Sunday, October 22, 2023

SASIYUM SAKUNTHALAYUM(2023) - சசியும் , சகுந்தலையும் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

    


ஒரு  புத்தகத்தோட  அட்டையை  வெச்சு  அந்த  புத்தகத்தை  எடை  போடக்கூடாது  என்பார்கள் , அதே  மாதிரி  தான்  படத்தின்  டைட்டிலையும், போஸ்டர்  டிசைனையும்  வைத்து  அந்தப்படத்தின்  தரத்தை  நாமாக  ஒரு  முடிவு  எடுக்கக்கூடாது

ஸ்பாய்லர்  அலெர்ட்


1980 களில்  கதை  நடக்கிறது 


ஒரு  கிராமம். அங்கே டுட்டோரியல் காலேஜில்  ஆங்கில  ஆசிரியர்  ஆக  நாயகனும், கணக்கு  டீச்சர்  ஆக  நாயகியும்  பணி  புரிகிறார்கள் . நாயகிக்கு  நாயகன்  மீது  காதல்  அதை  வெளிப்படுத்தும்போது  நாயகன்  தான்  பிற்படுத்தபப்ட்ட  வகுப்பை  சேர்ந்தவன்  என சொல்லி  ஆரம்பத்தில்  மறுக்கிறான், பிறகு  ஏற்றுக்கொள்கிறான்


இந்தக்கதைல  இரண்டு  வில்லன்கள் . முதல்  வில்லன்  டுட்டோரியல்  காலேஜ்  ஓனர். அவன்  நாயகிக்கு  ரூட்  விடுகிறான். இரண்டாவது  வில்லன்  அந்த  ஊரில்  பணம்  படைத்தவன், வட்டிக்குப்பணம்  கொடுத்து  சம்பாதிப்பவன்


இரண்டு  வில்லன்களும்  சேர்ந்து  நாயகனை  அவமானப்படுத்துகிறார்கள் . இவங்க  சங்காத்தமே  வேண்டாம்  என  நாயகன்  வேறு ஊருக்குப்போய்  செட்டில்  ஆகிறான். பணம்  சம்பாதித்து  மீண்டும்  அதே  ஊருக்கு வருகிறான். புதியதாக   டுட்டோரியல்  காலேஜ்  ஆரம்பிக்கிறான்


 வில்லன்    நெ 1 -னை  வில்லன்  நெ2  ஜெயிலுக்கு  அனுப்புகிறான். இதற்குப்பின்  நாயகன், நாயகி  சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை  மன தைரியம்  உள்ளவர்கள்  முழுப்படத்தையும்  பார்த்துத்தெரிந்து  கொள்க 


நாயகன்  ஆக , நாயகி  ஆக  நடித்தவர்கள்  நாடகத்தனமான  நடிப்பை வழங்கி  இருக்கிறார்கள் , டயலாக்  டெலிவரியும்  மோசம் 


 வில்லனின்  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கும்போது ஆடியன்சுக்கு  வில்லன்  மீது  வெறுப்பு  வர  வேண்டும், அருவெறுப்பு  வருவது  போல  இயக்குநர்  வடிவமைத்திருக்கிறார். வில்லன்  வாயை  ஒரு  மாதிரி  வைத்துக்கொண்டு  எப்போப்பாரு  எச்சில்  துப்புவது  போல  காட்சிகள் , குமட்டுகிறது


134  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  எடிட்  செய்து  இருக்கிறார்கள் . ஆர்ட்  டைரக்சன், இசை , ஒளிப்பதிவு  எல்லாம்  சுமார்  ரகம்  தான் 


சபாஷ்  டைரக்டர் (ஆர் எஸ்  விமல் )\

 1  இந்த  டப்பாபடத்தைக்கூட  ஒரு  ரேட்  கொடுத்து  அமேசான் பிரைம், சிம்ப்ளி சவுத்  ஓடிடி  தளங்களை  வாங்க  வைத்த  சாமார்த்தியம்


2  திரைக்கதையில்  எந்த  ஒரு  சுவராஸ்யமோ , நம்பகத்தன்மையோ  இல்லாமல்  மனம்  போனபடி  ஷூட்டிங்க்கு  போன  திறமை 


  ரசித்த  வசனங்கள் 


1  நண்பனின்  எதிரி  நமக்கும்  எதிரி , எதிரியின்  எதிரி  நமக்கு  நண்பன் 


(  இது  காலண்டரில்  இருந்து  சுட்டிருக்கிறார்கள் )


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 டுட்டோரியல்  காலேஜ்  ல  மொத்த  மாணவர்களே 30  பேர்  தான்  இருப்பாங்க ,அ துக்கு  6  பேர்  டீச்சர்ஸ்   சம்பளம்  கொடுத்து  கட்டுபடி  ஆகுமா? 


2   நாலஞ்சு  தேங்கா ய்  இருக்கு  சந்தைல  கொண்டு  போய்  வித்துட்டு  வர்றேன்னு  நாயகியின்  அம்மா  கிளம்பும்போது பைல  ரெண்டு  தேங்காய்  தான்  கொண்டு  போறாங்க . சந்தைக்குப்போகும்  நடைக்கூலிக்குக்கூட கட்டாதே?


3  இடை வேளை  ட்விஸ்ட்டுக்காக  நாயகன்  ஒரு மாணவியின்  பொய்யான  குற்றசாட்டுக்கு ஆளாகி  ஊர்  மக்களிடம்  கெட்ட  பேர்  வாங்கும்  சீன்  நம்ப  முடியாத  நாடகத்தனம 


4  நாயகன்  நாயகிக்கு  கடிதம்  எழுதும்போது  நாயகி  வீட்டு  அட்ரஸ்க்கு  அனுப்பாம  டுட்டோரியல்  காலேஜ்  அட்ரஸ்க்கு  அனுப்பறான், அப்போதானே  வில்லன்  கைல  அது சிக்கும் ? 


5  இருக்கற  இரண்டு  வில்லன்கள்  போதாது  என  மூன்றாவதா  ஒரு  வில்லனை  நாயகியின்  அப்பா ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகி  வருவதாகக்காட்டுகிறார்கள். நம்ப  முடியாத  வில்லத்தனம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - இந்தப்படத்தில்  கண்ட்டெண்ட்டே  இல்லை , அடல்ட்  கண்ட்டெண்ட்  மட்டும்  எங்கே  இருக்கப்போகுது ? யூ  தான் சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பட்த்தின்  இயக்குநர்  வெற்றிப்படம்  எல்லாம்  கொடுத்திருக்காராம், ஆனால்  படு  குப்பையான  படத்தை  எப்படி  இயக்கினார்  என  தெரியவில்லை .  ரொம்ப  நாடகத்தனமான டப்பா  படம் . ரேட்டிங் மைனஸ்  0.75 / 5 

0 comments: