Thursday, March 28, 2024

ரெய்டு (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் டப்பா ட்ராமா ) @ அமேசான் பிரைம் + ஆஹா தமிழ்

     


   ரஜினி  நம்ம  ஊர்ல  சூப்பர்  ஸ்டார்  தான், அதுக்காக அவர்  நடிச்ச குப்பைப்படமான  நாட்டுக்கு  ஒரு  நல்லவன்  படத்தை  வேறு  மொழியில்  ஒரு  சாதா  நடிகர்  ரீமேக்  செஞ்சா  எவ்ளோ  கடுப்பாகும்  நமக்கு ? அந்த  மாதிரி தான் 2018ம்  ஆண்டு  கன்னட  சூப்பர்  ஸ்டார்  ஆன   சிவராஜ்  குமார்  நடிப்பில்  வெளியான  டகரு  படத்தின்  அஃபிஷியல்  ரீமேக். இந்தக்கேவலமான  கதைக்கு  ஏன்  ரீமேக்  உரிமை  எல்லாம்  வாங்கனும், ஏற்கனவே  பல  படங்களில்  வந்த  கதைதானே? 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு   போலீஸ்  ஆஃபீசர்.என்கவுண்ட்டர்  ஸ்பெஷலிஸ்ட் , அவர்  இஷ்டத்துக்கு  ரவுடிகளைப்போட்டுத்தள்ளுபவர் , அவருக்கு  மேரேஜ்  நடக்க்  இருக்கு . அவருக்குப்பார்த்த  பெண்ணை  வில்லன்கள்   கொன்று  விட  அவர்களை  நாயகன்  பழி  வாங்குவதாக  நினைத்து  ஆடியன்சான   நம்மைப்பழி  வாங்குவதுதான்  படத்தின்  கதை 


நாயகன்  ஆக  விக்ரம்  பிரபு . டாணாக்காரன்  படத்தில்  எந்த  அளவு  உண்மைக்கு  நெருக்கமான  ஒரு  கேரக்டரில்   நடித்தாரோ  அதற்கு  நேர்மாறாக  நம்ப  முடியாத  காட்சிகளுடன்  ஒரு  படம்  தந்திருக்கிறார்


 நாயகி  ஆக  அவருக்கு  ஜோடியாக  ஸ்ரீ  திவ்யா. ஒரு  சில  காட்சிகள்  தான். அவர்  எஸ்  ஆகி  விடுகிறார். நாம்  தான் கடைசி  வரை  மாட்டிக்கொள்கிறோம்


 நாயகியின்  தங்கை  ஆக அனந்தியா  சனில்குமார்  படம்  பூரா  சரக்கு  அடிக்கிறார் , தம்  அடிக்கிறார்.பாரதி கண்ட  புதுமைப்பெண்  போல . போதாததற்கு  அவர்  கஞ்சா  கேசாம்.  வசனமாக  வருது . 


போலீஸ்  கான்ஸ்டபிள் ஆக  ஜார்ஜ்  மரியம்  அதிக  காட்சிகள்  இல்லை . வில்லன்கள்  ஆக   வேலு  பிரபாகரன் ,   செல்வா  , ரிஷி  ரித்விக் ,  டேனியல்  அன்னி  போப் என  ஏகப்பட்ட  பேர்  வருகிறார்கள் , அடி  வாங்குகிறார்கள் 


சாம்  சி எஸ்  இசையில்  மூன்று  கேவலமான  பாடல்கள்  . குறிப்பாக  ஹீரோ  இண்ட்ரோ சாங்க்  மகா  மொக்கை . பிஜிஎம்மும்  சுமார்தான் 


மணி  மாறன்  எடிட்டிங்கில் 122  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது. வந்த  சீன்களே  மீண்டும்  மீண்டும்  வருது . கேட்டா  ஃபிளாஸ்பேக் காம் , நான்  லீனியர்  கட்டாம் கஷ்டம்டா  சாமி 


கதிரவனின்  ஒளிப்பதிவில்  ஸ்ரீதிவ்யா  க்ளோசப்  சீன்  மட்டும்  தேவலை 


இந்த  மாபெரும்  குப்பைப்படத்துக்கு  திரைக்கதை  எழுத  உதவி  இருக்கிறார்  இயக்குநர்  முத்தையா .படத்தை   இயக்கி  நம்மைப்பாடாய் படுத்தி  இருப்பவர்  கார்த்தி 


சபாஷ்  டைரக்டர்  (  கார்த்தி )


 1  இந்த  மாதிரி  குப்பைப்படத்தை  எடுக்க  ஒரு  தைரியம்  வேண்டும் 


2  ஓப்பனிங்  ஹீரோ  இண்ட்ரோ  சாங்கில் என்  கிட்டே  மாட்டாத , காணாம  போயிடுவே  என  குறியீடு  மூலம்  ஆடியன்சை  எச்சரித்த  சாமார்த்தியம்


3  போஸ்டர்  டிசைனில்  ஹீரோ  தலையில்  முக்காடு  போட்டு  குறியீடாக  தயாரிப்பாளர்  நிலைமையை  உணர்த்தியது 


  ரசித்த  கேவலமான  வசனங்கள்  (இயக்குநர்  முத்தையா) 


1 ஆம்பளைன்னா  ரத்தம்  இருக்கனும், அது  சுத்தமா  இருக்கனும்  (  ஏன்  பொம்பளைன்னா  ரத்தம்  இருக்காதா?  என்ன  டயலாக்  இது ? )


2   நான்  சும்மா  வந்தா  விருந்தாளி, ஆனா  உன்னைப்பார்க்க வந்தா  நீ  காலி  

( படம்  பார்க்க  வந்த  நாங்க  தான்  காலி ) 


3   ஆண்டவன்  வேணா  உன்  தலைஎழுத்தை  பென்  ல  எழுதி  இருக்கலாம், ஆனா  நான்  என்  கன்  ல  எழுதறேன் 


4    எல்லோரும்  சொந்தக்காலில்  நிற்கறாங்க , நீ  ஃபோன்  காலில்  நிற்கறே


5   என்  கண் ல  இருந்து  யாரும்  தப்பிச்சது  இல்லை , என்  கன்  ல  இருந்து  யாரும்  தப்பிச்சது  இல்லை 


6   பிரியாணி  நல்லா  இருந்தா  அம்மா  ஞாபகம்  வரும்,  பிரியாணி  நல்லாலைன்னா  அதை  செஞ்சவன்  அம்மா  ஞாபகம்  வரும்   


7  பர்மணண்ட்டா  சமையல்  பண்ண  ஆள்  பார்க்கறேன் 


 ஓ , பொண்ணு  பார்க்கறீங்களா? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஓப்பனிங்  சீனில் நாயகன்  ஒரு  பெண்ணைக்  கை  காலைக்கட்டி  ஜீப்பில்  அடைத்துக்கொண்டு  போறார். அந்தப்பெண்ணுக்கு  மானம் , ரோஷம்  இருந்தா  கோபப்படனும், அந்த  பேக்கு   கற்பனை  ல  டூயட்  பாடுது 


2  வில்லன்கள்  பேர்  எல்லாம்  கரப்பான்  பூச்சி ,  பல்லி ,  பக்கோடா .என்ன  கண்றாவி  கற்பனை  இது ? 


3   நட்ட  நடு  ரோட்டில்  வில்லன்கள்  நாயகனையும்  நாயகியையும்  துப்பாக்கியால்  சுடுகிறார்கள்  அதுவும்  நெஞ்சில், மார்பில்,  நாயகன்  மட்டும்  தப்பித்து  விடுகிறார் , எப்படி ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - இந்தப்படத்தில்  கண்ட்டெண்ட்டே  இல்லை  என்பதுதான்  வார்னிங் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இந்தக்கேவலமான  குப்பையை  டி வி  ல  போட்டாக்கூட  பார்த்துடாதீங்க , எச்சரிக்கை . ரேட்டிங்  மைன்ஸ்   1 / 5 



ரெய்டு
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்கார்த்தி
மூலம் திரைக்கதைமுத்தையா
கார்த்தி
அடிப்படையில்
துனியா சூரியின் தகரு
உற்பத்திஎஸ்.கே.கனிஷ்க்
ஜி.மணிகண்ணன்
நடிக்கிறார்கள்விக்ரம் பிரபு
ஸ்ரீ திவ்யா
ஒளிப்பதிவுகதிரவன்
திருத்தியவர்மணிமாறன்
இசைசாம் சிஎஸ்
உற்பத்தி
நிறுவனங்கள்
எம் ஸ்டுடியோஸ்
ஓபன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
ஜி பிக்சர்ஸ்
வெளிவரும் தேதி
10 நவம்பர் 2023
நேரம் இயங்கும்
122 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: