Tuesday, December 27, 2022

THE FALL (2022) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்


 அங்காடித்தெரு  அஞ்சலி  நாயகியாக  நடித்த  த  ஃபால் எனும் தமிழ்  வெப் சீரிஸ் டிஸ்னி + ஹாட்  ஸ்டாரில்  வெளியாகி  உள்ளது. மொத்தம்  7  எபிசோடுகள். ஒவ்வொன்றும் 30  நிமிடங்கள் ஆக  மொத்தம் ஒரே  சிட்டிங்கில்  மூன்றரை  மணி  நேரத்தில்  பார்க்கக்கூடிய  ஒரு  த்ரில்லர் . இது  வெர்ட்டிக்  எனும்  கனட  சீரிசின்  அஃபிசியல்  ரீமேக் 


நாயகி  திவ்யா நகரத்தில்  மெயின்  இடத்தில்  ஒரு  ஸ்போர்ட்ஸ்  செண்ட்டர்  நடத்தி  வருகிறார். . இட,ம் , பில்டிங்க் எல்லாம்  அவர்  பெயரில் தான்  இருக்கிறது .30 வயதான  இவருக்கு  இவருடைய  தங்கை  அட்மினிஸ்ட்ரேஷனில் உதவுகிறார். இவருக்கு  ஒரு  அண்ணன்  , அம்மா, அப்பா  உண்டு . இந்த  5 பேர்  கொண்ட குடும்பத்தில் நாயகிதான்  பொறுப்பானவர் , அதனால்  வீட்டில்  அவருக்குத்தான்  செல்வாக்கு 


அந்த  நகரம்  மெட்ரோ  சிட்டி  ஆக  டெவலப்  ஆக  உள்ளதாக  அமைச்சர்  மூலம்  முன்  கூட்டியே    தெரிய  வருகிறது . இதனால்  ஸ்போர்ட்ஸ்  செண்ட்டர்  இருக்கும்  இடம்  விலை  பல  மடங்கு  எகிற இருக்கிறது. இது  நாயகிக்குத்தெரியும்  முன்பே  குறைவான விலைக்கு  அதை  வாங்கி  லாபம்  பார்த்து  விடலாம்  என  சிலர்  நினைக்கிறர்ர்கள் 


இப்படி  இருக்கும்போது  ஒரு  நாள்  நாயகி  ஸ்போர்ட்ஸ்  செண்ட்டர்  மாடியிலிருந்து  கீழே  விழுந்து  கோமா  நிலைக்கு  சென்று  விடுகிறார். அவர்  தற்கொலை  செய்து  கொள்ள  முயன்றாரா?  யாரோ  தள்ளி  விட்டார்களா? அல்லது  கால்  ஸ்லிப்  ஆகி  விழுந்தாரா? என்பது  தெரியவில்லை 


ஆறு  மாதங்கள்  ஆகியும்  நாயகிக்கு  நினைவு  திரும்பாததால்  அவரைக்கருணைக்கொலை  செய்து  விடலாம்  என  அண்ணன்  சொல்கிறான். அதற்கு  ஆரம்பத்தில்  தங்கையும், அம்மா, அப்பாவும்  ஒத்துக்கொள்ளவில்லை . ஆனால்  அண்ணன்  அவர்களை  பிரைன்  வாஷ்  செய்து  ஒத்துக்கொள்ள  வைக்கிறான். ஏன்  எனில்  குடும்பத்தினர்  அனைவரின்  சம்மதம்  இருந்தால்தான்  சட்டப்படி  அவரைக்கருணைக்கொலை   செய்ய  முடியும் 


இப்படிப்பட்ட  நிலையில்  நாயகி  கோமா  நிலையில்  இருந்து  மீண்டு  வருகிறாள் , ஆனால்  அவளுக்கு  பழைய  சம்பவங்கள்  ஏதும்  நினைவில்  இல்லை 


தன்னை  இந்த  நிலைக்கு  ஆளாக்கியது  யார் ? என்பதை  அவர்  எப்படிக்கண்டுபிடிக்கிறார் ? என்பதே  கதை 


 நாயகி  திவ்யாவாக   அஞ்சலி தெளிவான  நடிப்பு , தனக்கு  ஒரு காதலன்  இருக்கும்போதே  இன்னொரு  இல்லீகல்  அஃபேர்  தனக்கு  இருந்ததாக  தன்  தங்கை  சொல்வதைக்கேட்டு  அதிர்ச்சி  அடைவது  சிறப்பான  நடிப்பு . தன்னை  விட  வயது  குறைந்த  அந்த  கோச்  யார்  என்பது  தெரிய  வரும்போது  அவர்  முகத்தில்  காட்டும்  எக்ஸ்பிரசன்ஸ்  பிரமாதம் , ஒரு  டிடெக்டிவ்  போல  அவர்  நகர்த்தும் மூவ்க்ள்  கச்சிதம் 


நாயகியின்  அண்ணியாக , தோழியாக  சோனியா  அகர்வால் , ஆரம்பத்தில்  இவர்  மட்டும்  தான்  நாயகிக்கு  ஆதரவு  என்பது  மாதிரி  காட்டி  ஒரு  கட்டத்தில் இவர்  வில்லியாக  இருப்பாரோ  என  சந்தேகம்  வர  வைக்கும்  அளவு  மாறுபட்ட  நடிப்பு  இவருடையது 


 நாயகியின்  அண்ணனாக  எஸ் பி பி  சரண். சூதாட்டத்தில்  ஈடுபட்டதால்  50  லட்சம்  ரூபாய்  கடன்  ஏற்பட்டதை  யாரிடமும்  சொல்ல  முடியாமல்  அவர்  செய்யும்  அண்டர்  கிரவுண்ட்  வேலைகள்  திடுக்கிட  வைக்கின்றன 


நாயகியின்  காதலன்  டேனியல்  ஆக சந்தோஷ்  பிரதாப்  வில்லத்தனம்  மிக்க  நடிப்பு ,  நாயகி , நாயகியின்  தங்கை ,  பார்ட்னர்  கிருத்திகா  என  மூன்று  பெண்களிடமும்  மாறி  மாறி  காதல்  வலை  வீசுவது   பயங்கரம், என்ன  ஒரு  கிரிமினல்  மூளை  என  வியக்க  வைக்கிறார் 


நாயகியின்  தங்கையாக  நமீதா  கிருஷ்ண,மூர்த்தி    அக்கா  மேல்  பொறாமை  கொள்வது  , அக்காவின்  காதலன்  மீது  ஆசைப்படுவது , அவரை  நம்பி  ஏமாறுவது , காதலன்  மோசடிப்பேர்வழி  என்பதை  உணர்ஃந்த  பின்  ஆத்திரப்படுவது  என  கச்சிதமான  நடிப்பு 


அம்மாவாக  பூர்ணிமா  பாக்யராஜ். நாயகி  சம்பந்தப்பட்ட    ரகசிய  ஃபைலைக்காட்டி  கோச்சை  லண்டனுக்கு  அனுப்ப  முற்படும்போது  வில்லி  முகம்  காட்டுகிறார்


அப்பாவாக  தலைவாசல்  விஜய் . கச்சிதமான  நடிப்பு 


இந்த  கேசை  விசாரிக்கும்  போலீஸ்  ஆஃபீசராக , அவருக்கு  ஜோடியாக  வரும் ஒரு  லேடி  எஸ்  ஐ  ஆக  நடித்த  இருவரும்  சுவராஸ்யம்  கூட்டுகிறார்கள் , இருவருக்கும்  ஓடும்  லவ்  டிராக்  அழகு 


பவர்  புரோக்கர்  கிருத்திகாவாக  வரும்  சஸ்திகா  ராஜேந்திரன்  வில்லித்தனமான  நடிப்பு 


நாயகியைத்தள்ளி  விட்டது  யார்? என்ற  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டோடு  அந்த  19  வயது  கோச்  யார் ?  என்பதிலும்  அதிர்ச்சி  காத்திருக்கிறது 


சித்தார்த்  ராமசாமிதான்  இயக்கம்.  ஒவ்வொரு  எபிசோடையும்  விறுவிறுப்பாக்ஜக்கொண்டு  போகிறார். கருந்தேள்  ராஜேஸ்  தான்  திரைக்கதை , அஜேசின்  இசையில்  பிஜிஎம்  த்ரில்லிங்  மூடில்  பயணிக்க  வைக்கிறது 


விறு விறுப்பான  ஒரு  த்ரில்லர்  தான் 


ரசித்த  வசனங்கள் 


1   எப்பவுமே  நம்ம  கூட  இருக்கறவங்க தான்  நம்ம  கழுத்தை  அறுப்பாங்க 


2  ஒவ்வொரு  பெண்ணுக்கும்  ஒரு  சிறப்பு  ஸ்பரிசம்  இருக்கும். ஒரு  சின்ன  டச்  ல  அதை  உணர்ந்துடுவாங்க . என்ன  நோக்கத்துக்காக  தொடறாங்க  என்பது  அவங்களுக்குத்தெரிஞ்சிடும், இது  பெண்களுக்கு  இயற்கை  அளித்த   வரம்


3  நம்ம  உணர்ச்சிகளை எமோஷன்களை  நாம  ஃபோர்ஸ்  பண்ண  முடியாது


4   ஒரு  ஆளை  லவ்  பண்றதுக்கும்  , ஆசைப்படறதுக்கும் வித்தியாசம்  இருக்கு


5   முதன்  முதலா  நாம  எதைக்கத்துக்கறோமா  அதை  கடைசில  தான்  ,மறப்போம் 


6  நாம  யார்  மேல  பாசம்  வெச்சிருக்கோமோ  அவங்களுக்கு  ஒரு  ஆபத்துன்னா  நம்மால  தாங்கிக்க  முடியாது 


7 கேள்வி  கேட்கும்  பெண்களை  ஆண்களுக்குப்பிடிக்காது 

8   பூனை  குட்டிகளை  ஈன்றதும்  தனோட  குட்டிகளில்  ஒன்றை  அது  சாப்ட்டுடும், அப்போதான்  மீதிக்குட்டிகளைக்காப்பாற்ற  அதுக்கு  தெம்பு  இருக்கும் 


9   எப்போ  நம்மை  விட  இன்னொரு  உயிர்  நமக்கு  முக்கியம்னு தோணுதோ  அங்கேதான்  காதலில்  விழுகிறோம், ஃபால்  ஆஃப்  லவ்  அதுதான் 


10  மேலே  ஒரு  ரிஷி சாப்பிட்டார்.. இதை எப்படி  ஒரே  வரில  சொல்வே?


 அப்  ரிஷி யேட்  (APRICIATE) 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  


1   கோமா  ஸ்டேஜ்ல  20  வருடங்கள்  கழித்து  எல்லாம்  மீண்டவங்க  இருக்காங்க , அப்படி  இருக்கும்போது  ஆறு  மாசத்துலயே  பொண்ணைக்கொலை  பண்ண  அம்மா, அப்பா  எல்லாரும் ஒத்துக்க  ரெடியா  இருப்பது  அதிர்ச்சியா  இருக்கு 


2   நாயகியின்  அண்ணன்  சரண் சூதாட்டம்  ஆடுவதை  மனைவியிடம்  மறைப்பதை  என்னமோ  சின்ன  வீடு  ரேஞ்சுக்கு  பில்டப்  தர்றாங்க .  


3   நாயகியின்  அண்ணன் , அண்ணி  இருவரும்  பேங்க்கில்  ஜாயிண்ட்  அக்கவுண்ட்  வைத்திருக்கிறார்கள், அதுல  பர்சனல்  லோனாக  50  லட்சம்  வாங்கி  இருக்கிறார். இது   மனைவிக்கே  தெரியாது  என்பது  எப்படி ?   மெசேஜ்  இருவரின்  செல்  ஃபோனுக்கும்  தானே  வ்ரும் ?


4   நாயகியின்  தங்கை  தினமும்  ரூ  10,000  ரூபாய்  ஸ்போர்ட்ஸ்  செண்ட்டரில்  ஆட்டையைப்போடுவதாக  சொல்கிறார்கள். ஒரு  பெண்ணுக்கு  அவ்ளவ்  பணம்  எதுக்கு ?  போதைப்பழக்கமா?  என்ன  செலவு? பதில்  இல்லை 


5  நாயகியின்  காதலன்  ஒரு  மாங்கா  மடையனாகவோ  அல்லது  மஞ்ச  மாக்கானாகவோ  இருக்க  வேண்டும்.   3  பெண்களை  லவ்  பண்ணுபவன்  அப்படியா  ஈசியா  மூவரிடமும்  மாட்டிக்கொள்வான் ? 


6  நாயகியின்  காதலன்  நாயகியைக்கல்யாணம்  பண்ணிக்கிட்டா  ஈசியா  சொத்து  கை  வசம்  வந்துடும். பின்  மச்சினியை  கரெக்ட்  பண்ணிக்கலாம். இப்படி  ஈசியான  வழி  இருக்கும் போது  மடத்தனமாக  பிளான்  எல்லாம்  போட்டுக்கிட்டு  இருக்கான், தண்டம் 


7  கோச்சாக  வரும்  இளைஞன்  உங்களுக்கும்  எனக்கும்  ஒரு  ஸ்பெசல்  உறவு  இருக்கு  என அடிக்கடி  சொல்றான், ஆனா  கடைசி  வரை  அவன்  வாயால  அது  என்ன  உறவு?னு  சொல்லவே  இல்லை 


8  நாயகி  குளிக்கும்போது  பாத்ரூம்  ஜன்னல்  வழியாக  எட்டிப்பார்த்த  ஒருவனை நாயகி  என்னமோ   மளிகைக்கடைல  பொட்டுக்கடலை  வாங்கிட்டு  வருவதற்குப்பதிலா  நிலக்கடலை  வாங்கிட்டு  வந்தவனை  ட்ரீட்  செய்வது  போல  சரி  சரி  உன்னை  மன்னிச்சுட்டேன்  என்கிறார். கனடாவில்  அது  சகஜமா  இருக்கலாம், தமிழில்  ரீமேக்கும்போது  ஒரு  தமிழச்சி  பொங்க  வேண்டாமா? 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மூன்றரை  மணி  நேரம்  ஓடுவதை  இரண்டரை  மணி  நேரமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்,   மோசமில்லை , பார்க்கலாம்  . ரேட்டிங்  2. 5 / 5 


நன்றி = கல்கி  வார  இதழ் அப்டேட்டட்  ஆன்  26/12/2022  11 A,M

0 comments: