Monday, October 02, 2023

அந்தமான் காதலி (1978) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ யூ ட்யூப்

 


   முக்தா  சீனிவாசன்  இயக்கத்தில்  சிவாஜி  நடித்த  படம் . மெகா  ஹிட்  பாட்டுக்கள்  இரண்டு  இதில்  உண்டு , பாட்டுக்காகவே  படம்  பார்த்தேன்.இது  தெலுங்கில் அந்தமான்  அம்மயி  என்ற  பெயரில்  ரீமேக்கும்  செய்யபப்ட்டது. 1977  நவம்பர்  10  தீபாவளி  அண்றே  படம்  ரிலீஸ்  ஆக  வேண்டியது , ஆனால்  அதே  நாளில்  சிவாஜியின்  இன்னொரு படம்  ஆன  அண்ணன்  ஒரு  கோயில்  ரிலீஸ்  ஆனதால் 1978 குடியரசு  தினத்தன்று இது  ரிலீஸ்  ஆகி  வெற்றி பெற்றது 


     ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 -  நாயகன்  நாயகியைக்காதலித்து  காந்தர்வ  முறைப்படி  மணம்  புரிந்து  நாயகி  கர்ப்பம்  ஆக  இருக்கிறார். நாயகி  உடல்  நலம்  குறைவாக  இருந்ததால்  டாக்டரை  அழைத்து  வர  டாக்டர்  வீட்டுக்கே  சென்று  அவரை  அழைக்க  அப்போது  நடந்த  ஒரு  விவாதத்தில்  டாக்டரை  அடிக்க  அவர்  மயக்கம்  ஆகிறார். ஆனால்  தான்  அவரை  கொலை  செய்து  விட்டதாக  அஞ்சி  நாயகன்  அந்த  இடத்தை  விட்டே  ஓடி  விடுகிறார். அந்தமான்  தீவை  விட்டு  வெளியேறி  மிக  சிரமம்  ஆன  வாழ்க்கை  வாழ்கிறார்


சம்பவம் 2 - ஒரு  கோடீஸ்வரர்  நாயகனைக்கண்டு  இரக்கப்பட்டு  தத்து  எடுத்து  அவரை  வளர்க்கிறார். அவரது  கம்பெனிக்கு  நாயகனை   எம் டி  ஆக்குகிறார். அவரது  ஒரே  மகளை  நாயகன்  பொறுப்பில்  வளர்க்க  விட்டு  விட்டு  அவர்  இறந்து  விடுகிறார்


சம்பவ,ம்  3  நாயகனின் கார்டியன்  கம்  தொழில்  அதிபர் மறைவுக்குப்பின்  அவரது  மகளை  கண்ணும்  கருத்துமாக  வளர்த்து  வருகிறார். அந்த  மகள்  கலையில்  ஆர்வம்  உள்ளவர். அரிதான  சிலை  ஒன்று  ஏலத்துக்கு  வருவதை  அறிந்து  அந்த  சிலை  தனக்கு  வேண்டும்  என  அடம்  பிடிக்கிறார். ஆனால்  எலம்  நடக்க  இருப்பது  அந்த மான்  தீவில் . 25  வருடங்களுக்குப்பின்  அங்கே  செல்லும்  நாயகன்  தன்  மனைவியைத்தேடுகிறார்


சம்பவ,ம்4  -  தன்   எஜமானின்  மகள்  அந்த  சிலை  வடிவமைத்த  சிற்பக்கலைஞனைக்காதலிக்கிறாள், அவனையே  மணம்  முடிக்க  விரும்புகிறார். அந்தக்கலைஞனின்  லட்சியமோ  தன்  அம்மாவை  ஏமாற்றி  விட்டு  ஓடிப்போன  தன்  அப்பாவைக்கண்டுபிடித்த  பின்  தான்  திருமணம்  என  இருக்கிறார். அதே  போல்  சிற்பக்கலைஞனின்  தாய்  மாமாவும்  பழி  வாங்கும்  உணர்வுடன்  காத்திருக்கிறார்


சம்பவம்,5  -  நாயகன்  தன்  மனைவியை  சந்திக்கிறார்/  ஆனால்  மனைவியோ  தன்  மகனுக்கு  இவர்  தான்  அப்பா  என்பதை  உலகத்துக்கு  சொல்ல  மாட்டேன்  என்கிறார். சொன்னால்  தன்  அண்ணன்  தன்  கணவனைக்கொன்று  விடுவார்  என  பயபப்டுகிறார் \


 இதற்குப்பின்  நாயகன்  எடுக்கும்  முடிவு  தான்  க்ளைமாக்ஸ்


 நாயகன்  ஆக  சிவாஜி  கம்பீரமாக  நடித்திருக்கிறார்.  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் . குறிப்பாக  க்ளைமாக்ஸ்  காட்சி . 


 நாயகி  ஆக  சுஜாதா  பாந்தமாக  நடித்திருக்கிறார். . மகனாக  சந்திர  மோகன்  சுமார்  ரகம் .  தொழில்  அதிபரின்  மகளாக  கவிதா  ஓக்கே  ரகம் 

 டாக்டர்  ஆக  தேங்காய்  சீனிவாசன் , அவர்  மனைவியாக  மனோரமா  காமெடி  டிராக்  சுமார் தான்


நாயகியின்  அண்ணனாக  செந்தாமரை  மாறுவேடப்போட்டிக்காரர்  மாதிரி  ஒரு  கொடூர  மேக்கப் 


திரைக்கதை  எழுதி  இருப்பது  ஏஸ் பிரகாசம். பின்  பாதி  இழுவை ., க்ளைமாக்ஸ்   சொதப்பல் 

எம் எஸ்  விஸ்வநாதன்  இஒசையில்  பாடல்கள்  கலக்கல்  ரகம் 



சபாஷ்  டைரக்டர்  (      முக்தா  சீனிவாசன் ) 


1    இடைவேளையோடு  முடிந்து  விட்ட  கதையை  ஜவ்வாக  இழுத்து  க்ளைமாக்ஸ்  வரை  ஆடியன்சை  கட்டிப்போட்ட  சாமார்த்தியம் 


2   காலத்தால்  அழிக்க  முடியாத  பாடல்களை  கம்போஸ்  செய்தது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   அந்தமானைப்பாருங்கள்  அழகு 

2  நினைவாலே  சிலை  செய்து  உனக்காக  வைத்தேன் 

3  பணம்  என்னடா\

4   அடி  லீலா 


  ரசித்த  வசனங்கள் 


1 பணச்சந்தைல  ரொம்ப  மலிவா  விலை  போவதே  இந்தக்காதல் தான் 

2   ட்ரீட்மெண்ட்  கொடுக்கும்  வரை  டாக்டர்  தெய்வம் , பில்  பார்க்கும்போது பணப்பேய்


3  ஏழைங்க  வீட்டில்  கோழிக்கறின்னா   ஒண்ணு  ஏழைக்குக்காய்ச்சலா  இருக்கும், அல்லது  கோழி  செத்திருக்கும் 


4 வாழ்க்கைல  மறக்க  முடியாதது  , மறுக்க  முடியாதது  காதல்  மட்டும்தான்


5  இல்லைங்கறதை  ரகசியமாத்தான்  சொல்லனும், இருக்குங்கறதை  பட்டவர்த்தனமாய்  சொல்லலாம் 


6  அதிக  சந்தோஷம்  ஆபத்துனு  சொல்வாங்க \\


7 பிரிந்த  உறவுகள்  ஒன்று  சேர்வது  துக்க  வீட்லயும், கல்யாண  வீட்லயும் தான் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  தபால் காரர்  25  வருசமா  ஒரே  ஊரில்  ஒரே  ஏரியாவில்  ட்ரான்ஸ்ஃபர், பிரமோஷன்  எதுவும்  இல்லாமல்  வேலை பார்ப்பதை  உலக  அளவில்  இப்போதுதான்  பார்க்கிறேன்


2  நாயகி  ஆன  சுஜாதா  பூஜை  ரூமில்  வெறும்  காலுடன் இருக்க  நாயகன்  ஆன  சிவாஜி  செருப்புக்கால்களுடன் , ஷூ கால்களுடன்  இருக்கிறாரே? டைரக்டர்  தான்  கவனிக்கலை. உலகம்  போற்றூம்  நடிகர்  திலகமுமா  கவனிக்கலை ?


3   டைனிங்  டேபிள்  மேனர்ஸ்  தெரியாத  ஆளாக  நாயகன்  இருக்காரே? வாஷ் பேஷனில்  போய்  கை  கழுவாமல்  டேபிள் லயே  ஒரு  பாத்திரத்தில்  கை  கழுவறார்


4   தன்  குழந்தையின்  பேரைச்சொல்ல  நாயகி  மறுக்கிறார். சொன்னால்  தன்  அண்ணன்  கண்டு பிடித்து  பழி  வாங்குவாராம். அப்போ  ஸ்கூலில்  சேர்க்கும்போது  குழந்தைக்கு   என்ன  இனிஷியல் ? எக்ஸ் ? 


5    நாயகியின்  அண்ணன்  செந்தாமரை  25  வருசமா  வேலைக்கும்போகாம  வெட்டிக்கும்  போகாம  தண்டமா  சுத்திட்டு  இருக்கார் , பூவாவுக்கு  என்ன  பண்றார் ?

6  நாயகன்  டாக்டரை  அடித்தவுடன்  இறந்ததாக  நினைக்கிறார். ஒரே  அடியில்  ஆள்  இறக்க  அவர்  என்ன  கடோத்கஜனா? 


7  நாயகன்  பயந்து  போய்  ஓடியது  சரி . பண பலம்  வந்த  பின்  ஆள்  விட்டு  நாயகியை  தேடி  இருக்கலாமே?  நாயகி  ஃபோட்டோவை  பத்திரிக்கையில்  வெளியிட்டு  தேடி  இருக்கலாமே? 

8   நாயகனும், நாயகியும் 25  வருடங்களுக்குப்பின்  முதல்  முறையாக  சந்திக்கிறார்கள் .  பார்த்ததும்  அட்;லீஸ்ட்  கட்டிக்கூடப்பிடிக்கவில்லை ,  டைனிங்  டேபிளில்  உட்கார்ந்து  சாப்பிடுகிறார். சாப்பாட்டு  ராமன்  கூட  அப்படிப்பண்ண  மாட்டான் . பெட்ரூம்  தான்  போவான் 

9   நாயகனும், நாயகியும்  சந்தித்த  உடன்  படம்  முடிந்து  விடுகிறது ., அதுக்குப்பின்  ஜவ்வாக  இழுத்து  விட்டார்கள் 


10  க்ளைமாக்ஸ்  காட்சி  எல்லாம்  மடத்தனமான   கற்பனை . வெடி  விழும் இடத்துக்குப்போவாராம் , முகம்  எல்லாம்  ரத்தக்காயம்  ஆகுமாம், அடுத்த  சீன்லயே  மழு  மழு  கன்னத்துடன்  சிரிப்பாராம். தழும்பு  ஆறவே  மறையவே  12  வருசம்  ஆகுமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பாடல்களுக்காக  பார்க்கலாம்,  க்ளைமாக்ஸ்  சொதப்பல்களைக்கண்டு  மனம்  விட்டு  சிரிக்கலாம். ரேட்டிங் 2.25 / 5 


Andaman Kadhali
Poster
Directed byMuktha Srinivasan
Written byA. S. Prakasam
Produced byMuktha Ramaswamy
StarringSivaji Ganesan
Sujatha
CinematographyR. Sampath
Edited byV. P. Krishnan
Music byM. S. Viswanathan
Production
company
Muktha Films
Release date
  • 26 January 1978
CountryIndia
LanguageTamil

0 comments: