Saturday, October 07, 2023

HARKARA (2023) -ஹர்காரா --தமிழ் - சினிமா விமர்சனம் ( உலக சினிமா) / ( ஹிஸ்டாரிக்கல் டிராமா) @ அமேசான் பிரைம் + ஆஹா தமிழ்

   


    ஹர்காரா  என்றால் போஸ்ட் ,மேன்   என்று  அர்த்தம். இந்தியாவின்  முதல்  தபால்  ஊழியர்  என்ன  என்ன  சிரமங்களை  சந்தித்தார்? ஆங்கிலேயர்களை  எப்படி  எதிர்த்தார்? அவரது  தியாகம்  எப்படிப்பட்டது? என்பதை  எடுத்துச்சொல்லும்  கதை 

படத்தின்  இயக்குநர் ராம்  அருண்  கேஸ்ட்ரோ  2019 ல்  ரிலீஸ்  ஆன  செம  ஹிட்  படமான  வி1 மர்டர்  கேஸ்  படத்தின்  இயக்குநர் 2014ல்  ஓட்டத்தூதுவன்  என்ற  டைட்டிலில்  இவர்  நாயகன்  ஆக  நடிக்க  ஒரு  படம்  எடுத்தார்.1850 ல்  நடந்த  உண்மை  சம்பவம்  இது . பல  ஃபிலிம்  ஃபெஸ்டிவல்களில்  படம்  திரை இடப்பட்டு  பாராட்டுக்களைப்பெற்றது . இயக்குநர்  நியூயார்க் கில்  நடிப்புக்கான  பயிற்சி  பெற்றவர் . 2014ல்  இவர்  நாயகன்  ஆக  நடித்த  ஓட்டத்தூதுவன் தான்  இப்போது  காளி  வெங்கட்டை  வைத்து ஒரு  எக்ஸ்ட்ரா  போர்சன்  உருவாக்கி  சேர்த்து  ஹர்காரா  என  ஆனது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ம்த்திய  அரசு  ஊழியர்  ஆக தபால்  நிலையத்தில்  போஸ்ட்மேன்  ஆக  பணிபுரிகிறார். ஆனால்  அவர்  பணி  புரியும்  இடம்  ஒரு  மலைப்பாங்கான  கிராமம். மிக  சிரமமான  பணி . 


கிராமத்து  மக்கள்  ரூல்ஸ்  அண்ட்  ரெகுலேஷன்ஸ்  எல்லாம்  தெரியாமல். அதை  ஃபாலோ  பண்ணாமல்  நாயகனை  அன்  டைமில் தொந்தரவு  செய்கிறார்கள் . இதனால்  கடுப்பான  நாயகன்  வேறு  இடத்துக்கு  பணி  மாற்ற,ம்  கேட்கிறார், ஆனால்  கிடைக்கவில்லை 


 அதனால்  நாயகன்  ஒரு சதி செய்கிறார்.கிராம்த்து  மக்களே  எழுதுவது  போல  ஒரு  பெட்டிஷன்  ரெடி  செய்து  அதை  கலெக்டர்  ஆஃபீஸ்க்கு  அனுப்புகிறார்.  இந்த  ஊருக்கு  தபால்  நிலையமே  வேண்டாம், மாறாக  ஒரு கூட்டுறவு  வங்கி  இருந்தால்  போதும் என்பதுதான்  பெட்டிஷனின்  மையப்பொருள் 


நாயகனிடம் எதேச்சையாக  அந்த  ஊரில்  முன்பு  150  வருடங்களுக்கு  முன்பு  பணி  ஆற்றிய  மாதேஸ்வரன்  என்பவர்  பற்றிய  கதையை  கேட்கிறார். அதற்குப்பின்  மனம்  மாறுகிறார்.


 அந்த  மாதேஸ்வரனின்  கதை என்ன? அவர்  மனம் ஏன்  மாறியது?  என்பது  தான்  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  காளி  வெங்கட் யதார்த்தமான  நடிப்பு, கிராமத்து  மக்களிடம்  எரிச்சல் படும்போதும், தனக்கு  பெண்  கொடுக்க  யாரும்  இல்லை  என  வருத்தப்படும்போதும்  கவனிக்க  வைக்கும் நடிப்பு 


 மாதேஸ்வரன்  எனும்  போஸ்ட்மேன்  ஆக  இயக்குநர் ராம்  அருண் கேஸ்ட்ரோ . அபாரமான  நடிப்பு , இணைந்த  கைகள்  அருண்  பாண்டியன்  போல  ஜிம்  பாடி. வாய்ப்புக்கிடைத்தால் ஆக்சன்  ஹீரோ  ஆகலாம்


கிராமத்து  மக்களின்  யதார்த்த  நடிப்பும்  , சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்கும்    ரசிக்க  வைக்கின்றன


படத்தில்  பாராட்ட  வேண்டிய முதல்  அம்சம்  ஒளிப்பதிவு  தான். பிரமாதம்.,ஃபிலிப் ஆர்  சுந்தர் , லோகெஷ்  இளங்கோவன்  இருவரும்  கலக்கி  இருக்கிறார்கள் 

டேனி சார்ல்ஸ்  தான்  எடிட்டிங்க். ஃபிளாஸ்பேக்  காட்சிகளுக்கு  தனி  கலர்  கொடுத்து  ஒளிப்பதிவாளர்  படம்  பிடித்ததை  சாமார்த்தியமாக  நான்  லீனியர்  கட்டில்  தொகுத்திருக்கிறார்


ராம் சங்கர்  பின்னணி  இசை  ஜீவன்  உள்ள  உயிரோட்டமான  இசை 


ஒப்பனையே இல்லாத  ஒப்பனையே  தேவைப்படாத  இயற்கை  அழகு  நாயகி,  சில  காட்சிகள்  வந்தாலும்  அருமை 

சபாஷ்  டைரக்டர் (ராம்  அருண்  கேஸ்ட்ரோ)


1   தான்  நாயகன்  ஆக  நடித்த குறும்படத்தை  முழுப்படம்  ஆக்க  என்ன தேவையோ  அதை  உணர்ந்து  கச்சிதமாக  செய்தது 


2  கமர்ஷியல்;  மசாலா  அயிட்டங்கள்  மொக்கைக்காமெடி , டான்ஸ் ., டூயட்  என  எதுவும்  வைக்காமல்  தில்லாக  கதைக்குத்தேவை  எதுவோ  அதை  மட்டும்  காட்டியது 


3  கிட்டத்தட்ட  10 கிமீ  தூரம்  உள்ள  இடத்தை  நாயகன்  கடக்கும்போது  இன்னும்  எவ்ளோ  தூரம்  என  எப்போக்கேட்டாலும்  நடக்கற  தூரம்  தான்  என  திரும்ப  திரும்ப  சொல்லும்  கிராம வாசி  நடிப்பு 


4   நாயகனிடம் 250  ரூ கடன்  வாங்கும்  கிராமத்துப்பெண்  நாணயமாக  திருப்பிக்கொடுத்து  பேசும்  வசனம்  அருமை .. நடிப்பும்  கிளாசிக்  


5  ரூ 1000  பென்சன்  பணம் கிடைத்ததும் உணர்ச்சி வசப்பட்டுப்பேசும்  பாட்டியின்  நடிப்பு  அருமை 


6 கானகத்தின்  அருவி  அழகை  அட்டகாசமாகப்படம்  பிடித்தது . தேனி மாவட்டத்தின்  அழகைக்கண்  முன்  நிறுத்தியது 


ரசித்த  வசனங்கள் 


1  ஆபத்துக்கு  உதவாத  பிள்ளையும், ஆத்திரத்துக்கு  உதவாத  பணமும்  தண்டத்துக்கு  சமம்


2   இடமலைக்கு  எம்புட்டு  தூரம் ?

  எல்லாம்  நடக்கற  தூரம் தான் 

  அப்போ  பக்கம்னு  சொல்லுங்க , ஏன்  தூரம்னு  சொல்றீங்க


எகத்தாளம்தான்


3  என்னய்யா, இங்க்லீஷ்ல  சைன்  பண்ற  அளவு  படிச்சிருக்கே? ஆனா  நான்  கொடுத்த  பேப்பர்ல  என்ன  எழுதி  இருக்குனு  படிச்சுப்பார்க்காம  சைன்  பண்றே?


 படிச்சுப்பார்த்து  சைன்  பண்ணுனா  அப்றம்   நீங்க  போட்டிருக்கும்  யூனிஃபார்ம்க்கு  என்ன  மரியாதை ?


4  ஃபோர் ஜி  வ்ந்தா  என்ன? ஃபைவ்  ஜி  வந்தா  என்ன?  போஸ்டல்  டிபார்ட்மெண்ட்  போகும்  இடத்துக்கு  எந்த  டெக்னாலஜியும்  வந்துட  முடியாது 


5  உலகத்துலயே  பெரிய  போஸ்டல்  சர்வீஸ்  நம்ம  இந்தியாவுதுதான்


6  போற  பாதை  கடுமையா  இருந்தாத்தான்  பேரு  நிலைச்சு  நிற்கும்

7  மாட்டுக்கும்  அடிமைக்கும்  எந்த  உணர்ச்சியும்  இருக்கக்கூடாது , இருந்தா  திமிறிக்கிட்டே  இருக்கும்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


இந்தமாதிரி  நல்ல  படங்களில்  கூட  லென்ஸ்  வைத்து  குறை  கண்டு பிடித்து   நொட்டை  சொல்லிக்கொண்டிருந்தால்  நாம்  மீண்டும்  மீண்டும்   விக்ரம், ஜெயிலர் , லியோ  மாதிரி  மாமூல்  மசாலாப்படங்கள் , வன்முறை  தூண்டும்  படங்களையே  பார்த்துக்கொண்டிருக்க  வேண்டியதுதான்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  படம்  ஸ்லோ  தான், ஆனால்  அவசியம்  பார்த்து  ரசிக்க  வேண்டிய  உலக  சினிமா .  மாமூல்  மசாலாப்பட  ரசிகர்கள் , தெலுங்கு  டப்பிங்  பட   பிரியர்கள்  தவிர்க்கவும் , நல்ல சினிமா  ரசனை உள்ளவர்கள்  மட்டும்  பார்க்க  வேண்டிய  படம். ரேட்டிங்    3/ 5 


Harkara
Directed byRam Arun Castro
Written byRam Arun Castro
Produced byKalorful Beta Movement
Starring
CinematographyPhilip R Sunder
Lokesh Elangovan
Edited byDani Charles
Music byRamshanker
Production
company
Kalorful Beta Movement
Release date
  • 26 August 2023
CountryIndia
LanguageTamil

0 comments: