Sunday, March 24, 2024

எறும்பு (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபீல் குட் மூவி ) @ அமேசான் பிரைம்


சுறுசுறுப்புக்கும், உழைப்புக்கும்  பெயர்  போன  எறும்பு  தன்  எடையை  விட  20 மடங்கு அதிக  எடையை  தூக்கக்கூடிய  சுமக்கக்கூடிய  ஆற்றல்  கொண்டது . அந்த  எறும்பு  மாதிரி இந்தப்படத்தின்  நாயகி  பொறுப்புகளை  தன்  வயதுக்கு  மீறிய  அளவில்  சுமந்து இருக்கிறார்  என்பது  டைட்டிலுக்கான  நியாயத்தை  சொல்கிறது 


16/6/2023  அன்று  திரை  அரங்குகளில் வெளியான  இப்படம் இப்போது அமேசான்  பிரைம்   ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது . சிறுகதை , அல்லது  நாவல்  படிக்கும்  அனுபவத்தை  திரைக்கதை  நமக்குத் தருகிறது.கமர்ஷியல்  படங்களுக்கு  ஃபார்முலாவாக  சொல்லப்படும்  டூயட், டப்பாங்குத்து  டான்ஸ் ,  வன்முறை , மொக்கைக்காமெடி  டிராக்  எதுவும் இல்லாமல் சொல்ல  வந்த  கருத்தை நேரடியாக ,  இயல்பாக  சொன்ன  விதத்தில்  ஜெயிக்கிறது


படம்  ரிலீஸ்  ஆனபோது  மீடியாக்கள்  விமர்சனத்தில்  கலவையான  கருத்துக்களையே  சொல்லி  வந்தன. ஒரு  குறும்படத்துக்கான  கான்செப்ட்  தான்  எனவும் , ரொம்ப  ஸ்லோவாகப்போகும்  படம்  எனவும் ,  சுலபமாக  யூகிக்கக்கூடிய  திரைக்கதை  அமைப்பு  என்றும்  பேசப்பட்டது 


படத்தின்  ஷூட்டிங்  முழுக்க   காட்டுமன்னார்  கோவில்  என்னும்  கிராமத்தில் நடந்தது . 2021லேயே படம்  முடிந்தாலும்  2023ல் தான்  ரிலீஸ்  ஆனது 


1997ல்  ரிலீஸ்  ஆன  ஈரானியன்  படமான  சில்ட்ரன்  ஆஃப்  ஹெவன்  படத்தின் பாதிப்பில் அதே  ஸ்டைலில்   உருவான  படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி 15  வயது  டீன்  ஏஜ்  பெண் .அவளுக்கு 10  வயதில்  ஒரு  தம்பி  இருக்கிறான் .அம்மா  இறந்து  விட்டார் .அப்பா  இன்னொரு  திருமணம் செய்து  கொண்டு  எல்லோரும்  ஒன்றாக  இருக்கிறார்கள் . சித்திக்கு  ஒரு  கைக்குழந்தை  உண்டு . அப்பாவின்  அம்மா  அதாவது  பாட்டி  இவர்கள்  கூடத்தான்  இருக்கிறார்


அப்பாவும் , சித்தியும் கரும்பு  வெட்டும்  விவசாயக்கூலி  வேலை  செய்கிறார்கள் . வட்டிக்குக்கடன் தருபவரிடம் 30,000  ரூபாய்  கடன்  வாங்கி  இருக்கிறார். அந்தக்கடனுக்கு  இரண்டு  மாதங்களாக  வட்டி  கட்டாததால் அவன்  வீட்டுக்கு  வந்து  சத்தம்  போட்டுக்கொண்டு  போகிறான். ஒரு  காலக்கெடு  வைத்து  அதற்குள்  அசல்,வட்டி  ஆகமொத்தம்  ரூ 37,500  தர  வேண்டும்  என எச்சரித்து  விட்டு  செல்கிறான்


அப்பாவும், சித்தியும்   விவசாயக்கூலி  வேலை  பார்க்க  பக்கத்து  ஊருக்கு  செல்கிறார்கள் . 20  நாட்கள் கழித்துத்தான்  வருவார்கள். 


 நாயகி  தன்  தம்பி  மீது  அளவற்ற  பாசம்  வைத்திருக்கிறார்.  அக்கா  என்பவர்  இன்னொரு  அம்மா  என்ற  உண்மையை  உணர்த்துகிறார். ஒரு  சமயம்  அவன்  அழுது  அடம் பிடித்தபோது  பாட்டி  அவனுக்கு  ஒரு  தங்க  மோதிரத்தை  அணியக்கொடுத்து  அழுகையை  அடக்குகிறார்.  அப்போதைக்கு  அழுகையை  நிறுத்திய  தம்பி  பிறகு  மோதிரத்தை  எங்கெயோ  தொலைத்து  விடுகிறான்


மோதிரம்  சித்தி  உடையது  . அவர்கள்  20  நாட்களில்  வந்து  விடுவார்கள் . அவர்கள்  வருவ்தற்குள்   மோதிரத்தைக்கண்டு பிடிக்க  வேண்டும், அல்லது  பணம்  சம்பாதித்து  அதே  போல்  ஒரு  மோதிரம்  வாங்க  வேண்டும் ,நாயகி  அதற்காக  என்னென்னெ  பாடுபடுகிறார்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகி பச்சம்மாவாக  பெபி  மோனிகா  சிவா  அற்புதமாக  நடித்திருக்கிறார். ஒரு  துளி கூட  ஓவர்  ஆக்டிங்  இல்லை . இயற்கையான  உடல்மொழி ,  அருமையான  முக  பாவனைகளால்  அசத்துகிறார்


தம்பி  ஆக  சக்தி ரித்விக்  இயல்பாக  நடித்திருக்கிறார். அவரது  ஸ்கின்  டோன்   மற்றும்  உடைகள்  மட்டும்  பணக்கார  வீட்டுப்பையன்  போல்  இருக்கிறது . பரம  ஏழை  போல இல்லை 


அப்பாவாக சார்லி  , சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  உள்ளார் .சித்தி  ஆக  வரும்  சுஜானா  ஜார்ஜ்  வில்லியாகவும்  இல்லாமல்,நல்லவரகவும்  இல்லாமல் ஒரு சராசரி  பெண்னாக  அற்புதமாக  நடித்திருக்கிறார்


 மன  நலம்  குன்றிய  கதாபாத்திரமாக  படம்  முழுக்க  நாயகியுடன்  பயணிக்கும்  கேரக்டரில்  ஜார்ஜ்  மரியம்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார்


அநியாய  வட்டி  வாங்கும்  கொடூரமானவராக  எம்  எஸ்  பாஸ்கர்  பின்னிப்பெடல் எடுத்திருக்கிறார்


பாட்டியாக    வரும்  பரவை  சுந்தராம்பாள்  குட்  ஆக்டிங் 


எம்  தியாகராஜன்  எடிட்டிங்கில்  படம்  ஒன்றே  முக்கால்  மணி  நேரம்  ஓடுகிறது . ஒரு  மணி  15  நிமிடங்களாக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 


அருண்  ராஜின்  இசையில்  மூன்று  பாடல்கள்  செம .சூச்சூ  மாரி  ஸ்டைலில்  ஒரு  பிரமாதமான  தெம்மாங்குப்பாடல்  உண்டு 


கே  எஸ்  காளி  தாஸ்  ஒளிப்பதிவில்  காட்சிகள் எல்லாம்  அருமை .


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஜி  சுரேஷ் 


சபாஷ்  டைரக்டர்


1  மன  நலம்  குன்றிய  ஜார்ஜ்  நாயகி யிடம்  உன்  அம்மா  கிட்டே  இருந்து  ஃபோன்  வந்திருக்கு  என  சொல்ல  அப்போது  நாயகி  அந்த  ஃபோனை  வாங்கி  பேசும்  காட்சி  கலக்கலான  காட்சி . ஆக்சுவலாக  ஃபோனே  வந்திருக்காது , அது  ஒரு  டம்மி  ஃபோன். அந்த  காட்சியில்  உயிர்ப்பான  நடிப்பு  இருவரிடமும்

2  ஜார்ஜ்  மரியம் , நாயகி , தம்பி  மூவரும்  நகைக்கடைக்குப்போகும்போது  அவர்  நடை  சரி  இல்லை  எனகூறி  நடைய  மாத்து  என  சொல்வதும்  அவர்  வேறு  ஸ்டைலில்  நடந்து  காட்டுவதும், பின்  பழைய  ஸ்டைலில்  நடப்பதும்  மிக  பிரமாதம். 16  வயதினிலே படத்தை  நினைவுபடுத்தினாலும்  ஜார்ஜ்  மரியம்  நடிப்பு , உடல்  மொழி  கலக்கல்  ரகம் 


3  முயல்  பிடிக்கும்  ஏற்பாடுகள் , முயலை  குளிக்க  வைக்கையில்  முயலின் ரீ ஆக்சன்  போன்ற  ஹைக்கூ  மொமெண்ட்ஸ்  ஆங்காங்கே  உண்டு 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1  சிக்கு  புக்கு  சிக்கு 

2  ஒரு  ஊருல 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   சிறுவர்களுக்கான  இப்படத்தில்  சார்லி  தன்  மனைவியை  ஓங்கி  அறையும்  காட்சி  உறுத்தல். அதை  தவிர்த்திருக்கலாம்


2  செவ்வாய்க்கிழமை  கடன்  கொடுக்க  வேண்டாம்  என  ஒரு  கேரக்டர்  பேசுவதாக  வசனம் வருகிறது . பொதுவாக  கிராமங்களில்  வெள்ளிக்கிழமை  தான்  கடன்  தர  மாட்டார்கள்  , மகாலட்சுமி  வீட்டை  விட்டு  வெளியே  அனுப்புவதற்கு  சமம்  என்பார்கள் 


3  நகைக்கடையில் மோதிரம் வாங்கப்போகும்போது  தம்பியிடம்  உனக்குப்பிடித்த  மாடல்  வாங்கிக்கோ  என்கிறார்  நாயகி .ஆக்சுவல்  ஆக  நாயகியின்  சித்தி  மோதிரம்  போலவே  வாங்கி  அதை  ரீப்ளேஸ்  தானே  செய்ய  வேண்டும் ? எப்படி  இவர்களிஷ்டத்துக்கு  ஒரு  மாடல்  எடுக்க  முடியும்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ


சி பி  எஸ்  ஃபைனல்கமெண்ட்  -   பெண்கள் , பொறுமைசாலிகள்  மட்டும்  படம்  பார்க்கவும், ஆக்சன்  மசாலா  ரசிகர்கள் , தெலுங்கு  டப்பிங்  பட விரும்பிகள்  தவிர்க்கவும் .  ரேட்டிங்  3 / 5 


Erumbu
Theatrical release poster
Directed bySuresh G
Written bySuresh G
Produced bySuresh Gunasekaran
Starring
CinematographyK. S. Kalidass
Edited byThiyagarajan M
Music byArun Raj
Production
company
Mandru GVS Production
Distributed byBlockbuster Production
Release date
  • 16 June 2023
CountryIndia
LanguageTamil

0 comments: