Saturday, March 16, 2024

TWO SOULS (2023) - இரண்டு ஆத்மாக்கள் - தெலுங்கு / தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @ அமேசான் பிரைம்

 


வித்தியாசமான  திரைக்கதை  உள்ள  படங்கள்  3  வகைப்படும். வெகு  ஜன  மக்களால்  ஏற்றுக்கொள்ளப்பட்டு  கமர்ஷியல்  ஹிட்  அடித்த  படங்கள்   உதா- புது  வசந்தம், அமைதிப்படை மக்களால்  ஏற்றுக்கொள்ளப்படாத  ஃபெய்லியர்  படங்கள்  உதா - விடுகதை , என் உயிர்த்தோழன் .மக்களால்  ரிலீஸ்  டைமில்  கவனிக்கப்படாமல்  காலம்  கடந்து  புகழப்படும் படங்கள்  - உதா - குணா , அன்பே  சிவம் இந்தப்படம்  ஒரு  வித்தியாசமான  படம்  தான் . இது  எந்த கேட்டகிரியில்  வரும்  என்பதை  உங்கள்  யூகத்துக்கே  விடுகிறேன் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


தனது  காதலி  தன்னை  ஏமாற்றி  விட்டு  வேறு  ஒருவருடன்  போய்  விட்டாள்  என்ற  விரக்தியில்    தற்கொலை  செய்து  கொள்ளும்  முடிவில்  வேகமாக  காரை  ஓட்டி  விபத்தை  உண்டாக்கி  கோமா  ஸ்டேஜில்  இருக்கும்  நாயகன், அதே  போல  வேறு  ஒரு  காரணத்துக்காக  விபத்துக்கு  உள்ளாகும்  நாயகி  இருவரும்  மயக்க  நிலையில்  ஒரே  ஹாஸ்பிடலில் அட்மிட்  ஆகி  சிகிச்சையில்  இருக்கிறார்கள் . இருவருக்குமே  இது  சீரியஸ்  கண்டிஷன்


 இருவரது  உடல்களும்  ஹாஸ்பிடலில்  இருக்கின்றன. இருவரது  ஆன்மாக்களும்  உடலை  விட்டு  வெளியேறி சந்தித்து  உரையாடுகின்றன. இருவரும் அவரவ்ர்  கதையை  பகிர்ந்து  கொள்கிறார்கள் . இருவருக்கும்  உள்ளத்தால்  நெருக்கம்  ஏற்படுகிறது. இதற்குப்பின்  ஏற்படும்  திருப்பங்கள் , சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


இரண்டே கதா பாத்திரங்களை  வைத்து  ஒரு  இரண்டு  மணி  நேரப்படத்தை  உருவாக்குவது  ஒரு  சவாலான  விஷயம்  தான். அந்த  சவாலில்  இயக்குநர்  வெற்றி  பெற்று  இருக்கிறார்

நாயகன்  ஆக  த்ரிநாத்  வர்மா  தன்மையாக  நடித்திருக்கிறார். அறிமுகம்  ஆகாத  புதுமுகங்கள்  ஆடியன்ஸ்  மனம்  கவர  நன்கு  உழைக்க  வேண்டும், அந்த  உழைப்பு  இவரிடம்  இருக்கிறது . பரிதாபத்தை ஏற்படுத்தும்  கேரக்டர்  டிசைன் 


நாயகி  ஆக பாவனா  சாகி அடக்கமான  அழகுடன்  நடித்திருக்கிறார். இவர்  ஆன்மா  ஆக  வரும்போது  மிக இயல்பாக  பிரமாதமாக  நடித்தவர்  ரியல்  லைஃப்  கேரக்டரில்  நடிக்கும்போது  கொஞ்சம்  செயற்கையாக  நடித்து  இருக்கிறார். அவரது  தவறா? இயக்குநரின்  கவனக்குறைவா? தெரியவில்லை 


மவுனிகா  ரெட்டி  ஒரு  சின்ன  கேரக்டரில்  வருகிறார். ஓக்கே  ரகம் 

ஆனந்த்  நம்பியார்  இசசி  அமைத்திரு க்கிறார்.பாடல்கள்  சுமார்  ரகம், பின்னணி  இசை  குட் 


சசாங்க்  ஸ்ரீராம்  ஒளிப்பதிவில்  முத்திரை  பதிக்கிறார்.படம்  முழுக்கே  இரண்டே  கேரக்டர்கள்  என்பதால்  ஒளிப்பதிவாளருக்கு  சவாலான  வேலை  தான். 


கதை , திரைக்கதை   எழுதி  எடிட்  செய்து  இருக்கிறார் . இயக்குநர்  ஸ்ரவன் . இரண்டு  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1    இரண்டே  கேரக்டர்கள்  மட்டுமே  வைத்து  ஒரு  திரைக்கதையை  போர்  அடிக்காமல்   சொல்வது  ஒரு  சவாலான  விஷயம், அதை  கச்சிதமாக  செய்திருக்கிறார்


2   நாயகனின்  காதல்  கதையை  ஃபிளாஸ்பேக்கில்  சொல்லி  விட்டு  நாயகி  கதையை  சொல்லாமல்  இழுத்தடிக்கும்போதே  அதில்  ஏதோ  ட்விஸ்ட்  இருக்கும்  என்று  எண்ண  வைத்து  யாரும்  எதிர்பார்க்காத  அந்த  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  ப்ளேஸ்  செய்த  விதம்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1 வரச்சொன்னா  யாரும்  வருவாங்களே  தவிர  போகச்சொன்னா  யாரும்  போக  மாட்டாங்க 


2 நாம  எங்கே  இக்ருக்கோம்  என்பது  சுத்திப்பார்த்தா  தெரியாது , திரும்பிப்பார்த்தாதான்  தெரியும் 


3   டெய்லி  புதுப்புது  பிரச்சனைகளா  வருதுன்னா  லைஃப்  பூரா  புதுசு  தானே?


4  உனக்குப்பிடிச்சவங்க  உன்  பக்கத்துல இருக்கும்போது   அட்லீஸ்ட்  உன்னை  சிரிக்க வைக்க   முயற்சி  பண்ணும்  சந்தோஷம்  போதுமே?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

சமீபத்திய  சர்வே  ஒன்றில்  மாடர்ன்  பெண்கள்  ஒரு  லட்சம்  பேருக்கு  மூன்று  பேர்தான்  சமையல் நன்கு  கற்றவர்களாக  இருக்கிறார்ளாம். அந்த  சமையலை  ஏதாவது  குறை  சொன்னால்  அந்த  அபூர்வங்களும்  சமைப்பதில்  சலிப்பு  காட்டி  எதிர்காலத்தில்   சமைக்கும்  பெண்  இனமே  அருகி  விடும்  அபாயம்  உண்டு .  இப்போது  வரும்  பெரும்பான்மையான  படங்கள்  சரக்கு , குடி , அடிதடி , கிளாமர்  என்று  சீர்கேடான  காட்சிகளைக்கொண்டு  படமாக்கப்பட்டு  வருகையில்  வெகு  அபூர்வமாக  இது  போன்ற  நல்ல  படங்கள்  வருகின்றன. அதிலும்  நாம்  ஏதாவது  குறை  கண்டு பிடித்து  நொட்டை  சொல்லிக்கொண்டிருந்தால்  நல்ல  கதை  சொல்லிகளும்  மற்றவர்கள்  போல  டப்பா  படம்  எடுக்க  ஆரம்பிக்கும்  அபாயம்  உண்டு 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட படங்களை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம் . பொறுமை  மிக  அவசியம், பெண்களுக்கு  அதிகம்  பிடிக்கும் . ரேட்டிங்  2.5 / 5 

0 comments: