Wednesday, September 27, 2023

HER -CHAPTER 1 (2023) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 


 வைஜெயந்தி  ஐபிஎஸ்  முதல்   டெல்லி  கிரைம்  வரை  எத்தனையோ  படங்களில்  நாயகி  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  ந்டித்திருப்பதைப்பார்த்து  ரசித்திருக்கிறோம். எனக்குத்தெரிந்து  போலீஸ்  கம்பீரத்தைக்காட்டிய  நடிகைகளில்  விஜய்சாந்தி , ஆஷா  சரத் ( த்ரிஷ்யம் , பாப்நாசம் _)   ஆகியோர்  முக்கியமானவர்கள் , ஆனால்  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  வரும்  ஒரு  நாயகி  படம்  பூரா  ஸ்மைலிங்க்  ஃபேஸ்லயே  வலம்  வருவதை  இப்போதுதான்  முதல்  முறையாகப்பார்க்கிறேன் 


     ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  போலீஸ்  ஆஃபீசர் ( அசிஸ்டெண்ட்  கமிஷனர் ) . ஓப்பனிங்  சீன்லயே  ஒரு  டபுள்  மர்டர்  கேஸ்  அவர்  பார்வைக்கு  வருகிறது . ஒரு  ஆணும் , பெண்ணும்  ஒரே  இடத்தில்  கொலை  செய்யப்பட்டுக்கிடக்கிறார்கள் . விசாரனையில்  இருவரும்  கணவன்  , மனைவி  அல்ல  என்பது  தெரிய  வருகிறது 


அந்த  ஆணுக்கு  ஆல்ரெடி  ஒரு  மனைவி  உண்டு . அதே  போல்  அந்தப்பெண்ணுக்கு  ஒரு  கணவனும்  , இன்னொரு  காதலனும் உண்டு . இவர்கள்  இருவரும்  கள்ளக்காதலர்கள் 


இன்வெஸ்டிகேஷன்  நடக்கும்போது  ஒரு  திடுக்கிடும்  திருப்பம் . கொலை  செய்யப்பயன்படுத்தப்பட்ட  துப்பாக்கி  போலீஸ்  ஆஃபீசரான  நாயகியின்  துப்பாக்கி . இது  எப்படி  நடந்தது ? என்பதை  அதிர்ச்சியுடன்  ஆராய  முற்படுகிறார்  நாயகி


கொலை  செய்யப்பட்ட  பெண்ணின்  கணவன்  சில  மாதங்களுக்கு  முன்பே  ஒரு  விபத்தில்  இறந்தவன், அதனால்  கொலை  செய்யப்ப்ட்ட   ஆணின்  மனைவி  அல்லது  மனைவியின்  தம்பி  இந்தக்கொலையை  செய்திருக்க  வாய்ப்பு  உண்டு  என்ற  கோணத்தில் கேஸ்  நகர்கிறது . திடுக்கிடும்  திருப்பங்களுடன்  கேஸ்  நிகழ்வதுதான்  கதைக்களம் 


 நாயகி  ஆக  சுஹானி  சர்மா. முகத்தில்  போலீஸ்  கம்பீரம்  குறைவு  என்றாலும்  தன்  உடல்மொழியில்  அதை  சமாளிக்கிறார்.  நீங்க  சிரிக்கும்போது  ரொம்ப  அழகா  இருக்கீங்க  என  யாரோ  அடிகக்டி  அவரிடம்  சொல்லி  இருக்க  வேண்டும், கோபப்பட  வேண்டிய  காட்சியில்  கூட  முத்தாய்ப்பாக  சிரிக்கிறார்


பவன்  இசையில்  ஒரு  டூயட்  பாடல்  கேட்கும்படி  இருக்கிறது . பிஜிஎம்  தெறிக்கிறது , படத்தின்  வேகத்துக்கு  இசை  முக்கியக்காரணம் .  103  நிமிடங்கள்  மட்டுமே  ஓடும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்திருகிறார்  எடிட்டர்  சானக்யா  ரெட்டி விஷ்ணு வின்  ஒளிப்பதிவில்  நாயகிக்கு  ஏகப்பட்ட  க்ளோசப்  ஷாட்கள் 


ஸ்ரீதர்  ஸ்வராகவ்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார் சபாஷ்  டைரக்டர் ( ஸ்ரீதர்  ஸ்வராகவ்)


1  உலக  சினிமா  வரலாற்றில்  முதல்  முறையாக  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  வரும்  நாயகிக்கு  அபிலாஷா , ஷகீலா  ரேஞ்சுக்கு  பாத்ரூம்  குளிய்ல்  காட்சி  மெயின்  கதைக்கு சம்பந்தமே  இல்லாமல்  வைத்த  விதம்  (  நாயகியிடம்  நீங்க  சுத்த  பத்தமான  போலீஸ்  ஆஃபீசர்னு  சிம்பாலிக்  ஷாட்  இதுனு  சமாளித்திருப்பாரோ?) 


2   நாயகி , நாயகியின்  காதலன் , வில்லன்  மூவர்  சம்பந்தப்பட்ட  அந்த  ஃபிளாஸ்பேக்  சீனை  பல  துண்டுக்காட்சிகளாக  சஸ்பென்சாகக்காட்டிய  விதம் 

3  இடைவேளை  ட்விஸ்ட்  மற்றும்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


  ரசித்த  வசனங்கள் 

1   அவங்க  ரெண்டு  பேரும் பர்ஃபெக்ட்  கப்பிள்ஞு தான்  சொல்றாங்க 


 பர்ஃபெக்ட்னு  இங்கே  யாருமே  இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சிசிடி வி  ஃபுட்டேஜ்  ல  கிடைதத  வீடியோ க்ளிப்ல 474 வாகனங்கள்  கிராஸ்  ஆகி  இருக்கு , அதுல  ஒரே  ஒரு  வாகனம்  மட்டும்  ஃபேக்  நெம்பர்  பிளேட்னு  கண்டு  பிடிக்கறாங்க , இதை  கலெக்ட்  பண்ண  எப்படியும் ஒரு  வாரம்  ஆகும், ஒரே  நாளில்  எப்படி  கண்டு  பிடிச்சாங்க ? 


2   படைபலம்  இல்லாமல்  அவ்வளவு  பெரிய  கும்பலைப்பிடிக்க  நாயகி  முயல்வது  அபத்தம், ஏகப்பட்ட  உயிர்  இழப்புக்கள்  வேற 


3  கொலை  செய்யப்பட்ட  பெண்  ஆல்ரெடி  கணவனை  இழந்தவர் , இரண்டு  கள்ளக்காதலர்கள்  வேற  .அ ந்தப்பெண்ணை  ரேப்  பண்ண  வில்லன்  ஆள்  செட்  பண்ணுவது  எதற்கு?  தேவை  இல்லாத  ஆணி 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ / ஏசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குறைவான  ட்யூரேஷனில்  ஒரு  சராசரியான  க்ரைம்  த்ரில்லர்  படம்  பார்க்க  விரும்புபவர்கள் பார்க்கலாம்., இதன்  இரண்டாம்  பாகம்  வெளி  வர  இருந்தாலும்  இது  தனிக்கதை . ரேட்டிங் 2.25 / 5 


Her - Chapter 1
Directed bysreedhar swaraghav
Written bySreedhar Swaraghav
Produced by
  • Deepa Sankuratri
  • Raghu Sankuratri
CinematographyVishnu Besi
Edited byChanakya Reddy Toorupu
Music byPavan
Production
company
  • Double Up Media Private Limited
Release date
  • 21 July 2023
Running time
103 minutes
CountryIndia
LanguageTelugu

0 comments: