Saturday, September 23, 2023

WHAT HAPPENED TO MONDAY (2017) -ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன்)@ அமேசான் பிரைம் த்ரில்லர் ) @

 


மேஜிக்  ரைட்டர்  அமரர்  சுஜாதா  கதை  திரைக்கதை  எழுத  கமர்ஷியல்  காக்ட்டெயில்  கிங் + உல்டா நயகன்  அட்லீ  இயக்க  லேடி  சூப்பர்  ஸ்டார்  நயன்  தாரா  ஏழு  வேடங்களில்  நடிக்க  ஒரு  தமிழ்ப்படம்  எடுத்தால்  எப்படி  இருக்கும் ? அது  மாதிரி  ஒரு மாறுபட்ட  அனுபவத்தை  இந்தப்படம்   தந்தது 


மூலக்கதை  எழுதப்பட்டபோது  இது  ஒரு  ஆணுக்கான  அதாவது  நாயகனுக்கான  படமாகத்தான்  இருந்தது , ஆனால்  இயக்குநர்  அதை  நாயகி  ஆக  மாற்றினார் . அவரது  ஐடியா  நன்றாக  ஒர்க் அவுட்  ஆனது . பல  மொழிகளில்  மொழி பெயர்க்கப்பட்டது .  செவன்  சிஸ்டர்ஸ்  என்ற  டைட்டிலில்  சில  நாடுகளில்  ரிலீஸ்  ஆனது


  ஸ்பாய்லர்  அலெர்ட்


கதைக்களம் 2043  டூ 2073ல்  நடப்பதாக  அமைகிறது . உலக  மக்கள்  தொகை  நாளுக்கு  நாள்  அதிகரிக்க  எல்லோருக்கும்  இருக்க  இடம் , உண்ண  உணவு  வழங்குவதில்  சிரமம்  ஏறட்டது . ஏகப்பட்ட  நெரிசல் . இதனால்  அரசாங்கம்  ஒரு  சட்டத்தை  இயற்றியது. அதாவது ஒரு  குடும்பத்தில் / ஒரு  தம்பதிக்கு  ஒரு  குழந்தை  மட்டுமே. சைல்டு  அல்கேஷன்  பரோ  என்ற  அமைப்பு  உருவாகிறது 


நாம்  இருவர்  நமக்கு இருவர் , நாமே  இருவர்  நமக்கு  எதற்கு  ஒருவர்  என்றெல்லாம்  ஒரு  கட்டத்தில்  மீம்ஸ்  வந்தது . அது  போல  மக்கள்  தொகையைக்கட்டுப்படுத்த  இந்த சட்டம்  கடுமையாக  அமலுக்கு  வந்தது. அதன்படி  ஒரு  தம்பதிக்கு  இரு  குழந்தைகள்  இருந்தால்  அல்லது  இரட்டைக்குழந்தை  பிறந்தால்  ஒரு  குழந்தையை  அரசாங்கம்  எடுத்துக்கொள்ளும். இத்ற்கு  குழந்தையின்  அம்மா  சம்மதம்  இல்லை  என்றாலும்  வலுக்கட்டாயம்  ஆக பிடுங்கப்படும்.  இப்போது  ஆதார்  கார்டு  உள்ளது  போல  ஒரு  பிரேஸ்லெட் போல  ஒவ்வொருவருக்கும்  வழங்கப்படும், அதில்  அனைத்து  விபரங்களும்  அடங்கி  இருக்கும்.  டோல்கேட்  போல  ஆங்காங்கே  செக்கிங்  நடக்கும். அதில்  இந்த  பிரேஸ்லெட்டை  காட்ட  வேண்டும்


இப்படிப்பட்ட  சூழலில்  ஒரு பெண்ணுக்கு  ஒரே  பிரசவத்தில்  7  குழந்தைகள் பிறக்கின்றன். பிரசவம்  முடிந்ததும்  அம்மா  இறந்து  விட்டாள் , அப்பா  யார்  என்று  தெரியாது. பெண்ணின்  அப்பா  அதாவது  குழந்தைகளின்  தாத்தா  அவர்களை  வளர்க்கிறார். வீட்டில்  ரகசிய  அறை  உருவாக்கி  அதில்  7  பேரையும்  அரசாங்கத்துக்குத்தெரியாமல்  வளர்க்கிறார். தன்  பெண்ணுக்கு  ஒரு  குழந்தை  மட்டுமே  பிறந்தது  என  கணக்குக்காட்டி  ஒரு  பிரேஸ்லெட்  வாங்கிக்கொள்கிறார்.  அந்த  பிரேஸ்லெட்டை  ஸ்கேன்  பண்ணி  அதே  போல்  போலியாக  ஆறு  உருவாக்கி  மீதி  ஆறு  பேருக்கும்  வழங்கி  விடுகிறார்


7  பேருக்கும்   ஏழு கிழமைகளின்  பெயர்  வைக்கப்படுகிறது .  எல்லோரும்  ஒரே  முக  சாயலில்  இருப்பதால்  ஸ்கூலுக்கோ ,  ஷாப்பிங்க்  காம்ப்ளெக்ஸ்க்கோ  போகும்போது  தினசரி  ஒருவர்  மட்டும்  அந்த  அடையாள  பிரேஸ்லெட்டை  அணிந்து  கொண்டு  வெளியே  போவார். வீட்டுக்கு  வந்து  அன்று  யார்  யாரை  சந்தித்தார்? என்ன  பேசினார்  என்பதை  சொல்லி  விடுவார். அடுத்த  நாள்  இன்னொருவர்  செல்வார். அவர்  அப்படியே  அதை  மெயிண்ட்டெயின்  செய்வார் 


30  வருடஙக்ள்  கழித்து   .....


 தாத்தா  இப்போது உயிருடன்  இல்லை. மிஸ்  மண்டே  ஆஃபீஸ்க்குப்போகிறார் இவர்  ஒரு  வங்கி  ஊழியர் .  அங்கே  லிஃப்டில்  ஒருவருடன்  வாக்கு வாதம்  நடக்கிறது . ஆஃபீசில்  யாருக்கு  பிரமோஷன் ?   என்பது  பற்றி  பேசிக்கொள்கிறார்கள் . நாயகிக்கு தான்  அதிக  வாய்ப்புகள்  இருக்கிறது


 அன்று  மாலை  மிஸ்  மண்டே  வீட்டுக்கு  வரவில்லை . மிஸ்  மண்டே  க்கு  என்ன  ஆனது ?   என்பதை  அறிய  அடுத்த  நாள்  மிஸ்  ட்யூஸ்டே  வெளியே  செல்கிறார்.மிஸ்  மண்டே  கடைசியாக  யாரை  சந்தித்தார்  என்பதை  விசாரிக்கிறார். ஒரு  க்ளூ  கிடைக்கிறது.


 இதற்கு  இடையே  அரசாங்கத்துக்கு  7  சகோதரிகள்  பற்றி  எப்படியோ  தெரிந்து  வீட்டுக்கு  போலீஸ்  வருகிறது . ஒரு  ஆக்சன்  அதகளம்  நடக்கிறது .


 மேலே  சொன்னவை  எல்லாம்  படம்  போட்டு 10  நிமிடங்களில்  முடிந்து  விடும், இதற்குப்பின்  நிகழும்  அதிரடித்திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக  ரூமி  ரபாஸ்  கலக்கி  இருக்கிறார். ஏழு  விதமான  ஹேர்  ஸ்டைல் , கெட்டப் , உடல்  மொழி  என  கமல் , விக்ரம் , எடி  மர்ஃபிக்கு  சவால்  விடும்  கேரக்டர். அனாயசமாக  நடித்துள்ளார் 


சைல்டு  அலக்கேஷன்  பரோ  எனப்படும் சி ஏ பி  அமைப்பின்  தலைவராக க்ளென்  க்ளோஸ்  கிட்டத்தட்ட  வில்லி  ரோலில்  வருகிறார். நயவஞ்சகம்  தெறிக்கும்  கண்கள் பிளஸ் 


ஏழு  பெண்களின்  தாத்தாவாக  வில்லியம்  டஃபோ  நடித்திருக்கிறார்.  சிறப்பான  குணச்சித்திர  நடிப்பு 


மார்வென்  கென்சாரி  மிஸ்  மண்டே வின்  காதலராக  நடித்துள்ளார். குட்  ஆக்டிங் 


மேக்ஸ் பாட்கின் , கெரி  வில்லியம்ஸ்  இருவரும்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்கள் . எப்படி  எல்லாம் யோசிக்கறாங்க  என்ற  பிரமிப்பை  எற்படுத்துகிறார்கள் 


டோம்மி  வெர்க்கோலா  தான்  படத்தின்  இயக்குநர் .  பிரித்து மேய்ந்து  விட்டார். பர  பர  என  காட்சிகள்  பற்றிக்கொண்டு  ஆக்சன்  த்ரில்லராக  ஸ்பீடாக  நகர்த்திக்கொண்டு  சென்றதில்  இவருக்கு  வெற்றி 

சபாஷ்  டைரக்டர் (டோம்மி  வெர்க்கோலா )

1   ஏழு  சிறுமிகளில்  ஒருத்தி  வெளியே  போகும்போது  ஒரு  விரலை  முறித்துக்கொண்டு  வ்ந்ததால்  அனைத்து  சிறுமிகளுக்கும்  அதே  போல்  விரல்  முறிவு  ஏற்படுத்தும் காட்சி  கொடூரம்  என்றாலும்  அந்த  ஐடியா  வியக்க  வைக்கிறது 


2  மிஸ்  மண்டே  வின்  காதலனை  சரசம்  ஆடி    அவரது  பிரேஸ்லெட்டில்  இருந்து  தகவ்ல்களை  ட்ரான்ஸ்ஃப்ர்  செய்யும்  காட்சி 


3    சேசிங்  காட்சிகள் , ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  செம  விறுவிறுப்பு 


4  மிஸ்  ட்யூஸ் டே  வின்  ஒரு  கண்ணை  மட்டும்  அரசாங்கம்  கதவைத்திறக்கும்  பாஸ்வோர்டு  ஆக  யூஸ்  பண்ணும்  காட்சி  பயங்கரம் 


 ரசித்த  வசனங்கள் 


1   போராட்டமோ , தியாகமோ  இல்லாம  வெற்றி  கிடைக்காது 


2   அவளைக்காப்பாற்ற  உன்  கிட்டே  ஏதாவது  திட்டம்  இருக்கா?


 நான்  தான்  அந்த  திட்டமே!

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வாரா  வாரம்  திங்கட்கிழமை  மட்டும்  தான்  நாம்  சந்திக்க  முடியும்  என்று  மிஸ்  மண்டே  தன்  காதலனிடம்  சொன்னபோது  அவன்  ஏன்  என்று  கேட்க வில்லையா? சந்தேகம்  கொள்ளவில்லையா?


2  மிஸ்  மண்டே  தன்  காதலன்  பற்றி  சகோதரிகளிடம்  சொல்லவில்லை . மீதி  ஆறு  பேரில்  யாராவது  ஒருவர்  தன்  காதலன்  கண்ணில்  பட்டு  விட்டால்  என்ன  ஆகும்  என்பதை  மிஸ்  மண்டே  சிந்திக்கவில்லையா? அதற்கு  மாற்று  ஏற்பாடு  ஏதும்  செய்ய வில்லையா? 


3  மிஸ்  மண்டே  மாதிரி  நடித்து  அவள்  காதலனுடன்  வேறு  சகோதரி  சரசம்  கொள்ளும் போது  அந்த  மாற்றம்  காதலனுக்கு  ஏன்  தெரியவில்லை ? ஏன்  எனில்  மிஸ்  மண்டே  உடன்  காதலன்  அடிக்கடி  அல்லது  வாரம்  ஒரு  முறை  உறவு  வைத்துக்கொண்டவன் , ஆனால்  மிஸ்  மண்டே  போல  நடித்து  அவனுடன்  சரசம்  கொள்ளும்  பெண்  இன்னொரு  சகோதரி. இவள்  கன்னிப்பெண். அந்த  வித்தியாசம்  ஏன்  காதலனுக்குத்தெரியவில்லை ? 


4  மிஸ்  மண்டே  அப்ரூவர்  ஆகி  அரசாங்கத்திடம்  தன்  சகோதரிகள்  பற்றி  தகவல்  சொல்வது  சுயநலத்துக்காக.. தான்  மட்டும்  தினசரி  வெளி  உலகில்  நடமாட  வேண்டும்  என்பதற்காக , ஆனால்  அவரிடம்  அவர்  தான்  மூத்த  சகோதரி  என்பதற்கு  என்ன  ஆதாரம்  இருக்கிறது ?  விஷயம்  தெரிந்த  ஒரே  நபர்  தாத்தா  தான்  அவர்  உயிருடன்  இல்லை. அப்படி  இருக்க  அரசாங்கத்திடம் தான்  தான்  மூத்தவர்  என்பதை  எப்படி  நிரூபிப்பார் ? 


5  சதித்திட்டம்  போடும்  மிஸ்  மண்டே  தன்  காதலனுக்கு  அது  பற்றி  தகவல்  தராதது  ஏன் ?  வேறு  சகோதரி  தன்னைப்போல்  காதலனிடம்  நடந்து  கொள்வார்  என்பதை  ஏன்  யூகிக்க  வில்லை ? 


6  மிஸ்  மண்டே  கர்ப்பம்  ஆனதால்  அவரது  க்ருவை   ஆர்ட்டிஃபிசியலாக  அரசின்  மேற்பார்வையில்  வளர்க்க  முடிவெடுக்கிறார். அது  இரட்டைக்கரு . அதை  மட்டும்  அரசு  எப்படி ஒத்துக்கொண்டது ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  கதைக்கு அவசியம்  என்பதால்  ஒரே  ஒரு  காட்சியில்  18+  இருக்கிறது சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட  கதை  அம்சம்  கொண்ட  படம் . இது  விரைவில்  இங்கே  வலம்  வரலாம், அதற்கு  முன்  ஒரிஜினலைக்கண்டு  கொள்ளுங்கள் . ரேட்டிங் 3/ 5 What Happened to Monday
Netflix release poster
Directed byTommy Wirkola
Written by
Produced by
Starring
CinematographyJosé David Montero
Edited byMartin Stoltz
Music byChristian Wibe
Production
companies
  • SND Films
  • Vendôme Pictures
  • Title Media
  • Raffaella Productions
  • Nexus Factory
  • Umedia
  • uFund
Distributed by
Release dates
Running time
123 minutes[4]
Countries
LanguageEnglish
Budget$20 million[6]
Box office$28 million[7][2]

0 comments: