Wednesday, March 20, 2024

தூக்குதுரை (2024) -தமிழ் - சினிமா விமர்சனம் (ஹெய்ஸ்ட் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

     


  போஸ்டர்களில் , படத்தின்  பிரமோக்களில்  யோகி பாபு  ஹீரோவாக  நடித்த  படம்  மாதிரி ஒரு  பிரமையை  ஏற்படுத்தி  பப்ளிசிட்டி   செய்யப்பட்டிருந்தாலும்  இதில்  யோகிபாபு  நாயகன்  கிடையாது . கெஸ்ட்  ரோல்  தான் .இதை  காமெடிப்படமாக  எடுக்கலாமா? ஹெய்ஸ்ட்  த்ரில்லராக  எடுக்கலாமா?ஹாரர் த்ரில்லராக  எடுக்கலாமா?  என  இயக்குநர்  குழம்பி  இருப்பது  நன்கு  தெரிகிறது. எல்லாம்  கலந்த கலவையாக  இருக்கிறது


26//1/2024  அன்று  திரை  அரங்குகளில் வெளியான  இப்படம்  சுமாராகத்தான்  ஓடியது , அமேசான்  பிரைம் ஓடிடி  யில்  கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


உலகத்துலயே பெரிய திருடன்  அரசியல்  வாதிதான். அவனை  விடப்பெரிய  திருடனாக  இருக்கும்  ஒருவனிடம்  ட்ரெய்னிங்  எடுத்து   திருடலாம்  என  மூன்று  வெட்டிப்பசங்க  சேர்கிறார்கள் . அவர்களுக்கு  நல்ல  பயிற்சி  கொடுத்து  திருடர்கள்  ஆக  ஆக்கும்  அந்த  பாஸ்  திருடன்  இந்த  உலகமே  வியந்து  பார்க்கும்  அளவு  ஒரு  திருட்டை  நீங்க  செய்யனும்  என  ஆசீர்வதித்து  அனுப்புகிறான் 


ஒரு  கிராமத்தில்;  அந்த  ஊர்  பஞ்சாயத்து  தலைவர்  வீட்டில் பழங்கால  பொக்கிஷமாக  ஒரு  ராஜா காலத்து  கிரீடம்  இருக்கிறது. அந்த  கிரீடத்தை  ஆட்டையப்போட  அந்த  மூன்று  திருடர்களும்  முடிவெடுக்கிறார்கள் . அந்த  கிராமத்தில்  நான்கு  வருடங்களுக்கு  ஒரு  முறை  நடக்கும்  ஒரு  திருவிழாவை  ஷூட்  செய்து  யூ  ட்யூப்  தளத்தில்  பதிவேற்ற  இருப்பதாகக்கூறி  அந்த  கிராமத்தில்  தங்குகிறார்கள் . அவர்கள்  நோக்கம்  நிறைவேறியதா? என்பது  மெயின்  கதை 


  அந்த  ஊர்  பஞ்சாயத்துத்தலைவரின்  மகள்  20  வருடங்களுக்கு  முன்  ஒரு  இளைஞனை  காதலித்து  ஊரை  விட்டு  ஓட  நினைக்கையில்  அந்தக்காதலனை  ஒரு  கிணற்றில்  தள்ளி  பெட்ரோல்  ஊற்றி  எரித்து  விடுகிறார்கள் . அந்தகாதலன்  பேய்  ஆக  மாறி  அந்த  கிணற்றிலெயே  வாடகை  தராத  நான் -  பேயிங்  கெஸ்ட்  பேய்  ஆக  வாழ்ந்து  வருகிறான்.கிரீடம்  அந்த  கிணற்றில்  தான்  இருக்கிறது இது  ஃபிளாஸ்  பேக்  கதை 


கிரீடத்துக்கான  ஃபிளாஸ்பேக்  கதை .பல  ஆண்டுகளுக்கு  முன்  மழையே இல்லாத  காலகட்டத்தில்  ஒரு  மன்னன்  கடும்  தவம்  இருந்து கடவுளை  தரிசிக்கிறான்.கடவுள்  அவன்  கண்  முன்  தோன்றியதும்  தன்  தலையை  தானே  வாளால் வெட்டிக்கொண்டு   உயிர்  காணிக்கை  தந்து இதற்குப்பரிகாரமாக  நாட்டு  மக்களுக்கு  மழை  கோருகிறான். அந்த  கிரீடம்  தான் இப்போது  கிணற்றில்  இருக்கிறது 


  மெயின்  கதையை  விட  கிளைக்கதைகள்  இரண்டும்  சுவராஸ்யமாக  இருக்கின்றன். ஆனால்  கிளைக்கதைகள்  20  நிமிடங்களில்  முடிந்து  விடுகின்றன


உயிர்  பலி  ஆகும்   காதலன்  ஆக  யோகி  பாபு  சுமார்  20  நிமிடங்களில்  வந்து  செல்கிறார். ஒன்  லைனர்  காமெடி என்ற  பெயரில் மொக்கைக்காமெடி  போடுகிறார்.வழக்கமாக  உருவ  கேலி  காமெடியில்  கவுண்டமணி , விவேக் , சந்தானம்  போன்றவர்கள்  ஈடுபடும்போது  அவர்கள் மீது  வராத  கோபம்  யோகி பாபு  உருவ கேலியில்  இறங்கும்போது  நமக்கு  அவர்  மேல்  கோபம்  வருகிறது , காரணம் அவர்கள்  மூவரும்  பர்சனாலிட்டியாக  இருந்தார்கள் . இவர்  அந்த  அளவு  பர்சனாலிட்டி  இல்லை .  என்பதும்  காரணமாக  இருக்கலாம் 


பாஸ்  டிருடன்  ஆக  மொட்டை  ராஜேந்திரன்  காமெடி  செய்யும்  காட்சிகள்  ரசிக்க  வைக்கின்றன. இவர்  பொதுவாக  அடுத்தவர்களை  உருவ  கேலி செய்வதில்லை . வடிவேலு  பாணியில்  தன்னைத்தானே  கலாய்ப்பதால்  ரசிக்க  வைக்கிறார் 


  அவரிடம்  பயிற்சி  பெறும் மூன்று  திருடர்களாக  சென்றாயன் , பால  சரவணன் , மகேஷ்  சுப்ரமணியம்  ஆகிய  மூவரும்  நடித்திருக்கிறார்கள் குட் 


ஊர்  தலைவராக  அமரர்  மாரிமுத்து  சிறப்பாக நடித்திருக்கிறார், அவரது  மகளாக  இனியா  குறைவான  நேரமே  வந்தாலும் நிறைவான  நடிப்பு 


கே  எஸ்  மனோஜின்  இசையில்  ஐந்து  பாடல்கள் , சுமார்  ரகம்,பின்னணி  இசையும்  சராசரி  தரம் , தீபக்கின்  எடிட்டிங்கில்   இரண்டரை  மணி  நேரம்  படம் ஓடுகிறது. ரவிவர்மாவின்  ஒளிப்பதிவும்  சுமார்  தான். 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்   டெனிஸ்  மார் 


சபாஷ்  டைரக்டர்


1   மெயின்  கதையை  முதலில் சொல்லாமல் யோகிபாபு வின்  ஃபிளாஸ்பேக்  போர்சனை  ஒப்பனிங்கில்  சொல்லி  ஆடியன்சை  கதைக்கு  உள்ளே  இழுத்த  விதம் 


2  மொட்டை  ராஜேந்திரனின்  காமெடி   டைமிங்சென்ஸ்


3 அமரர்  ஜி மாரிமுத்துவின்  இயல்பான  நடிப்பு   


  ரசித்த  வசனங்கள் 


1  பத்து  ரூபா  தீபாவளி துப்பாக்கியைக்காட்டுனாலே  அந்த  பேங்க்  மேனேஜர்  10  லட்சம்  ரூபாயைத்தூக்கிக்கொடுத்துடுவானே?


2  முடியாதுனு  நினைச்சா  முட்டியைக்கூட  நகர்த்த  முடியாது , முடியும்னு  நினைச்சா  மூன் ல  கூட  கால்  வைக்கலாம் 


3  அழுக்குத்துணி  ஆத்துல  போச்சாம், ஆஃபாயில்  வாய்ல  போச்சாம் 


4  ஃபோன்ல   பேய்டா

நான்  பேய்ப்படம்  டவுன்லோடு  பண்ணவே  இல்லையே? 


5  சீக்கிரம்  வாடா, ஒண்ணுக்குப்போறியா?  ஊருக்குப்போறியா? இவ்ளோ  லேட்  பண்றே?


6 இந்த  கிணத்துல  இறங்கிதான்  கிரீடத்தை எடுக்கனும் எப்படி?காலில்  கயிறு  கட்டி  இறங்கறீங்களா?இடுப்பில் கயிறு  கட்டி  இறங்கறீங்களா?


  ஏன்?கழுத்துல  கயிறைக்கட்டி  இறக்கிடுங்களே? ஒரேயடியா  போய்ச்சேர்ந்துடறோம்


7  இந்தக்கிணறோட  பாட்டம்  இவ்ளோ ஹாண்ட்டிங்கா  இருக்கே? 


அதை  ஏண்டா  இவ்ளோ  ஹாண்டிங்கா  சொல்றே?


  ரெண்டு  பேரும்  ஆண்ட்டி  ஆண்ட்டினு  பேசிட்டு  இருக்கீங்களே? யாரு  அது ? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கிராமத்தில்  வசிக்கும்  ஒரு  பணக்கார  வீட்டுப்பெண்  ஊரை  விட்டு  காதலனுடன்  ஓடனும்  எனில்  நைட்  டைமிலா  ஓடும்?பகலில்  முதலில்  பேக்கில்  டிரஸ்  எல்லாம்  பேக்  பண்ணி  ஒரு  பக்கம்  வைத்து விட்டு  இன்னொரு நாள்  கேசுவலாகப்போய்  பேக்  எடுத்துட்டு எஸ்  ஆவதுதானே  சேஃப்?  (நான்  ஊரை  விட்டு  ஓடிப்போனதில்லை ) 


2  கிரீடத்தை  திருட  வரும்  திருடர்கள் மஞ்ச  மாக்கான்களா  இருக்கானுங்க . அந்த  கிரிடம்  ஒரு  தங்கப்பெட்டில  இருக்கு . அந்தப்பெட்டியே  150 பவுன்  தேறும்  போல , போட்டியோட  திருடாம கிரீடத்தை  மட்டும் திருடறாங்க . இவனுங்க  எல்லாம்  வாழ்க்கைல என்னைக்கு  முன்னேறப்போறானுங்க ?

3 தண்ணி இல்லாத  கிணத்துல  அவனைப்போட்டு  எரிச்சிடுங்கனு  சொல்ற  மாதிரி  வசனம் வருது  ஆனா  கிணத்தைக்காட்டும்போது  தண்ணி  இருக்கு 

4  பேய்  ஆக  யோகிபாபு  வரும்போது  யாருக்கும்  எந்த  பயமும்  வரவில்லை , சிரிப்பும்  வரவில்லை . இது  அந்த  கேரக்டர்  டிசைனுக்குக்கிடைத்த  தோல்வி 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொழுது  போகாதவர்கள்  இந்தப்படத்தை  டிவி யில்  போட்டால் அரைகுறையாகப்பார்க்கலாம் . ரேட்டிங்  1.75 / 5 


Thookudurai
Thumb image
Theatrical release poster
Directed byDennis Manjunath
Written byDennis Manjunath
Produced byAravind Vellaipandian
Anburasu Ganesan
Vinothkumar Thangaraju
Starring
CinematographyRavi Varma K
Edited byDeepak
Music byK. S. Manoj
Production
company
Open Gate Pictures
Distributed byUthraa Productions
Release date
  • 25 January 2024
CountryIndia
LanguageTamil

0 comments: