Saturday, September 30, 2023

மால் (2023) -தமிழ் - சினிமா விமர்சனம்( ஹைப்பர் லிங்க்டு ஆக்சன் டிராமா) @ ஆஹா தமிழ்

 


    பெரிய  ஹீரோ  மட்டுமல்ல, அறிமுகம்  ஆகி  தெரிந்த  முகங்களே  இல்லாமல்  ரசிக்க  வைக்கும்படி  ஒரு  லோ பட்ஜெட்  படம்  கொடுக்க  முடியும்  என  நிரூபித்து  உள்ளார்கள் .  ஸ்க்ரிப்ட்  தான்  முக்கியம்  என்பதை  மீண்டும்  உணர்த்தும்  படம்  இது 

    ஸ்பாய்லர்  அலெர்ட்


100  கோடி  ரூபாய்  மதிப்புள்ள  ராஜராஜ  சோழன்  நிலையை  கடத்திய  கும்பல்  ஒன்று  அதை  உரிய  பார்ட்டியிடம்  கை  மாற்றி  விட  முனையும் போது  ஏற்படும்  சிக்கல்களும், நிகழ்வுகளும்  தான்  கதையின்  ஒன் லைன்

சம்பவம் 1  -  செயின் பறிப்பு  மாதிரி  சாதாரண  திருட்டு  நடத்தி  வாழ்க்கையை  ஓட்டும் இரு  இளைஞர்கள்  கை  வசம்  ஒரு  லட்ச  ரூபாய்  மதிப்புள்ள  பைக்  ஒன்று செகன்ட்ஸ்  சேல்சில்  கிடைக்கிறது. ஒரு  நாளில்  பணம்  புரட்ட  வேண்டும். அதனால்  போலீஸ்  ஆஃபீசர்  வீட்டில்  கை  வைக்கலா  என  திட்டம்  போடுகிறார்கள் . ஆனால்  அவர்கள்  கன்னம்  வைக்கப்போன  இடத்தில்  கொலை  செய்யப்பட்ட  போலீஸ்  ரத்த  வெள்ளத்தில்  இருக்கிறார் 


 சம்பவம்  2 -  ஒரு  காதல்  ஜோடி . இன்னும்  பரஸ்பரம்  தங்கள்  காதலை  வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. தக்க  தருணம்  பார்த்துக்காத்திருக்கிறார்கள் .பெண்ணுக்கு  ஒரு  தங்க  சங்கிலி பரிசாக  அளிக்கிறார்  அந்த  ஆண் . அப்போது  சம்பவம்  1ல்  வந்த  திருடர்கள்  அந்த  செயினை  பறித்துச்செல்கின்றனர். அந்த  காதல்    ஜோடி  அவர்களையும்  அறியாமல்  சிலை  கடத்தல் கும்பலை  கிராஸ்  செய்கிறார்கள் 


 சம்பவம்  3  -  100  கோடி  ரூபாய்  மதிப்புள்ள  ராஜ  ராஜன்  சிலையை  கை  மாற்றி  விட  வேண்டும் . இதற்காகவே   இருக்கும்  இரு  கேங்க்  களில்  ஒரு  கேங்கை   கடத்தல் காரர்கள்  தேர்ந்தெடுக்க  மீதி  இருக்கும்  இன்னொரு  கேங்க்  இதைத்தடுக்க  நினைக்கிறது . இந்த  இரு  கேங்க்  ஆட்கள்  கண்ணில்  மண்ணைத்தூவி ஒரு  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  அந்த  சிலையை  ஆட்டையைப்போட  நினைக்கிறார் 


 மேலே  சொன்ன  மூன்று  சம்பவங்களும்  ஒரு  புள்ளியில்  இணைவது  எப்படி  அதற்குப்பின்  நிக்ழும்  திருப்பங்கள்  தான்  மீதிக்கதை 


இந்தப்படத்தில்  நாயகன் , நாயகி , வில்லன்  என்று  யாரையும்  சொல்ல  முடியாது . திரைக்கதை  தான்  நாயகன் 


 அனைவரும்  கொடுத்த  பாத்திரத்தை  ஏற்று  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள். போலீஸ்  இன்ஸ்பெக்டர்  ஆக  வருபவர்  மட்டுமே  நமக்குத்தெரிந்த  முகம்


எடிட்டிங்  100  நிமிடங்களில்  ஷார்ட்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் . ஒளிப்பதிவு ., ஆர்ட்  டைரக்சன் , பின்னணி  இசை  எல்லாமே  இது  ஒரு  லோ பட்ஜெட்  படம்  என  பறை  சாற்றுகிறது 

சபாஷ்  டைரக்டர்   (  தினேஷ்  குமரன்) 


1  டிராஃபிக்  கில்  பைக்கில்  வரும்  ஆட்களை  செக்  செய்யும்  போலீஸ் இருவரிடம்  சினிமாக்கு  போய்ட்டு  வர்றீங்களா?  வட  சென்னை  படமா? ஒரு  டயலாக்  சொல்லுங்க  என்றதும்  கெட்ட    வார்த்தை  சொல்லி  விட்டு   பட  டயலாக்  என  கலாய்க்கும்  காட்சி 

2   செயின்  ஸ்னாட்ச்  இளைஞர்களாக  வருபவர்களில் ஒரு  டீன்  ஏஜ்  பையன்  காமெடி  டயலாக்  டெலிவரியில்  மனம்  கவர்கிறார். சினிமாத்தனம்  இல்லாத  நடிப்பு 

3   மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும் சிலை கடத்தல்    சம்பவத்தில்  முக்கிய  ஆள் ஒருவர்  தனது  வெட்டிங்  டே  வைக்கொண்டாட  தன்  மனைவியுடன்  நெருக்கமாக  இருக்கும்  காட்சியை  ஸ்ணீக்  பினீக்  கில்  வெளியிட்டு  பரபரப்பை  கிளப்பிய  லாவகம்


4  அந்த  தம்பதி யைத்தேடி  நான்கு  பேர்  வருவதும்  ஃபோனை  கணவனுக்கு  டயல்  பண்ணி  ஸ்பீக்கரை  ஆன்  பண்ணி  அவர்கள்  பேசுவதை  மனைவி  கணவன்  கேட்கச்செய்யும்  காட்சி  பரபரப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  பெரிய  ஆளு யாரு?ன்னு  பெரிய் ஆளுங்க  கிட்டே கேட்டுட்டுதானே  வந்திருப்பீங்க?

2   சிலையோட  மதிப்பு  30  கோடி. கடத்திட்டு  வந்து  கை  மாத்தி  விட்டா  5%  உங்களுக்கு


10 %  வேணும்


ஓக்கே  10%


 அந்த  5%  போதும், ஆனா  சிலையோட  ஒரிஜினல்  விலைல 


 அது  வந்து  சிலை  மதிப்பு  100 கோடி


3   கூட  வந்தவனுக்கே  துரோகமா?


 இங்கே  எல்லாருமே  மாறி  மாறி  துரோகம்  பண்ணிட்டு  தான்  இருக்காங்க , யார்  முதல்ல  துரோகம்  பண்றாங்களோ  அவன்  மேலே  வர்றான், நான்  மேலே  வரனும்னு  நினைக்கறேன் 


4  நாமெல்லாம்  தேள்  மாதிரி  , திருடனாப்பார்த்துக்கொட்டனும்

 புரியல 


 திருடன்  வீட்டில்  போய்  திருடப்போறோம்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நூறு  கோடி  மதிப்புள்ள  சிலையை  காட்டும்போது  ஒரு  பில்டப்  வேண்டாமா? பேக்கிங்  பக்காவாக  இருக்க  வேண்டாமா?  ஏனோ  தானோ  என  சிலை  இருக்கிறது 


2 ஒரு  காதலன்  தன்  காதலிக்கு  செயின்  கிஃப்ட்  பண்ணி  ப்ரப்போஸ்  பண்ணுவது  ஒரு  தனிமையான  இடத்தில்  தானே  இருக்க  வேண்டும் ? இப்படியா  நடு  ரோட்டில்  ராத்திரி  நேரத்தில்  செயின்  தருவார்கள் ?


3  அந்த  செயின்   3  பவுன்  இருக்கும்,  கிட்டட்தட்ட  ஒன்றரை  லட்ச  ரூபாய் , திருடர்கள்  அதை  பறித்து  சென்றதும்  அந்த  இளைஞனுக்கு  பதட்டமே  வரவில்லை , அவர்களை  துரத்தவும்  முனையவில்லை 


4  போலீஸ்  ஆஃபீசரை  ரவுடி  டீல்  பண்ணுவது  என்னமோ  அவன்  வீட்டு  வேலைக்காரனை  டீல்  செய்வது  போல  இருக்கிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  லோ  பட்ஜெட்  படம்  என்பதால்  ஆதரவு  அளிக்கலாம் . இது  போன்ற  கதைக்கு  முக்கியத்துவம்  கொண்ட  படங்கள்  ஓடினால்தான்  ஹீரோ  டாமினேஷன்  குறையும்.   ரேட்டிங் 2.5 / 5 

0 comments: