Friday, March 22, 2024

AE WATAN MERE WATAN (2024) -ஹிந்தி //தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹிஸ்டாரிக்கல் பயோகிராஃபிக்கல் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

   

21/3/2024  அன்று  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில் நேரடியாக  ரிலீஸ்  ஆன  படம் , இந்திய  சுதந்திரப்போராட்ட  வரலாற்றில் இடம் பெற்ற  தைரியமான  பெண்ணான  உஷா  மேத்தா  வின்  வாழ்க்கை  வரலாறு  தான்  இப்படம்     


டைட்டிலுக்கான  உச்சரிப்பு  ஏ  வதன்  மேரே  வதன்  என்பதுதான்  , ஆனால்  பல  மீடியாக்களிலே   ஏ வாடன்  மேரே  வாடன்  என்றே  தவறாக  உச்சரிக்கிறார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


1930  ஆம்  ஆண்டு . நாயகி  ஒரு  நீதிபதியின்  மகள் . வசதியான  குடும்பம். நாயகி  10  வயது  சிறுமி  ஆக  இருந்தபோதே  காந்தியின்  கொள்கைகளால்  ஈர்க்கப்பட்டு  போராளி  ஆகிறாள் , இது  அவரது  அப்பாவுக்குப்பிடிக்கவில்லை , ஏன்  எனில் பிரிட்டிஷ்  அரசாங்கத்திடம்  சம்பளம்  வாங்கும்  அரசு  ஊழியர்  அவர் , ஆனால்  அவரையும்  மீறித்தான்   நாயகி  போராட்டத்தில்  ஈடுபடுகிறார்


 1942  ஆம்  ஆண்டு  காந்தி அடிகள்  முன்னிலையில்  பிரம்மச்சரிய  விரதம்  பூண்டுவதாக  உறுதி  எடுக்கிறார்.ஆரம்பத்தில்  தயங்கிய  அவரது  காதலனும்  பின்  அதே  வழிக்கு  வருகிறார். ஒரு  கட்டத்தில் ஆங்கில  அரசாங்கம்  போராட்டத்தில்  ஈடுபட்ட  காந்தி  அடிகள்  உட்பட்ட  பெரிய  தலைவர்களை  சிறைக்கு  அனுப்புகிறது 


 அப்போது  தொண்டர்கள் சோர்ந்து  விடக்கூடாது  என காங்கிரஸ்  ரேடியோ  என்பதை நாயகி  உருவாக்குகிறார்.அதற்கு  ரேடியோ  ஸ்டேஷன்  விலைக்கு  வாங்க   ஒரு  கிலோ  தங்கம்  தேவைப்படுகிறது .நாயகியின்  பாட்டி  தன்  நகைகளைக்கொடுத்து  உதவுகிறார். தன்  சேமிப்பும்  போட்டு  ரேடியோ ஆரம்பிக்கிறார்  நாயகி 

தினசரி  இரவு  எட்டரை  மணிக்கு  அந்த  ரேடியோவில்  காந்தி  உட்பட  பல  தலைவர்களின்  உரை  ஒலிபரப்பாகும், மக்கள்  அதைக்கேட்டு  வீரம்  கொண்டார்கள் .ஆங்கிலேயர்கள்  அந்த  ரேடியோவை  எப்படி  தடை  செய்தார்கள்  ?  அதற்கு  எதிராக  நாயகி  எவ்வாறெல்லாம்  செயல்பட்டார்  என்பது மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக சாரா  அலி கான்  நேர்த்தியாக  நடித்துள்ளார் .கில்லர்  முபாரக்  படத்தில்  கிளாமராக  வந்தவர்  இதில் தியாகி  ஆக  வருவது  புதுமை .செய்  அல்லது  செத்து  மடி  என்ற  கோஷம்  போடும்போது வீரப்பெண்ணாக மிளிர்கிறார் 


 மற்ற  அனைவர்  நடிப்பும்  கச்சிதம் . ஆனால்  முதல்  பாதியில்  சுமார்  ஒரு  மணி  நேரமாக  மிக  மெதுவாகச்செல்லும்  திரைக்கதை  பொறுமையை  சோதிக்கிறது


சங்கீத்   வர்கீஸ்  எடிட்டிங்கில்  133  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது மூன்று  பேர்  இணைந்து  இசை  அமைத்திருக்கிறார்கள் .மூன்று பாடகள். பின்னணி  இசை  சுமார்  தான் அமலேந்து  சவுத்ரி  ஒளிப்பதிவு  குட  ஆர்ட்   டைரக்சன்  கடுமையான ,சவாலான பணி


தாராப்  பரூக்  உடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர்   கண்ணன்  அய்யர் 


சபாஷ்  டைரக்டர்


1  மனோகர்  லோகியா , ராம் மனோகர்  லோகியா   ஆகிய  இரு  சகோதரர்கள் , உஷா  மேத்தா  போன்ற  நாம்  அறியாத  பல  சுதந்திரப்போராட்ட  வீரர்களை  அறிமுகப்படுத்த  வேண்டும்  என்று  எண்ணி  திரைக்கதை  அமைத்தது 


2  மிக  மெதுவாகப்போகும்   முதல்  ஒரு  மணி  நேர  திரைக்கதைக்குப்பின்  ரேடியோ எஞ்சினியரைத்தேடி  ஆங்கிலேயர்கள்  அவர் வீட்டுக்கு வருவதும் அவர்  அங்கிருந்து  தப்பிப்பதும்  பரபரப்பான  முதல்  காட்சி 


3   நாயகி  தன்  காதலனிடம்  காதலா? நாடா?என  உரையாடும்  காட்சி  மனதைத்தொட்டது 


4 ட்ரையேங்குலேஷன்  மெத்தாடில்  ஆங்கிலேயர்கள்   ரேடியோ  இருக்கும்  இடத்தை கண்டு பிடிப்பதும்  அதை  முறியடிக்க  ட்ரான்ஸ்மிட்டரை  இரண்டு  இடங்களில்  வைக்க  முயற்சிப்பதும்  நல்ல  ஐடியா 


5 சுதந்திரப்போரில்  இந்த  ரேடியோ  மிகப்பெரும்  பங்கு  ஆற்றியதை  நமக்கு  உணர்த்திய  விதம் 

6  இருவரில்  யார்  உயிர் தியாகம் செய்வது  என்று  போட்டி  வைத்துக்கொள்ளும்  காட்சி 


ரசித்த  வசனங்கள் 

1  பயத்தால மக்கள்  எல்லாப்பொறுப்புகளையும் மறந்துடறாங்க 


2    பெரிய  பெரிய  புரட்சிகள்  கூட  சின்ன  சின்ன  விஷயங்களில் இருந்துதான்  ஆரம்பிக்கின்றன 


3  கண்மூடித்தனமான  சீடராக  இருக்கக்கூடாது  என்று  சொல்பவருக்கே  நீ  கண்மூடித்தனமான  சீடரா  இருக்கே



4  நீங்க  என்  மேல  வெச்சிருக்கும்  அன்பு  நிஜமான  அன்பில்லை  , அது  என்னை  கட்டிப்போடும்  விலங்கு 


5  எல்லாமே  நல்லாப்போகும்போது  நீ  என் கூட  இருந்தே, ஆனா  தியாகம்  செய்யனும்  எனும்   நிலை  வரும்போது  நீ பின்  வாங்கிட்டே


6 பணம்  இல்லாம  புரட்சி கூட  பண்ண  முடியாது 


7 எத்தனை  தீக்குச்சிகள் அணைந்தாலும்  நமக்குள்ளே  இருக்கும்  நெருப்பு  அணையாது 


8 நம்ம  பொண்ணு  உயிரோட  இருந்தா  போராளி ,  இறந்துட்டா  தியாகி


9  நீ  எனக்காக  இதை  எல்லாம்  செய்யறியா?  நாட்டுக்காகவா?


 அப்போ  உனக்கும் எனக்கும் இடையே  எதுவும்  இல்லையா? 


 இருக்கு , ஆனா  அது  சின்ன  உண்மை , நாட்டுக்காக  செய்வதுதான்  பெரிய  உண்மை 


10  சுதந்திரப்பாதைல  என்னோடு  சேர்ந்து  உன்னால  நடக்க  முடியலைன்னா  என்  கூட  வராத. எனக்கு  தடையா  இருக்காதே


11  பிரிட்டிஷ் காரங்க  புத்திசாலிகளா? தெரியாது , ஆனா  வஞ்சகமானவங்க 


12  மற்றவர்கள்  வழி  காட்டுதலுக்காக  காத்திருக்காதீர்கள்  


13  நான்  ஒரு  பெண் , நான்  வீட்டை  விட்டு  வெளியே  வந்ததே  ஒரு  போராட்டம்  தான் 


14  சிலருக்கு  புரட்சி  தான்  காதல் , சிலருக்கு  காதல்  தான்  புரட்சி 


15  முகம்   தெரியாத  நாயகர்கள்  எல்லாரையும்  விட  உயர்ந்தவர்கள் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின்  அப்பா  ஒரு  ஜட்ஜ் .நாயகியிடம்  காங்கிரசில்  சேர  வேண்டாம்  என  சொல்லி  விடுகிறார்.அதற்குப்பின்னும்  நாயகி  தினசரி  இரவு  லேட்டாக  வீடு  திரும்புகிறார். ஏதோ  பொய்  சொல்லி  தப்பிக்கிறார். ஒரு   தடவை  எனில்  ஓக்கே . ஒவ்வொரு  தடவையும் ஒரு  ஜட்ஜை  அப்படி  ஏமாற்ற  முடியுமா?


2   காந்தி திருமணம்  ஆனவர்.ஆனால்  போராட்டத்தில்  குதிப்பவர்கள்  பிரம்மச்சரிய  விரதம் பூண்டு  வர  ஏன்  விரும்புகிறார்  என்பது  புரியவில்லை (  பிரபாகரன் , வீரப்பன்  உட்பட  பலர்  இப்படித்தான் )


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாம்  அறியாத  ஆனால்  அறிந்து  கொள்ள  வேண்டிய  சுதந்திரப்போராட்டத்தின்  ஒரு பகுதி  இது .பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 

Ae Watan Mere Watan
Official release poster
Directed byKannan Iyer
Written byDarab Farooqui
Kannan Iyer
Produced by
StarringSara Ali Khan
CinematographyAmalendu Chaudhary
Edited bySangeeth Varghese
Music by
  • Mukund Suryawanshi
  • Akashdeep Sengupta
  • Shashi Suman
Production
company
Distributed byAmazon Prime Video
Release date
  • 21 March 2024
Running time
133 minutes[1]
CountryIndia
LanguageHindi

0 comments: