Friday, September 29, 2023

யாதும் ஊரே யாவரும் கேளிர் (2023)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா) @ அமேசான் பிரைம்

   


  இலங்கை  அகதி  தன்  அடையாளத்துக்காகப்பாடுபடும்  கதை  தான்  இது . சொல்ல  வந்து  கருத்து  பாராட்டத்தக்கதே, ஆனால்  கமர்ஷியல்  எலிமெண்ட்ஸ்  சேர்த்துகிறேன்  என  மெயின்  கதைக்கு  சப்போர்ட்டாக  இருக்கும்  என  நினைத்து  இயக்குநர்  சேர்த்த  நாயகி  போர்சன் , வில்லன்  போர்சன்  இரண்டும் பலவீனமாக  அமைந்து  விட்டது


   ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - இலங்கை  அகதியான  ஒரு  பெண்ணை  போலீஸ்  விசாரிக்கும்போது  அத்து  மீறி  அவள்  துணிகளைக்களைகிறது. அப்போது  உடன்  இருந்த  தம்பி  கிருபா  அந்த  போலீஸ்  ஆஃபீசரை  சுட்டுக்கொல்கிறான். அப்போது  ஸ்டேஷன்  வாசலில்  நின்றிருந்த  போலிஸ்  ஆஃபீசரின்  மகன்  உள்ளே  ஓடி  வந்து  உன்னைக்கொல்லாமல்  விட  மாட்டேன்  என  சபதம்  செய்கிறான். சபதம்  செய்தவன் , கொலை  செய்தவன்  இருவரும்   சிறுவர்கள் 


சம்பவம் 2  - நாயகன்  சின்ன  வயதிலேயெ  பெற்றோரை  இழந்த  இலங்கை  அகதி . அபாரமான  இசை  ஆர்வம்  , திறமை  உள்ளவன், அவனுக்கு  இருக்கும்  திரமைக்கு  இங்கிலாந்து  சென்றால்  சிறப்பாக  வாழ்வான்  என  அவனை  வளர்த்த  பாதிரியார்  அவனை  இங்கிலாந்து  செல்லும்  அகதிகள்  குழுவுடன்  அனுப்பி  வைக்கிறார். அந்த  பாதிரியார் அடுத்த  நாள்  நிகழ்ந்த  குண்டு  வெடிப்பில்  இறந்து  விடுகிறார்.இங்கிலாந்து  செல்ல  இருந்த  நாயகனும்  அவன்  உடன்  இருந்தவர்களும்  போலீஸ்  செக்கிங்கில்  கைது  செய்யப்படுகிறார்கள்


பல  வருடங்கள்  கழித்து  நாயகன்  லண்டனில்  நடைபெற  இருக்கும்  இசை  போட்டிக்கு  தன்  பெயரை பதிவு  செய்கிறான். அதில்  கலந்து  கொள்ள  ஐ டி  கார்டு  அவசியம். அந்த  ஐ டிக்காக  அவர்  எதிர்  கொள்ளும்  சவால்களே  மீதிக்கதை 


நாயகன்  ஆக  விஜய்  சேதுபதி . எந்த  பாத்திரம்  கொடுத்தாலும்  தன் இயல்பான  நடிப்பால்  அதில்  பொருந்தி  விடும்  விஜய்  சேதுபதி  இதில்  கொஞ்சம்  தடுமாறி  இருக்கிறார். அவருக்கு  வைக்கப்பட்ட  பொருத்தம்  இல்லாத  விக்  முதல்  மைனஸ் . இலங்கைத்தமிழ்  ஸ்லாங்  சில  இடங்களில்  சாதா  தமிழ்  சில  இடங்களில்  என  குழப்பியது  இரண்டாவது  மைனஸ்


நாயகி  ஆக  மேகா  ஆகாஷ் . அப்பாவை  இழந்த  இவர்  நாயகனை  விரும்புவது  இசைத்திறமையை  வைத்தே  என்று  சொல்லப்பட்டாலும்  அவரது  காதல்  காட்சிகளில்  ஓவர்  ஆக்டிங்  தனம்  தெரிகிறது 


சம்பவம் 1 ல்  பாதிக்கபப்ட்ட  அக்காவாக  கனிகா. சில  காட்சிகள்  தான்  என்றாலும்  சிறப்பான  நடிப்பு . சம்பவம்  1ல்  சபதம்  போடும்  போலீஸ்  ஆஃபீசர்  மகன்  வளர்ந்து  பெரியவன்  ஆனதும்  வில்லன்  ஆகிறானே  அந்த  வில்லனாக  இயக்குநர்  மகிழ்  திருமேனி . செம  வில்லத்தனம் 

கெஸ்ட்  ரோலில் இயக்குநர்  கரு  பழனியப்பன்,  அமரர்  விவேக் ,  ந்டிகர்  ராஜேஷ்  எல்லோரும்  அவரவர்  கேரக்டர்களை  உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 


115  நிமிடங்கள்  டைம்  டியூரெஷன்  வருமாறு  எடிட்டிங்  செய்து  இருக்கிறார்கள் . ஆனால்  மூன்று  மணி  நேரம்  படம்  ஓடுவது  போல  இழுக்கிறது 

நிவாஸ்  கே  பிரசன்னா  தான்  இசை . சேதுபது  படத்துக்குப்பின்  வி சே  உடன்  இணையும்  இரண்டாவது  படம்  இது , ஓக்கே  லெவல்  தான் 

வெற்றிவேல்  மகேந்திரனின்  ஒளிப்பதிவு கண்களை  உறுத்தாத  இயற்கை  வளத்தை  பதிவு  செய்திருக்கிறது

 திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர்  வெங்கட கிருஷ்ண  ரோகாந்த்  

சபாஷ்  டைரக்டர் (வெங்கட கிருஷ்ண  ரோகாந்த்  )

1   குண்டு வெடிப்பில்  தன் இரண்டு  கைகளையும்  இழந்த  போராளிப்பெண்  தன்  கழுத்தில்  இருக்கும்  சயனைடு  குப்பியைக்கடிக்க  முடியாமல்  உதவி  கேட்கும்  காட்சி . அவள்  தற்கொலை  செய்து  கொள்ள  தாம் உதவுகிறோம்  என்பதை உணராமலேயே  உதவி  செய்யும் சிறுவன்   நடிப்பு 

2  சென்சார் பிரச்சனைகள்  வரும்  என  தெரிந்தும்  துணிச்சலாக  அரசாங்கத்தை  விமர்சித்து  எழுதிய  வசனங்கள் 


ரசித்த  வசனங்கள் 

1  ஒரு  போரைத்தொடங்க  நூற்றுக்கணக்கான  காரணங்களை  சொல்லலாம், ஆனால்  போரை  ஏதோ  ஒரு  காரணத்தைச்சொல்லி  நிறுத்துவதுதான்  கடினம் 

2  விசாரிக்ககூட்டிட்டு  வந்துட்டு  என்னை  தண்டிச்சுட்டு  இருக்கீங்க

3  பியானோ  வாசிக்கத்தான்  தெரியும்னு  பார்த்தா  பியானோ  ரிப்பேர்  பண்ணவும்  தெரியுமா? \

பியானோ  க்ளீன்  பண்ணவும்  தெரியும்,  என்ன் ஊர்டா  இது ? பியானோ  வாசிக்கறதை விட  பெரிய  ஆச்சரியம்  பியானோ  ரிப்பேர்  பண்றதுல  இருக்கா?


4  ஐ டி  ப்ரூஃப்  இருந்தாலே  ஒரு  அகதி  ஒரு  ஊர்ல  இருந்து  இன்னொரு  ஊருக்குபோனா  அந்த  ஊர்  போலீஸ்  ஸ்டேஷன்ல  இன்ன வேலைக்காக  இங்கே  வந்திருக்கேன்னு  ரிப்போர்ட்  பண்ணனும்


5  5000 கோடி  10,000  கோடி  ஊழல்  பண்றவனே  ஃபாரீன்  போய்  ஜாலியா  இருக்கான், அகதியா  இருப்பது  அப்படி  ஒன்றும் அர்ஜென்ட்  குற்றம் இல்லை


6  கவுன்சிலரொட  மனைவியோட  மூணாவது  தங்கச்சியைப்பார்க்க  கவுன்சிலர்  வந்திருக்கார். அந்த  மூணாவது  தங்கச்சியும்  கவுன்சிலர்  ஒயிஃப் தான் 

7  சட்டப்படி  உனக்கு  இங்கே  வாழவே  உரிமை  இல்லை , எப்படி  சண்டைபோடுவே?


8  உன்னை  மாதிரி  ஆட்கள்  எல்லாம்  பெருசா  ஜெயிக்கனும், அதுதான்  அடுத்து  வரும்  தலைமுறையினருக்கு  நம்பிக்கை

9  அகதிகளுக்குள்  நடக்கும்  திருமண  பந்தம்  என்பது  வெறும்  சம்பிரதாய  சடங்கா? மேலும்  அகதிகளை  உருவாக்க  நிகழும்  சம்பவமா?  

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கனிகா  தன்  தம்பி  கிருபாவாக  நாயகனை  ஏற்றுக்கொள்ள  ஏன்  தயங்குகிறார்  என்பதை  கடைசி  வரை  யாரிடமும்  சொல்லவில்லை ., என்  தம்பி  மேல  கொலைக்கேஸ்  இருக்கு  என  சொன்னால்  என்ன? 


2 கனிகா  திடீர்  என  நாயகனுக்கு  தன்  தம்பியின்  ஐ டி  யைத்தர  ஒத்துக்கொள்வது  என்ன  காரணத்தால்  என்பதை  விளக்கவில்லை 


3   க்ளைமாக்ஸில்  நாயகன்  என்ன  என்ன மோ  பேசுகிறார். அந்தக்கருத்துகள்  எல்லாம்  ஓக்கே  தான் . இடம்  தான்  பொருந்தவில்லை . அங்கே  அப்படிப்பேச  விடுவார்களா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விஜய் சேதுபதி  ரசிகர்களும் , இலங்கைத்தமிழர்  நலன்  விரும்பிகளும்  பார்க்கலாம். முழுமை  பெறாத  நல்ல  முயற்சி ரேட்டிங் 2.5 / 5 


Yaadhum Oore Yaavarum Kelir
Theatrical release poster
Directed byVenkata Krishna Roghanth
Written byVenkata Krishna Roghanth
Produced byS. Essaki Durai
Starring
CinematographyVetrivel Mahendran
Edited byJohn Abraham
Music byNivas K. Prasanna
Production
company
Chandaraa Arts
Distributed bySakthi Film Factory (Tamil Nadu)
Release date
  • 19 May 2023
CountryIndia
LanguageTamil

0 comments: