Monday, April 13, 2026

லீடர் (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்பை ஆக்சன் திரில்லர்)


 லீடர் (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்பை ஆக்சன் திரில்லர்)


ட்ரெய்லர் பார்த்து விட்டு இது விஸ்வாசம் டைப் செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் மூவி என்று நினைத்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைத்தந்திருக்கிறார் இயக்குநர்  துரை செந்தில் குமார்

.இது ஸ்பை ஆக்சன் திரில்லர்.படத்தின் பின் பாதியில் தான் அந்தத்திருப்பமே நமக்குத்தெரிகிறது.

இயக்குநர்  துரை செந்தில் குமார் சினிமா வாழ்க்கையைக்கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் சிவகார்த்திகேயன் நடித்த  எதிர் நீச்சல்(2013), காக்கி சட்டை (2015),தனுஷ் நடித்த கொடி(2016),பட்டாஸ்(2020) ,சூரி நடித்த கருடன்(2024) என 5 படங்களும் கமர்ஷியல் ஹிட்ஸ் தான் எல்லாமே.

லெஜெண்ட் என்ற தோல்விப்படம் கொடுத்த லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த இந்தப்படம் ஹிட் ஆகுமா?என்பதைப்பார்ப்போம்.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு கார் மெக்கானிக்.மனைவி இறந்து விட்டார்.ஒரே ஒரு மகள்.மகள் மீது அதீதப்பாசம் கொண்டவர்.மகள் பிறவியிலிருந்தே செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி.

கார் மெக்கானிக்காக இருக்கும் நாயகன் கார் சர்வீஸ் விட்டது சம்பந்தமாக அடிக்கடி துறைமுகத்துக்கு வருகிறார்.


தூத்துக்குடிதான் கதைக்களம்.வில்லன் தூத்துக்குடியில் துறைமுகத்தைத்தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.அங்கே சட்டத்துக்குப்புறம்பாக ஒரு கண்ட்டெய்னர் வருகிறது


நாயகி ஒரு போலீஸ் ஆபீசர்.வில்லனைப்பிடிக்க வேண்டும் என்பதை தன் லட்சியமாகக்கொண்டவர்.நாயகியின் நோக்கம் நிறைவேற சம்பந்தமே இல்லாமல் நாயகனை ஒரு சிக்கலில் மாட்ட விடுகிறார். நாயகனின் மகளைக்கடத்தி வில்லன் தான் கடத்தியதாக நாயகனை நம்ப வைத்து நாயகனை வில்லனுக்கு எதிராகத்திருப்பி விடுகிறார்

இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மொத்தக்கதையுமே.


நாயகன் ஆக லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கிறார்.முதல் படத்தில் கோட்டை விட்டதை இதில் சரி செய்து விட்டார் என்றே சொல்லலாம்.இருந்தாலும் நடிப்பில் இன்னமும் கவனம் தேவை.

நாயகி ஆக ஆண்ட்ரியா. கச்சிதம்.அவரது உயர் அதிகாரி ஆக வரும் ஷாம்  நடிப்பும் ஓக்கே ரகம்.


வில்லனாக வரும் சந்தோஷ் பிரதாப் மிரட்டி இருக்கிறார்.

நாயகன்,நாயகி,வில்லன் போக  மலையாள நடிகர் லால்,  விடிவி கணேஷ் ,ஐஸ்வர்யா பாஸ்கரன்,ஜார்ஜ் மரியான் ,அறந்தாங்கி நிஷா ,மகாநதி சங்கர் என்று ஒரு பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.அனைவர் நடிப்பும் ஓக்கே ரகம்.

ஜிப்ரானின் இசையில்  10 பாடல்கள்.பயப்பட வேண்டாம்.எல்லாம் 2 நிமிட 3 நிமிடப்பாடல்கள் தான்.பரவாயில்லை ரகம்.பின்னணி இசை  தெறிக்கிறது.

ஒளிப்பதிவு எஸ் வெங்கடேஷ்.காட்சிகளை பிரம்மாண்டமாகக்கண் முன் நிறுத்துகிறார்.பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் கில்  விறுவிறுப்பாகவே இருக்கிறது.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் துரை செந்தில் குமார்

சபாஷ்  டைரக்டர்


1 நாயகி தான் ஒரு ஸ்கெட்ச் போட்டு நாயகனை வில்லனுக்கு. எதிராகத்திருப்பி விடுகிறார் எனப்பார்த்தால் ஸ்கெட்ச் போட்டது நாயகி இல்லை ,நாயகன் என ட்விஸ்ட் கொடுத்த விதம் அருமை.

2 மகளைக்கடத்தியவர்களைப்பழி வாங்குவது மகளை மீட்பது தான் கதை என ட்ரெய்லர் பார்த்தவர்களை நினைக்க வைத்து பின் பாதியில்  3 ட்விஸ்ட்கள் வைத்தது அருமை.

3 நாயகனுக்கு ஒரு சைக்காலஜிக்கல் பிராப்ளம் இருக்கிறது.யாரைப்பார்த்தாலும் ஒருவர் போலத்தான் தோன்றும் என்ற விஷயத்தையும், மகளுக்கு செவிட்டு மிஷின் மாட்டவில்லை என்றால் காது கேட்காது என்ற  விஷயத்தையும் வைத்து க்ளைமேக்சில்  பிரில்லியண்ட் ஆக சீன் அமைத்த விதம் அருமை.

4 நாயகன் தன் மகளிடம் உன் அம்மாவிடம் பேச ஏ ஐ டெக்னாலஜி மூலம் ஒரு ஐடியா வெச்சிருக்கேன் என சொல்லும் காட்சியும் ,அதன் படமாக்கமும் டச்சிங்க்

5 ஹிந்திப்படமான கில் படத்தில் வருவது போல ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் அதகளம்.மேக்கிங்க் ஆகவும் நல்ல அவுட்புட்.


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1. அரதப்பழசான கதைதான். திரைக்கதை தான் கொஞ்சமாவது காப்பாற்றுகிறது


2 எனக்கு ஏழு கண்ட்டெய்னர் வேண்டும் என நாயகன் டிமாண்ட் வைத்த அடுத்த நிமிடமே  அவர் கேட்டது கிடைப்பது காதில் பூ.

3  துப்பாக்கிச்சூடு மிகப்பெரிய அளவில் நடக்க இருக்கும் ஒரு கலவர பூமிக்கு நாயகன் தன் மாமியாரை அழைத்துப்போனது எதற்கோ?

4 பின் பாதியில் ஸ்பை ஆக்சன் டீமில் இருக்கும் ஆட்கள் செய்யும் காட்சிகள் கொஞ்சம் இழுவை தான்

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வழக்கமான ஒரு ஆக்சன் மசாலாதான். லெஜெண்ட் அளவுக்கு மோசம் இல்லை.கொடி ,காக்கி சட்டை அளவுக்கு பிரமாதமும் இல்லை. ஓக்கே ரகம்.ரேட்டிங்க் 2.5/ 5