Friday, May 30, 2025

PRINCE AND FAMILY (2025) மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

           

             புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்  தனது 100வது படமான கேப்டன் பிரபாகரன் -படத்தை   எப்படி புலன் விசாரணை மூலம் அறிமுக இயக்குனர் ஆக்கிய ஆர் கே செல்வமணியை நம்பிக்கொடுத்து இருந்தாரோ அது போல  ஒரு அறிமுக இயக்குனரை நம்பி நடிகர்  திலீப் தனது 150 வது படத்தை   கொடுத்திருக்கிறார் .9/5/2025 முதல் திரை  அரங்குகளில் ரிலீஸ் ஆகி  கமர்ஷியல் ஹிட் ஆகி உள்ள இந்தப்படம்  விமர்சகர்களிடையேயும் பாசிட்டிவ்  விமர்சனங்களைப்பெற்று வருகிறது 



திலீப்  முதலில்   மஞ்சு   வாரியரைத்திருமணம்  செய்தார் . இவரது  சில  விஷயங்களை நடிகை பாவனா  மஞ்சு வாரியரிடம்  ஆதாரத்துடன்  அம்பலப்படுத்தியதால்  இவரை  அவர்   டைவர்ஸ்   செய்து  விட் டார் . இதனால்  கடுப்பான  திலீப்   நடிகை  பாவனாவை    அடியாட்களை  வைத்து  பாலியல்    வன்கொடுமை    செய்து  அதை   வீடியோ ஆக்கி  வலைத்தளங்களில்  பரப்பினார் என இவர் மீது இன்னமும் கேஸ் உண்டு . இவர் பிறகு நடிகை காவ்யா   மாதவனை திருமணம் செய்து கொண்டார் . ஒரு நெகடிவ்  இமேஜ் இருந்தாலும்   சினி பீல்டில் ரசிகர்களின் தொடர் ஆதரவு உண்டு . ஜனப்பிரிய நாயகன் ( பாப்புலர்  ஹீரோ )      என்ற  பட்டப்பெயர் உண்டு. இவருக்கு  இப்போது 57 வயது ஆகிறது  

ஸ்பாய்லர்  அலெர்ட்

திருமணப்பெண்கள்  காஸ்ட்யூம் டிசைன் , டெ க்ரேஷன்  ஆகியவற்றைக்கவனித்த்துக்கொள்ளும் நிறுவனம் ஒன்றை நாயகன் நடத்தி  வருகிறார் . இவருக்கு இரண்டு தம்பிகள்  உண்டு . இருவருக்கும் திருமணம்  ஆகி விட்ட்து . ஆனால்  இவருக்கு   இன்னமும் திருமணம்   ஆகவில்லை . காரணம்  இந்தப்பெண்  சரி இல்லை , அந்தப்பெண்ணிடம் அந்தக்குறை உள்ளது  என ஏதாவது  குறை  சொல்லியே   வரன்களைத்தட்டிக்கழித்து வருகிறார் 


நாயகனின்  நிறுவனத்த்துக்கு   எதிரே   இருக்கும் ஒரு வங்கியில்  ஓரு அழகிய பெண்  புதிதாகப்பணிக்கு வருகிறார் .நாயகனுக்கு   அவரை மிகவும் பிடித்து   விடுகிறது . அந்தப்பெண்ணுக்கு அம்மா  உண்டு , ஆனால் அப்பா இல்லை . நண்பனின்  ஆலோசனைப்படி   நாயகன்  அந்தப்பெண்ணின்  அம்மாவுக்கு  பல உதவிகள் செய்ய    நாயகன்  அந்தப்பெண்ணைக்கரெக்ட்  பண்ணுவதற்குப்பதிலாக   அந்தப்பெண்ணின் அம்மா   நாயகனைக்கரெக்ட் பண்ண முயல்கிறார்  .  இந்தக்காமெடி   கலா ட்டாக்கள்  முதல் பாதி   திரைக்கதையை ஜாலியாகக்கொண்டு போகிறது 


ஒருவழியாக   அந்தப்பெண்ணைக்கடந்து   மேட்ரிமோனியல் சைட்   மூலம்   நாயகனுக்கு நாயகியின் அறிமுகம் கிடைக்கிறது . நாயகி  ஒரு  சோசியல் மீடியா பைத்தியம் . அவரது   வாழ்வில் எந்த நிகழ்வு   நடந்தாலும்   அதை லைவ்  வீடியோ , ரீல்ஸ் போட்டு   லைக்ஸ்   வாங்குபவர் . பொதுவாக  ஒரு ஆண்  பதிவுகள்  போட்டு லைக்ஸ்   வாங்க  அறிவுப்பூர்வமாக   சிந்தித்து , மெனக்கெட்டு  கட்டுரைகள்   எழுத வேண்டும் . பெண்களுக்கு  அந்த ரிஸ்க் எல்லாம் தேவை இல்லை . சும்மா   செல்பி  போட்டே  லைக்ஸ்   அள்ளி  விடலாம்  எல்லாப்பெண்களும் அப்படி இல்லை 95%  பெண்கள் மட்டும் தான் அப்படி 


நாயகன்  - நாயகி   இருவருக்கும் திருமணம்  நடக்கிறது . லைவ்  ரீல்ஸ்  பைத்தியம் ஆன  நாயகி   நாயகனுக்கு என்ன எல்லாம் டார்ச்சர்   கொடுத்தார் ? நாயகனின்   குடும்பம் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்ட்து  என்பதை காமெடியாகக்கொஞ்சம் சீரியசாகக்கொஞ்சம் காட்டுகிறார்கள். இறுதியில்   அவர்களது   மண வாழ்க்கை என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்  


நாயகன்  ஆக   திலீப்  . வழக்கமான   காமெடி  பாணியில்   இவர்  படம் முழுக்க  அண்டர் பிளே  ஆக்டிங்கில்  அசத்தி இருக்கிறார் . நம்ம   ஊர்   பாக்யராஜ் , பாண்டியராஜன் பாணியில்    இவரது நடிப்பு இருக்கும் . இவரது கேரக்ட்டர்   மீது  ஒரு பரிதாபத்தை ஏற்படுத்த்துகிற மாதிரி  பார்த்துக்கொள்வார் . அந்த பார்முலா இதிலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது 


  நாயகி ஆக  புதுமுகம்   ரணியா   ராணா   அட்டகாசமான  நடிப்பு  கதையைத்தாங்கி நிற்கிறது . அங்கங்கே  ஜோதிகாத்தனம் கலந்த ஓவர் ஆக்டிங்காக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது 


வங்கி   அதிகாரியாக வரும் மீனாட் சி  நல்ல அழகு . நடிப்பும் அருமை . அவரது அம்மா கேரக்ட்டரில்  வரும் பெண் நாயகனிடம் வெட்கப்படும்போது தியேட் டரில் கைதட்டல்  ஆரவாரம் அடங்க நெடு நேரம் ஆனது 


நாயகனின் நண்பனாக   வரும் இயக்குனர்  ஜானி ஆண்டனி நடிப்பு அருமை .நாயகனின்  அம்மா, அப்பாவாக  பிந்து  பணிக்கர் , சித்திக்   நல்ல குணச்சித்திர நடிப்பு  நாயகனின் தம்பியாக வரும் தியான்   சீனிவாசன்   எடுபடவில்லை . நாயகனின்   அக்கா முறை   யாக   வரும்  மஞ்சு  பிள்ளை   பிரமாதமான  நடிப்பு . நல்ல முக வசீகரம் , ஒரு கேமியோ   ரோலில்  ஊர்வசி   வருகிறார் 


சணல் தேவின் இசையில்  ஒரே ஒரு பாடல் சுமார் ரகம்  பின்னணி  இசை   காமெடிக்கொண்டாட்டம் . ஒளிப்பதிவு   ரனதேவ் . சோசியல்  மீடியா   ரீல்ஸ்களை   நன்கு  படமாக்கி உள்ளார்  அறிமுக   இயக்குனர்  பின்ட் டோ  ஜோசப்   திரைக்கதை   அமைத்து இயக்கி இருக்கிறார் . குடும்பத்துடன்  பார்க்கத்தகுந்த   காமெடி மெலோ டிராமாவாகப்பிரசண்ட் செய்ததில் வெற்றி  பெற்றிருக்கிறார் 



சபாஷ்  டைரக்டர்

1   நாயகன்   தன்  தம்பி    யின்  ஜாலி  லைப்பைக்கண்டு கடுப்பாவது , பொறாமைப்படுவது , புலம்புவது  எல்லாமே  காமெடி  கலாட்டாக்கள்   


2  நாயகனின்  அக்கா  முறை ஆகும்  பெண் உடைய  ஹோட்டலை  மட் டம்   தட்டி   நாயகி போஸ்ட் போடுவதும் , நாயகன்   ஹோட்டலை  பாராட்டி போஸ்ட் போடுவதும்  அதனால்    இருவருக்கும்  ஈகோ  கிளாஸ்   ஏற்படுவதும் அழுத்தமான திரைக்கதை 


3  நாயகி   தான் கர்ப்பமாக இருப்பதாகப்பொய் சொல்லி  நாயகனின் குடும்பத்தை  ஏப்ரல் பூல்  பண்ணுவதும்  அதை போஸ்ட் ஆகப்போட்டு லைக்ஸ் தேத்துவதும்   மனதைத்தொடும்  செண்ட் டி மெண்ட்   சீன் 


4   ஒரு  பெண்ணின்  மரணத்துக்குத்தான் காரணம் என்பதை அறிந்து நாயகி அழுவது  மனம் திருந்துவது , நாயகனிடம் மன்னிப்புக்கேட்பது  மிக  யதார்த்தமான காட் சிகள் 


5   நாயகியின்   சோசியல்  மீடியா  அடிக் ட்  சீன்கள்   கொஞ்ச்ம   ஓவர் டோஸ்  என்றாலும்  அவரது நடிப்பு பிரமாதம் 


6  படத்தின்  முதல் பாதி  காமெடி , பின் பாதியில் கடைசி  30 நிமிடங்கள்   சென்ட்டிமென்ட்   சீன்கள்   என நன்கு ஒர்க் அவுட் ஆன திரைக்கதை 

7  வங்கி    அதிகாரியின்   அம்மாவுடன்   நாயகனின்  காமெடி    சீன்கள்   தியே ட்டரில்   ஆடியன்ஸிடம்   நல்ல    வரவேற்பு 

8  சோசியல்  மீடியா , நியூஸ் சேனல்  பற்றி ஊர்வசி கொடுக்கும் க்ளைமாக்ஸ் லெக்சர்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 




1   சி சி டி வி  கேமரா முன் நின்று மேரேஜூக்கு   இன்வைட் பண்றீங்களே? அது ஒர்க் ஆகாத சி சி டி வி  கேமராவா இருந்தா என்ன ஆகும் ? எப்படி அவங்களுக்குத்தகவல் தெரியும் ?

 அது அவங்க  பிரச்சனை , நமக்கு என்ன போச்சு ? நம்ம கடமை முடிஞ்சுது

2  நான்  பேஷன் டிசைனிங்க்  படிச்சு முடிச்சிருக்கேன் , அதனால பிராடக்ட் ட எப்படி செலக்ட் பண்ணனும்னு எனக்குத்தெரியும்


ஓஹோ , பெண்பார்த்துக்கல்யாணம் செய்வது உனக்கு பிராடக்ட்  மாதிரி  இருக்கா?


3  அவ உனக்கு  என்ன முறை ?

 பிரண்டுக்கு மேல , லவ்வருக்குக் கீழே

4   ஒரு  சந்தோஷமான விஷயம், உன் தம்பி  அப்பா   ஆகப்போறான்

ஓஹோ , யாருக்கு ?

 சுத்தம், அவனோட குழந்தைக்கு

5  ஒரு முறை செய்த தப்பை மீண்டும் செய்யாதே

6   ஒரு பொண்ணைக்கரெக்ட் பண்ணனும்னா முதல்ல  அவளோட மம்மியைக்கரெக்ட் பண்ணனும் ,   அப்போ  தான்  மகளைக் கரெக்ட் பண்ண முடியும்

7    நான்  இன்னமும் அப்பா கூட ஆகலை , அதுக்குள்ளே என்  தம்பி என்னை பெரியப்பா ஆக்க ட்ரை பண்ணிட்டு இருக்கான்

7  பிரின்ஸ் , ஜின்ஸ் , ட்வின்ஸ்   எப்படி  எதுகை மோனை ?

8   இந்தப்பக்கம்   ,அம்மா , அந்தப்பக்கம்  அப்பா  மாத்தி மாத்தி  குறட்டை  விடறாங்க , இது வீடா? ஜுவா?

9  டிராபிக்  போலீஸ்  = ஹெல்மெட் எங்கே?


 என் அண்ணன் கிட் டே  இருக்கு

10  ஒரு பொண்ணு  சோசியல் மீடியாவில் ப்ரொபைல் பிக்சரா பூ  வெச்சிருந்தா   அது பேக் ஐ டி  இந்த ஜெனரல்  நாலெட்ஜ்  கூட  உனக்கு இல்லை


11     என்னது ? பெட் ரூம்ல வீடியோ கேமரா இருக்கு ? முதல் இரவை லைவ் டெலிகேஸ்ட் பண்ணப்போறியா?

12   டியர் , நிஜமா என்ன லவ் பண்றியா?

  என் மேக்கப் செலவு மாதம் ரூ25,000 ,  காஸ்ட்யூம்  செலவு ரூ20,000 . அஸெஸரீஸ் செலவு ரூ 15,000  . ஆக மொத்தம் என் ஒரு மாத செலவு 60,000. இனி   அந்த செலவு மிச்சம் , ஏன்னா  நீங்கதானே  இனி அந்த செலவை  பண்ணப்போறீங்க ? எனக்கு எல்லாமே இலவசமாக்கிடைக்கப்போகுது

13   பிளடி   சாப்ஸ்க்ரைபர்ஸ்   என்  முதல் இரவு பிளானை முடிச்சுக்கட்டிட்டாங்க

14   டியர் , 1,43,569 பேர்  லைவ்ல  இதை   வாட்ச்  பண்ணிட்டு இருக்காங்க

 இவங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா?

15  புது ஆட்கள்   களத்தில் இறங்கட்டும் , போட்டி உருவாகட்டும் . அப்போதான் நம்ம திறமை மேலும் வெளிப்படும் , ஜொலிக்கும்

16 பர்சனல் லைப்  ல எந்தப்பிரச்சனை  எவ்ளோ  இருந்தாலும் அவை   நம்ம ஆபீஸ் லைஃபை பாதிக்கக்கூடாது 

17  யாரும்   யாரோட   வாயையும்   மூட முடியாது 

18   உங்களுடனான என் வாழ்க்கை  ஒரு இன்வெஸ்ட்மென்ட் என சொன்னேன் அது தப்பு   இந்த அச்சீவ்மென்ட் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   இயக்குனருக்கு   சோசியல் மீடியாப்பெண்களிடம் என்ன கோபமோ  போட்டு வெளுத்து வாங்கி இருக்கிறார் . ஆனால் கொஞ்ச்ம ஓவர் டோஸ் 


2  நாயகி   தனது  ஆண்  நண்பர்களுடன்   சேர்ந்து   தண்ணி    அடிக்கும் காட் சிகள்   தேவை இல்லாதது 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாதி காமெடி  , பின் பாதி   பேமிலி சென்ட்டிமென்ட்   சீன்கள் . பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்  ரேட்டிங்  2.75 / 5 



thanx - ANICHAM JUNE ISSUE 

Thursday, May 29, 2025

ACE(2025) -ஏஸ் (தமிழ் )- சினிமா விமர்சனம் (கமர்ஷியல் மசாலா )

                         

ஒரு ஹீரோவின் படம் மெகா ஹிட் ஆனால்  உடனே   அவரது  அடுத்த  படத்துக்கு லக்கி பிரைஸ்  அடிக்கும் . மிகப்பெரிய எதிர்பார்ப்பு உ ருவாகும் . படம் சுமாராக இருந்தாலும்  அந்த  எதிர்பார்ப்பை வைத்தே  ஓப்பனிங்க் டே  கலெக்சனை அள்ளி   விடுவார்கள் . அந்ததங்கத்தருணத்தை  இந்தப்படக்குழு  இழந்து  விட்ட்து . மகாராஜா  என்ற  சூப்பர் டூப்பர் ஹிட்டுக்குப்பின் வெளியாகும்  விஜய்  சேதுபதி  படம் , ஆனால்  எந்த  விளம்பரமும் இல்லாமல்  சத்தம் இல்லாமல் வந்து இருக்கிறது .இது  தேறுமா? என்பதைப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியோட  அப்பாவின் மறைவுக்குப்பின் நாயகியின் அம்மா  வேறு ஒரு ஆளுடன் லிவ்விங்க் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நாயகியின் அம்மா  வின் மறைவுக்குப்பின் அந்த ஆள்  அதாவது நாயகியின்  சித்தப்பா  அந்த வீட் டை ஆக்ரமித்துக்கொள்கிறார் . . இவர் தான் வில்லன்  இவர் ஒரு போலீஸ் ஆபீசரும் கூட . வீட்டுக்கே  தன கேர்ள் பிரண்ட்ஸை அழைத்துக்கொண்டு வந்து அடடூழியம் செய்து வருகிறார் வில்லன். வில்லனின்  டார்ச்சர்  தாங்காமல் நாயகி  அவனிடம்  இருந்து எப்படியாவது தப்பினால் போதும் என நினைத்து  வில்லனிடம்   கேட்கிறார் . என்னையும், இந்த வீடடையும் வீட்டுப்போக என்ன  டிமாண்ட் செய்கிறாய் ?. உடனே   வில்லன் வீட்டின் மதிப்பைக்கணக்குப்போட்டு 10 லட்சம் கேட்கிறான் 


நாயகன்  மலேசியாவுக்குப்பிழைப்புக்காக வருகிறார் . ஒரு கடையில்  சமையல் கலைஞனாக  வேலைக்கு சேர  காமெடியன்   உதவி செய்கிறார் . நாயகி  ஒரு கடையில்  சேல்ஸ் கேர்ள் ஆக  வேலை  செய்கிறார் . நாயகனுக்கு நாயகியைக்கண்டதும் காதல் . தொடர்ந்து  நாயகியை  பாலோ பண்ணி  நாயகியையும்  காதலிக்க வைக்கிறார் . நாயகியின் பணப்பிரச்சனையை  தீர்க்க  நாயகன் ஒரு  சூதாடட கிளப்பில் போய்  சீட்டு  விளையாடுகிறான் . அங்கே  இன்னொரு வில்லனால் ஏமாற்றப்பட்டு தோற்கடிக்கப்படுகிறான் . இப்போது  நாயகன் இந்த வில்லனுக்கு ஒரு கோடி ரூபாய் பணம்   தர வேண்டும் . நாயகனின் பாஸ்போர்டடை வில்லன் பிடுங்கி வைத்துக்கொள்கிறான் 

வில்லன்  நெம்பர்  2 விடம் நாயகன் பட் ட  கடன் , வில்லன்  நெம்பர்  1  இடம் நாயகி  பட்டிருக்கும்  கடன்  இரண்டையும்  தீர்க்க   நாயகன்  ஒரு வங்கியில்  கொள்ளை   அடிக்கிறான் . இதற்குப்பின்  நாயகன் சந்திக்கும்   சிக்கல்கள்  , சவால்கள்  தான் மீதி   திரைக்கதை 


நாயகன் ஆக விஜய சேதுபதி  நடித்திருக்கிறார் .இவரது கேரக்ட்டர்   டிசைன்   தெளிவாக இல்லை , ஆனால் நடிப்பு  ஓகே  ரகம் . அசால்ட்   ஆக  நடித்திருக்கிறார் .


 காமெடியன் ஆக   யோகி பாபு பல மாமாங்களுக்குப்பின் இதில் சிரிக்க வைக்கிறார் .


 நாயகி ஆக ருக்மணி   வசந்த்   இதில் அறிமுகம் , குணா ரோஷினியின்  சித்தி பெண் போல சாயல் . அழகு ,  ,

இளமைப்பொலிவு  நடிப்பு    அனைத்தும்  ஓக்கே . நாயகியின் தோழி ஆக திவ்யா பிள்ளை  அதிக வேலை இல்லை , வந்தவரை   ஓகே . நாயகியின்  சித்தப்பாவாக  , வில்லன்  ஆக  பப்லு பிரித்விராஜ் . இவரைப்பார்த்தால்   வில்லன் போலவும் இல்லை , போலீஸ் ஆபீசர்   போலவும் இல்லை. தவறான  செலக்சன் .

இன்னொரு வில்லனாக  கேஜிஎப்  அவினாஷ் . இவரது கேரக்ட்டர்  டிசைன்  வலுவாக இல்லை . இரண்டு வில்லன்கள் இருந்தும்  டம்மி  வில்லன்கள் ஆனதால்   நாயகன்  ஜெயிப்பதில் சவால் எதுவும் இல்லை .


மலேசியாவில்  மொத்தப்படத்தையும்  எடுத்திருக்கிறார்கள் .கரண் பி ராவத்தின்  ஒளிப்பதிவு   அருமை . நாயகி , நாயகனின்  தோழி , நாயகன் , காமெடியன்   அனைவரையும்  அழகாகக்காட்டி இருக்கிறது கேமரா . பின்னணி இசை சாம் சி எஸ் ,  ஒரே  இரைச்சல் .ஆக்சன்  சீன்களில்  பிஜிஎம்   காது வலிக்க ஒலிக்கிறது . பாடல்களுக்கான இசையை  ஜெஸ்ட்டின் பிரபாகர்  தந்துள்ளார் . சுமார் ரகம் 


கதை , திரைக்கதை  எழுதி  இயக்கி தயாரித்து இருக்கிறார் ஆறுமுககுமார் 

சபாஷ்  டைரக்டர்


1   நாயகியின் அழகு , இளமைப்பொலிவு , முக வசீகரம்  அனைத்தும்   அருமை . 


2   யோகிபாபுவின்  காமெடி  ஒர்க் அவுட் ஆகி இருப்பது  உலக அதிசயம் 


3  மலேசியாவில் லைவ் லொக்கேஷனில்  நடத்திய படப்பிடிப்பு 


4  விஜய் சேதுபதியின்  ஆர்ப்பாட் டம்  இல்லாத   நடிப்பு 


 ரசித்த  வசனங்கள் 


1   சின்ன வயசுல எங்கப்பா செலவுக்குக் காசு தராததால் அவர் கிட் டே  திருடி இருக்கேன் . உங்க கிட் டே  திருட  மாட் டேன் 


நானும்  காசு தர மாட் டேன்


2  தற்செயலாக  நடப்பதெல்லாம் கடவுள் கிருபை 


3   இவனை எதனால உயிரோட எரிக்கறாங்க ? 


 கடன்  வாங்கினவன் ஓடிட் டான் , இவன் ஜாமீன் போட் டவன் 


4  பணம்  இருக்கறவன்   அடிப்பான் , பணம் இல்லாதவன் அடி  வாங்குவான் , இதுதான் இங்கே ரூல்.


5  டொக் டொக்  டொக் 


 உள்ளே  வராதீங்க 


6  என் தலைக்கு மேல கத்தி தொங்கிட்டு இருக்கு , உனக்கு பொம்பள ஷோக்கு கேக்குதா? 


7   போலீஸ்ல  பிடிச்சுக்கொடுத்துடுவேன்னு போலீசையே மிரட்டாத  


8  டே  அறிவு , உனக்கு அறிவு பேருல மட்டும் தான் இருக்குது 


 கண்டுபிடிச்சுட்டா ங்களா? 


9  முத முறையா தப்பு பண்ற இல்ல? கெட்ட கெட்ட   கனவா     வரும் 


10    நாளை   வர்ற பிரச்னையை இன்னைக்குத்தடுக்க முடியாது 


11  அவனைப்பார்த்தா பயந்து போன் காலை கட்  பண்ணினவன் மாதிரி  தெரியலை , பயம்னா ,  என்னன்னே தெரியாதவன் காலைக்கட் பண்ணின மாதிரி இருக்கு 


12  பயந்தா புதுசு  புதுசா கற்பனைகள் வரும் '


13      ஹாய்   டொக்கு .. 


 டே ய் ..ஹாய்   ருக்குனு சொல்லு '''


14    சொந்தமா யோசிக்கத்தெரிஞ்சா நான்ஏன் உன் கூட இருக்கறேன் ? 


15   நான் இல்லாம நீ எப்படி சமாளிப்பே ? 


நீ  இங்கே இருந்தாதான் பிரச்சனை , கிளம்பு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    பேங்க்  கொள்ளைக்காட்சி   பெட்டிக்கடையில்   கடலை மிட் டாய்   திருடுவது மாதிரி  மேம்போக்காக நம்ப முடியாத வகையில் படமாக்கப்பட்டுள்ளது  


2   நாயகன்  சீட்டு விளையாட்டில் ஜெயிப்பது , பின் ஏமாற்றப்படுவது  எல்லாம்  எல்லோருக்கும் பிடிக்காது . போர் அடிக்கும் 


3 நாயகன் , நாயகி  ரொமாண்டிக்  போர்சன்  இன்னமும்  அழகாக காட்டி இருக்கலாம் 


4 மலேசியன்  போலீஸ்  எல்லாம்  மாங்கா மடையர்கள்  என்பது போல சித்தரிக்கப்பட் ட பல காட் சிகள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வழக்கமான  மசாலாக்கதைதான்.  முதல் பாதி   ஜாலி . பின் பாதி  இழுவை . நாயகியின் அழகுக்காகப்பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.25 / 5 . விகடன் மார்க்   யூகம்   - 40


ஏஸ்
திரைப்பட பதாகை
இயக்கம்ஆறுமுக குமார்
தயாரிப்புஆறுமுக குமார்
கதைஆறுமுக குமார்
இசைஇசை:
ஜஸ்டின் பிரபாகரன்
பின்னணி இசை:
சாம் சி. எஸ்.
நடிப்பு
கலையகம்7சிஸ் என்டர்டெயின்மென்டு
வெளியீடு23 மே 2025
ஓட்டம்154 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்மதிப்பீடு  1 கோடி[2]

Friday, May 23, 2025

FRED AND ROSE WEST : A BRITISH HORROR STORY (2025) -ஆங்கிலம் / தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் டிராமா டாக்குமெண்டரி ) @ நெட் பிளிக்ஸ்

   

            1994 ல்   கைது  செய்யப்பட்ட  சீரியல்  மில்லரின்   கேஸ்  பற்றிய   டாக்குமெண்டரி  இது . தமிழ்  டப்பிங்கில் இருக்கு . 3 எபிசோடுகள் , ஒவ்வொரு எபிசோடும் 52 நிமிடங்கள் . ஒரு தமிழ்  சினிமா   டைம் டியூரேசன் தான் .இரண்டரை மணி நேரம் . இது ஒரு  யு  சர்ட்டிபிகேட்  படம் .அதனால் அனைவரும் பார்க்கலாம்         


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் 1941ல்  பிறந்தவன் . முதல்   மனைவி  யுடன் காதல்  திருமணம் . ஒரு மகள்  .  முதல்   மனைவி   இறந்த பிறகு  27 வயதான  வில்லன் 15 வயதான வில்லியை சந்திக்கிறான் . டீன்  ஏஜில் இருப்பதால் வில்லி க்கு எந்த விபரமும் தெரியாது  வில்லனின் ஆசை   வார்த்தைகளில்   மயங்கி   திருமணம்   செய்து  கொள்கிறாள் 



 இருவருக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங்க் . இவர்கள்   காதல்   வாழ்க்கை நன்றாகப்போய்க்கொண்டு இருக்கிறது . ஒரு சின்ன திருட்டுக்கேஸில் வில்லன் ஜெயிலுக்குப்போகிறான் .அந்த   கால கட்டத்தில்   வில்லி   வில்லனின்   முதல்  தாரத்தின்  மகளை  அடிக்கடி  அடித்துத்துன்புறுத்துகிறாள் .அது பற்றி வில்லனுக்குக்கடிதமும் எழுதுகிறாள் . நான் ரிலீஸ்   ஆகி வரும் வரை    அவளை  சகித்துக்கொள். பார்த்துக்கொள் என பதில் கடிதம் எழுதுகிறான் வில்லன் 


வில்லன்   ரிலீஸ்   ஆகி வருகிறான் . வில்லியை  பணத்துக்காக   விலைமகள்   ஆக்குகிறான் .  வீட்டுக்கே   கஸ்ட்மர்ஸ்  வருகிறார்கள் .வில்லன் வில்லி   தம்பதிக்கு மொத்தம்   10 குழந்தைகள் .இந்த  பத்தில்  இவர்கள்   இருவருக்கும் பிறந்தது எத்தனை ? கஸ்ட்மர்சுக்குப்பிறந்தது எத்தனை ? என்ற  விபரம் ( அவர்களுக்கே ) தெரியவில்லை 


கிட்டத்தட் ட   20    வருடங்கள்  வில்லனும், வில்லியும்   எந்த பிரச்சனையிலும் சிக்காமல் வாழ்ந்து வருகின்றனர் . ஸ்கூலில்  இவர்களது  குழந்தைகள்   விளையாட்டாகப்பேசியது  மாட் ட   வைக்கிறது . அதாவது  நாம் எல்லோரும் அம்மா,அப்பா பேச்சைக்கேட்டு ஒழுங்காக நடந்துக்கணும் , இல்லை எனில்  ஹெதர் க்கு நடந்தது போல  நமக்கும் நடக்கும், நம்மைக்கொன்று   வீட்டுக்குள் புதைத்தது விடுவார்கள்   என பேசிக்கொள்கிறார்கள். இதைக்கேட்ட சக மாணவர்கள் வெளியில்  பரப்ப  போலீஸ்   வில்லனைக்கைது   செய்கிறது 



விசாரணையில்   ஆரம்பத்தில் வில்லன் வாயைத்திறக்கவில்லை . ஆனால்  7 வயதான குழந்தை  ஹெதரின்  டெட் பாடி கண்டெடுக்கப்படுகிறது . அதற்குப்பின்  கொஞ்சம்    கொஞ்சமாக உண்மைகளை வில்லன் வாக்குமூலமாகக்கொடுக்கிறான் 

 அந்தக்குழந்தை  போக   வேறு இரு டீன் ஏஜ் பெண்களின்  சடலங்கள்   கிடைக்கின்றன .. அதில் ஒரு பெண்  நிறை மாத கர்ப்பிணி  என்பது    தெரிய   வருகிறது .விசாரிக்கும்போது ஒரு பெண்ணை நானாகக்கரெக்ட்  பண்ணினேன் . இன்னொருத்தி   அவளின்   தோழி .  ஆரம்பத்தில் எனக்கு இணக்கமாக இருந்தார்கள் , என்னை எதிர்த்ததால் கொலை செய்து புதைத்து விடட்டேன்  என   கூலாக பதில்   சொல்கிறான் வில்லன் 

  போலீஸ்   உஷார்  ஆகி  அந்த ஏரியாவில்  மிஸ்ஸிங்க்  கேஸ்  யார் யார்  என  விசாரிக்கிறது ..மொத்தம்  9 பெண்கள்  மேலும்   சடலமாகக்கிடைக்கிறார்கள் .    ஆக  மொத்தம்  1+ 2+ 9 = 12   கொலைகள்   செய்து   இருக்கிறான் 

 இப்போது  போலீசுக்கு   சந்தேகம்   வந்து   முதல் மனைவி  , மகள்  இருவருக்கும் என்ன ஆனது என விசாரிக்கும்போது   வில்லன்  முதல் மனைவியைத்தான் தான் கொன்றதாக வாக்கு மூலம் தருகிறான் 

முதல்    மனைவியின்  மகளை   வில்லி தான் கொன்று   இருக்க வேண்டும் . ஆனால்   வில்லி அதை ஒத்துக்கொள்ளவில்லை . வில்லனும்   வில்லியைக்காப்பாற்ற   எல்லாக்கொலைகளையும் செய்தது நான் தான்  என சொல்கிறான் 

நாங்கள்   இருவரும் காரில் போவோம் .யாராவது   பெண்  லிப்ட் கேட் டால்   அவளை  காரில் ஏற்றிக்கொண்டு  வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன் கொடுமை செய்து தொழிலுக்கு  யூஸ்   செய்வோம் . அடம் பிடித்தால்  கொலை தான்    என்கிறான் 

இவர்கள்    வீட்டில்   வேலைக்காரி ஆக  பணி  புரிந்த  பெண் தான்   சாட் சி .அவளையும்  விட்டு  வைக்க   வில்லை . பாலியல் வன்கொடுமைக்குப்பின் அவள்   தப்பி விடுகிறாள் 


வில்லியும்   கைது  செய்யபப்டுகிறாள் . விசாரணையில்   வில்லனைப்போல வில்லி ஒத்துக்கொள்ளவில்லை . இவர்களுக்கு எதிராக எந்த சாடசியும் இல்லை , தடயமும் இல்லை . தீர்ப்பு    என்ன ஆனது ? வில்லி   சிக்கினாளா ? தப்பினாளா ? என்பதை   நெட் பிளிக்சில் காண்க  

இந்த   வெப்  சீரிஸ்  ல நடிகர் நடிகைகள்   யாரும் கிடையாது .  கொலையாளிகள்  இருவர் , போலீஸ்  ஆபீசர்ஸ் , கொலை ஆனவர்களின் உறவினர்களின் பேட்டிகள்  தொகுப்புதான் 


சபாஷ்  டைரக்டர்


1     கொலைகள் ,பாலியல்  வன்கொடுமைகள்  நடந்திருந்தாலும்  அனைவரும் பார்க்கும் வண்ணம்  அடல்ட்  கண்ட் டென்ட்  இல்லாமல்   கண்ணியமாக  தந்த   விதம் 


2  டாகுமெண்டரி  பார்க்கும்   போர்   உணர்வே   இல்லாமல்   க்ரைம் த்ரில்லர்   பார்ப்பது போல ஒரு விறுவிறுப்பு , பரபரப்பு  கொண்டு   உருவாக்கிய விதம் 


3  சம்பவம் நடந்த லைவ் லொக்கேசன் , மீடியா ரிப்போர்ட்   எல்லாம் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1 சாதாரண வழக்குகளில் ஆதாரங்களை குற்றவாளியிடம்  காட்டி  விளக்கம் கேட்போம் . ஆனால்   இந்தக்கேஸில் ஆதாரங்களை  இனி தான் சேகரிக்க வேண்டும் . ஆனால்   குற்றவாளியி டம்  உண்மைகளைக்கறக்க வேண்டும்., இது ஒரு சவால் 


2  லாயர்  லேங்க் வேஜில்  இதை பிஷ்ஸிங்க்  எக்சசைஸ் என சொல்வோம் 


3  ஒரு   வக்கீல்   கிளையண்ட் சொல்வதைத்தான் நம்ப முடியும் 



4  நாம்    நிறைய பி ஆபத்துக்களை எதிர்கொள்கிறோம் , ஆனால் அது நமக்குத்தெரிவதில்லை 


5  பதில்   சொல்றவங்களுக்கு எவ்ளோ பவர் கொடுக்கிறோம் என்பதுதான்   இன்டடர்வியூவுக்கான  வியூகம்.


6  க்ரைம்  இன்வெஸ்டிக்கேஷன்ல  ரொம்ப முக்கியம் சம்பவ இடத்துக்குப்போவது 


7 எல்லோருக்கும் முன்னால   கதையைக்கண்டுபிடிப்பது  பிரஸ் சோட வேலை .பிரத்யேகமா எதுனா கண்டுபிடிப்பாங்க 


8  ஆதாரங்களைக்கொடுப்பதால் ஏற்படும்  பயன்களை  க்ளையண்ட்டுக்கு  சொல்வது லாயரின் வேலை  ஆனா முடிவு எடுப்பது க்ளையண்ட்  தான் 



9 கேஸ்   நடந்துட்டு இருக்கும்போது  சாட் சிக்குப்பணம் கொடுக்கக்கூடாது , ஆனா  தீர்ப்பு வந்த பின் தரலாம் . அப்படித்தருவோம் என வாக்குறுதியும் தரலாம் 


10   எந்த உணர்ச்சியையும்   வெளிக்காட்டாம இருக்கணும் 


11  ஒவ்வொரு  முறை   நாம் குட்  நைட்   சொல்லும்போதும் குட் பை சொல்லும்போதும்   ஐ லவ் யூ   சொல்லணும் . ஏன்னா   எது   கடைசி குட்  நைட்    என்பது நமக்குத்தெரியாது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   சம்பவம்  நடந்து  அதாவது   கொலை நடந்து  25 வருட ங்கள்   கழித்து  கொலையானவர்களின்   உறவினர்களின்  பேட்டி  எடுக்கப்படும்போது  அவர்கள்  கண்ணீரே   வராமல்  செயற்கையான   சோ கத்தைக்காட்டுகிறார்கள் .இயல்பாக இருக்க விட்டிருக்கலாம்  விஜய்  டி வி ல  அழ   வைப்பது போல  செய்திருக்க வேண்டாம் 


2    வில்லியை சிக்க   வைக்க  போலீஸ்  ரகசிய  டெலி போன்  ஒட்டுக்கேக்கும்  கருவி  வில்லி யின் வீட்டில் பொரு த்துகிறார்கள் .அது கூடவா வில்லியால் யூகிக்க முடியாது ? சாமார்க்தி யமாக  தப்பிக்கிறாள் 


3  கோர்ட்டில்  ஆஜர் ஆகும்போது   வில்லனும் , வில்லியும் நீண்ட இடைவெளிக்குப்பின்  சந்திக்கிறார்கள் .அப்போது   வில்லி  நடந்து  கொண்ட விதம் தான்   வில்லனை   புதிய முடிவு  எடுக்க வைக்கிறது .அதை வில்லி யூகிக்க மாட் டாளா ? எதனால்   அப்படி  நடந்து  கொண்டாள் ?


4  வில்லன்   தனது இரண்டாம் மனைவிக்கு  கஸ்ட்மர்கள்   மூலம் பிறந்த   பெண் குழந்தைகளை   பாலியல் வான் கொடுமை  செய்ததை   வில்லி எதனால் கண்டிக்கவில்லை ?  

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - க்ரைம்  த்ரில்லர்   ரசிகர்கள்   குடும்பத்துடன் பார்க்கலாம் .  ரேட்டிங்  3 / 5 


Fred West
Fred and Rose West in the mid-1980s
Born
Frederick Walter Stephen West

29 September 1941
Died1 January 1995 (aged 53)
Cause of deathSuicide by asphyxiation
Spouses
Catherine Costello
(m. 1962; murdered 1971)
 
(m. 1972)
ConvictionsEarlier convictions for:
Criminal penaltyDied by suicide prior to murder conviction
Details
Victims12–13+
Span of crimes
1967–1987
CountryEngland
Date apprehended
24 February 1994; 31 years ago

Thursday, May 22, 2025

THE UGLY STEPSISTER (2025) - நார்வே , ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( பாடி ஹாரர் பிலிம் )

         

 பெர்லின் இன்ட் டர்நெஷனல்   பிலிம்   பெஸ்டிவலில்  சிறந்த  படம்  என்ற  பிரிவுக்காக நாமினேட் செய்யப்பட் ட படம் இது .7/3/2025   அன்று  நார்வே யில்  ரிலீஸ்  ஆன இந்தப்படம்  884 கோடி டாலர்   வசூலித்து உள்ளது . சிறந்த  ஒளிப்பதிவு ,  சிறந்த  ஆர்ட்  டைரக்சன் , சிறந்த    காஸ்ட்யூம் டிசைன் ,  சிறந்த  மேக்கப்  என்று   நான்கு  விருதுகளை ஆஸ்காரில்  அடித்து  விடும் என  விமர்சகர்களால்  கணிக்கப்படுகிறது                


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகிக்கு  ஒரு தங்கை , ஒரு அம்மா  ... அப்பா இல்லை . நாயகியின்  அம்மா   ஒரு   பெரிய  பணக்காரனைப்பார்த்துக்கல்யாணம் பண்ணிட்டா வாழ்க்கைல   செட்டிலாகிடலாம் னு நினைக்கறாங்க . மனைவியை  இழந்த  ஆனால் ஒரு மகள் உள்ள  பணக்காரனைக்கல்யாணம்  பண்ணிக்கறாங்க    .ஆனா   அந்த  ஆள்  திடீர்   என இறந்து  விடுகிறார் . சொத்து  சல்லிப்பைசா கூட இல்லை .  சும்மா ஏமாத்தி  இருக்கார் . இப்போது   நாயகியின் அம்மாவுக்கு   என்ன செய்வது என  தெரியவில்லை 



இனிமேல்  ஒரு ஆளைப்பார்த்துக்கல்யாணம்  பண்ண   தனக்கு   வயசு  இல்லை .அதனால  நாட்டின் இளவரசரை  மயக்கி   தன  மகள்களில்  யாராவது   ஒருவரை   ரெடி  பண்ணி    வாழ்க்கைல   செட்டிலாகிடலாம் னு நினைக்கறாங்க . .


நாயகியின்  தங்கை  இன்னும் பூப்பெய்தவில்லை . அதனால்   நாயகியை  ரெடி பண்ண  அவளது அம்மா முடிவு செய்கிறார் . அழகில்  ஒரு படி  குறைவாக இருப்பதால்  நாயகிக்கு பழங்கால  பிளாஸ் டிக் சர்ஜரி  செய்து  நாயகியை அழகாக்க முயல்கிறார் .. நாயகியின் அக்கா  அ தாவது  நாயகியின் அம்மாவின் 2வது கணவருக்குப்பிறந்த பெண்  உடல்  எடை அதிகமாக இருப்பதால்  வெயிட் லாஸ்க்காக  நாடாப்புழுவை சாப்பிடுகிறார் ( உவ்வேக் ) 


 இளவரசரை மயக்குவதற்காகத்தயார்  செய்யப்பட் ட  நாயகியின் அக்கா  ஒரு சாதா  வாலிபனைக்காதலிக்க   அதை நாயகி தன அம்மாவிடம்சொல்கிறாள் . இதனால்   கடுப்பான  அம்மா   தன  சக்களத்தி  மகளை   அரண்மனையில் வேலைக்காரி ஆக்குகிறாள் . அவளை  அனைவரும்   சிண்ட்ரெல்லா  என அழைக்கிறார்கள் 


அழகிய பெண்களின் சுயம்வர அணிவகுப்பில்  இளவரசன்   முதலில் நாயகியைத்தான் தேர்வு செய்து ஆவலுடன் நடனம் ஆடுகிறான் . திடீர்   என   சிண்ட்ரெல்லாவைப்பார்த்ததும் அவளுடன்  நடனம் ஆடுகிறான் 


 இதற்குப்பின் நாயகி என்ன செய்தாள் ? என்பது மீதி திரைக்கதை 

நாயகி  ஆக  லியா மைரன்  நடிப்பு அருமை . கண் இமை  முடிகளை  புதிதாக  செயற்கையாக  வைப்பது எல்லாம் கொடூரம் . நாயகியின் அக்காவாக தியா சோபி லோச்னாஸ்  அழகான முகம் , அமைதியான தோற்றம் என கவர்கிறார் . நாயகியின்  தங்கை ஆக ப்ளோ  பேகரிலி  பருவம் அடையாத பெண்ணாக  வந்து போகிறார் , அதிக வாய்ப்பில்லை நாயகியின் அம்மாவாக  ஆனே  டால் டோர்ப்  வில்லி ரோல்  போல   நடித்திருக்கிறார் 


  ஒளிப்பதிவு மார்செல் , ஜிஸ்கைன்ட்     ஆகிய இருவரும்  செய்திருக்கிறார்கள் .  பிரமாதமான கேமரா ஒர்க் . நாயகி , நாயகியின் அக்கா   இருவரையும் க்ளோசப் .,லாங்க் ஷாட் களில் அழகாககாட்டி உள்ளார்கள் .இசை  காடா  வில்டே  டூர் .அரச   கால இசையை மெலோடியா பின்னணி இசை அமைத்திருக்கிறார் ஒலிவியா   தான் எடிட்டிங்க்  . டைம்   டியூரேசன்  105 நிமிடங்கள் .படம் ரொம்ப ஸ்லோ 

சகோதரர்கள்   கிம் எழுதிய அஸ்செ ன்படெல்   என்ற  புத்தகத்தைத்தழுவி  எமிலி பிளிச்பெ ல்ட  திரைக்கதை   அமைத்து இருக்கிறார் .இயக்கமும் இவரே 

சபாஷ்  டைரக்டர்

1    அட்டென்சன்  சீக்கிங்க்கிற்காக  நெகடிவ் டைட்டில் வைத்தது 


2 மெயின் கதைக்கு  சம்பந்தம் இல்லை என்றாலும் வேண்டும் என்றே  ஒரு அடல்ட் கண்ட்டென்ட்  சீனைத்திணித்தது 


3  ஆர்ட்   டைரக்சன் , ஒளிப்பதிவு  போன்ற   வலுவான டெக்கினிக்கல் டீமை நிர்வகித்தது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  சிண்ட்ரெல்லாவின்  செருப்பு சைசுக்கு  ஏற்றபடி  நாயகி  தன கால் பாதத்தை  வெட்டிக்கொள்ளும் கொடூரமான  மடத்தனமான காட் சி 


2   உடல்   எடைக்குறைப்புக்கு  ஆரோக்கியமான  வழி   அளவான  ஆரோக்கியமான சாப்பாடும், உடல் பயிற் சியு ம், யோகாவும்  , வாக்கிங்க் ஜாகிங்கும் . இவற்றை  எல்லாம் விட்டுட்டு  லூஸ் தனமாக   நாடாப்புழு வை சாப்பிடுவது  கேவலம் 


3  ஸ்ரீதேவி  தன மூக்கை பிளாஸ்டிக்  சர்ஜரி  செய்து கொண்டது போல   நாயகி  செய்வது , அதை விலாவாரியாகக்காட்டுவது கொடூரம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சிண்ட்ரெல்லா  என  கவிதையான  கதையை  , கேரக்டரை  கேவலப்படுத்தி கர்ண கொடூரமாக சிதைத்து வைத்திருக்கிறார்கள் . ஆஸ்கார்   அவார்டே வாங்கினாலும் இது ஒரு டப்பாப்படமே . ரேட் டிங்  1.75 / 5 



Wednesday, May 21, 2025

ELEVEN- லெவன் (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

         

               

சுந்தர் சி இடம் அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆக  கலகலப்பு (2018) , வந்தா ராஜாவாத்தான் வருவேன் ( 2019), ஆக்சன் (2019) ஆகிய படங்களில் பணி புரிந்த லோகேஷ்  அஜீஸ்  அறிமுக இயக்குனர்   ஆக இயக்கும்  முதல் படம் இது . தெலுங்கு , தமிழ் ஆகிய  இரு மொழிகளிலும்  வெளியாகி உள்ளது .திரைக்கதையை நம்பி களம் இறங்கி இருக்கும் இவர்  பரபரப்பான  க்ரைம் த்ரில்லர் படத்தைத்தந்திருக்கிறார் என்று  சொல்லலாம் 



ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ்  படம் தான்   தமிழ் சினிமா வில்  அதிக இரட்டையர்கள்  கதாப்பாத்திரங்களாக  வந்த படம் .நாசர் ,பிரசாந்த் ,ஐஸ்வர்யா ராய் என மூன்று பேர்  ட்வின்ஸ் ஆக  வந்தார்கள் . ஆனால்  இந்தக்கதையில் 11  பேர்  ட்வின்ஸ் ஆக வந்து   ஜீன்ஸ்   சாதனையை   முறியடித்து இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


சென்னையில்  அடுத்தடுத்து ஆறு  கொலைகள்  ஒரே பேட்டர்னில் நடக்கிறது . ஆனால்  எந்த வித  தடயமும் இல்லை , சி சி டி வி  காட்சிகளும்  இல்லை .வில்லன்  கொலை செய்ய இடத்தைத் தேர்வு செய்யும்போதே அங்கே இருக்கும்  சி சி டி வி  கேமராவை முடித்துக்கட்டி விட்டுத் தான் ஆளை முடிக்கிறான் .இந்தக்கேஸை  விசாரிக்கும்  போலீஸ் ஆபீசர்  ஒரு  விபத்தில்  சிக்கி  கோமா ஸ்டேஜுக்குப்போகிறார் .


 நாயகன்  அஸிஸ்டெண்ட்  கமிஷனர் ஆப் போலீஸ் . சிங்கிள் ஆக இருக்கும் சிங்கம் .அவரிடம்  இந்தக்கேஸ்   வருகிறது .இதற்குப்பின்   நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை 


வில்லன்  உடன்  பிறந்த  தம்பி  இருவரும் டிவின்ஸ்.வில்லன்  சிறுவனாக இருக்கும்போதே செஸ் சாம்பியன் . படிப்பில் இருவரும் சுட்டி . வில்லனின் தம்பி  கொஞ்சம் மன நிலை பாதிக்கப்பட்டவன்  . இருட் டைக்கண்டால் அலறுவான். பள்ளியி ல் வில்லனும் அவன்  தம்பியும் படிக்கும் வகுப்பில்  இருவருமே  நல்ல மார்க் எடுப்பதும் , ஆசிரியர்களிடம்  நல்ல பெயர் எடுப்பதும் மற்ற மாணவர்கள், மாணவிகளுக்குப்பிடிக்கவில்லை  . அவர்கள்  ஒரு நாள்   விளையாட்டாக  வில்லனின்   தம்பியை  பிசிக்ஸ்  லேபிள்  வைத்து  லைட் டை  ஆப்   பண்ணி  இருட் டாக்கி  விளையாடுகிறார்கள் , விளையாட்டு வினை ஆகி  அவன்  இறக்கிறான் .15  வருடங்கள்   கழித்து  தன தம்பி யின்  சாவுக்குக்காரணமானவர்களைப்பழி வாங்குகிறான்  வில்லன் 



 வில்லன் எப்படி  போலீசிடம் பிடிபடுகிறான் என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக      நவீன் சந்திரா  சிறப்பான  நடிப்பு .  இறுகிய முகம் , கடு கடு பேச்சு  என  அந்த கேரக்டருக்கு   நியாயம்  செய்து இருக்கிறார் .நாயகி  ஆக ரேயா  ஹரி ,முகப்பொலிவும்  இல்லை , நடிப்புத்திறமையும் இல்லை . மெயின் கதைக்கு இவர் தேவையே இல்லை  என   யாரும் சொல்லிவிடக்கூடாது என க்ளைமாக்சில் இயக்குனர்  நாயகியைக்கோர்த்து விடும் ஐடியா செம 


நாயகனுக்கு உதவி  ஆக திலீபன் கச்சிதம் ஆக நடித்து  இருக்கிறார் .  ஆனால்  ஹேர் ஸ்டைலை போலீஸ் கட்டிங்க்   ஆக   மாற்றாமல்   இருப்பது   ஏனோ ? ஹையர் ஆபீசர் ஆக வரும் நாயகன் பக்கா போலீஸ்  கட்டிங்க் 


வில்லன் படிக்கும் ஸ்கூல் உரிமையாளர் ஆக  அபிராமி  சிறப்பான நடிப்பு .நான் உங்களை   அம்மா   என  அழைக்கலாமா?  என வில்லன்  கேட் கும்போது , முகத்தில் வரும் பூரிப்பு  செம 


டி இமானின்  இசையில்  3 பாடல் கள்  பரவாயில்லை ரகம் , பின்னணி   இசை  செம்ம  த்ரில்லிங்க் கார்த்திக்  அசோகனின் ஒளிப்பதிவு கச்சிதம் . குறிப்பாக  வில்லனின்  கருப்புக்கார் வரும்  போதெல்லாம் ஒலிக்கும் பிஜிஎம் உடன்   கேமராவும்   சேர்ந்து பயமுறுத்துகிறது 

. ஸ்ரீகாந்த்தின்  எடிட்டிங்கில்  படம்  131   நிமிடங்கள்   ஓடுகிறது . முதல்   பாதியில்    திரைக்கதை . இன்னமும் க்ரிஸ்ப் ஆக ட்ரிம்  பண்ணி இருக்கலாம் 


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  அறிமுக இயக்குனர் லோகேஷ்  அஜீஸ்  அறிமுக இயக்குனர்


சபாஷ்  டைரக்டர்

1   நாயகி தான்   தயாரிப்பாளர்  என்றதும்  மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு கேரக்டரை உருவாக்கி  அதை  புத்திசாலித்தனமாக  க்ளைமாக்சில் முக்கிய கேரக்டர்   ஆக வடிவமைத்த சாமர்த்தியம் 


2  வில்லன்  ஆட்களைக்கொலை செய்யும்போது  நேரடியாகத் தான் கொல்லாமல்   உடன்பிறப்பை  வைத்துக்கொலை   செய்யும் யுக்தி  அபாரம் 


3   கொலையாளி   இவர் தான்  என ஆடியன்ஸை  நம்ப வைத்து  பின் க்ளைமாக்சில் ஒரு டிவிஸ்ட் கொடுத்த விதம்  



  ரசித்த  வசனங்கள் 


1 நாம  எல்லாரும் பிளான் ஏ ,பிளான் பி என 2 திட் ட்ங்கள்  வைத்திருப்போம் ,   ஆனா  அவன்  பிளான் ஏ ,பிளான் பி , ,பிளான்  சி   என  3 திட் ட்ங்கள்  வைத்திருப்பான் ,கேம்  முடியும்போதுதான் அது நமக்குத் தெரி யும் 


 2  யானைக்கு வேணா   அடி சறுக்கலாம், ஆனா எனக்கு இல்லை 


3   ஒரு  பொண்ணு        தானா முன்   வந்து   தன  ஆசையை சொன்னா அவ தப்பானவ இல்லை 


4   லிப்ட்   கேட்டீங்க ? 


 நீங்கன்னு தெரியாம கே ட்டுடடேன் 



 நீங்கன்னு தெரிந்துதான்  வண்டியை நான் நிறுத்தினேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகன்   அறிமுகக்காட் சி , நாயகியுடன்  ஹோட் டலில்  இருக்கும்   இடம்  ஆகிய   இரு   சமயங்களில்  இரு சண்டைக்காட் சிகள்   தேவையே இல்லை 


2  அபாரமான   பின் பாதி  திரைக்கதையுடன்  ஒப்பிடும்போது    முதல் பாதி   ரொம்ப ஸ்லோ 


3    30பேர்  இருக்கும் ரவுடி கேங்கைப்பிடிக்கப்போகும் நாயகன் போலீஸ் பட் டாளத்துடன் போகாமல்  ஒத்தைல எதுக்குப்போறார்? பைட் போடவா? 


4 கேஸை  முதலில் விசாரித்த  போலீஸ்  ஆபீசர்  வீ ட்டுக்குப்போய்  அவர்     என்ன  தகவல்  சேகரித்திருக்கிறார் என்பதை அறிந்து இருக்கலாம். ஹாஸ்ப்பிடலில் மனைவியிடம் பார்மாலிட்டியாக விசாரிப்பது  வேஸ்ட்  


5  கேசில்  முதல் பிடிமானம்   ஆக  வரும்   ஆள்  தன்னுடைய    ட்வின்ஸ்    பாதத்தி ல்   ஆ க்சிடெண்ட் ஆகி     தழும்பு  இருப்பதால்   தன்னுடைய  காலில்      கத்தியால்  கிழித்து  காயம்    உண்டாக்குவது எதுக்கு ?   முகம் என்றால்   அடையாளம்  ஒரே மாதிரி  இருக்கணும் என்பதில்  ஓகே .காலில்  தானே ?   யார்  பார்க்கப்போறாங்க ?


6  வில்லனின்  தம்பியின்  மரணத்துக்குக்காரணமானவர்களைக்கொல்லா மல்   அவர்களின் ட்வின்ஸை  கொல் வது    என்ன  லாஜிக் ?அதற்கு   வில்லன் சொல்லும் சால்ஜாப்பு சரி இல்லை 


7 ஸ்கூல்  எரிந்தால்  இன்சூரன்ஸ்  க்ளெய்ம்  பண்ணலாமே?


8  அபிராமியின்  கணவரைக்கொன்றது   வில்லன் தான் எனக்காட்டி இருக்கலாம் 


9 க்ளைமாக்சில்   அஞ்சனா  கண்களை மூடிக்கொண்டு  சஞ்சனாவை ஷூட்     செய்வது   நம்ப முடியலை .வில்லனா? என  கன்பார்ம்  பண்ண  மாட் டாரா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி  ஸ்லோ , பின் பாதி  செம விறு விறு ப்பு , க்ரைம் த்ரில்ல  ரசிகர் கள்  பார்க்கலாம் . விகடன்  மார்க் யூகம் 43 . ஆனா   அவங்க  போட்டிருப்பது 41 . ரேட்டிங்க்  3 / 5 


Eleven
Theatrical release poster
Directed byLokkesh Ajls
Written byLokkesh Ajls
Produced by
  • Ajmal Khan
  • Reyaa Hari
Starring
CinematographyKarthik Ashokan
Edited byN. B. Srikanth
Music byD. Imman
Production
company
AR Entertainment
Release date
  • 16 May 2025
Running time
135 minutes[1]
CountryIndia
LanguagesTamil
Telugu

Tuesday, May 20, 2025

மாமன் (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி டிராமா )

             


           ஜி வி  பிரகாஷ்  குமார் நடித்த புரூஸ்லீ ( 2017) , விமல் நடித்த விலங்கு (2022)  வெப் சீரிஸ்  இரண்டையும்  இயக்கிய  பிரசாந்த்  பாண்டியராஜ்  தான் இந்தப்படத்தை இயக்கி உள்ளார் .விடுதலை , கருடன் ,கொட்டுக்காளி  ஆகிய  படங்களில்;  கதையின் நாயகன் ஆக  நடித்த  புரோட்டா   சூரிதான்  படத்தின்  கதையை எழுதி  நாயகன் ஆக நடித்துள்ளார் .பெண்ககளின்  மனதை மிகவும்  கவரும்  இந்தப்படத்தின்  விமர்சனத்தைப்பார்ப்போம்  


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகனுக்கு தன அக்கா என்றால் மிகவும் உயிர் .மிகவும் பாசம் வைத்து இருக்கிறார் . ஆனால் அக்காவுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகளாகியும்  குழந்தை இல்லை .இதனால்  அக்காவுக்கு மிகுந்த மன வேதனை , மன உளைச்சல் .மாமியார்  சொல்லடி ,உறவினர் தூற்றல்  அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ்கிறாள் . ஒரு கட்டத்தில் அக்காவுக்குக்குழந்தை  பிறக்கிறது  . நாயகன்  அக்காவின் குழந்தை மீது  அக்காவை விட அதீத  பாசம் வைக்கிறான் 


 குழந்தை  வளர்ந்து  சிறுவன் ஆகிறான் .அவனும் மாமன் என்றால் அட் டாச்மெண்ட் ஆக இருக்கிறான் . ஸ்கூலுக்குப்போக வர மாமனின்  வண்டியில் தான் போகிறான் . நைட் படுக்கும்போது கூட மாமனுடன் தான் உறங்குகிறான் 


 நாயகனின் அக்காவுக்குப்பிரசவம்  பார்த்த   லேடி டாக்டர்  தான் நாயகி . அக்காவையும் , அக்கா மகனையும்  இந்தளவு தாங்குகிறான் என்றால் இவனைக்கல்யாணம் பண்ணிக்கிட் டா  நம்மை எப்படித்தாங்குவான் என நினைத்து நாயகி நாயகனை லவ்வுகிறாள்,  நாயகனும் தான் 


நாயகன் , நாயகி இருவருக்கும் திருமணம்  நடக்கிறது .முதல்  இரவு அறையில்  கட்டிலில்  நாயகன் , நாயகி இருவருக்கும் இடையே   அக்கா மகன்  வந்து  அட்டூழியம் செய்கிறான் .ஹனிமூன் போகலாம்  எனக்கிளம்பினால் நானும் உடன் வருவேன் என அடம் பிடிக்கிறான் 



இந்தக்கதையில்   வில்லன்   அக்கா மகன் தான் . அடிஷனல்   வில்லன்கள்  அவனை ஒழுங்காக வளர்த்தாத பெற்றோர் 


நாயகன் , நாயகி இருவரையும்   வில்லன் ஆன அக்கா பையன்  பிரிக்கிறான் . இருவரும் இணைந்தார்களா?இல்லையா?என்பது மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக   சூரி   அருமையாக நடித்து இருக்கிறார் . இதுவரை   அவர் கதையின் நாயகன் ஆக நடித்த  படங்களில் ஆண்களை மட்டும் தான் அதிகம் கவர்ந்திருப்பார் .   ஆனால்  இதில் அசால்ட்  ஆக  பெண்களின் கவனத்தைக்கவர்கிறார் . சோகம் ,பாசம் ,  காதல் , ஊடல்   என  எல்லா ஏரியாக்களிலும்  சிக்ஸர் அடிக்கிறார் 


  நாயகி ஆக  ஐஸ்வர்யா   லட் சுமி  அபாரமாக   நடித்து இருக்கிறார்  .ரொமான்ஸ்  சீன்களில்  , கோபம் வந்து  பொங்கும்  சீன்களில்   கலக்கி இருக்கிறார் 


நாயகனின்  அக்காவாக ஸ்வாசிகா  உணர்ச்சி  போங்க நடித்திருக்கிறார் . நாயகியை  விட இவருக்குத்தான் சீன்கள் அதிகம் , நாயகனை விட இவருக்குத்தான் க்ளோசப் ஷாட்கள் அதிகம் . பார்வையாலேயே நடித்து இருக்கிறார் 


நாயகனின் தாத்தா , பாடடி ஆக   ராஜ் கிரண் , விஜி    சந்திர  சேகர்  பாந்தமான   நடிப்பு 


நாயகனின்  அம்மாவாக  கீதா   கைலாசம்  கச்சிதம் நாயகனின்   நண்பன் ஆக    பால சரவணன்  அதிக வேலை இல்லை .கெஸ்ட்   ரோலில் விமல் 

  வில்லன் ஆக   வரும் சிறுவனின் நடிப்பு பரவாயில்லை ரகம் 


ஹிஷாம் அப்துல் வகாப் தான் இசை 6 பாடல்கள்   சுமார் ரகம்,  பின்னணி இசை பரவாயில்லை ரகம் தினேஷ்  புருஷோத்தமனின் ஒளிப்பதிவு அருமை , நாயகன் , நாயகி , நாயகனின் அக்கா   மூவரையும்  அழகாகக்காட்டி இருக்கிறார் .கணேஷ்   சிவாவின் எடிட்டிங்கில்  படம் 151  நிமிடங்கள்   ஓடுகின்றது . பின் பாதி அநியாய  இழுவை 

சூரியின் கதைக்கு  திரைக்கதை  அமைத்து   இயக்கி இருப்பவர்  பிரசாந்த்  பாண்டியராஜ் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகன் , நாயகி   இருவரும்  திருமணம்  ஆன பின்பு  ஒரு பிரிவில் எஸ் எம் எஸ்   மூலம்  ஜாலி சண்டை போடும் சீன செம  ஜாலி 


2  நாயகன் , நாயகி   , நாயகனின் அக்கா   மூவரின்   நடிப்பும் அருமை .உடை வடிவமைப்பு கன  கச்சிதம் 


3  முதல்  பாதி திரைக்கதை   அனைவரையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமாக அமைத்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1 கல்யாணம் ஆன ஒரு ஆண்  எப்படி கலகலப்பாக இருக்க முடியும் ? 


2 ஒரு வீட்டில் ஆம்பளை  உடல் நிலை சரி இல்லாம படுத்துட் டா  வீடு   வீடா இருக்கும், ஆனா  ஒரு பொண்ணு உடல் நிலை சரி இல்லாம படுத்துட் டா  வீடு   வீடா இருக்காது 


3  யார்  யார் கிட் டயோ  எதெதுக்கோ  பணிந்து  போகிறோம் , மனைவி கிட் ட    பணிந்து  போனால்   என்ன ? 


4 சாமிக்கு அடுத்து பொண்டாட்டி  இல்லை , பொண்டாட்டியே   சாமி தான் 


5  பிள்ளை ( வாரிசு ) இல்லையா? என ஆம்பளையைப்பார்த்து  வாய் விட்டு யாரும் கேட்க மாட் டாங்க , ஆனா  ஒரு பார்வை பார்ப்பாங்க, நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? என அது கேட்கும் 


6 எப்போ  எப்போ எந்த விஷயம் நடக்கணுமோ அப்போ  அப்போ  அந்த விஷயம் நடக்கணும் 


7   தனியா   வாழும்போது   சேர்ந்து   வாழ  ஆசைப்படறீங்க , ஆனா  சேர்ந்து வாழ  ஆரம்பிக்கும்போது தனித்தனியா இருக்கீங்க 


8  ஏண்டி   மூஞ்சியை   உம்முனு வெச்சிருக்கே ?


 நீங்க  சிரிக்கும்போது நான் சிரிக்க , நீங்க சோகமா இருக்கும்போது நானு ம்  சோகமா  இருக்க பொம்மை இல்லை 



9 பாத்ரூம்ல  பல்லி க்குப்பயப்படுவதை இன்னமுமா இந்தபொம்பளைங்க விடலை ? 


10  பெண்களுக்கு மரியாதை தருவதில் இ ந்த உலகிலேயே என் அப்பா தான் முதல் இடம் , ஆனா நீ  அவரையும் தாண்டிட் டே 


11  நீங்க எப்போ  ஸ் வீட் தரப்போறீங்க ? 


 நீங்க ஓகே சொன்னா மூணே மாசத்துல 



12   குழந்தை  மாலை சுத்திப்பிறந்தா தாய் மாமனுக்கு ஆகாது    என சொல்றாங்களே? 



 டயட் ல இருக்கணும் , டெய்லி எக்சசைஸ் பண்ணனும்னு சொல்றோம் , யார் அதை பாலோ பன்றாங்க ?அது மாதிரி தான் 


13  யோவ் , தயவு செய்து   தொடையை  மட்டும் காட் டாத 


14  எல்லோருக்கும்   நல்லவனா   இருந்துட்டு   உனக்கு மட்டும்   சுயநலமா இருந்திருக்கேன் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   எட் டாம் கிளாஸ்  பெயில் ஆன பொண்ணுங்க கூட இப்போ கவர்மெண்ட் ஜாப் உள்ள மாப்பிளை வேணும் , சொந்த வீடு இருக்கணும்னு கேக்குதுங்க.கவர்மெண்ட்  ஹாஸ் பிடல்   டாக்டர்   ஆக  இருக்கும் நாயகி  வேலை வெட்டி இல்லாத , படிக்காத நாயகனை லவ்வுவது எப்படி ? 


2  வீட்டின் மொ ட்டை  மாடில நைட் டைம்ல சரக்கு அடிக்கும்போ து ராஜ்கிரண் எதுக்கு கூலிங்க் க்ளாஸ் போட்டிருக்காரு ? 



3 நாயகனின்   அக்கா  ஈகோ  உள்ளவர் என காட்டி விட்டு க்ளைமாக்சில்  திடீர் என அனைவரின் காலிலும் விழுவது  நாடகத்தனம் 


4  நாயகனின் தாத்தா ,பாட்டி கேரக்டர்கள்  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை .அந்த போர்சனை தூக்கி இருந்தால் 30 நிமிடங்கள்  மிச்சம் 


5 நாயகனின் அக்கா  செக்கப்புக்காக ஹாஸ் பிடல் வருகிறார் , உடன் கணவரும்  இருக்கிறார் . செக் பண்ண டாகடர்  முயலும்போது   தம்பி   ஆன நாயகன்  அக்காவின்  சேலையை இடையில்  இருந்து நகர்த்த   வருகிறார் , கணவர் அதை செய்ய மாட் டாரா?   நரஸ்   எதுக்கு இருக்காங்க ?ஓவர் அலப்பறை 


6   பின் பாதியில்   நாயகனின்    அக்கா மகனுக்கு   விபத்து நடப்பது ,  தாத்தா , பாட்டி     மரணம்  எல்லாம் 

வலியத்திணிக்கப்பட் ட சோகங்கள் 


7  படத்தில்   நாயகன் நாயகியை  இரு முறை பளார்  பளார்  கொடுக்கிறார் .நிஜ வாழ்வில்  டொமெஸ் டிக்  வயலன்ஸ் கேசில் உள்ளே  போக வேண்டி வரும் 


8 கதைப்படி  அக்கா மகன் தான் வில்லன், ஆனால் நாயகியை வில்லி போல காட்டுகிறார்கள்  


9  கவர்மெண்ட்  டாக் டர்  டிரான்ஸ்பர்  கேட் டால்   அடுத்த நாளே   கிடைக்காது .ஆறு மாதங்கள் ஆகும் 


10    வேலை   வெட் டி இல்லாத  மாப்பிள்ளையை  மாமனார்   மதிக்க மாட் டார் . ஆனால் இதில் பம்முகிறார் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அடிதடி , வெட் டு , குத்து , வன்முறை இல்லாத நல்ல   படம்   குடும்பத்துடன்  படம் பார்த்து நீண்ட நாள் ஆச்சு ,முதல் பாதி அருமை , பின் பாதி அழுகை + இழுவை . ஆனந்த   விகடன் மார்க்  யூகம்  42 . ரேட்டிங்க்   2.75 / 5 


Maaman
Theatrical release poster
Directed byPrasanth Pandiyaraj
Screenplay byPrasanth Pandiyaraj
Story bySoori
Produced byK. Kumar
Starring
CinematographyDinesh Purushothaman
Edited byGanesh Siva
Music byHesham Abdul Wahab
Production
company
Lark Studios
Distributed bySri Kumaran Films
Release date
  • 16 May 2025
Running time
151 minutes[1]
CountryIndia
LanguageTamil

Monday, May 19, 2025

DD NEXT LEVEL (2025)-டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் காமெடி டிராமா )

           

  இயக்குனர்  எஸ்  பிரேம் ஆனந்த்தின்  டிடி  ரிட்டர்ன்ஸ் (2023)  நல்ல  ஹிட் படம் , காமெடி  ஒர்க் அவுட் ஆகி இருந்தது . மிகப்பெரிய  காமெடி  நடிகர்களின் பட் டாளத்துடன்  களம்   இறங்கி  இருக்கும் அவர்  இந்த முறையும்  வெற்றி  பெற்றாரா?  என்பதைப் பார்ப்போம்            


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லனுக்கு சினிமா  விமர்சகர்களைக்கண்டால் பிடிக்காது . ஒவ்வொரு சினிமா விமர்சகர் ஆக டார்கெட் வைத்து  ஸ்பெஷல்  ஷோ  இருக்கு , குடும்பத்துடன்  வரவும் என  அழைத்து  அவங்களைக்காலி  பண்ணும் கேரக்ட்டர் 


நாயகன்  ஒரு சினிமா விமர்சகர் . யு  ட்யூபில் சினிமா விமர்சனம்  செய்பவர் . இவருக்கும்  அதே  போல அழைப்பு வருகிறது .. இவரும்  குடும்பத்துடன்  போய்  தியேட்டரில்  மாட்டிக்கொள்கிறார் .அவர்  தன குடும்பத்தை எப்படிக்காப்பாற்றினார் என்பது மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக சந்தானம்  , மாறுபட்ட  கெட்டப்  ரசிக்க   வைக்கிறது . ஆனால்  படம் முழுக்க அவர் ;ப்ரோ  ப்ரோ எனப்பேசுவது சகிக்கவில்லை .. சில   ஒன்  லைனர் , சில   காமெடி  ஸீக்வன்ஸ்  அவரைக்காப்பாற்றி 

 இருக்கிறது 


 நாயகி  ஆக கீர்த்திகா திவாரி  டூயல் ரோல் . நாயகனுக்கு  ஜோடியாக ஒரு ரோல் , ஜெசிகா என்னும் பேய் ரோல்  இரண்டிலும் அதிக வாய்ப்பில்லை 


வில்லன் ஆக செல்வ ராகவன் .ஸ்கூல்  பசங்க  மாதிரி  மேக்கப் போட்டு கடுப்பேற்றுகிறார் 


போலீஸ் ஆபீசர்  ஆக கவுதம் வாசுதேவ் மேனன்  ஓகே  ரகம் . அவர் இயக்கிய படங்களில்  வரும் டூயட்டை  அவருக்கே  கொடுத்து  நடிக்க வைத்த ஐடியா குட் 


மொட் டை  ராஜேந்திரன் தான் படத்தின் ஒரே ஆறுதல் . பல இடங்களில்   சிரிக்க வைக்கிறார் 


நாயகனின் அம்மாவாக வரும் கஸ்தூரி  தெலுங்கில்  பேசி  காமெடி  பண்ண   முயற்சிக்கிறார் ., ம்ஹூம் .எடுபடலை 


நாயகனின் அப்பாவாக வரும்  நிழல்கள்  ரவி  காமெடி பண்ணுகிறேன் பேர் வழி என   நம்மை கோபப்படுத்துகிறார் . மை  டியர் மார்த்தாண்டன்  படத்தில்  கேவலமாக  ஒரு சிரிப்பு சிரிப்பாரே  அதே  சிரிப்பை அதை விடக்கேவலமாக  டெலிவரி செய்கிறார் 

ரெடின்  கிங்க்ஸ்லி  சுமார்  ரகம் .லொள்ளு சபா மாறன்  அதிக   வாய்ப்பில்லை 

தீபக் குமார் பதி யின்   ஒளிப்பதிவு   அருமை .நிஜ உலகம் , பேய் உலகம் என கலர் டோனில்  வெரைட்டி காட்டுகிறார்ரோஹித்  ஆப்ரஹாம் தான் இசை . பாடல்கள்  சுமார் ரகம் . பின்னணி இசை பரவாயில்லை பரத்  விக்ரமனின் எடிட்டிங்கில்  133  நிமிடங்கள்  படம் ஓடுகிறது .பின் பாதியில்  20  நிமிடங்கள் ட்ரிம் பண்ணி இருக்கலாம் 

திரைக்கதை , வசனம் எழுதி  இயக்கி இருக்கிறார் எஸ்  பிரேம் ஆனந்த்


சபாஷ்  டைரக்டர்


1  உயிரின் உயிரே  பாட்டுக்கு  கவுதம்  வாசுதேவ்  மேனன்  நாயகனின் தங்கை  காலைப்பிடிக்க  அவரது காலை நாயகன் பிடிக்கும் சீன்  நல்ல ஐடியா 


2  லொள்ளு சபா மாறன்  குளிருது  என பதறுவதும்  அந்த லேடி  அரக்க பறக்க   பொருட்களை சிதறடிப்பதும் காமெடி 


3 மஞ்சு மேல்  பாய்ஸ்   மலையாளப்பபடத்தை  நக்கல்   அடிக்கும்  சீன செம .ஜட்டி  பாய்ஸ்  என விளிப்பது  லொள்  ரகம் 


4  படத்துக்கு  ஜெசிக்காவின் டைரி  என டைட்டில் வைத்திருக்கலாம் .மேட்ச்சிங்காக இருந்திருக்கும் .அந்த டைரியை கைப்பற்ற  செய்யும்  காமெடி  அலப்பறைகள்  அருமை 


5  லொள்ளு சபா மாறன்  டி வி செய்தி வாசிப்பாளராக நடித்து  தப்பிக்க முயற்சிக்கும் சீன்  அருமை 


6   சினிமா விமர்சகர்கள் ஆன இட்  ஈஸ்  பிரசாந்த் , பிலிமி கிராப்ட்  அருண்  ஆகியோரை  நடிக் க வைத்தது புத்திசாலித்தனம் 


7  மொட்டை  ராஜேந்திரனின் எலி காமெடி  குழந்தைகளைக்கவரும் 


8  ஆர்ட்   டைரக்ஸன்  ஒர்க் அபாரம் . வி எப் எக்ஸ்  சில கப்பல்  சீன்கள்  செம 


9 இயக்குனரிடம்   பல  வித்தியாசமான    ஐடியாக்கள் கொட்டிக்கிடப்பது கண்கூடு 


  ரசித்த  வசனங்கள் 


1  இதுதான் உன் முதல் படமா? ரொம்ப ஓவரா நடிக்கறே? 


2  ஒவ்வொரு படத்தையும் கழுவி ஊத்தும்போது அப்படியே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே 


3  லில்லி  ...... டோன்ட் பி சில்லி 


4  யோவ்  கிங்க்ஸ்லி, நெல்சன் சொல்லிக்கொடுத்த ஒரே  ஒரு மாடுலேஷன்  வெச்சு எல்லாப்படத்துலயும் நீ நடிச்சுட்டு இருக்கே 


5  எதனால  கீழே  பார்த்து பார்த்து  வசனம்  சொல்றே? 


 கீழே  தானே    சப்டைட்டில் ஓடுது ?


6 இதுல  எதோ ஒரு மேஸ்திரி இருக்கு 


யோவ் அது மிஸ்ட்ரி 


7   அந்தப்பொண்ணு  கிட்டே   அவரு என்ன பன்றாரு ? இங்க்லிஷ் ட்யூஷன் எடுக்கறாரோ ? 


8   இதுவரை இங்க்லிஷ்  ல பேசுனேனே  எதுனா புரிஞ்சுதா? 


புரிஞ்சுதா?  எனக்கேட்டது  வேணா புரிஞ்சுது 


9    கிங்க்ஸ்லி , புரூஸ்லீ , மூக்கு சளி 


10  சமையல்   செய்த  கை விரல்களுக்கு  மோதிரம் தான்  போடணும் , என்னது ? மோதிரம்  ஆல்ரெடி  சாப்பாட்டில் இருக்கு ? போட்டு விட்டுட் டாங்களா? 



11  அவ  உயிரோட  இருந்தா செம பீஸ் , செத்துட் டா ரெஸ்ட் இன்  பீஸ் 


12   ரேஷன்  கடைல 2000 ரூபா தர்ற  மாதிரி எல்லாரும் இங்கேயே  எதனால வர்றாங்க ? 


13   இந்தக்குழி  எவ்ளோ ஆழம்  இருக்கும்னு தெரியலையே? 


 நான் வேணா உன்னை தள்ளி விடறேன் , பார்த்துட்டு வர்றியா? 


14  அதுவரை  நான் என்ன செய்ய ?


 நிலாவை கிரகணம் பிடிக்காம பார்த்துட்டு இரு 


15  அந்த ஆப்  ஷேவ்டு  மண்டை ஆண்ட்டி இருக்கே ,,,,,,



16  போன  நியூ இயருக்கு வந்த  பத்து , பதினைந்து டைரிகளே  என் கிட் டே  சும்மா தான் இருக்கு . உன் டைரியை எடுத்து நான் என்னம்மா பண்ணப்போறேன் ?


17   எந்த லூசுன்னு  தெரியல ,  இத்துப்போன  இந்தக்கார் ல  இண்டிக்கேட் டரை ஆன்   பண்ணிட்டு போய் இருக்கு 


18   சாகப்போற நேரத்துல சாரி  வேற 


19  எனக்கு  2 அம்பு குத்திடுச்சு , உனக்கு 3 அம்பு குத்திடுச்சு 


 அது என்ன முட் டை  புரோட் டாவா? கணக்கு வைத்து அங்கலாய்க்க 



20    ஆட்டுக்கல்  பாயாவை  குக்கரில் வைத்த மாதிரி உஸ்னு ஒரு சவுண்டு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  காமெ டி நடிகர்கள்  திரையில்    வந்தாலே ஆடியன்ஸ் சிரிக்க மாட் டார்கள் .ஸ்க்ரிப்ட்டில் காமெடி இருக்கணும் 


2 பாத்ரூம்  , டாய்லெட்  சீன்கள்  தமிழ்  திரையில்  அதிகம் வந்தது  கமல் படங்களில் தான் .  . இயக்குனர் கமல் ரசிகர் போல . பாத்ரூம்  , டாய்லெட்  சீன்கள்   ஓவர் .அதை வைத்து  செய்த   காமெடி எடுபடவில்லை  ,  உவ்வே  ரகம் 


3  பின் பாதி  ரொம்பவே இழுவை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - எல்லோருக்கும்  படம் பிடிக்காது .குழந்தைகள்  ரசிக்கலாம் .முதல் பாகம் ,2 ம் பாகத்தை விட  இதில் காமெடி  குறைவு . விகடன்  மார்க் யூகம் 40 . ரேட்டிங்க்  2.5 / 5 



Devil's Double Next Level
Theatrical release poster
Directed byS. Prem Anand
Written byS. Prem Anand
Produced by
  • Venkat Boyanapalli
  • Arya
Starring
CinematographyDeepak Kumar Padhy
Edited byBharath Vikraman
Music byOfRo
Production
company
Release date
  • 16 May 2025
Running time
133 minutes[1]
CountryIndia
LanguageTamil