Thursday, April 30, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ஏப்ரல் 4 ம் வாரம் 30/4/26 தியேட்டர் ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் 3 தமிழ்ப்படங்கள் ,ஒரு தெலுங்கு டப்பிங்க் படம் ஆக மொத்தம் 4 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

தனுஷ்,சரத் குமார்,பிரபுதேவா ஆகிய மூவரும் மோதுகிறார்கள்





கர - சரத் குமார் + அசோக் செல்வன் காம்போவில் உருவாகி வெளியான போர்த்தொழில் என்ற பிரம்மாண்டமான க்ரைம் திரில்லர் ஹிட் படத்தைத்தந்த  விக்னேஷ் ராஜா வின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் இது.இது ஒரு க்ரைம் திரில்லர் மூவி.

இயக்குநரின் முதல் படமே விமர்சன ரீதியாகவும் ,கமர்ஷியல் கலெக்சன் ரீதியாகவும் வெற்றி பெற்றதால் அவரது இரண்டாவது படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதில் நாயகன் தனுஷ் கொள்ளைக்காரன் அல்லது திருடன் ரோலில் வருகிறார் போல் தெரிகிறது.அவரைப்பிடிக்க முயலும் போலீஸ் ஆபீசர் ஆக த கிரேட் இண்டியன் கிச்சன் புகழ் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்திருக்கிறார்.

நாயகி ஆக மமிதாபைஜூ கிராமியப்பெண்ணாக முதன்முதலாக தாவணி கெட்டப்பில் வருகிறார்.கிளாமர் க்யூன் ஆகப்பார்த்துப்பழக்கப்பட்டவரை கிராமத்துக்கிளி ஆகப்பார்க்க ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?என்பது தெரியவில்லை.

இவர்கள் போக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ,கருணாஷ் ,ஜெயராம்,ஸ்ரீஜா ரவி. ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஜி வி பிரகாஷ் குமார் தான் இசை.தேனி ஈஸ்வர் தான் ஒளிப்பதிவு.

ரன்னிங்க் டைம்  161 நிமிடங்கள் 


ரசித்த வசனங்கள்

1 அவன் திரும்பி வந்தபோதே எனக்கு ஒரு டவுட்.

ஏண்டா இப்படிப்பேசறே?அவன் திருந்தி தான் வந்திருக்கான்.

2. ஓட்டைப்பிரிச்சு இறஙகித்திருடறது ,கொள்ளையடிக்கறது இது தான் எனக்குத்தெரியும், என்னை என்ன பண்ணச்சொல்றே?

3 பயிறோ,களையோ,பாவமோ,புண்ணியமோ அவனவன் விதைச்சதை அவனவன் தான் அறுவடை பண்ணியே ஆகனும்.

4 என் பேரு கர சாமி,எல்லாரும்  என்னை கர-ன்னுதான் கூப்பிடுவாங்க

5 என் மேல் படிஞ்சிருக்கும் கறையைத்துடைக்கனும்.என்னை நம்பி இருப்பவர்களைக்கரை சேர்க்கனும்.



2. விடியல்- சரத்குமார்  + சினேகா ஜோடி நடிக்கும் ஆக்சன் திரில்லர் மூவி இது.இயக்கம் செல்வராஜ்.இந்தப்படத்தில் சரத்குமார் பெரிய அரிவாள் மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார்.சினேகா கிளாமர் ரோலில் வருகிறார்.ஸ்ருதி பிரகாஷ் கெஸ்ட் ரோலில் வருகிறார்.இசை தீனா



3. சுயம்பு (தெலுங்கு/தமிழ்)

பாகுபலி பாணியில் வெளியாகும் ஹிஸ்டாரிக்கல் ஆக்சன் டிராமா இது.
நிகில் சித்தார்த் போர் வீரனாக நடிக்கும் இந்த சரித்திரப்படத்தில் கே ஜி எப் படத்தின்  இசை அமைப்பாளர் ரவி பாஸ்ரூர் இசை அமைக்கிறார்.இயக்கம் பாரத் கிருஷ்ணமாச்சாரி


இழந்த செங்கோலை மீட்கப்போராடும் போர் வீரனின் கதை இது

நாயகி ஆக சம்யுக்தாமேனன் நடிக்கிறார்

ரசித்த வசனங்கள்


1 இன்னும் எத்தனை காலம் வதந்திகளை வாள்  கொண்டு அடக்குது?

2 காலம் கத்தி மாதிரி தாக்கும்போது காப்பாற்றக்கேடயம் வேண்டும்

3 பணம் உன்னைக்கொஞ்ச நேரம் தான் கூட்டிட்டுப்போகும்.துணிவு தான் கடைசி வரை  கூட வரும்.

4 இது நீதி அல்ல நிஜம்





4. பிளாஸ்பேக்.   தமிழ்


பிரபுதேவா ரெஜீனா கசண்ட்ரா ஜோடி நடித்த படம்.அனசூயா பரத்வாஜ் இன்னொரு நாயகி.

இசை சாம் சி எஸ்.

தனது வாழ்வை வடிவமைத்த தன்னை விட வயதான பெண்ணுடன் ஏற்படும் நாயகனின் காதல் தான் கதை.2020 ல் வெளியான Malena என்ற ஹாலிவுட் படத்தின் பட்டி. டிங்கரிங்க் அட்லீ வெர்சன் என்பது ட்ரெய்லர் பார்த்ததும் தெரிகிறது.அப்பட்டமான திருட்டு

ட்ரெய்லரில் வெளியான 2 நிமிடப்படத்தில் வரும் 16 காட்சிகளில் 12 காட்சிகள் மலீனா வின் சாயல் அப்படியே இருக்கிறது.

டான் சாண்டி தான் இயக்கம்.


ரசித்த வசனங்கள்

1 நாம் எழுதும் எழுத்தில் உயிர் இருக்கனும்.நாம் எழுதறப்ப சிரிப்பு வரும் இடத்தில் வாசகன் சிரிக்கனும் ,அழுகை வரும் இடத்தில் வாசகன் அழனும்

2 இவர் யார் தெரியுதா?

பொறுக்கி ரைட்டர்?

Wednesday, April 29, 2026

Project Hail Mary(2026)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (சயின்ஸ் பிக்சன் அட்வென்ச்சர்)

 


நாயகன் ஒரு பள்ளியில் மைக்ரோ பயாலஜி சப்ஜெக்ட் ஆசிரியராகப்பணியாற்றுகிறார்.இவர் மாலிக்குலர் பயாலிஸ்ட்டும் கூட.


விண்வெளியில் சூரியன் உட்பட பல கோள்கள்  ஒளி இழந்து வருகின்றன (டிம் ஆகிக்கொண்டு வருகிறது) என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள்.மைக்ரோ ஆர்கனிசம் படிவதால் இது நிகழ்கிறது .இதே மாதிரி தொடர்ந்து நடந்தால் 30 வருடங்களில் 15% சூரியன் அதன் சக்தியை இழந்து விடும்.உலகம் முழுக்க பசி,பட்டினி,பஞ்சம் என்பது வந்து விடும்.இதைத்தடுக்க விஞ்ஞானிகள்  ஒரு பிராஜக்ட் ரெடி பண்ணுகிறார்கள்.

சூரியன் உட்பட அனைத்துக்கோள்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும்  பாசிட்டி. என்னும்  ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல்  எப்போதும் போல் இருக்கிறது.அதன் ரகசியத்தைக்கண்டறிந்து விட்டால் சூரியனையும் ,உலகத்தையும் காப்பாற்றி விடலாம்.

இப்போது நாயகனை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யலாம் என முடிவு எடுக்கிறார்கள்.ஆனால் அதில் ஒரு சிக்கல்.நாயகன் விண்வெளிக்குப்போகலாம்,ஆனால் பூமிக்குத்திரும்ப வர முடியாது.ஒன் வே மாதிரி தான்.அதனால் நாயகன் அங்கே போக பயப்படுகிறான்.ஆனால் வேறு வழி இல்லாமல் போக நேரிடுகிறது.

நாயகன் விண்வெளிக்குப்போனதும் அங்கே ஒரு ஏலியனை சந்திக்கிறான்.அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் சந்திப்பது போல.

ராக்கி என்ற ஏலியன் அவர்களது கிரகத்தைக்காப்பாற்ற நாயகன் மாதிரியே இந்த கிரகத்துக்கு வந்திருக்கிறது.இவர்கள் இருவருக்கும் ஏற்படும் நட்பு ,புரிதல் தான் மொத்தப்படமும்.

ஆண்டி வேர் எழுதிய நாவலின் தழுவல் தான் இந்தப்படத்தின் திரைக்கதை.நாவலின் டைட்டிலும்,படத்தின் டைட்டிலும் ஒன்று தான்.

இரட்டை இயக்குநர்கள் ஆன பில் லார்டு + கிறிஸ்டோபர் மில்லர் தான் படத்தை இயக்கி இருக்கிறார்கள்.

படத்தில் மொத்தமே 6 கேரக்டர்கள்தான்.பெரும்பாலான காட்சிகளில் நாயகன் + ஏலியன் இருவர் மட்டுமே.

நாயகன் ஆக ரியான் கோஸ்லிங்க் நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே!இவரது நடிப்பு அருமை.மொத்தப்படத்தையும் இவர் ஒருவர் தான் தாங்கி நிற்கிறார்.



சபாஷ்  டைரக்டர்

1 கிராவிட்டி ,ஈ டி போன்ற ஹாலிவுட்  படங்களுக்கு நிகரான பிரமிப்பை ஏற்படுத்தியதற்காக பாராட்டலாம்

2  நான் சந்தித்த சிறந்த மனிதன். நீ தான் என்று ஏலியன் சொன்னதும் நாயகன் திகைக்க உடனே ஏலியன். "சாரி நான் சந்தித்த ஒரே மனிதன் நீ தான் " என்று சொல்லும்போது தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளியது.

3 படத்தில் முதல் 50 நிமிடங்கள் நாயகன் மட்டுமே தனியாகப்பேசிக்கொண்டே இருப்பது நமக்குப்புதிய அனுபவம்.



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. மொத்தப்படம் இரண்டரை மணி நேரம்.படத்தில் ஒரு மணி நேரம் நாயகன் மட்டும் தான் ,ஒன்றரை மணி நேரம் நாயகன்+ ஏலியன்  தான் என்பதால் பலருக்கும் போர் அடிக்கலாம்

2 நாயகன் இந்த பிராஜக்ட்டில் பெரிதாக சாதித்த மாதிரி காட்டவில்லை.இவரை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு வலுவான காரணம் சொல்லப்படவில்லை.

3 ஏலியன்சுக்கு ஒரு முகம் மாதிரி அமைப்பைக்கொடுத்திருந்தால் இன்னமும் எமோஷனல் கனெக்ட்  கிடைத்திருக்கும்

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க். - களின் யு


சி பி எஸ் பைனல் கமெண்ட்- சயின்ஸ் பிக்சன் டிராமாப்பிடிக்கும் என்பவர்கள் மட்டும் பார்க்கலாம்.கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் எதுவும் இல்லை.ரேட்டிங்க். 3/5


Project Hail Mary
Theatrical release poster
Directed byPhil Lord
Christopher Miller
Screenplay byDrew Goddard
Based onProject Hail Mary
by Andy Weir
Produced by
Starring
CinematographyGreig Fraser
Edited by
Music byDaniel Pemberton
Production
companies
Distributed by
Release dates
Running time
156 minutes[2]
CountryUnited States
LanguageEnglish
Budget
  • $248 million (gross)
  • $200 million (net)[3]
Box office$164 million[4][5]

Tuesday, April 28, 2026

நள்ளிரவில் ஒரு இளம்பெண் ... சிறுகதை - சி.பி செந்தில் குமார் @கல்கி

 


நள்ளிரவில் ஒரு இளம்பெண் ...  - சி.பி செந்தில் குமார்




ஒரே ஒரு வரி பேட்டில மொத்த மீடியாக்களும் , பப்ளிக்கும் பரபரப்பா பேசிக்கொள்ளும் டாபிக் தமிழ் நாட்டையே உலுக்கி விட்டது . பொள்ளாச்சி பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு பெண்களும் ஒரு காரணம், ஊசி இடம் கொடுக்காம நூல் நுழைய முடியுமா? என டைரக்டர்  ஒரு சினிமா பட விழாவில் பேசியது சென்சேஷனல் நியூஸ் ஆனது 


டைரக்டர் லக்கிகிங் தொட்டதெல்லாம் பொன் ஆன காலகட்டம், அவரது ஒவ்வொரு படங்களுமே வெள்ளி விழாதான். அதுக்கு முக்கியமான காரணம் அவர் பெண்களை மதித்து   படம் எடுத்ததே , பெண்களின் பிரச்சனைகளை மையமாகக்கொண்டே அவரது ஒவ்வொரு படக்கதைக்கருவும் இருக்கும், அவரோட இயற்பெயர் என்ன?னு அவரோட அம்மாவே மறந்திருப்பாங்க , எல்லாப்படங்களும் ஹிட் ஆனதால் அவருக்கு லக்கி கிங் என்பது ஆகு பெயர் ஆனது அவரது பட வசனங்களும் பெண்களின் முன்னேற்றத்தைப்பற்றியும், பெண்கள் பெருமை பேசுவதாகவும் தமிழ்க்கலாச்சாரம் , பண்பாடு இவற்றைப்பற்றியதாகவே இருக்கும்



என் முன்னாள் காதலி உங்க இந்நாள் மனைவி ஆகலாம் சார், ஆனா உங்க இந்நாள் மனைவி  என் காதலி ஆக முடியாது   சார் என ஒரு பட க்ளைமாக்சில் அவர்  வைத்த வசனம் செம ஹிட்டு . பாடம் சொல்லித்தர்ற வாத்தியார்  தன் கிட்டே படிக்கும் மாணவியை லவ் பண்றது தப்பு, அந்தப்பொண்ணே தானே வலிய வந்து தன் காதலைச்சொன்னாலும் ஏத்துக்கக்கூடாது ஏத்துக்க  மாட்டான் என் பட நாயகன் என்ற கருத்தில் அவர் சொன்னவை மக்களால் கொண்டாடப்பட்டன. சார் , ஐ லவ் யூ என முதலில் அந்தப்படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டு பின் டைட்டிலில் கூட ஆசிரியர் - மாணவி உறவு கொச்சைப்படுத்தப்படக்கூடாது என டைட்டிலை மாற்றியவர்



 சிறந்த வசனகர்த்தா , சிறந்த திரைக்கதை என பல விருதுகளைக்குவித்தவர் , இவரைப்பற்றி இன்னொரு முக்கியமான   விஷயத்தையும் சொல்லியே ஆகனும், பெண்களும் ரசிக்கின்ற கில்மாக்காமெடியை , அரசல் புர்சலான இரட்டை அர்த்தக்காமெடியை அசால்ட்டாக பெண்களும் ரசிக்கும்படி சொன் னவர் ,. சினிமா உலகில் டபுள் மீனிங் காமெடியை ஆபாசமாக , வல்கராக சொன்னவர்கள் பலர் உண்டு , ஆனா எல்லாரும் ரசிக்கும்படி சொன்னவர் இவர் ஒருவரே , இப்படிப்பட்ட டைரக்டர் தான் இப்போ சர்ச்சைல சிக்கி இருக்கார்.



முதல்வன் படத்துல  அர்ஜூன் - ரகுவரன் பேட்டி மிக பிரபலம் , அதற்கு இணையான அல்லது அதைத்தாண்டிய ஒரு பர பரப்பை  இந்த பேட்டி   உருவாக்கியது , லைவ் ஷோ.....


 பேட்டி எடுப்பவரும் அல்பசொல்பமானவர் இல்லை.  மாநில முதல்வர் ல இருந்து நாட்டின் பிரதமர் வரை கேள்விக்கணைகளால் துளைத்து எடுப்பவர் . இவர் கிட்டே ஏண்டா வந்து மாட்டிக்கிட்டோம் என நடுங்குபவர்கள் பலர் .கிராஸ் கொஸ்டீன் கேட்பதில் மன்னி. மன்னன் விஜயசாந்தி போல  பாடி லேங்க்வேஜ் ,படையப்பா நீலாம்பரி மாதிரி ஒரு தெனாவெட்டு 



வணக்கம் வைக்கறது , இண்ட்ரோ இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ஸ்கிப் பண்ணிட்டு டைரக்டா மேட்டருக்கு போவோம்



”சார் , நாம 2019 ல இருக்கோம், இன்னும் நாம வந்து ஒரு பாலியல் வன்முறை நடந்ததுன்னா தப்பு செஞ்சவனைக்கண்டிக்காம ஊசி இடம் கொடுத்தாதான் நூல் நுழைய முடியும்னு அந்தக்கால பழமொழியை உதாரணம் காட்டிட்டு இருக்கமே? இது அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவா பேசறதா ஆகாதா?”



” நீங்க வெறும் பழமொழியை மட்டும் எடுத்துக்கிட்டு பேசுனா நான் சொன்னது தப்பா தான் தெரியும். அந்த விழா என்ன பட விழா? அந்தப்படத்தோட கதை என்ன? அதைப்பத்தி படத்தோட டைரக்டர் என்ன பேசுனாரு , இதை எல்லாம் கவனிச்சிருந்தா இந்த கேள்விகளே எழுந்திருக்காது. பெண்களிடையே விழிப்புணர்வு பெருகனும், கொஞ்சம் அவங்க ஏமாந்தாக்கூட பாதிப்பு ஏற்படும்,அப்படி ஏமாந்த ஒரு பெண்ணோட கதை தான் படமா எடுக்கறாங்க அப்டிங்கறப்போ அந்த கதைக்கு ரிலேட்டடா பேசுனதை குற்றவாளிகளுக்கு ஆதரவா பேசுனதா    திருப்பி விடறது மீடியாவோட பசி தான் , வேற என்ன?



  என் கேள்வி என்னான்னா ஒரு தப்பு நடக்குது , அதுல பாதிப்புக்குள்ளானவங்க பக்கம் நாம நிற்கனுமா? இல்ல பாதிக்கப்பட்ட ஆள் கிட்டே நீ ஏன் இந்த டைம்க்கு இங்கே வ்ந்தே? உன் மேல தப்பு இருக்குனு அவங்க மேல குற்றம் சாட்டனுமா?




பாதிக்கப்பட்டவங்களை நான் குற்றம் சொல்லலையே? இதை தவிர்த்திருக்கலாம்னுதான் சொல்றேன்




இல்லையே? பொண்ணுங்க தெருவுல நடக்கறப்போ ஃபோன் பேசிட்டு போறாங்க , தனக்குத்தானே சிரிச்சுக்கறாங்க , இதை எல்லாம் அவங்க தவிர்க்கனும், கிளாமரா டிரஸ் பண்ணக்கூடாது , டிக் டாக் பண்ணக்கூடாது....




 இருங்க இருங்க ,  டிக் டாக் பத்தி இந்த விழாவில் நான் பேசவே இல்லையே?



வேற ஒரு பேட்டில சொல்லி இருந்தீங்க 



 அத  ஏன் இங்கே கொண்டு வந்து கனெக்ட் பண்றீங்க? அது தனியா பேசுவோம், இப்போ 2 நாள் முன்னாடி கூட ஒரு பொண்ணு டிக்டாக்ல 2000 ரூபா மதிப்புள்ள பிராண்ட் பிரா வாங்குனேன், அதை எல்லாருக்கும் தெரியற மாதிரி போடுவேன் அது என் இஷ்டம் நீங்க யார் கேட்கறதுக்குனு ஒரு வீடியோ போட்டுச்சு , நான் எல்லாம் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க சேலை ஜாக்கெட் ல ஃபுல் கவரா வரும்போது எப்பவாவது பிரா பட்டை வெளில தெரிஞ்சா சூசகமா சண்டே ஈஸ் லாங்கர் தன் மண்டேனு சொல்வோம் , டக்னு அவங்க அதை அட்ஜஸ் பண்ணிக்குவாங்க ,. ஆனா இப்போ வேணுன்ம்னே பிரா வெளில தெரியற மாதிர் போட்டுக்கறாங்க , என்னத்தை சொல்ல ?



அப்போ பொண்ணுங்க என்ன டிரஸ் போடனும்?? எப்படி அதை எஸ்டாபிளிஸ் பண்ணனும்? அல்லது பண்ணக்கூடாது?னு நீங்கதான் ஐ மீன் ஆண்கள் தான் தீர்மானிக்கனுமா?



அப்படி நான் சொல்லைலைங்க, நீங்க ஒரு  நிருபரா மீடியா ஹிட்ஸ் ஏத்திக்கறதுக்காக கண்டபடி கேள்வி கேட்கறீங்க , கொஞ்சம் என்னை பேச விட்டாத்தானே? எனக்கும் ஒரு மக இருக்கா , நான் ஒரு பெண்ணோட அப்பாவா சமூக பிரக்ஞை உள்ள ஆளா பேசறேன், இப்போ பொள்ளாச்சி சம்பவத்துல கொடூரமான சம்பவங்கள் நடந்திருக்கு , குற்றவாளி கடுமையா தண்டிக்கப்படனும், அதுல எல்லாம் மாற்றுக்கருத்தே இல்லை , யாரும் குற்றவாளிக்கு வக்காலத்து வாங்குல ,அந்த ஆடியோ டேப் ல “ அண்ணா உங்களை நம்பித்தானே வந்தேன் , இப்டி பண்றீங்களே”னு அந்த பொண்ணு கதறும்போது அந்த மாதிரி இடத்துக்கு அந்தப்பொண்ணு போறதுக்கு முன்னால கொஞ்சம் யோசனை பண்ணி இருக்கலாமே? ஜாக்கிரதை யா இருந்திருந்தா  அதை தவிர்த்திருக்கலாமேனுதான் சொல்றேன்


 அப்பக்கூட நீங்க  பொண்ணு மேலதான் தப்பு சொல்றீங்க , அந்தப்பொண்ணு அவனை நம்புனது தப்புங்கறீங்களா? ஒரு அண்ணனா நண்பனா நம்பிதானே போய் இருக்கு , அந்த நம்பிக்கை தப்புங்கறீங்களா? ஏன் அவனைக்கண்டிக்கலை?



 இப்போ பொதுவா பெண்களை ஜாக்கிரதையா இரு , ராத்திரி 9 மணி ஆனா வெளில எங்கேயும் இருக்காதே வீட்டுக்கு வந்திடுனு பொண்ணுங்க கிட்டே தான் அதிக அக்கறை எடுத்து சொல்வோம், ஆண்கள்  பற்றி கவலைப்படறதில்லை



 அதைத்தாங்க நான் ஏன்?னு கேட்கறேன். ஒரு எச்சரிக்கைன்னா 2 தரப்புக்கும் பொதுவா தானே இருக்கனும், ஆண் கிட்டெயும் சொல்லலாமே? நைட் 9 ஆனா வீட்டுக்கு வந்து சேர்னு 



 காந்திஜி அந்தகாலத்துலயே என்ன சொல்லி இருக்காரு? நள்ளிரவில் ஒரு  பெண் எப்போ தனியா பயம் இல்லாம நடக்கிறாளோ அப்போதான் உண்மையான சுதந்திரம் நம்ம நாட்டுக்கு கிடைச்சதா அர்த்தம்,னாரு , அப்ப இருந்து இப்போ வரை நாம அப்படி சுதந்திரமா நடக்க முடியலையே?



 அப்போ காந்திஜி பெண்களை   வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போகாதேன்னு சொன்னாரா?


 அப்படி சொல்லலையே?பெண்களை ஜாக்கிரதையா இருந்துக்கோன்னாரு , ஒரு துறவியா இருந்தாலும் தனிமைல ஒரு பெண்ணைப்பார்த்தா அவன் தூண்டப்படுவான்னு ஒரு இத்தாலியப்பழமொழி இருக்கு, அதனால அந்த மாதிரி சூழ்நிலையை பெண்கள்  தவிர்க்கலாம்னுதான் சொல்றேன்



மீண்டும் மீண்டும் நாம பெண்களை தடை பண்றதுலதான் இருக்கோம், நீ வீட்லயே இரு நீ ,ஜாக்கிரதையா இரு , அவ்ளோதான், ஆண்களை ஒண்ணுமே சொல்றதைல்லை , நீ தப்பு பண்ணாத , நீ பெண்களை மதிக்கக்கத்துக்கோ அப்டினு ஆண்களுக்கு ஏன் அட்வைஸ் பண்றதில்லை?




நைட் டைம்ல வெளில போகவேணாம்னு சொல்லலை,நைட் 10 மணிக்கு மேல வெளில போக வேண்டிய சூழல் வந்தா ஒரு பாதுகாப்போட போ அப்பா அண்ணன் இப்டி யாரையாவது துணைக்குக்கூட்டிக்கோனு சொல்றோம்  , இது தப்பா?  நைட் டைம்ல தனியா ஒரு   பொண்ணு போனா எதிர்ல  வர்றவங்களுக்கு என்னடா? இந்தப்பொண்ணு தனியாப்போகுதேனு தப்பான ஒரு எண்ணம் வர்லாம் இல்லையா?



 அதைத்தான் நான் ஏன்னு கேட்க்றேன்.தனியா ஒரு பொண்ணு போனா நீ ஏன் தப்பா பார்க்கறே?னு ஆண்களைத்தானே கேள்வி கேட்கனும்?நீ ஏன் தனியாப்போனேனு பொண்ணை நோக்கித்தானே நம்ம கேள்விகள் கிளம்புது



குற்றவாளிக்கு சாதகமா யாரும் இங்கே பேசலைங்க, அப்டி தப்பு செஞ்சவன் தண்டிக்கப்பட்டே ஆகனும்கறதுல  மாற்றுக்கருத்தே இல்லை.ஆனா தப்பு ந்டக்கற் மாதிரி ஒரு சூழலை ஏற்படுத்தாம பொண்ணுங்க ஜாக்கிரதையா இருக்கனும்கறேன்



 இப்போ ஹைதராபாத்ல ஒரு சம்பவம் நடந்தது, டூவீலர்ல போனப்போ பெட்ரோல் இல்லாம வண்டியை நிறுத்துனப்ப சிலர் வந்து உதவி பண்ற மாதிரி நடிச்சு அவளை ரேப் பண்ணி இருக்காங்க , இதுல அந்தப்பொண்ணோட தப்பு என்ன?



 நைட் டைம் ட்ராவல் பண்ரப்ப ரிசர்வ் விழுந்ததுமே பெட்ரோல் அடிச்சிருக்கலாம், அல்லது பெட்ரோல் ஃபுல்லா இருக்கா?னு செக் பண்ணி இருக்கலாம்



 சரி , உன் அப்பா உன் பாதுகாப்புக்காக செல் ஃபோன் வாங்கி தந்திருக்காரு. அதுல நீ ஏன் யார் கிட்டயோ குசு குசுனு ரகசியமா பேசறே சிரிக்கிறேனு  கேட்டிருக்கீங்க , இதை ஏன் ஆண்கள் கிட்டே நீங்க கேட்கலை , மறுமுனைல பேசுனது ஒரு ஆண் தானே? அவன் மட்டும் பேசலாமா?



 யாருக்கு இதனால பாதிப்பு வருதோ அவங்க கிட்டேதான் பேச முடியும். இப்போ  ஃபேஸ்புக்ல எத்தனை பேர் லைக் போடறாங்கனு பாத்துக்கிட்டு ஓப்பன் பண்ணி வெச்சிருக்கு ஒரு பொண்ணுன்னா அதுல லைக் போடறவன் எத்தனை பேர் கெட்டவனா இருப்பான், அவன் சந்தர்ப்பத்துக்காக காத்துட்டு இருக்கலாம்,இதுல பெண்கள் ஜாக்கிரதையா இருக்கனும்


 திரும்பவும் நீங்க பெண்களை ஃபேஸ்புக் வர்றது தப்புனு அவங்களைத்தானே குற்றம் சொல்றீங்கம் ஏன் லைக் போடற கமெண்ட் போடற ஆண்களை குற்றம் சொல்லலை?


 அய்யோ , ஃபேஸ்புக் வர்றதை தப்பு சொல்லலைங்க  ஃபேஸ்புக்ல தன்னோட ஃபோட்டோவை ப்ரொஃபைல் பிக்சரா வெச்சிருக்கறவன் தன் உண்மையான முகவரியை பகிர்ந்தவன் , ஃபோன் நெம்பர் கொடுத்தவன் இப்படி யாராவது இருந்தா பேசி பழகறதுல தப்பு இல்ல நாளைக்கு ஒரு பிரச்சனை நடந்தாக்கூட அவன் இடத்துக்கு போய் கேட்கலாம், அட்ரஸ் தெரியாது , ஆள் யார்னே தெரியாது , ஃபோன் நெம்பர் தெரியாது அப்டிங்கற அனானி கூட சேட் பண்ணிட்டு ஏமாந்து கடைசில இப்படி நடந்து போச்ச்சுனு சொன்னா அதுக்கு யார் பொறுபு ?




 சரி ,நாம் தெரிஞ்சவன் கிட்டே தான் பேசனும் தெரியாதவங்க கிட்டே பழகக்க்கூடாது   அது தப்புனு அட்வைஸ் பண்றோம், இதெல்லாம் சரி , ஆனா ஆண்கள் கிட்டே “ நீ ஏன் யார்னே தெரியாத பொண்ணுக்கு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் குடுக்கறே? ஏன் லைக் போடறெ? உன் நோக்கம் என்ன? இப்டி அவனைக்கேட்க தவறிடறமே? பிரதமரோட முதல் சுதந்திர தின உரைல பேசுனதைக்கேட்டீங்களா? சாயங்காலம் 6 மணி ஆச்சுன்னா பொண்ணுங்க வீட்டுக்கு வந்தாச்சா?னு தான் பாக்கறோம், என்னைக்காவது ஆண்கள் வீட்டுக்கு வந்தாச்சா?னு பார்க்கறமா? என் லேட்டா ஆண்கள் வந்தா அதைக்கண்டிக்கறதில்லை? கண்டுக்கறதில்லை ?மாற்றம் அங்கே இருந்து அல்ல ஆரம்பிக்கனும்?


 ஏங்க  கற்பழிப்புகள் ஆண்களுக்கா நடக்குது? பெண்கள் தானே பாதிக்கப்படறாங்க ?



 அப்டி இல்லைங்க , ஆண் குழந்தையோட பெற்றோர்களும் அவங்களை கண்காணிக்கஞும்,, அவனால யாருக்கும் பாதிப்பு இல்லைங்கறதை உறுதி செய்யனும்


 அது பெற்றோர்களின் மெண்ட்டாலிட்டி பொறுத்தது, நீங்க நல்லா கவனிச்சுப்பாருங்க வீட்டுக்கு தன் மகனோட ஃபிரண்ட்ஸ் யாராவது வந்தா அவங்களோட சேர்ந்து நீ கெட்டுப்போய்டாதனு அவங்க மேல தான் தப்பு சொல்வாங்க , தன் மகன் நல்லவனா தான் இருப்பானு நம்பிக்கை , காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுங்கற மாதிரி 



அது தப்புன்னு  நீங்க   நினைக்கலையா?எப்படி எங்க மகள் பாதுகாப்பா இருக்கனும்னு நினைக்கறமோ அதே போல மகனும் தப்பான ஆள்  ஆகிடக்கூடாதுனு நினைக்கனும் இல்லையா?



 ஆமா, ஆனா தன் மகள் தப்பான ஆள் கிட்டே மாட்டிக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை இருக்கும்


 ஆனா ஒரு தப்பு நடந்தா அந்த தப்பை செஞ்ச ஆண்  வீட்டில் பெற்றோர்கள் கவனிக்கலைன்னுதானே அர்த்தம்?



என் வீட்ல எல்லாம் நைட் 9 மணி ஆகிட்டா ஆளைக்காணோமேனு தேடுவாங்க லேட்டா வீட்டுக்கு வந்தா அடி பட்டையைக்கிளப்பிடுவாங்க ஆனா  இப்போ காலம் மாறிடுச்சு


 பெண்கள் முன்னே எல்லாம் கட்டுப்பாடா இருந்தாங்க , இப்போ ரோட்ல  பசங்க கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கறது தப்புனு சொல்லி இருக்கீங்க



அப்படி சொன்னது என்ன தப்பு? 4 பேர் பார்த்தா தப்பா நினைப்பாங்க 


 சரி தப்பா நினைச்சா என்ன ஆகும்?


 தவறான கண்ணோட்டத்துல அந்தப்பொண்ணு பார்க்கப்பட  வாய்ப்பு இருக்கு,ஆண்கள் கிட்டே நாம் அட்வைஸ் பண்றோம், நீ தங்கையா நினை , அக்காவா நினை அப்டினு  கற்பிக்கறோம்


 ஆணோட தவறான பார்வை யை தவிர்க்க   பொண்ணுங்க மாடர்ன்  டிர்ஸ் போடக்கூடாது   கிளாமரா டிரஸ் போடக்கூடாது.அப்டினு தடை போடறது எந்த விதத்துல சரி?


நான் பொண்ணுங்க டிரஸ் பற்றி அப்படி ஒரு கருத்து தெரிவிக்கவே இல்லையே? நீங்களா க்ரியேட் பண்ணி சிக்க வைக்கப்பார்க்கறீங்க



 ஒரு தவறான ஆண் பெண் குழந்தைனு பார்க்கறதில்லை , வயதான மூதாட்டிஞு பார்க்கறதில்லை அவன் தப்பு செஞ்சுடறான், ஆனா நாம பொண்ணுங்க டிரஸ் பத்தித்தானே விவாதிக்கிறோம்?அவன் செஞ்ச தப்ப பத்தி யாரும் பேசறதில்லை, இவ ஏன் அப்டி டிரஸ் பண்ணிப்போனா  அப்டினு பெண்களைத்தானே குற்றம் சொல்றோம்?



கிளாமரா டிரஸ் பண்றதுக்கும் , செக்சியா டிரஸ் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு, 


 ஃபுல் கவர் பண்ணி டிரஸ் போடறவங்களை ஆண் தவறான கண்ணோ ட்டத்துல பார்க்கறதில்லைனு உங்களால உத்தரவாதம் கொடுக்க முடியுமா? 



அப்படிப்பட்ட ஆண்களும் இருக்காங்க, நாம தான் ஜாக்கிரதையா இருந்துக்கனும், சில பெண்கள் முதல் பார்வையிலேயே இவன் தவறான் ஆண்னு கெஸ் பண்ணிடுவாங்க, சிலரால அது முடியறதில்லை, மாட்டிக்கறாங்க 



சரி விழாவில் நீங்க பேசுன அடுத்த பாய்ண்டுக்கு வருவோம். ஆண் தப்பு பண்ணா ஐ மீன் ஒரு சின்ன வீடு வெச்சிருந்தா அதனால பெரிய பாதிப்பில்லை , அவன் பாட்டுக்கு சின்ன வீட்டுக்கு போய்ட்டு வந்து இந்த மனைவியையும் கவனிச்சுக்குவான், ஆனா ஒரு பெண் வேற ஒரு ஆள் கூட கனெக்சன் ல இருந்தா அவ புருஷனை, குழந்தையைக்கொலை பண்ணக்கூட அஞ்சறதில்லை அப்டினு சொல்லி இருக்கீங்க, அப்போ ஆண் தப்பு செய்யலாம், ஆனா பொண்ணு தப்பு செய்யக்கூடாதுனு ஆண்கள் பண்ற தப்பை நியாயப்படுத்தற மாதிரி பேசி இருக்கீங்க


நீங்க பேப்பர்ல நியூஸ் எல்லாம் பார்க்கறதில்லை போல., ஒரு ஆண் எப்போ கொலை செய்யறான்? தன் மனைவி வேற ஒருத்தன் கூட தொடர்புல இருக்கறதை நேர்ல பார்த்துட்டா ஆவேசத்துல கொலை பண்றான், சின்ன வீடு வெச்சிருந்தா அதை மெயிண்ட்டெய்ன் பண்றதுக்காக மனைவியைக்கொலை பண்றதில்லை , ஆனா ஒரு பொண்ணு வேற ஒரு கனெக்சன் வெச்சிருந்தா கணவனைக்கொலை செஞ்சுடறா


 சின்ன வீடு வெச்சிருக்கற்தே ஒரு க்ரைம் தானே? அதுல போய் அவன் மனைவியைக்கொலை பண்ணலைனு சர்ட்டிஃபிகேட் கொடுக்கறீங்க ?



அப்டி இல்லை , நீங்க குதர்க்கமாவே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க, ஒரு பெண் தவறு செஞ்சா அவ எக்ஸ்ட்ரீம் லெவல்க்கு போய்டறா. கள்ளக்காதலன் இருந்தா  இனி புருசன் இருக்கறது இடைஞ்சல்.  குழந்தை இருந்தா ஆபத்துனு கொலை பண்ணத்துணியறா, இந்த மாதிரி நியூஸ் வரும்போது பெண்கள் இந்த மாதிரி பண்றதை ஜீரணிக்கக்கஷ்டமா இருக்கு



 அப்போ ஆண்கள் பண்ற தப்பை ஜீரணிச்சுக்கலாமா?



ஆண்கள் தப்பு பண்றது எதிர்பார்த்ததுதான் , ஆனா பெண்கள் தப்பு பண்றது   எதிர்பாராதது இல்லீங்களா?


 அப்போ ஆண்கள் தப்பு பண்ணலாம் , பெண்கள் தப்பு பண்ணக்கூடாது?


 நீங்க என்னை ஆணாதிக்கவாதினு சொல்லிட்டு பெண்ணாதிக்கவாதியா   உங்களை வெளிப்படுத்திக்கிறீங்க , இப்போ டாஸ்மாக் வாசல்ல ஒரு பொண்ணு தண்ணி அடிச்ட்டு மப்புல விழுந்து கிடந்ததா ஒரு நியூஸ் படிச்சேன் , ஸ்கூல் பொண்ணுங்க க்ரூப்பா தண்ணி அடிச்சதை வாட்சப் ல பார்க்கறப்ப அதிர்ச்சியா இருக்கு, இதே ஆண்கள் பண்ணா நமக்கு அது பழகிடுச்சு , பெண்களும் இப்போ ஆரம்பிச்சு இருக்காங்கனு தான் அதிர்ச்சியா இருக்கு, இப்போ நியூஸ் சேனல்ல ஒரு பொண்ணு டாஸ்மாக்ல லைன்ல நின்னு சரக்கு வாங்கறதை  ஃபோகஸ் பண்ணி காட்றான், இதைப்பார்க்கும் ம்ற்ற பெண்கள் அட, இது சகஜம் ஆகிடுச்சு போலனு அவங்களும் பப்ளிக்கா வாங்க ஆரம்பிக்க மாட்டாங்களா? 


 இந்த மாதிரி ஆண்களும் பெண்களும் சரக்கு அடிகக்றதுல அல்லது அந்தப்பழக்கம் ஏற்பட அதிகரிக்க சினிமாவும் ஒரு காரணம்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே? 



சினிமாங்கறது வாழ்க்கை தான் வாழ்க்கைல இருக்கறதைத்தான் சினிமால காட்றோம், சில நேரங்கள் ல என்ன ஆகிப்போகுதுன்னா  எங்கேயோ நடக்கற ஒரு விஷயத்தை சினிமாவா எடுக்கும்போது அதைப்பார்க்கற எல்லாருமே ஓ இப்படி எல்லாம் இருக்கா?னு அவனும் தெரிஞ்சுக்கறான், அதனால இதை சொல்லலாமா? வேணாமா? இதனால பலர் மனம் பாதிக்கப்படுமா? அபடிங்கறக்தை எல்லாம் ஒரு படைப்பாளி தான் தீர்மானிக்கனும்.


 அப்போ நீங்க ஒரு பொறுப்பான படைப்பாளியாத்தான் இருந்து இருக்கீங்களா? 


 அதை ஜனங்க கிட்டே கேட்டுத்தெரிஞ்சுக்குங்க , சினிமாலயே நடக்காத சம்பவங்கள் பல வாழ்க்கைல நடக்குது, ஒரு வாரம் முன் ஒரு தம்பதி நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் வெட்டிங் ஷூட் நடத்தி அதை ஃபேஸ் புக்ல அப்டேட் பண்ணி இருக்காங்க, ரொம்ப நெருக்கமான ஃபோட்டோஸ், மேரேஜ் க்கு முன்பே அதை அப்டேட் பண்றாங்க . எங்க காலத்துல எல்லாம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆனாலும் ஃபோன்ல கூட பேச விட மாட்டாங்க இப்போ ம்காலம் மாறிடுச்சும், கோயில் சினிமா பீச்னு கூட்டிட்டுப்போய் பேசறாங்க , ஆனா இந்த வெட்டிங்ஷூட்  ஓவரோ ஓவர்ங்க , திடீர்னு ஏதொ ஒரு காரணத்தால கல்யாணம் நின்னு போனா பாதிப்பு யாருக்கு? வேற மாப்ளை மறுபொஅடி கட்டிக்கிட்டாக்கூட அவன் என்னஎன்ன கேள்வி எல்லாம் கேட்பானோ? புரியாத புதிர் ரகுவரன் கேரக்டர் மாதிரியோ ,. கல்கி பிரகாஷ் ராஜ் கேரக்டர் மாதிரியோ ஒரு கணவன் அமைஞ்சா அந்தப்பொண்ணோட வாழ்க்கை க்ளோஸ்


 அதனால பொண்ணுங்க தான் ஜாக்கிரதையா இருக்கனும்க்றீங்க? 



 ஆமா அதுதான் அவங்களுக்கும் நல்லது , இந்த சமூகத்துக்கும் நல்லது



 பேட்டியை முடிச்ட்டு வீட்டுக்கிளம்பிய பெண் நிருபர் காரில் வீட்டுக்குப்போகும்போது “ எப்படியாவது இயக்குநரை மடக்கி மன்னிப்புக்கேட்கவைக்கனும்னு  எம் டி கொடுத்த டார்கெட்டை முடிக்க முடியாம போச்சே என்ற கவலையோடு   யோசித்த போது செல் ஃபோனில் ரிங்க் அடித்தது


 எஸ்



 டியர் , செகண்ட் ஷோ சினிமா க்குப்போன நம்ம பொண்ணு இன்னும் வீடுனதிருமபலை , எனக்கு பயமா இருக்கு, அவ செல் ஃபோன் வேற ஸ்விட்ச் ஆஃப் ல இருக்கு, கவலையா இருக்கு, அவளுக்கு அதிக மா சுதந்திரம் கொடுத்து  செல்லமா வளர்த்திட்டம்னு பயமா இருக்கு என்றார்

PRETTY LETHAL (2026) - ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (ஆக்சன் திரில்லர்) @ அமேசான் பிரைம்


PRETTY  LETHAL (2026) - ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (ஆக்சன் திரில்லர்) @ அமேசான் பிரைம் 

                       13/3/2026 முதல்  திரைப்பட விழாவில் திரை இடப்பட்ட    இந்தப்படம் 27/3/2026 முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.


    


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு நடனத்தாரகை.பாலே டான்ஸ் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.யோகாசனத்தில் தாடாசனம் என்ற யோகா இருக்கிறது.கால் விரல்களால் முழு உடலையும் தாங்கி நிற்கும் ஆசனம் அது.அது போல கால் விரல்களால் உடலின் மொத்த எடையையும் தாங்கி ஆடுவது தான் பாலே டான்ஸ்.இது எல்லோராலும் ஆட முடியாது.மிகச்சிலரால் மட்டுமே ஆட முடியும்.குறிப்பாக உடல் எடை குறைவாகஉள்ளவர்கள்,ஒற்றைநாடி சரீரம் உள்ளவர்கள் ,ஒல்லியாக இருப்பவர்கள் மட்டுமே நடனம் ஆட முடியும்


நாயகியும் ,இன்னமும் நான்கு பேரும் ஆக மொத்தம் 5 பேர் கொண்ட குழு ஒரு டான்ஸ் டீச்சரின் தலைமையில் ஒரு ஊரில் நடக்க இருக்கும்  நடனப்போட்டிக்கு பஸ்சில் போகிறார்கள்..போகும் வழியில் பஸ் ரிப்பேர் ஆகி விட ஆறு பேரும் இறஙகி ஒரு பாதையில் நடக்கிறார்கள்.


அது ஒரு கானகப்பகுதி.அருகில் இருக்கும் ஊருக்குப்போனால் போன் செய்து உதவி கேட்கலாம் என்ற ஐடியாவில்  நடக்கிறார்கள்.அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது.அங்கே போய் விசாரிக்கிறார்கள்.உங்களுக்குத்தேவையான உதவி செய்கிறோம்.இங்கே தங்குங்கள். என ஹோட்டல் மேனேஜர் சொல்கிறார்.


அந்த ஹோட்டலில் மொத்தம் 30 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.அந்த ஹோட்டலில் இருக்கும் ஒரு கேங்க்ஸ்டர் டீச்சரை வம்புக்கு இழுக்கிறான்.பளார் என்று டீச்சர் அவனை அறைந்து விடுகிறார்.கோபப்பட்ட வில்லன் துப்பாக்கியால் டீச்சரை சுட்டுக்கொன்று விடுகிறான்.


நாயகி உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி.போலீசுக்கு போன் பண்ணுங்கள் என்று ஹோட்டல் மேனேஜரிடம் சொல்ல அவரோ எதுவும்  உதவாமல் காலம் தாழ்த்துகிறார்.

வில்லன் இந்த ஐவரையும் துரத்துகிறான்.பாலே டான்ஸ் ஸ்டெப் போட்டு ஐவரும் பிரமாதமாக சண்டை போட்டு வில்லனை வீழ்த்துகிறார்கள்.அப்போது வில்லன் அங்கே இருக்கும் 30 பேரிடம். யார் இந்தப்பெண்கள் ஐவரையும் பிடித்துத்தருகிறீர்களோ  அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கிறான்.


அவர்கள் அனைவரிடம் இருந்தும் நாயகி அண்ட் டீம் எப்படித்தப்பிக்கிறார்கள் என்பது தான் மீதித்திரைக்கதை


நாயகி ,டீச்சர் ,மற்றும் தோழிகளாக வரும் ஆறு பேரும் அழகிகள் + பிரமாதமான டான்சர்ஸ்.அவர்களது நடனத்திறமை வியக்க வைத்தது.


பால் லியோனார்டு  மோர்கன்  தான் இசை.பின்னணி இசையில் அதிர வைக்கிறார்.பிரிட்ஜர் நீல்சன் தான் ஒளிப்பதிவு. கண்ணுக்குக்குளுமையாக அழகிகளின் நடனத்தைப்படம் பிடித்தது அருமை எனில் ஆக்சன் சீக்வன்ஸ் அனைத்தும் அதகளம்.


ரிச்சர்டு ஸ்மீத்தரின் எடிட்டிங் கில் படம் 88 நிமிடங்கள் ஓடுகிறது.முதல் 10 நிமிடங்களில். டேக் ஆப் ஆகும் படம் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாகவே போகிறது

கேட் பிரியண்ட் கதை,திரைக்கதை எழுத படத்தை இயக்கி இருப்பவர் விக்கி ஜாசன்.

சபாஷ்  டைரக்டர்

1  ஐந்து. டான்சர்களும் ,அவர்களுக்கு இடையே ஆரம்பத்தில் புரிதல் எதுவும் இல்லாமல் இருப்பதும் ,பின் ஒரு பிரச்சனை வரும்போது சேர்ந்து கொள்வதும் யதார்த்தமாக இருந்தது.


2 டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் செய்தே அதை சண்டையாக மாற்றுவது ,எதிரிகளைத்திகைக்க வைக்கும் அளவு நுனி விரல்களால் பேலன்ஸ் செய்வது பிரமாதம்.


3 ஜாக்கி சானின் மிராக்கிள்ஸ் , ரிவஞ்ச் ஆகிய படங்கள்  அவரது ஸ்டண்ட் சீக்வன்சுக்கு மிகவும் புகழ் பெற்ற படஙகள்.அவற்றிற்கு இணையான ஸ்டண்ட் காட்சிகள் அமர்க்களம்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வெளியே செல்லும் பெண்கள் துணைக்கு (டிரைவர் தவிர)ஒரு ஆணைக்கூட அழைத்து வராதது ஏன்?

2 பஸ்சில் 6 பெண்களும் இருந்துகொண்டு டிரைவரை அனுப்பி உதவி கிடைக்குமா?என்று பார்க்க சொல்லி இருக்கலாம்

3 வன்முறை அதிகம்.ரத்தம் தெறிக்கத்தெறிக்க  சண்டைக்காட்சிகள்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆக்சன் திரில்லர் விரும்பிகள் ,பாலே டான்ஸ் பிரியர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க். 2.5 / 5


Pretty Lethal
Release poster
Directed byVicky Jewson
Written byKate Freund
Produced by
  • Kelly McCormick
  • Mike Karz
  • William Bindley
  • Piers Tempest
Starring
CinematographyBridger Nielson
Edited byRichard Smither
Music byPaul Leonard-Morgan[1]
Production
companies
Distributed byAmazon MGM Studios (via Prime Video)
Release dates
  • March 13, 2026 (SXSW)
  • March 25, 2026 (worldwide)
Running time
88 minutes[1]
Countries
  • United States
  • United Kingdom[1]
LanguageEnglish

Sunday, April 26, 2026

THAT NIGHT (2026) -ஆங்கிலம் /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் திரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்


இந்த வெப் சீரிஸ் 6 எபிசோடுகள் கொண்டது.ஒவ்வொரு எபிசோடும்  38 நிமிடங்கள் டூ. 46 நிமிடங்கள் ஆக மொத்தம்  3 மணி நேரம் ஒதுக்கினால் ஒரே சிட்டிங்கில் பார்த்து முடித்து விடலாம்.நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங் உடன் இருக்கிறது

கில்லியன் மெக் அலிஸ்ட்டர் எழுதிய ஸ்பானிஷ். நாவல் ஆன ESA NOCHE(That Night)ஐத்தழுவி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி சிங்கிள் மதர்.ஒரு கைக்குழந்தை இருக்கிறது.இவளுக்கு  இரு சகோதரிகள் இருக்கிறார்கள்.அப்பா இருக்கிறார்,அம்மா இல்லை.


நாயகி காரில் பயணிக்கும்போது ஒரு விபத்து நடக்கிறது.ஒரு போலிஸ் ஆபீசரை இடித்து விடுகிறாள்.பதட்டத்தில் என்ன செய்வது என்றே அவளுக்குத்தெரியவில்லை.தன் இரு சகோதரிகளுக்கும் போன் பண்ணி தகவல் சொல்கிறாள்.


நாயகியின் சகோதரிகள் இருவரும் சம்பவம் நடந்த இடத்துக்கு வருகிறார்கள்.செக் செய்து பார்த்தால் ஆள் அவுட்.நாயகி பதறி விடுகிறாள்.அழுகிறாள்.எனக்கு ஒரு குழந்தை இருக்கே?நான் ஜெயிலுக்குப்போய் விட்டால்  குழந்தையின் எதிர் காலம் என்ன ஆகும்?என பதறுகிறாள்.


சகோதரிகள் நாயகியை சமாதானப்படுத்தி அந்தப்பிணத்தை டிஸ்போஸ் செய்ய உதவுகிறார்கள்.


சகோதரிகளுக்குத்தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது.நாயகி ஆக்சிடெண்ட்டலாக அந்த போலீஸ் ஆபீசரை இடித்து விட்டேன் என்று சொன்னது பொய்.அவள் கொலை தான் செய்திருக்கிறாள்.


நாயகி எதற்காக அந்தக்கொலையை செய்தாள்?நாயகிக்கு உதவிய இரு சகோதரிகளும்,அவர்கள் மூவருக்கும் அடைக்கலம் கொடுத்த அப்பாவுக்கும் என்ன என்ன பிரச்சனைகள் ஏற்பட்டது?மீடியாக்கள் ,போலீஸ் டிபார்ட்மெண்ட் இவற்றை எப்படி டீல் செய்தார்கள்?என்பது மீதி திரைக்கதை.

நாயகி எலீனாவாக க்ளாரா கலே பிரமாதமாக நடித்திருக்கிறார்.பதட்டம்,அழுகை,கோபம்,ஆத்திரம் என நவ ரசங்களும் அவர் முகத்தில் தாண்டவம் ஆடுகிறது.படம் முழுக்க ஒரு கைக்குழந்தையை நெஞ்சில் கட்டிக்கொண்டே வருவதால் அவர் மீது நமக்கு அனுதாபம் உருவாகிறது.


நாயகியின் சகோதரிகள் பவுலா,கிரிஸ் ஆக க்ளாடியா சலாஸ்,பவுலா உசேரோ ஆகியோர் திறம் பட நடித்திருக்கிறார்கள்.மூவருக்கும் நடிக்க சம வாய்ப்பு.

அப்பாவாக நடித்தவர் தன் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.கொலை ஆகும் போலீஸ் ஆபீசர் ஆக நடித்தவர் சரியான வில்லத்தனம் செய்கிறார்.

நாயகியின் மகள் 20 வயது ஆன பின் கோர்ட்டுக்கு வந்து ஸ்டேட்மெண்ட் கொடுக்கும் காட்சியில் உணர்ச்சிப்பிழம்பான நடிப்பு.


ஒளிப்பதிவு ,இசை ,எடிட்டிங்  போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு.

ஜேசன் ஜார்ஜ்,லாரா சேண்டிம்  ஆகிய இருவரும் இணைந்து திரைக்கதை எழுத லிலியானா டோரஸ் ஜார்ஜ் டோரடோ ஆகிய  இருவரும் இணைந்து இயக்கி இருக்கிறார்கள்.

சபாஷ்  டைரக்டர்

1 வெப் சீரிசில் வரும் 6 எபிசோடுகளிலும் 6 முக்கியக்கேரக்டர்களை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு எபிசோடில் அறிமுகப்படுத்தி அவர்கள் கண்ணோட்டத்தில் கதை சொன்ன விதம் அருமை

2 படத்தில் வரும் முக்கியக்கேரக்டர்களுடன் நமக்கு எமோஷனல் கனெக்ட் ஏற்பட்டு விடுவது ஒரு பிளஸ்


  ரசித்த  வசனங்கள் 

1 ஒரு நாயை அதன் தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது.


2 நமக்காக அதிகமா உருகறவங்க நம்மிடம் ரொம்ப அட்டாச்மெண்ட்டா இருப்பாங்க.

3 உங்க கிட்டே வாலை ஆட்டிட்டு இருக்கறவங்களை எப்பவும் கை விடக்கூடாது.

4 யதார்த்தத்தில் சந்தோஷமானமுடிவுன்னு ஒண்ணு இருக்கா?சந்தேகமா இருக்கு.

5  சாக்லெட் நாய்களுக்கு விஷம்.

6 வாழ்க்கையோட அதிசயம் நமக்கு மரண தண்டனை விதிக்கறதுல இருக்கு.

7 அம்மாக்களை எப்பவும் நம்ப முடியாது.பாசமா செய்யறதா நினைச்சு எதையாவது செஞ்சு வெச்சிடுவாங்க.

8 குழந்தைகளுக்குத்தேவை வெறும் அன்பு மட்டுமே.

9  செய்வதை மட்டும் வேற மாதிரி செஞ்சு பலனை வேற மாதிரி எதிர் பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

10. ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் நேர்மையாக இருப்பது மிக அவசியம்.

11 நான் பொய் சொல்லப்போறதில்லை,நீ என் கிட்டே சொன்ன பொய்களே போதுமான அளவு என் கிட்டே இருக்கு.

12. உன் கடந்த காலம் உன் நிகழ்காலத்தை நாசமாக்காமல் பார்த்துக்கோ.

13 தற்காப்புக்காக உண்மையின் ஒரு பக்கத்தை மறைப்பதில் தப்பில்லை.


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 மூன்று மணி நேரம் ஓடும் திரைக்கதையை சுருக்கமாக ஒன்றரை மணி நேரத்தில் முடித்து இருக்கலாம்.வேண்டும் என்றே ஜவ்வாக இழுத்து விட்டார்கள்.

2 க்ரைம் திரில்லர் என்று சொல்லி விட்டு பெண்களை வசீகரிக்கும் அழுகைக்காட்சிகள்,அம்மா-மகள் பாசம் என்று தமிழ் டி வி சீரியல் மாதிரி பாச மழைதான்

3 மூன்று நாயகிகளுக்கும்  தலா ஒரு துணை ,அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என திரைக்கதை எங்கெங்கோ போகிறது.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டைட்டில்,போஸ்டர் டிசைன் பார்த்தால் ஆண்களுக்கானது போலத்தோன்றும்.முழுக்க முழுக்க இது பெண்ககுக்கான எமோஷனல் டிராமா.ரேட்டிங்க் 3/5


Saturday, April 25, 2026

WHISTLE(2026)- ஆங்கிலம் - சினிமா விமர்சனம் (ஹாரர் திரில்லர்)@அமேசான் பிரைம்

                               

இந்தப்படம் 13/2/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி  3 மில்லியன் டாலர் வசூல் செய்த ஒரு லோ பட்ஜெட் படம்.25/9/2025 ல் பெண்டாஸ்டிக் பெஸ்ட் (Fantastic Fest) திரைப்பட விழாவில் திரை இடப்பட்டு பலரது பாராட்டுக்களைப்பெற்ற படம்.இப்போது அமேசான் பிரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது.


மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா வசனம் எழுதி  ஜே டி ஜெர்ரி இயக்கத்தில் காயத்ரிரகுராம்,ஷெரின் நடிப்பில் 2003 ம் வருடம் வெளியான விசில் படத்துக்கும் இந்தப்படத்துக்கும் எந்த சம்பந்தமும்  இல்லை.அந்த விசில் படம் 1998 ம் ஆண்டு வெளிவந்த அர்பண்ட் லெஜெண்ட் என்ற ஹாலிவுட் படத்தின் அபிசியல் ரீ மேக்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு ஸ்கூல் டீச்சர்.அவருக்கு உடைகள் வைக்க ஒரு லாக்கர் ரூம் ஒதுக்கப்படுகிறது.அந்த லாக்கர் ரூமில் ஒரு விசில் இருப்பதை நாயகி பார்க்கிறாள்.பார்க்க மிக வித்தியாசமாக இருப்பதால் அதை அவள் தன் கைப்பையில் எடுத்து வைத்துக்கொள்கிறாள்.அந்த விசில் நாயகியிடம் இருந்து கை மாறி  வேறு ஒரு டீச்சர் வசம் போகிறது.அடுத்த சில நிமிடங்களில் அவர் கொடூரமாக இறந்து விடுகிறார்.

படத்தின் ஓப்பனிங்க் ஷாட்டில் ஒரு ஸ்கூலில் மாணவர்கள் பேஸ்கட் பால் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.அந்த விளையாட்டில் ஸ்டார் பிளேயர் ஆன ஒரு மாணவனின் கண்களுக்கு மட்டும் எரிந்த நிலையில் கருப்பான ஒரு உருவம்  அவனை நோக்கி வருவது போல் தெரிகிறது.பயப்படுகிறான்.ஆனால் சக மாணவர்களிடம் எதுவும் சொல்லவில்லை.


விளையாட்டு முடிந்த பின் அந்த ஸ்டார் பிளேயர் பாத்ரூமில் குளிக்கப்போகிறான்.அப்போதும் அந்த உருவம் அவனைப்பின் தொடர்வதாக உணர்கிறான்.5 நிமிடத்தில் ஒரு அலறல் சத்தம் கேட்கிறது.மாணவர்கள் ஓடி வந்து பார்த்தால் எரிந்த நிலையில் அந்த ஸ்டார் பிளேயர் மாணவன் ஷவருக்குக்கீழ் பிணமாகக்கிடக்கிறான்.மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.ஷவரில் குளிக்கும் மாணவன் எப்படி தீப்பிடித்து எரிய முடியும்?,என்ற விசித்திரமான கேள்விக்கு விடை இல்லை.

இப்போது படம் பார்க்கும் நமக்கு ஒரு விஷயம் தெளிவாகத்தெரிந்து விடுகிறது.அந்த விசிலை யார் எடுத்து ஊதினாலும் அவன் அவனுக்கே ஊதிக்கொள்ளும் சங்கு என்பது தான் அந்த ரகசியம்.

அந்த மாணவன் இறந்ததும் அந்த விசிலால் தான்.மாணவனின் லாக்கர் ரூமில் நாயகி எடுத்துக்கை மாறி வேறு ஒருவரிடம் போய் ஊதப்பட்டதும் அவர் மரணம் அடைவதும் அந்த விசிலால் தான்.


ஆனால் இந்த விஷயம் நாயகிக்கோ ,மற்றவர்களுக்கோ தெரியாது.படம் பார்க்கும் நமக்கு மட்டும் அந்த விஷயம் தெரியும்.


இப்போது ஒரு பார்ட்டி நடக்கிறது,நாயகியும் அதில் கலந்து கொள்கிறார்.அந்த விசில் பல கை மாறி இப்போது வேறு ஒரு நபர் வசம் கிடைக்கிறது.அவர் விசிலை ஊத  பலரும் அந்த விசில் சத்தத்தைக்கேட்டு விடுகிறார்கள்.

இதற்குப்பின் நிகழும் கொடூரமான சம்பவங்கள் தான் படத்தின் மீதித்திரைக்கதை.


நாயகி ஆக டபீன் கீன் பெர்னாண்டஸ் பிரமாதமாக  நடித்திருக்கிறார்.இவர் த ரெப்யூஜீஸ்(2015) ,படத்தின் நாயகி.இவருக்குத்திருப்பு முனை கதாப்பாத்திரம் ஆக அமைந்தது எக்ஸ் மேன் சூப்பர் ஹீரோ படமான  Logan 2017 தான்.அந்தப்படத்தின் வெற்றிக்குப்பின் சம்பளத்தை டபுள் மடங்கு ஏற்றி விட்டார்.தரமான நடிப்பு அவருடையது.


படத்தில் நடித்த மற்ற அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.



ஓவென் எகெர்ட்டன் என்பவர் கதை,திரைக்கதை எழுத காரின் கார்டி இயக்கிய படம் இது.The Hallow(2015),த ஹாலோ ,The Nun(2018) த நன் ஆகிய புகழ் பெற்ற சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர் படங்களை இயக்கிய வரின் மூன்றாவது படம் இது.ஹாட்ரிக் ஹிட் அடித்து விட்டார் என்றே சொல்லலாம்.


ஒளிப்பதிவு ,எடிட்டிங், சவுண்ட் டிசைனிங்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் அனைத்தும் அருமை

நிக்கோலசின் எடிட்டிங் கில் படத்தின் ரன்னிங் டைம் 100 நிமிடங்கள்.

சபாஷ்  டைரக்டர்

1 படம் போட்டு முதல் 10 நிமிடக்காட்சிகளிலேயே ரசிகர்களை அலற விட்ட விதம்

2  நாயகியின் அருமையான நடிப்பால் ஆடியன்சுக்கு எமோஷனல் கனெக்ட். தந்த விதம்

3 விசுவல் எபக்ட்ஸ் , கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஒர்க் எல்லாம் செம


 லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 படத்தின் கதைக்கரு ஏற்கனவே நயோமி வாட்ஸ் நடித்த. The Ring த ரிங் (2002) படத்தின் கதைக்கரு தான்.இந்தப்படத்தில் ஒரு வீடியோ கேசட் இருக்கும்.அதை யார் எல்லாம் ஓட்டிப் பார்த்தார்களோ  அவர்கள் கொடூர மரணம் அடைவார்கள்.வீடியோவைப்பார்த்த 7 நாட்களில் மரணம் நிகழும்.அதே கான்செப்ட் தான்.அதில் வீடியோ கேசட்.இதில் விசில்.

2 படத்தில் நிகழும் கொடூர மரணஙகள் அனைத்தும் ஏற்கனவே 2000 ம் ஆண்டில் வெளியான Final Destination  பைனல் டெஸ்ட்டினேசன் படத்தின் காட்சி அமைப்புகளில் இருந்து இன்ஸ்பயர் ஆகி அதே போல்   ஷூட் செய்து இருக்கிறார்கள்.

3 படத்தில் பெரும்பாலான காட்சிகள் நாம் சுலபமாக யூகிக்கக்கூடியவை தான்.எதிர்பாராத  திருப்பஙகள் எதுவும் இல்லை

4  ஹாரர் திரில்லர் ஜர்னரில் ஒரே மாதிரி டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான். டாக் டூ மீ (Talk to me) 2022 படம் மாதிரி மாறுபட்ட திரைக்கதை  அம்சம் எதுவும் இல்லை.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+ கர்ப்பிணிப்பெண்கள் தவிர்க்கவும்.கொடூரமான  மரணங்கள் மனதை பாதிக்கலாம்.ஒரு இதழ் முத்தக்காட்சி உண்டு.



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஹாரர் திரில்லர் ரசிகர்களைப்பரவசப்படுத்தும் படம் தான்.புதிதாக எதுவும் இல்லை.ரேட்டிங்க் 3/5


டிஸ்கி - விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு தகவல்.நடிகர் விஜய் கட்சிக்கான சின்னம் விசில் என்பதால் கண்டக்டர்கள் ,அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிகள்,துப்புரவுப்பணியாளர்கள் யாரும் விசில் உபயோகிக்கக்கூடாது என்பது மாதிரி மீம்ஸ் வந்து கொண்டிருக்கிறது.விசிலுக்குத்தடையா? என்ற டைட்டில் கூட கேட்சியாக இருக்கும்.இந்தப்படத்தின் டைட்டில் கூகுள் சர்ச்சில்  அதிகமானோர் தேடும் பட்டியலில் இருப்பதால் இந்தப்படத்துக்குக்கூடத்தடை வரலாம்



Whistle
Canadian theatrical release poster
Directed byCorin Hardy
Written byOwen Egerton
Produced by
Starring
CinematographyBjörn Charpentier
Edited byNicholas Emerson
Music byDoomphonic
Production
companies
Distributed by
Release dates
  • 25 September 2025 (Fantastic Fest)
  • 6 February 2026 (North America)
  • 13 February 2026 (Ireland and the United Kingdom)
Running time
100 minutes[a]
Countries
  • Canada
  • Ireland
LanguageEnglish
Box officeUS$3 million[5][6]