Saturday, October 21, 2023

போர் தொழில் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @சோனி லைவ்

     


 உலகம்  முழுக்க  50  கோடி  ரூபாய்  வசூல்  செய்த படம்  இது. கேரளாவில் ரிலீஸ்  ஆன முதல்  10  நாட்களில்  3.5  கோடி  வசூல்  செய்த  படம் . அசோக் செல்வன்  கேரியரில்  முதல்  பிரம்மாண்ட  வெற்றிப்படம். ஒரு படத்துக்கு திரைக்கதை எந்த  அளவு  முக்கியம்  என்பதை உணர்த்திய  படம் ராட்சசன்  படத்துக்குப்பின்  தமிழ்  சினிமா வில்  க்ரைம்  த்ரில்லர் + சீரியல்  கில்லர்   ஜர்னரில்  வந்த  மறக்க  முடியாத  படம்     

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  டிஎஸ்பி  ஆஃபீசர். இப்போதுதான்  முதல்  முறையாக  பொறுப்பேற்கிறார். அவருக்கு  ட்ரெய்னர்  ஆக  ஒரு  ஆஃபீசர் எஸ்  பி  போஸ்ட்டில்  இருக்கிறார்., இருவருக்கும்  டெக்னிக்கல்  அசிஸ்டெண்ட் ஆக  நாயகி 


நகரில்  தொடர்  கொலைகள்  நடக்கின்றன. கொலை  செய்யப்படுபவர்கள்  அனைவரும்  பெண்கள் /. மற்றபடி  வேறு  ஒற்றுமை  இல்லை கொலைகாரனைக்கண்டு  பிடிப்பது  மிக  சிரமமாக இருக்கிறது 


 25  வருடங்களுக்கு  முன்  இதே  மாதிரி  கொலைகள்  நடந்த்தா? என  விசாரிக்கும்போது  இதே  டைப்  கொலைகள்  நடந்தது  தெரிய  வருகிறது ., அந்த  கேஸ்களை  டீல்  செய்த  போலீஸ் ஆஃபீசரை   சந்தித்தால்  ஏதாவது  உண்மைகள்  தெரிய் வரும்  என்று  முடிவு  செய்து ஆஃபீசர்  அட்ரஸ்  போனால்  அவர்  ஆல்ரெடி  இறந்து  விட்டார் , அவர்  மகன்  தான்  இருக்கிறார்


 அவர்  மீது  இருவருக்கும்  சந்தேகம்  வருகிறது. அவரது  வீட்டுக்கு  அருகே  இருக்கும்  வீட்டில்  தங்கி  கண்காணிக்கின்றனர். அப்போதுதான்  ஒரு  உண்மை  தெரிய  வருகிறது 

அதற்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  சுவராஸ்யமான  மீதி  கதை 


 நாயகன்  ஆக  அசோக்  செல்வன் . இவரை  மீசை  இல்லாமல்  பார்க்க  முதலில்  எனக்குப்பிடிக்கவில்லை . ஆனால் போகப்போக  பழகி  விடுகிறது , அதற்கான  நியாயத்தை இயக்குநரும் , நாயகனும் கச்சிதமாக  செய்திருக்கிறார்கள்: 


 தமிழ்  சினிமாவில்  மீசை  இல்லாமல்  அல்லது  மீசை  வைக்காமல்  ஜெயித்த  கதாநாயகர்க்ள்  மிக  சொற்பமே. நாயகன், பேசும் படம்  கமல் , ஜீன்ஸ்  பிரசாந்த் என  விரல்  விட்டு  எண்ணி  விடலாம். தமிழர்களைப்பொறுத்தவரை  மீசை  என்பது  ஆண்மையின்  அடையாளம்.


அசோக்  செல்வன்  கேரக்டர்  டிசைன்  படிப்பு  அனுபவம்  கை  கொடுக்கும்  என  நம்புபவராகவும், அடிபப்டையில்  கோழைத்தனமான  கொஞ்சம்  பயந்த  சுபாவம்  உள்ளவராகவும்  சித்தரிக்கப்பட்டிருப்பது  மிக  யதார்த்தமாக  இருக்கிறது . போலீஸ்  என்றாலே கெத்துடன்  ஹீரோயிசம்  மட்டும்  காட்டும்  நாயகர்கள்  நடுவில்  இது  கொஞ்சம்  வித்தியாசமாக  இருந்தது 


இன்னொரு  நாயகன்  ஆக  சரத்  குமார்,புலன்  விசாரணை  படத்துக்குப்பின்  ஒரு  கம்பீரமான  நாயகனைக்காண  முடிகிறது. அவரது  உடல்  மொழி , போலீஸ்  ஹேர்  கட்  எல்லாம்  பக்கா . ஏட்டுச்சுரைக்காய்  கறிக்கு  உதவாது , அனுபவம்  தான்  ஆசான்  என்ற  கொள்கையுடன்  ரஃப்  அண்ட்  டஃப்  கேரக்டர்  ஆக  அவரது  கேரக்டர்  சித்தரிக்கப்பட்டுள்ளது


மாறு பட்ட  இரு  துருவங்களாக  இரு நாயகர்களும்  சித்தரிக்கப்பட்டதால்  இருவருக்கும்  இடையே  எழும்  ஈகோ  கிளாஸ் ,  கருத்து  மோதல்  ஆகியவை  மெயின்  கதையை  விட மிக  சுவராஸ்யம் 


நாயகி  ஆக  நிகிதா  விமல் யதார்த்தமான  பெண்ணாக  வந்து  போகிறார்.அதிக  காட்சிகள்  இல்லை  என்றாலு,ம்   தேவையற்ற  திணிப்பு  , டூயட்  காட்சிகள்  இல்லாதது  ஆறுதல் 


வில்லன்கள்  ஆக  இருவர். ஒருவர்  அமரர்  சரத் பாபு . இதுதான்  அவரது  கடைசிப்படம்   . . நல்ல  வேளை  அவரது  கொடூரமான  பக்கங்களுக்கு  ஃபிளாஸ்பேக்கில்  இளவயது  சரத்பாபுவாக  வேறு  ஒருவரை  உபயோகித்தது  சரியான  முடிவு , அவரை  ஜெண்ட்டில்மேனாகவே  எல்லாப்படங்களிலும்  பார்த்துப்பழகி  விட்டோம்


 இன்னொரு  வில்லன் ஆக  மலையாளப்படங்களில்  காமெடி  ரோலில் நடித்தவர்  சுனில் சுகதா . .கச்சிதமாக  நடித்திருக்கிறார் 


ஜீப்  டிரைவராக  தயாரிப்பாளர்  தேனப்பன்  உருக்கமான  நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்


ஸ்ரீஜித்  சாரங் கின்  எடிட்டிங்கில்  147  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  செய்திருக்கிறார். எங்குமே  தொய்வில்லை 

ஜேக்ஸ்  பெஜோய்  தான்  இசை ., பிஜிஎம்  மில்  தெறிக்க  விடுகிறார்


கலைச்செல்வன்  சிவாஜி யின்  ஒளிப்பதிவு   தரம் 


விக்னேஷ்  ராஜா  தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார். அடுத்த  படமும்  இதே  காம்ப்போவில்  செய்ய  வாய்ப்பு  உண்டு சபாஷ்  டைரக்டர்  ( விக்னேஷ்  ராஜா ) -அறிமுக இயக்குநர்


1  அட்டகாசமான  இடைவேளை  பிளாக்  காட்சி. காரில்  ரயில்வே  லெவல்  கிராசில்  வில்லன்  இருக்க   எதிரே  சரத்  குமார்  இன்னொரு  போலீஸ்க்கு  இன்ஸ்ட்ரக்சன்  கொடுக்க  கொடுக்க  அதே  போல்  போலீஸ்  வில்லனைக்கேள்வி  கேட்கும்  காட்சிகள்  அருமை (   நீயா? நானா?  நிகழ்ச்சியில்  கோபிநாத்துக்கு  இதே  போல்  இன்ஸ்ட்ரக்சன்  வருமாம்,  ஆணைக்கு  ஏற்ப  அவர்  குறுக்குக்கேள்விகள்  கேட்பாராம். அந்த  நிகழ்வு  தான்  இந்த  சீனுக்கு  இன்ஸ்பிரேஷன்  ஆக  இருந்திருக்கும்) 


2  போஸ்ட்மார்ட்டம்  செய்ய  டாக்டர்  தாமதம்  செய்யும்  சூழலில்  இறந்த  நேரம்  தெரிய  வேண்டிய அவசியம். அப்போது  அசோக்  செல்வன்  டெட்  பாடியின்  காதில்  தெர்மாமீட்டரை  வைத்து  27  டிகிரி  காட்டுது. இறக்கும்போது  மூளை  35  டிகிரியில்  இருக்கும், இறந்த  பின்  மூளை  கொஞ்சம்  கொஞ்சமாக  செயல்  இழக்கும், அந்தக்கணக்கின்  படி  ஆள்  இறந்து  8  மணி  நேரம்  ஆகிறது  என  ஏட்டுச்சுரைக்காய்  கறிக்கு  உதவும்  என  நிரூபிக்கும்  சீன் 


3  வில்லன்  நெ  2  க்ளைமாக்சில்  யாருக்குக்குறி  வைக்கிறான்  என்பதை  தவறாக  யூகிக்கும்  நாயகர்கள்  இருவரும்  ஒரு  கோணத்தில்  போக  கேஸ்  திசை  மாறி  வில்லனின்  டார்க்கெட்டை  கச்சிதமாக  கண்டு  பிடிக்கும்  காட்சி  அமர்க்களம் 


4    வில்லன்  நெ 2  துப்பாக்கியை  சரியாக  உபயோகிக்க  முடியாமல்  திணற  அப்போது  நாயகன்  அசோக்  அந்த  ரிவால்வர்  பற்றி  டீட்டெய்லிங்  கொடுத்து  சுடும்  காட்சி   மாஸ்  சீன் 


5  க்ளைமாக்சில்  எல்லாம்  முடிந்த  பின்  சண்டை  இடும்  பெற்றோரால  அழும்  சிறுவனுக்கு  வாக்மேன்  கொடுத்து  பெற்றோரிடம்  நீங்க  சரியா  இருந்தா  போலீசான  எங்களுக்கு  வேலை  குறையும்  என  சமூகப்பொறுப்பு  மிக்க   வசனம்  பேசும்  இடம் 


6  ஆரம்பக்காட்சிகளில்  நாயகர்கள்  இருவரும்  மோதிக்கொள்வதும் , இருவருக்குமிடையே  புரிதல்  வந்த  பின்  இணைந்து  பணியாற்றுவதும்  இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  பிரமாதம்

7  கொலை  செய்யப்படும்  பெண்களுக்கு  என்ன  ஒற்றுமை  என  ஆராய்கையில் அனைவருக்குமே  சிரிக்கும்போது  கன்னத்தில்  குழி  விழும்  என்பது  மாறுபட்ட  சிந்தனை , அதனை  நாயகன்  கண்டு பிடித்து  விளக்கும்  காட்சி  பிரமாதம்

8  பொதுவாக  க்ரைம்  த்ரில்லர்  படங்களில்  சமூக  அக்கறை  மிக்க  வசனங்கள்  இருக்காது. இது  விதிவிலக்கு  


  ரசித்த  வசனங்கள் 


1 சார் , உங்க  லைன்  ஆஃப்  ஆக்சன்  என்னனு  சொன்னீங்கன்னா  என்னால  முடிஞ்ச  உதவியை ....


 உங்களால  முடியததால்தானே  கேஸ்  என்  கிட்டே வந்திருக்கு ?  ஏதாவது  உதவி  வேணும்னா  யார்  கிட்டே  எப்படிக்கேட்கனும்னு  எனக்குத்தெரியும்


2  ஒரு  புல்லட்  கூட  யூஸ்  பண்ணாம  எத்தனை பேர்   ரிட்டையர்   ஆகி இருக்காங்க  தெரியுமா?  சுடத்தெரியாம  இல்ல , சுட  தைரியம்  இல்லாம


3  சுத்தி  இருக்கறவங்க  ஏதாவது  சொல்லிட்டே  தான்  இருப்பாங்க , நம்ம  வேலையை  நாம  கரெக்ட்டா  செஞ்சா நமக்கான  மரியாதை  நம்மைத்தேடி  வ்ரும் 


4 ஒரு ஆர்ட்டிஸ்ட்  பற்றி  தெரிஞ்சுக்கனும்னா  அவரோட  பெயிண்ட்டிங்க்சை  கவனிக்கனும், ஒரு  கொலைகாரனைப்பற்றி  தெரிஞ்சுக்க அவன்  செஞ்ச  கொலைகளை  கவனிக்கனும் 


5  கூட  இருக்கறது  முக்கியம்  இல்லை , என் கூட  ஒடி  வரனும் 


6 ஒரு  கொலை  எதுக்கு  நடக்குதுனு  பார்க்க  அதுக்கான  மோட்டிவ்  என்னனு  தெரிஞ்சுக்கனும்


7 தம்  அடிச்சா  இன்னும்  கொஞ்சும்  நேரம்  கழிச்சு  இன்னொரு  தம்  அடிக்கலாம்னு  தோணும், அது  மாதிரி  கொலைகாரனுக்கு  கொலை  பண்றது  ஒரு  அடிக்சன்


8 இந்த  கேஸோட  முதல்  கொலை  தான்  கொலைகாரனோட  முதல்  கொலை  என்பது  என்ன  நிச்சயம் ?


9  என்  வேலை  போனாலும்  இன்னொரு  உயிர்  போகக்கூடாது


10  ஏன்  ஒருத்தன்  போலீஸ்  ஆகறான்  என்பது  முக்கியம்  இல்லை , ஆனபின்  என்ன  பண்றான் ? என்பது தான்  முக்கியம் 


11  பயந்தவன்  எல்லாம்  கோழைஇல்லை , பயந்து  ஓடறான்  பாரு , அவன் தான்  கோழை 


12  கிரிமினல்சைபிடிக்கறது  மட்டும்  தான்  நம்ம  வேலை . ஒரு  கிரிமினல் உருவாகாம   தடுப்பது  நம்ம  கைல  இல்லை ., அது  நம்ம  வேலையும்  இல்லை 


13  சூழ்நிலை  சரியில்லாம  வளர்பவன்  கிரிமினலாத்தான்  ஆகனும்  என்பது  இல்லை , கிரிமினல்சை  பிடிக்கும்  போலீசாகவும்  ஆகலாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  டி எஸ் பி  ஆக  இருக்கும்  நாயகன்  காலேஜ்  ஸ்டூடண்ட்  மாதிரி  நாயகியிடம்  கடலை  போடும்  காட்சி  ஜாலியாக  இருந்தாலும்  அவரது  கேரக்டர்  டிசைனுக்கும், , சுபாவத்துக்கும்  பொருத்தம்  இல்லாத  காட்சி 

2    வில்லன்  நெ1  நாயகனை  வாண்ட்டடாக  டின்னர்  சாப்பிட  அழைப்பது ஏன்?  தன்  மகன்  சாயலில்  நாயகன் இருப்பதால்  என  சப்பைக்கட்டு கட்டினாலும்  வேலில  போற  ஓணானை  வேட்டியில் விட்ட கதை  தான்  நினைவு  வருது 


3   வில்லன்  நெ1  வீட்டுக்கு  டின்னர்  சாப்பிட  வரும்  நாயகன்  அப்போதே  ஏன்  அந்த  அறையை  செக்  பண்ணப்போய் மாட்டிக்கொள்ளனும் ? நோட்  பண்ணி  வைத்து  விட்டு  ஆள்  வெளியே  போனப்ப  வந்து  செக்  பண்ணலாமே? இப்படியா  அவசரக்குடுக்கையாட்டம்  போய்  மாட்டிக்குவாங்க ? 


4  ஜிம்  பாடி  போலீஸ்  ட்ரெய்னிங்  உள்ள  ஆஜானுபாவக  சரத்  குமாரை  தொப்பை  உள்ள  எந்த   ஜிம் அறிமுகமே  இல்லாத  வில்லன்  நெ2  அனாயசமாக  சமாளிப்பது , தாக்குவது  நம்பும்படி  இல்லை 


5  வில்லன்  நெ2  ஆஸ்துமா  பிராப்ளத்தால்  அவதிப்படுவது  போல்  நடித்து  வாசலில்  நிற்கும்  காரில்  அஸ்தாலின்  இன்ஹெலர்  இருக்கிறது  என  நாயகியை  காருக்கு  வரவழைக்க  திட்டம்  போடுவது  ஓக்கே , ரூம்  பாய்  அல்லது  ஹோட்டல்  பாய்  யாரையாவது  அனுப்பாமல்  நாயகி  நைட்  டைமில் வெளியே  போவது  நம்பும்படி  இல்லை 


6  வில்லன்  நெ2  பெண்களாகக்கொலை  செய்ய  அவனது  மனைவி  ஒரு  காரணம்  அது  ஏற்றுக்கொள்ளும்படி  இருக்கிற்து , அனால்  வில்லன்  நெ  1   தன்  அப்பாவின்  மீது  உள்ள  கோபத்தில்  பயத்தில்  ஏன்  பெண்களைக்கொலை  செய்ய  வேண்டும் ?> முதல்  கொலை  டீச்சர்  அது  ஓக்கே   ஆனால்  மற்ற  கொலைகள்  அப்பா  சாயலில்  உள்ள  ஆண்களைத்தானே  லாஜிக்  படி  கொன்றிருக்க  வேண்டும் ? 


7 வில்லன்கள்  இருவரும்  பண  பலமோ  , அரசியல்  செல்வாக்கோ  இல்லாத்வர்கள், அப்படி  இருக்க  யார்  தானாக முன்  வந்து  நான்  தான்  குற்றவாளி  என  சரண்டர்  ஆகிறார்? அதற்கான  டீட்டெய்லிங்  மிஸ்சிங்


8  வில்லன்  நெ 2  வில்லன்  நெ 1 இடம்  பயிற்சி  பெறுகிறான், ஐடியாக்கள்  தெரிந்து  கொள்கிறான். அப்போ  சாட்சியான  வில்லன்  நெ 1  ஐ ஏன்  வில்லன்  நெ 2  கொலை  செய்யவில்லை ? அவனது  முதல்  கொலையே  அதாகத்தானே  இருக்க  வேண்டும்? வ்ரம்  கொடுத்த  சிவன்  தலையில்  கை  வைக்கும்  பத்மாசூரன்  கதை  போல 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ/ஏசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  அவசியம்  காண  வேண்டிய  பிரமாதமான  படம், செம  த்ரில்லிங்  ரேட்டிங் 3.5 / 5 


Por Thozhil
Theatrical release poster
Directed byVignesh Raja
Written by
  • Alfred Prakash
  • Vignesh Raja
Produced by
  • Sameer Nair
  • Deepak Segal
  • Mukesh R. Mehta
  • C. V. Sarathi
  • Poonam Mehra
  • Sandeep Mehra
Starring
CinematographyKalaiselvan Sivaji
Edited bySreejith Sarang
Music byJakes Bejoy
Production
companies
Distributed bySakthi Film Factory
Release date
  • 9 June 2023
Running time
147 minutes
CountryIndia
LanguageTamil
Box office50 crore[1]

0 comments: