Monday, October 23, 2023

KERALA CRIME FILES (2023) - மலையாளம் கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம்( க்ரைம் ட்ராமா) @ டிஸ்னி + ஹாட் ஸ்டார்

 


2019 ஆம்  ஆண்டு  ரிலீஸ்  ஆன  ஜூன்  என்ற  சூப்பர்  டூப்பர் ஹிட்  படம் தான்  இயக்குநர்  அஹ்மத்  கபீரின்  முதல்  படம் . 2020 ஆம் ஆண்டு  இன்ஷா  அல்லா  என்ற  பட்ம்  2021 ஆ ஆண்டு  மதுரம்  என்ற  ரொமாண்டிக்  மூவி  என  இவர்  இயக்கிய  மூன்று  படங்களும்  விமர்சன  ரீதியாக பாராட்டுக்களைக் குவித்தவை 


இந்த  இயக்குநர்  வெப்  சீரிசாக  இயக்கும்  முதல்   டி வி சீரியல்  இது 


  மொத்தம் ஆறு  எபிசோடுகள், ஒவ்வொன்றும்  27 நிமிடங்கள்  டூ 30 நிமிடங்கள்  கொண்டவை , ஆக  மொத்தம்  2  மணி  நேரம் 50  நிமிடங்கள்  இருந்தால்  ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம். மிக  மிக  சுவராஸ்யமான  வழக்கு  இது ,சினிமாத்தனங்கள் , ஹீரோ  பில்டப் , மொக்கை  காமெடி  டிராக் , நம்ப  முடியாத  ஃபைட்  சீன்ஸ்  எதுவும்  இல்லாத  நேர்மையான  படம் 


       ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் , அவருக்குக்கீழ்  சில  போலீஸ்  காரர்கள் . ஒரு  கொலைக்கேஸ். ஒரு  லாட்ஜில்   விலைமாது   கொலை செய்யப்பட்டு  இருக்கிறார். அவர்  கூட  வந்தவன் யார்  என்ற  விசாரணை  நடக்கிறது 


 அந்த  விசாரணையில்  ஒரு  ஆள்  எதேச்சையாக  சிக்குகிறான். ஆனால்  அவன்  கொலைகாரன்  இல்லை . தொழிற்சங்கத்தில்  தொடர்பு  உள்ளவன். அரசியல்  செல்வாக்கும்  உள்ளவன். இவன்  ஒரு  பெண்ணை துன்புறூத்தி  இருக்கிறான். சாமார்த்தியமாக  அந்த  கேசில்  அவனை  மாட்ட  வைத்தாயிற்று.


 ஆனால்  இப்போது  கொலைகாரனைப்பிடிக்க  வேண்டும் . அவன்  மாறு  கண் குறைபாடு  உள்ளவன்  என்பது  மட்டும்  தெரியும், அவனிடம்  செல்  ஃபோன்  இல்லை ,  அதனால்  ஆளை  ட்ரேஸ்  பண்ணவே  முடியவில்லை . அவன்  செல்லும்  இடம்  எல்லாம்  போலியான  முகவரி  தான்  தந்து  வைத்திருக்கிறான். அவனை  எப்படிப்பிடித்தார்கள்  என்பதே  இந்த  வெப்  சீரிசின்  மீதி  திரைக்கதை


நாயகன்  ஆக அஜூ  வர்கீஸ் . இவர்  வ்ழக்கமாக  காமெடி  ரோல்  செய்பவர் . சீரியசான  அடக்கி  வாசிக்கும்  நாயகன்  ரோல்., பொறுப்பை  உணர்ந்து  அண்டர்ப்ளே  ஆக்டிங்  செய்து  இருக்கிறார்


அவரது  ஹையர்  ஆஃபீசர்  ஆக   லால்.  தெனாவெட்டான  பாத்திர  வடிவமைப்பு  இவருடையது . உடல்  மொழி  அபாரம் 


கொலையாளி  ஆக  சைஜூ  கேரக்டரில்  ஸ்ரீஜித்  மகாதேவன்  3  மணி  நேரப்படத்தில்  3  நிமிடக்காட்சிகள்  தான்  வருகிறார்  என்றாலும்  படம்  முழுக்க  அவரைத்தேடும்  பணி  தான்  என்பதால்  முக்கிய  கதாபாத்திரம்  ஆகிறார் 


ஹெசாம்  அப்துல்  வகாப்  தான்  இசை ., பின்னணி இசையில்  பட்டையைக்கிளப்பி  இருக்கிறார்.  விறுவிறுப்பான  மூட்  க்ரியேட்  செய்கிறது 


ஜிதுவின்  ஒளிப்பதிவு  அருமை .  லாங்க்  ஷாட் , க்ளோசப்  ஷாட்  அனைத்தும்  க்ரிஸ்டல்  கிளியராகப்பதிவு  செய்திருக்கிறார்


மகேசின்  எடிட்டிங்  கனகச்சிதம் ., ஒரு   காட்சி  கூட  போர்  அடிக்கவில்லை . தேவை  இல்லாத  காட்சி  என  எதுவும்  இல்லை , இதுதான்  ஒரு  எடிட்டரின்  வெற்றி


சபாஷ்  டைரக்டர் (அஹ்மத்  கபீர்) 


1  ஹையர்  ஆஃபீசர்  தன்  மகளுடன்  அடிக்கடி  பேசுவது . திருமணம்  ஆன  ஒரே  வாரத்தில்  ட்யூட்டிக்கு  வந்த  நாயகன்  அடிக்கடி  தன்  மனைவியுடன்  கொஞ்சுவது . நிறைமாத  கர்ப்பிணியை  விட்டு  ட்யூட்டிக்கு  வந்த  கான்ஸ்டபிள்  மனைவியுடன்  உரையாடுவது இந்த   மூன்று போர்சன்களும்  மெயின்  கதைக்கு  சம்ப்ந்தம்  இல்லை  என்றாலும்  ரசிக்கும்படி  இருக்கிறது . விறுவிறுப்பாக  டென்சன்  ஆக  செல்லும்  திரைக்கதையில்  ஒரு  ரிலாக்சேசன்  ஆக  அமைகிறது 


2   கொலையாளி  என  நாயகன்  சந்தேகப்பட்ட  ஆள்  உண்மையில்  கொலைகாரன்   இல்லை  என்றதும்  அதில்  இருந்து  தப்பிக்க  அவன்  மேல்  ஏதாவது  ஒரு  கேசைப்போடாமல்  நிஜமாகவே  அவன்  செய்த  தப்பின்  அடிப்படை  முகாந்திரம்  ஆராய்ந்து  கேஸ்  போட்டு  மாட்ட  வைப்பது   அபாரமான  காட்சி 


3  வில்லனின்  காதலி  ஆன  சிசிலி  என்ற  கேரக்டர்  டிசைன்  அவரது  நடிப்பு  அனைத்தும்  அருமை 


4  விலைமாதுவாக  வரும்  பெண்  வில்லனை டென்சன்  ஆகும்படி  பிரியாணி  வங்கிட்டு  வா, பீர்  வாங்கிட்டு  வா  என  வேலைக்காரன்  போல்  அலைய  விடும்  காட்சியும் வில்லனின்  காதலியை  எகத்தாளம்  பேசப்போய்  கொலை  ஆக  நேர்வதும்  கச்சிதமான  திரைக்கதை  அமைப்பு 


 ரசித்த  வசனங்கள் 1 ரொம்ப  நேரமா  அவ  ஹேண்ட்  பேக்கைப்பார்த்துட்டு  இருக்கியே? அவ  ஜாதகம்  ஏதாவது  அங்கே  இருக்கா?

 

2  சார், வீட்டுக்குப்போய்  என்ன பண்ணப்போறீங்க ? இங்கே தான்  சாப்பாடு, தீனி  எல்லாம்  இருக்கே?

 

 அது  உனக்கு கல்யாணம்  ஆன  பின்  தெரியும்

 

3  திருடங்க  மட்டும்  இல்லை , போலீஸ்காரங்க  கூட  அப்பப்ப  பொய்  பேச  வேண்டீருக்குல்ல?

 

4  போலீஸ்  வண்டில  ஏறுனா  அப்புறம்  எனக்குப்பொண்ணுக்கிடைக்காது  சார்

 

நான்  கூட  டெய்லி  இதே  வண்டில  தான் எர்றேன், எனக்கு  பொண்ணு  கிடைக்காதா?

 

நீங்க  போலீஸ்

 

5  இந்தக்கொலைக்கேஸ்  முடிய  ரொம்ப  லேட்  ஆகுமோ?

 

 ஆமா,  செத்தது சினிமா  நடிகையோ, அரசியல்வாதியோ  இல்லையே>

 

6 பொண்டாட்டி கர்ப்பமா  இருக்கும்போதுதானே? ஆண்கள்  வேட்டைல  இறங்குவாங்க ?


7 கல்யாணத்துக்குப்பிறகு  நம்ம  விஷயத்தை  தீர்மானிக்கறது  நாமாத்தான்  இருக்கனும், வர்றவன், போறவன்  எல்லாம்  அட்வைஸ்  பண்ணுவான்


8  என்  தம்பி  என்ன  தப்பு  பண்ணான்னு  தெரியலை, ஆனா  ஒண்ணு  மட்டும்  உறுதி , கொலையே  பண்ணி  இருந்தாலும்  அவன்  பயந்து  ஓட  மாட்டான் ஒளிய  மாட்டான், அங்கே  தான்  இருப்பான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  எல்லா  இடங்களிலும்  போலியான  முகவரி தான்  தருகிறான் . அபப்டி  இருக்க  தன்னைப்பற்றி உண்மையான  முகவரி  அறிந்த  இடம்  , ஆள்   இவற்றைக்கண்டு  கொள்ளாமல்  இருப்பது  ஏன் ? அங்கே  வந்து  ஆதாரத்தை  அழிக்காதது  ஏன் ? 


2  வில்லனின்  காதலியை  தப்பாகப்பேசிய  ஹோட்டல்  ஓனரை  அடிக்கடி  ஃபோனில்  மிரட்டும்  வில்லன்  அதன்  மூலம்  தான்  மாட்டிக்கொள்வோம் என்பதை  ஏன்  உணரவில்லை ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  18 +  காட்சிகள்  இல்லை சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சினிமாத்தனம்  எதுவும்  இல்லாத  ஒரு  க்ரைம்  கேஸ்  எப்படி  துப்பறிகிறார்கள்  என்பதை  அருமையாக  விளக்கும்  படம் .    ஸ்லோ  பர்ன்  த்ரில்லர்  ரசிகர்கள்  அவசியம்  பார்க்க  வேண்டிய  படம்  ரேட்டிங் 3.25 / 5 


Kerala Crime Files
GenreCrime drama
Police procedural
Written byAshiq Aimar
Directed byAhammed Khabeer
StarringAju Varghese
Lal
Music byHesham Abdul Wahab
Country of originIndia
Original languageMalayalam
No. of seasons1
No. of episodes6
Production
ProducerRahul Riji Nair
CinematographyJithin Stanislaus
EditorMahesh Bhuvanend
Release
Original networkDisney+ Hotstar
Original release23 June 2023

0 comments: