Tuesday, September 26, 2023

பத்ரகாளி (1976) -தமிழ் - சினிமா விமர்சனம் (சைக்கலாஜிக்கல் டிராமா) @ யூ ட்யூப்

     


 டைட்டிலைப்பார்த்து  இது  ஏதோ  சாமி  படம்  என  யாரும்  ஸ்கிப்  செய்யத்தேவை  இல்லை. எழுத்தாளர் மகரிஷி  ராணி  முத்து  மாத  இதழில்  நாவலாக  எழுதிய  கதையை  இயக்குநர்  திருலோக  சந்தர்  படமாக  எடுத்தார். 60%  படம்  முடிவடைந்த  போது படத்தில்  நாயகியாக  நடித்த  மலையாள நடிகையான  ராணி  சந்திரா  விமான  விபத்தில்  அகால  மரணம்  அடைந்தார் . அதனால்  அவரது  முகச்சாயலில்  இருந்த  புஷ்பா  என்னும்  க்ரூப்  டான்சரை  வைத்து  மீதிப்படத்தை  முடித்தார். டூப்  நடிகையை  வைத்து  முடித்ததில்  இயக்குநருக்கு  திருப்தி  இல்லை , ஆனால்  ஒளிப்பதிவாளர்  மாறுபட்ட கேமரா  கோணங்கள் , லாங்க்  ஷாட்  யுக்தி  மூலம்  சமாளித்தார் 

 ஆரூர்  தாசின்  வசனம், இளையராஜாவின்  இசையில்  செம  ஹிட்  ஆன  பாட்டுக்கள்  எல்லாம்  சேர்ந்து  படத்தை  மெகா  ஹிட்  ஆக்கியது 60  மலையாளப்படங்களில்  நடித்திருந்தாலும்  ராணி  சந்திரா  முழு   கதாநாயகி  ஆக  நடித்த  ஒரே  தமிழ்ப்படம்  இதுதான் ,  ஆல்ரெடி  இவர்  தேன்  சிந்துதே  வானம் (1975)  போர்ச்சிலை (1969)   ஆகிய  தமிழ்ப்படங்களில்  நடித்திருந்தாலும்  அவை  எல்லாம்  சின்னச்சின்ன  ரோல்களே! 


படத்தில்  இடம்  பெற்ற  கேட்டேளா  இங்கே  அதைப்பார்த்தேளா  அங்கே   என்ற  பாடல்  பட்டி  தொட்டி  எல்லாம்  ஹிட்  ஆகி இருந்தாலும் ஆல்  இண்டியா  ரேடியோவில்  ஒலிபரப்ப  தடை  விதிக்கப்பட்டது /.. பிராமண  சமூகத்துக்கு  எதிரான  கருத்துக்கள்  இருந்ததாக  காரணம்  சொல்லப்பட்டது


    ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  மிகுந்த  பயந்த  சுபாவம்  கொண்டவர் . சின்ன  வயதில்  இருந்தே  ஒரு  சின்ன  சத்தம்  கேட்டாலே  பதறுபவர். அப்படிப்பட்ட  மென்மையான  மனம்  கொண்டவரை  நாயகன்  பெண்  பார்த்து  பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட  திருமணம்  செய்து  கொள்கிறான். இருவருக்கும்  ஒரு  குழந்தை  பிறக்கிறது


நாயகி ஒரு  பாழடைந்த  மண்டபத்தில்  வில்லன்  செய்யும்  ஒரு  கொலையை  நேரில்  பார்த்து  விடுகிறாள் , இதனால்  எற்கனவே  மென்மையான  , பயந்த  சுபாவம்  கொண்ட  அவர்  சித்தப்பிரமை  அடைகிறார். மன  நலன்  பாதிக்கப்பட்ட  அவரை  நாயகனால் சரியாகக்கையாள  முடியவில்லை 


 ஒரு  நாள்  நாயகி  குழந்தையுடன்  விளையாடிக்கொண்டிருக்கும்போது  தவறுதலாகக்குழந்தை  கிணற்றில்  விழுந்து  இறந்து  விடுகிறது . இதனால் மனம்  உடைந்த  நாயகன்  நாயகியை  டைவர்ஸ்  செய்ய  முடிவெடுக்கிறான்


 டைவர்ஸ்  கிடைத்து  விடுகிறது . நாயகன்  இன்னொரு  பெண்ணைப்பார்த்து  மணம்  முடிக்கிறான். அவர்களுக்கு  ஒரு  குழந்தை  பிறக்கிறது . இந்த  தருணத்தில்  நாயகிக்கு  மனநிலை  சரி  ஆகி  விடுகிறது . இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகி  ஆக  பிரமாதப்படுத்தி  இருப்பவர்   ராணி  சந்திரா. அந்த  ஒரே  ஒரு  பாடலில்  அவர்  போடும்  துள்ளாட்டம்  போதும்  ரசிகர்களின்  மனதைக்கவர இது  போக  பெண்களைக்கவரும்  ஏகபப்ட்ட  செண்ட்டிமெண்ட்  காட்சிகளிலும்  தத்ருபமாக  நடித்திருக்கிறார்


 நாயகியின்  அப்பாவாக  மேஜர்  சுந்தர்  ராஜன்  உருக்கமான  நடிப்பு 

 நாயகன்  ஆக  சிவக்குமார்  வழக்கம்  போல்  பாத்திரத்தின்  தன்மை  அறிந்து  அடக்கி  வாசிக்கிறார்

இரண்டாவது  மனைவியாக   பவானி நடித்திருக்கிறார். நல்ல  நடிப்பு 


நாயகனின்  அம்மாவாக  சுகுமாரி  பாந்தமான  நடிப்பு 

138  நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்டர்  கந்தசாமி  கட்  செய்து  இருக்கிறார் 

விஸ்வநாத்  ராஜ்  ஒளிப்பதிவு  பிரமாதம், குறிப்பாக  நாயகிக்கான  டூப்  காட்சிகளில்  லைட்டிங்  பக்கா 

‘இசை  இளையராஜா . மூன்று  பாடல்கள்  மெகா  ஹிட் 

 பிஜிஎம்  வழக்கம்  போல்  அமர்க்களம்

சபாஷ்  டைரக்டர்  (  திருலோக  சந்தர் )

1  இந்தக்கதையை  நேரடியாக  ஒரே   அலைவரிசையில்  சொல்லி  இருந்தால்  கொஞ்சம்  போர்  அடித்திருக்கும், நான்  லீனியர்  கட்டில்  நிகழ்காலம் ,  கடந்த  காலம்  என  மாறி  மாறி  ஷாட்  வைத்ததில்  சுவராஸ்யமாக  திரைக்கதை  நகர்த்திய  விதம் 


2  கேட்டேளா  இங்கே  அதைப்பார்த்தேளா  அங்கே   பாடலுக்கு  நாயகியின்  துள்ளாட்ட  நடனம்  பிரமாதம்.அவருக்கு  ஈடு  கொடுத்து  ஆட  நாயகன்  திணறி  இருப்பது  நன்றாகத்தெரிகிறது 


3    நாயகி  ஒரு  காட்சியில்  எனக்கு  சித்த  பிரமை  ஆனதும் என்  கணவர்  வேறு  திருமணம்  செய்தாரே  இதே  என்  நிலைமை  அவருக்கு  அமைந்து  நான்  இன்னொரு  கல்யாணம்  செய்தால் ஒத்துக்குவாரா? எனக்கேட்கும்  காட்சி  

செம  ஹிட்  சாங்க்ஸ்

1  கேட்டேளா  இங்கே  அதைப்பார்த்தேளா  அங்கே   ( வீட்டிலேயே  தம்பதியின்  ரெக்கார்டு  டான்ஸ்  பாட்டு )


2  கண்ணன்  ஒரு  கைக்குழந்தை , கண்கள் சொல்லும்  பூங்கவிதை ( குழந்தை  தாலாட்டு )


3  ஒத்தை  ரூபா  உனக்குத்தாரேன், பத்தலைன்னா  இன்னும்  எடுத்துத்தாரேன்

 (  இரண்டாம்  தாரத்துக்கான  நாயகன்  டூயட்  சாங்)


4 அன்னம்  இடும்  கைகளிலே’(  சித்தம்  தெளிந்த  முதல்  தாரத்தைப்பார்த்து  நாயகன்  பாடும்  பாடல் ) 


5  ஆனந்த  பைரவி  அகிலாண்ட  நாயகி   (  பக்திப்பாட்டு)


ரசித்த  வசனங்கள் 


1  ஒரு  மாமியார்  தன்  மருமகளை  நல்லா  நடத்தி  இருந்தா  அந்த  மருமக  மாமியார்  ஆகறப்போ  தன்  மருமகளையும் நல்லா  நடத்துவார்


2  உன்  கால்  அழகு  இருக்கே? அது  கால்  அழகு  இல்லை , முக்கால்  அழகு


3  அம்மா, உனக்கு  ராமபிரான்  மேல  இருக்கும்  முழு  பக்தி  உண்மைன்னா  என்னை   முருகன்  ஆக்க  முயற்சி  பண்ணாதே 


4   அனுசரணை  இல்லாத  மனைவியுடன்  50  வருசம்  வாழ்வதை  விட  புருசன்  மனசைப்புரிஞ்சிக்கிட்ட  மனைவியுடன்  2  வருசம்  வாழ்ந்தாப்போதும் 

5 எந்தப்பூவை  மனசில்  நினைத்துக்கொண்டு    முகர்ந்தாலும்   அதே  பூவின்  வாசம்  வீசும்  மனோரஞ்சிதம்  பூவைப்    போல  எந்த  சினிமா  நடிகையை  நினைத்துக்கொண்டு  ஜெயந்தியைப்பார்த்தாலும்  அவள் அந்த  நடிகையாகவே  தெரிவாள் 


5 பக்தி  என்பது  மனதில்  இருந்தாப்போதும், விரதம்கற  பேர்ல  வயிற்றைக்காயப்போடக்கூடாது 


6   நாம  ஒண்ணும்  தெய்வம்  இல்லையே? கேவலம்  மனுசங்க  தானே?


7  ஒரு  பெண்ணுக்கு  நடந்த  கல்யாணத்தில்  அவளுக்கு  இஷ்டம்  இல்லைன்னா  வேற  காரணமே  இருக்கக்கூடாதா? வேற  யாரையோ  லவ்  பண்ணி  இருப்பாளோ?னு தான் நினைக்கத்தோன்றுமா? 


8 பொதுவா  உயிர்  இழந்த  பின்  தான்  இழப்புனு  சொல்வாங்க, ஆனா  நம்ம  விஷயத்துல  நீ உயிரோட  இருக்கும்போதே  இழப்பு  ஏற்பட்டு  விட்டது 

9  சித்தம்  கலங்கிப்போனா  விரைவில்  சரி ஆகிடும், ஆனா  விவாக  ரத்து  ஆனா  அது  மீண்டும்  சரி  ஆகாது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 வசனமாகப்பேசும்போது  நாயகன்  தன்  மாமனாரிடம்  என்ன  செலவானாலும்  சரி   காயத்ரியைக்குணப்படுத்தப்பாடுபடுவேன்  அப்டீங்கறார், ஆனா  காட்சியாக்காட்டும்போது  அரசு  மருத்துவமனைக்குக்கூட்டிட்டுப்போறார்

2  மன  நிலை  பாதிக்கப்பட்ட  நாயகி  தன் குழந்தையுடன்  விளையாடும்போது குழந்தை  தவறி  கிணற்றில்  விழுகிறது . அடுத்த  நொடியே  நாயகியின்  கணவரும்,  மாமியாரும்  அங்கே  வந்து  குழந்தை  எங்கே? எனக்கேட்கும்போது  நாயகி  கிணறைக்கை காட்டுகிறார். உடனே  கிணற்றில்  தத்த்ளிக்கும்  குழந்தையை  மீட்க எந்த  முயற்சியும்  எடுக்காமல்  அய்யய்யோ , குழந்தையைக்கொன்னுட்டியே  என்கின்றனர். 


3  இன்னொரு  பெண்ணைத்திருமணம்செய்யும்  அற்ப  புத்தி  தன்க்கு  இல்லை  என  உத்தம  புத்திரன்  போல்  பேசும்  நாயகன்  பின்  ஏன்  விவாக  ரத்து வழக்குக்காக  கோர்ட்  படி  ஏறுகிறார்.? 


4  இரண்டவாது திருமணம்  முடிந்ததும்  நாயகன்  தன்  2 வது  மனைவியிடம்  இது    எனக்கு  2 வது  திருமணம்  என்பது  உனக்குத்தெரியாதா?  உங்க  வீட்ல  சொல்லி இருப்பாங்கனு  நினைச்சேன்  என  வசனம்  பேசுகிறார். இவருக்கு  பேச்சு  வராதா? பெண்  பார்க்கப்போனப்பவே  அதை  அவளிடம்  ஏன்  சொல்லலை ? 


5  நாயகியின்  த்ந்தை  அடிகக்டி  மருமகன்  வீட்டுக்கு  வந்து  ஏன்  இங்கே  அடிக்கடி  வந்துடறே?  என  மகளை  திட்டி  அழைத்து  செல்கிறார். வேறு  ஊருக்கு  குடி  போய்  இருந்தால்  இவ்ளோ  பிரச்சனைகள்  வராதே? 


6  சீரியசாக, சுவராஸ்யமாக  செல்லும்  திரைக்கதையில்  சம்பந்தமே  இல்லாமல்  தேங்காய் - சீனிவாசன் , மனோரமா  காமெடி  டிராக்  ஸ்பீடு பிரேக்


7  உங்க  பொண்ணுக்கான  மருத்துவச்செலவு  என்  கை  மீறிப்போயிடுச்சு  என  நாயகன்  அடிக்கடி  குத்திக்காட்றார், ஆனா  ஜிஹெச்  கூட்டிட்டுப்போறதாத்தான்  காட்சிகள்  வருது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களை  மிகவும்  கவரும்  படம். ஆண்களுக்கு  க்ளைமாக்ஸ்  காட்சி  மட்டும் போர்  அடிக்கலாம், ரேட்டிங்  3/ 5 


Bhadrakali
Poster
Directed byA. C. Tirulokchandar
Screenplay byA. C. Tirulokchandar
Aaroor Dass (dialogues)
Based onBhadrakali
by Maharishi
Produced byA. C. Tirulokchandar
Starring
CinematographyViswanath Rai
Edited byB. Kandaswamy
Music byIlaiyaraaja
Production
company
Cine Bharath
Release date
  • 10 December 1976
Running time
139 minutes[1]
CountryIndia
LanguageTamil

0 comments: