Saturday, September 09, 2023

ரைட்டர் (2021) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ட்ராமா ) @ ஆஹா தமிழ் ஓடிடி


  இயக்குநர்  பா  ரஞ்சித்  தயாரிக்கும்  படம்  இது   அதனால்  வழக்கமாக  அவர்  ப்டங்களில்  காணப்படும்  நாயகன்  பிற்படுத்தப்பட்ட  வகுப்பு , வில்லன்  உயர்ந்த  ஜாதி  போன்ற   டெம்ப்ளேட்  காட்சிகள்  உண்டு


ஸ்பாய்லர்  அலெர்ட்.  

சம்பவம் 1 -  சரண்யா  என்னும்   லேடி  போலீஸ்  பிற்படுத்தப்பட்ட  சமூகத்தை  சேர்ந்தவர். அவரது  அப்பா  குதிரை  வண்டி  ஓட்டுநர்  என்பதால்  அவருக்கு  குதிரைப்படையில்  பணியாற்ற  விருப்பம்,  ஹார்ஸ்  ரைடிங்கில்  சிறப்புத்தகுதி  பெற்ற  அவரை  உரிய  பணியில்  அமர்த்தாமல்  உயர்  அதிகாரி  அவர்  சார்ந்த  ஜாதிப்பற்றின்  காரணமாக  சரண்யாவுக்கு கொடுமைகள்  செய்கிறார். இருவருக்கும்  நடந்த  ஒரு  மோதலில்  சரண்யாவைக்கொலை  செய்து  விட்டு  அதை  ஒரு  தற்கொலை  என  கேஸை  க்ளோஸ்  பண்ணி  விடுகிறார்கள் 


 சம்பவம்  2 -   தேவகுமாரன்  என்னும்  இளைஞர்  ஏழ்மையான  குடும்பத்தை  சேர்ந்தவர். காவல்  துறையில்  அடிக்கடி  நிகழும்  தற்கொலைகள் , மரணங்கள்  குறித்து  பிஹெச்டி  படிப்பு  படித்து  வருகிறார். அவர்  படிப்பு  சம்பந்தமான  நிகழ்வில்  சம்பவம்1ல்  குறிபிடப்பட்ட  சரன்யா வின்  மரணமும்  ஒன்று . அந்தக்கேசைத்தோண்டினால்  தான்  மாட்டிக்கொள்வோம்  என  பயந்த  அந்த  உயர்  அதிகாரி   தேவகுமாரனை  பொய்க்கேசில்  பிடித்து  என்கவுண்ட்டரில்  போட்டுத்தள்ள  திட்டம்  இடுகிறார்  


சம்பவம் 3    நாயகன்  போலீஸ்  துறையில்  ஒரு  ரைட்டர்.35  வருடங்கள்  அனுபவம்  மிக்கவர் . போலீஸ்  துறை பணியாளர்களுக்கு  ஒரு  சங்கம்  அமைக்க  வேண்டும் , அவர்களது  உரிமைகளைப்பெற  வேண்டும்  என  [போராடி  வருபவர். இது அவரது  உயர்  அதிகாரிகளுக்குப்பிடிக்கவில்லை . அவரை  வேறு  ஒரு  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  ட்ரான்ஸ்ஃபர்  செய்கிறார்கள் 


அந்த  ஸ்டேஷனில்  சம்பவம்  1ல்  இடம்  பெற்ற  உயர்  அதிகாரிக்கும் இவருக்கும்  க்ளாஸ்  ஆகிறது. இதற்குப்பின்  ஏற்படும்  பரபரப்பான  சம்பவங்கள்தான்  திரைக்கதை 


 நாயகன்  ஆக  ரைட்டர்  ஆக  சமுத்திரக்கனி. வழக்கமாக  இவரை  அட்வைஸ்  அம்புஜம்  ஆகவே  பார்த்துப்பார்த்து  இது  போன்ற  சினிமாத்தனம்  இல்லாத  இயல்பான  கேரக்டர்  டிசைனில்  பார்க்க  அருமையாக  இருக்கிறது  பிரமாதமான  நடிப்பு .குற்ற  உணர்வில்  அவர்  வருந்தும்  காட்சிகள்  பிரமாதம்


பாதிக்கப்பட்ட  இளைஞ்ர்  ஆக  ஹரி  கிருஷ்ணன் ப்ரிதாபம்  அள்ளிக்கொள்ளும்  கேரக்டர். நல்ல  நடிப்பு 


சம்பவம்1 ல்  வரும்  லேடி  போலீஸ்  ஆக  இனியா. குறைவான நேரமே  வந்தாலும்  நிறைவான  நடிப்பு 

உயர்  அதிகாரியாக  வில்லன்  நடிப்பை  அட்டகாசமாக  வழங்கி  இருக்கிறார் கவின்  ஜெ  பாபு .

பாதிக்கப்பட்ட  இளைஞரின்  அண்ணனாக  சுப்ரமணியம்  சிவா  மண்  மணம்  கமழும்  உருக்கமான  நடிப்பு .  கவிதா  பாரதி  இன்ஸ்பெக்டர்  வேடத்தில்  பொருத்தமாக  தொப்பையுடன்  வருகிறார்

கோவிந்த்  வச்ந்தாவின்  இசையில்  இரண்டு  பாடல்கள்  கேட்கும்படி  உள்ளது . பரபரப்பான  காட்சிகளில்  பிஜிஎம்  அருமை 

மணிகண்டன்  சிவக்குமாரின்  எடிட்டிங்கில்  இரண்டரை  மணி  நேரம்  ஓடும்படி  ட்ரிம்  செய்திருக்கிறார்கள் . இன்னும்  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கலாம் 

ப்ரதீப்  காளிராஜாவின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கண்  முன்  நடப்பதைப்போல்  தத்ரூபமாக  இருக்கிறது 


திரைக்கதை  எழுதி இயக்கி  இருப்பவர்  ஃபிராங்க்ளின்  ஜேக்கப் . வித்தியாசமான  பாணியில்  கதை  சொல்லி  இருக்கிறார்  


சபாஷ்  டைரக்டர்  (ஃபிராங்க்ளின்  ஜேக்கப்)

1  போலீஸ்  ஸ்டேஷன்களில்  க்ரைம்  ரேட்  எப்படிகுறைக்கறாங்க? எனும்  ஆரம்பக்கட்டக்காட்சிகள்  அசத்தல்.  6 பவுன்  காணாம  போன  கேஸ்க்கு  3  பவுன்  செயினைக்கொடுத்து  செட்டில்  பண்ணி  புகாரை  வாபஸ்  வாங்க  வைக்கும்  காட்சி  செம 

2   வில்லன்  நாயகன்  கை  மூலமாகவே   அவர்  காப்பாற்ற  நினைக்கும்  அப்பாவியைப்போட்டுத்தள்ள  போடும்  திட்டம்  அருமை 


3   நாயகனின்  உதவியாளராக  கூடவே  வரும்  நபரின்   ஒன்  லைனர்கள்  கலக்கல்  ரகம் ., அசால்ட்  ஆன  டயலாக்  டெலிவரி 


சாங்க்ஸ்


1  கானல்  நீராய் 

2  அடி  அடி  உடம்பு  எட்ட்டி


  ரசித்த  வசனங்கள் 


1  உங்களுக்கு  சர்வீஸ்  எப்போ  சார்  முடியுது ?


 ஏன்? திண்ணை எப்போ  காலியாகும்னு  பார்க்கறியாக்கும் ? 


2  போராடுவதற்கான  யோசனையே  வராம  பண்ணீட்டாங்களே?


3  அதிகாரத்தில்  இருக்கறவங்களுக்கு  வேலை  செய்யத்தான்  போலிஸ்  இருக்கு 


4  படிச்சா  மேலத்தெருவுக்கு  போக  முடியுதோ  இல்லையோ  மேல  வந்துடலாம்


5  திருந்தனும்னு  நினைச்சப்பவே  திருந்த  விட்டிருந்தா  பாதித்திருடனுங்க  மெடல்  வாங்கி  இருப்பாங்க 


6  பெரும்பாலான  திருடர்கள்  போலீசாலதான்  உருவாகறாங்க 

7  போலீஸ்லயும்  நல்லவங்க  இருக்காங்க 

இப்போ  உயிரோட  இருக்காங்களா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  கிட்டத்தட்ட  35  வருடங்கள்  போலீஸ்  ரைட்டர்  ஆக  இருந்த  நாயகன்  க்ரைம்  சீன்  எழுத  பழைய  ஃபைல்களைப்படித்துப்பார்த்து  ரெடி  பண்ணுவது  ஏன் ? ஆன்  த  ஸ்பாட்  ரெடி  பண்ண  வேண்டாமா? 

2   நாயகனுக்கு  இரண்டு  சம்சாரங்கள்  என்பதும்  அது தொடர்பான  சக்களத்தி  மோதலும்  மெயின்  கதைக்கு  சம்பந்தம் இல்லாதவை 

3  சம்பவம் 12,3   என  நான்  வரிசைப்படுத்தியபடி  திரைக்கதை  அமைத்திருந்தால்  தெளிவாக  எல்லோருக்கும்  புரிந்திருக்கும், ஃபிளாஸ்பேக், நான்  லீனியர்  கட்  என  எதுக்கு  சுற்றி  வளைக்க  வேண்டும் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ . விசாரணை  படத்தில்  வருவது  போல  கைதியை  துன்புறுத்தும்  காட்சிகள்  உண்டு சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மலையாளப்படங்கள்  பார்த்துப்பழக்கம்  உள்ளவர்கள்  பார்க்கலாம், பொறுமை  வேண்டும், ஆனால்  நல்ல  படம் . ரேட்டிங்  3 / 5 


Writer
Theatrical release poster
Directed byFranklin Jacob
Written byFranklin Jacob
Produced byPa. Ranjith
Abhayanand Singh
Piiyush Singh
Aditi Anand
StarringSamuthirakani
Hari Krishnan
CinematographyPratheep Kaliraja
Edited byManigandan Sivakumar
Music byGovind Vasantha
Production
companies
Neelam Productions
Golden Ratio Films
Little Red Car Films
Jetty Productions
Release date
  • 24 December 2021
Running time
147 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: