Thursday, October 19, 2023

SOUND OF FREEDOM (2023)- அமெரிக்கன் ,மூவி- சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர்)

   


வெறும் 14  மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  234  மில்லியன்  டாலர்  வசூல்  செய்த  அதிரி  புதிரி  ஹிட் படம் , இது  உண்மை சம்பவங்களை  அடிப்படையாகக்கொண்டு   எடுக்கப்பட்ட  படம் . கொலம்பியாவில்  சிறுவர், சிறுமிகளை  வைத்து  நிகழ்த்தப்படும்  கொடுமைகளைப்பற்றிப்படம்  பேசுகிறது       


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஓப்பனிங்  சீன்லயே  ஒரு  அப்பா  தன்  இரு  குழந்தைகளை  ஒரு  பெண்ணிடம்  அறிமுகப்படுத்துகிறார். மாடலிங்க்கிற்கான  ஃபோட்டோ  ஷூட்  நடத்தறோம், குறிப்பிட்ட  இடத்துக்கு  குழந்தைகளை  அழைத்து  வரவும்னு  அந்தப்பொண்ணு  சொல்லிட்டுப்போய்டுது . அப்பாவும்  தன் மகன் ,மகள்  இருவரையும்  ( தலா 8  வயசு ,9 வயசு ) அந்தப்பெண்  குறிப்பிட்ட  இடத்துக்கு  அழைத்து  வருகிறார். அங்கே  பல  குழந்தைகள்  இருக்கிறார்கள். தன்  வாரிசுகளை விட்டு விட்டு  அவர் போய்  விடுகிறார். மீண்டும்  மாலை  வந்து  பார்த்தால்  யாரையும் காணவில்லை . சுத்தமா  துடைத்து  வைக்கப்பட்டது  போல  இடம்  காலியாக  இருக்கிறது 


போலீசில்  புகார்  கொடுக்கிறார். குழந்தைகளைக்கடத்தி விற்கும்  கும்பல்  இந்நேரம்  அவர்களைக்கை  மாற்றி  வெளி நாட்டுக்கு  அனுப்பி  இருக்கும்  என  சொல்கிறார்கள் . இருந்தாலும்  கேசைக்கையில்  எடுத்து  ஆராய்கிறார்கள் 


இந்த  கேசை  டீல்  செய்யும் போலீஸ்  ஆஃபீசர்  ஆன  நாயகன்  தன்  மனைவி , குழ்ந்தைகளுடன்  வாழ்ந்து  வருபவன். கடத்தப்பட்ட  ஒரு  மகனைக்கண்டுபிடித்து  மீட்டு  விடுகிறார்கள் , ஆனால்  மகளை  மீட்க முடியவில்லை . ஒரு  தீவிரவாதக்கும்பல்  தலைவனிடம்  அவள்  மாட்டி  இருப்பதை  அறிகிறார்  நாயகன் . அங்கே  போலீஸ்  , ராணுவம்  போகமுடியாது .

இந்தக்கேசை  விட்டு  விடும்படி  மேலிடம்  சொன்னாலும்  நாயகன் கேட்கவில்லை ,  வேலையை  ரிசைன்  செய்து  விட்டு  மீட்புப்பணியில்  இறங்குகிறேன்  என்கிறான் . நாயகன்  தனி  ஆளாக  அந்த  படங்கரவாத  கும்பல் இருக்கும்  இடத்தை  அடைந்து  எப்படி  அந்த  சிறுமியை  மீட்டான்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக  ஜிம்  கவிஜெல்  நிதானமாக  நடித்திருக்கிறார். குழந்தைகளைப்பார்த்து  உருகுவது  சோகமான  நடிப்பு . 


கடத்தபப்ட்ட  சிறுவன், சிறுமியாக  நடித்தவர்கள்  இருவரும்  யதார்த்தமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் 


சிறுமியை  மீட்கும்  காட்சி  மட்டும்  நம்ப  முடியவில்லை , ஆனால்  உண்மை  சம்பவம்  என்பதால் நம்ப  வேண்டியதாக  இருக்கிறது 


 ஒளிப்பதிவு , லொக்கேஷன் , லைவ் லொக்கேஷன்  ஷூட்டிங்  அனைத்தும்  அருமை 


சபாஷ்  டைரக்டர்


1  இதை  ஒரு ஆக்சன்  டிராமாவாக  சொல்ல  வாய்ப்பிருந்தும்  ஆக்சன்  சீக்வன்சை  திணிக்காமல்  ரியல்  டிராமா  மூவியாக  த்ந்த  விதம்


2  க்ரைம்  த்ரில்லர்  என  விளம்பரப்படுத்தப்பட்டு  இருந்தாலும்  த்ரில்லர்  ஜர்னருக்கான  எலிமெண்ட்ஸ்  இல்லை . ஸ்லோவாகத்தான்  படம்  போகிறது  என்றாலும்  யதார்த்தம்  அதிகம்  என்பதால்  ரசிக்க  முடிகிறது 


  ரசித்த  வசனங்கள் 


1  ரெகுலரா  உங்க  குழந்தைங்க  கூடவே  படுத்துத்தூங்கிய  உங்களால  இப்போ  உங்க  குழந்தை  இல்லாத  காலி  பெட்ல  படுத்துத்தூங்க  முடியுமா? 


2  எதுக்காக  நீ  இந்த  வேலைகளை  எல்லாம்  பண்ணிக்கிட்டு  இருக்கே?


 ஏன்னா  கடவுளின்  குழந்தைகள்  விற்பனைக்கு  அல்ல 


3 உனக்கு  எதுவுமே தெரியலைன்னா  யார்  கிட்டேயும்  எதுவும்  பேசாம  இருப்பதே  நல்லது 


4  ஜிபிஎஸ்  ட்ராக்  பண்ண  ஏதும்  வ்ழி உண்டா?


 ஒரே  வழி , உங்க  உடம்புல்  ஊசி  போட்டுக்குவது தான்


 அப்போ  எங்க  பாடீஸை  ஜிபிஎஸ்  மூலமா  ஈசியா  லொக்கேட்  பண்ணிடுவீங்க ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  முன்  பின்  அறிமுகம்  இல்லாத   ஒருவரிடம்  தன்  இரு  குழந்தைகளை  விட்டுச்செல்வது  எப்படி ? உள்ளே  தானே  வர  அனுமதி  இல்லை ? வாசலில்  வெயிட்  பண்றேன்  என  சொல்லி  இருக்கலாம் 


2   சிறுமியை  மீட்கும்  காட்சியில் சிறுமிக்கு  காவல்  என  யாரும்  இல்லை . அனைவரும்  சரக்கு  போதையில்  இருக்க  நாயகன்  எளிதில்  மீட்பது போல  காட்டி  இருக்கிறார்கள் . அத்தனை  பேர்  கொண்ட  கும்பலிடம்  இருந்து  அவ்வளவு  சுலபமாக  மீட்க  முடிவது  நெருடுகிறது 


3   நாயகன்  சிறுமியிடம்  பேச  முற்படும்போது  யாருமே  அதைக்கண்டுகொள்ளவில்லை ., இத்த்னை  பேர்  கூட்டத்தில் இருக்கும்போது  அந்த  சிறுமியிடம்  மட்டும்  இவன்  ஏன்  பேசுகிறான் ? என்ற  சந்தேகமும் யாருக்கும்  எழவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - ஏ  சர்ட்டிஃபிகேட்  படம்  தான்  ஆனால் காட்சிகள்  கண்ணியமாக  இருக்கின்றன/  வாய்ப்பிருந்தும் 18+  காட்சிகள்  ஏதும்  திணிக்கப்படவில்லை சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஷாம்  நடித்த  6  மெழுகுவர்த்திகள்  கதை, திரைக்கதையை  நினைவுபடுத்தும்  பட்ம் , பொறுமையாகப்பார்க்கும்  வல்லமை  கொண்டோர்  பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 


Sound of Freedom
Theatrical release poster
Directed byAlejandro Monteverde
Written by
  • Rod Barr
  • Alejandro Monteverde
Produced byEduardo Verástegui
Starring
Cinematography
  • Gorka Gómez
  • Andreu Aec
Edited byBrian Scofield
Music byJavier Navarrete
Production
company
Santa Fe Films
Distributed byAngel Studios
Release date
  • July 4, 2023
Running time
131 minutes[1]
CountryUnited States
Languages
  • English
  • Spanish
Budget$14.5 million[2]
Box office$238.7 million[3][4]

0 comments: