Monday, October 30, 2023

SHANTHOSHAM (2023) - சந்தோஷம் - (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

   


புது  வசந்தம்  இயக்கிய  விக்ரமன்  பட  ஃபார்முலா  படி  எதிர்மறை  கதாபாத்திரங்களே  இல்லாத  ,அனைவரும்  நல்லவர்களாக  உலா  வரும்  கதை , அக்கா, தங்கை  பாசம்  தான்  ஒன்  லைன் . மாமூல்  மசாலா  டப்பாப்படங்களை  ரசிப்பவர்கள்  ஒன்  ஸ்டெப்  பேக் 


        ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  +2  படிக்கும்  மாணவி. அம்மா, அப்பா, பாட்டியுடன்  வசித்து  வருகிறார். நாயகிக்கு  17  வயதாக  இருக்கும்போது  ஒரு  தங்கைப்பாப்பா  பிறக்கிறாள் . வயது  வித்தியாசம்  அதிகமாக  இருந்தாலும்  அக்கா , தங்கை  ஆக  இல்லாமல்  மகளைப்போல்  தன்  தங்கையை  கவனித்துகொள்கிறார்


தங்கைக்கு  எட்டு  வயது  ஆகும்பொது  நாயகிக்கு 25  வயது . திருமணம்  பற்றிப்பேச்சு  எடுத்தால்  நாயகி எனக்கு  இப்போ  என்ன  அவசரம்  என  தட்டிக்கழிக்கிறார்


 தன்  தங்கையின்  மீது  அதீத  அக்கறை  எடுத்து  கண்டிஷனுடன்  வளர்ப்பதால்  தங்கை  ஸ்கூல்  ஃபர்ஸ்ட்  மார்க்கில்  பாஸ்  ஆகிறாள் , ஆனால்  தங்கைக்கு  ஒரு  குறை . தனக்கு  என  ஒரு  சுதந்திரம்  இல்லை .  எல்லாவற்றையும்  தன்  அக்கா  தான்  தீர்மானிக்கிறார்


 இப்பொதுதான்  தங்கைக்கு  ஒரு  ஐடியா  வருகிறது . நாயகியை  அதாவது  அக்காவை  ஒரு  ஆள்  சுற்றிச்சுற்றி  வருகிறான், அவன்  காதலுக்கு  நாம்  உதவி  செய்தால்  அக்காவின்  மனசு  டைவர்ட்  ஆகும். நம்மைக்கண்டுக்க  மாட்டா.  அவ  ரூட்  மாறிவிடும், நாம்  சுதந்திரமாக  இருக்கலாம்  என  திட்டம்  இடுகிறாள்


அதன்படியே   செய்கிராள் . நாயகி  காதலில்  விழுகிறாள் . தன்  தங்கையைக்கண்டு  கொள்வதில்லை . ஆனால்  தங்கை இப்போது  5வது  ரேங்க்  தான்


 நிழலின்  அருமை  வெய்யிலில் தான்  தெரியும்  என்பது  போல  அக்காவின்  முக்கியத்துவம்  தங்கைக்கு  இப்போதுதான்  ட்தெரிய  வருகிறது . அதனால்  பழையபடி  அக்காவை  தன்  பக்கம்  இழுக்க  அவள்  காதல்  பிரேக்கப்  ஆக  வேண்டும்  என  நினைக்கிறாள் , இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகி  ஆக   கேரளத்து  கிளியோபாட்ரா  அனு  சிதாரா. +2  படிக்கும்  மாணவியாக  25  வயதான  இவரை  எப்படி  பார்ப்பது  என்ற  கவலை  வேண்டாம் ., குமரிக்கோட்டம்  படத்தில்  எம் ஜி ஆர்  ரையே  நாம்  காலேஜ்  ஸ்டூடண்ட்  ஆக  ஏற்றுக்கொண்டோம்


ஆடை  வடிவமைப்பில் சிகை  அலங்காரத்தில்  எப்போதும்  கவனம்  செலுத்தும்  நாயகி  இதிலும்  பக்காவாக  இருக்கிறார். நடிப்பிலும்  குறை  வைக்க வில்லை 


தங்கை  ஆக லட்சுமி  மிகச்சிறப்பாக  நடித்திருக்கிறார். பேபி  ஷாலினி  மாதிரி  ஓவர்  ஸ்மார்ட்  ஆக  ஓவர்  ஆக்டிங்  எல்லாம்  பண்ணாமல்  யதார்த்தமாக  நடித்திருக்கிறார்


 அப்பாவாக கலாபவன்  சாஜன்  அருமையான  நடிப்பு , குறிப்பாக  க்ளைமாக்சில் பெண்ணைப்பெற்றவர்கள்  பற்றிப்பேசும்  டயலாக்கில்  கண்  கலங்க  வைக்கிறார் . அம்மாவாக , பாட்டியாக  நடித்தவர்கள் நடிப்பும்  அருமை 


 நாயகிக்கு   ஜோடியாக   அமித்  சக்கலக்கல்  நடித்திருக்கிறார் , இருவருக்கும்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை  என்றாலும்  அது  பெரிய  குறையாகத்தெரியவில்லை ,ஏன்  எனில்  இத்  லவ்  ஸ்டோரியோ , தம்பதி  கதையோ  இல்லை , அக்கா  -தங்கை  கதை


பி எஸ்  ஹெய்ஹரி  இசையில்  பாடல்கள்  இதம், பின்னணி  இசை  கச்சிதம். கார்த்தியின்  ஒளிப்பதிவில்  பகல்  வெளிச்சக்காட்சிகளே  அதிகம், தெளிவான  படப்பிடிப்பு  ஜான்  குட்டியின்  எடிட்டிங்கில்  2  ,மணி  நேரம்  படம்  ஒடுகிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  அஜித்  வி  தாமஸ் 
சபாஷ்  டைரக்டர்  (அஜித்  வி  தாமஸ் )


1  நாயகியின்  குடும்பத்தினர்  அனைவரும்  பர்ச்சேஸ்  செய்ய  ஜவுளிக்கடைக்குப்போகும் காட்சியில்  எல்லோரும்  கலர் , டிசைன்  பார்த்து  செலக்ட்  செய்ய  அப்பா  மட்டும்  விலை  அட்டையைப்பார்த்துப்பார்த்து  செலக்ட்  , ரிஜெக்ட்  செய்யும்  காட்சி  யதார்த்தம்  + காமெடி 

2  சிறுமியான  நாயகியின்  தங்கை  நாயகனுடன்  டான்ஸ்  ஆடும்போது  முயற்சித்த  ஒரு  டான்ஸ்  ஸ்டெப்பை  தன்  குடும்பத்தார்  முன்  ஆடிக்காட்ட  அதே  ஸ்டெப்பை  எல்லாரும்  ட்ரை  பண்ணுவதும் ,  ஆடுவதும்  க்யூட்  மொமெண்ட்ஸ் 


3  நாயகனின்  தங்கை  தன்  காதலனை  நாயகனின்  குடும்பத்தில்  அறிமுகப்படுத்தும்போது  அவன்  ஓவராகப்பம்முவதும், அமைதிப்படை அமாவாசை  போல  அடக்கி  வாசிப்பதும்  காமெடி  கலக்கல் 


  ரசித்த  வசனங்கள் 


1  இவ  யாரையும்  லவ்  பண்ணவும்  மாட்டா, மத்தவங்க  லவ்  பண்ணவும்  விட  மாட்டா

2  அப்பா , தொப்பையைக்குறைங்க , அப்பா  மாசமா  இருக்காருபோல, எப்போ  டெலிவரினு  ஃபிரண்ட்ஸ்  கிண்டல்  பண்றாங்க 


3  ஒரு  சின்னக்குழந்தையைக்கூட  கவரத்தெரியாத  நீ  எப்படி  அவ  அக்காவை  கரெக்ட்  பண்ணப்போறே? 


4  இந்த  ரைட்டர் கொஞ்சம்  ஓவர்  ரேட்டட்னு  எனக்குத்தோணுது , நீங்க  என்ன  நினைக்கறீங்க ?


அவரைப்பிடிக்கனும்னா வாசகன்  கொஞ்சம்  புத்திசாலியா  இருக்கனும்


5  என் பொண்ணு  ஒரு  பையனை  லவ்   பண்றது  எனக்குப்பிரச்சனை  இல்லை , ஆனா  அதை  நம்ம  கிட்டே  ஷேர்  பண்ணலையே?  நான்  இவளை  லவ்  பண்ணப்ப  உங்க கிட்டே தானே  முதல்ல  சொன்னேன், அம்மா?


 ஆமா, நான்  கூட  இவ  வேணாம்னு  சொன்னேன், நீ  கேட்கலை 


 டாப்பிக்  இப்போ  அதில்லை 


6  பெண்களோட  வாழ்க்கை  ட்ரான்ஸ்ப்ளேண்ட்டேசன் போல . அவங்க  பிறப்பது  , வளர்வது  ஒருஇடத்தில். திருமணத்துக்குப்பின்  அவங்களை  வேரொடு பிடுங்கி  வேறு  இடத்தில்  நட்டு  வளரச்செய்யறாங்க . அது  வளர்ந்து  பூத்து  , காய்த்து  கனி  கொடுக்கனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகியின்  தங்கையிடம்  ஐஸ்க்ரீம்  தரும்  ஆள்  அவர்களால்  அது  மறுக்கபப்டவே  நான்கு  கோன்  ஐஸ் சையும்  கீழே  போட்டு  வீணாக்குகிறார்.உணவுப்பொருட்களை  வீண் ஆக்காமல்  அங்கே  போகும்  ஏழைக்குழந்தைகளுக்கு  தருவது  போல்  காட்சி  அமைத்திருக்கலாம்


2  பப்ளிக்  லைப்ரரிக்குப்போகும்போது  ர்ல்லோரும்  செல்  ஃபோனை  சைலண்ட்  மோடில் வைத்திருப்பார்கள் , ஆனால்  நாயகனுக்கு  லைப்ரரில  இருக்கும்போது  கால்  வருது , அவரும்  அசால்ட்டா  அட்டெண்ட்  பண்ணி  பேசிட்டு  இருக்கார்  


3  நாயகன்  நாயகியிடம்  லைப்ரரில  பேசிட்டு  இருக்கும்போது  அங்கே  அமர்ந்திருக்கும்  பப்ளிக்  யாரும்  கண்டு கொள்ளவே  இல்லை , சைலன்ஸ்  ப்ளீஸ்னு  சொல்லி  இருக்க  வேண்டாமா? 

4  நாயகி  தன்  தங்கையின்  டைரியை ரெகுலராகப்படிப்பது  போலவும், வாட்சிங்  மோட்லயே  இருப்பதாகவும்  ஓப்பனிங் ல  காட்றாங்க. அபப்டி  இருக்கும்போது  தன்  தங்கை  நாயகனுடன்    ஃபோனில்  அடிக்கடி பேசுவது , தன்னைப்பற்றிய  டீட்டெய்ல்ஸ்  தந்து  தன்னைகக்ரெக்ட்  பண்ண  நாயகனுக்கு  உதவியது  தன் தங்கை  தான்  என்பதை  ஏன்  கண்டு  பிடிக்க  முடியவில்லை ? 


5  திருமணத்துக்குப்பின்  நாயகன்  நாயகியிடம்  உன்னை  கரெக்ட்  பண்ண  உதவியது  உன்  தங்கை  தான்  என்ற  உண்மையை  சொல்லவே  இல்லையே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பெண்கள் , ஃபேமிலி  ஆடியன்ஸ்க்குப்பிடித்தமான  படம் . ரேட்டிங் 2.75 / 5 


Santhosham
Theatrical release poster
Directed byAjith V Thomas
Produced byIsha Pattali
Ajith V Thomas
Starring
CinematographyKarthik A[1]
Edited byJohn Kutty[1]
Music byP S Jayhari[1]
Production
company
Mise-En-Scene Entertainment
Release date
  • 24 February 2023
CountryIndia
LanguageMalayalam

0 comments: