Thursday, March 07, 2024

வளையம் (2020) -தெலுங்கு / தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


சம்சாரம்  மிஸ்சிங்  என  போலீஸ்  ஸ்டேஷனில்  கேஸ்  கொடுத்தாலே  போலீசின்  முதல்  சந்தேகப்பார்வை  புருசன்  மேல்  தான்  விழும். அந்த  மாதிரி  மிஸ்  ஆன  சொந்த  சம்சாரத்தைத்தேடி   புருசனே  துப்பறியக்களம்  இறங்கும்  கதை  தான்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  பெற்றோர்  நிச்சயத்த  பெண்ணை  பெண்  பார்த்து திருமணம்  செய்து  கொள்கிறான். வாழ்க்கை  சந்தோசமாகப்போய்க்கொண்டு  இருக்கிறது .  மனைவிக்கு  இரவு  நேரங்களில்  யாரோ  அடிக்கடி மெசேஜ்  அனுப்புவதும், அவருக்கு  மனைவி  பதில்  அனுப்புவதும்  நாயகனுக்குப்பிடிக்கவில்லை . இது  சம்பந்தமாக  இருவருக்கும்  வாக்குவாதம் நடக்கிறது. அன்று  இரவு  மனைவி  மிஸ்  ஆகிறாள்  

 நாயகன் போலிஸ்  ஸ்டேஷனில்  புகார்  கொடுக்கிறான். பிறகு  பர்சனல்  ஆகவே  தன்  மனைவியின்   காலேஜ்  கால  நண்பர்களை  விசாரிக்கிறான்.காலேஜ்  படிக்கும்போது     தன்  மனைவியை  ஒருதலையாகக்காதலித்த  தறுதலை  ஒருவன் ,  காதல்  பிரப்போஸ்  செய்தும்  மறுத்து  விட்டாள்  என்ற  கடுப்பில்  இருக்கும்  ஒருவன் , அவள்  மேல்  ஆசைப்பட்ட  ஒருவன்  என  மூன்று  பேர்  தன்  மனைவியின்  வாழ்வில்  குறுக்கிட்டிருக்கலாம்  என  நாயகன்  சந்தேகிக்கிறான். இதற்குப்பின்  நாயகன்  துப்பு  துலக்கி  உண்மையை  எப்படிக்கண்டுபிடிக்கிறான்  ?  என்பதே  மீதிக்கதை 


 நாயகன்  ஆக லக்ஸ்  சடலவாடா  என்பவர்  நடித்திருக்கிறார். பொம்மை  போன்ற  முகம், ஆனால்  சமாளித்து  நடித்திருக்கிறார்.  நாயகி  ஆக  டிகங்கானா   சூர்ய வம்சி , அதிக  வாய்ப்பில்லை , வந்த வரை  ஓக்கே  ரகம் 


போலீஸ்  ஆஃபீசர்  ஆக  வருபவர்  தான்  நாயகனை  விட  நன்றாக  நடித்திருப்பவர், அனுபவம்  பேசுகிறது 


எடிட்டிங்க்  உபேந்திரா.140 நிமிடங்கள்  படம்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். சேகர்  சந்திரா  தான்  இசை . பாடல்கள்  சுமார்  ரகம்,,  இசை  , பின்னணி  இசை  அதை  விடவே  சுமார. ராமகிருஷ்ணாவின்  ஒளிப்பதிவு  பாஸ்  மார்க்  தரத்தில்  தான்  இருக்கிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ரமேஷ்  கடுமுலா


சபாஷ்  டைரக்டர்


1  வேறு  ஒரு  கேசுக்காக  லாக்கப்பில்  அடைக்கப்பட்ட  தாடிக்காரன்  தான்  குற்றவாளி  என்பதை  வாட்ச்மேன்  சாட்சி  சொன்னதும்  போலீஸ்  ஸ்டேசனில்  நடக்கும்  சம்பவம்  அட்டகாசம் 


2   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  குட் 


  ரசித்த  வசனங்கள் 

1    எதிர்  ஃபிளாட்டில்  காணாமப்போன பெண்  பற்றி  விசாரிக்கனும்


 சார், அதை  என்  மனைவி  கிட்டேக்கேட்டா  எப்படி  அவளுக்குத்தெரியும் ?பொண்ணுங்களுக்கு  இதைப்பற்றி  என்ன  தெரியும் ?


 அப்போ  வீட்டில்  ஆம்பளைங்க  யாராவது  இருந்தாக்கூப்பிடுங்க 


2 உன்  ஆக்டிங்  நல்லாருந்ததுனு  என்  ஃபிரண்ட்ஸ்  எல்லாரும்  சொன்னாங்க, ஆனா  எனக்கென்னவோ  அது  சரியாப்படலை, ஒரு ஏஞ்சல்  ஏஞ்சலா  நடிக்கறதுல  என்ன  கஷ்டம்  இருந்துடப்போகுது ? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின்  பக்கத்து  வீட்டு  ஆள் போலீஸ்  கிட்டே  தான்  சினிமாவுக்குப்போய்  இருந்த்தா  சொல்லும்போது  என்ன  படம்?னு போலீஸ்  ஆஃபீசர்  கேட்கவே  இல்லை . பல  படங்களில்  குற்றவாளி  இப்படி   சமாளிக்கும்போது  என்ன படம் ? கதை? என்னா?னு  கேட்டு  மடக்குவாங்க (  சமீபத்தில்  வந்த  போர்த்தொழில்  படத்தில்  கூட  ஒரு  சீன்  இருக்கும்) 


2போலீஸ்  ஆஃபீசர்  வாட்ச்மேனிடம்  குற்றவாளியை அடையாளம்  காட்ட முடியுமா? எனக்கேட்டு  ஒரு ஸ்டாம்ப்  சைஸ்  ஃபோட்டோவைக்காட்டுகிறார். வாட்ச் மேன் 10  அடி  தொலைவில்  நிற்கிறான். அவ்ளவ்  தொலைவில்  இருக்கும்போது  அவ்வளவு  சின்ன  ஃபோட்டோ  அவன்  கண்களுக்கு  எப்படித்தெரியும்?

3  ஒரு  விபத்து  போலீஸ்  ஸ்டேஷன்  வாசலில்  ந்டக்கிறது ,அடிபட்டவனை  செக்  பண்ணிப்பார்த்து  போலீஸ்  ஆஃபீசர்  ஆம்புலன்சுக்கு  ஃபோன்  பண்ணுங்க  என  சொன்ன பின்  தான்  ஃபோனே   பண்றாங்க . டக்னு  பண்ணி  இருக்க வேண்டாமா? 

4  வில்லன்  க்ளைமாக்ஸ்ல  அழுதுட்டு  இருக்கான். நாயகி  வில்லனிடம்  நீ  இந்த  அளவு  என்  மேல  லவ்  வெச்சிருப்பேன்னு  எனக்கு  அப்போ  தெரியாதுனு  சொல்லி  அழுதுட்டு  இருக்கா. சொதப்பல்  சீன்


5 வில்லன்  போலீசை  திசை  திருப்ப  நாயகியை  மயக்க  நிலைக்குக்கொண்டு  போன பின்  நாயகியின்  ஃபோனில்  இருந்து  வேறு  ஒரு   நபருக்கு  ஒரு  டம்மி  மெசேஜ்  அனுப்புகிறான். நாயகியின்  ஃபோன்  லாக்  பேட்டர்ன்  வில்லனுக்கு  எப்படித்தெரிந்தது ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொழுது  போகலைன்னா  பார்க்கலாம்,  சுமார்  ரகம்  தான் . ரேட்டிங்  1.75 / 5 


Valayam
Release poster
Directed byRamesh Kadumula
Written byRamesh Kadumula
Produced byLaksh Chadalavada
Starring
CinematographyRamakrishna
Edited byUpendra
Music byShekar Chandra
Production
company
Sri Thirumala Tirupati Venkateswara Creations
Release date
  • 21 February 2020
Running time
140 minutes
CountryIndia
LanguageTelugu

0 comments: