Monday, March 25, 2024

ஆப்ரஹாம் ஓஸ்லர் (2024) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ டிஸ்னி + ஹாட் ஸ்டார்


ஜெயராம்  நடித்த  படங்களிலேயே அதிக  வசூல்  செய்த  படம்  என்ற  சாதனையை இது  பெற்றுள்ளது.41  கோடி  ரூபாய்  வசூலித்துள்ள  லோ  பட்ஜெட்  படம் இது     


2020   ஆம்  ஆண்டு  ரிலீஸ் ஆகி  சூப்பர்  டூப்பர்  ஹிட்  ஆன  அஞ்சாம்  பாதிரா  படத்தை இயக்கிய  மிதுன்  மேனுவல் தாமசின்  படம்  இது. 2023ல்  ரிலீஸ்  ஆன  கருடன் , ஃபீனிக்ஸ்  படங்களும்  இவர்  இயக்கியவையே


மம்முட்டி  இதில் கெஸ்ட்  ரோல்  பண்ணி  இருப்பதாக  விளம்பரம்  செய்யப்பட்டாலும்   அவருக்கான  ஸ்கோப்  குறைவே. இயக்குநரின்  மற்ற  படங்களுடன்  ஒப்பிடுகையில்  தர  வரிசையில்  ஒரு  படி  கீழே  இருந்தாலும் பேனர்  வேல்யூ  காரணமாக  வெற்றி  பெற்று   விட்டது   


ஸ்பாய்லர்  அலெர்ட்


சாலை  விபத்தில்  தொடர்ந்து  3  பேர்  அடுத்தடுத்து    காயம்  பட்ட  மூன்று  வெவ்வேறு  நபர்கள்  ஹாஸ்பிடலில்  சேர்க்கப்பட்டதும்  யாரோ  ஒரு  சீரியல் கில்லரால் கொலை  செய்யப்படுகிறார்கள் . நான்காவதாக  , கடைசியாக  ஒரு  கொலை  செய்யும்  முன்  போலீஸ்    அவரைப்பிடித்து    விடுகிறது .அவர்  ஏன்  அப்படி  செய்தார்  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக , போலீஸ்  ஆஃபீசர்  ஆக  ஜெயராம்.படம்    முழுக்க  தாடியோடு  பிச்சைக்காரன்  மாதிரி  வருகிறார். போலீஸ்  ஆஃபீசருக்கான  கம்பீரம்  மிஸ்ஸிங்.. போலீஸ்  ஆஃபீசர்  என்றால்  கெத்தாக  உடல்  மொழி  அமைய  வேண்டும் .இவர்  என்னடான்னா  படம்  முழுக்க  கையைக்கட்டிக்கொண்டு  அடக்க  ஒடுக்கமாக  வருகிறார்/  ஏ  வி  எம்  சரவணன்  இன்ஸ்பிரேஷன்  போல


வில்லன்  ஆக  மம்முட்டி  அதிக  வாய்ப்பில்லை ., அவரது  ஃபிளாஸ்பேக்  கதையில்  இள வயது  ஆளாக  வேறு  ஒருவர்  நடித்திருப்பதால்  மம்முட்டி  ரசிகர்களுக்கு  ஏமாற்றம்


 இள  வயது  மம்முட்டிக்கு  ஜோடியாக    அனஸ்வரா  ராஜன்   வசீகரிக்க  வைக்கும்  நடிப்பு .


தவறான  ஆபரேசனால்  குரல்  வளத்தை  இழந்த  பாடகர்  ஆக  சைஜூ  க்ரூப்  நன்கு  நடித்திருக்கிறார். 


அனுப்மேனன்  டாக்டர்  ஆக  வருகிறார்.சிறப்பான்  நடிப்பு 


ஷமீர் முகமதுவின்  எடிட்டிங்கில் படம்  144  நிமிடங்கள்  ஓடுகிறது . ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  விறுவிறுப்பு  இல்லை .ஒரு  மணிநேரம்  இழுவை 


மிதுன் முகுந்தன்  இசை குட் , பின்னணி  இசை நல்ல  விறுவிறுப்பு.


தேனி  ஈஸ்வர்  ஒளிப்பதிவில்    நாயகிக்கான  க்ளோசப்  ஷாட்கள்  அழகு 

ரந்தீர்    கிருஷ்ணன்  கதை , திரைக்கதை  எழுத  இயக்கி  இருப்பவர்  மிதுன்  மேனுவல் தாமஸ்  


சபாஷ்  டைரக்டர்


1  மம்முட்டியின்  ஃபிளாஸ்பேக் காட்சிகளில்  காலேஜ்  மாணவனாக  மம்முட்டியையே  நடிக்க  வைக்காமல்  வேறு  ஒருவரை  நடிக்க வைத்தது  குட் 

(  இதில்  தனுஷ்  நடித்திருந்தால்  தாடி , மீசையை  எடுத்துட்டு  காலேஜ்  ஸ்டூடண்ட்  ஆக     அவரே  நடித்திருப்பார்  )   

2  க்ளைமாக்ஸ்  காட்சியில்  நான்காவது  ஆளைக்கொலை  செய்யும்  காட்சி   ஒரு  கைதியின்  டைரி  பட  க்ளைமாக்ஸை  நினைவு  படுத்தினாலும்  சிறப்பாக  இருந்தது 

ரசித்த  வசனங்கள் 


1   குறிக்கோள்  இல்லாத  வாழ்க்கை  குழில  விழுவதற்கு  சமம் 


2  நாம  உயிரோட  இருக்கும்போதே  நம்ம  குழந்தைங்க  இறந்து  போவது  ரொம்பக்கொடுமையான  ஒண்ணு


3   எதுக்கும் துணிஞ்ச , எதற்கும தயாரா  இருக்கற  ஒருத்தனை  என்ன  சொல்லி  மிரட்டுவீங்க ?


4  குற்ற  உணர்வு இல்லாத  மனுசன்  தான்  இந்த  உலகத்துலயே  மோசமான  ஜென்மம்


5 கடவுள்  சிலபேருக்குக்கை கொடுப்பார் , சிலரை  கை  விட்டுடுவார்.அது  அவங்கவங்க  விதி 


6  கடவுளால  கைவிடப்பட்டவங்களுக்கு  சில சமயம்  சாத்தான்  கை  கொடுக்கும், ஆல்ட்டர்நேட்டிவ்  சாத்தானை  அது  உருவாக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்  சீனில்  ஹீரோவுக்கு  லோக்கல்  போலிஸ்  ஸ்டேஷனில்  இருந்து  ஒரு  ஃபோன்  கால் வருகிறது .  லேண்ட்  லைன்  ஃபோனுக்கு  அழைத்து  அதை  செக்  செய்யாமல்  , வெரிஃபை  பண்ணாமல்  அவ்வளவு  பெரிய  ஆஃபீசர்  ஏமாறுவாரா? 


2  டைட்டில்  ரோலில்  ஜெயராம் நடித்திருந்தாலும்  மெயின்  கதைக்கும்  , டைட்டிலுக்கும்  சம்பந்தம்  இல்லை


3  ஜெயராமின்  மனைவி , குழந்தை  கடத்தப்பட்ட  விஷயத்துக்கும்  , மெயின்  கதைக்கும்  சம்பந்தம்  இல்லை. அது  அடுத்த  பாகத்தில் வரும் என்று  சமாளித்திருக்கிறார்கள் 


4   வில்லன்  தான்  கொல்ல  நினைக்கும்   மூன்று  பேரை  போலியான  விபத்து  மூலம்  காயம்  பட  வைத்து  ஹாஸ்பிடலில்   சேர  வைத்து  பின்  மிக  சிரமப்பட்டு  அவர்களைக்கொலை  செய்கிறான். அதுக்கு  விபத்து  ஏற்படுத்தும்போதே  ஈசியாகப்போட்டுத்தள்ளி  இருக்கலாமே? 


5   டைட்டில்   ரோலில்  வரும்  போலீஸ்  ஆஃபீசர்  ஆன  ஜெயராம்  அந்தக்கேசில்  எதையும்  கண்டு  பிடிக்கவில்லை .கூட  இருக்கும்  ஜூனியர்  ஆஃபீசர்கள்  இருவர்  தான்  கண்டு பிடிக்கிறார்கள் , முக்கியமான  தடயத்தை  டாக்டர்  ஆக  வரும்  அனுப் மேனன்  கண்டு  பிடிக்கிறார்.இவர்  சும்மா  தண்டமாக  வருகிறார்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆப்ரஹாம் ஓஸ்லர்  வித்தியாசமான  டைட்டிலாக  இருக்கே? என  நினைத்து  பார்த்தால்  ஏமாற்றம்  அடைவீர்கள் .சராசரியான  , மாமூலான  க்ரைம்  த்ரில்லர்  தான் . ரேட்டிங்  2.25 / 5 


Abraham Ozler
Theatrical release poster
Directed byMidhun Manuel Thomas
Written byRandheer Krishnan
Produced by
  • Irshad M. Hassan
  • Midhun Manuel Thomas
StarringJayaram
Mammootty
Anoop Menon
Anaswara Rajan
Arjun Ashokan
CinematographyTheni Eswar
Edited byShameer Muhammed
Music byMidhun Mukundan
Production
companies
Nerambokku
Manual Movie Makers
Distributed byAnn Mega Media
Release date
  • 11 January 2024
Running time
144 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office40.53 crore

0 comments: