Tuesday, September 19, 2023

குத்துக்கு பத்து (2022) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( காமெடி டிராமா) @ ஆஹா தமிழ்

 


 டெம்ப்பிள்  மங்க்கீஸ்  என்னும்  யூ  ட்யூப்  நிகழ்ச்சியில்  பிரபலம்  ஆன  விஜய் வரதராஜ்  இயக்கிய  வெப்  சீரிஸ்  இது . இதற்குப்பின்  2023ம்  ஆண்டு  பல்லு  படாம  பார்த்துக்க  என்னும்  டப்பாப்படத்தை  இயக்கினார். இந்தத்தொடர்  டார்க்  ஹ்யூமர்  வகையறா  என்றாலும்  குடும்பத்துடன்  பார்க்க  முடியாத  அளவு  ஏராளமான  கெட்ட  வார்த்தைகள்  கொண்டவை 


 இதில் ஏழு  எபிசோடுகள்  . ஒவ்வொன்றும்  சராசரியாக  30  நிமிடங்கள் , ஆக  மொத்தம்  210  நிமிடங்கள்   மூன்றரை  மணி  நேரம்  ஆகும் 


நாயகன், நாயகி , வில்லன் , வில்லி  என  யாரும்  இல்லாமல்  கும்பல்  கும்பல்  ஆக  கேரக்டர்கள்  வந்து  போகும்  கதை  என்பதால்  அனைத்துத்தரப்புகளுக்குமான  படம் / வெப்  சீரிஸ்  இல்லை  இது 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


சேட்டு  வீட்டுப்பெண்ணை  ஒருத்தன்  காதலிக்கிறான். அவளுக்கு  லவ்  லெட்டர்  கொடுக்க  முயலும்போது  அவள்  அண்ணன்  அவனையும், அவன்  நண்பனையும்  அடித்து  விடுகிறான். உடனே  அவன்  நண்பன்  அவன்  தரப்பு  ஆட்களை  அழைக்கிறான், அவர்கள்  இங்கே  வந்து   அண்ணனை  அடிக்க   அண்ணன்  அவன்  ஆட்களை  அழைக்க.... 


 இப்படியே  முதல்  இரண்டு  எபிசோடுகள்  முழுக்க  யாரோ  யாரையோ அடிச்சுக்கிட்டெ  இருக்காங்க 


கிட்டத்தட்ட சிலபல  அடிதடிகளுக்குப்பின்  ஒரு  அரசியல்வாதி  கொலை  செய்யப்படுகிறார்.  ஒரு  போலீஸ்  அதிகாரி  போலீசாலயே  சுட்டுக்கொல்லப்படுகிறார். இதற்குபின்  நிக்ழும்  குழப்பங்கள்  என்ன? என்பதை  தில்  இருந்தால்  பார்த்து  தெரிந்து  கொள்க 


கதைக்குத்தேவையோ  இல்லையோ  எல்லா  கேரக்டர்களும்  கெட்ட  வார்த்தை  பேசிக்கொண்டே  இருக்கிறார்கள் . புரோட்டோ  சூரி , யோகி  பாபு  மாதிரி  மொக்கைக்காமெடி  பண்ணி  எரிச்சல்  மூட்டினாலும்  சில  இடங்களில்  சிரிப்பு  வருகிறது 


நமக்குத்தெரிந்த  முகம்  எனில்  ஆடுகளம்  நரேன்  தான் .  மகனிடம்  குழையும்  காட்சிக்ள்  அருமை . அவரது  இரண்டாவது  சம்சாரம்  ஆக  வரும்  பெண்  நீலாம்பரி  மாதிரி  கலக்கப்போகிறார்  என  எதிர்பார்த்தால்  புஸ்.. 


 இழவு  விழுந்த  வீட்டில்  கூட  அந்த  முதல்  மனைவி  வீடு  சொத்து  உனக்கு , கட்சி  எனக்கு  என  பேசுவது  கொடுமை. 


சபாஷ்  டைரக்டர்


1  விஷூவலாக   நான்கு  மணி  நேரம்  பார்த்தும்  நமக்குப்புரியாத  கதையை  சொல்லி  தயாரிப்பாளருக்குப்புரிய  வைத்து  முதலீடு  போட  ஒத்துக்கொள்ள  வைத்த  சாமார்த்தியம்

2   2022ல்  ஆகஸ்ட்  மாதம்  ரிலீஸ்  ஆன  தள்ளுமாளா  எனும்  மலையாளப்படத்தை  எந்த  கேசட்  பார்த்து  உருவினார்களோ  அதே  கேசட்டைப்பார்த்து  2022  மே  மாசமே  ரிலீஸ்  செய்த  லாவகம் 

3   கூச்சமே  படமால்  எல்லோரையு,ம்  கெட்ட  வார்த்தை  பேச  வைத்த  சாமார்த்தியம் 

ரசித்த  வசனங்கள் 

1  வழுவாள்  நெடியோன் பண்றதெல்லாம் ஃபிராடுத்தனம், ஆனா  முழம்  நீளத்துக்கு  செந்தமிழில்  பேரு  வெச்சுக்கறது 


2  சாமிநாதன்  தான்  என் பேரு, வேணும்னா  சுருக்கமா, செல்லமா  சாம்  அப்டினு  கூப்ட்டுக்குங்க , ஆனா  ஏண்டா  சாமான்  சாமான்னு  கூப்ட்டு  உயிரை  வாங்கறீங்க?


3  சேட்டு  புள்ளைக்கு  ப்ரப்போஸ்  பண்ண  மோதிரம்  கொடுத்தா  தங்கமா?னு  உரசிப்பார்க்கறா  பாரு, அப்பன்  புத்தி  போகுதா? பாரு 


4  அவன்  தான்  அப்ரூவர்  ஆகிட்டானே?   ஏன்  அவனை  சுடப்போறீங்க?

 இவன்  என்னவா  ஆகனும்னு  நான்  தான்  முடிவு  பண்ணுவேன்


5   பாஸ்வோர்டு  சொன்னாதான்  உள்ளே  விடுவோம்

பாஸ்வோர்டு?


 சூப்பர், கரெக்ட், நீங்க  உள்ளே  போலாம்,


 அடப்பாவிகளா? பாஸ்வோர்டு தான்  பாஸ்வோர்டு?  இதுக்கு  பேசாம  1234னு  வெச்சிருக்கலாம்


6  யாருடா  இவன்  புதுசா?


 அவளோட  எக்ஸ்  பாய்  ஃபிரண்டா  இருக்கும்

 எக்ஸ்னா?

 செக்ஸ்னு  நினைக்கறேன்


7  மல்லு  ஆண்ட்டி  வீட்லதான்  அவன்  இருப்பான்


 மல்லு  ஆண்ட்டியா?


 சாரி  மழுவாண்டி  வீட்ல 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பைக்கை  எரிச்சுட்டு  ஒரு  லூஸ்  பக்கத்துலயே  நின்னு  வீரப்பா  மாதிரி  சிரிச்சுட்டு  இருக்கான், அடேய். பெட்ரோல்  டேங்க்ல  பெட்ரோல்  தீப்பிடிச்சு  வெடிக்காதுனு  டைரக்டர்க்குத்தான்  தெரியல, உனக்குமா  தெரியலை ?

2  நல்லா  கண்  தெரியும்  போலீஸ்  கான்ஸ்டபிள்  எதுக்கு  க்ளைமாக்ஸ்ல  கூலிங்  க்ளாஸ்  போட்டுட்டு   மிட்  நைட்ல  வ்ர்றாரு? ஸ்டைலா?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - காட்சி  ரீதியாக  எதுவும்  இல்லை , ஆனால்  வசனத்தில்  பச்சை  உண்டு சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  காமெடியா  இருக்கு, பாருங்கனு  யாரோ சொன்னாங்கன்னு  நம்பி  பார்த்துத்தொலைச்சுட்டேன். இந்த  டப்பாவை  வேற  யாரும்  பார்த்துடாதீங்க , செம  குப்பை . 

ரேட்டிங்  மைனஸ்  1 / 5

0 comments: