Monday, December 26, 2022

ROY (2022) மலையாளம் - திரை விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் மிஸ்ட்ரி த்ரில்லர்) @ சோனி லைவ் ஓ டி டி +அமேசான் பிரைம்




நாயகி ஒரு  நாவல்  எழுத்தாளர்.அவரது  காதல்  கணவர் அபூர்வ  சக்தி  கொண்டவர் . அவருக்கு  அது  வரமா? சாபமா? தெரியாது. அதாவது அவரது  கனவில்  வரும்  காட்சிகள் பின்னாளில்  நடக்கும், அல்லது  பின்னாளில்  நடக்கும்  நிகழ்வுகளுக்கான  க்ளூ  அந்த  கனவில்  காட்சிகளாகவோ, வசனமாகவோ  வரும். நூறாவது  நாள்  படத்தில்  நளினி  கேரக்டர்  டிசைன்  போல  இவரது  கேரக்டர்  ஸ்கெட்ச்  வடிவமைக்கப்ட்டிருக்கு 


நாயகி  இன்னொரு  பிரபல  எழுத்தாளரின்  சுயசரிதை  நூலை  எழுதிக்கொண்டு  இருக்கிறார். அதன்  இறுதி  அத்தியாயம்  எழுதும்  நேரத்தில்  அந்த  எழுத்தாளர்  காணாமல்  போகிறார். காணாமல்  போன  எழுத்தாளரைத்தேடி  நாயகி  ஒரு  ஃபாரஸ்ட்  ஏரியாவிற்குச்செல்கிறார். இவரும்  காணாமல்  போகிறார்


  நாயகியின் கணவன்  போலீசில்  புகார்  கொடுக்கிறார். ஆனால்  போலீஸ்  பெரிய  அளவில்  அக்கறை  காட்டவில்லை . ஒரு  கட்டத்தில்  நாயகனையே  சந்தேகிக்கிறார்கள் 


நாயகனுக்கும், நாயகிக்கும்  வயது  வித்தியாசம்  அதிகம்  இருக்கிறது , அதனால்  நாயகி  வேண்டும்  என்றேதான்  நாயகனை  விட்டு  விட்டு  சென்று  இருக்கலாம்  என  சந்தேகப்படுகின்றனர் 


 இவர்கள்  இனி  வேலைக்கு  ஆக  மாட்டார்கள்  என்பதை  உணர்ந்த  நாயகன்  தானே  தன்  மனைவியைதேடும்  படலத்தில்  இறங்குகிறார். அதற்குப்பின்  திரைக்கதையில்  ஏற்படும்  எதிர்பாராத  சம்பவங்கள்  தான்  கதை க்ளைமாக்சில்  ஒரு  ட்விஸ்ட்  இருக்கிறது 


 நாயகனாக  சுராஜ்  வெஞ்சாரமூட் tத  கிரேட்  இண்டியன்  கிச்சன் , டிரைவிங் லைசென்ஸ்,ஹெவன் போன்ற  படங்களில்  மாறுபட்ட  நடிப்பை  வழங்கியவர் , கச்சிதமாக  கதாபாத்திரத்தின்  தன்மையை  உள்  வாங்கி  நடித்திருக்கிறார். தன்  முதல்  மனைவி  தன்னை  விட்டு  ஓடிப்போனது  பற்றி  நாயகியிடம்  சொல்லும்போது  அமைதியான  நடிப்பு , மனைவி  காணாமல்  போனது  பற்றி  போலீசில்  புகார்  அளிக்கும்போது  பதட்டம் , கனவில்  சில  காட்சிகள்  தோன்றி  க்ளூ  கிடைக்கும்போது  அது  கனவா? நினைவா?  என  குழம்புவது  என  பல  பரிமாணங்களில்  தன்  முத்திரையைப்பதிக்கிறார்


நாயகியாக சிஜா ரோஸ்   ஒரு  எழுத்தாளராக  காட்டப்பட்டாலும்  ஒரு  டூரிஸ்ட்  போலத்தான்  வருகிறார், பயணத்தில்  ஆர்வம்  உள்ளவராக  காட்டப்படுகிறார், ஃபிளாஸ்பேக்  சீனில்  ஜர்னலிஸ்ட்  ஆக  வரும்போது  நாயகனுடனான  அறிமுகம், தோழியிடம்  அவரைப்பற்றிய  கிண்டல்கள்  என  குறும்புத்தனங்களில்  மனம்  கவர்கிறார், இவர்கள்  இருவரும்  திருமணம்  ஆனவர்களா? லிவ்விங்  டுகெதராக  வாழ்கிறார்களா? என்பது  சரியாக  விளக்கப்படவில்லை, மெயின்  கதைக்கு  அது  தேவையும்  இல்லை 


போலீஸ்  ஆஃபீசராக ஷைன்  டாம் சாக்கோ , ஆபரேஷன்  ஜாவா, தள்ளுமாலா, க்ரூப்  போன்ற  பல  படங்களில்  கை  தட்டல்  வாங்கிய  நடிகர். தமிழில்  பீஸ்ட்  படத்தில்  தீவிரவாதியாக  வந்தவர் ,இவரது  போலீஸ்  கதாபாத்திரம்  ஆழமாக  எழுதப்படவில்லை  என்றாலும்  கொடுத்த  கேரக்டரை  சரியாக  செய்திருக்கிறார்


பி எம்  முன்னாவின்  இசையில்  இரண்டு  பாடல்கள்  கேட்கும்படி  உள்ளன, கோபி  சுந்தரின்  பின்னணி  இசையில்  பல  இடங்களில்  திகில்  ஊட்டுகிறது , ஒரு  சைக்கோ  த்ரில்லர்  அலல்து  ஒரு  மிஸ்ட்ரி த்ரில்ல்ருக்கு  எந்த  மாதிரி  பின்னணி  இசை  தேவையோ  அதை  உணர்ந்து  பிஜிஎம்  போட்டிருக்கிறார் 


ஜெயேஷ் மோகன்  ஒளிப்பதிவில் அதிகமான  காட்சிகள்  இரவு  நேரத்தைப்பிரதிபலிப்பதால்  சவாலான  வேலை தான்  வி சாஜ்ன்  எடிட்டிங்கில்  இரண்டு  மணி நேரத்தில்  படம்  முடிந்தாலும்  இன்னும்  க்ரிஸ்ப்  ஆக  ஒன்றரை  மணி  நேரத்தில்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்  என  தோன்றுகிறது 


சுனில்  இப்ராஹிம்  தான்  இயக்கம்.  மூன்று  முக்கியமான  கதாபாத்திரங்களை  வைத்து  கதையை  அதிகம்  குழப்பாமல்  சொன்ன  விதத்தில்  பாராட்டுக்கு  உரியவர்  ஆகிறார


இந்தப்படம் சோனி லைவ்  ஓ டி டி  +அமேசான்  பிரைம்  அகிய  தளங்களில்  காணக்கிடைக்கிறது 


ரசித்த  வசனங்கள்


 1  நாம்  ஏற்கனவே  சந்தித்த  நபர்களை   அல்லது  கனவில்  கண்ட  நபர்களை  மீண்டும்  இப்போது  சந்திப்பதுதான்  தேஜாவு  என  சொல்லப்படுது 


2   நீங்க  ரொமாண்டிக்  பர்சனா?னு  செக்  பண்ண  ஒரு  கேல்வி  கேட்கிறேன். நீர், நிலம், ஆகாயம், நெருப்பு  இதுல  நீங்க  எதை  செலக்ட  பண்ணுவீங்க 


  தண்ணீர்

  வெரிகுட் . நீங்க  நல்ல  ரொமாண்டிக்  பர்சன் தான்


3   என்  வாழ்க்கல  என்னை  விட்டுட்டுப்போனவங்கதான்  அதிகம் , நீ தான்  என்  கூட  இருக்கே!



இவ்ளோ  ரொமாண்டிக்  பர்சனா  இருக்கும்  உங்களை  உங்க  மனைவி  ஏன்  விட்டுட்டுப்போனாங்க ?


 அவங்க  போனதுக்கும்  , ரொமான்ஸூக்கும்  சம்ப்ந்தம்  இல்லை , புரிதல்  இல்லாததுதான்  பிரிவுக்குக்காரணம் 


4 நம்ம  எல்லாருக்கும்  ஒரே  ஒரு  வாழ்க்கைதான், அதை ஏன் எல்லார்  மாதிரியும்  நார்மலா  நாம்  வாழனும் ? அதுல  என்ன  யூஸ்  இருக்கு ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  நாயகி  அந்த  ரைட்டரைத்தேடி  ஃபாரஸ்ட்  போகும்போது  தன்  கணவனையோ  அல்லது  தான்  பணி  புரியும்  இடத்தில்  இருந்து  யாரையாவதோ  அல்லது  தன்  தோழியையோ  கூட  அழைத்துச்செல்லாமல்  ஏன்  தனியாகப்போகிறார்  என்ற  கேள்விக்கு  விடை  இல்லை 


2  . அதே  போல  காணாமல்  போகும்  எழுத்தாளர்  பற்றிய  ஒரு  அறிமுகமே  ஆடியன்சுக்கு  அளிக்கப்படவில்லை , பொதுவாக்    ஒருவர்  மிஸ்  ஆகிறார் அல்லது  கொலை  செய்யப்படுகிறார்  என்றால்;  ஆடியன்சுக்கு  ஒரு  இண்ட்ரோ  வேண்டும்


3   நாயகன்    ஸ்பெர்ம்  கவுண்ட்  குறைவாக  உள்ளவர்  , அதனால்  நெருங்கிப்பழகினாலும்  ஆபத்தில்லை  என  தோழி  நக்கல்  செய்வது  அதற்கு  நாயகி  ரசித்து  சிரிப்பது  காமெடி  மாதிரி  தெரியவில்லை , பெண்களை  மட்டம்  தட்டுவது  போல  உள்ளது 


4  பொதுவாகவே  மலையாளப்படங்கள்  ஸ்லோதான்  என்றாலும்  இதில்  ரொம்ப  ஸ்லோ . நல்லா  தூக்கம்  வருது . நாயகன்  - நாயகி  ஃபிளாஸ்  பேக்  சீன்  வரும்போது  இது  ஃபிளாஸ்பேக்  என்று  ஒரு  லீட்  கொடுக்க  வேண்டாமா?  காணாமல்  போன  நாயகி  கிடைத்து  விட்டாரோ என  எண்ண  வைக்கிறது 



 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - பிரமாதமான  படமும்  இல்லை ,  மொக்கைப்படமும்  இல்லை , சராசரி  த்ரில்லர்  தான் , மலையாளப்படங்கள்  அதிகம்  பார்த்து  அதன்  ஸ்லோனெஸ்க்கு  மைண்ட்  செட்  ஆனவர்கள்  பார்க்கலாம்  ரேட்டிங்  2. 5 / 5 

0 comments: