Saturday, December 03, 2022

MY NAME IS VENDETTA (2022) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்


 நாயகன்  தன்  மனைவி , மகளோடு  அமைதியான  வாழ்க்கை  வாழ்ந்து  வருகிறான். மகளுக்கு  ஒரு  பாய்  ஃபிரண்ட்  உண்டு பாய்  ஃபிரண்ட் மற்றும்  வகுப்புத்தோழர்களோடு  பிக்னிக்  போக  அம்மாவிடம்  நீங்கதான்  அனுமதி  வாங்கித்தரனும்  என    மகள்  அப்பாவிடம்  வேண்டுகிறாள்.நாயகனும்  உறுதி  அளிக்கிறான்


 ஒரு  மாஃபியா  கேங்  அதன்  தலைவன் , தலைவனின்  மகன் ,  அடியாட்களின்  தலைவன்  இவர்கள்  மூவரும்   நாயகனை  குடும்பத்தைக்கொல்ல  திட்டம்  போடுகிறார்கள் . ஒரு  முறை  நாயகன்  வீட்டில்  இல்லாத  போது  நாயகனின்  சொந்தக்காரர்  வீட்டுக்கு  வருகிறார். அவர்  தான்  நாயகன்  என  தவறாகப்புரிந்து  கொண்டு  அந்த  மாஃபியா  அடியாட்கள்  நாயகனின்  மனைவி, சொந்தக்காரர்  இருவரையும்  கொலை  செய்து  விடுகிறார்கள் 


நாயகன்  தன்  மகளை  அழைத்துக்கொண்டு  ஒரு  மறைவிடத்துக்குப்போகிறார்.  இங்கே  என்ன  நடக்குது  ? இவங்க  எல்லாம்  யார்? எதற்காக  நம்மைத்துரத்துகிறார்கள்? என  மகள்  கேட்கிறாள் 


அதற்கு  நாயகன்  என்ன  பதில்  சொன்னான்?  நாயகனுக்கும், வில்லனுக்கும்  நடந்த  சேசிங்கில்  யார்  ஜெயித்தார்கள்  என்பதை  படம் பார்த்து  தெரிந்து  கொள்க 


இது  ஆக்சன்  பிரியர்களுக்கான  படம் .  மொத்தம்  90  நிமிடங்கள்  ஓடும்  படத்தில் 60  நிமிடங்கள்  சேசிங்  சேசிங்  ஆக்சன்   அதகளம் தான்


க்ளைமாக்சுக்கு  கொஞ்சம்  முன்பு  வில்லனின்    மகன்  தன்  கட்டுக்களை  அவிழ்த்து  விடுமாறு  நாயகனின்  மகளிடம்  சாமார்த்தியமாகப்பேச வேண்டுவது  குருதிப்புனல்  படத்தில்  நாசர்  கேரக்டரின்  நயவஞ்சகத்தைப்பிரதிபலிக்கிறது 


க்ளைமாக்சில்  வில்லனின்  மகன்  இருப்பிடத்துக்கு  நாயகனின்  மகள்  வந்ததும்  ஆச்சரியத்துடன்  இங்கே  எப்படி  வந்தே? என  கேட்கும்போது  நீங்க  தானே  உதவி  தேவைப்படும்போது  வா  என  உங்க  விசிட்டிங்  கார்டைக்கொடுத்தீங்க  என  அசர  வைப்பது  கலக்கலான   காட்சி 


 நாயகன்  தன்  மகளுக்கு  குறுகிய  கால  சண்டைப்பயிற்சி  கற்றுக்கொடுக்கும்போது  கத்தியை  எப்படி  உபயோகித்தால்  எதிராளிக்கு  பாதிப்பு  ஏற்படும்  என  சொல்லித்தரும்  காட்சி  பிரமாதம்  என்றால்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்க்கு  அந்த  சீன்   முகாந்திரம்  அமைத்துக்கொடுத்தது  வியப்பு


ஆரம்பக்காட்சியில்  அப்போதுதான்  கார்  ஓட்ட  அப்பாவிடம்  கற்றுக்கொள்ளும்  ஒரு  பள்ளி    மாணவியான  மகள்  க்ளைமாக்சில்  காரை  எதிரிகளின்  துரத்தலில்  இருந்து  தப்பிக்க  ரிவர்ஸ்  கியர்  எல்லாம்  போட்டு  பிரமாதமாக  ஓட்டுவது  எப்படி  என்ற  கேள்விகள்  எழாமல்  இல்லை . அவற்றை  எல்லாம்  படத்தின்  வேகம்  மறக்கடித்து  விடுகிறது 


இசை  காதுகளைப்பழுதாக்காமல்  தேவைப்ப்ட்ட   இடங்களில்  மட்டும்  தன்னை  முன்னிறுத்திக்கொள்கிறது . படத்தில்  இரவு  நேரக்காட்சிகள்  அதிகம்  என்பதால்  ஒளிப்பதிவாளர்  ஓவர்  டைம்  போட்டு  ஒர்க்  பண்ணி  இருக்கிறார்ரசித்த  வசனங்கள்


1  கருணை  காட்டுவதுதான்  பழி  வாங்கும்  உணர்வில்  மிகப்பெரிய  பலவீனம் 


2  வயசானவங்க  அதிக  நேரம்  தூங்க  மாட்டாங்க , தூங்க  முடியாது , அது  நமக்கு  ஒரு  பிளஸ்  பாயிண்ட் 


3  கொலையாளி  எப்போதாவது  யாராலாவது  நிச்சயம்  கொல்லப்படுவான், இது  விதி 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1 மகளுக்கு  பாய்  ஃபிரண்ட்  இருக்கான்னு  அப்பாவுக்குத்தெரிந்தும்  ஆபத்தான  நேரத்தில்  மகளிடம்  ஃபோனைக்குடுத்து  தனியாக  விட்டுச்செல்வது  எந்த  நம்பிக்கையில்?  மகள்  ஃபோன்  போட்டு  பாய்  ஃபிரண்டை  வர  வைப்பாள்,  எதிரிகளுக்கு  லொக்கேஷன்  தெரிந்து  விடும்  என்பது  தெரியாதா?


2  உள்ளத்தை  அள்ளித்தா  வில்  40,000  ரூபா  வாடகைக்கு  வேனில்  கடத்தும் சாதா  ஆள்  கூட  அடியாட்கள்  உடன்  ப்ந்தாவாக  இருக்கிறார். ஆனால்  இந்தப்பட  வில்லன்  மகன்  ஒரு  மிகப்பெரிய  மாஃபியா  கேங்  லீடர்., க்ளைமாக்சில்  ப்ங்களாவில்  தனியா  இருக்கார் .  ஒரு  வேலைக்காரி  கூட  இல்லை .  ரொம்ப  ஏழை  மாஃபியாவா? 


3  அம்மா  இறந்தபோது  கதறி  அழும்  நாயகனின்  மகள்  தன்  பாய்  ஃபிரண்ட்  தனக்காக  உயிரை  விட்டதைப்பார்த்து  கல்லுளி  மங்கி  போல்  பார்த்துக்கொண்டே  இருக்கிறதே? ஒரு  சொட்டுக்கண்ணீர்  விட்டா  என்ன?  தட்  மொமெண்ட்    வடிவேலு  வெர்சன்  இரக்கமே  இல்லையா  உங்களுக்கு ? 


ஸ்லோவாக  ஆரம்பித்து  விறுவிறுப்பாகப்போய்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டோடு  முடிகிறது . ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம் .,ம் நெட்ஃபிளிக்சில் 30/11/2022  முதல்  காணக்கிடைக்கிறது , ரேட்டிங்  2.25 / 5 

0 comments: