Saturday, September 02, 2023

3.33 (2021) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர்) @ ஆஹா தமிழ் ஓடிடி


 டைட்டில்  வித்தியாசமாக  இருந்ததால்  ஆஹா  தமிழ்  ஓடிடி  சப்ஸ்க்ரிப்சன்  செய்தபின் அவர்கள்  காட்டிய  முதல்  ரெக்கமண்டேஷன்  படம்  என்பதால்  மட்டுமே  இதைப்பார்க்க  நேரிட்டது / நமக்கு  தெரியாத  முகங்களே  அதிகம்


   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் தன்  அம்மா, அக்கா  உடன்  ஒரு  வீட்டுக்கு  குடி  வருகிறார். நாயகன்  குழந்தையாகப்பிறந்த  போது  டைம்  அதிகாலை  3.33  அதனால்  அந்த  வீட்டில்  தினசரி  அதிகாலை  3.33  அப்போ  சில  அசம்பாவிதங்கள்  நடக்கின்றன. அமானுஷ்ய  சக்தி  ஒன்று  அந்த  வீட்டில்  இருப்பதாக  நாயகன்  உணர்கிறான். இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதிக்கதை 


நாயகன்  ஆக  சாண்டி. இவர்  ஒரு  டான்ஸ்  மாஸ்டராம். விஜய்  ஆண்ட்டனி  போல  உணர்ச்சிகளை  வெளிக்காட்டாத  முகம்., சோகம்,  கோபம்  என  எல்லாவற்றுக்கும்  ஒரே  மாதிரி  முகத்தை  வைத்துக்கொள்கிறார்


கவுதம்  வாசுதேவ்  மேனன்  நவீன  பேயோட்டியாக  வருகிறார். பேராநார்மல்  இன்வெஸ்டிகேட்டராம். வ்ழக்கம்  போல  தமிழிங்கிலீஷில்  பேசுகிறார்


நாயகனின்  அம்மாவாக  ரமா, அக்காவாக  ரேஷ்மா , காதலியாக  ஷ்ருதி  செல்வம்  மூவரும்  கச்சிதமான  நடிப்பு

பாடல்கள்  இல்லாதது , மொக்கைக்காமெடி  டிராக்  இல்லாதது  பெரிய  ஆறுதல் 


படத்தின்  பெரிய  பிளஸ்  90  நிமிடங்களில்  முடித்தது சதீஷ்  மனோகரனின்  ஒளிப்பதிவு  ஓக்கே  ரகம் ஹர்ச வர்தன்  ராமேஷ்வர்  இசையில்  பிஜிஎம்  மிரட்டவில்லை  என்றாலும்  ஆங்காங்கே  பயமுறுத்துகிறது 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  நம்பிக்கை  சந்துரு. என்ன  சொல்ல  வருகிறோம்  என்பதில்  இவருக்கே  நம்பிக்கை  இல்லை  போல 


சபாஷ்  டைரக்டர் 


1  திகில்  படங்களின்  ஸ்பெஷல்  அயிட்டங்களான  ஜம்ப்  ஸ்கேர்  காட்சிகளான  பாத்ரூம்  கதவுக்குக்கீழே  குனிந்து  பார்க்கும்போது  தோன்றும்  சாத்தானின்  கால் , மொட்டை  மாடியில்  காய  வைத்த  துணிக்குப்பின்  மர்ம  உருவம்  இரண்டு  காட்சிகளும்  கலக்கல் ரகம்


2  டைட்டில்  ப்ளேஸ்மெண்ட்  பக்கா 

3  ஆறு  நிமிடங்களே  வந்தாலும்  கவுத்ம்  வாசுதேவ்  மேனன்  கேரக்டர்  டிசைனும்,  அவரது  கச்சிதமான  நடிப்பும் 

 

ரசித்த  வசனங்கள் 


1  பொதுவா  ஒரு  மனுசனுக்கு  கடைசி வரை  துணையா  வருவது  தனிமை  மட்டுமே!

2  நமக்கும்  நாம  பிறந்த  நேரத்துக்கும்  ஏதோ  ஒரு  சம்பந்தம்  இருக்கும். சிலருக்கு அது  லக்கி  நெம்பராகவும்  அமையும் 

3 தீய  சக்தியை  அழிக்க  முடியாது , அடக்க  மட்டும்தான்  முடியும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 சுட்ட தோசையை  எடுத்து  பரிமாறும்போது இன்னொரு  கரண்டி  மாவை கல்லில்  ஊற்றி  விட்டுத்தா  எடுப்பார்கள் , ஆனால்  இதில்  உல்டா. தோசையை  பரிமாறி டயலாக்  பேசிட்டு  பின்  வந்து  மாவை  ஊற்றுகிறார்கள் . கல்  காயாதா?

2 பாதிரியார்  சிலுவையை  வலது  கையில்  வைத்துத்தானே  ஆசீர்வாதம்  செய்வார்கள் ? சரவணன்  இடது கையில்  வைத்திருக்கிறார்

3   பெண்  பேய்  ஒன்று  வீட்டில்  இருப்பது  நாயகனின்  மனப்பிரமையா? நிஜமாகவே  பேய்  இருக்கிறதா? என்பதில்  தெளிவான  விளக்கம்  இல்லை 

4 க்ளைமாக்ஸ்  மகா  சொதப்பல் 

5  ராட்சசன்  மெகா  ஹிட்  ஆன  படம், அந்தப்பட  பிஜிஎம்  மை  பட்டி  டிங்கரிங்  செய்தது  ஏனோ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ/ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  திரைக்கதையில்  தெளிவில்லாத  சும்மா  அரைகுறையாக  எழுதப்பட்ட  பலவீனமான  ஸ்ரிப்ட். ரேட்டிங் 1.5 / 5 


3:33
Theatrical film poster
Directed byNambikkai Chandru
Written byNambikkai Chandru
Produced byT. Jeevitha Kishore
StarringSandy
Gautham Vasudev Menon
Shruthi Selvam
CinematographySathish Manoharan
Edited byDeepak S Dwaraknath
Music byHarshavardhan Rameshwar
Production
company
Bamboo Trees Productions
Release date
  • 10 December 2021
CountryIndia
LanguageTamil

0 comments: