Wednesday, October 25, 2023

கருமேகங்கள் கலைகின்றன (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

 


    1990 ல்  ஒளிப்பதிவாளராக  சினிமாவில்  இறங்கிய  ஒளி  ஓவியர் தங்கர்பச்சான் 1997ல்  காலமெல்லாம்  காதல்  வாழ்க  படத்துக்கான  சிறந்த  ஒளிப்பதிவாளருக்கான  தமிழக  அரசின்  விருதைப்பெற்றார்,2002 ஆம்  ஆண்டு அழகி  மெகா ஹிட்  படம் இயக்கினார். அதே  ஆண்டில்  சொல்ல  மறந்த  கதை  ஹிட் 2004ல் வந்த  தென்றல்  சுமார்  ரகம்.2005ல்  அவரே  நாயகன்  ஆக  நடித்து  இயக்கிய சிதம்பரத்தில்  ஒரு  அப்பாசாமி  ஃபிளாப் 2007ல்  ரிலீஸ்  ஆன  பள்ளிக்கூடம்  சுமராக  ஓடியது . தமிழக  அரசின்  சிறந்த  இயக்குநருக்கான  விருதைப்பெற்றது 2007ல்  ரிலீஸ் ஆன  ஒன்பது  ரூபாய்  நோட்டு  சுமாராகப்போனாலும்  இந்த  நாவல்  1996லியே விருதுகளை  வென்ற  நாவல் .2012ல்  அம்மாவின்  கை பேசி  சுமார்  ரகம்.2023ல்  ரிலீஸ்  ஆன  இந்த  கருமேகங்கள்  கலைகின்றன  எப்படி  இருக்கிறது  என  பார்ப்போம்

    ஸ்பாய்லர்  அலெர்ட்


இரண்டு  வெவ்வேறு  சிறுகதைகளை  படம்  பிடித்து  இரண்டுக்கும்  ஒரு  தொடர்பு  ஏற்படுத்தி  வித்தியாசமான  ஹைப்பர்  லிங்க்  ஸ்ட்ரோயாக  தர  ,முயன்றிருக்க்கிறார்


முதல்  கதை 


 நாயகன்  ஓய்வு  பெற்ற  நீதிபதி. இவர்  நீதி , நேர்மை  தவறாதவர். நீதிபதியாகப்பணி  ஆற்றிய  போது  பல  வழக்குகளில்  நேர்மையான  தீர்ப்பை  வழங்கி  மக்களிடம்  நன்  மதிப்பைப்பெற்றவர். இவருக்கு  மூன்று  வாரிசுகள். இரு  மகன்கள் , ஒரு  மகள் , ஒரு  மகன், ஒரு  மகள்  இருவரும்  வெளிநாட்டில்  பணி. அவ்வப்போது  அலைபேசியில்  உரையாடுவதுடன்  சரி .இன்னொரு  மகன்  பிரபல  கிரிமினல்  லாயர் . நாயகன்  நீதிபதியாக  இருந்தபோது  எந்த  நபரை  குற்றவாளி  என  தீர்ப்பளித்தாரோ  அந்த  நபருக்கு  ஆதரவாக  பணத்துக்காக  வாதிடும்  வ்க்கீல் தான்   நாயகனின்  மகன்


 இதனால்  இருவருக்கும்  கருத்து  மோதல்  ஏற்படுகிறது . ஒரே  வீட்டில்  இருந்தாலும்  இருவரும்  10  வ்ருடங்களாகப்பேசிக்கொள்வதில்லை இப்படி  இருக்கின்ற தருணத்தில்  நாயகனுக்கு  75  வது  பிறந்த  நாள்  விழா  நடக்கிறது . அப்போது  நாயகன்  கையில்  ஒரு  கடிதம்  கிடைக்கிறது . 13  வருடங்களுக்கு  முன் அவருக்கு  வந்த  கடிதம்  தாமதமாக  இப்போது  தான்  கிடைக்கிறது. நாயகன்  வக்கீலாக  இருந்தபோது ஒரு  பெண்ணுடன்  தொடர்பு  ஏற்பட்டு  அவள்  கர்ப்பம்  ஆகிறாள். ஆனால்  அப்போது  இருந்த  சூழலில்  நாயகனால்  அவரை  வெளிப்படையாக  மனைவியாக  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை 


இப்போது  அந்த  முன்னாள்  காதலி  எழுதிய  கடிதத்தில்  நமக்குப்பிறந்த  மகள் இப்போது  ஜெயிலில்  இருக்கிறாள் , நீங்கள்  தான்  அவ்ரைப்பார்த்துக்கொள்ள  வேண்டும் , நீங்கள்  தான்  அப்பா  என  தெரியப்படுத்தக்கூடாது  என  கடிதத்தில்  இருக்கிறது . நாயகன்  அந்த  மகளைத்தேடிச்செல்கிறார். அந்த  மகள்  அவரை  ஏற்றுக்கொண்டாரா? அவரது  முன்னாள்  காதலி  என்ன  ஆனார்  என்பது  மீதி  திரைக்கதை 


இரண்டாம்  கதை 


 நாயகன்  ஹோட்டலில்  புரோட்டா  மாஸ்டர் . அவர்  வேலை  செய்யும்  ஹோட்டலுக்கு  எதிரே ஒரு  பெண்  அபலையாக  வருகிறாள். அவளுக்கு  அடைக்கலம்  தருகிறார்.அந்தப்பெண்  ஆல்ரெடி  கர்ப்பம். வீட்டை  விட்டு  ஓடி  வந்துதிருமணம்  செய்து  கொண்ட  காதலன்  சொத்துக்கு  ஆசைப்பட்டு இவளைக்கைவிட்டதால்  மனம்  நொந்த  பெண்ணுக்கு  நாயகன்  அடைக்கலம்  கொடுத்து  இருக்கிறார்


 அந்தப்பெண்ணுக்கு  குழந்தை  பிறக்கிறது . அந்தக்குழந்தை  வளர்ந்து 6  வயது  ஆகும்  வரை  நாயகனைத்தான்  அப்பா  என  அழைக்கிறது . நாயகனின்  வளர்ப்பு  மகளாக  இருக்கும்  சிறுமியின்  அம்மாவுக்கும் , நாயகனுக்கும்  எந்த  ஒரு  பிசிக்கல்  ரிலேஷன் ஷிப்பும்  இல்லை 


 அந்தப்பெண்ணின்  கணவன்  திடீர்  என  திருந்தி  வந்து  அந்தப்பெண்ணை  தன்னுடன்  அழைத்துச்செல்கிறான். ஆனால்  குழந்தை  நாயகனைத்தான்  அப்பா  என  அழைக்கிறது . ஒரிஜினல்  அப்பாவை  ஏற்றுக்கொள்ளவில்லை 


இதற்குப்பின்  இவர்கள்  வாழ்க்கையில்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை  


முதல்  கதையின்  நாயகன்  ஆக  இயக்குநர்  பாரதிராஜா  நடித்திருக்கிறார். அவரது  வயது  முதிர்ந்த  பருவம்  மிகப்பெரிய  பிளஸ் . த்ள்ளாமை , இயலாமை  இரண்டுமே  அவருக்கு  அனுதாப  வாக்குகளைப்பெறச்செய்கிறது. பல  இடங்களில்  சிறப்பாக  நடித்திருந்தாலும்  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்  அல்லது  செயற்கையான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


அவரது  மகன் கிரிமினல்  லாயர்  ஆக  இயக்குநர்  கவுதம்  வசுதேவ்  மேனன் அந்த  கேரக்டருக்கு  சரியாக  ஃபிட்  ஆகவில்லை . வழக்கமாக  போலீஸ்  ஆஃபீசராக  கலக்கல்  நடிப்பை  வெளிப்படுத்தும் இவர்  இந்த  லாயர்  கேரக்டரில்  ஏனோ  தடுமாறுகிறார்


நாயகனின்  மகளாக  கண்மணி  கேரக்டரில்  வரும்  அருவி  புகழ்  அதிதி  பாலன்  சிறப்பான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருந்தாலும் அவரது  அதீத  ஒப்பனை  லேசாக  உறுத்துகிறது


இரண்டாவது  கதையின்  நாயகன்  ஆக  யோகிபாபு  வழக்கமான  தன்  மொக்கக்காமெடி டிராக்கை  விட்டு  விலகி  சிறப்பான  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். ஆனால்  ஆங்காங்கே   டிரேட்  மார்க்  காமெடி  பண்றேன்  பேர்வழி  என  மொக்கை  போடுவது  எரிச்சல் , அவரது  வளர்ப்பு  மகளாக  வரும்  சிறுமி நடிப்பு  அருமை .சிறுமியின்  அம்மாக  வருபவர் கூட கச்சிதமாக  நடித்திருக்கிறார்


ஜி  வி  பிர்காஷ்  இசையில்  செவ்வந்திப்பூவே  செமஹிட்  மெலோடி , மற்ற  பாடல்களும்  ஓக்கே  ரகம், பிஜிஎம்   அருமை பி  லெனின்  எடிட்டிங்கில்  படம்  இரண்டரை  மணி  நேரம்  ஓடுகிறது என்  கே  ஏகாம்பரம்  ஒளிப்பதிவில்  கலைநயம்  சொட்டுகிறது . 


சபாஷ்  டைரக்டர் (தங்கர்பச்சான்) 

1  படத்தின்  முதல்  பிளஸ்  பாயிண்ட்டே  ஒளிப்பதிவு  தான் . பிரமாதமாக  காட்சிகள்  கண்  முன்  விரிகின்றன. குறிப்பாக  பாடல்  காட்சிகளில்  லாங்க்  ஷாட்கள் , தாமரைக்குளம் , கடல்  காட்சிகள்  கண்ணில்  ஒத்திக்கொள்ளலாம்  போல  இருந்தது 


2  பாரதி ராஜா   ,யோகிபாபு இருவரின்  நடிப்பும்  படத்துக்கு பக்க  பலம


3  பாரதிராஜாவின்  முன்னாள்  காதலி  யார்  என்பதைக்காட்டாமலேயே  கதை  சொன்ன  விதம்  அசத்தல்


செம  ஹிட்  சாங்க்


 செவ்வந்திப்பூவே   செவ்வந்திப்பூவே   ரசித்த  வசனங்கள் 


1  இது ஏன்  இவ்ளோ  அழகா  இருக்கு ?

 பழசுன்னாலே  தனி  அழகு தான் 


2 உன்  பேரென்ன?


 நமஸ்காரம்


இனிமே  உன்  பேரு  வணக்கம் 


3   ஓனர்  இருக்காரா?


 ஒனர்  இல்லாததால்தான்  அவன்  அந்த  சீட்ல  உக்காந்திருக்கான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வளர்ப்பு அப்பாவான  யோகி பாபு  ஒரு  காட்சியில்  மகளுக்கு  திருட  சொல்லிக்கொடுக்கிறார். அதை  ஊக்குவிக்கிறார். பாடல்  காட்சியில்  காமெடிக்காக  வைக்கப்பட்டாலும்  அது  மோசமான  முன்னுதாரணம் 

2 புரோட்டா  மாஸ்டர்  ஆன  யோகிபாபு  ஒரு  காட்சியில்  இட்லிகளைநாய்க்குப்போடுவது  போல்  தூர  வீசி  பரிமாறுகிறார். காமெடி  என  நினைத்து  எரிச்சல்  ஊட்டி  இருக்கிறார்கள் 

3   ஒரு  ஜட்ஜின்    காதலி  தனக்குப்பிறந்த  மகள்  ஒரு  கேசில்  சிக்கி இருக்கிறார்  என்றதும்  உடனடியாக  ஜட்ஜை  தொடர்பு  கொண்டு  உதவி  கேட்காதது  ஏன் ?

4  கண்மணியாக  வரும்  அதிதி  பாலன்  செய்யும்  என்கவுண்ட்டர்  காட்சி  சினிமாத்தனம் . தெளிவாக , யதார்த்தமாக  செல்லும்  திரைக்கதையில்  சொதப்பல்  சீன்

5  ஜட்ஜ்  ஆக  வரும்  பாரதி  ராஜா  தான்  செய்யாத  தப்புக்காக  அனைவரிடமும்  மன்னிப்புக்கேட்கும்  காட்சி  நெருடல் . அதே  போல்  தான்  செய்த  தப்புக்காக  தன்  மகளிடம்  மன்னிப்புக்கேட்க  காலில்  விடும்  காட்சியும்  ஓவர்  டோஸ் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பிரமாதமாக  வந்திருக்க  வேண்டிய  ஒரு  நல்ல  கதை இயக்குநரின்  கவனக்குறைவால்  சராசரி   ஆன  படம்  ஆக  வ்ந்திருக்கிறது .  ரேட்டிங்  3/ 5 


Karumegangal Kalaigindrana
Directed byThangar Bachan
Starring
CinematographyN. K. Ekambaram
Edited byB. Lenin
Music byG. V. Prakash Kumar
Production
company
Riota Media
Release date
  • 1 September 2023
CountryIndia
LanguageTamil

0 comments: