Saturday, March 02, 2024

BRAMAYUGAM (2024) - மலையாளம் - பிரம்ம யுகம் - தமிழ் - சினிமா விமர்சனம் ( டார்க் ஃபேண்ட்டசி ஹாரர் த்ரில்லர் )

 


   28  கோடி  ரூபாய்   பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு    முதல்  11  நாட்களீல் 50  கோடி  வசூல்  செய்த  படம். இது  ஒயிட் அண்ட்  பிளாக்  படம்  தான்  என்றாலும்  விமர்சகர்களால்  வானளாவ  பாராட்டப்பட்டது . நடிப்பு , சவுண்ட்  டிசைனிங் , ஒளிப்பதிவு ,  பின்னணி  இசை , ஆர்ட்  டைரக்சன்  போன்ற  டெக்னிக்கல் அம்சங்களில்  டிஸ்டிங்க்‌ஷன்  வாங்கிய  படம்   15/2/2024  அன்று  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆனது 


ஐந்தே  கேரக்டர்களை  வைத்து  எடுக்கப்பட்ட  படம் இது . 2019ல்  ரிலீஸ்  ஆன  த லைட் ஹவுஸ்  என்ற  ஹாலிவுட்  படத்தின்  அட்லி  ஒர்க்  தான் இது . சீன்  பை  சீன் அட்டக்காப்பி  அடிக்காமல்  அந்தக்கதை, திரைக்கதையின்  தாக்கத்தில்  உருவான  படம் இது . ஒரிஜினல்  வெர்சனை  விட  இந்தப்படம்  தரத்தில்  நல்ல  தரமான  படமாக  வந்திருப்பதாக  பலரும்  கூறுகின்றனர். நான்  லைட்  ஹவுஸ்  படத்தைப்பார்க்கவில்லை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


   கதை  நடக்கும்  கால கட்டம்  17 ஆம்  நூற்றாண்டு . கதை  நிகழும்  இடம்  ஒரு  வனப்பகுதி.   நாயகன் பாட்டுப்பாடும்  பாணர்  குலத்தைச்சேர்ந்தவன் , கானகத்தில்  வரும்போது  வழி  தவறி  ஒரு  பாழடைந்த   வீட்டில்  தஞ்சம்  அடைகிறான்.   அந்த  வீட்டில்  வில்லனும், அவனது  சமையற்காரனும்  வசித்து  வருகிண்றனர்


  வில்லன்   உயர்ந்த  குடியைச்சேர்ந்தவன் .   சமையற்காரன்  அவருக்குக்கீழே  இருப்பவன் . நாயகன்  இருவருக்கும்  இடைப்பட்ட   சாதி . சாதி  வித்தியாசத்தை  வைத்து  ஆட்களை  நடத்தும்  பாணி, பழக்கம்  இக்கதையில்  சொல்லப்படுவதால்  இந்த விளக்கம்


 பா  ரஞ்சித்  படங்களில்  தான்  இந்த  மாதிரி  வில்லன் உயர்ந்த  ஜாதி , நாயகன்  தாழ்ந்த  சாதி  என்று  கதைப்போக்கு  சொல்லப்படும் 


 நாயகனின்  பாடல்  பாடும்  திறமை  கண்டு  வில்லன்  அவனது  வீட்டில்  தங்கிக்கொள்ள  அனுமதிக்கிறான் 


 சில  நாட்களில்  நாயகனுக்கு  அந்த  வீட்டில்  சில  மர்மங்கள்  இருப்பது  தெரிய  வருகிறது . வீட்டின்  பின்  புறத்தில்  சில  சவக்குழிகள்  வெட்டப்பட்டு  மூடப்பட்டிருப்பதைப்பார்க்கிறான். அடுத்த  பலி  தான்  தான்  என்பதை  உணர்கிறான்


 அந்த  வீட்டில் இருந்து  தப்பிக்க  முயற்சிக்கிறான், ஆனால்  முடியவில்லை.சமையல்காரன்  மற்றும்  நாயகன்  இருவரும்  சேர்ந்து  வில்லனை  ஒழிக்க  திட்டம் போடுகின்றனர், இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக   அர்ஜூன்  அசோகன்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.  அவரது  உடல் மொழி , சிகை  அலங்காரம்  எல்லாம்  அந்தக்கால  ஆசாமி  போலவே  இருப்பது  சிறப்பு 


 வில்லன்  ஆக  மெகா  ஸ்டார்  மம்முட்டி . சாத்தான்  மாதிரி  கேரக்டர் . சமையற்காரன்  அவரை  எசமான்  என்று  அழைக்கும்போதெல்லாம்  அவர்  முகத்தில்  தவழும் புன்னகை  அருமை .  நாயகனுடன்  பேசும்  சில  தருணங்களில்  காட்டும்  பல்வேறு  உணர்ச்சிகள்  நவரச  நடிப்பு


சமையற்காரனாக  சித்தார்த் பரதன்  கச்சிதமான  நடிப்பு . ஒரு  கட்டத்தில்  இவர்  வில்லன்  ஆகி  விடுவாரோ  என்று  திரைக்கதை  நகர்வது  குட் 


  யட்சி  ஆக  மோகினி  மாதிரி  ஒரு  கேரக்டரில்   அமல்டா  லிஸ்  அழகாக  வந்து  போகிறார். இவருக்கு  அதிக   வேலை இல்லை .   ஒரே  ஒரு  காட்சியில்  மணிகண்டன்  ஆச்சாரி  நடித்துள்ளார்.


  மேலே  சொன்ன  இருவருக்கும்  அதிக  வேலை  இல்லை, அதிக  காட்சிகள் இல்லை  என்பதால்  நாயகன் , வில்லன், சமையற்காரன் என்று  மூவரைச்சுற்றியே  கதை  நகர்ந்தாலும்  படம்  போர்  அடிக்கவில்லை . ஒரு  ஹாரர்  த்ரில்லருக்கு  உரிய  சஸ்பென்ஸ்  உடன்  கதை  நகர்கிறது 


டெக்னிக்கல்  ஃபீம்க்கு  ஒரு சபாஷ் போட்டே  ஆகவேண்டும் 


  பின்னணி  இசையில்  திகில் ஊட்டி  இருக்கிறார்   கிறிஸ்டோ  சேவியர். ஒயிட்  அண்ட்  பிளாக்கில்  ஒளிப்பதிவு  செய்து  அந்தக்கால  கட்டத்தைக்கண்  முன் கொண்டு  வருகிறார்  ஒளிப்பதிவாளர்   ஷென்னத்  ஜலாலின்     ஷபீக் முகமது   அலி  கட்ஸ்-ன்  எடிட்டிங்கில்   படம்  ரெண்டே  கால்  மணி நேரம்  ஓடுகிறது 


படத்தில்  மூன்று  பாடல்கள்.  ஸ்பீடு  பிரேக்கர்கள் ஆனாலும்  ரசிக்க  வைக்கிறது 


 திரைகக்தை  எழுதி  இயக்கி இருக்கிறார்     ராகுல்  சதசிவம் 




சபாஷ்  டைரக்டர்  (  ராகுல்  சதசிவம் ) 


1   மம்முட்டியின்  கெட்டப் மற்றும்  அவரது  உடல்  மொழி   அட்டகாசம் 


2  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  யட்சியின்  கேரக்டர்  டிசைன்  ஒரு   ரிலாக்ஸ்


3    படத்தின்  பின்  பாதி  முழுக்க  மழை  வந்து  கொண்டே  இருப்பது  போல காட்சி  அமைத்திருப்பது  ஒரு  பிளஸ் 


4  ஆர்ட்  டைரக்டர்  சோதி  சங்கரின்  அபாரமான உழைப்பு 



  ரசித்த  வசனங்கள்   (  பிரபல  எழுத்தாளர்  ஐ டி  ராமகிருஷ்ணன் ) 


1    காலத்தைப்போல  முடிவில்லாம  ஓடும்  ஆறு  எதுவும் இல்லை 


2   உதவி  செய்யறேன்னு  ஒருத்தர்  சொல்றப்ப  அதை மறுப்பது  அவரை  அவமானப்படுத்துவது  போல 


3  வந்த  விருந்தாளி  அரசனா  இருந்தாலும்  ஆண்டியா  இருந்தாலும் வரவேற்கனும் 


4   நாம  ஜெயிக்க  யோகம்  மட்டும்  போதாது , புத்தியும்  வேணும் 


5   விதைக்காம  அறுவடை  செய்ய  முடியாது , இது இயற்கையின்  நியதி 


6  காலத்தை  விட  உயர்ந்தது , விலைமதிப்பில்லாதது  வேற  எதுவும் இல்லை 


7  அதிகாரத்தைக்கையில்  வெச்சிருக்கறவங்க  அடுத்தவங்க  சுதந்திரத்தை  கட்டிப்போட  உரிமை  இல்லாதவங்க 


8  சாத்தானுக்கு  ஒரே  ஒரு  லட்சியம்  தான் . யாருக்கும் அதிகாரத்தை  விட்டுக்கொடுக்காம தாமே வாழனும்  என்பதுதான். அதுக்கு  நாம  விடக்கூடாது 


9  நீ  ரெண்டு  தடவை  விதியோட  விளையாட  விரும்பறியா?


 எனக்கு  ஒரு  வாய்ப்புத்தாங்களேன் ?


 அப்போ   அதை  விதினு  சொல்ல  முடியாது 


10  மரணம் , ஒரு  அரிய  வரம், அதுக்குப்பின்  யாருக்கும் ஒண்ணுமில்லை அதுதான் நிரந்தரமான  முடிவு 


11  உங்களுடைய  உண்மையான  சுய  ரூபத்தை  நான்  பார்க்கனும்\\

அதுக்கு  இன்னும் சமயம்  வர்லை , எல்லாம்  முன் கூட்டியே  தீர்மானிக்கபட்டதுதான். யாராலும்  அதைத்திருத்தி  எழுதிட  முடியாது 


12  சாத்தான்  என்ன  சொன்னாலும்  நம்பாதே , அது  பொய்  மட்டும் தான்  சொல்லும், நம்ம மனசைப்போட்டு  குழப்பும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  அந்த  வீட்டை  விட்டு  தப்பிக்க  நினைக்கும்போது  இரவிலோ , அதிகாலையிலோ  தப்பாமல்  பட்டப்பகலில்  தப்ப  ,முனைந்து  மாட்டிக்கொள்கிறான் 


2  வில்லனின்  இடுப்பு  வேட்டி  மடிப்பில்  மறைத்து  வைத்திருக்கும்  சாவியை  அடைய   பகலில்  வில்லன் கண்  அசரும்போது  முயற்சித்து   மாட்டுகிறான். வில்லன்  குளிக்கும்போது  முயற்சித்து  இருக்கலாம் 


3  வில்லனைப்பற்றிய  ரகசியங்கள்  எல்லாமும்  சமையற்காரனுக்குத்தெரியும்  என்ற  ரகசியம்  வில்லனுக்கு  ஏன் தெரியவில்லை ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  படங்களை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம்,  பொது  ரசிகர்களுக்கு  படம்  போர்  அடிக்கலாம். ரேட்டிங்  3 / 5 


Bramayugam
Theatrical release poster
Directed byRahul Sadasivan
Screenplay by
Story byRahul Sadasivan
Produced by
Starring
CinematographyShehnad Jalal
Edited byShafique Mohammed Ali
Music byChristo Xavier
Production
companies
Distributed by
  • Aan Mega Media (Kerala)
  • Sithara Entertainments (AP&TS)
  • AP International (Rest of India)
  • Truth Global Films (Overseas)
Release date
  • 15 February 2024
Running time
139 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget₹27.73 crore[1]
Box office₹50 crore[2]

0 comments: