப்பு.. ஓப்பனிங்க்கில் அவர் தான் தான் பள்ளியின் கரெஸ்பாண்டண்ட் என்பதை மறைத்து குழந்தையிடம் பழகுவதிலும்,பின் கண்ணீர் விடுவதிலும் ஈசியாக டேக் ஆஃப் ஆகிறது அவர் நடிப்பு.

அந்தக்குழந்தை..... பொதுவாக சினிமாவில் வரும் குழந்தை நட்சத்திரங்கள் ஓவர் புத்திசாலித்தனத்துடன், வரம்பு மீறிப்பேசும் இயல்பு கொண்டதாக படைக்கப்படும். (உதா - பேபி ஷாலினி )ஆனால் இந்த பேபி கனகச்சித நடிப்பு.. பல காட்சிகளீல் விக்ரம்க்கு இணையான துடிப்பு.. வெல்டன் பேபி..

ஒளிப்பதிவும் ,இசையும் இந்த மாதிரி சாஃப்ட் ஸ்டோரிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இயக்குநர் மிகச்சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.. 

ரொம்ப சோகமாக தாக்கக்கூடாது என்பதற்க்காக சந்தானம், எம் எஸ் பாஸ்கர்.. லைட்டா காமெடி....


http://mimg.sulekha.com/tamil/deiva-thirumagan/stills/deiva-thirumagan-images-099.jpg
படத்தில் வசனகர்த்தா  நினைவில் நின்ற இடங்கள்


1. வக்கீல் சார். ஒரு கொலைக்கேஸ்... 

சந்தானம் - எத்தனை கொலை செஞ்சே நீ?


ஒரே ஒரு கொலைதான். எனக்காக வாதாடி தோத்துப்போன என் வக்கீலை.. 

சந்தானம் - அய்யோ ,சாரி. ஐ ஆம் நாட் எ லாயர்.. டீக்கடை நாயர்.


2.  சந்தானம் - ஹலோ,அனுவா. ஒரு கேஸ் சிக்கிடுச்சு. கம் குயிக்... 

நான் கோர்ட்ல இருக்கேனே?

வாதாடிட்டா இருக்கே? வாதாடறவன் வாயைத்தானே பார்த்துட்டு இருக்கே?

3. சந்தானம் - சென்னைலயே ஸ்வெட்டர் போட்டுட்டு சுத்தறான்னா இவன் எவ்வளவு பெரிய பணக்காரனா இருப்பான். ஏஸிலயே வளர்ந்தவன் போல..


4. சந்தானம் - இது ரொம்ப அவசரமான கேஸ்.. இன்று மத்தியானத்துக்குள்ள டைவர்ஸ் வேணூம்.

5. சந்தானம் - ஹூம், ஒழுங்கா படிக்காததனால கண்ட பொண்ணுங்களூக்கெல்லாம் ஜூனியரா வேலை பார்க்கவேண்டி இருக்கு. 

6. சந்தானம் -இது கோர்ட்டா? இல்லை,மெண்ட்டல் ஹாஸ்பிடலா?ஒரே லூஸா சுத்திட்டு இருக்குதுங்களே?


7. குழந்தை அழுதுட்டு இருக்கே. நீ என்ன பண்ணீட்டு இருக்கே?

ம் ம் .. என்ன பண்னனும்?

3 மணி நேரத்துக்கு ஒருக்கா பால் தரணும்.. 

8.  அய்.. பாப்பா. இனிமே இதை யார் பாப்பா? ( பார்த்துக்குவா?-MAINTAIN)

9.ஒவ்வொரு சாக்லேட் பேக்லயும் ஒரு கிலோவுக்கு 50 கிராம் குறையுது எப்படி?

ம் . ம் அது வந்து ஊட்டி வெய்யில்லுக்கு உருகி இருக்கும். 

10. அண்ணே.. சம்பவம் நடக்கறப்ப்ப சம்பந்தப்பட்ட 2 பேருல யாரோ ஒருத்தருக்கு விபரம் தெரிஞ்சா போதாது.?

11. என்னது? உன் குழந்தை உன்னை அப்பான்னு சொல்லுதா?இப்போ என்ன அமிதாப்பச்சன்னா சொல்லிச்சு..?எந்தக்குழந்தையும் புதுசில அம்மா,அத்தைன்னு தான் சொல்லும். 

12. அப்பா. அம்மா எங்கே?

சாமிக்கிட்டே..

ஏன்?சாமிக்கு அம்மா இல்லையா?

நல்லவங்களை சாமி தன் கூடவே வெச்சுக்கும்.

அப்போ நாம நல்லவங்க இல்லையாப்பா?

13. அப்பா./ யானை ஏன்பா பெரிசா இருக்கு?

நிறைய தீனி சாப்பிடுதே?

சூரியன் ஏன் ரொம்ப தொலைவில இருக்கு?

அது ரொம்ப ஹைட்டான இடத்துல இருக்கே?

14. நீ படிச்சுப்பெரிய பொண்னா ஆனா டாக்டர் ஆகனும். 

நான் ஏன் டாக்டர் ஆகனும்?

டாக்டர் ஆனாத்தான் அப்பாவை நல்லபடியா பார்த்துக்க முடியும். 

ஏன்? டாக்டர் ஆகலைன்னா அப்பாவை பார்த்துக்க முடியாதா?

15. கரஸ்பாண்டண்ட்னா என்ன?

ம். பெரிய மிஸ்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBk8WNhGKLwsFy3uQO3ncYJzR1azm3N5e4aMMuS9JWaxJlu6_i4FgbHpOaeJlA-zywIV7UNiGrsD9_VLdXiqG_8XIGIez8oPfkI_iiE_0TpNQ4ktftvImYfDeAo0c9l-cQ_OgxeTqaGnfz/s640/Amala+Paul.jpg

16. ரம்யா மிஸ் சின்ன டைனோசர். கரஸ்பாண்டண்ட் பெரிய டைனோசர்


17. அப்பா. நீயும் அம்மா மாதிரியே என்னை விட்டுட்டுப்போயிடுவியாப்பா?


18. அப்பா. இனிமே என்னைக்காணோம்னா அந்த நிலா கிட்டே சொல்லிடு.. அந்த நிலா என் கிட்டே சொல்லிடும். 

19. அப்பா. உனக்கு கதை சொல்லத்தெரியுமா?

நிறைய தெரியும். ஆனா நாளைக்கு சொல்றேன். ஹி ஹி

20.சந்தானம் - இந்தக்காலத்துல பொண்ணூங்க எல்லாம் எங்கேடா அறிவைப்பார்க்கறாங்க? இவனை மாதிரி ஒருத்தன் சிக்குனாப்போதும்னு தானே பார்க்கறாங்க. 

21. நிலா எப்போ வரும்?( விக்ரம் குழந்தையின் பெயர் நிலா)

சந்தானம் - ம் அமாவசைக்கு அடுத்த நாள்

22. எங்கே என் சம்சாரத்தை காணோம்?

யோவ்.. இப்போத்தானே 2 பேரும் போனாங்க? அதுக்குள்ள வர முடியுமா?

23.மன நல வளர்ச்சி குறைஞ்சவங்க கிட்டே குழந்தை வளரலாம்னு எந்த சட்டமும் இல்ல. 

24. மணி என்ன? நிலா எப்போ வருவா?

சந்தானம் - சொன்னா மட்டும் புரிஞ்சிடப்போகுதா?நிலாவுல கால் வெச்ச நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் கூட இத்தனை தடவை நிலா பேரை சொல்லி இருக்க மாட்டான். 

25. சந்தானம் -ஏய். அனு. கோர்ட்ல நீ அடுக்கடுக்கா சொன்ன பொய்யைப்பார்த்து எனக்கே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.

26. அனுவை விட்டு என்னால இப்போதைக்கு வர முடியாது. 

ஏன்? அவ கிட்டே அவ்வளவு அட்டாச்மெண்ட்டா?
இல்லை. 5 மாச சம்பள பாக்கி.. 

27. சந்தானம் - இவரு பெரிய மியூசிக் டைரக்டரு. கையை ஆட்டாம பேச மாட்டாரு. 

28. வக்கீல் கிட்டேயும் ,டாக்டர் கிட்டேயும்  பொய் சொல்லக்கூடாது,ஆனா வக்கீலும் டாக்டரும் தாராளமா பொய் சொல்லலாம்.


29. அட.. 2 தடவை கேட்டதுக்கே இவ்வளவு டென்ஷனா?

2000 தடவை அவன் நிலான்னு சொன்னதை கேட்டுட்டோம்.. 


30. மன வளர்ச்சி குன்றியவங்க கூட பழகறவங்க எல்லாரும் மன வளர்ச்சி குன்றியவங்கன்னு சொல்லிட முடியுமா யுவர் ஆனர்?

31. அமலா பால் - என் அக்காதான் எனக்கு அம்மாவா இருந்தாங்க.. சோ அவ குழந்தைக்கு நான் அம்மாவா இருக்க ஆசைப்படறேன்.. நீ என் கூட கடைசி வரை இருப்பியோ இல்லையோ தெரில. ஆனா நான் அவ குழந்தை கூட கடைசி வரை இருக்கனும்னு ஆசைப்படறேன்

32. நீ அவரை சீரியஸா எடுத்துக்காதே.. அவர் வராத மழைக்கு வானிலை அறிக்கை சொல்லிட்டு இருப்பாரு..

33. நல்லவங்களூக்கு நிறைய சோதனை வரும்,ஆனா ஜெயிச்சுடுவாங்க.. 

34. அப்பா எங்கே?

அவருக்கு உடம்பு சரி இல்லை.. 

பொய்.. 

இப்போ எதுக்கு அப்பாவை கேட்கறே? ஏன்? நாங்க இல்லை?

ஏன்? நீ உங்கப்பா கூட இருக்கறப்ப நான் என் அப்பா கூட இருக்கக்கூடாதா?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7fXa6aut_X2cyzwzUkcf4CVzsuzloEsi5g0R4WKW2r6opIkWRL08ySHx-NQKgDF2ILjoHLyWpQ0nMGwLiF15EQQa2woT27pVjSRZ5VRM6SLZoYdibeuc0vnB8ofjGgl6hWq3m-mlbna0/s1600/amala_paul+%25284%2529.jpg
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கதையின் போக்கு உணர்ந்து அப்பா மகள் பாசத்துக்கு மட்டும் ஏற்றாற்போல திரைக்கதை அமைத்தது. தேவை அற்ற காமெடி,ஃபைட்,  தவிர்த்தது

2. அமலாபால், அனுஷ்கா,பேபி,விக்ரம் 4 பேரிடமும் மேக்சிமம் நடிப்பை வாங்கியது..

3. விக்ரம்-அனுஷ்கா பாடல் காட்சியில் மழையில் இருவரும் சென்றாலும் இருவர் மட்டும் நனையாத மாதிரி (காதலில் நனைபவர்களூக்கு எதுவும் தெரியாது என்ற கற்பனை) காட்டியது..

4. ஆர்ட் ஃபிலிம் மாதிரி ஆகி இருக்கக்கூடிய கதையை ஜாக்கிரதையாக கையாண்டு ஜனரஞ்சகப்படம் ஆக்கியது.

5. ஒளீப்பதிவு,இசை,எடிட்டிங்க் அனைத்தும் கன கச்சிதமாய் கவனித்துக்கொண்டது..

http://www.filmics.com/tamil/images/stories/news/July_2011/14.07.11/Deiva-Thirumagal-Review.png

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஓப்பனிங்க் ஷாட்டில் விக்ரம் பிக்பாக்கெட்டிடம் பணத்தைப்பறி கொடுப்பதும் தப்பும் திருடன் காலில் அடிப்பட்டதும் விக்ரம் அவனுக்கு கை குடுப்பதும் நந்தலாலாவை நினைவு படுத்துகிறதே?

2. மனநலம் குன்றிய ஒருவன் அப்பப்ப டைமிங்க் ஜோக் அடிக்க முடியுமா?உதாரணமா அடிக்கடி பாஸ்கர் மேலே சொல்லு என்றதும் விக்ரம் அப்போ என்ன பேசுனாரோ அதை ரிப்பீட்டாய் வானம் பார்த்து சொல்லிட்டு மேலே சொல்லிட்டேன் என்பது..

3. கைக்குழந்தையை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாண்டால் கொல்லாத்து விழுந்துடும்னு சொல்வாங்களே? அதை இயக்குநர் கவனத்தில் கொள்ளவில்லையா?அடிக்கடி குழந்தையை அப்படி தூக்கிப்போட்டு விளையாடறாங்களே?

4. கேமிரா கோணமும் சரி.. விக்ரம்-இன் பாடி லேங்குவேஜ்ஜும் சரி பல இடங்களீல் சிப்பிக்குள் முத்து கமல் நினைவுபடுத்துதே? தவிர்த்திருக்கலாமே?

5. க்ளைமாக்ஸ் கோர்ட் சீனில் ஜட்ஜாக நடித்தவர் செயற்கை நடிப்பு.. வேறு ஆளை போட்டிருக்கலாம்.. 

6. இடைவேளைக்குப்பிறகு வரும் அந்த ஹோட்டல் காமெடி காட்சிகள் நீளம்.. எடிட் செய்து இருக்கலாம்.. கதையின் போக்கை மாற்றி விடும் அபாயம்.. 


 தமிழ்ப்பட உலகில் நல்ல படங்களின் ரசிகர்களூக்கு இது ஒரு முக்கியமான படம்.. குழந்தைப்பாசம் உள்ளவர்கள் அனைவரும் காணவேண்டிய படம்.. குடும்பத்துடன் பார்க்கலாம்..

http://www.newsonweb.com/newsimages/July2011/586b86bd-e6c6-498f-b0a9-9423a77d85a11.jpg

ஏ செண்ட்டர்களீல் 50 நாட்கள், பி  செண்ட்டர்களீல் 30 நாட்கள், சி செண்ட்டர்களீல் 15 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று

சி.பி கமெண்ட் - கிளாசிக் மூவி

 ஈரோட்டில் தேவி அபிராமி,சண்டிகா,கிருஷ்ணா,ராயல் -ல் படம் ஓடுது.. நான்

சண்டிகாவில் படம் பார்த்தேன்..

Friday, April 29, 2011

வானம் - சிம்பு VS தெம்பு? OR சொம்பு ? - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKhZFuHn4K7DPynruNI78peG9Gu7BQ2uOh-2azlTSPtcQte70_vdwY1y9cDsGf6I3c77RTfLXyPD4D_qMI-NXRXSYAUlC8cW-jPoq6EP8zuvhkOLZ4E79L5jGcDKdcICnUkK7gv54w6g5p/s1600/Simbu_Anushka_vaanam_movie_posters.jpg

எவண்டி  உன்னைப்பெத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் என்ற சூப்பர் ஹிட் பாடல் கை வசம் இருக்கும் தைரியம் + விண்ணைத்தாண்டி வருவாயா படத்தால் சிம்புவுக்கு ஏற்பட்ட புது இமேஜ் & மார்க்கெட் இம்ப்ரூவ்மெண்ட்ஸ் +அனுஷ்காவின் இளமை  இந்த மூன்று மேட்டர்களை கையில் வெச்சுக்கிட்டு  இயக்குநர் க்ரிஸ் அதகளம் பண்ணி இருக்கலாம்.. ஆனா... 

 படத்தோட கதை என்ன?
.ராக் ஸ்டாராக ஆசைப்படும்  இளமை துள்ளும் இளைஞன் ( பரத்),மருமகளின் (சரண்யா)கிட்னியை விற்க வரும் மாமனார்,சொந்தமாக தொழில்(!) செய்ய ஆசைப்பட்டு,  ஹைதராபாத் வருகிற. அயிட்டம் கேர்ள் (அனுஷ்கா),தன் தகுதிக்கு மீறி மிகப்பெரிய பணக்கார பெண்ணை தானும் பணக்காரன் என்று நம்ப வைத்து எப்படியாவது அவளை திருமணம் செய்ய ஆசைப்படும் பேராசைக்காரன் ( சிம்பு).,ஹைதராபாத்தில் நடந்த ஒரு ஹிந்து ஊர்வலத்தில் தன் நிறைமாத கர்பிணியின் கர்ப்பம் கலைந்து போன சோகத்தில் ஒரு முஸ்லிம் (பிரகாஷ் ராஜ் ) இந்த 5 பேரும் ஒரு ஹாஸ்பிடலில் சந்திக்க நேரிடுகிறது.

 இவர்கள் ஐந்து பேரும் வந்து சேரும் இடமான மருத்துவமனையை, தீவிரவாதிகள் வளைத்து, கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ள,படம் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கே உரிய ஸ்பீடோடு சூடு பிடிக்கிறது.என்ன நடக்கிறது என்பதே கதை.





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfTkbuQCRa2R4fA9Div40Jabo8qd516uMK0TBpKYNFbl0riiKVwceJ0KOnLUnoAeHZ2342LlXncRyEw-WjkEePB-8MrDmrk22E1SX0vQOj1dvSHNDZlE_Ju4ZKmYivMm71e7P_XOYjRQJ9/s1600/Sneha_Ullal_Simbu_Vaanam_Movie_Stills_01.jpg
சிம்புவுக்கு அல்வா மாதிரி கேரக்டர்.அவர் சந்தானத்துடன் அடிக்கும் லூட்டிகள் கல கல காமெடி.சினேகா உல்லாள் தான் ஜோடி ( அவர் தங்கை பேர் மேனகா வெளி ஆள்?)ஆனா ஃபிகர் சுமார் தான்.. நடிக்க வாய்ப்பு இல்லாட்டி கூட  பரவால்ல.. அவர் திறமையை (!!) காட்டக்கூட வாய்ப்பில்லாம போச்சேன்னு தான் இளவட்டங்கள் வருத்தம். 

அனுஷ்கா .. அருந்ததி மாதிரி கலக்கலான கேரக்டரில்,சிங்கம் மாதிரி கிளாமரான கேரக்டரில் பார்த்து விட்டு இந்த மாதிரி டிக்கெட் கேரக்டரில் பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா  இருக்கு.ஆனா அவர் அசால்ட்டா ந்டிச்சிருக்கார். ஆனா தெலுங்கு பதிப்பை விட தமிழ்ல அவருக்கு அழகும் இளமையும் கம்மி தான்.. (இப்படியே கம்ப்பேர் பண்ணிட்டே இரு. )

பரத் கேரக்டர் வந்த வரை ஓக்கே என்றாலும் படத்துக்கு தேவை இல்லாத கேரக்டர் தான்.

படத்தில் மனம் கவரும் நடிப்பு சரண்யா, அவர் மாமனார், பிரகாஷ்ராஜ் இந்த 3 பேரும் தான்.சோனியா அகர்வால் பார்க்க பரிதாபமாக இருக்கார். செல்வராகவன் விட்டுட்டுப்போனதால் அப்படி இருக்காரா? அவர் அப்படி டல்லா இருக்கறதால அவர் விட்டுட்டுப்போய்ட்டாரா? என்பது சர்ச்சைக்குரியவிஷயம்.


சந்தானம் காமெடி பலத்துக்கு பலம்
http://fullytimepass.com/wp-content/uploads/2009/03/sneha-ullal-11.jpg
 படத்தில் களை கட்டும் கலக்கல் வசனங்கள்

1.  என் பைக்கை நான் என் ஒயிஃப் மாதிரி பார்த்துக்கறேன்..

சந்தானம்- அப்புறம் ஏண்டா வாசல்ல நிறுத்தி வெச்சிருக்கறே? வீட்டுக்குள்ளேயே நிறுத்தி வெச்சிருக்க வேண்டியது தானே?

2. இங்கே இருக்கறவங்க எல்லாம் பார்த்தியா ஆல் ஹை க்ளாஸ்....

சந்தானம்-  - பார்த்தா எச்ச க்ளாஸ் மாதிரி இருக்கு?

3.  சந்தானம்- ஏம்ப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு காமெடி பண்றேன்.. சிரிக்க மாட்டியா?

 பணம் இருக்கறவன் சிரிக்க மாட்டான்.

 சந்தானம்-  ஆமாமா..  பணம் இருக்கறவன் சிரிக்க மாட்டான், விசில் அடிக்க மாட்டான்,ஜாலியை அனுபவிக்க மாட்டான்.. போறப்ப பணத்தை எடுத்துட்டா போகப்போறான்?

4.  டேய்.. நான் ஒண்ணு சொல்லட்டா.. அந்தாள் பைக்கை நைஸா வித்துடலாமா?

சந்தானம்-  செத்துடலாமா?ன்னு கேட்டிருக்கலாம். இதுக்கு

5.  லேடி - வாங்க இன்ஸ்பெக்டர் சார்... ரொம்ப நாளா ஆளையே காணோம்?

ரெகுலரா வர இது என்ன போலீஸ் ஸ்டேஷனா?

6. என்னது? சரோஜா ஒரு ஃபுல் நைட்டுக்கு வேணுமா? நீங்க தான் மேட்ச்ல வீக் ஆச்சே? எதுக்கு அவ? 

உன்னை எல்லாம் லாக்கப்ல வெச்சு ஒரு வாரம் கும்முனாத்தான் புத்தி வரும்.

7.  எத்தனை தடவை சொல்றது? உங்க கனவை ,ஆசைகளை என் மேல திணிக்காதீங்க..

8. சந்தானம்- பேசாம அம்பானி பொண்ணையே ரூட் விட்ரலாமா? பணக்காரன் ஆகிடலாம் ஈசியா..

ஆனா அம்பானிக்கு பையன் தான்

9. எப்படியாவது ரூ 40000 பணத்தை ரெடி பண்ணனும். 40 பேர்ட்ட ரூ 1000  கேட்கலாமா?

 சந்தானம்- ஏன்? 40000 பேர்ட்ட ஆளுக்கு ரூ 1 கேளேன்..

10. சரி சரி.. இந்த செல்ஃபோன்ல இருக்கற எல்லா  நெம்பருக்கும் டரை பண்ணு..யாராவது சிக்காமலா போவாங்க? கறந்துடலாம்.

சந்தானம்- கஸ்டமர் கேர் நெம்பர் தவிர எல்லா நெம்பரும் ட்ரை பண்ணீயாச்சு.

11.  சந்தானம்- யோவ்.. நீ நல்ல பார்ட்டியா கல்யாணம் பண்ணாம ஒரு பாட்டியைப்[போய் கல்யாணம் பண்ணீ இருக்க..

 சரி சரி.. கொலீக்ஸ் முன்னால என் மானத்தை கொலாப்ஸ் பண்னாதே..

12. சந்தானம்- உன் லவ் நல்ல ஒர்த்தா?

ரூ 600 கோடிக்கு அதிபதி.

ஆ.......

சந்தானம்- அதுக்கு ஏன் கார் டிக்கி மாதிரி வாயைப்பிளக்கறெ..?க்ளோஸ்

13.  சரி.. ப்ளேன் என்னா>ன்னு சொல்லாம டீ சொல்றே,,?

 இன்னுமா புரில..? அவன் ப்ளேனே இன்னைக்கு நம்ம கிட்டே ஓ சி டீ சாப்பிடறது தான்.

14.  அந்தக்காலத்துல திருடறவன் பசிக்காக திருடுனான். இந்தக்காலத்துல புட்டிக்கும் குட்டிக்கும் திருடறான்.
15.  ஏண்டி.. எல்லாரும்  நம்மையே பார்க்கறாங்க.. 

இவங்க இப்படித்தான். சினிமா நடிகையையும், நம்மை மாதிரி பொண்ணுங்களையும் ஒரே மாதிரி பார்ப்பாங்க.. ( ச்சே ச்சே நீங்க நினைக்கறது தப்பு)

16. திரு நங்கை - ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பாத்ரூம் இருக்கு.. நாங்க எங்கேய்யா போவோம்.?

17. என்னது? நீங்க கன்னித்திருடன்களா? கன்னிப்பொண்ணுங்களை திருடுவீங்களா? 

 அட நீங்க வேற.. இது எங்க முத திருட்டு..

18.  சரி.. நீங்க எப்படி? ஒன்லி திருட்டு தானா? இல்லை கொலை, ரேப் இந்த மாதிரி...?

சந்தானம்- இன்ஸ்பெக்டர் சார்.. என்னது இது சர்வர்  மாதிரி வடை பொங்கல் போதுமா ? ரோஸ்ட் வேணாமாங்கறது மாதிரி கேட்கறீங்க?

19. யோவ்.. நாங்க தான் படிக்காதவளுக.. இந்த தொழிலுக்கு வந்துட்டோம். நீ படிச்சவன் தானே.. அரசாங்க வேலை ல தானே இருக்கே? யூனிஃபார்ம் போட்டுட்டு இப்படி சம்பாதிக்க வெட்கமா இல்லை? ( பளார்)

20. போலீஸ்களை நம்பக்கூடாது.. குழந்தையை காணோம்னு புகார் குடுத்தா பொண்டாட்டியை காணாம போக பண்ணிடுவானுங்க.. ( செம க்ளாப்ஸ்)
21.  மத்த வேலைகள் செய்ய அனுபவம் வேணும். ஆனா இந்த தொழிலுக்கு அனுபவம் கம்மின்னா பணத்தை அள்ளி வீசுவாங்க.. அனுபவமே இல்லைன்னா கேட்கற பணம் கிடைக்கும்.

22. எனக்காக அவ கிட்டே என்னைப்பற்றின உண்மையை சொல்றியா?

சந்தானம்-  ஏன்? நீ சொல்ல மாட்டியா? எத்தனை பொய் சொல்லி இருக்கே?

பொய் சொல்றது ஈஸி.. ஆனா உண்மை சொல்றது ரொம்ப கஷ்டம்.. (க்ளாப்ஸ்)
http://www.telugupedia.com/wiki/images/d/d7/Anushka.jpg
23. நான் போலீஸ்.. என்னையே டெரரிஸ்ட்னு சொல்றியா?

அப்பாவிகளை கொடுமைப்படுத்தற எல்லாரும் டெரரிஸ்ட்தான்.

24. சந்தானம்- டேய் நாயே.. சீ வெளில வா.. இவரு பெரிய பாரதிராஜா.. ஸ்க்ரீனுக்கு பின்னால இருந்து ஒளிஞ்சு பார்க்கறாரு.. 

25.. அடப்போடா.. என்னை போலீஸ் ஸ்டேஷன்ல நிக்க வெச்சுட்டியே..?

சந்தானம்-  நீ குடுத்த காசுக்கு உன்னை எலக்‌ஷன்லயா நிக்க வைக்க முடியும்?

26.  எனக்கு இந்த தொழிலே வேணாம்யா.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காட்ட முடியாத ஒரு வாழ்க்கையை  ஒரு நல்ல சாவு காட்டிடுச்சு... 
http://l.yimg.com/t/movies/movietalkies/20090112/21/snehaullal-7b-1_1231775016.jpg

இயக்குநர்க்கு பொக்கே குடுக்கும் ஷாட்ஸ்

1. பிரகாஷ்ராஜ் தன்னிடம் அடி வாங்கினாலும் ஆபத்து நேரத்தில் தன்னை தீவிரவாதியிடம் இருந்து காப்பாற்றினார் என்றதும் கை எடுத்துக்கும்பிடும் போலீஸ் ஆஃபீசர் கேரக்டர் வடிவமைத்த விதம்

2. யுவன் சங்கர் ராஜாவிடம் செமயான ஹிட்ஸ் சாங்க்ஸ் வாங்கியது.

3.உனக்கும் வேணும் எனக்கும் வேணும் பாடல் காட்சியை படமாக்கிய விதம்.

4. ஹாஸ்பிடல் காட்சியில்  திருடிய பணத்தை சிம்பு  திருப்பிக்குடுக்க வரும்போது அந்த பெரியவர் நடிப்பு.. அந்த காட்சி மார்வலஸ்



http://hotphotos.picswallpapers.com/var/albums/Sneha-Ullal/latest/Sneha-Ullal-latest-photo-003.jpg?m=1279039354
இயக்குநருக்கு சில யோசனைகள் & கேள்விகள்

1. இரண்டு வருஷத்துக்கு ஓட வேண்டிய மெகா சீரியல் ரேஞ்சுக்கு எதுக்கு படத்துல அத்தனை கேரக்டர்.? கசா முசான்னு ஏகப்பட்ட பேர் வர்றதால சாதாரண சினிமா ரசிகன் குழம்ப மாட்டானா?

2. படம் போட்ட முதல் ஒரு மணிநேரம் கதை எந்த திசைல பயணிக்குதுன்னே தெரில.. கதைல சுவராஸ்யம் கூட்ட க்ளைமாக்ஸ்ல பாம் வைக்கப்போற மேட்டரை ஆரம்பத்துலயே காட்டி இருந்தா டெம்ப்போ ஏத்தி இருக்கலாமே?

3. பரத் கேரக்டர் படத்துல எதுக்கு? தயவு தாட்சண்யமே இல்லாம அந்த கேரக்டரையே தூக்கி இருக்கலாம்.

4. அனுஷ்கா கில்மா பாட்டு சீன்ல லாங்க் ஷாட்ல யெல்லோயிஷ் ஷேடும் ,க்ளோஷப் ஷாட்ல ரெட்டிஷ் ஷேடும் எதுக்கு?அதெல்லாம் எம் ஜி ஆர் கால டெக்னிக் ஆச்சே?

5. எவண்டி  உன்னைப்பெத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் என்ற சூப்பர் ஹிட் பாடல்இப்படித்தான் பிக்சரைசேஷன் பண்றதா? ஏதோ க்ளப் சாங்க் மாதிரி இருக்கு.இந்தப்பாட்டை பட்டாசு கிளப்ப எடுத்திருக்கலாம்.

6. சிம்புவோட காதல் ஆழமா காட்டப்படல.. ஒரு டூயட் வெச்சிருக்கலாம். கோடீஸ்வரி பொண்ணு குப்பத்துப்பையனை ஏன் லவ்வறா? குப்பத்துப்ப்பையன் ஏன் அப்படி மல்ட்டி மில்லியனர் மாதிரி இருக்கான்? ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.

7. சிம்பு ஒரு சீன்ல  அப்பா டி ஆர் மாதிரி வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி பாட்டை ரீ மிக்ஸ் பண்ணி அவரை மாதிரியே ஆடி இருக்காரு.. அதைக்கூட மன்னிச்சுடலாம். ஆனா அவர் அப்போ செய்யும் ஆபாச சைகை ஓவர். ( சிங்கார வேலன்ல கமல் புதுச்சேரி கச்சேரி பாட்டுல.. பண்ணூவாரே.. அது போல )

8. சோனியாவின் கர்ப்பம் கலைந்ததும் பிரகாஷ்ராஜின் நடிப்பு இயல்பான நடிப்பின் கடைசிப்படியில் இருந்து ஓவர் ஆக்டிங்கின் முதல் படியை தொட்டது ஏன்?

9. பரத் பாடல் காட்சியில் எதுக்கு லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகி எரியுது,.. கண் வலி வந்தது தான் மிச்சம்..

10 ஹீரோ அறிமுகம் மகா சொதப்பல். 10 ரவுடிங்க வந்து அவர் எங்கே என க்கேட்பதும் அவர் உயரமான இடத்தில் இருந்து குதித்து8 ஓடுவதும் அவர்கள் துரத்துவதும் செம போர். ஏற்கனவே ஆர் பாண்டியராஜனின் நெத்தி அடி, ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் படங்கள்ல யும்,. ஜாக்கி சானின் போலீஸ் ஸ்டோரி, ஆர்மர் ஆஃப் காட் ல யும் பார்த்து பார்த்து சலிச்சாச்சு.

பரத் கூட 2 ஃபிகருங்க சுத்துது.. அதுங்க பரட்டைத்தலயோட ஏன் இருக்கு? ஒரு ரப்பர் பேண்டோ,க்ளிப்போ வாங்க கூட வசதி இல்லியா? அய்யோ பாவம்... ஆனா அந்த ஓப்பனிங்க் பாடல்ல  அந்த 2 ஃபிகரும் மழைல நனைஞ்சு ஒரு குலுக்கல் டான்ஸ் போடறாங்களே அடடா..
http://thatstamil.oneindia.in/img/2010/12/30-anushka-2001.jpg

இந்தப்படம் ஏ செண்ட்டர்ல 30 நாட்கள். பி செண்ட்டர்ல 20 நாட்கள், சி செண்ட்டர்ல  10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

 ஈரோடு அபிராமி,ஆனூர்,ஸ்ரீனிவசா,அன்னபூரணி என 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு. நான் அபிராமில பார்த்தேன்

 தியேட்டரில் ... ஒருத்தன்   தனுஷ் ரசிகனா இருக்கும்னு நினைக்கறேன்


எவண்டா  இந்த படத்தை எடுத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான்  செத்தான்  செத்தான்  செத்தான்
என்று பாடி விட்டு செல்கிறான்.. எஹே ஹே ஹேய்

Saturday, April 09, 2011

விகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUXZdasBkREM6X5evceiVKs15rGtSfhLnXrQEjaiaNELbDIX16-CVDtgGFBOq4QomwsEknWTKVJoHJIT5wIaadhL3bfmtTmA-wfRVe4c0sjQQ0Z7SrkZu73KHQsPF2BemhYmUANIj1x-yD/s1600/amala_paul.jpg
''இந்தப் படம் விக்ரமோட விஸ்வரூபம். 'சேது’, 'பிதாமகன்’ படங்களில் அவர் பண்ணி வெச்சிருக்கிற ரெக்கார்டுகளை அவரே இதில் அடிச்சு உடைச்சிருக்கார். கதையும் கேரக்டரும் முடிவானதும் நான் யோசிச்ச ஒரே ஹீரோ... விக்ரம்தான். என்னோட எதிர்பார்ப்பை 100 சதவிகிதம் நிறைவேற்றி இருக்கார். டெல்லியில் தேசிய விருதுக்கு ஆர்டர் சொல்லிரலாம்!'' - சந்தோஷமாகச் சிரிக்கிறார் டைரக்டர் விஜய்.

இப்படிவிருது கிடைக்க்ப்போகும் படம்னு  சொன்னா படம் ஓடாதே....

விக்ரம் நடிக்கும் 'தெய்வத்திருமகன்’ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு நடுவே நடந்தது இந்தச் சந்திப்பு.
1. ''எடை குறைந்து, முகம் மாற்றி இருக்கும் விக்ரம் போட்டோக்களைப் பார்த்தாலே, ஆச்சர்யமாக இருக்கிறதே...''

''இது என் கனவுப் படம். இந்தப் படத்துக்காக நானே ஒரு குழந்தை மாதிரி மாறி இருக்கேன். உங்களையும் ஒரு குழந்தையா மாத்தி, வேறு ஒரு உலகத்தைக் காட்டப் போறேன்.

 அய்யா.. ஜாலி.. அப்போ யாரும் தியேட்டர்ல டிக்கெட்டே எடுக்க வேண்டியதில்லையா? .. ஹி ஹி 


படத்தில் விக்ரமின் மனசின் வயசு அஞ்சு. அந்த வயசுக்கு உண்டான மன வளர்ச்சி மட்டுமே உள்ள ஆளா வர்றார். ஒரு குழந்தைக்கு இருக்கிற அதிகபட்சமான கேள்வி 'பட்டாம்பூச்சிக்கு யார் கலர் அடிச்சாங்க?’ங் கிறதுதானே? அப்படி ஒரு குழந்தைதான் விக்ரம். 

சுத்தி நடக்கிற எதுவும் அவருக்குத் தெரியாது. யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கத் தெரியாது... முடியாது. கள்ளம், கபடம், காமம், பொறாமை, வக்கிரம்னு எதனோட நிழலும் படாமல் சிரிக்கிற ஒரு குழந்தையா வர்றார் விக்ரம். 

அப்படி ஒரு மனசு, உலகத்தில் ரெண்டே பேருக்குத்தான் கிடைக்கும்.  ஒண்ணு... ஞானி. இன்னொண்ணு... குழந்தை. எல்லோராலும் ஞானி ஆக முடியாது. ஆனா, யார் நினைச்சாலும், குழந்தை ஆக முடியும்!


உலகத்தோட அசிங்கங்கள் தெரியாம இருக்கிறவங்களை நாம மன வளர்ச்சி இல்லாதவங்கன்னு சொல்றோம். நான் அவங்களை 'தெய்வத்திருமகன்’னு சொல்றேன்!''

 மோகன்லால் நடிச்ச ஒரு மலையாளப்படம் + அமிதாப் நடிச்ச ஒரு ஹிந்திப்படம் இவற்றின் உல்டான்னு சொல்றாங்களே.. அதை சின்னப்புள்ளத்தனமான குற்றச்சாட்டா நினைச்சுக்கலாமா?  ... 
2. ''கேட்கவே நல்லா இருக்கு... படத்துக்காக நிறைய மெனக்கெட்டு இருப்பீங்கள்ல?'' 

''நானும் விக்ரமும் நிறைய ரிசர்ச் பண்ணினோம். 

 அப்போ படத்தோட ஹீரோயின்ஸ் அனுஷ்காவும், அமலா பாலும் உடன் இருந்தாங்களா?  ஹி ஹி..

மன வளர்ச்சி குன்றிய வங்களோட உலகத்தைப் பார்க்கிறதுக்கு 'உதவும் கரங்கள்’ வித்யாகர் நிறைய உதவி பண்ணினார். விக்ரம் சார், ஒரு மாசம் அவங்களோடு பழகினார். அவர் இல்லைன்னா... இந்தப் படத்தை நான் செய்து இருக்கவே மாட்டேன். அவ்வளவு அழகா அந்த கேரக்டரை உள்வாங்கிட்டார். ஷூட்டிங்கில் நிறைய இடங்களில் நான் கட் சொல்ல மறந்து நிற்கும் அளவுக்கு, நடிப்பைக் கொட்டியிருக்கார் விக்ரம்.

அப்போ படத்துல எடிட்டிங்க்ல கோட்டை விட்டிருக்கீங்களா?


உடல் மெலிஞ்சதால், நிறைய உடல் உபாதைகள் அவருக்கு இருந்தன. பொறுக்க முடியாத தலைவலி வரும்.

ராவணன் படம் பார்த்தப்போ எங்களுக்கு இருந்தா  மாதிரியா? 

விருப்பப்பட்டதைச் சாப்பிட முடியாது. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டார். 14 கிலோ எடை குறைச்சார். அப்படியே அஞ்சு வயசுப் பையனோட பேச்சு, சிரிப்பு, குரல், பாடி லாங்வேஜ்னு அத்தனையும் மாத்தி அவர் வந்து நின்னப்போ... பிரமிச்சுட்டேன்.


இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் விக்ரம் ஒருத்தர். ஒவ்வொரு டைரக்டரும் அவரோடு ஒரு படம் பண்ணணும்கிறது என்னோட வேண்டுகோள்!''



3. ''இதில் அனுஷ்கா - அமலா பால்னு டபுள் தமாக்காவுக்கு என்ன வேலை?''


''நிச்சயமா மூணு ஃபைட், நாலு ஸீன் படம் கிடையாது. 

சீனா?.... ஓ.. ஸீனா?

ஹீரோயின் விஷயத்தில் பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. அனுஷ்கா தமிழில் தொடர்ந்து நடித்தால், சாவித்திரி, ரேவதி, சுஹாசினி அளவுக்குச் சிறந்த நடிப்பைத் தர முடியும். அதற்கான தகுதிகள் அவங்ககிட்ட உண்டு. 

அந்த 3 நடிகைங்க மேல உங்களுக்கென்ன கோபம்?

எல்லாரையும் சிரிக்கவைக்கிற சந்தானம், இந்தப் படத்தில் சிரிக்கவும் அழவும் வைப்பார். படத்தின் இன்னொரு ஸ்பெஷல் ஜி.வி.பிரகாஷ். எங்க கெமிஸ்டரி இதில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கு. குழந்தையா இருக்கிறதைவிட பெரிய சந்தோஷம் உலகத்தில் உண்டா?


நம்ம எல்லாருக்கும் குழந்தையாகும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. 'தெய்வத்திருமகன்’ உங்களை, என்னை, நம்மை இன்னும் அழகாக்கும்னு நம்புகிறேன்!''

நம்புங்க நம்புங்க.. நம்பிக்கை தானே வாழ்க்கை...

Monday, March 28, 2011

எவண்டி உன்னைப்பெத்தான்.. ? அவன் மட்டும் என் கைல சிக்குனான்.. செத்தான்!!!!

http://narumugai.com/wp-content/uploads/2010/10/33876_471562211317_108887661317_6484073_6826200_n.jpg

1. “தலைவர் சென்னைல போட்டி போடாம ஏன் வெளி ஊர்ல போட்டி இடறாரு?”

      “சென்னை ஃபிகர்ஸை பார்த்து போரடிச்சுடுச்சாம். வெரைட்டியா ஸைட் அடிக்க ஐடியா பண்ணீட்டாரு”


------------------------------------------------

2.   “தலைவர் ஜெய்க்கபோறது உறுதி-னு எப்படி சொல்ற?”

       “செய்யும் ஊழலில் 50% மக்களுக்கு ஷேர் தர்றேனு சொல்லீட்டாரே?”


--------------------------------------------------------

3.    “தலைவர் ஏன் தனிக்குடித்தனம் வந்திருக்காரு?”

       “அவரு இந்த எலக்‌சனை புறக்கணித்ததா அறிவிச்சதும் அவரோட சம்சாரம் அவரை புறக்கணிச்சுடுச்சாம்”


--------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD3rMCCt_qH2GSwook6WXZ9gSfP4p_Sx3EqNRXjB1IDf144FjGbi5FaHt6f7nPw-RL7bU2xC-oFmCdvSkPTf10dN3Ky0FCegV50KordYwffGQDEHvVMSgDC1PRx7GySIfAZ-BGcjT49xxS/s1600/anushka_1.jpg
4.   “தலைவர்க்கு சொந்தமா வலைப்பூ(BLOGSPOT) ஆரம்பிக்கலாமா-னு கேட்டது தப்பாப் போச்சு?”

       ‘’ஏன்?”

பூ லேடீஸ் வச்சுக்கறது, வலை மீனவர்கள் வச்சுக்கறது எனக்கு எதுக்கு இதெல்லாம்? அப்படீனுட்டாராம்”

--------------------------------------------------



5.  “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நமது கிரிக்கெட் அணி தவற விட்ட உலகக் கோப்பையை வெற்றி பெற்ற அணியிடமிருந்து நைசா அபேஸ் பண்ண ஆவண செய்யப்படும்”

---------------------------------------------------------



6.   “தலைவர் ஏன் மிரண்டுபோய் நிக்கறாரு?”

      “எவண்டா உன்னை எலக்‌ஷன்ல நிக்க சீட் குடுத்தான்... அவன் மட்டும் என் கைல கிடைச்சா அவன் செத்தான் அப்படினு மக்கள் திட்டுனாங்களாம்”

--------------------------------------------
http://narumugai.com/wp-content/uploads/2010/10/Anushka-1.jpg

7.    “தலைவர் பிரச்சாரத்துக்காக நெட்ல பிளாக்ஸ்பாட் ஆரம்பிச்சது தப்பா போச்சு”

        “ஏன்?”

      “அவர் மேல பிளாக் மார்க் விழுந்துடுச்சு”

-----------------------------------------------------


8.   “எல்லா தொகுதிலயும் தனியா போட்டி இடுவேன் -னு அறிவிச்ச தலைவர் ஏன் வாபஸ் வாங்கிட்டார்?”

        “234 வேட்பாளர்கள் கிடைக்கலையாம். மொத்தமே 63 பேர் தான் கட்சில இருந்தாங்களாம்”.

-----------------------------------------



http://narumugai.com/wp-content/uploads/2010/11/Sneha-ullal12.jpg

9.    “நம்ம தலைவர்க்கு தேர்தல் ஜுரம் பிடிச்சிருக்கு .....”

       “இப்பவே இப்படீன்னா.. தேர்தல் ரிசல்ட் வந்தா அவ்ளோதான் போல...”





----------------------------------------------------------

10.    “தலைவர்க்கு இன்னும் சின்னம் ஒதுக்கல போல...?”

         “ஆமா...போற போக்க பார்த்தா அவரையே ஒதுக்கீருவாங்க போல”









-----------------------------------------------------------------


டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல இருந்து நாம கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா மஞ்சள் கலர் டிரஸ் போடறவங்க எல்லாம் டி எம் கே கிடையாது...அதே மாதிரி மேட்சுக்கு மேட்ச்  வளையல் போடற பொண்ணுங்க வலது கைல கரெக்ட்டா மேட்சிங்கா போட்டாலும், இடது கைல சொதப்பிடுவாங்க..ஜெ  கேப்டனுக்கு கரெக்ட்டா சீட் குடுத்துட்டு, வை கோ  மேட்டர்ல சொதப்புன மாதிரி......


டிஸ்கி 2 - அனுஷ்காவோட ரெண்டாவது ஸ்டில்லைப்பார்த்துட்டு நான் இரட்டை இலை ஆதரவாளன்னு யாரும் முத்திரை குத்தாதீங்க.. வேணும்னா அனுஷ்கா ஆதரவாளன்னு சொல்லிக்குங்க.. ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ( எனக்கு என்ன பிரச்சனை..? அனுஷ்காவுக்குத்தான் பிரச்ச்னை..) தி மு க காரங்க வெற்றிலை = வெற்று + இலை எனவும், அதிமுக காரங்க வெற்றி + இலை எனவும் அர்த்தம் கற்பிப்பாங்க...நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.. அனுஷ்கா மேல் படர்ந்த வெற்றிலைக்கொடி  அடையாளத்துக்கு 2 இலையை விட்டுட்டு போயிடுச்சு போல,.....#கவிஞண்டா...


டிஸ்கி 3 - அனுஷ்காவோட 3 வது ஸ்டில்லைப்பார்த்துட்டு கம்யூனிஸ்ட்னு நினைச்சுடாதீங்க.. எனக்கு அந்த ஸ்டில்லைப்பார்த்தா பாப்பாவுக்கு வளையல் டேஸ்ட்டே இல்லைன்னு தோணுது.. (வளையல் எப்படி டேஸ்ட்டா இருக்கும்? #டவுட்டு)  அழகா ரெண்டே ரெண்டு வளையல் போட்டாத்தான் நல்லாருக்கும்.. இப்படியா கரகாட்டக்காரி மாதிரி போடறது..?


டிஸ்கி 4  - கடைசி படத்துல இருக்கற ஃபிகரு பேரு சினேஹா.. நம்ம ரெகுலர் சினேகா இல்ல ( ரெகுலர் சினேகா = ரெகுலரா நாம பார்க்கும் சினேகா ஹி ஹி )

வானம் படத்துல வர்ற இன்னொரு ஹீரோயின்.. படத்துல அவங்க போட்டிருக்கற  டி சர்ட் வாசகம் என்ன? னு தயவு செஞ்சு யாரும் உத்து பார்க்காதீங்க.. ஏன்னா 2 மணி நேரமா பார்த்த ராம்சாமிக்கே அது என்ன?னு தெரியலையாம்...

டிஸ்கி 5  - டைட்டிலுக்கான விளக்கம் .. வானம் படத்துல சிம்பு இயற்றி பாடி உள்ள அந்த பாடல் வரிகளின் பல்லவிக்கு பெண்கள் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கறாங்களாம்.. அப்போ நியாயமா நாம என்ன பண்னனும்? ஹி ஹி அதே..... ஆதரிக்கனும்.. ஹி ஹி

Monday, February 21, 2011

கில்மா பட ரசிகர்களே... உஷார்.. 18+

http://www.tamilmasalaa.com/wp-content/uploads/movies/Vambu/Vambu-Movie-Stills-09.jpg 
ஈரோடு பாரதி தியேட்டர்ல ஒரு சீன் படம் போட்டிருக்காங்க. படத்தோட பேரு வம்பு அப்படின்னு ஒரு தகவல் வந்தது..சரி.. முதல்ல போஸ்ட்டரை பார்ப்போம்.. திருப்தியா.(!??) இருந்தா படத்துக்கு போலாம்னு மேனேஜர்ட்ட ஃபீல்டுக்கு போறேன் சார்னு சொல்லீட்டு பைக்கை எடுத்து கிளம்புனேன்.

பஸ் ஸ்டேண்ட் வந்து போஸ்டரை தேடுனேன். கண்ணுல சிக்குச்சு. அனுஷ்கா &; ப்ரியாமணி கவர்ச்சியில் கலக்கும் படம்னு விளம்பர வாசகம் சொல்லுச்சு.போஸ்டரும் நல்லாத்தான் இருந்துது. பொதுவா சீன் படத்து போஸ்டர் எப்பவும் நல்லாத்தான் இருக்கும். போய் பார்த்தாதான் அப்புறம் தெரியும்..

சாதாரண தமிழ்ப்படத்துல இருக்கற சீன் கூட சில சமயங்கள்ல இந்த மாதிரி சீன் படத்துல இருக்காது.சரின்னு ஃபோனைப்போட்டேன்.சினி ஃபீல்டுல இருக்கற ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரு.விவரத்தை சொன்னேன். அவரு உடனே அவருக்கு தெரிஞ்ச டீட்டெயிலை எடுத்து விட்டாரு.
 http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/02/Vambu-Movie-Stills-37-300x196.jpg
ஆந்திராவுல வெளி வந்து ஹிட் ஆகி ஓடிட்டு இருக்கற ரகடா என்ற படத்தின் டப்பிங்க் படம் தான் தமிழ்ல வம்பு என ரிலீஸ் ஆகி இருக்கு. நாகார்ஜூன் தான் ஹீரோ. ஆனா போஸ்டர்ல அவரைக்காணோம். அவரை ஸ்டில்லுல போட்டா நம்ம ஆட்கள் உஷார் ஆகிடுவாங்கன்னு புத்திசாலித்தனமா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பேசி வெச்சு இந்த மாதிரி அனுஷ்கா ,நமீதா ஸ்டில் மட்டும் போஸ்டர் அடிச்சு கல்லா கட்ட பார்த்திருக்காங்க.
கதை வழக்கமா நம்ம விஷால் பட கதை தான். சென்னையை ஆட்டி வைக்கும் ஒரு தாதா வை மதுரைல இருந்து வர்ற ஹீரோ ஆட்டிப்படைக்கிறார். (ஹூம்.. இது மாதிரி இன்னும் எத்தனை  படங்கள்ள்ல ஏமாத்துவீங்க?)
உடனே பைக்கை எடுத்தேன், அடிச்சேன் ஒரு யூ டர்ன். ஆஃபீஸ்க்கே ரிட்டர்ன். போன மச்சான் திரும்பி வந்தான்.

http://chennai365.com/wp-content/uploads/movies/Vambu/Vambu-Movie-Stills-10.jpg
எனது 301-வது பதிவு ஒரு சமுதாய விழிப்புணர்வா அமைஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.இதுல என்ன விழிப்புணர்வு?ன்னு கேட்கறவங்களுக்கு எத்தனை பேரோட பணம் மிச்சம் ஆகுதே.

உதாரணமா இந்த பதிவை படிக்கறவங்க 1000 பேர்னு வெச்சுக்குங்க. அதுல 200 பேராவது இந்தப்படத்துக்கு போலாம்னு நினைச்சிருப்பாங்க. ஒரு டிக்கெட் விலை ரூ 40 என வைத்துக்கொண்டாலும் ரூ 8000 லாபம்.

சினிமா ரசிகர்களின் பாக்கெட்டை பத்திரப்படுத்திய பணியில் அட்ரா சக்க திருப்தி அடைகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrRZ0efXMtDqRxEFhmyqviCo3kBRtNvcSUbBKn2_QacTutQpZqydcXMyHUayndgG0ejTRN5qYTMyRrPcCfX34q2od12EcksZDcEIughVY_-RI9uUXoz0H6_ERuzGPZL7Qo8fq9jYghtHGt/s1600/vambu_movie_hot_stills_pics_photos_10.jpg

டிஸ்கி 1 -  அனுஷ்கா ஏன் எப்போதும்  ஜாக்கெட் அணியும் போது கை இல்லாத ஜாக்கெட்டாவே அணிகிறார் என ஆராய்ந்ததில் கிடைத்த தகவல் அவர் காங்கிரஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டி.அதனால்தான் ரவிக்கையில் கை கட் ஆகி ரவிக் மட்டும் இருக்கிறது.

டிஸ்கி -2 -மேலே இருக்கும் ஸ்டில்ஸைப்பார்த்து போதுமே .. இந்த அளவு சீன் இருந்தாலே என நினைக்கும் மினிமம் பார்ட்டி முனீஸ்வரன்களுக்கு.. தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஆடியன்ஸிடமும் விசாரித்து விட்டேன்.. ஸ்டில்லில் உள்ளவை எல்லாம் ஸ்டில்லுக்கு மட்டும்.இதையும் மீறி படத்துக்கு போய் ஏமாந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி 3 - 2011 ஃபிப்ரவரி மாதத்தின் சிறந்த சினிமா சமூக விழிப்புணர்வுப்பதிவர்னு யாராவது விருது குடுத்தா அதை கலைஞர் மாதிரி எந்த கூச்சமும் இல்லாம வாங்கிக்க தயாரா  இருக்கேன்.

Monday, August 02, 2010

VEDAM- சினிமா விமர்சனம்

  1. வேதம் என்ற அழகான தெலுங்குத் தலைப்புக்கு தேகம் என கிளுகிளுமொழிபெயர்ப்பு செய்த அந்த தமிழறிஞர் யார் என சரியாகத்தெரியவில்லை.அநேகமாக மழு என்ற மலையாள டைட்டிலுக்கு மாமனாரின் இன்ப வெறி என்றும்,ரதி என்ற  மலையாள டைட்டிலுக்கு பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்றும் மொழி பெயர்த்த புண்ணியவானின் வழித்தோன்றலாகவும் இருக்கலாம்
  • இப்பவே சொல்லிடறேன்,அஞ்சரைக்குள்ள வண்டி டைப் படம் அல்ல இது.ராக் ஸ்டாராக ஆசைப்படும் மிலிட்டரி குடும்பத்து பெங்களூர்கார இளமை துள்ளும் இளைஞன்,மருமகளின் கிட்னியை விற்க ஹைதராபாத் வரும் ராமுலு,சொந்தமாக தொழில்(!) செய்ய ஆசைப்பட்டு,  ஹைதராபாத் வருகிற. அயிட்டம் அனுஷ்கா,தன் தகுதிக்கு மீறி மிகப்பெரிய பணக்கார பெண்ணை தானும் பணக்காரன் என்று நம்ப வைத்து எப்படியாவது அவளை திருமணம் செய்ய ஆசைப்படும் பேராசைக்காரன்.,ஹைதராபாத்தில் நடந்து ஒரு ஹிந்து ஊர்வலத்தில் தன் நிறைமாத கர்பிணியின் கர்ப்பம் கலைந்து, இனிமேல் இந்தியாவில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து துபாய் போக விசா எல்லாம் ரெடியாகி, ஹைதராபாத்திலிருந்து கிளம்ப வருகிற ஒரு முஸ்லிம் இந்த 5 பேரும் ஒரு ஹாஸ்பிடலில் சந்திக்க நேரிடுகிறது.

  • இவர்கள் ஐந்து பேரும் வ்ந்து சேரும் இடமான மருத்துவமனையை, தீவிரவாதிகள் வளைத்து, கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ள,படம் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கே உரிய ஸ்பீடோடு சூடு பிடிக்கிறது.
  •  
  • சீன் படம் என்று நினைத்து வந்தவர்கள் கூட படத்தோடு ஒன்றி விடும் அளவுக்கு திரைக்கதை செம ஃபாஸ்ட்.. .
  •  
  • இன்னொரு முக்கியத்தகவல்,இந்தப்படத்தைத்தான் சிம்பு நடிக்க வானம் என தயாராகிறது.
  •  
  • நான் ஒரு டிஸ்ட்ரிபியூட்டரிடம் கேட்டேன்,போஸ்டரில் அனுஷ்கா விபச்சார அழகியாக நடிக்கும்னு போட்டு விளம்பரம் பண்ணியதுக்குப்பதிலா ,சிம்புவின் வானம் இதன் ரீமேக்தான் என விளம்பரம் பண்ணி இருக்கலாமே என. அதற்கு அவர் “தம்பி,30 வருஷம் இந்த சினி ஃபீல்டுல பழம் தின்னு கொட்டை போட்டவன் ,எனக்கு தெரியாதா?அனுஷ்கா ரசிகர்களும் வருவாங்க,பிட் பட ரசிகர்களும் வருவாங்க .ஒரே கல்லுல 2 மாங்கா என்றார்.

 
உலகத்திலேயே அனுபவம் குறைவுன்னா அதிக பணம் சம்பாதிகிற்து நம்ம தொழில் தான்” எனறு அனுஷ்கா டயலாக் பேசும்போது கைதட்டல் தியேட்டரை நிரப்பி விடுகிறது. 

அல்லு அர்ஜுன் தான் பணக்காரன் என்று காட்டிக் கொள்ள, அவ்வப்போது சட்சட்டென ப்ரெசென்ஸ் ஆப் மைண்டுடன் பொய் சொல்வதும், பணத்தை திருடப் போகும் போது குறுக்கே அழைக்கும் குழந்தையை கவனிக்காமல் இருப்பவர், பணத்தை திரும்ப திருடிய இடத்திலேயே வைத்தது விட்டு திரும்பி வரும் போது அந்த மழலையிடம் நிம்மதியாக விளையாடும் இடத்தில்  தான் ஒர் சிறந்த நடிகர் என்பதையும் நிருபித்திருக்கிறார்.

மணிரத்னத்தின் திருடா திருடா படத்தில் வருவது போல் எல்லா கேரக்டர்களும் ஓடிக்கொண்டே இருப்ப்து நல்ல ஸ்பீடுக்கான லீட்,

பணத்தை அபகரிக்கும்போது சரண்யாவின் மாமனாரின் நடிப்பு மிக அருமை.


5 கேரக்டர்களும் ஒரே புள்ளியில் சந்திக்கும் வரை சாதாரண ரசிகனுக்கு கொஞ்சம் பொறுமை தேவை.அதற்குப்பிறகு படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது.

பாடல் வைக்க பல இடங்களூம் ,வாய்ப்பும் இருந்தும் டைரக்டர் தவிர்த்திருப்பது புத்திசாலித்தனம்.அனுஷ்கா அச்சு அசல் டிக்கெட் மாதிரியே நடித்து (அது எப்படி எனக்கு தெரியும் என சந்தேகம் கூடாது,ஒரு கேள்வி ஞானம்தான்)அப்ளாஸ் பெறுகிறார்.எனக்கு தெரிந்து தனம் பட சங்கீதாவுக்குப்பிறகு இந்த மாதிரி கேரக்டரில் வெளுத்து வாங்குவது நம்ம(!)
அஸ்கா அனுஷ்காதான்.


டிஸ்கி -போஸ்டரில்” என்னை ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்”  என அனுஷ்கா கூறுவது போல் ஒட்டி இருந்ததுதான் செம காமெடி