Friday, March 01, 2024

லால் சலாம் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம்


ஐஸ்வர்யா  ரஜினி  இயக்கிய  முதல்  படமான  3  (2012) கமர்ஷியலாக  அட்டர்  ஃபிளாப்  ஆனாலும்  விமர்சன  ரீதியாக  பாராட்டுப்பெற்றது. தன்  கணவரையே (தனுஷ் )  நாயகனாக   நடிக்க  வைத்து  நெருக்கமான  காதல்  காட்சிகளை  ஸ்ருதி  கமலை  வைத்து  இயக்கி  தேவை  இல்லாமல்  தன்  தலையில்  தானே  மண்ணை  அள்ளிப்போட்டுக்கொண்டார் . க்ரைம்  த்ரில்லராக  இவர்  இயக்கிய  வை  ராஜா  வை (2015) சுமாராகப்போனது . சினிமா  வீரன்  ( 2017)  என்ற  டாக்குமெண்ட்ரி  ஃபிலிமை  இயக்கினார். 7  வருட  இடைவெளிக்குப்பின் ரஜினியை  கெஸ்ட் ரோலில்  நடிக்க  வைத்து  பிரமோஷனில்  ரஜினி  படம்  மாதிரியே  பில்டப்  கொடுத்தும்  பெரிய  ஓப்பனிங்  கிடைக்கவில்லை 90 பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  23  கோடி  மட்டுமே  வசூலித்த  படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  கிராமத்தில்  முஸ்லீம்கள் , இந்துக்கள்  ஒற்றுமையாக  வாழ்கின்றனர். ஆனால்  அந்த  ஊரில்  இருக்கும்  ஒரு  சாதிக்கட்சித்தலைவருக்கு  அது  பிடிக்கவில்லை . கிரிக்கெட்  போட்டி மூலம்  ஊர்  மக்களை  இரண்டாகப்பிரிக்க  திட்டம்  இடுகிறார்,


  மும்பையில்  பெரிய  டானாகவும் , டெக்ஸ்டைல்  அதிபராகவும்  இருக்கும்  நாயகன்  ஒரு  முஸ்லீம்  , அவரது  மகன்  தமிழக கிரிக்கெட்  டீம்க்காக  விளையாடுவதில்  ஆர்வம்  உள்ளவன்


நாயகனின்  நண்பன்  ஒரு  இந்து  , அவரது  மகனுக்கும்  முஸ்லீம்  ஆன  நாயகனின்  மகனுக்கும்  கிரிக்கெட்  போட்டியில்  நடந்த  தகறாரில்  பிரச்சனை  ஏற்படுகிறது . இதில்  நாயகனின்  மகனின்  வலது  கையை  வெட்டி  விடுகிறான்  நண்பனின்  மகன்,  இதனால்  இந்து  முஸ்லீம்  பிரச்சனை  ஏற்படுகிறது. ஊரில்  தேர்த்திருவிழா  நடைபெற  இருக்கும்    சூழ்நிலையில்  நாயகன்  என்ன  முடிவு  எடுத்தான்  என்பதே  மீதி  திரைக்கதை கெஸ்ட்  ரோல்  என்று  சொல்லப்ப்ட்டாலும்  படம் முழுக்கவே  பயணிக்கும்  நாயகன்  ரோலில்  ரஜினி கலக்கி  இருக்கிறார். தன்  மகன்  கை  வெட்டப்பட்ட சேதி  அறிந்து  கலங்கும்  காட்சி  அருமை . ஒவர்  பேசும்  மத  நல்லிணக்க  வசனங்கள்  கவனிக்க  வைக்கின்றன


நாயகனின்  மகனாக  விக்ராந்த்  கச்சிதமான  நடிப்பு . கிரிக்கெட்டின்  மேல்  உயிராக  இருக்கும்போதும்  தன்  லட்சியம்  நிறைவேறத்  தடையாக  இருக்கும் தன்  ஊனத்தின்  மீது  சுய இரக்கம்  தோன்றி  தற்கொலைக்கு  முயலும்போதும்  கலங்க  வைக்கும்  நடிப்பு 


 நாயகனின் நண்பனின்  மகனாக  விஷ்ணு  விஷால்  கோபக்கார  முரட்டு  இளைஞராக  கவனிக்க  வைக்கிறார். இவருக்குத்தான்  படத்தில்  அதிக  பங்களிப்பு , பாத்திரத்தை  உணர்ந்து  செய்து  இருக்கிறார்


ரஜினிக்கு  ஜோடியாக  நிரோஷா , விஷ்ணு  விஷாலின்  அம்மாவாக  ஜீவிதா  என  பாத்திரத்தேர்வு  இயக்குநரின்  வித்தியாசமான  ரசனையை  உணர்த்துகிறது. ஊர்ப்பெரிய  மனிதராக  வரும்  தம்பி  ராமய்யாவின்  நடிப்பும்  குட் 


இசை  ஏ  ஆர்  ரஹ்மான். மார்க்கெட்டிங்க்கு  உதவிய  அளவு  ரிசல்ட்டில்  உதவவில்லை . மூன்று  பாடல்கள்  பாஸ்மார்க்  வாங்குகின்றன.  


கதை , திரைக்கதை , ஒளிப்பதிவு  ஆகிய  பணிகளை  செய்திருக்கிறார்  விஷ்ணு  ரங்கசாமி .பிரவீன்  பாஸ்கர்  எடிட்டிங்கில்  படம் 150  நிமிடங்கள்  ஓடுகிறது.கிரிக்கெட்  மேட்ச்  , ஊர்  திருவிழா , இந்து  முஸ்லீம்  பிரச்சனை  என  மாறி  மாறி  கதைக்களம்  இயங்குவதால்  லேசான  குழப்பம், இன்னும்  தெளிவாக திரைக்கதை  அமைத்து  இருக்கலாம் 


திரைக்கதை  உதவி  மற்றும்  இயக்கம் என  இரு  பணிகளை  செய்து  இருக்கிறார்  ஐஸ்வர்யா  ரஜினிகாந்த்


சபாஷ்  டைரக்டர்


1  மத  நல்லிணக்கத்தை  வலியுறுத்தும்  கதைக்கரு  மற்றும்  க்ளைமாக்ஸ்  காட்சி 


2  ஒரு  கை  வெட்டுப்பட்ட  முஸ்லீம் நபரின் இடது  கையால்  தேரின்  வடம் பிடிக்க  முயலும்போது  முதல்  முதலாக  வடம் பிடிக்கும்போது  இடது  கையால்  பிடிக்கக்கூடாது  என  கூட்டத்தில்  ஒருவர்  சொல்ல  ஒரு  இந்து  தன்  வலது  கையால்  முஸ்லீம்  நபரின் இடது  கையை  அரவணைத்து  வடம்  பிடிக்கும் காட்சி டச்சிங்   சீன்


3  எலியும் , பூனையுமாக  இருந்த  இரு  கேரக்டர்கள்  க்ளைமாக்சில்  என்ன  ஆவார்கள்  என்ற  எதிர்பார்ப்பை  ஏற்படுத்திய  விதம் 

  சாங்க்ஸ்


1  தேர்த்திருவிழா

2   ஏ  புள்ள

3   திமிறி  எழுடா

4  ஜலாலி


  ரசித்த  வசனங்கள் 

1  100  ரூபா  பொருளை  300  ரூபாய்க்கு  விற்பவன்  கொள்ளைக்காரன். 200 ரூபாய்க்கு   விற்பவன்  மோசமானவன் , 150  ரூபாய்க்கு  விற்பவன் வியாபாரி . நான்  125  ரூபாய்க்கு  விற்கறேன். நியாயமான  வியாபாரம்


2  பையன்  சம்பாதிச்சா  வீட்டுக்குப்பெருமை , பையன்  சாதிச்சா  நாட்டுக்கே  பெருமை


3  பதவிக்கும் , பொறுப்புக்கும்  ஆசைப்படறவங்க  கோபப்படக்கூடாது


4   வாழ்க்கைல  தப்பு  பண்ணாத  மனுசனே  கிடையாது 


5 பிரச்சனையைக்கண்டு  அழக்கூடாது , அதை  எப்படி  சரி  செய்வது  என்று  தான்  பார்க்கனும் 


6  வாழ்க்கையை  எப்படித்தொடங்கறோம்  என்பது  முக்கியம்  இல்லை , எப்படி  முடிக்கறோம்  என்பதுதான்  முக்கியம் 


7  நடந்ததையே  நினைச்சுட்டு  நடக்கப்போறதை  கோட்டை  விட்டுடாத


8 பேசுவதைக்கேட்க  காதுகள்  தயாரா  இருக்கும்போது  பேசும்  வாய்க்கு  கண்  இருக்கனும், நாலு  பேர்  என்ன  பேசறாங்கனு  கேட்கும்  காதுகள்  இருக்கனும், சொல்லும்  வார்த்தைகளில்  பொறுப்பு  இருக்கனும், உணர்ச்சியைத்தூண்டுவது  போல  பேசக்கூடாது. ஒரு  சொல்  வெல்லும், ஒரு  சொல்  கொல்லும் 

9  நெல்  விளையும்ஞுதான்  தண்ணீர்  பாய்ச்சறோம், முளைச்சது  களைனு  தெரிஞ்சா நாம  தான்  அதை  பிடுங்கி  எறியனும்

10  வாழ்க்கைல  நாம  நம்ம  மேல  வைக்கற  நம்பிக்கையை  விட நம்  மேல  மத்தவங்க  வைக்கும்  நம்பிக்கை  தான்  பெருசு 

11  என்ன  இழப்பு  ஏற்பட்டது  என்பதை  விட  அது  எப்படி  ஏற்பட்டது  என்பதுதான் முக்கியம்

12 சொந்தக்காலில்  நிற்பவன்  எப்பவும்  சொல்பேச்சு  கேட்க  மாட்டான் 

13  போட்டிக்கு  வர்றவனை  ஜெயிக்கலாம், பொறாமைப்படுபவனை  எப்படி  ஜெயிக்க? 
 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அம்மா  - மகன்  செண்ட்டிமெண்ட்  காட்சி  என  நினைத்து  இயக்குநர்  உருவாக்கிய  விஷ்ணு  விஷாலை  அவரது  அம்மா  செத்துப்போடா  என  திட்டி  அடித்து  விரட்டும்  காட்சி  மிகவும்  இரிட்டேடிங்  ஆக  இருந்தது . எப்படா  அந்த  சீன்  முடியும்  என  எண்ண  வைத்தது . ஒருவேளை  டி வி  சீரியல்  பார்க்கும்  பெண்கள்  ரசிக்கலாம், பொது  ரசிகர்களை  கடுப்பேற்றும்  காட்சி 


2  இந்த  மாதிரி  ஆக்சன்  படங்களில் இண்ட்டர்வல்  ப்ளாக்  சீன்  தெறிக்க  விட்டிருக்க  வேண்டாமா?   மேலே  சொன்ன சோகமான  சீனை  முடித்து  விட்டு  ரஜினி  கடவுள்  வழிபாடு  செய்வதாக  காட்டி  இடைவேளை  விடுகிறார்கள் . உப்பு  சப்பில்லாத  காட்சி 


3  தனது  மகன்  கிரிக்கெட்  ரஞ்சி  கோப்பை  விளையாடத்தேர்ந்தெடுக்கபப்ட்டான்  என்ற  செய்தியைக்கேள்விப்பட்டதும்  ரஜினி   குதூகலம்  அடைவதை  எவ்வளவோ  நல்ல   காட்சி  மூலம்  வெளிப்படுத்தி  இருக்கலாம் .ஆனால்  டைனிங்  டேபிளில்  அமர்ந்திருக்கும்  அவர்  தட்டில்  உணவுப்பொருட்களை  எல்லாம்  தூக்கி  வீசி  வீணாக்குவது  போல்  காட்சி  எதற்கு ? அன்ன  லட்சுமி யை  அவமானப்படுத்தியது  ஒரு பக்கம் .,  ஐந்து  ஏழைகளுக்கு  உணவாக  அதை  அளித்திருக்கலாம்  என்பது  ஒரு  பக்கம் 


4  தமிழக  அணியில்  விளையாட  தேர்ந்தெடுக்கப்பட்ட  வீரர்  உள்ளூர்  சாதா  மேட்சில்  அதற்குப்பின்  விளையாடுவாரா? லாஜிக்கே  இல்லையே? இதில்  காமெடி  என்னான்னா  படத்தின்  மெயின்  பிரச்சனையே  அந்த  மேட்சில் தான்  நிகழ்கிறது   


5  க்ளைமாக்சில் காந்தாரா  பாணியில்  ஒரு  கேரக்டரை  வலுக்கட்டாயமாகப்புகுத்தி  உள்ளனர்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ரஜினி  ரசிகர்களுக்கு  ஏமாற்றமான  படம்  தான் , ஆனால்  விஷ்ணு விஷால் , விக்ராந்த்  ரசிகர்களுக்கு  நம்பிக்கை  ஊட்டும்  படம். பொது  ரசிகர்கள்  டி வி யில்  போட்டால்  பார்க்கலாம்  ரேட்டிங் 2.25 / 5 


நன்றி - அனிச்சம் மின்னிதழ் 1/3/2024

Lal Salaam
Theatrical release poster
Directed byAishwarya Rajinikanth
Screenplay byVishnu Rangasamy
Aishwarya Rajinikanth
Story byVishnu Rangasamy
Produced bySubaskaran Allirajah
Starring
CinematographyVishnu Rangasamy
Edited byB. Pravin Baaskar
Music byA. R. Rahman
Production
company
Distributed byRed Giant Movies
Release date
  • 9 February 2024
Running time
150 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budgetest. 80–90 crores[2]
Box officeest. 23 crores[3]

0 comments: