Showing posts with label திரை விமர்சனம. Show all posts
Showing posts with label திரை விமர்சனம. Show all posts

Sunday, April 26, 2015

கங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )

சர்ச்சைகளுக்குப் பேர்போன இயக்குநர் சாமி இந்த முறை அண்ணன் - தங்கை பாசத்தைக் கையாண்டிருக்கிறார். அண்ணன் - தங்கை பாசத்தைப் பல கோணங்களில் அணுகிய தமிழ் சினிமாவில் ‘கங்காரு’ வின் பாசம் எப்படி எனப் பார்க்கலாம்.
ஒரு வயதுத் தங்கையை மார்போடு அணைத்துக்கொண்டு அந்த மலையூருக்கு வந்து சேர்கிறான் பத்து வயது முருகேசன். அம்மா, அப்பாவை இழந்து நிராதரவாக நிற்கும் அவனுக்கு ஒரே பிடிமானம் தங்கை அழகு (ஸ்ரீ பிரியங்கா). இவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் அந்த ஊரின் சிறு வணிகர் கருப்பசாமி (தம்பி ரமைய்யா), தங்கையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் பாசத்தைப் பார்த்து அவனை ‘கங்காரு’ என அழைக்க ஆரம்பிக்கிறார். ஊரும் அதையே பிடித்துக் கொள்கிறது. அண்ணனும் தங்கையும் வளர்ந்து ஆளாகிறார்கள்.
தங்கை ஒருவனைக் காதலிக்கிறாள். அவனை மணம் முடிக்க நினைக்கும் போது அவன் மர்மமாக இறந்துபோகிறான்.ஒரு இடைவெளிக்குப் பிறகு மற்றொரு மாப்பிள்ளையைப் பேசி முடிக்கிறார்கள். அவனுக்கும் அகால மரணம் சம்பவிக்கிறது. அதற்கு மேலும் அந்த ஊரில் அவர்கள் வசிப்பது நல்லதல்ல என எண்ணும் விஸ்வநாதன் (ஆர். சுந்தரராஜன்) பக்கத்திலிருக்கும் தனது ஊருக்கு அண்ணன்–தங்கையை அழைத்துச் செல்கிறார்.
ஆதரவு கொடுத்த உரிமையில் தனது உறவுக்காரப் பையனுக்கு முருகேசனின் தங்கையைத் திருமணம் செய்துவைக்கிறார். இம்முறை அவளது கணவனை அடையாளம் தெரியாத நபர் தாக்கிக் கொல்ல முயற்சிக்கிறார். அழகுவைத் திருமணம் செய்துகொள்ள இருந்தவர்கள் அடுத்தடுத்து இறந்துபோனதன் பின்னணியைக் கிளற ஆரம்பிக்கிறது காவல்துறை. அழகுவின் வாழ்க்கையில் விளையாடியது யார் என்று துப்பு துலங்கியதா என்பதுதான் கங்காருவின் கதை.
‘அசைவ’க் காட்சிகளோ இரு பொருள் வசனங்களோ இல்லாமல் படத்தை இயக்கியதற்காகவே இயக்குநர் சாமியைப் பாராட்ட வேண்டும். ஆனால் திரைக்கதை பின்னிய விதத்தில் பெரும் சறுக்கல். முதல் பாதியில் புதுமையோ சுவாரஸ்யமோ இல்லாத தங்கையின் காதலும், தம்பி ராமையா - கருப்பு கூட்டணியின் வறண்ட நகைச்சுவையும் கழுத்தை அறுக்கின்றன.
இரண்டாம் பாதியோ அதற்கு நேர் மாறாகப் பரபரவென்று நகர்கிறது. அதற்குக் காரணம், கதையின் மையமாக இருக்கும் ப்ளாஷ்பேக் கதையும், காவல் ஆய்வாளர் சாமியின் விறுவிறு புலன் விசாரணையும். ப்ளாஷ் பேக் காட்சியில் முருகேசனின் தங்கையான அழகு அவனது உடன்பிறந்த சகோதரியா என்பதில் இயக்குநர் வைத்த திருப்பம் நெகிழ வைக்கிறது.
அதீத பாசம் எந்த எல்லைக்கும் பயணிக்கும் என்ற இயக்குநரின் பார்வையும், அது மனப் பிறழ்வாக மாறுவதை எளிமையாக விளக்கியதும் நச்சென்று இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான காட்சிகள் நாடகத் தன்மையுடன் கச்சாவாகச் சித்தரிக்கப்பட்டிருப் பது காட்சியுடன் ஒன்றவிடாமல் தடுக்கிறது.
‘கங்காரு’ முருகேசனாக நடித்திருக்கும் அர்ஜுனா, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் எல்லாக் காட்சி களிலும் முறுக்கிக் கொண்டு திரிவது ஒரு கட்டத்தில் மிகை நடிப்பாக மாறிவிடுகிறது. முருகேசனின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்ரீ பிரியங்கா தவிப்பான தங்கையாக நடிப்பில் கவர்கிறார், காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் இயக்குநர் சாமியும் அலட்டல் இல்லாமல் தன் அடையாளத்தைப் பதிக்கிறார். வர்ஷா படத்தின் வசீகரத்தைக் கூட்டப் பயன்பட்டிருக்கிறார்.
படத்தில் தனித்துத் தெரியும் அம்சம் பாடகர் ஸ்ரீனிவாசின் இசை. எல்லா பாடல்களும் கேட்கும்படி இருக்கின்றன. ஸ்வேதா மேனன் பாடியிருக்கும் ‘பேஞ்சாக்க மழைத்துளியோ மண்ணோடு’ என்று தொடங்கும் பாடலின் இசையும் வைரமுத்துவின் வரிகளும் அதைப் புதிய காதல் கீதமாக ஒலிக்க வைக்கின்றன. இந்தப் பாடலைப் படமாக்கிய விதத்தில் ஒளிப்பதிவாளர் ராஜரத்னம் கவர்கிறார்.
இரண்டாம் பாதியில் திரைக்கதையில் காட்டியிருந்த வேகத்தை முதல் பாதிக்கும் கொடுத்திருந்தால் கங்காருவின் பாய்ச்சல் இன்னும் வேகமாக இருந்திருக்கும்.


நன்றி -த இந்து

Friday, July 15, 2011

தெய்வத்திருமகள் - கொஞ்சி மகிழ ,நெஞ்சம் நெகிழ - சினிமா விமர்சனம்

-- http://mimg.sulekha.com/tamil/deiva-thirumagan/wallpaper/800-600/deiva-thirumagan-download-wallpapers-048.jpgஇந்த உலகில் உள்ள மனிதர்களில் நல்லவனோ,கெட்டவனோ,இரண்டும் கலந்த சராசரியோ  ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் ஒளிந்திருக்கும்.ஆனால் அது எல்லா நேரங்களிலும் வெளிப்பட்டுவிடாது.தன் மீது அன்பு கொண்ட உள்ளம் அருகில் இருந்தாலோ,தான் மிக அன்பு வைத்த இதயம் பக்கத்தில் இருந்தாலோதான் வெளிப்படும்.ஆனால் இந்தப்படம் பார்க்கும்போது யாரும் அருகில் இல்லாமலேயே உங்கள் குழந்தைத்தனம் கண்ணீராக உங்கள் விழி வழியே வெளிப்படும்...

மனநலம் குன்றிய தந்தை ஒரு குழந்தையை வளர்த்த முடியுமா?தாய் இல்லா அந்த குழந்தையை அவன் பராமரிக்க சட்டத்தில் இடம் இருக்கா? இது தான் படத்தின் மையக்கரு.. (I AM SAM பட தழுவல்)

சிப்பிக்குள் முத்து கமல் நடிப்பைப்பார்த்து பிரமித்தவர்கள் எல்லாருமே  சொன்ன ஒரு கருத்து இது போல் ஒருவர் நடிக்க இனி பிறக்க வேண்டும் என்பதே.. விக்ரம் ஏற்கனவே பிறந்து விட்டதை அறியாமல்.... 

பாடிலேங்குவேஜ்ஜிலும் சரி, ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸனிலும் சரி விக்ரம் தன் அடுத்த தளத்துக்கு போய் விட்டார் என்று தாராளமாக சொல்லலாம்.. காசி ,,அந்நியன் படத்தை விட இந்தப்படத்தில் அவருக்கு ஹெவி ஒர்க். மனிதர் சும்மா பிரிச்சு மேஞ்சுட்டார்...

வக்கீலாக வரும் அனுஷ்கா விதி படத்தில் வரும் சுஜாதா அளவு கம்பீரம் காட்ட முடியாததற்குக்காரணம் அவர் முகத்தில் தொட்டுத்தெறிக்கும் இளமை +அழகு.. முடிஞ்ச வரை சமாளிக்கிறார்..

விக்ரமின் குழந்தைக்கு சித்தியாக வரும் அமலாபால் பண்பட்ட நடிப்பு.. ஓப்பனிங்க்கில் அவர் தான் தான் பள்ளியின் கரெஸ்பாண்டண்ட் என்பதை மறைத்து குழந்தையிடம் பழகுவதிலும்,பின் கண்ணீர் விடுவதிலும் ஈசியாக டேக் ஆஃப் ஆகிறது அவர் நடிப்பு.

அந்தக்குழந்தை..... பொதுவாக சினிமாவில் வரும் குழந்தை நட்சத்திரங்கள் ஓவர் புத்திசாலித்தனத்துடன், வரம்பு மீறிப்பேசும் இயல்பு கொண்டதாக படைக்கப்படும். (உதா - பேபி ஷாலினி )ஆனால் இந்த பேபி கனகச்சித நடிப்பு.. பல காட்சிகளீல் விக்ரம்க்கு இணையான துடிப்பு.. வெல்டன் பேபி..

ஒளிப்பதிவும் ,இசையும் இந்த மாதிரி சாஃப்ட் ஸ்டோரிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இயக்குநர் மிகச்சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.. 

ரொம்ப சோகமாக தாக்கக்கூடாது என்பதற்க்காக சந்தானம், எம் எஸ் பாஸ்கர்.. லைட்டா காமெடி....


http://mimg.sulekha.com/tamil/deiva-thirumagan/stills/deiva-thirumagan-images-099.jpg
படத்தில் வசனகர்த்தா  நினைவில் நின்ற இடங்கள்


1. வக்கீல் சார். ஒரு கொலைக்கேஸ்... 

சந்தானம் - எத்தனை கொலை செஞ்சே நீ?


ஒரே ஒரு கொலைதான். எனக்காக வாதாடி தோத்துப்போன என் வக்கீலை.. 

சந்தானம் - அய்யோ ,சாரி. ஐ ஆம் நாட் எ லாயர்.. டீக்கடை நாயர்.


2.  சந்தானம் - ஹலோ,அனுவா. ஒரு கேஸ் சிக்கிடுச்சு. கம் குயிக்... 

நான் கோர்ட்ல இருக்கேனே?

வாதாடிட்டா இருக்கே? வாதாடறவன் வாயைத்தானே பார்த்துட்டு இருக்கே?

3. சந்தானம் - சென்னைலயே ஸ்வெட்டர் போட்டுட்டு சுத்தறான்னா இவன் எவ்வளவு பெரிய பணக்காரனா இருப்பான். ஏஸிலயே வளர்ந்தவன் போல..


4. சந்தானம் - இது ரொம்ப அவசரமான கேஸ்.. இன்று மத்தியானத்துக்குள்ள டைவர்ஸ் வேணூம்.

5. சந்தானம் - ஹூம், ஒழுங்கா படிக்காததனால கண்ட பொண்ணுங்களூக்கெல்லாம் ஜூனியரா வேலை பார்க்கவேண்டி இருக்கு. 

6. சந்தானம் -இது கோர்ட்டா? இல்லை,மெண்ட்டல் ஹாஸ்பிடலா?ஒரே லூஸா சுத்திட்டு இருக்குதுங்களே?


7. குழந்தை அழுதுட்டு இருக்கே. நீ என்ன பண்ணீட்டு இருக்கே?

ம் ம் .. என்ன பண்னனும்?

3 மணி நேரத்துக்கு ஒருக்கா பால் தரணும்.. 

8.  அய்.. பாப்பா. இனிமே இதை யார் பாப்பா? ( பார்த்துக்குவா?-MAINTAIN)

9.ஒவ்வொரு சாக்லேட் பேக்லயும் ஒரு கிலோவுக்கு 50 கிராம் குறையுது எப்படி?

ம் . ம் அது வந்து ஊட்டி வெய்யில்லுக்கு உருகி இருக்கும். 

10. அண்ணே.. சம்பவம் நடக்கறப்ப்ப சம்பந்தப்பட்ட 2 பேருல யாரோ ஒருத்தருக்கு விபரம் தெரிஞ்சா போதாது.?

11. என்னது? உன் குழந்தை உன்னை அப்பான்னு சொல்லுதா?இப்போ என்ன அமிதாப்பச்சன்னா சொல்லிச்சு..?எந்தக்குழந்தையும் புதுசில அம்மா,அத்தைன்னு தான் சொல்லும். 

12. அப்பா. அம்மா எங்கே?

சாமிக்கிட்டே..

ஏன்?சாமிக்கு அம்மா இல்லையா?

நல்லவங்களை சாமி தன் கூடவே வெச்சுக்கும்.

அப்போ நாம நல்லவங்க இல்லையாப்பா?

13. அப்பா./ யானை ஏன்பா பெரிசா இருக்கு?

நிறைய தீனி சாப்பிடுதே?

சூரியன் ஏன் ரொம்ப தொலைவில இருக்கு?

அது ரொம்ப ஹைட்டான இடத்துல இருக்கே?

14. நீ படிச்சுப்பெரிய பொண்னா ஆனா டாக்டர் ஆகனும். 

நான் ஏன் டாக்டர் ஆகனும்?

டாக்டர் ஆனாத்தான் அப்பாவை நல்லபடியா பார்த்துக்க முடியும். 

ஏன்? டாக்டர் ஆகலைன்னா அப்பாவை பார்த்துக்க முடியாதா?

15. கரஸ்பாண்டண்ட்னா என்ன?

ம். பெரிய மிஸ்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBk8WNhGKLwsFy3uQO3ncYJzR1azm3N5e4aMMuS9JWaxJlu6_i4FgbHpOaeJlA-zywIV7UNiGrsD9_VLdXiqG_8XIGIez8oPfkI_iiE_0TpNQ4ktftvImYfDeAo0c9l-cQ_OgxeTqaGnfz/s640/Amala+Paul.jpg

16. ரம்யா மிஸ் சின்ன டைனோசர். கரஸ்பாண்டண்ட் பெரிய டைனோசர்


17. அப்பா. நீயும் அம்மா மாதிரியே என்னை விட்டுட்டுப்போயிடுவியாப்பா?


18. அப்பா. இனிமே என்னைக்காணோம்னா அந்த நிலா கிட்டே சொல்லிடு.. அந்த நிலா என் கிட்டே சொல்லிடும். 

19. அப்பா. உனக்கு கதை சொல்லத்தெரியுமா?

நிறைய தெரியும். ஆனா நாளைக்கு சொல்றேன். ஹி ஹி

20.சந்தானம் - இந்தக்காலத்துல பொண்ணூங்க எல்லாம் எங்கேடா அறிவைப்பார்க்கறாங்க? இவனை மாதிரி ஒருத்தன் சிக்குனாப்போதும்னு தானே பார்க்கறாங்க. 

21. நிலா எப்போ வரும்?( விக்ரம் குழந்தையின் பெயர் நிலா)

சந்தானம் - ம் அமாவசைக்கு அடுத்த நாள்

22. எங்கே என் சம்சாரத்தை காணோம்?

யோவ்.. இப்போத்தானே 2 பேரும் போனாங்க? அதுக்குள்ள வர முடியுமா?

23.மன நல வளர்ச்சி குறைஞ்சவங்க கிட்டே குழந்தை வளரலாம்னு எந்த சட்டமும் இல்ல. 

24. மணி என்ன? நிலா எப்போ வருவா?

சந்தானம் - சொன்னா மட்டும் புரிஞ்சிடப்போகுதா?நிலாவுல கால் வெச்ச நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் கூட இத்தனை தடவை நிலா பேரை சொல்லி இருக்க மாட்டான். 

25. சந்தானம் -ஏய். அனு. கோர்ட்ல நீ அடுக்கடுக்கா சொன்ன பொய்யைப்பார்த்து எனக்கே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.

26. அனுவை விட்டு என்னால இப்போதைக்கு வர முடியாது. 

ஏன்? அவ கிட்டே அவ்வளவு அட்டாச்மெண்ட்டா?
இல்லை. 5 மாச சம்பள பாக்கி.. 

27. சந்தானம் - இவரு பெரிய மியூசிக் டைரக்டரு. கையை ஆட்டாம பேச மாட்டாரு. 

28. வக்கீல் கிட்டேயும் ,டாக்டர் கிட்டேயும்  பொய் சொல்லக்கூடாது,ஆனா வக்கீலும் டாக்டரும் தாராளமா பொய் சொல்லலாம்.


29. அட.. 2 தடவை கேட்டதுக்கே இவ்வளவு டென்ஷனா?

2000 தடவை அவன் நிலான்னு சொன்னதை கேட்டுட்டோம்.. 


30. மன வளர்ச்சி குன்றியவங்க கூட பழகறவங்க எல்லாரும் மன வளர்ச்சி குன்றியவங்கன்னு சொல்லிட முடியுமா யுவர் ஆனர்?

31. அமலா பால் - என் அக்காதான் எனக்கு அம்மாவா இருந்தாங்க.. சோ அவ குழந்தைக்கு நான் அம்மாவா இருக்க ஆசைப்படறேன்.. நீ என் கூட கடைசி வரை இருப்பியோ இல்லையோ தெரில. ஆனா நான் அவ குழந்தை கூட கடைசி வரை இருக்கனும்னு ஆசைப்படறேன்

32. நீ அவரை சீரியஸா எடுத்துக்காதே.. அவர் வராத மழைக்கு வானிலை அறிக்கை சொல்லிட்டு இருப்பாரு..

33. நல்லவங்களூக்கு நிறைய சோதனை வரும்,ஆனா ஜெயிச்சுடுவாங்க.. 

34. அப்பா எங்கே?

அவருக்கு உடம்பு சரி இல்லை.. 

பொய்.. 

இப்போ எதுக்கு அப்பாவை கேட்கறே? ஏன்? நாங்க இல்லை?

ஏன்? நீ உங்கப்பா கூட இருக்கறப்ப நான் என் அப்பா கூட இருக்கக்கூடாதா?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7fXa6aut_X2cyzwzUkcf4CVzsuzloEsi5g0R4WKW2r6opIkWRL08ySHx-NQKgDF2ILjoHLyWpQ0nMGwLiF15EQQa2woT27pVjSRZ5VRM6SLZoYdibeuc0vnB8ofjGgl6hWq3m-mlbna0/s1600/amala_paul+%25284%2529.jpg
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கதையின் போக்கு உணர்ந்து அப்பா மகள் பாசத்துக்கு மட்டும் ஏற்றாற்போல திரைக்கதை அமைத்தது. தேவை அற்ற காமெடி,ஃபைட்,  தவிர்த்தது

2. அமலாபால், அனுஷ்கா,பேபி,விக்ரம் 4 பேரிடமும் மேக்சிமம் நடிப்பை வாங்கியது..

3. விக்ரம்-அனுஷ்கா பாடல் காட்சியில் மழையில் இருவரும் சென்றாலும் இருவர் மட்டும் நனையாத மாதிரி (காதலில் நனைபவர்களூக்கு எதுவும் தெரியாது என்ற கற்பனை) காட்டியது..

4. ஆர்ட் ஃபிலிம் மாதிரி ஆகி இருக்கக்கூடிய கதையை ஜாக்கிரதையாக கையாண்டு ஜனரஞ்சகப்படம் ஆக்கியது.

5. ஒளீப்பதிவு,இசை,எடிட்டிங்க் அனைத்தும் கன கச்சிதமாய் கவனித்துக்கொண்டது..

http://www.filmics.com/tamil/images/stories/news/July_2011/14.07.11/Deiva-Thirumagal-Review.png

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஓப்பனிங்க் ஷாட்டில் விக்ரம் பிக்பாக்கெட்டிடம் பணத்தைப்பறி கொடுப்பதும் தப்பும் திருடன் காலில் அடிப்பட்டதும் விக்ரம் அவனுக்கு கை குடுப்பதும் நந்தலாலாவை நினைவு படுத்துகிறதே?

2. மனநலம் குன்றிய ஒருவன் அப்பப்ப டைமிங்க் ஜோக் அடிக்க முடியுமா?உதாரணமா அடிக்கடி பாஸ்கர் மேலே சொல்லு என்றதும் விக்ரம் அப்போ என்ன பேசுனாரோ அதை ரிப்பீட்டாய் வானம் பார்த்து சொல்லிட்டு மேலே சொல்லிட்டேன் என்பது..

3. கைக்குழந்தையை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாண்டால் கொல்லாத்து விழுந்துடும்னு சொல்வாங்களே? அதை இயக்குநர் கவனத்தில் கொள்ளவில்லையா?அடிக்கடி குழந்தையை அப்படி தூக்கிப்போட்டு விளையாடறாங்களே?

4. கேமிரா கோணமும் சரி.. விக்ரம்-இன் பாடி லேங்குவேஜ்ஜும் சரி பல இடங்களீல் சிப்பிக்குள் முத்து கமல் நினைவுபடுத்துதே? தவிர்த்திருக்கலாமே?

5. க்ளைமாக்ஸ் கோர்ட் சீனில் ஜட்ஜாக நடித்தவர் செயற்கை நடிப்பு.. வேறு ஆளை போட்டிருக்கலாம்.. 

6. இடைவேளைக்குப்பிறகு வரும் அந்த ஹோட்டல் காமெடி காட்சிகள் நீளம்.. எடிட் செய்து இருக்கலாம்.. கதையின் போக்கை மாற்றி விடும் அபாயம்.. 


 தமிழ்ப்பட உலகில் நல்ல படங்களின் ரசிகர்களூக்கு இது ஒரு முக்கியமான படம்.. குழந்தைப்பாசம் உள்ளவர்கள் அனைவரும் காணவேண்டிய படம்.. குடும்பத்துடன் பார்க்கலாம்..

http://www.newsonweb.com/newsimages/July2011/586b86bd-e6c6-498f-b0a9-9423a77d85a11.jpg

ஏ செண்ட்டர்களீல் 50 நாட்கள், பி  செண்ட்டர்களீல் 30 நாட்கள், சி செண்ட்டர்களீல் 15 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று

சி.பி கமெண்ட் - கிளாசிக் மூவி

 ஈரோட்டில் தேவி அபிராமி,சண்டிகா,கிருஷ்ணா,ராயல் -ல் படம் ஓடுது.. நான்

சண்டிகாவில் படம் பார்த்தேன்..