Showing posts with label THAT NIGHT (2026) -ஆங்கிலம் /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம். Show all posts
Showing posts with label THAT NIGHT (2026) -ஆங்கிலம் /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம். Show all posts

Sunday, April 26, 2026

THAT NIGHT (2026) -ஆங்கிலம் /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் திரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்


இந்த வெப் சீரிஸ் 6 எபிசோடுகள் கொண்டது.ஒவ்வொரு எபிசோடும்  38 நிமிடங்கள் டூ. 46 நிமிடங்கள் ஆக மொத்தம்  3 மணி நேரம் ஒதுக்கினால் ஒரே சிட்டிங்கில் பார்த்து முடித்து விடலாம்.நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங் உடன் இருக்கிறது

கில்லியன் மெக் அலிஸ்ட்டர் எழுதிய ஸ்பானிஷ். நாவல் ஆன ESA NOCHE(That Night)ஐத்தழுவி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி சிங்கிள் மதர்.ஒரு கைக்குழந்தை இருக்கிறது.இவளுக்கு  இரு சகோதரிகள் இருக்கிறார்கள்.அப்பா இருக்கிறார்,அம்மா இல்லை.


நாயகி காரில் பயணிக்கும்போது ஒரு விபத்து நடக்கிறது.ஒரு போலிஸ் ஆபீசரை இடித்து விடுகிறாள்.பதட்டத்தில் என்ன செய்வது என்றே அவளுக்குத்தெரியவில்லை.தன் இரு சகோதரிகளுக்கும் போன் பண்ணி தகவல் சொல்கிறாள்.


நாயகியின் சகோதரிகள் இருவரும் சம்பவம் நடந்த இடத்துக்கு வருகிறார்கள்.செக் செய்து பார்த்தால் ஆள் அவுட்.நாயகி பதறி விடுகிறாள்.அழுகிறாள்.எனக்கு ஒரு குழந்தை இருக்கே?நான் ஜெயிலுக்குப்போய் விட்டால்  குழந்தையின் எதிர் காலம் என்ன ஆகும்?என பதறுகிறாள்.


சகோதரிகள் நாயகியை சமாதானப்படுத்தி அந்தப்பிணத்தை டிஸ்போஸ் செய்ய உதவுகிறார்கள்.


சகோதரிகளுக்குத்தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது.நாயகி ஆக்சிடெண்ட்டலாக அந்த போலீஸ் ஆபீசரை இடித்து விட்டேன் என்று சொன்னது பொய்.அவள் கொலை தான் செய்திருக்கிறாள்.


நாயகி எதற்காக அந்தக்கொலையை செய்தாள்?நாயகிக்கு உதவிய இரு சகோதரிகளும்,அவர்கள் மூவருக்கும் அடைக்கலம் கொடுத்த அப்பாவுக்கும் என்ன என்ன பிரச்சனைகள் ஏற்பட்டது?மீடியாக்கள் ,போலீஸ் டிபார்ட்மெண்ட் இவற்றை எப்படி டீல் செய்தார்கள்?என்பது மீதி திரைக்கதை.

நாயகி எலீனாவாக க்ளாரா கலே பிரமாதமாக நடித்திருக்கிறார்.பதட்டம்,அழுகை,கோபம்,ஆத்திரம் என நவ ரசங்களும் அவர் முகத்தில் தாண்டவம் ஆடுகிறது.படம் முழுக்க ஒரு கைக்குழந்தையை நெஞ்சில் கட்டிக்கொண்டே வருவதால் அவர் மீது நமக்கு அனுதாபம் உருவாகிறது.


நாயகியின் சகோதரிகள் பவுலா,கிரிஸ் ஆக க்ளாடியா சலாஸ்,பவுலா உசேரோ ஆகியோர் திறம் பட நடித்திருக்கிறார்கள்.மூவருக்கும் நடிக்க சம வாய்ப்பு.

அப்பாவாக நடித்தவர் தன் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.கொலை ஆகும் போலீஸ் ஆபீசர் ஆக நடித்தவர் சரியான வில்லத்தனம் செய்கிறார்.

நாயகியின் மகள் 20 வயது ஆன பின் கோர்ட்டுக்கு வந்து ஸ்டேட்மெண்ட் கொடுக்கும் காட்சியில் உணர்ச்சிப்பிழம்பான நடிப்பு.


ஒளிப்பதிவு ,இசை ,எடிட்டிங்  போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு.

ஜேசன் ஜார்ஜ்,லாரா சேண்டிம்  ஆகிய இருவரும் இணைந்து திரைக்கதை எழுத லிலியானா டோரஸ் ஜார்ஜ் டோரடோ ஆகிய  இருவரும் இணைந்து இயக்கி இருக்கிறார்கள்.

சபாஷ்  டைரக்டர்

1 வெப் சீரிசில் வரும் 6 எபிசோடுகளிலும் 6 முக்கியக்கேரக்டர்களை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு எபிசோடில் அறிமுகப்படுத்தி அவர்கள் கண்ணோட்டத்தில் கதை சொன்ன விதம் அருமை

2 படத்தில் வரும் முக்கியக்கேரக்டர்களுடன் நமக்கு எமோஷனல் கனெக்ட் ஏற்பட்டு விடுவது ஒரு பிளஸ்


  ரசித்த  வசனங்கள் 

1 ஒரு நாயை அதன் தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது.


2 நமக்காக அதிகமா உருகறவங்க நம்மிடம் ரொம்ப அட்டாச்மெண்ட்டா இருப்பாங்க.

3 உங்க கிட்டே வாலை ஆட்டிட்டு இருக்கறவங்களை எப்பவும் கை விடக்கூடாது.

4 யதார்த்தத்தில் சந்தோஷமானமுடிவுன்னு ஒண்ணு இருக்கா?சந்தேகமா இருக்கு.

5  சாக்லெட் நாய்களுக்கு விஷம்.

6 வாழ்க்கையோட அதிசயம் நமக்கு மரண தண்டனை விதிக்கறதுல இருக்கு.

7 அம்மாக்களை எப்பவும் நம்ப முடியாது.பாசமா செய்யறதா நினைச்சு எதையாவது செஞ்சு வெச்சிடுவாங்க.

8 குழந்தைகளுக்குத்தேவை வெறும் அன்பு மட்டுமே.

9  செய்வதை மட்டும் வேற மாதிரி செஞ்சு பலனை வேற மாதிரி எதிர் பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

10. ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் நேர்மையாக இருப்பது மிக அவசியம்.

11 நான் பொய் சொல்லப்போறதில்லை,நீ என் கிட்டே சொன்ன பொய்களே போதுமான அளவு என் கிட்டே இருக்கு.

12. உன் கடந்த காலம் உன் நிகழ்காலத்தை நாசமாக்காமல் பார்த்துக்கோ.

13 தற்காப்புக்காக உண்மையின் ஒரு பக்கத்தை மறைப்பதில் தப்பில்லை.


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 மூன்று மணி நேரம் ஓடும் திரைக்கதையை சுருக்கமாக ஒன்றரை மணி நேரத்தில் முடித்து இருக்கலாம்.வேண்டும் என்றே ஜவ்வாக இழுத்து விட்டார்கள்.

2 க்ரைம் திரில்லர் என்று சொல்லி விட்டு பெண்களை வசீகரிக்கும் அழுகைக்காட்சிகள்,அம்மா-மகள் பாசம் என்று தமிழ் டி வி சீரியல் மாதிரி பாச மழைதான்

3 மூன்று நாயகிகளுக்கும்  தலா ஒரு துணை ,அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என திரைக்கதை எங்கெங்கோ போகிறது.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டைட்டில்,போஸ்டர் டிசைன் பார்த்தால் ஆண்களுக்கானது போலத்தோன்றும்.முழுக்க முழுக்க இது பெண்ககுக்கான எமோஷனல் டிராமா.ரேட்டிங்க் 3/5