Friday, September 01, 2023

மாவீரன் (2023)-தமிழ் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹீரோ ஆக்சன் மசலா) @ அமேசான் பிரைம்

 


கோழையாக  இருப்பவன்  வீரனாக  மாறுவது 1965ல்  எம் ஜி  ஆர்  எங்க  வீட்டுப்பிள்ளை  காலத்துலயே  சொல்லப்பட்ட கதை  தான்.  அதில்  எம் ஜி  ஆரின்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  கலக்கலாய்  இருக்கும். நான்  ஆணையிட்டால்  பாடல்  காட்சிகளில்  தியேட்டரே  திருவிழாக்கோலம்  பூண்டது ., அந்தப்படத்தின்  பிரம்மாண்ட  வெற்றியைக்கண்டு  அதை  ஹிந்தி  உட்பட  பல  மொழிகளில்  ரீமேக்  செய்தார்கள் , ஆனால்   எம் ஜி  ஆர்  அளவுக்கு  அந்த  கேரக்டருக்கு  சிறப்பு  சேர்க்க  யாராலும்  முடியவில்லை . அந்த  சாயலில்  ஒரு  கதையை  எடுத்து 2006ல்  ரிலீஸ்  ஆன  ஸ்ட்ரேஞ்சர்  தன்  ஃபிக்சன்  என்ற  ஹாலிவுட்  படத்தில்  வந்த  அசரீரி  என்ற  கான்செப்டில்  பட்டி  டிங்கரிங்  பண்ணி  இந்தப்படத்தைத்தந்திருக்கிறார்கள் 


 பிரின்ஸ்  படத்தின்  தோல்வியால்  துவண்டு  போன  சிவகார்த்திகேயனுக்கு  இது  ஆறுதல்  வெற்றிப்படம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தன் அம்மா,  மற்றும்  தங்கை  யுடன்  குடிசைப்பகுதியில்  வாழ்ந்து  வருகிறார். அந்த  இடத்தைக்காலி  செய்ய  வேண்டும்  என  வில்லனான  மினிஸ்டரின்  ஆட்கள்  வ்ந்து  சொல்ல   எதிர்ப்பேச்சு  பேசாமல்  காலி  செய்து  கொடுக்கிறார்கள் . ஆல்ட்டர் நேட்டிவாக   வில்லன்  கட்டிக்கொடுத்த  ஒரு  டப்பா  அப்பார்ட்மெண்ட்டில்  தங்குகிறார்கள் , ஆனால்  வாழத்தகுதி  அற்ற  அந்த  வீட்டில்  மக்களால்  தொடர்ந்து  சமாளித்து  இருக்க  முடியவில்லை . வில்லனான  மினிஸ்டரை  நாயகன்  எதிர்த்துப்போராடுகிறான், அதில்  அவன்  எப்படி  வெற்றி  பெற்றான்  என்பதே  மீதிக்கதை

நாயகன்  ஆக  சிவகார்த்திகேயன், படம்  முழுக்க  அவர்  பயந்த  சுபாவமாகவே  வருவது  சிறப்பு.  நாயகி  ஆக  அதிதி  ஷங்கர்  பிரம்மாண்டமாக  இல்லாமல்  எளிமையாக  இருக்கிறார் 


காமெடிக்கு  யோகி  பாபு , ஆனால்  அவர்  பெரிதாக  காமெடி  எதுவும்  செய்ய வில்லை . வில்லன்  ஆக  மிஸ்கின் , சுனில்  கச்சிதமான  நடிப்பு . அம்மாவாக  சரிதா  ஓவர்  ஆக்டிங். தங்கையாக மோனிஷா  பிலஸ்சி  பிரமாதமான  முக  பாவனையுடன்  நல்ல  நடிப்பு 


பரத்  சங்கரின்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம், பிஜிஎம்  ஓக்கே  ரகம் .பிலோமின்  ராஜ்  எடிட்டிங்கில்  2  மணி  நேரம்  40  நிமிடங்கள்  ஓடுகிறது ., இன்னும்  க்ரிஸ்ப்  ஆக  கட்  செய்து  இருக்கலாம் 


சபாஷ்  டைரக்டர் 


1  வில்லன்  மிஸ்கின்    வாளுடன்  வர  பின்னால்  கைகள்  கட்டப்பட்ட  நாயகன்  அதை  சமாளிக்கும்  காட்சி  கைதட்டலை  அள்ள  வைக்கும்  மாஸ்  சீன்

2  ஆயுதங்களுடன்  நெருங்கும்  ரவுடி  கும்பலை  சமாளிக்க  நாயகன்   மேலே  வானத்தைப்பார்த்து  கைல  பொருள்  வெச்சிருக்கறவனையா  போட்டுத்தள்ளனும் ? என  கேட்க  அனைவரும்  ஆயுதங்களைக்கீழே  போடுவதும், டார்ச்  லைட்  வைத்திருப்பவன்  கூட  அதைக்கீழே  போடுவதும்  கூஸ்பம்ப்  சீன்


  1.  வீட்ல  வளர்க்கற நாய்  கூட  ரெண்டு  டைம்  அடிச்சா  மூணாவது  டைம்  அடிக்கறப்ப  எதிர்க்கும்
  2.  வீரனுக்குப்புரிந்தது , தப்பிக்க  ஒரே  வழி  யுத்தம்
  3.   அட்ஜஸ்  பண்ணி வாழ்ந்தா  எல்லாம்  சரி  ஆகிடும்னு  நினைச்சேன், ஆகலை 



  • நாயகன், தன் அம்மா, தங்கை  யுடன்  வீட்டைக்காலி  செய்யும்போது  அவர்  ஒரு  சின்ன  மூட்டை  , தங்கை  நாலு  பாத்திரங்கள்  மட்டும்  எடுத்துச்செல்வதாகக்காட்டுகின்றனர். மூன்று  பேர்  வசிக்கும்  வீட்டில்  இவ்வளவு  தான்  பொருட்கள்  இருக்கும
  •  குடிசை  வாழ்  மக்கள்  அனைவரையும்  காலி  செய்யச்சொல்லி  விட்டு  பின்  வீடுகளை  இடிப்பார்களா? காலி  செய்யச்செய்ய  அவர்கள்  பார்க்க  பார்க்க  வீட்டை  இடிப்பார்களா?
  •  கோழையான  மகன்  மீது  கோபப்படும்  அம்மா  சரிதாவின்  கேரக்டர்  டிசைன்  ஓவர்  ஆக்டிங்
  • பண பலம், ஆள்  பலம், பதவி  பலம், உடல்  பலம்  எதுவுமே  இல்லாத  நாயகனை  காலி  பண்ண  ஒரு  மினிஸ்டரே அந்தத்திணறு  திணறுவது  நம்ப  முடியவில்லை 
  •  அந்த  பில்டிங்  இடியப்போகுது  என்பதை  நாயகன்  ஒவ்வொரு  மாடியாக  ஏறி  ஒவ்வொரு  அறையாகத்தட்டி  சொல்ற  மாதிரி  காட்றாங்க . இதுக்கு பிராக்டிக்கலா  பார்த்தா  12  மணி  நேரம்  ஆகும், அத்தனை  வீடுகள்  இருக்கு. யதார்த்தத்தில்  ஒரு  லவுடு  ஸ்பீக்கர்ல  சொல்வதே  சரி 
  •    வில்லனான  மினிஸ்டர்  அடியாட்களோடு  இருப்பது  ஓக்கே, பாதுகாப்புக்கு  ஒரு போலீஸ்  கூட  இல்லாமல்  இருப்பது  எப்படி ? மாமன்னன்  படத்திலும்  எம் எல்  ஏ  வடிவேலுவை  போலீஸ்  செக்யூரிட்டி  இல்லாமல்  தான்  காட்டினார்கள் 
  •   இடிந்து  கொண்டிருக்கும்   மாடி  வீட்டில்  மாட்டிக்கொண்ட  பெண்ணைக்காப்பாற்ற  ஃபையர்  சர்வீஸ்க்கு  ஃபோன்  பண்ணுவதுதான்  புத்திசாலித்தனம்
  •   வில்லன்  செத்ததோடு  படம்  முடிந்தது. அதுக்குப்பின்னும்  எம் ஜி ஆர்  ஃபார்முலாவில் நாயகன்  மாட்டிக்கொண்ட  பெண்ணைக்காப்பாற்றும்  காட்சி  எல்லாம்  நீளம்

  • சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாதி  நல்ல  ஸ்பீடு , பின்  பாதி  இழுவை  , பார்க்கலாம். ரேட்டிங் 2.5 / 5 
  • Maaveeran
    Theatrical release poster
    Directed byMadonne Ashwin
    Written byMadonne Ashwin
    Chandru A.
    Produced byArun Viswa
    Starring
    CinematographyVidhu Ayyanna
    Edited byPhilomin Raj
    Music byBharath Sankar
    Production
    company
    Shanthi Talkies
    Distributed byRed Giant Movies
    Release date
    • 14 July 2023
    Running time
    166 minutes[1]
    CountryIndia
    LanguageTamil
    Budget35 crore[2]
    Box office est. 89 crore[3]
  • 0 comments: