1000 கோடியை எட்டுமா ரஜினி+கமல் காம்போ நெல்சன் படம்?
தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூல் படம் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படம் தான்.அதற்குப்பின் ஒவ்வொரு முன்னணி ஹீரோவும் தன் படம் 100 கோடி கிளப்பில் இணைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார்கள்.
கமல் படங்களில் மரோசரித்ரா (தெலுங்கு)1978,ஏக் துஜே கேலியே(ஹிந்தி)1981 ஆகிய இரு படங்களும் 500 நாட்கள் ஓடி வசூல் செய்திருந்தாலும் கமலின் சகலகலா வல்லவன் (1982) தான் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம்.அந்தக்காலத்திலேயே 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
தசாவதாரம்(2008) பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி 200 கோடி வசூல் செய்தது.விஸ்வரூபம்(2013) மிகுந்த போராட்டஙகளுக்குப்பின் வெளியாகி 220 கோடி வசூல் செய்தது.
2022 ம் ஆண்டு வெளிவந்த கமலின் விக்ரம் படம் அதிரி புதிரி ஹிட் ஆகி 500 கோடி வசூலைத்தொட்ட முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையைப்பெற்றது.
இதற்குப்பின் கமலின் மார்க்கெட் லெவல் வேறு எங்கோ போனது.
அதுவரை ரஜினி படங்கள் அளவுக்குக்கமல் படங்கள் வசூலிப்பதில்லை என்ற நிலை தான் இருந்தது.
கமல் படங்கள் ஏ செண்ட்டர் ஆடியன்சை அதிக அளவு கவரும்.சி செண்ட்டர் ஆடியன்சிடம் அதிக ரீச் இருக்காது.
ஆனால் ரஜினி படங்கள் பி ,சி செண்ட்டர் ரசிகர்களைப்பெரிதும் கவர்ந்து வசூல் மழை பெய்யும் அளவுக்கு ஓடியது.
ரஜினியின் ஒரு தோல்விப்பட வசூல் கமலின் ஒரு வெற்றிப்பட வசூலுக்கு இணை ஆகும்.
2024ல் வெளியான ரஜினி படம் வேட்டையன்.இது சுமாராகத்தான் ஓடியது.ஆனால் அதன் வசூல் 250 கோடி.
அதே போல பேட்ட(2019) ,தர்பார்(2020) இரண்டும் சுமார் ரகப்படஙகள் தான்.ஆனால் இரண்டுமே 250 கோடி வசூல்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளி வந்த எந்திரன் (2010) 320 கோடி ரூபாய் வசூல்.
எந்திரன் பாகம் 2 ஆக வெளிவந்த 2.ஓ (2018)
800 கோடி வசூலித்து இதுவரை வந்த தமிழ் சினிமா வசூலில் நெ 1 இடத்தில் இன்னமும் இருக்கிறது
ரஜினி நடிப்பில் வெளி வந்த கபாலி (2016) படம் ரூ 305 கோடி வசூலித்து இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சி ஒரு டிக்கெட் ரூ 1000 என்ற அளவில் விற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைபெறுகிறது.
விக்ரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த கூலி(2025) படம் ரூ 675 கோடி வசூல் என்றாலும்படத்தின் தரத்தில் ரஜினிக்குத்திருப்தி இல்லை.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர்(2023) படம் ரூ 650 கோடி வசூலித்தது.
அதே காம்போ வில் ஜெயிலர் பாகம் 2 விரைவில் வெளி வர இருக்கிறது.
இப்போது 500 கோடி ரூபாய் வசூலித்த விக்ரம் படத்தின் நாயகன் கமல் + 800 கோடி ரூபாய் வசூல் செய்த 2.ஓ பட நாயகன் ரஜினி இருவரும் இணைந்து நடிக்கும் படம் 1000 கோடி வசூலைத்தாண்டுமா?என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
நெல்சன் பாணி காமெடி ஜர்னர் தான்.பொதுவாகக்காமெடிப்படஙகள் பெரிய வசூலைக்கொடுக்காது.
உள்ளத்தை அள்ளித்தா மெகாஹிட் காமெடிப்படம் தான்.அதன் வசூல் பிரமாதம் எல்லாம் இல்லை.அதனால் தான் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க ரஜினி படம் ட்ராப் ஆனபோது ரஜினி ரசிகர்கள் கவலைப்படவில்லை.
ரஜினி காமெடிஹீரோ ரோலில் நடித்த தம்பிக்கு எந்த ஊரு? குரு சிஷ்யன்,தர்மத்தின் தலைவன்,வேலைக்காரன் ,ராஜாதி ராஜா போன்ற படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடினாலும் பிரம்மாண்டமான வசூலை வாரிக்குவித்த படஙகள் ரஜினியின் ஆக்சன் படஙகள் தான்.
அதே நிலை தான் கமலுக்கும்.கமல் நடித்த கிளாசிக்கான காமெடிப்படஙகள் ஆன மைக்கேல் மதன காமராஜன்,பஞ்ச தந்திரம்,வசூல் ராஜா எம் பி பி எஸ் , பத்திரிக்கைகளின் பாராட்டையும் ,ரசிகர்களின் அங்கீகாரத்தையும் பெற்றாலும்
கமலின் இந்தியன் படம் போல் வசூலை வாரிக்குவிக்கவில்லை.
இதிலிருந்து நமக்குத்தெரிய வருவது நெல்சன் பாணி காமெடிப்படமாக இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்சன் மூவி ஆக இருந்தால் மட்டுமே இது வசூல் ரீதியான சாதனை படைக்கும் படமாக இருக்கும்.
நெல்சன் வெளியிட்ட பிரமோ வீடியோவில் அது ஒரு ஆக்சன் மூவி மாதிரி தான் தெரிகிறது.
கமல் தான் ஹீரோ ,ரஜினி வில்லன் என பலரும் பேசி வருகிறார்கள்.சந்திரமுகி படத்தில் படம் முழுக்க வந்த ஹீரோ ரஜினியை விட க்ளைமாக்சில் 10 நிமிடஙகளே வந்த வில்லன் ரஜினி அப்ளாஸ். அள்ளினார். லக லக லக என்ற மாடுலேசன் பஞ்ச் டயலாக் பெரிதும் பேசப்பட்டது
எந்திரன் படத்தில் ஹீரோவாக வரும் புரொபசர் கேரக்டரை விட வில்லன் ஆக வந்த சிட்டி கேரக்டர் தான் பெரிதும் கவர்ந்தது. மே மே என்று சிட்டி ஆடு போல் கத்தி வில்லத்தனம் காட்டிய போது அரஙகம் ஆர்ப்பரித்தது.
எனவே நெல்சன் படத்தில் கமல் ,ரஜினி இருவருமே இரு ஹீரோக்கள் என்று பேலன்ஸ் செய்வதை விட கமல் ஹீரோ ,வில்லன் ரஜினி என்று அமைந்தால் ரசிகர்களுக்குக்கொண்டாட்டமாக இருக்கும்.
இதற்கு முன் கமல் + ரஜினி காம்போவில் வந்த படங்களில் படம் முழுக்க கமல் நடித்திருந்தாலும் சில சீன்களில் வரும் ரஜினி கை தட்டல்களை அள்ளிக்கொண்டது வரலாறு.
ரஜினியின் வேகமும் ,ஸ்டைலும் அனைவரும் அறிந்ததே.
ரஜினி யின் பிறந்த நாள் டிசம்பர் 12.கமல் பிறந்த நாள் நவம்பர் 7
ரஜினி கமல் காம்போ படம் பற்றிய தகவல்கள் ,ப்ரமோ ,டீசர்,ட்ரெய்லர் எது வந்தாலும் 12.07 என்ற டைமிலோ 7.12 என்ற டைமிலோ இருக்கும் என நெல்சன் முடிவு எடுத்து இருக்கிறார்.ஏன் எனில் இருவரின் பிறந்த நாளும் அந்த டைம் பிரேமில் கவர் ஆகி விடும்.
எந்த அளவுக்கு இருவரையும் பேலன்ஸ் செய்து காட்சிகள் அமைக்க வேண்டும் என்ற அரிய பணியை நெல்சன் உணர்ந்துள்ளதாகவே தெருகிறது.
பிரமோவில் கமல் ரஜினி இருவரின் ஸ்க்ரீன் பிரசன்சும் அருமை.
திரை ஆளுமைகள் வசூலிலும் 1000 கோடியை அடித்து விடுவார்கள் என்றே நான் கணிக்கிறேன்
